Jump to content

பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் & படைக்கலன்கள் - 150+ படிமங்களுடன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழரின் சமர் படைக்கலன்கள் :

வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை படைக்கலங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது.

தமிழரின் ஆய்தங்கள் இருவகைப்படும்.

  • கைக்கொள்படை/ கைப்படை: - (hand held weapons)
    • கைவிடுபடை:
      • எய்படை - எய்யும் ஆய்தங்கள் - அம்பு, சன்னகம், கவண்டை போன்றவை
      • எறிபடை - எறியும் ஆய்தங்கள் - விட்டேறு, குந்தம், தோமரம் போன்றவை
    • கைவிடாப்படை:
      • குத்துப்படை - குத்தும் ஆய்தங்கள் - வேல், சூலம் போன்றவை
      • வெட்டுப்படை - வெட்டும் ஆய்தங்கள் - வாள், கோடாரி போன்றவை
      • அடுபடை - அடிக்கும் ஆய்தங்கள் - தண்டு, தண்டம், உலக்கை போன்றவை
      • தடுபடை - மேற்வரும் படையை தடுக்கும் ஆய்தங்கள் - கிடுகு, தோல், மாவட்டணம் போன்றவை
  • கைக்கொள்ளாப்படை: - ( siege & defense tools)

 


ஆதிச்ச நல்லூர் ஆய்தங்கள்

main-qimg-0804fc1688e2ad6ec9fbfc83319823c6.jpg

main-qimg-c3d6a27f475b9bcac3f746ba0130ee24.jpg

main-qimg-b715e95ce06d27c61ccd5f599cc93da0.jpg

main-qimg-5713977c70f52b8f4020bd65132151d6.jpg

 

17 ஆம் நூற்றாண்டு ஆய்தங்கள்:

main-qimg-fe425b9e578ae7693954c023d0384fdb.jpg

 

  • தோய்த்தல் - ஆய்தங்களைக் காச்சி நனைத்தல்
  • துவைச்சல் (படைக்கருவி) - tempering (weapons)
  • பணைத்தல் - AIM MISS
  • இலக்கு, மச்சை - target
  • ஆய்தப்பயிற்சி செய்யுமிடம் - சரம்புச்சாலை, பயிற்சிப்பாசறை, கிடை, களரி
    • சரம்பு - ஆயுதப்பயிற்சி
    • பணிக்கன் - படைக்கலம் பயிற்றுவிப்போன்.
    • சலகுபிடித்தல் - படைப் பயிற்சி எடுத்தல் (to practice drill)
  • ஆய்தங்கள் வைத்திருக்குமிடம் - ஆய்தசாலை, படைவீடு, ஆய்தக் களஞ்சியம், துப்புளி.

 


  • எஃகம் / துப்பு / படைக்கலம் / ஆய்தம்/ ஏதி/ தானை/ கடுமுள்/ கழுமுள் / படை/ கூர்த்திகை/ கார்த்திகை/ அரி/ பாரசவம்/ மேதி - பண்டையகால ஆய்தப்பொதுவினைக் குறிக்கும் சொற்கள்.
  • மேற்கண்ட ஆய்தங்களிற்கான கீழுள்ள விளக்கம், "போரியல்: அன்றும் இன்றும்" என்னும் நூலில் இருந்து எடுத்துள்ளேன்.
    • ஆய்தம் என்பது தமிழே! இச்சொல்லே பிற்காலத்தில் 'ஆயுதம்' என்று சமற்கிருததில் திரிந்தது (காண்க : செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி )
    • துப்பு - அறிவுடன் பயன்படுத்தத்தகும் வலிமை சான்ற துணைக்கருவிகள்
    • தானை - காக்கும் தலைமை சான்ற ஆய்தங்களின் தொகுதி
    • படை - படுக்கப்(கொலை) பயன்படுத்துவன படை எனப்படும்
    • படைக்கலம் - பல படைகள் சேர்ந்தவை படைக்கலம் எனப்படும்
    • எஃகம் - எஃகில் இருந்து செய்யப்பட்ட அனைத்து ஆய்தங்களும் எஃகம்.
    • ஏதி - கூர்மையும் விரைவும் கொண்ட துண்டாக்கும் ஆய்தங்கள்
    • கார்த்திகை - தீயுமிள் ஆய்தங்கள்
    • கூர்த்திகை- கைக்கொள்ளும் கூரிய ஆய்தங்கள்
  • இவை, நான் எழுதிய விளக்கங்கள்:
    • மேதி - எருமை போன்ற பெரும்பலங் கொண்ட ஆய்தம்
    • பாரசவம் - கடும் கனமான ஆய்தங்கள்
    • அரி - அரிக்கும் ஆய்தங்கள் அரி எனப்படும்
    • கடுமுள் - மிகக் கூர்மையான முள் கொண்ட ஆய்தங்கள்
    • கழுமுள் - கழுவின் முள் போன்ற ஆய்தங்கள்
  • வல், வள், வசி , வை, அள், பூ, ஆர் - ஆய்தங்களின் கூர்மையின் பெயர் (sharpness, pointedness)
  • கூர்வாங்குதல்/ கூர்ப்பிடுதல் - ஆய்தத்தைக் கூராக்குதல்
  • கூர்மை பார்த்தல்- ஆய்தத்தின் கூர்மையைச் சரிபார்த்தல்
  • முனை- ஆய்தத்தின் நுனி(tip of a weapon)
  • அலகு - ஆய்தத்தின் கொல்லும் கூர்மை கொண்ட பகுதி (blade of a weapon or instrument)
  • கரு - ஆய்தத்தின் பல்
  • கழி - ஆய்தப்பிடி
  • ஏறு - வாள், தேள்களின் எறிகை

 


  • ஊறுபாடு - ஆயுதங்களாற் காயமுண்டாக்குகை
  • விழுப்புண் - ஆய்தங்களாற் ஏற்பட்ட காயம்.
  • கீறுதல்- ஆய்தத்தால் அறுத்தல்
  • கத்து - குத்துவெட்டு (இறந்து பட்ட வழக்கு. கிட்டிப்பு: பாவாணர்)

 


  • அடைப்பம்- போர்க் கருவிகள் வைக்கும் பை/ பேழை.
  • ஆய்தவுறை - தடறு/ படையுறை/ புட்டில்/ துதி
    • இது தோலாலும், எஃகாலும் ஆனது ஆகும்
  • காரோடன் - ஆய்தவுறை செய்வோன்.

 


  • வாளுறை - கட்காதாரம்/ வள்/ இடங்கம்/ சொருவு/ திருணகம்‌
    • வாண்முட்டி, ஆசு, பரிஞ்சு - வாளின் பிடி (handle or hilt of a sword)
    • கிண்ணி- வாளின் கைப்பிடி உறை (cover of the hilt of the sword)
    • வாண்முகம் - வாளின் வாய் (edge of the sword)
    • சொருவுவாள் - உறையினுள் வைக்கப்பட்ட வாள்
    • ஆணி, புட்கரம், வாளலகு - வாளின் அலகு (sword blade)
    • சிலுக்கு - வாளின் பல் (tooth of a saw)
    • வெள்வாள் - ஒளியுள்ள கூரிய வாள் (sharp shining sword)
    • தாராங்கம் - அரசனால் வீரனுக்கு நெடுமொழி கூறித் தரப்பட்ட வாள்
    • ஒள்வாள்- படைக்கலம் இழந்த எதிரிக்கு சமராட எறியும் வாள்

 


  • கத்திப் பிட்டல் - கத்திக் கூடு
  • பாலிகை - கத்திப்பிடி

 

  • தாங்கு - வேல் / ஈட்டியின் பிடி (The staff of the spear)
    • பிடங்கு - வேல் / ஈட்டியின் குழைச்சு (The part of a lance to which steel is fixed.)
    • தரங்கு - வேல் / ஈட்டியின் நுனி {The point of in spear (end tip)}
    • இலை - வேல் / ஈட்டியின் அலகு (blade of a spear or lance or javelin)

 


  • தலை - செண்டு கரளாக்கட்டை போன்றவற்றின் தலைப்பகுதி (head part of a mace or club)

 

ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர்களால் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட ஓர் பெயர் தெரியாத ஆய்தங்கள்:

1.

  • தமிழ் அகராதிகளில் முத்தலைச்சூலம்/ முக்குடுமி (பெரியபு. உருத்திர. 10) என்னும் வித்தியாசமான சூலத்தைக் குறிக்கும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. சூலம் என்றால் நாம் அறிந்தது..
    • இரண்டு பெயர்களும் தலையினையே குறிக்கின்றன. மேலும் இந்த ஆய்தத்தினை தலையில் மணிமுடி போல தாங்கியபடி ஒருவர் அமர்ந்திருப்பது போன்ற ஓர் முத்திரையானது சிந்துசமவெளி ஆய்வில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது.
    • ஆகவே இவை ஏதேனிலும் ஒன்று அதற்கான பெயராக இருக்கலாம் என்பது என் கருத்து.

main-qimg-64c67dbb7a88409bcaa9f97ca10c9664.png

main-qimg-cf8685b675766136bcbdb2ee0b999c69.png

  • இதனைப் பயன்படுத்தும் விதம்

main-qimg-3759e2eaa028f01380314c1aa8f61002.png

2.

  • இவ்வாய்தத்தின் கூர்மையானது செவ்வக வடிவத்தில் உள்ளது. முன் பகுதியின் ஒரு ஒருபக்கத்தில் மட்டும் சிறிது வளைந்து சத்தாராக உள்ளது.
    • இவ்வாய்தத்தின் பெயர் தெரியவில்லை!
      • இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இவ்வாய்தமானது யப்பானியர்களின் கிகுசி யாரி என்னும் ஆயுதத்தைப் போல உள்ளது

main-qimg-4cf901cd6bf97b54190eab544dcb3072.jpg

3.

  • நன்கு அகண்ட, ஒரு அடி பத்து அங்குல உயரம் கொண்ட வாள். ஒரு பக்கம் கூரான சிறிது வளைந்த வாள். ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது.
  • இதன் பெயர் தளிமமாக இருக்கலாம் என்பது என் கருத்து!
    • தளி→ தளிமம் - பரந்த தடிப்பான திண்ணை போன்ற நேர்த்தியான அமைப்பினை உடையது.

main-qimg-ab8fdcf1c9a17b33bca7cdbc7cd6f29c.png

 


  • பெயர் தெரியாத வேறு கைக்கொள் விடாப்படைகள்
    • கீழ்க்கண்ட ஆய்தங்கள் இரண்டில், முதலாவது சென்னை அருங்காட்சியகத்தில் இருந்தும் இரண்டாவது ஓர் சேகரிப்பாளர் ஒருவரிடம் இருந்தும் எடுக்கப்பட்டவை. ஆகையால் இவை பற்றி அறிந்தவற்றை மக்கள் தெரிவித்துதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

main-qimg-da8541a6d988296960853a0667de0e9e.png

'இதே போன்ற படையினைச் சிங்களமும் வைத்திருக்கிறது | திருநள்ளாறு சனீசுவரர் கோவிலில் உள்ள சனியின் சிற்பத்தின் கையில் இவ்வாய்தம் உள்ளது. | சனிசுவரர் படம் காண: Shani Is Depicted As A Male Deity In The Puranas'

main-qimg-1a075c1bec6e1ddc3ecf7f4e3cbb22e1.png

'இதே போன்ற படையினைச் சிங்களமும் வைத்திருக்கிறது | இதே போன்ற வடிவமைப்பை உடைய ஆய்தங்கள் பாரதத்தில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.'

 

 


1)சத்தி/ சூல்/ சூலம் / காளம்/ நல்வசி- இதில் பல வகையுண்டு.

  • எரிமுத்தலை - நெருப்பினைக் கொண்ட சூலம்

"தாமேற் றழுத்திய சத்தி வாங்கி" (பெருங். மகத. 20, 63)

"ஊனக மாமழுச் சூலம் பாடி"(திருவாச. 9:17)

"குலிசங் கதைசூல்" (சேதுபு. தேவிபுர. 27)

"நல்வசி, சூலம்" (பிங்.)

main-qimg-75fe7c225bc1ff446392a7261fc02e1e.png

'நீலகிரியில் கிடைத்த 1500 ஆண்டுகள் பழமையான சூலங்கள்'

main-qimg-fb629fb5fada349a12f431fa4813897a.png

'கி.மு.1-ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலக் காசு | படிமப்புரவு : தகவலாற்றுப்படை'

main-qimg-a1886ae75f1c40cb265dd4f87fad3ed0.png

'சங்ககாலச் சேரர் | கி.மு.1-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | படிமப்புரவு : தகவலாற்றுப்படை'

main-qimg-4e7fdf9f6b6c886c9dd6026f6ddf692e.png

'முற்காலச் சோழர் | கி.பி. 9ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | படிமப்புரவு : தகவலாற்றுப்படை''

main-qimg-2598ed6c1f347614450d0b641d53522e.png

'சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி அருகே செங்கட்டு என்னும் ஊரில், 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக்குழு" கல்வெட்டு | படிமப்புரவு: தஞ்சை ஆ.மாதவன்'

2)சிறு சூலம்

கொச்சியில்(பழைய சேர நாட்டின் ஒருபகுதி) உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற படை. காம்பு மிக மிகக் குறுகியது. ஒரு பனையோலை விசிறியின் அளவே காம்புஇன் நீளம்.

main-qimg-40d3f2eec93e7a73ae3ce27d5bd33f72.png

3)முக்கவர்தடி / முக்கப்பு / முக்கவர்சூலம்/ முத்தலைக் கழு- இதன் குத்தும் பகுதியானது சூலத்தின் குத்தும் பகுதியைக் காட்டிலும் நீளமாக இருக்கும். இது வேட்டைக்குப் பயன்படும் ஓர் ஆய்தம். தேவைப்பட்டால் களத்திலும் சுழலும்.

→எல்லா ஆய்தங்களும் களத்திலும் சுழன்றவைதான்!

  • முத்தலைக் கழு - கழு போன்ற நீண்ட குத்தும் அலகூகளைக் கொண்ட சூலம்.

"பருமுக் கப்பினரே"(தக்கயாகப். 98)

"முக்கவர் சூலமும் கபாலமும் குன்றில்மிகும் காராரிந்த மேனி"

"கழு முள் மூவிலை வேல் முத்தலை கழு…சூலப் படை என வழங்கும்" (நிக.தி:7:2)

"முத்தலைக் கழுக்கள் வீசுவன" (திருவிளை. திருநகர.24)

main-qimg-55ba93cd0fd8788a9a72247b8b37e043.jpg

4)மூவிலைச்சூலம் / இலைத்தலைச் சூலம்/ முத்தலைவேல் - மூன்று வேலின் இலை போன்ற முனைகளைத் அலகாகக் கொண்ட சூலம்.

''மின்னாரும் மூவிலைச்சூலம் என்மேற் பொறி'' (தி.4. ப.109. பா.1, 10)

"இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்" (திருநீலகண்ட பதிகம், 3)

"ஒண்கிடந்த முத்தலைவேல் ஒற்றியப்பா நாரணன்தன்" (திருஅருட்பா, திருவொற்றியூர், கொச்சகக் கலிப்பா, 27)

main-qimg-244b6ae6ba07eddda522ee0144258bf2.png

5)சூலவேல் ‍ சூலமும் வேலும் இணைந்ததே சூல வேல் எனப்படும். வடிவம் யாதெனில், சூலத்தின் நடு முள்ளிற்குப் பகரமாக வேலின் இலையும் பக்கவாடுகள் இரண்டிற்கும் இரு சூல முள்ளுமாக இருக்கும்.

"உருகெழு சூலவேல் திரித்து' (சங். அக.).

main-qimg-dea49dd326fd1fd4aff7bbe9cca95fe5.png


6)மூவிலைவேல் - வேல் என்பது ஓரிலை போன்றது. மூவிலை வேல் என்பது மூன்று இலைகளால் ஆனது. இதன் தாங்கானது படத்தில் காட்டப்பட்டுள்ளது போலல்லாமல் நல்ல நீளமாக இருக்கும்.

  • முருகனின் கையில் இவ்வாய்தம் உண்டு.

"கழு முள் மூவிலை வேல் முத்தலை கழு…சூலப் படை என வழங்கும்" (நிக.தி:7:2)

main-qimg-840fb90ae89832d82d841a2e74c3b160.jpg

7)வேல்/ உடம்பிடி/ ஞாங்கர்/ சத்தி/ எஃகம்/ குந்தம் : முக்கோண இலைவடிவ கூரிய முனை கொண்ட ஆய்தம். இதனை கையில் வைத்தே சண்டையிடுவர்... கூடியவரை எறிவதில்லை!

  • இவற்றின் இலை வெற்றிலையின் வடிவில் இருப்பதால் வெள்ளிலை என்றும் அழைக்கப்பட்டது...
  • வேலின் முகம் அகன்று விரிந்து இருக்கும்! வேலின் கீழ் நுனி வட்டமாக முடியும்!
  • வடிவேல் - மிகவும் கூர்மையான வேல்

"உடம்பிடி/ ஞாங்கர்"(பிங்.)

"குந்தமலியும் புரவியான்" (பு:வெ4:7);

  • குல் > குன் > குந்து > குந்தம்

main-qimg-158ca58000d3bb1f5ebfe5e8d96f94ca.png

8)சிறியிலை எஃகம் - சிறிய ஒடுங்கிய இலையினைக் கொண்ட வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும்..

"சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்" (புற, நாணின மடப்பிடி!, 308)

main-qimg-ab6a1fd3cbbefd608f84006e27e2d530.png

9)ஏந்திலை/ முகட்டுவேல் - இலை நீளமாக இருப்பது போன்ற வடிவினைக் கொண்ட வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை!

  • ஏ → ஏந்து, முகட்டு = உயரம்
  • இலை - இலை
  • ஏந்திலை = நெடிய இலை

''ஏந்திலை சுமந்து'' - (பரிபாடல் - 17,2)

"முகட்டுவேல் " - (செ.சொ.பே.மு)

main-qimg-bb35811ce1c2149df4ade0cf78809a34.png

10)தூரியம் - தூரிகை போன்ற ஒரு வகையான வேல் . இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை!

(பிங்.)

main-qimg-867d1b03633211ddc9527d284efa7ffe.png

11)முத்தகம் - முத்தக இலை போன்ற அமைப்பினை உடைய வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும். கூடியவரை எறிவதில்லை!

main-qimg-9191f9a9b73efa1c0f0884e486bfb0bd.png

12)அயில்/ அயில்வேல்/ நீள் இலை எஃகம் - கோரைப்புல் போன்று கொஞ்சமாக அகண்டு மிகவும் நீண்டிருக்கும் ஒரு வகையான வேல்.

"அயில்புரை நெடுங்கண்" (ஞானா. 33)

main-qimg-056a86346294285ee13b86ee3d70884e.jpg

  • ஆதிச்சநல்லூரில் கிடைத்த பலவடிவ அயில்வேல்கள்:

main-qimg-36e5ce8f701c7d33abc71de1aaa1d99d.png

main-qimg-73b018fd3c4dfb9e5aff08691855e046.png

main-qimg-92714f07ea7ab7f1b9391a1d6ef6ca83.png

13)சங்கு / சங்கம்- இலையானது ஒரு பக்கம் வளைந்து இருக்குமான ஆய்தம். கூடியவரை எறிவதில்லை!

சுல்- சல்- சழி - சருக்கு- சக்கு- சங்கு- சங்கம்

"கழுக்கடை சங்கொடு ....விழுப்படையாவும்" (கந்தபுராணம், சகத்திரவாகு,7)

ஆங்கிலேயர் காலத்திலும் இதன் பெயர் சங்கே!

main-qimg-64022187fa44d1add05c4b490c80a64f.png

  • கைபிடியுடன் கூடிய சங்கு:

main-qimg-f4870f914ee69368955f647ff98d2b9c.png

'இப்படம் ஒரு தமிழ் வர்மக்கலை ஆசானிடம் இருந்து கொள்ளப்பட்டது ஆகும். மேலதிக விளக்கத்திற்கு இவ்விடையின் கடைசியில் உள்ள நிகழ்படங்களைக் காணவும்'

14)பூந்தலைக் குந்தம் - பூப்போன்ற இலையினையுடைய குந்தம். இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை.

"பூந்தலைக் குந்தங் குத்தி"(முல்லைப். 41)

main-qimg-3390c79e04839d579c893fc69b44296a.jpg

  • கீழே உள்ள சிலையானது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். அதில் அதில் நடுவில் உள்ல சிலையின் வலது பக்கத்தில் உள்ள கையில் பூந்தலைக் குந்தத்தை காணலாம்.

main-qimg-5a9fa0a9961ac118efac2154f4634f70.jpg

15)சவளம் - சவண்ட வாள் போன்ற தோற்றம் உடைய ஆய்தம். கூடியவரை எறிவதில்லை! இதில் இரு வகை உண்டு:

    • சுவள்→ சவள் → சவளம்

"அடுசவளத் தெடுத்த பொழுது"(கலிங். 424)

  • சிறுசவளம்/ குந்தம் - சிறிய சவளம்

main-qimg-0265ad6c6f8a0d91ec6bbace2d6557ce.jpg

  • பெருஞ்சவளம்/பீலி - நன்கு சவண்ட பெரிய சவளம்.

"பெருஞ்சவளம்,பீலி ". (பிங்.)

main-qimg-d4431b2d130aeb361894b4ac4ad101b7.jpg

main-qimg-54670b74e956ff5cf5008680a3216d79.png

16) உழவாரம் - அலகானது கொஞ்சம் பார்பதற்கு நேராக்கி நிறுத்திய மண்வெட்டி போல இருக்கும். முன்பக்கம் மட்டுமே சப்பையாக்கப்பட்டு கூராக இருக்கும்!

"கையிற்றிகழுமுழவாரமுடன்" (பெரியபு. திருநாவு. 77)

main-qimg-e71222c4d10e376a7f666a9b034b6c78.jpg

17) சல்லியம்- ஆணி/ முள் போன்ற அலகினை உடைய எறிபடை !

  • சுல் = குத்தற்கருத்து வேர்.
  • சுல் → சல் = கூரிய முனையுள்ளது, குத்தும் கருவி.
  • சல் + இயம் = சல்லியம் → ஆணி/ முள் போன்ற கூரிய முனை
    • கீழ்க்கண்ட சல்லியமானது தென்தமிழ்நாட்டு அரசர் ஒருவரால் பிரித்தானிய பேரரசர் ஒருவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதாகும்

main-qimg-bba3853ad918e1dd4a1a3a1079da19aa.jpg

  • ஆதிச்சநல்லூரில் கிடைத்த சல்லிய இலை:

main-qimg-321eec45c0fc4e188b481e491034b8e1.png

18)அரணம் - அரணத்தின் வடிவினை ஒத்த இலையினைக் கொண்ட வேல் .

  • இதே பொருள் கொண்ட செருப்பு மற்றும் கருஞ்சீரகம் ஆகியவற்றினதும் வடிவத்தினைக் காண்க. அனைத்தும் ஒரே வடிவமே!

(பிங்.)

main-qimg-106425e725220df0f5682634f3c49ce0.png

19)வல்லயம் / குத்துவல்லயம் - இது அதிநீளமான ஓர் ஆய்தமாகும்; முனையில் கூரிய கூர்மையுள்ள மிகவும் நீளமான கையிற்வைத்து எதிரியை குத்தும் ஒருவகை ஆய்தம். எட்டத்தில் நின்றபடியே எதிரியை குத்தி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. இதனைக் கூடுதலாக யானைமேல் உள்ளவர்கள் பயன்படுத்துவார்கள்!

"வல்லயத் தனிலுடைவாளில்" (கந்தபு. தருமகோ. 24)

main-qimg-336436b3c51dcbd9b22a5483d6595ec1.jpg

  • குறிப்பு : மேற்கண்ட படம் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India என்னும் புத்தகத்தில் 'aboriginal and Dravidian races of southern India ' என்னும் தலைப்பின் கீழ்க் கொடுக்கப்பட்டுருந்தவை ஆகும். அவ்வாறு கிடைத்த இரு படங்களையும் பிரித்து கொடுத்துள்ளேன்.

20)பண்டி வல்லயம் - பன்றி வேட்டையிற்கு முதன்மையாக பயன்படுத்தப்படும் வேல்.

  • பன்றி> பண்டி | பண்டி என்பது பன்றி என்னும் சொல்லிற்கான ஈழத்து வழக்காகும்

main-qimg-f34431b309f518a9ce4406dde372a946.png

  • குறிப்பு : மேற்கண்ட தகவல் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India என்னும் புத்தகத்தில் 'aboriginal and non-aryan tribes of central India and the andaman islands' என்னும் தலைப்பின் கீழ் எண் 29 இல் கொடுக்கப்பட்டுருந்தவை ஆகும்.

21)கழுக்கடை/ விட்டேறு/ கோல் -குச்சியில் நீளமான கூர்மையான முனையினைக் கொண்ட ஈட்டி. கழுக்கோல் என்பது தான் கழுமரம்.. இதை அதோடு போட்டுக் குழப்ப வேண்டாம்!

"பிண்டி பாலங்கள் கழுக்கடைவாட்படை" (திருவிளை.திருமண.31)

"புயமறவே விட்டேறு" (இரகு. நகர. 28)

main-qimg-10f5dc2a54d83a42e981e2b56722a9f9.jpg

22)நேரிசம்- நீண்ட முள்போன்ற மெல்லிய தலையினைக் கொண்ட ஈட்டி. இது எறிபடை வகையே.

  • நேர்- நேரான
  • இல்>இளி>இசி - முள் / குத்துவது
  • அம் -விகுதி

"மாகடைக்க னேரிசத்தான் மறைக்களிற்றை மதமடக்கி" (குற்றா.தல. தருமசாமி.74)

main-qimg-b12dbbe886c3c4e24fd11fb96848a20f.jpg

  • ஆதிச்சநல்லூரில் கிடைத்த நேரிசம்

main-qimg-d3dedb36c29f4c77551839b619d014a4.png

23)திருகுதடி- திருகுவது போல இருக்கும் ஈட்டி அலகு. இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. இது எறிபடை வகையே.

main-qimg-c45817c8e4504548daecde29dac72fb4.png

24)தோமரம்/ கைவேல்/ கப்பம்/ கப்பணம்/ கற்பணம் - சிறிய படை.. இது பார்பதற்கு சிறிய வேல் போன்று இருக்கும்.. இதே போன்ற சிலதினை முதுகில் ஓர் தூணி போன்று ஒன்றினை அமைத்து அதனுள் வைத்து செருக்களம் நோக்கி எடுத்துச் செல்வர். தேவைப்படும் போது எதிரி நோக்கி விட்டெறிவர் இல்லையேல் கையில் வைத்து சண்டையிடுவர். தற்கால கைத்துப்பினை(pistol) இதனுடன் ஒப்பிடுக‌.

  • இப்படை வீரர்களை அக்காலத்தில் தோமரவலத்தார் என்றழைத்தனர்.
  • கை+வேல் = கைவேல் | கை - சிறிய

"தோமரவலத்தர் " (பதிற்றுப். 54, 14)

(பிங்.), கைவேல் களிற்றொடு போக்கி (குறள், 774)

"கப்பனப் படையும் பாசமும்" (இராமா. கரன். 351);

"கப்பணஞ் சிதறினான்" (சீவக. 285).

main-qimg-dfb03de66adfe137680c3ba794518fa2.png

main-qimg-921ea838550a1b360375a491a5cbb2a0.png

main-qimg-9e7647ce7b5aaaf91e49a524611a8001.png

'அருகில் உள்ள சூலம் மற்றும் பொத்திரத்தை விட கைவேலானது சிறியதாக உள்ளதைக் கவனிக்கவும்| கி.மு.1-ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலக் காசு | படிமப்புரவு : தகவலாற்றுப்படை'

25)பொத்திரம் -

  • பொள்- துளையிடுவது போன்ற
  • திரம்- தகரைச்செடியின் கொத்துப் பூப்போல குண்டாக இருக்கும் கூர்மையான அலகு.

"பொத்திரம் பாய்ந்து மாய்ந்தீர் "(சேதுபு. சங்காபாண்டி,41)

main-qimg-1ec6cf4982c5949b7638511c2553859d.png

26)கவர்தடி/ கணையம்- இருபக்கமும் கூரான எறியாய்தம்.

(கருநா.)

"தண்டமாலங் கணையங் குலிசாயுத மாதியாக" (கந்தபு.தாரக.157);

"அம்பொடு கணையம் வித்தி" (சீவக.757)

main-qimg-cbfc582e5815061f9a26808777f5ef2a.jpg

27)இட்டி / ஈட்டி/ எறியீட்டி/ வண்டம்/ தரங்கம் - எறிபடை …

  • ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும் ; ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்.
    • இல் > இள் > ஈட்டு > ஈட்டி
    • துளங்கு → தளங்கு → தரங்கு → தரங்கம்
  • வண் - மிகுதி
  • வண்டம் - மிகுதியாக இருக்கும் ஆய்தம்.. (வேலினை விட ஈட்டி / குந்தம் தானே போர்க்களத்தில் அதிகமாக இருக்கும்!)

"வைவ ளிருஞ்சிலை குந்தம்" (சீவக. 1678)

"தரங்கத்தாற் பாம்பைக் குத்தினான்"

"வண்டம்" (சங்.அக.)

"இட்டிவேல் குந்தங் கூர்வாள்"(சீவக.2764); (செ.அக.):

main-qimg-cdf21774281bae491268625def1ab413.png

main-qimg-eab7852b34cc0dce9fe0381063636216.jpg

main-qimg-91740af54698d7623414d71e5f9deb62.png

'ஐந்து தலைமுறைகளாக கிருஸ்ணகிரியில் காக்கப்பட்டுவரும் ஓர் பழங்கால ஈட்டி. இவ்வீட்டியின் தடியில் தேளின் படம் வரையப்பட்டுள்ளதை நோக்குக‌'

main-qimg-f522c3101db7d5cd654e4eb7da0351bf.png

28)இரட்டைக்கருவீட்டி- நீண்ட கைபிடி காணப்படும்.

→செ.சொ.பே.மு

main-qimg-53fa15563e1ba92308f386a503c2dd78.jpg

  • மன்னார், கட்டுக்கரைக் குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காசில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட இரட்டைக்கருவீட்டி கேடகத்துடன்:

main-qimg-9a979c01e2b1fd88fa5fa9caeb81fcba.jpg

main-qimg-5a135e542a121401eaaf7ad8d371b1fc.png

'இரு நடுகற்களின் இடது கீழ்ப் புற மூலையை நோக்கவும். அங்கே இரட்டைக்கருவீட்டி உள்ளதை காணவும்'

29) சுடரிலை வேல்:

இதை நீங்கள் முருகனின் கையில் பார்த்திருப்பீர்கள். அதன் விதப்பான பெயர்தான் இது. வேலின் இலையானது சுடரினைப் போன்ற உருக் கொண்டிருந்தால் அது சுடரிலை வேலாகும்.

main-qimg-054f6bc2d7d3281585e57a4254df4d80.jpg

main-qimg-09a7a3162057785ab7cc14669e59aaf2.png

30)பெயர் என்னவென்று தெரியவில்லை.

ஆனால் பண்டைய தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது

main-qimg-515734ae4cff8d5d32204c1c51401354.png

'படம் சிங்களவரிடம் இருந்தே எடுத்தேன்'

  • கீழே உள்ள சிலையானது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். அதில் அதில் நடுவில் உள்ள சிலையின் இடது பக்கத்தில் உள்ள கையில் காணலாம்.

main-qimg-5a9fa0a9961ac118efac2154f4634f70 (1).jpg

31)வகைப் பெயர் அறியில்லா வேல்

main-qimg-ec8bbe4c1f8452da0f205acf5fa851dc.png

' சங்ககால-மலையமான் காசு | காலம் அறியில்லை | காசுப் படிமப்புரவு - தகவலாற்றுப்படை'

 


32)கணுவாளி- முள்கொண்ட முட்டி

main-qimg-2d70c066b79fda1bba224eb1da7b5f26.jpg

main-qimg-9ab8d6de3e1f9e0816b8e1b6c92e4b18.jpg

33) வைர முட்டி - இடிப்பதற்கான முளைகளை உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆய்தம்.

main-qimg-afb5b3751ed57d85f29d9651ddc5afa1.jpg

34)இடிக்கட்டை - மாட்டுக்கொம்பால் செய்த கையில் வைத்து சண்டையிடும் ஆய்தம்.

main-qimg-55d72d7778dad88b3da832d4ede73950.png

35)கரசம்- குத்துவதற்கான கூர்களையும் இடிப்பதற்கான முளைகளையும் உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆய்தம்.

main-qimg-a8f558d90c8a551a80b710531f6c291d.png

main-qimg-87c91526c6df90d43c20a8f34797fc0b.jpg

 


36)பூங்கருவி / சன்னகம் - வாயில் வைத்து ஊதி கணையினை வெளியில் செலுத்தும் ஆய்தம்.

  • பூ - ஊதுதல்
  • சன்னகம் - சன்னத்தினை தன்னகத்தே கொண்டது.
    • சன்னம் - இதில் இருந்து வெளியேறும் கணையின் பெயர்.

main-qimg-94d94463922606f3b629911703ba76d8.png


37)பண்டைய தமிழர்களால் போரில் பயன்படுத்தப்பட்ட வில்லம்பு:-

 

  •  

 

38) பண்டைய தமிழர்களால் போரில் பயன்படுத்தப்பட்ட கோடாரிகள்:-

 


 

39)பாரை

→ "பாரையின் றலைய" (கம்பரா.நாக.பாச.110.)

main-qimg-f7c5eeaec51b7e6d8b658801e66ad37e.png

40)சங்கிலிக் கட்டை:

main-qimg-64bc3277a4c461e363a093f0dc8356a4.jpg

  • பயன்படுத்தும் விதம்

main-qimg-1ff37d868fe8f9ba792b75d9d333d2f2.png

 


41)கரலாக்கட்டை: சண்டையுமிடலாம்; உடற்பயிற்சியும் செய்யலாம்.

இதில் ஐந்து வகையான கரலாக்கட்டைகள் உள்ளன :

  • புடிக்கரலை/ எழு(எழு - தூண்போல இருக்கும் ஓர் கணையம்)

main-qimg-f6580728f53876d8c29ccd6f476ae4e4.png

  • புயக்கரலை - ‘புயம்’ என்பது தமிழ்ச்சொல்லே!

main-qimg-3f93204fc28be0ba165d3f770970c49e.png

  • கைக்கரலை

main-qimg-ac911a4ceb5557396eecc4c68206f4c5.png

  • குத்திக்கரலை/ பரிகம் (பரிகம் - ஏற்றம் போல இருக்கும் ஓர் கணையம்) - குத்திப் போர்புரிவதே குத்து> குஸ்து> குஸ்தி என்றானது.

main-qimg-0badb524f616d7aa7fdf7f53f3daf83a.png

  • தொப்பைக் கரலை

main-qimg-a3d2de0cddd451637332bd395e54b03d.png

42) குண்டாந்தடி

குண்டர்களிடம் இருக்குந் தடி குண்டாந்தடி எனப்பட்டது. இது திருநெல்வேலி கொள்ளையர்களால் பயன்படுத்தப்பட்டதாகும்:-

main-qimg-0190d0a05c1d6299c4d40f0850dd5144.png

  • குறிப்பு : மேற்கண்ட படம் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India - No -65 என்னும் புத்தகத்தில் 'aboriginal and Dravidian races of southern India ' என்னும் தலைப்பின் கீழ்க் கொடுக்கப்பட்டுருந்து ஆகும்.

43) மறத்தண்டு/ தண்டு/ தண்டாய்தம்/ தண்டம் :

  • துள் - தள் - தண்டு - தண்டம்

படத்தில் உள்ள வேலிற்கு அருகில் உள்ளது தான் தண்டு.

தண்டு என்றாலே ஓரளவிற்கு மொத்தமான தடி என்றுதான் பொருள். எனவே இங்குள்ளதே சரியென நான் முன்மொழிகிறேன்

main-qimg-9a73c426ad760574dda60dce7aa22278.jpg

'படிமப்புரவு: காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்'

இதில்…. மொத்தத்திலிருந்து போகப்போக ஒடுங்கி மெலிதாகும் வடிவமும் உண்டு:-

main-qimg-9e68b87bb129b8b15969fa2e4ce4169d.png

'இலகுளீசர், அரிட்டாப்பட்டி சிவன் குடைவரை, கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர்'

இவ்விறைவனின் கையில் இருப்பது ஒருவகைத் தண்டே.

main-qimg-0b8845219c61474ce9875316ec30be3b.jpg

'பாண்டியர் குடைவரைக் கோவிலும் அதில் காவலிற்கு நிற்கும் வாயில்காப்போர்'

மேலே உள்ள இருவரின் கைகளிலும் ஒருவித தண்டம் உள்ளதை நோக்குக.

கீழ்க்கண்ட தெய்வம் தண்டத்தை குத்தி நிறுத்தியுள்ளதை நோக்குக:

main-qimg-f57fbcebc5454d981213fc6973ec9890.png

'பஞ்சவன் மாதேவீச்சுவரம், தஞ்சாவூர் AD-11th C'

main-qimg-1604c1871acac3f61d43e91f71426fbe.png

'குன்னாண்டார் கோயில், புதுக்கோட்டை | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்'

44)ஏறுழ்/ வயிரம்/ நிலைச்செண்டு-

"நிலைச் செண்டும் பரிச்செண்டு" , சேக்கிழார்

இங்கு நிலைச் செண்டு என்பது கத(gada) என்றும் பரிச்செண்டு என்பது பரியினை(குதிரை) ஓட்டுவதற்கான செண்டாகவோ (ஐயனாரிற்கான ஊர்தியாக தமிழ்நாட்டின் சிற்றூர்களில் குதிரையும், ஊர்களில் ஆங்காங்கே யானையும் உண்டு.) அல்லது சுழற்றி ஏதேனும் ஒன்றினை ஓட்டுவதற்கான செண்டாகவோ கொள்ளலாம். எது எப்படி இருந்தாலும் நிலைச்செண்டு இதுவெனவும், ப‌ரிச்செண்டு என்பது ஓட்டுவதற்கான செண்டு எனவும் கொள்க.

main-qimg-11ee10d2f86bac7d44dc26cf03e4321b.jpg

main-qimg-f23b3285a5214c82c7be7d40f02f243b.jpg

45) தேவதண்டம் - முனையில் ஆணிகளை உடைய தண்டம்

main-qimg-0ab59a6a21a00eac1e4ea8e0b6ca485c.jpg

'படம் விளங்கிக் கொள்ள மட்டுமே'

46) முசலம்/ முசலி - பலராமனின் கையில் இருக்கும் இந்த அடுபடையே முசலமாகும். இது வடிவில் சிறிய தண்டம் போன்றதாகும்.

main-qimg-db635b71c0a4e1ce4f27b2a45935e8dc.png

'பரசுராமர், மைய அருங்காட்சியகம், சென்னை' - தமிழிணையம் - தகவலாற்றுப்படை '

47) முளை - தலைப் பகுதியின் கோளகம் சிறியதாக இருக்கும். காம்பு சிறியது!

main-qimg-36b79d792f68b4d851d14fea2b69c4a8.jpg

48)சீர்- ஒரே சீரானா ஆனால் தலைப்பகுதி மட்டும் சிறிது மெல்லிய குண்டான தோற்றத்தினைக் கொண்ட ஆய்தம். காம்பு சிறியது!

main-qimg-91330523e0b54905cb44065f2267e79b.jpg

49)தடி:

main-qimg-b6e551414a321c66e5591518b4f9ca44.jpg

50)உலக்கை/ காண்டம்- கீழே காட்டப்பட்டுள்ளதைப் போன்றுதான் இருக்கும். நீளமான வலிமையான கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட உலக்கை.

  • காண்டம்: தண்டு போலத் திரண்ட கோல்

main-qimg-fc9a6ba942e7a9f0881b487db5ae67f6.jpg

51) முசுண்டி / மட்டிப்படை - பெரிய சுத்தியல் போல இருக்கும் ஆய்தம். படத்தைப் பார்த்தவுடனே புரிந்திருக்கும்.

main-qimg-96ff447cb9e97ce8d1555ca3d575f116.jpg

52) முட்கரம்:-

முசுண்டியின் தலையில் முட்கள் இருந்தால் அது முட்கரம் ஆகும்

53)பிண்டி/ வாலம்/ பீலித்தண்டு - மரத்தால் ஆன இவ்வாய்தத்தின் தலைப் பகுதியானது பார்ப்பதற்கு தண்டு போலவும் இதன் பிடங்கு நல்ல வலிமையான தலைமரத்தின் தொடர்ச்சியான தடியையும் கொண்டிருக்கும்..

  • பிள் -> பிண்டு-> பிண்டி = திரளை

main-qimg-8f34e6d4e614a688966997d63d21973e.png


54) அங்குசம்/ தாறு / இருப்புமுள்/ தாற்றுக்கோல்/ தார்க்கோல் / பரிக்கோல்/ தோட்டி/ குத்துக்கோல்/ குத்துக் காம்பு/ முட்கோல்/ சரணம்/ காழெஃகம்/ கொந்துகோல் - இதற்கு மேலும் பல பெயர்கள் உண்டு ! யானை மேல் அமர்ந்து போரில் ஈடுபடும்போது யானையை அடக்கப் பயன்படுத்தபடும் ஆயுதம்.

  • நெடுந்தோட்டி- பெரிய தோட்டி

main-qimg-550f09605eeff1d4af3dde5680bd8f17.jpg

main-qimg-17057ed2f1831c640374370ce6644eb1.jpg

  • அரைமதியிரும்பு - பாதி நிலா போன்ற ஒருவகை யானைத் துறட்டியிரும்பு

main-qimg-0febdd99be11678cb5773faf5b440cde.png

 


55) பண்டைய தமிழர்களால் போரில் பயன்படுத்தப்பட்ட கேடயங்கள்:

 


 

56)வாள்/ ஏதி / சிரி/ நாட்டம் / தூவத்தி/ வஞ்சம்/ மட்டாய்தம்/ உவணி/ உடைவாள் - (இதில் பல வகையுண்டு ) ஒருபக்கம் மட்டுமே வெட்டும் தன்மை கொண்டது. கொஞ்சமாக வளைந்திருக்கும்.

  • கூர்வாள்/ தெளிவாள்/ வடிவாள் - மிகவும் கூரிய வாள்
  • ஊருவாள் - என்னவகையான வாள் என்று தெரியவில்லை

main-qimg-6cd462bf6a43f60ba134fb13c27cdac1.png

main-qimg-230d7f024e1a230cf181294191a852bc.jpg

'மேற்கண்ட படத்தில் இடது பக்கத்தில் இருந்து மூன்றாவதாக இருப்பது கூன்வாளாகும் | இடது ஓரத்தில் இருப்பது கத்திவாளாகும் | இவற்றில் கைடிபிடி இருந்தால் அவை கைபிடி வாள் என்றும் அழைக்கப்படும்'

  • கைபிடிவாள்/ பிடிவாள்/ உடைவாள்- கை பிடியுள்ள வாள். ஒருபக்கம் மட்டுமே வெட்டும் தன்மை கொண்டது. கொஞ்சமாக வளைந்திருக்கும்.
  • படைவாள் - போர் வீரர் பெருமளவில் இவ்வாளையே பயன்படுத்தியதால் இப்பெயர் இதற்கு ஏற்பட்டது
  • குறும்பிடி - இதில் குறுகிய பிடியினை உடையது குறும்பிடி எனப்பட்டது

main-qimg-d7440e8ebad1b610c91f8e2f0d8bbac7.png

57)கூன்/ கூன்வாள்/ தாத்திரம்/ வளை வாள்- நன்கு வளைந்த வாள் (கூனிய வாள்)

மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன்

→ கம்ப., யுத்த காண்டம், 144 (9048 ஆவது பாடல்)

 

main-qimg-de9c4a432c15436fc51a2310868cd8b3.png

'இது சேரர்களால் பயன்படுத்தப்பட்டது | படிமப்புரவு: கேரளாவின் கொச்சி அருங்காட்சியகத்தில் இருந்து'

மேற்கண்ட அதே வாள் தமிழ்நாட்டிலும் கிடைத்துள்ளது:-

main-qimg-1841da71c7a0761b0dc742ad4cf39d96.png

'ஜமுனா மாத்தூர் நடுகல்'

58)கைவாள்/ கரவாள்/ கரவாளம்/ கரவாபிகை/ முட்டுவாள்/ ஈலி/ சிறுவாள்/ குறுக்கை - (small sword)

main-qimg-a87750a7218a949e32464dea17ce73d9.png

  • கீழ்க்கண்ட சிறுவாளானது ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சியில் கண்டெடுக்கப்பட்டதாகும். இதற்கு கைபிடி இல்லை என்பதையும் காண்க.

main-qimg-9b0e3a8cd8770b0d0f882d8bb02116e4.jpg

59)நெளிவாள் / கோணம்-நெளிந்த(ஒருவகையில் கூனிய) வாள். சேர அரசர்களால் பயன்படுத்தப்பட்ட வாள்..

main-qimg-e6bf6f684c49ba4cb98f0866a42487dd.png

main-qimg-abe0c8ab9563b31f319f5f544d01057a.png

main-qimg-079e0d80c377c2cbaf7fbc7b07179b22.png

60)கடுத்தலை - இவ்வாளானது வீரபத்திரரின் கையில் உண்டு.

main-qimg-85e815060ecc150452d8bee86f6a75f7.jpg

main-qimg-7e4f37d295afa4978a0a35155b8f3068.jpg

'வீரக்கல் கிடைத்த இடம்: செம்ப‌னூர், பெரும்பாலை, தருமபுரி மாவட்டம் | இங்கு கடுத்தலையின் படிமம் உள்ளதைக் காண்க‌'

61)மாவசி/ நெடுவசி - இருகையால் பிடித்துச் சண்டையிடும் ஆளடி உயரமுள்ள வாள்.

  • கீழ்க்கண்ட மாவசி ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சியில் கண்டெடுக்கப்பட்டதாகும்.

main-qimg-fa044e387cce303b0bf1f55d35d83dc4.png

62)பட்டயம்/ பட்டம்/ பட்டா- பட்டையான பரப்பைக் கொண்ட வாள். இருபக்கமும் வெட்டும் தன்மை கொண்டது.

main-qimg-d93267be3442821ade7e134c3d044064.png

63)பட்டாக்கத்தி- பட்டாவினை விடச்சிறியது

main-qimg-098fb8f1a6211e910ab2631d49c2573d.png

64)கையுறை வாள்/ கைப்பட்டா/ தொடுப்புக் கத்தி -

  • பட்டை -> பட்டா (பட்டையான பரப்பக் கொண்டதால்)

பட்டையான பரப்பைக் கொண்ட கையுறையுள்ள வாள். இருபக்கமும் வெட்டும் தன்மை கொண்டது. மற்ற வாள்களுடன் ஒப்பிடும் போது இது கொஞ்சம் மெல்லியது. இது உண்மையில் மராத்தியர்களால் உருவாக்கப்பட்டது. இதன் பயன்பாடு 17 மற்றும் 18 நூற்றண்டுகளில் மட்டுமே ஆகும் என்கிறது விக்கி. இது முகாலயர்களிற்கும் மராத்தியரிற்கும் ஆங்காங்கே எதிர்க் கிளர்ச்சியில் ஈடுபட்ட தமிழர்களால் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.

main-qimg-995c5ad30541ccaa2c0c240af7741efd.png

65)கோல்வாள் - மிகவும் நீளமான அலகினை வாள் போல கொண்ட ஓர் ஆய்தம். இதற்கு தாங்கு உண்டு. அதுவும் கொஞ்சம் நீளமாக கோல் போல இருக்கும் .

main-qimg-1f51d465fab12a22db5910bace257cda.jpg

"படம்: ஆதிச்சநல்லூரில் இருந்து"

66)ஈர்வாள்/ அரி / வேதினம் - வாளின் அலகில் சிலும்புகள் இருக்கும். அவை சிலவேளை ஒருபக்கமும் இருக்கலாம் இல்லை இருபக்கமும் இருக்கலாம்

main-qimg-5b60929d3bc49b214e9ccc681da26373.png

'இது வர்மக் கலை ஆசான் அருணாச்சலம் என்பவரிடம் இருந்து கிடைக்கப்பெற்றது ஆகும். '

67)நவிர் / மழுவாள் - முள் போன்று மெலிதாக உள்ள வாள்.

  • முள் - மள் -மழு

main-qimg-6daa4faebcc2ddfaa8c1da51dcbb3478.png

68)இழிகை /குத்தீட்டி - அகண்டு போகப்போக குறுகி(இறங்கி) குத்தும் தன்மையினை முனையில் கொண்டிருக்கும் வாள்.

கிரிஸ்ணகிரியில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் ஒன்றிலும் இவ்வாள் உண்டு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை

main-qimg-a30ed7e6468b5c61f2bd4c8c0c1525ce.jpg

69) பெயர் தெரியாத வாள்

இது ராஜா கேசவனாதன் என்பவர் பயன்படுத்திய வாள். இதன் கைபிடியை வைத்துப் பார்க்கும் போது இது தென்னிந்திய வாள் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

கிடைத்த இடம் : பத்மனாதபுரம் அரண்மனை

main-qimg-72c2040ecc10a098cc497c6278084430.png

70) நாந்தகம்/ தெய்யம் வாள்/ சுடர்வாள் - சேர அரசர்களால் பயன்படுத்தப்பட்ட வாள்.. இது சேரர்களால் பயன்படுத்தப்பட்டதால் 'நாயர் கோவில் வாள்' என்று அவர்களின் குலப்பெயர் இட்டு அழைக்கப்பட்டது. இன்றும் அங்கு புழக்கத்தில் உண்டு!

"வெய்ய கதை சார்ங்கம்  வெஞ்சுடர்வாள்  -செய்ய" - மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -36

main-qimg-cb4bd9ea4aef53dfda437414771de026.png

main-qimg-17b5f51a3fb25e255e91f245feecc46b.jpg

main-qimg-92181ea2339137e9d17a8fe6d72b69d5.png

71) சொட்டைவாள் - இந்த வாளும் கிட்டத்தட்ட நாந்தகத்தின் அலகு போன்ற ஆனால் அந்த துருத்திய பாகம் அற்றதான, ஒரு வழுக்கைத்தலையினைப் போன்ற வடிவினை உடைய வாள். இது, இந்த அமைப்பினைத்தான் கொண்டிருந்ததாக 'சொட்டை' என்னுஞ் சொல் மூலமாக அறிய முடிகிறது.

main-qimg-31365cb89adfb1193248cbffa903fef4.jpg

72)கட்கம் - தமிழரின் போர்க்கடவுளான கொற்றவையின் (காளி) கையில் உள்ள வாள். சேர அரசர்களால் பயன்படுத்தப்பட்ட வாள்..

  • கள்+கு → கட்கு+அம் → கட்கம் → திரட்சி, உருண்டு திரண்டது போன்ற வாள்.

main-qimg-cfa6cf55ad6f628bbb7aad0e30a8fc18.jpg

73) கைச்சுரிகை/ சுரிகை/ கரவாதி - இது ஐயப்பனின் கையில் இருக்கும் ஓர் ஆய்தமாகும். சோழ அரசன் தித்தன் இதைச் சுற்றுவதில் சிறந்து விளங்கினான். இது கண்டத்தைவிடச் சிறியதாகும்.

main-qimg-86277b9c8d7d4aa95c099d2b71a74f20.jpg

74)கண்டம்/கண்டகம் - இது சுரிகையினை விடப் பெரியதாகும்.

  • இது சேரர்களின் கண்டம்:-

main-qimg-f166165cefd060be20c9edcc4db36ac6.png

main-qimg-30b144c2eab278349bb89efafac377b2.png

'இது நீலகிரியில் கண்டெடுக்கப்பட்டதாகும்'

main-qimg-adb561865cbd4889e415c721402d385a.png

'இது நீலகிரியில் கண்டெடுக்கப்பட்டதாகும் | இதன் தலைப்பகுதி பெருத்தும் கீழே வரவர நடுப்பகுதி ஒடுங்கியும் பின் மீண்டும் அடிப்பகுதி பெருத்தும் இருக்கிறது. இது அரிய வகைக் கண்டமாகும் '

  • கீழ்க்கண்ட கண்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சியில் கண்டெடுக்கப்பட்டதாகும்.

main-qimg-c719f4c850617f3d8f9c10dbc8824861.png

75) பெயர் தெரியாத வாள்

இவை ஒரே வடிவ ஆனால் இருவேறு தோற்றத்தொடு (சோழரிற்கு ஒரு தோற்றம், சேரரிற்கு ஒரு தோற்றம்) கூடிய வாள்கள்.

  • இது சேரர்களால் பயன்படுத்தப்பட்ட வாள்

main-qimg-5870b002826c3ccb41d1be447b6b8b10.jpg

  • இது பொலன்நறுவையில் கண்டெடுக்கப்பட்ட சோழர்களால் பயன்படுத்தப்பட்ட வாள்:-

main-qimg-e7875d1741455caeea0a0f00dbf397cc.png

  • புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயிலில் உள்ள கொற்றவையின் கையிலும் சோழர்கள் பயன்படுத்திய இதே வாளின் வடிவம் உண்டு.

76) பெயர் தெரியாத வாள்

இவை வடிவில் ஒரே வகையச் சேர்ந்தவையாக இருந்தாலும் தோற்றத்தில் வெறுபடுகின்றன. ஒன்று குள்ளமாகவும், மற்றொன்று நீளமாகவும் உள்ளது. இவற்றின் வகைப் பெயர் தெரியவில்லை. இவை சேரர்களால் பயன்படுத்தப்பட்ட வாட்களாகும்.

main-qimg-74c8e96456ae11e927aeedf2aa036ad8.png

77) பெயர் தெரியாத வாள்

இது சேரர்களால் பயன்படுத்தப்பட்ட வாள்

main-qimg-e10bfb86e774df06e8357aa86e2887a0.png

78) பெயர் தெரியாத வாள்

இதன் வாளலகு இருபக்கமும் அலைபோல இருக்கிறதுது.

main-qimg-50b1c0c416443534d2463569bc4aa992.png

'சென்னை அருங்காட்சியகத்தில் இருந்து கிடைத்தது'

79)கத்திவாள் ‍ - இது நேராகவும் கொஞ்சம் நீளமாகவும் இருக்கும். ஆனால் வாளில் உள்ள வளைவுகள் இருக்காது. அதேபோல வாளைப் போன்ற தடிமனும் மொத்தமும் இல்லாதிருக்கும்.

main-qimg-445f30547346c0e2f159d155c131d5c5.jpg

80)முத்தப்பன் வாள் :

இது சேரர்களால் பயன்படுத்தப்படும் ஓர் வாளாகும். இது முத்தப்பன் சாமியின் கையில் இருக்கும்.

main-qimg-46ac082107db0911559fd3d9563fbc91.png


இடைச்சுரிகை/ குற்றுடைவாள்- இடையில் வைத்திருக்கும் குற்றுடைவாள்கள் அனைத்திற்கும் வழங்கப்படும் பொதுப்பெயர்கள்.

  • கக்கடை, கட்டாரி, கொடுவாய்க்கத்தி, பீச்சுவா, முக்குத்துவாள், இரட்டைக் கத்தி , கைக்கத்தி/ பீச்சாங்கத்தி, சமதாடு , ஈட்டிக்கத்தி, எறிவாள் ஆகியவை எல்லாம் இதன் வகைகளே!

81)குத்துக்கத்தி

main-qimg-fc7aa58f71128e56a61e671334384a9c.png

main-qimg-0a8dc868d2c7d1076aa02794ceeb651c.png

main-qimg-da1a2600a172d3870d4f29d9f2d5eb86.png

main-qimg-0f9336c1af45d6da90b8cee3a83f9028.png

main-qimg-a1c1025c08c127301fa350395cd7bba2.png

main-qimg-9e544167edfe549b9cf5cd53ea1dba5a.png

(இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும்)

82)கொடுவாய்க்கத்தி -அதாவது முழுதும் வளைந்திருக்காமல் அறுவாளுக்கு இருப்பதுபோல நுனிப்பகுதி மட்டும் வளைந்திருக்கும் கத்தி.

  • கொடுவாய் -வளைந்த வாய்

main-qimg-64e4055105c2d0c9800edc7ff975963e.png

83)கைக்கத்தி/ பீச்சாங்கத்தி - முன் பக்கமும் ஒருபக்கம் மட்டுமே கூராக உள்ள கத்தி.

  • இக்கத்தியானது ஈழத்தமிழர்களாலும் கொடவர்களாலும் பயன்படுத்தப்பட்டது. பீச்சாங்கத்தி என்னும் சொல் வவுனியாவில் வழக்கில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

main-qimg-9ee8f08a88d35896804069019a783a1a.jpg

84)சமதாடு - மன்னர்கள் மட்டுமே பயன்படுத்தும் வேலைபாடுகள் நிறைந்த ஒரு வகை இடைச்சுரிகை .

main-qimg-54a26de11195d990f7a036a95da8a780.png

main-qimg-9b79a18ff1ddf0140835ba6102f66d49.jpg

main-qimg-080545024a2fb269cdc6536f469ed4b0.jpg

main-qimg-326e9037699238a98bfb916585aed3e1.png

main-qimg-4de7a624fe17f0ded16fe24585cd92b6.jpg

main-qimg-8811a8df6c09898393d271acc86ca119.png

'மேல்காவனூர் வீரக்கல்' - தமிழிணையம் - தகவலாற்றுப்படை

85) ஈட்டிக்கத்தி -ஈட்டியினைப் போல அலகினைக் கொண்டதால் ஈட்டிக் கத்தி எனப்பட்டது.

main-qimg-7e7d74099a16ca3297e5486cf7bf5d94.png

86)முக்குத்துவாள்

main-qimg-bf324ee717ec40c5288d9e8012a95657.png

main-qimg-aac0626a244829fe40806bdb47aece0a.png

87)இரட்டைக் கத்தி - இரண்டு அலகுள்ள கத்தி

main-qimg-83b2f425236af55e5cced9641c4b82a5.jpg

main-qimg-7158d4ade95643b2514e2e79fdd0e27d.png

88)கக்கடை/ கைக்கடி- படிமத்தில் உள்ளதுபோல சிறியதாக பல வளைவுகள் கொண்ட கத்தி.

  • கை+கடி - கைக்கடி - கைக்கடை - சிறிய குத்தும் வாள்

main-qimg-d6f73c98c992942ebe9cf071f0062c1e.jpg

main-qimg-db7035594bfdfd3da7a9e99d174adb4b.png

89)எறிவாள்- எறியப்பயன்படும் வாள்

main-qimg-867efaa9d5f6e828a13bd2d37b7fbccc.jpg

main-qimg-fbc3da364a739e1e756ce997c81d0192.jpg

main-qimg-f7dcfd5ff0e853fc5644626845f4818d.jpg

main-qimg-8ee9230cd3d28a4541e51d9b576a16ad.png

90)நாட்டான் வெட்டுக்கத்தி

main-qimg-2fa789fe4e670a88e5c4c3c590edf4b5.jpg

main-qimg-c79a19f340cd7ddb0e1a8c8b7ede3a9e.jpg

91)சத்தகம்

(இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .)

main-qimg-f9804d3249b39007c6548248d4f3b9c8.jpg

92) புல்லுச் சத்தகம்

(இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .)

main-qimg-2f798d3ea083a9b42bd8f60af8e1b492.jpg

93)சாக்கத்தி

main-qimg-37478fb1203623720caed0815d5de0c7.jpg

  • குறிப்பு : மேற்கண்ட படம் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India என்னும் புத்தகத்தில் 'aboriginal and Dravidian races of southern India ' என்னும் தலைப்பின் கீழ்க் கொடுக்கப்பட்டுருந்தவை ஆகும்.

94) கொங்கவெள்ளம்/ கொங்கவாள்/ கொங்கணக்கத்தி/கொங்கணம் கத்தி

  • குல்- குள் - குங்கு - கொங்கு = வளைந்த தன்மையுடையது
  • அணம் = சொல்லாக்க ஈறு

இது தென்தமிழ்நாட்டின் மிகச் சில சிற்றூர்களிலும் சேரநாட்டிலும் பயன்படுத்தப்படும் ஒருவகை வாள்/கத்தியாகும். இதனை பயன்படுத்துவோர் 'கொங்கவாளர்' என்று சோழப் பேரரசின் காலத்தில் குறிக்கப்பட்டுள்ளனர் (கல்வெட்டுகளில் கொங்கவாளர் & கொங்கவாள் என்ற சொற்களுள்ளதைக் காண்க).

main-qimg-ca5a13a42fcb558ab563cadd0e5f4c63.png

  • குறிப்பு : மேற்கண்ட படம் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India - No -61 என்னும் புத்தகத்தில் 'aboriginal and Dravidian races of southern India ' என்னும் தலைப்பின் கீழ்க் கொடுக்கப்பட்டுருந்து ஆகும்.

95)கள்ளக்கத்தி - கைத்தடியினுள் மறைத்து வைக்கக் கூடிய கத்தி.

main-qimg-3165961466587c9a7661ff7a2e3e502e.jpg

96)மடக்குக்கத்தி/ வில்லுக்கத்தி - ஒரு உறைபோன்ற ஒன்றுக்குள் மடக்கி வைக்கப்பட்டிருக்கும் கத்தி.

main-qimg-3ee143ed0e7a39b235411e982e387a10.jpg

'படம் விளங்கிக் கொள்ள மட்டுமே'

97)மச்சுக்கத்தி

  • இதனை வீச்சறுவாளுடன் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம்! அதனைவிட இது சிறியது. மேலும் இதற்கு கொடுவாய் இல்லை.

main-qimg-5fa85df8eb9ba0968061af31968b7194.png

98) குருத்துக் கத்தி

(இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .)

main-qimg-1de32c0919fef0ff2a9b75150e8a8678.png

99) ஓச்சன் கத்தி - சந்திரனின் ஒளியை தெறிக்கவிடும் என்று உவமைப்படுத்தப்பட்ட வாள். கீழே காட்டப்பட்டுள்ளதைப் போன்றுதான் இருக்கும். இவ்வாளானது பெரும்பாலும் பலியிடப் பயன்படுத்தப்பட்டது. சிலநேரங்களில் போர்க்களத்திலும் சுழன்றது.

main-qimg-e40d030265a391678d973b568ec61cbd.png

main-qimg-cec516e1da4cf34e644bfdd66d3049e9.png

100) கண்டர்கோடாரி / மீன்வெட்டுக் கத்தி

  • பூண் - உலக்கை, கத்தி முதலியவற்றைப் பலப்படுத்த உதவும் உலோக வளையம்.

main-qimg-66b162b259dd0d2cbc790cc32b38d3c5.jpg

101)முட்கத்தி

(இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .)

main-qimg-980259eeef68a2c7656e682ed66bf6b8.jpg

102)சூர்க்கத்தி/ சூரி/ சூரிக்கத்தி/ சூருக்கத்தி - குத்துவதற்கோ அல்லது எறிவதற்கோ உகந்தது. நீள் முக்கோணத்தின் ஒரு பக்கத்தில் மட்டுமே அடியாகக் கொண்டு பிடிபோடப்பட்டிருக்கும்

main-qimg-88233197619b6e58f998fc44a146fcee.png

main-qimg-5fb163d80af938c1a798bcaf024f2faf.jpg

103) பழக்கத்தி - பழம் வெட்டப் பயன்படும்.

(சேலத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்)

main-qimg-60eb52fa1c0873ca1e444fc498593a20.png

104) அமுக்கொத்தி/ பாசவன் கத்தி - Tamil butchers knife

main-qimg-fce480e04e39a29b3a6d9fa00fbfc831.png

105)அரிவாள்/ குயம்/ கரவாதி- இது பொதுப்பெயராகும்

  • மெலிதாய் அறுப்பது - அரிவாள்

அரிவாள் என்பது மருவி, அருவா என வழங்கப்படலாயிற்று

→ தொழிலின் அல்லது வினையின் மென்மையைக் குறிக்க இடையின ரகரமும், வன்மையைக் குறிக்க வல்லின றகரமும், ஆளப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

main-qimg-f9ba021b3170bb764c742e53797fd64c.jpg

main-qimg-2bc719f478828f92d2e99f1d8a178260.jpg

106)மட்டையரிவாள்

main-qimg-5de95081cfa54f0377fc5f94e9a0c653

107) கொந்தரிவாள் - நீளமான பிடி கொண்ட கத்தி.

main-qimg-5863d131564104dc2da51aca18510946

108)தேய்பிறையிரும்பு/ பிறையிரும்பு - தேய்பிறை போன்றதென்று உருவம் உருவகப்படுத்தப்பட்ட அரிவாள். முழு இரும்பால் ஆனது.

main-qimg-ff1c6118a7de74d992f132fc6ce5f3f6

109)கருக்கரிவாள் / பன்னரிவாள் / கதிரரிவாள்/ கையரிவாள் - பற்கள் உள்ள அரிவாள்

main-qimg-edc6c2e4250fe1c5fd17687c4c682a27

110) புல்லரிவாள் / தாக்கத்தி/ கொய்த்தரிவாள் - மெல்லிய பற்கள் அற்ற அரிவாள். வயலில் வேலை செய்வோரால் புற்கள் வெட்டப்பயன்படும் அரிவாள்.

  • தாக்கத்தி என்றால் அரிவாள் அன்று.. புல்லரிவாளே தாக்கத்தி எனப்படும்

main-qimg-f583f803bb8e2ffd97b175fac30dab09

111)கிளிக்கத்தி- கிளிமூக்கு போன்று நுனி வளைந்த கத்தி ; நுனியில் வளைந்திருக்கும் கத்தி.

main-qimg-9b07c9b70e4cf9fc8284ad069be8307f.png

112) கும்மல் / குமல்- அகண்ட வாய் கொண்ட அரிவாள்

main-qimg-6486b91015c52208a95657e133fcc8dc.jpg

113) சிற்றரிவாள் - சிறிய அரிவாள். அலகானது அரிவாளுக்கு ஏற்றாற் போல் கொஞ்சம் வளைந்திருக்கும்.

main-qimg-1305b690e08eca1f5b3cd1a67ab1cc79.jpg

Metropolitan Museum of Art

114)அறுவாள்/ புள்ளம் -

  • வலிதாய் அறுப்பது - அறுவாள்

→ தொழிலின் அல்லது வினையின் மென்மையைக் குறிக்க இடையின ரகரமும், வன்மையைக் குறிக்க வல்லின றகரமும், ஆளப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

main-qimg-0e225757be8413123861d675cc36465c.jpg

115) கொடுவாள்/ கொடுக்கறுவாள்

கொடு- கொடுக்கு = தலை வளைவு

அலகின் தலைப்பகுதியில் வளைந்திருந்தால் அது கொடுக்கறுவாளாகும். இதைப் பேச்சுவழக்கில் அறுவாள் (பெரும்பாலும் எழுத்துப் பிழையால் அருவாள் எனப்படுகிறது) என்றே அழைக்கின்றனர்.

main-qimg-6ed755d304fd666132b7b9a3ff5d0cc8-c.jpg

116) தெய்வ அறுவாள்

அழகர் கோவில் தெய்வ அறுவாள்:-

main-qimg-f1abb3e9990bf00baa9bcfe798deb21c.jpg

காவல் தெய்வம் ஒன்றினது தெய்வ அறுவாள்:-

main-qimg-fb08e46eaf67658f9beeafc7be0fb8e2.jpg

117) இளநீர் அறுவாள் - மெல்லியதான நேராக வந்து அலகு கொஞ்சம் பெருத்து கிளிமூக்குப்போல மெதுவாக வளைந்திருக்கும். தேவைப்பட்டால் கழுத்தையும் அறுக்கும்.

main-qimg-d82d5acf9b1a4f11725a373eff5eab56.jpg

118)வெட்டறுவாள் / வெட்டுவாள்/ கடாவெட்டி- அலகானது சதுரமாக வளைந்து நீண்டிருக்கும். ஆடு, கடா முதலியன வெட்டப்பயன்படும் வாள்.

main-qimg-0076f3098ffdbf4b743059d6eb2d90ce.png

main-qimg-611dedd23ac3dd05d9c4bede0314e2af.png

119)கொத்தறுவாள் - ஆடு, கடா முதலியனவற்றின் இறைச்சி வெட்டப் பயன்படும் அறுவாள்.

main-qimg-26bfd7b78c581c8a04d49ae594d0a686.png

120) வீச்சறுவாள்

main-qimg-4543cf9dcec7faf1de2e9af58fbe573a.png

main-qimg-9fff088c9170acaf087e52d3df2e6868.jpg

  • குறிப்பு : மேற்கண்ட படம் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India என்னும் புத்தகத்தில் 'aboriginal and dravidian races of southern India ' என்னும் தலைப்பின் கீழ்க் கொடுக்கப்பட்டுருந்தவை ஆகும்.

121)பாளையறுவாள் / பாளைக்கத்தி/ சாணாரக்கத்தி/ ஈழவக்கத்தி

  • இதனை சந்திரவாய்தம் என்றும் அழைப்பர்!

paazhaik kaththi.png

 

122) ஆமரக்கத்தி

aamarak kaththi.png

main-qimg-e1578d91a5e4a1c7f3dbb96a3a5da91c.jpg

 

123)ஆக்கறுவாள்/ அக்கறுவாள்/ பாசறுவாள்/ பாசுகராக் கத்தி/ அக்கரிவாள்

  • ஆக்கறுவாள் → அக்கறுவாள் → அக்கரிவாள்

செ.சொ.பே.மு. இருந்து…….

→அரிதல் = சிறு கத்தியால் அல்லது அரிவாள் மணையலகால், காய்கறி முதலிய மெல்லியவற்றைச் சிறுசிறு துண்டுகளாக மென்மையாய் நறுக்குதல்.

→அறுத்தல் = பெரியவற்றையும் வன்மையானவற்றையும், இரண்டாகவோ பல பெருந்துண்டுகளாகவோ, சிறு கத்தியாலும் பெருவாளாலும் முன்னும் பின்னும் வன்மையாய் இழுத்தராலியும் கத்தரித்தும் வெட்டியும் துணித்தல்.

ஆதலால், அரிவாள் வேறு ; அறுவாள் வேறு. ஆகவே, அக்கறுவாளை அக்கரிவாள் என்பது தவறாம்!

main-qimg-9c8353b3016bf6c07e2a5f3617923ea2.jpg

124)காட்டுக் கத்தி

(இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .)

main-qimg-f019d38c2d7cd73edb320e6912d3e566.jpg

125)கொக்கைச் சத்தகம்/ வாங்கரிவாள்/ வாங்கு/ அலக்கு/ சள்ளை/ துரட்டி - நீளமான கழியில் கட்டப்பட்டிருக்கும் சத்தகம்.

  • சுறட்டுக்கோல், கொக்கத்தடி- இழுத்து விழுத்தும் கோல். இதன் முனையில் சத்தகம் இருக்காது. மாற்றாக ஒரு 'சிறுதடி' இருக்கும். அச்சிறு தடியின் நடுப்பகுதி கொக்கத்தடியோடு பிணைக்கப்பட்டிருக்கும்.

main-qimg-4f254fdde7928e8fb3834392c8df88d6.png

126)கம்பறாக்கத்தி - கம்பு அறுக்கும் கத்தி

main-qimg-533e5f7f680caa0c4294a68a8e77f244.jpg

127)பாசக் கயிறு/ பாசாங்கச்சை / நாண்வடம் / பழுதை/ தாமம்/ இரச்சு / தாம்பு/ தாமணி- குதிரை அல்லது யானையின் மேல் அமர்ந்திருக்கும் வீரரை கீழே இழுத்து விழுத்த பயன்படுவதோ அல்லது குதிரை அல்லது யானையின் மேல் அமர்ந்திருக்கும் வீரரைர் கீழே நிற்கும் வீரரை கொழுவி இழுத்துச் செல்லப் பயன்படும் கயிறு

→ நுனியில் கூர்மையுடையதும், வீசும்போது ஒலி எழுப்புவதுமான தர்ப்பைப் புல் போல அறுக்க வல்லதுமான கயிற்று வடிவிலுள்ள பாசக்கயிறு.

128)துண்டு/ கற்துணி/ வாலம் : வெறும் துணிதான்.. ஆனால் பலமான ஆயுதம். துணியின் இருபக்கமும் கல்வைத்து கட்டப்பட்டிருக்கும்.

  • கற்துணி ஓர் வாளினை வீழ்த்தும் விதம்:

main-qimg-1e85f232b8b6ea2d1c46af044118ada2.png

  • கற்துணி கொண்டு ஓராளை வீழ்தும் விதம்:

main-qimg-d2ef6e3660015ebfa790597a1e46c1ad.jpg

129)வளரி/ எறிவல்லையம்:

main-qimg-b5d40978cff4a650446d835f998d7348.jpg

main-qimg-daed4a70f8d0b1445c2403ceb1306ecb.png

'வலது கீழ் மூலையில் இருப்பது எறிகொம்பு ஆகும்'

 

130)சக்கரம்/ திகிரி/ வளையம்/ எறிவளையம்/ வளை/ பாறாவளை/ நேமி / பரிதி/ வலயம்/ ஆழி/ ஒளிவட்டம் / படைவட்டம்/ சுழல்படை :

main-qimg-46683875e95b4360e5229a59beb7c1c2.jpg

131)ஓகதண்டம் - இவ்வாய்தமானது எதிரியினைப் பிடித்து அடக்கி அமுக்குவதற்கு பயன்படுத்தபட்டது.

  • துள் -> தள் -> தண்டி -> தண்டம்

main-qimg-8c824f6e761b4f5e8b9c61f0758b4ea0.png

  • பண்ருட்டி திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலின் பின்புறம் கண்டெடுக்கப்பட்ட ஓகதண்டம்.

main-qimg-d615a78fdf74cbb6a53df1b9a7a66022.png

132)ஆலாய்தம் - கலப்பை வடிவில் உள்ள ஆய்தம்.

main-qimg-645df1357d8b28d2f729db8968e9fd97.png

133)வகைபெயர், படைபெயர் அறியா ஒரு ஆய்தம்.

இது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்து கிடைக்கப்பெற்றதாகும். இந்திய துணைக்கண்டத்திலே இது போல் எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

main-qimg-96e420de2daf9012e48005ede14a9d1b.png

134) கவண்/ கவணை/ கவண்டு/ கவண்டி/ கவண்டை/ ஒடிசில்/ கோபனை/ தழல்/ குளிர்/ சுண்டுவில்/ தெறிவில்/ உண்டைவில்(உண்டி வில்)/ க‌வ‌ட்டி வில் -

main-qimg-3f4efbfcb38bab448cb6573af19e2b5b.png

135)வீசு வில்/வ‌ள்ளி வில்/ சிங்காணி/ சிங்காடி -

  • சிங்காணி/ சிங்காடி யைப் படையாகக் கொண்டிருப்போர் சிங்காணிக்காரர் என்றும் 'குத்திக் கொல்லர்' என்றும் அழைக்கப்படுவர்.

main-qimg-88ff1a82e6f1e85c5ba5a1d17f680175.jpg

136)சவுக்கு/ சவுகு / சாட்டை:

main-qimg-bccffee4ff34db4f77fd03afd6cb67d2.jpg

137) திருக்கைவால்- திருக்கையின் வால் போல இதன் கயிற்றில் முள்ளிருக்கும்

138)உருண்டை/ நாட்டு வெடிகுண்டு - உருண்டை என்றால் உருண்டை வடிவத்தில் செய்யப்பட்டிருக்கும் வெடிமருந்து.. அதான் நாட்டு வெடிக்குண்டென்போமே அதுதான் இது.

  • 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னாரான காலப்பகுதியில் தமிழரால் பயன்படுத்தப்பட்டது.

main-qimg-1a8c118130b114dda149bb9d325e8eda.jpg

139)வில்லுருண்டை- வெடிமருந்து கொண்ட அம்பினை செலுத்தும் வில்லுக்கு வில்லுருண்டை என்று பெயர். ‘உருண்டை என்றால் உருண்டை வடிவத்தில் செய்யப்பட்டிருக்கும் வெடிமருந்து..

  • 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னாரான காலப்பகுதியில் தமிழரால் பயன்படுத்தப்பட்டது.

main-qimg-714d108458b8fb2edcd71ad62ed8e6e3.jpg

 

140) வளைதடி/ துட்டுத்தடி/ எறிகொம்பு

erikampu.jpg

 


குலிசம் / உருண்டை/ உண்டை/ சம்பம் / நூறுகோடி/ வைரவாள்/ அரி - எந்தவொரு வலிமையான பொருளையும் உடைத்து விடும். இவ்வாய்தமானது பழங்கதைகளில் வரும் என்று கூறப்படுகீறது.. சிலப்பதிகாரத்தில் இது பற்றிய குறிப்புகள் உண்டு.. ஆனால் இவ்வாய்தம் போரில் சுழன்றதைப் பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லை.

main-qimg-852c37e2a0c46e6a28c96e59533fd5be.jpg

 

 


  • குறிப்பு:

இவை மென்மேலும் தமிழ் ஆராச்சியாளர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இதிலுள்ள தகவல் செம்மைப்படுத்தப்பட்டு சரிதவறுகள் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டும். 

 


  • வர்ம / வளரி ஆய்தங்கள் :

 


 

  • நிலக்கிழார்களால் பயன்படுத்தப்பட்ட ஆய்தங்களின் ஒரு தொகுதி:-

main-qimg-3616c6be887f9a7bc00ba7af3ee917c6.jpg

main-qimg-fe6849821bec67fd158e8b89aba55c06.jpg

 


அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது:

main-qimg-101f163a2924ab29214673c32ff05048.png

 


  • கேரளாவில் உள்ள ஒரு ஆய்தக்கொட்டிலினுள்ளே சேரர்களின் பல்வேறுபட்ட வாள்கள்

main-qimg-279437056e8ffa3a2354ebff9c0494ad.jpg

 


  • எட்டயபுரம் அரண்மனை

main-qimg-1e1ff39effe8865d14349417245b4ca1.jpg

 


  • இவரது விடையில் தமிழரின் பல்வேறு தோலியல் எச்சங்கள் பற்றிய படங்கள் உண்டு.. அவற்றினைக் காண்க:

* பெரியசாமி ஆறுமுகம் - Helo

 


  • ஆய்தங்கள் பற்றிய சில நிகழ்படத்(video) தொகுப்புகள் :

 

  1. https://youtu.be/aWZ1OJRPnBw?list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w
  2. https://youtu.be/-caTwm-qEWs?list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w
  3. https://youtu.be/vGCJdVA1M-4

 

  • மேலும் பார்க்க :-

 


உசாத்துணைகள்:

நிகழ்படங்கள்

  • அருணாச்சலம் மணி - யூடியூப்

படிமப்புரவு-

 

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரமிக்க தக்க உழைப்பு நன்னி👏🏾.

இப்போதைக்கு லைக் போட்டு போகிறேன். ஆறுதலாக வாசித்து கருத்திடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
43 minutes ago, goshan_che said:

பிரமிக்க தக்க உழைப்பு நன்னி👏🏾.

இப்போதைக்கு லைக் போட்டு போகிறேன். ஆறுதலாக வாசித்து கருத்திடுகிறேன்.

அப்படியே ஆகட்டும் அண்ணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இருந்து விருப்பக்குறி போடக்கூடிய பதிவு இது ஒன்று தான் நன்னி. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, ஏராளன் said:

தாயகத்தில் இருந்து விருப்பக்குறி போடக்கூடிய பதிவு இது ஒன்று தான் நன்னி. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

விளங்கியது...😥😥
 
நீங்கள் யாழில் இருக்கின்றீர்கள் என்று இப்போதுதான் தெரியும் அண்ணை... காலம் மாறும் என்று நம்புவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியக்கதக்க ஆயுதங்கள்.. சரித்திர நாவல்களை வாசிக்கும் பொழுது, கற்பனை செய்து பார்ப்பதுண்டு.. இப்பொழுது உங்களது இணைப்பை பார்க்கும் பொழுது திகைப்பாக உள்ளது.. 

நன்றி.. 

ஆனாலும் கஜேந்திர வாளைத்தான் காணவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு ஆயுதங்களை.... பழந் தமிழர் கையாண்டும், 
ஒரு  சொந்த நாடு கூட  இல்லாமல் இருப்பதும், இனத்தின் சாபக் கேடு போலுள்ளது.

இணைப்புகளுக்கு நன்றி...  நன்னிச் சோழன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்னிச் சோழனின் அரிய தகவல்களை தமிழ் கோறாவிலும் வாசித்துள்ளேன்.  இவ்வளவு தகவல்களைச் சேமித்து அதனை எமது சந்ததிக்குக் கடத்தும் அவர் தொண்டும் முயற்சியும் அளப்பரியது.  அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தொழில்நுட்பத்தையும் இணைத்து விடுங்கள் இயலுமாயின்.

இன்று, damascus steel எனப்படும் உலோகத்தை கண்டுபிடித்தவர்கள் சோழர்கள் என்று நான் அறிந்தது.

wootz steel என்றே முதலில் ஐரோப்பியர் அழைத்தனர்.

சோழரின் ஆயுத பலத்தின் இரகசியம், wootz steel ஐ மேலும் வலுப்படுத்தியது என்பதை  புறக்கணிக்க முடியாதுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வியக்கதக்க ஆயுதங்கள்.. சரித்திர நாவல்களை வாசிக்கும் பொழுது, கற்பனை செய்து பார்ப்பதுண்டு.. இப்பொழுது உங்களது இணைப்பை பார்க்கும் பொழுது திகைப்பாக உள்ளது.. 

நன்றி.. 

ஆனாலும் கஜேந்திர வாளைத்தான் காணவில்லை

சரியாகச் சொன்னீர்கள் பிரபா அவர்களே, 
எனக்கும் புதினங்களை வாசிக்கும் போது இந்த அயுதங்களை கற்பனையில் பார்க்கும் பழக்கமுண்டு... குறிப்பாக சீனர்களின் திரைப்படங்களை பார்க்கும்போது எம்மிடமும் இதுபோன்று வகைவகையாக இல்லையே என்று கவலைப்பட்டதுண்டு. அதை துடைக்க வேண்டும் என்றுதான் இந்த முயற்சி எடுத்தேன், என்னால் முடிந்தளவு செய்தும் முடித்தேன்.

 

 

Quote

ஆனாலும் கஜேந்திர வாளைத்தான் காணவில்லை

பிரபா அவர்களே, 
எனக்கு இந்த வாள் பற்றி ஏதும் தெரியாது... இன்றுதான் முதல்தடவையாக இப்படி ஒரு பெயரையே கேள்விப்பட்டேன். இது பற்றி இணையத்தளங்களில் தேடிப் பார்த்தபோது கீழ்க்கண்ட படிமம்(image) 'கஜேந்திர வாள்' என்ற பெயருடன் கிடைக்கப்பெற்றது... இது சரிதானே என்று பார்த்துச் சொல்ல முடியுமா?

அப்படியே இலக்கியங்களில் இதன் பெயர் எங்கேனும் இருக்கிறதா எனபதையும் தெரிவிக்க முடியுமா(அறிந்தால்)?

 

MultiImage3180Manipay%20police%20fire%20at%20the%20gang%20that%20went%20with%20swords-One%20killed%20and%20another%20injured%204.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, தமிழ் சிறி said:

இவ்வளவு ஆயுதங்களை.... பழந் தமிழர் கையாண்டும், 
ஒரு  சொந்த நாடு கூட  இல்லாமல் இருப்பதும், இனத்தின் சாபக் கேடு போலுள்ளது.

இணைப்புகளுக்கு நன்றி...  நன்னிச் சோழன்.

 

காலம் மாறும் என்ற நம்பிக்கை காசி ஆனந்தன் அவர்களின் புத்தகத்தின் பின் எனக்கு ஏற்பட்டுள்ளது அண்ணை,

 

 

 

9 hours ago, karu said:

நன்னிச் சோழனின் அரிய தகவல்களை தமிழ் கோறாவிலும் வாசித்துள்ளேன்.  இவ்வளவு தகவல்களைச் சேமித்து அதனை எமது சந்ததிக்குக் கடத்தும் அவர் தொண்டும் முயற்சியும் அளப்பரியது.  அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

மிக்க நன்றி கரு அவர்களே

 

8 hours ago, Kadancha said:

இதில் தொழில்நுட்பத்தையும் இணைத்து விடுங்கள் இயலுமாயின்.

இன்று, damascus steel எனப்படும் உலோகத்தை கண்டுபிடித்தவர்கள் சோழர்கள் என்று நான் அறிந்தது.

wootz steel என்றே முதலில் ஐரோப்பியர் அழைத்தனர்.

சோழரின் ஆயுத பலத்தின் இரகசியம், wootz steel ஐ மேலும் வலுப்படுத்தியது என்பதை  புறக்கணிக்க முடியாதுள்ளது.

 

இது தொடர்பான கட்டுரை ஒன்று கோராவில் நான் இதை எழுதிய சமகாலத்தில்(2019 மே) வெளிவந்திருந்தது, கடைஞ்ச அவர்களே...

அதற்கான கொழுவி(Link):  https://qr.ae/pG4oLy

மேலும், அந்த உலோகத்தை கண்டுபிடித்தவர்கள் சேரர்கள், சோழர்கள் அன்று...

Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் & படைக்கலன்கள் - 150+ படிமங்களுடன்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.