Jump to content

பழங்குடி மக்களின் காட் பாதர் ஸ்டேன் சுவாமி மீது "அதிகாரங்கள்" ஆத்திரமடைந்தது ஏன்? - உலக ஆதிவாசிகள் நிலைமை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பழங்குடி மக்களின் காட் பாதர் ஸ்டேன் சுவாமி மீது "அதிகாரங்கள்" ஆத்திரமடைந்தது ஏன்? - உலக ஆதிவாசிகள் நிலைமை.!

Screenshot-2021-07-05-23-45-42-083-org-m

மும்பை: சமூக செயற்பாட்டாளர், பாதிரியார், ஸ்டேன் சுவாமி 2020ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 8ம் தேதி இரவு என்.ஐ.ஏ போலீசாரால் கைது செய்யப்பட்டபோது மத்திய இந்தியாவின் பல பகுதிகளும் அதிர்ந்து போயின. 70 வருடங்களாக அந்த பிராந்திய ஆதிவாசி மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவராயிற்றே ஸ்டேன் சுவாமி.

83 வயதான ஸ்டேன் சுவாமி, தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டார். 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவின், பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் வரிசையாக குற்றங்கள் சுமத்தப்பட்டன.

ஆனால், ஸ்டேன் சுவாமியை தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களுக்கு இந்த குற்றச்சாட்டுகள் வெறும் அரசியல் நோக்கம் கொண்டவை என்பதுதான் கருத்தாக இருந்தது.

ஸ்டேன் சுவாமி ஒரு தமிழர்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1937ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி பிறந்தவர் ஸ்டேன் சுவாமி. ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி என்பதுதான் அவரது இயற்பெயர். காலப் போக்கில் அது ஸ்டேன் சுவாமியாக மாறியது. ஸ்டேன் சாமி என்று அழைப்போரும் உண்டு. செயின்ட் ஜோஜப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார் ஸ்டேன் சாமி. பள்ளி நாட்களிலேயே, பாதிரியார் ஒருவரோடு ஏற்பட்ட பழக்கத்தால் சமூக தொண்டுகளில் ஈடுபடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. 1957ம் ஆண்டு கிருத்துவ மதக் கல்வியை கற்க ஆரம்பித்துள்ளார்.

கல்வியும், தொண்டும்

1965ம் ஆண்டில்தான் சுவாமியின் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. பாதிரியாருடன் சமூக தொண்டு செய்ய மேற்கு சிங்பூம், சைபாசா, செயின்ட் சேவியர் உயர்நிலைப்பள்ளியில் தங்கியிருந்தார். ஆசிரியராகவும், விடுதித் தலைவராகவும் இருந்த அவரது அனுபவங்கள் சுவாமிக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

அவர் தனது மாணவர்களுடன் செவ்வாய்க்கிழமை சாய்பாசாவில் உள்ள வாராந்திர சந்தைக்கு செல்வதுடன், வெளி வணிகர்களும் அவர்களின் முகவர்களும் பழங்குடியினரை எவ்வாறு ஏமாற்றினார்கள் என்பதை நேரில் பார்த்தார். 'நான் வலியை உணர்ந்தேன், ஆனால் அதைப் பற்றி எதுவும் செய்ய முடியவில்லை,' என்று ஸ்டேன் சுவாமி ஒருமுறை கூறியுள்ளார்.

உலக நாடுகளின் ஆதிவாசிகள் நிலைமை

1967 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் மணிலாவுக்கு இறையியல் படிப்பதற்கு சென்றார் ஸ்டேன் சாமி. சமூகவியலில் முதுகலை கல்வியை முடித்தார். பழங்குடி மக்களுடன் அங்கும் பழக்கம் ஏற்பட்டது. உலகின் பல்வேறு பிராந்தியங்களிலும் பழங்குடி மக்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் அவர்களின் போராட்டங்களையும் பற்றி அவருக்கு அதிக புரிதலைக் கொடுத்தன.

மக்கள் தொண்டு

1971 ஆம் ஆண்டில் ஜாம்ஷெட்பூர் திரும்பிய அவர், இப்பகுதிக்கான கத்தோலிக்க நிவாரண சேவைகள் தொண்டு இயக்குநராகப் பொறுப்பேற்றார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள், 1971 மற்றும் 1972 இன் ஒரு பகுதியை இங்கே செலவிட்டார் - நிவாரணப் பொருட்களுக்காக ஒரு குடோன் அமைத்து ஏற்பாடு செய்தார். இந்த காலகட்டத்தில், பெங்களூரில் உள்ள இந்திய சமூக நிறுவனத்தில் சமூக மேம்பாடு குறித்த மூன்று மாத படிப்பிலும் பங்கேற்றார். மேலும் இயக்குனர் ஹென்றி வோல்கனுடன் தொடர்பில் இருந்தார்.

ஆதிவாசிகளோடு தங்கினார்

ஜாம்ஷெட்பூர் ஜேசுட் மாகாணத்தின் தலைவரான பில் டோம், கிராமத்தில் வாழ விரும்புவதாகவும், அவர்களின் மொழியைக் கற்றுக் கொள்ளவும், அவர்களின் உலகத்தைப் பற்றி நெருக்கமாக அறிந்து கொள்ளவும் விரும்புவதாக கூற, ஸ்டேன் சாமி வாழ்க்கையில் அடுத்த குறிப்பிடத்தக்க திருப்பம் ஏற்பட்டது. டோமின் ஆசீர்வாதத்துடன், சுவாமி படாய்பீர் கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். சுமார் 15 கி.மீ சுற்றளவில் உள்ள மக்களோடு ஸ்டேன் சாமி தொடர்பில் இருந்தார். மேலும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி அதன் அனைத்து பரிமாணங்களையும், தர்க்க ரீதியாக சிந்திக்க அவர்களுக்கு உதவினார். விரைவில், அவரது முன்னாள் மாணவர்கள் மற்றும் அகில இந்திய கத்தோலிக்க பல்கலைக்கழக கூட்டமைப்பின் பின்னணியுடன் சில தன்னார்வலர்கள் ஸ்டேன் சாமியுடன் இந்த சமூக பணியில் சேர்ந்து கொண்டனர்.

அரசால் விரட்டப்பட்ட ஆதிவாசிகள்

1990களின் இறுதியில், ஆதிவாசிகள் மற்றும் மூல்வாஸிஸ் தங்கள் நிலங்களிலிருந்து விரட்டப்பட்டனர். பாலமு மற்றும் கும்லா மாவட்டங்களில் ஃபீல்டு ஃபயரிங் ரேஞ் திட்டம் கொண்டுவரப்பட்டது. ராஞ்சி மற்றும் மேற்கு சிங்பூமில் கோயல்-கரோ அணை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் ஆதிவாசிகள் அவர்கள் வாழ்விடங்களை பறிகொடுக்க வேண்டி வந்தது. இந்த திட்டங்கள் எதிர்த்து போராடுவதில் ஈடுபட்ட அமைப்புகள் மற்றும் இயக்கங்களின் முயற்சிகளை ஒருங்கிணைக்க ராஞ்சியில் ஒரு மையத்தை நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த மையத்தை உருவாக்கும் பொறுப்பு ஸ்டான் சுவாமிக்கு வழங்கப்பட்டது.

போராட்ட ஒருங்கிணைப்பு

ஜூன் 2001 இல், சுவாமி சாய்பாசாவிலிருந்து ராஞ்சிக்குச் சென்று புருலியா சாலையில் உள்ள கரானா குடியிருப்பில் வசிக்கத் தொடங்கினார். ஆதிவாசிகளின் வெளியேற்றத்திற்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைக்கும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அவர் பல அமைப்புகளையும் இயக்கங்களையும் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்.

ஜார்கண்ட் அரசின் ஒடுக்குமுறை

2010 களின் நடுப்பகுதியில், ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தின் முண்டா இன, ஆதிவாசிகள் தங்கள் கிராமங்களில் உள்ள சொத்துக்களில், கல் பலகைகளை அமைக்கத் தொடங்கினர். இந்திய அரசியலமைப்பின் ஐந்தாம் அட்டவணையின் விதி, பழங்குடிப் பகுதிகளுக்கு சிறப்பு சுயாட்சியை வழங்குகின்றன.

இந்த அடிப்படையில், இது தவறு கிடையாது என்று கூறப்பட்டது. ஆனால், எவ்வாறாயினும், மாநிலத்தில் ஆட்சியிலிருந்த பாரதிய ஜனதா கட்சி இந்த விஷயத்தை 'வளர்ச்சி எதிர்ப்பு மற்றும் தேச விரோதம்' என்று பார்த்தது. இந்த இயக்கத்தை முறியடிக்க துணை ராணுவத்தை வரவழைத்தது. போலீசை குவித்தது.

தேச துரோக வழக்கில் கைது

ஆதிவாசிகளுக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டது. அரசாங்கத்தின் இரக்கமற்ற அணுகுமுறை குறித்து பலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டனர். ஆதிவாசிகளுக்கு துணை நின்ற, ஸ்டான் சுவாமி உட்பட 20 ஆர்வலர்கள் மீது மாநில அரசு தேசத் துரோக வழக்குகளைத் தொடர்ந்தது. அரசு பேச்சுவார்த்தை மூலம் ஆதிவாசிகளுடனான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றுதான் பேஸ்புக்கில் எழுதியிருந்தார் ஸ்டேன் சாமி. ஆனால் ஏன் தேசத் துரோக வழக்கு பாய்ந்தது என்பது அவரது ஆதரவாளர்களுக்கே புரியவில்லை.

பல புத்தகங்கள் எழுதியவர்

ஜார்கண்டில் ஸ்டேன் சுவாமி செய்த சமூக பணிகள் மேலும் பல அமைப்புகளுக்கு ஊக்கம் கொடுத்தது. அறிவுஜீவிகளின் ஆதரவை பெற்றது. ஆதிவாசிகளின் உரிமைகள் குறித்தும், அது எப்படி அரசாங்கங்களால் பறிக்கப்படுகிறது என்பது பற்றியும் பல புத்தகங்களை எழுத ஆரம்பித்தார், ஸ்டேன் சுவாமி. சமூக உறவில், அறிவியல் முறையில் பகுப்பாய்வு செய்வதுதான், ஸ்டேன் சுவாமி ஸ்டைலாக இருந்தது.

காரல் மார்க்சின் தத்துவங்களுடன் ஒத்துப்போனது, ஸ்டேன் சுவாமி எழுத்துக்கள். ஜார்கண்டில் ஆதிவாசிகள் அவர்கள் நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்படுவதை தடுப்பதில் ஸ்டேன் சுவாமி முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்க ஆரம்பித்தார். இயற்கை வளங்களில் ஆதிவாசிகளுக்கு உள்ள பங்குகள் காக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

கொரோனா பாதிப்பு

ஸ்டேன் சுவாமிக்கு சில வாரங்களுக்கு முன் கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது. அதிலிருந்து அவர் குணமடைந்த போதிலும், இதில் அவரது நுரையீரல் மோசமாகப் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

பர்கின்ஸன் நோய்

பர்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஏற்கனவே செவித்திறனை இழந்திருந்தார். மேலும், பர்கின்ஸன் நோய் காரணமாக ஸ்டேன் சுவாமியால் டம்பளரை கைகளால் பிடிக்க முடியாது.

ஸ்ட்ரா பொருந்திய டம்ளர்

இதனால் தனக்கு ஸ்ட்ரா பொருந்திய டம்ளரைத் தர வேண்டும் என்று கடந்த நவம்பர் 6ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். சாதாரண ஸ்ட்ரா பொருந்திய டம்ளர் அளிப்பது தொடர்பான இந்த கோரிக்கைக்குப் பதிலளிக்க 20 நாட்கள் "அவகாசம் "  கேட்டு வாங்கியது தேசிய புலனாய்வு முகமை. இது மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

20 நாட்களுக்குப் பின்னர்கூட, ஸ்ட்ரா பொருந்திய டம்ளர் எதையும் தாங்கள் அளிக்கவில்லை என்று கூறி அதிர்ச்சி அளித்தது என்ஐஏ. 83 வயது முதியவர் ஒருவரை இப்படிதான் நடத்துவீர்களா என பலரும் கொந்தளித்தனர். 

ஒருநாள் கூட விசாரணை இல்லை

கொரோனா பரவல் காரணமாகச் சிறையிலுள்ள கைதிகள் பலருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டது. அப்போதுகூட 84 வயதான ஸ்டேன் சுவாமிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

சிறையிலிருந்த அவருக்கு, கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. சுமார் 8 மாதங்களாக ஸ்டேன் சுவாமி சிறையிலிருந்த போதும், ஒரு நாள் கூட அவரை என்ஐஏ விசாரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

குரலை ஒடுக்க நினைத்த "அதிகாரங்கள்"

ஆதிவாசிகளுக்கு எதிரான அத்தனை கொள்கைகள், அரசியல்கள் குறித்தும் விரல் நுனியில் தகவல் வைத்திருந்தார், ஸ்டேன் சுவாமி. அரசு மற்றும் சில கார்பொரேட் நிறுவனங்கள் ஆதிவாசிகளின் உரிமைகளை பறிக்கும்போது, ஸ்டேன் சுவாமி அவர்களுக்கு எதிராக நின்றார். இதன் காரணமாகத்தான், ஸ்டேன் சுவாமி வாயை அடைக்க அதிகாரங்கள் தொடர்ந்து முயன்றபடியே இருந்தன. ஆனால் சமரசம் இல்லாமல் சமர் செய்த ஸ்டேன் சுவாமி, மகாராஷ்டிரா சிறையில், உரிய சிகிச்சைகள் இன்றி அவதிப்பட்டு, இன்று காலத்தின் மடியில் இளைப்பாற சென்று விட்டார்.

இறுதி சடங்கு

ஸ்டேன் சுவாமிக்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை என்பதால் அவரது உடலை, செயின்ட் சேவியர் கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர் பிதா பிரான்சிஸிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. 

தற்போது கொரோனா நெறிமுறைகள் அமலில் இருப்பதால், சிறியளவில் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று வழக்கறிஞர் மிஹிர் தேசாய் தெரிவித்தார். மேலும், ஸ்டேன் சுவாமியின் உடல் மும்பையிலேயே புதைக்கப்படும் என்றும் வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

https://tamil.oneindia.com/news/mumbai/who-is-stan-swamy-why-the-powerful-want-him-silenced-here-is-the-detail-in-tamil-426127.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள், ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.  அவர் விட்ட பணியை அவரது மாணாக்கர்கள் தொடர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த வீரத்தமிழன் ஸ்டேன் சுவாமி நித்திய ஜீவனில் நிலைபெற திருவருள் பாலிக்கட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்த ஃபாதர் ஸ்டேன் சுவாமி, தம் மரணத்தின் மூலமாக இந்திய ஒன்றியத்தில் வேகமாக வளர்ந்து வரும் பாசிசத்தைத் தோலுரித்து உலகிற்குக் காட்டியுள்ளார். அவர் விதைக்கப்படுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள், மக்களுக்காக வாழ்வோரை அதிகாரத்தரப்பினருக்கு பிடிக்காது தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியச் சட்டங்களைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் ஸ்ரான் சுவாமியின் சாவு

 
 தமிழில்: ஜெயந்திரன்

சுவாமியின் சாவு 1 e1626078572316 பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியச் சட்டங்களைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் ஸ்ரான் சுவாமியின் சாவுஇந்தியாவில், சிறையில், உடல் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்த போதிலும், பிணை மறுக்கப் பட்ட எண்பது வயதைக் கடந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவரின் சாவு, நாடு முழுவதும் எதிர்ப் பலைகளைத் தோற்றுவித் திருப்பதுடன், பயங்கர வாதத்துக்கு எதிரான சட்டங்களை மிகத் தவறாகப் பயன் படுத்துகின்ற தற்போதைய அரசின் நடவடிக்கையையும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி யிருக்கிறது.

சிறையில் சாவதையே விரும்புகிறேன்எண்பத்து நான்கு (84) வயது நிரம்பிய பன்னாட்டுத் துறவற சபையான இயேசு சபையைச் சேர்ந்த ஸ்ரான் சுவாமி அவர்கள், மும்பாயில் உள்ள திருக்குடும்ப மருத்துவமனையில் (Holy Family Hospital)  கடந்த திங்கட்கிழமை மாரடைப்பின் காரணமாக இறந்ததாக அரச சட்டத்தரணி உச்ச நீதிமன்றில் அன்று மாலை தெரிவித்தார். அருட்தந்தையின் மருத்துவ நிலையைக் காரணங்காட்டி முன்வைக்க ப்பட்ட பிணை மனுவை கடந்த மார்ச் மாதம் நீதிமன்று ஏற்க மறுத்திருந்த நிலையில், அன்றைய தினம் அவசர அவசரமாக மீண்டும் முன்வைக்கப் பட்ட ஒரு பிணை மனுவை நீதிமன்று விவாதித்துக் கொண்டிருந்தது.

பார்க்கின்சன் (Parkinson’s disease) நோயால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டிருந்த சுவாமி, அண்மையில் கோவிட்-19 தொற்றுக்கும் உள்ளாகியிருந்தார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற சுவாமியின் பிணை மனுவின் மீதான விசாரணையின் போது, சுவாமிக்கு காது கேட்பதில் கடுமையான சிக்கல் இருந்ததாகவும், அதே வேளையில் உடல் ரீதியாக அவர் மிகவும் பலவீனமடைந்திருப்பதாகவும் நீதிமன்றில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

இந்தியாவில் வாழும் ஏழை மக்கள் மற்றும் பூர்வீகக் குடிகளின் மனித உரிமைகளுக்காக பல தசாப்தங்களாக அவர் போராடி வந்தது மட்டு மன்றி, சாதியை மையமாக வைத்து இக்குறிப்பிட்ட மக்கள் மீது மேற் கொள்ளப்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராக மிகக் காத்திரமான முறையில் அவர்  பேசியும், எழுதியும் வந்தார்.

இந்தியாவில் நிலவுகின்ற சாதீய ஒழுங்கமைப்பு 1950ஆம் ஆண்டு உத்தியோக பூர்வமாக இல்லா தொழிக்கப்பட்டது. ஆனால் இரண்டாயிரம் வருடங்களாக நீடித்து வரும், பிறப்பை அடிப்படையாக வைத்து மக்களை உயர்வாகவும், தாழ்வாகவும் பாகுபடுத்துகின்ற இந்த   நடைமுறை, அங்கு வாழும் மக்களின் வாழ்வின் பல்வேறு அம்சங்களை இன்றும் பாதித்தே வருகின்றது. இந்துக்கள் பிறக்கும் போது சாதீயக் கட்டமைப்பு அவர்களை வகைப் படுத்துவதுடன் சமூகத்தில் அவர்கள் எந்த இடத்தில் இருப்பார்கள் என்றும் அவர்கள் எப்படிப்பட்ட தொழில்களை மேற்கொள்ளலாம் என்றும் யார் யாரை அவர்கள் திருமணம் செய்யலாம் என்பதையும் இந்தச் சாதீயக் கட்டமைப்புத் தீர்மானிக்கின்றது.

Stan Swami 6 பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியச் சட்டங்களைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் ஸ்ரான் சுவாமியின் சாவுகடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் சுவாமி கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்களின் அடிப்படையில் அவர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டன. இப் பயங்கரவாதச் சட்டங்கள் மிகக் கொடுமையானவை என்று விமர்சகர்கள் ஏற்கனவே சாடியிருக்கிறார்கள்.

“தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணியதாகவும், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வன்முறை நிகழ்வைத் தோற்றுவிக்கச் சதி செய்ததாகவும்  சுவாமியும் இன்னும் 15 செயற்பாட்டாளர்கள், கல்வியியலாளர்கள் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டதாக” அவரது கைதுக்குப் பின்னர் நாட்டின் பயங்கரவாதத்துக்கு எதிரான செயலணி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பீமா கோரேகான் வழக்கு (Bima Koregaon Case) என்று அழைக்கப்படும் அந்த கலவரத்தின் போது, ஒடுக்கப்பட்ட சாதி எனக் கருதப்பட்டவர்களுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கின்ற ஏனைய பிரதேச குழுக்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

இந்தியாவின் சாதீயக் கட்டமைப்பில் மிகவும் கடை நிலையில் இருப்பவர்களாகக் கருதப்படும் பல்லாயிரக் கணக்கான தலித் இனமக்கள், அன்றைய பிரித்தானியக் காலனீய இராணுவத்தில் அங்கம் வகித்திருந்த நிலையில், உயர் சாதியைச் சேர்ந்த ஒரு ஆட்சியாளரை அவர்கள் தோற்கடித்த சண்டையின் 200ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக பீமா கோரேகான் கிராமத்தில் ஒன்றுகூடியிருந்த போது, அங்கே அவர்கள் நடுவில் வன்முறை வெடித்தது.

Stan Swamy 2 பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியச் சட்டங்களைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் ஸ்ரான் சுவாமியின் சாவுஇக்குறிப்பிட்ட வன்முறைக்குக் காரணமான அமைப்புடன் தொடர்புகளைப் பேணியதாக சுவாமியை அதிகாரிகள் குற்றஞ் சாட்டியது மட்டுமன்றி, நாட்டின் பாதுகாப்புக்கு மிக அதிக அச்சுறுத்தலாக விளங்குகின்ற மாவோயிஸ்ட் போராளிகளுடன் அவர் தொடர்புகளை வைத்திருந்தாகவும் குற்றம் சுமத்தினார்கள். இச்சம்பவங்களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், கலவரம் நடந்த குறிப்பிட்ட இடத்துக்குத் தான் ஒரு போதும் செல்லவில்லை என்றும், தான் கைது செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன் பதிவு செய்த காணொளி ஒன்றில் சுவாமி குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஒக்ரோபர் மாதம் அவர் கைது செய்யப்பட்ட போது, உலகளாவிய ரீதியில் அதற்கு எதிராகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு மனித உரிமைக் குழுக்களும் குரலெழுப்பின.

சிறையில் சாவதையே விரும்புகிறேன்

சிறையில் சாவதையே விரும்புகிறேன்

சுவாமியின் உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டிருந்தது. கடந்த மாதம் கோவிட் தொற்றுக்கு அவர் ஆளான போது, அவரது உடல்நிலை மேலும் அதிக பாதிப்புக்கு உள்ளானது. அப்படி இருந்த போதும், சுவாமி தனது இல்லத்துக்குச் சென்று, அங்கே நோய்க்கான சிகிச்சையைப் பெறும் நோக்குடன் வழக்குக்கு முன்னரான பிணையில் செல்ல அவரை அனுமதிக்குமாறு அவரது சட்டத்தரணி முன்வைத்த பிணை மனுவை அதிகாரிகள் தொடர்ந்து நிராகரித்து வந்தனர்.

சுவாமிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டுகளின் பாரதூரத் தன்மையைக் சுட்டிக் காட்டி, மருத்துவ காரணங்களுக்காக முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை ஏற்க முடியாது என்று அவரது வழக்குக்குப் பொறுப்பாக இருந்த தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்ததுடன், சிறையில் அவருக்கு உரிய பராமரிப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பு  மேலும் தெரிவித்தது.

அவரது நடமாடும் இயல்பு சிறையில் நாளுக்கு நாள் கணிசமான அளவு பாதிக்கப்பட்ட வேளையில், ஒரு ஸ்ட்ரோ (straw) மூலம் பானங்களை அருந்த தனக்கு அனுமதி அளிக்குமாறு சுவாமி கோரியிருந்தார். அதற்குக் கூட அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. “இந்தக் குற்றச்சாட்டு சரியானது அல்ல என்றும் தவறான நோக்கங் கொண்டது” என்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான செயலணி கடந்த வருடம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் மறுத்திருந்தது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை விடுத்து, சிறையில் இருந்தபடி சாவதையே நான் விரும்புகிறேன்

cq5dam.thumbnail.cropped.750.422 பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியச் சட்டங்களைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் ஸ்ரான் சுவாமியின் சாவு“மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை விடுத்து, சிறையில் இருந்தபடி சாவதையே நான் விரும்புகிறேன்” என்று சுவாமி நீதிமன்றுக்குத் தெரிவித்திருந்ததாக நீதிமன்ற ஆவணங்களை ஆதாரங்காட்டி சிஎன்என் செய்திச் சேவை குறிப்பிட்டது.

மே மாதத்தின் இறுதிப் பகுதியில் நீதிமன்றின் கட்டளையின் பேரில் சுவாமி திருக்குடும்ப மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

“உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகவே சுவாமி கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக” இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தியறிக்கை தெரிவித்தது.

“மோசமடைந்து கொண்டிருந்த சுவாமியின் உடல் நிலையின் காரணமாக, வேண்டிய மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டதாகவும் மே மாதம் 28ஆம் திகிதியிலிருந்து தேவையான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது” என்று அந்த அமைச்சின் அறிக்கை மேலும் தெரிவித்தது.

சுவாமியின் சாவு தொடர்பாக, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியியலாளர்கள்  அதிகளவானோர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அத்துடன் அவரைக் கைது செய்யவும் பிணை வழங்காது தொடர்ந்து அவரைத் தடுத்து வைக்கவும் பயன்படுத்தப்பட்ட சட்டங்கள் தொடர்பாகத் தமது கோபத்தையும் சமகாலத்தில் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். இந்திய அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்களின் குரல்களை நசுக்குவதற்கு பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்களை அரசு அண்மையில்  அதிக அளவில்  பயன்படுத்தி வருவதாக விமர்சகர்கள் அரசைக் குற்றஞ் சாட்டுகின்றனர்.

“சுவாமியின் கைது மிகவும் வேதனை தரும் ஒரு நிகழ்வு”  என்று மும்பாய் பேராயர் கருதினால் ஒஸ்வால்ட் கிரேசியஸ் ஆண்டகை (Oswald Cardinal Gracias) கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

“குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதியே” என்று அவரது அறிக்கை சுட்டிக் காட்டியது. அருட்தந்தை ஸ்ரான் சுவாமியின் வழக்கு விசாரணைக்குக்கூட எடுக்கப்படவில்லை என்பதை பேராயர் குறிப்பிடத் தவறவில்லை.

“இந்தியாவில் வாழும் ஏழை எளியவர்களும், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களும் தமது மாண்பைக் கண்டு கொள்ளவும் வாழ்வில் முன்னேற்றமடையவும் சுவாமி முழுமையாக உழைத்தார்” என்று பேராயர் குறிப்பிட்டதோடு, “முற்றுமுழுதாக ஏழைகளுக்காகவே அவர் பணியாற்றினார்” என்று போராயர்  தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

“நீதியுடனும் மனிதநேயத்துடனும் சுவாமி நடத்தப்பட்டிருக்க வேண்டும்”  என்று இந்தியாவின் எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ருவிற்றரில் மேற்கொண்ட தனது பதிவில் எழுதியிருந்தார்.

“சுவாமியின் சாவு நாட்டுக்கு ஒரு துன்பியல் நிகழ்வு” என்று இந்தியாவின் ஒரு முன்னணி மனித உரிமை ஆர்வலர் ஹாஷ் மண்டர் (Harsh Mander) குறிப்பிட்டார்.

“அவரது குரலை மௌனிக்கச் செய்வதற்காக கொடூரமான ஓர் அரசு அவரைச் சிறையில் அடைத்தது. நீதியமைப்புகளோ அவரை விடுதலை செய்வதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை” என்று ருவிற்றரில் வெளியிட்ட செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

பன்னாட்டு ரீதியாக முக்கிய ஆளுமைகளும் சுவாமியின் கைது மற்றும் சாவு தொடர்பாகக் தமது கருத்தை வெளியிட்டிருக்கின்றார்கள். “பூர்வீகக் குடிமக்கள் உரிமைகளின் பாதுகாவலர்” என்று சுவாமியை அழைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி, சுவாமியின் வழக்கு தொடர்பாகக்   குறிப்பிட்ட அதிகாரிகளிடம் தொடர்ச்சியாகத் தாம் விளக்கம் கேட்டு வந்ததாகவும் குறிப்பிட்டார்.

“சுவாமியின் கைது, எம்மை வெட்கி நாண வைக்கும் கொடூர நிலையையும், மனித உணர்வுகளை அணுவளவும் மதிக்காக ஒரு தன்மையையும் கோடிட்டுக் காட்டுகிறது” என்று மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளரான மீனாட்சி கங்குலி (Meenakshi Ganguli) கூறினார்.

“பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் மிக மிகக் கொடூரமானது. அமைதியான வழியில் அரசை விமர்சிப்பவர்களுக்குப் பிணை வழங்காது அவர்களைச் சிறையில் அடைப்பதற்கு இந்தச் சட்டம் எந்த வரையறையுமின்றிப் பயன்படுத்தப்படுகிறது” என்று கங்குலி குறிப்பிட்டார். “சுவாமி உண்மையிலேயே குற்றவாளியா என்பதை முடிவு செய்வது நீதிமன்றத்தைச் சார்ந்தது. சுவாமிக்கான பிணையை தொடர்ச்சியாக மறுத்து வந்ததன் மூலம் மிகவும் பலவீனமாகவும், கடுமையாக நோயுற்று நலிவுற்ற நிலையிலும் இருந்த ஒரு செயற்பாட்டாளரை பாதுகாப்பதில்லை என்ற முடிவையே அதிகாரிகள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்”.

நன்றி: சிஎன்என்.கொம்; cnn.com

 

https://www.ilakku.org/death-sranswamy-questioned-indian-anti-terrorism/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.