Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்த மக்கள் கட்டமைப்புகள் - ஆவணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறி 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

main-qimg-b21aefe08c0d5875c4d728b436248bbc.png

'ஒருசில கட்டுமானங்களின் நிழம்புகள்(photos)'

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!

 

தமிழீழத்தின் கட்டமைப்புகள் முக்கியமாக 5 ஆகப் பிரிக்கப்பட்டிருந்தன:

  1. அரசியல்துறை
  2. நிதித்துறை
  3. நீதி & நிருவாகத்துறை
  4. படைத்துறை
  5. புலனாய்வுத்துறை

 


புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பல்வேறு வகையான மக்கள் கட்டமைப்புகளை மக்கள் தேவைகளை நிறைவு செய்வதற்காக கட்டியெழுப்பியிருந்தனர்… அவையாவன

  • மருத்துவப் பிரிவு
    • உடல்உளநலன் விழிப்புணர்வு சேவைகள்
    • தமிழீழ சுகாதார சேவைகள்
      • சுகாதார கல்வியூட்டல் பிரிவு
      • தாய் சேய் நலன் பிரிவு
      • பற்சுகாதாரப் பிரிவு
      • சுதேச மருத்துவப் பிரிவு
      • நடமாடும் மருத்துவ சேவை
      • தியாகி திலீபன் மருத்துவ சேவை
      • கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம்
      • தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு
      • பூச்சியியல் ஆய்வுப் பிரிவு
      • விசேட நடவடிக்கைப் பிரிவு
    • களமருத்துவம்
    • களமருத்துவப் பிரிவு
      • திலீபன் சிறப்பு களமருத்துவப் பிரிவு
    • திலீபன் சிறப்பு மருத்துவமனை
    • யாழ்வேள் மருத்துவமனை
    • Dr. பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை
    • அபயன் ஞாபகார்த்த படைய மருத்துவமனை
    • தமிழீழ மருத்துவக் கல்லூரி
    • தமிழீழ தாதியர் கல்லூரி
    • மருத்துவ கல்லூரி (பொதுமக்களுக்கானது)
    • நலவாழ்வு அபிவிருத்தி மையம்
    • மருந்தகங்கள்
    • போசாக்கு உணவுத் தயாரிப்பு நிலையம்.
    • மருத்துவ ஆராச்சிப் பிரிவு
  • தமிழீழப் பல்கலைக்கழகம் (கிளிநொச்சி அறிவியல் நகரில் இதற்கான கட்டடப் பணிகள் முழுமையடைந்த போதும் இது திறக்கப்படவில்லை)
  • தமிழீழ நுண்கலைக் கலூரி
  • தமிழ் ஊடக அறிவியல் கல்லூரி
  • வன்னி தொழில் நுட்பக் கல்லூரி
  • அரசறிவியற் கல்லூரி
  • சிறுவர் கணனிப் பூங்கா
  • தமிழீழ விசேட பயிற்சிக் கல்லூரி
  • சதீஸ் இயந்திரவியல் கல்லூரி
  • சுமையா மகளீர் அரபுக் கல்லூரி
  • அராபிய மொழிப் பாடசாலை
  • ஆங்கில மொழிப் பாடசாலை
  • போரால் பாதிக்கப்பட்ட மாணவர் பாடசாலை
  • பன்னாட்டுப் பாடசாலை (international school)
  • ஆதவன் திரைப்படக் கல்லூரி
  • தமிழ்மாறன் பயிற்சிக்கல்லூரி (நிதித்துறைப் பொறுப்பாளர்களுக்கானது)
  • விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
  • நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான­ தொடர்பாடல் சேவை மையம்)
  • கிராம கடற்றொழிலாளர் கட்டமைப்புகள் = சங்கம் – சமாசம் – சம்மேளனம் – இணையம்
  • பெண்கள் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு மையம் (SWRD)
  • மலரவன் மழலைகள் அறிவியல் பூங்கா
  • மலர்ச்சோலை (தாய்-சேய் பராமரிப்பு நிலையம்)
  • குருகுலம் சிறுவர் மனமகிழ்வுப் பூங்கா (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் - TRO இன் கீழ் செயல்ப்பட்டது )
  • காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
  • செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
  • செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் - SWDR இன் கீழ் செயல்ப்பட்டது)
  • புனிதபூமி சிறுவர் இல்லம் 
  • பாரதி சிறுவர் இல்லம்
  • முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்களுக்கானது)
  • தளிர்கள் (தாய் தந்தை இருவரும் போராளிகளாக இருப்பவர்கள் அல்லது தாய் தந்தை ஒருவர் மாவீரராக உள்ள சிறார்களின் முன்பள்ளி)
  • இனிய வாழ்வு இல்லம் (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத மாற்றுதிறனாளி சிறுவர் சிறுமிகளுக்கானது)
  • மேரி இல்லம் (பெற்றோருடனான தொடர்பிழந்த பெண்களுக்கானது)
  • நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
  • மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
  • நிறைமதி இல்லம் (நுண்ணறிவு ஊனமுற்ற பெண்களுக்கானது)
  • வெற்றிமனை பெண்கள் உளவளத் துணை நிலையம் (போரால் உளநலம் குன்றிய பெண்களுக்கானது)
  • சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது)­
  • கணினிக் கலையகம் (மாற்றுத்திறனாளிகளுக்கானது)
  • அன்பு முதியோர் பேணலகம்
  • உதயதாரகை (விதவைகளுக்கானது)
  • தமிழீழப் படைத்துறைப்பள்ளி (ஆ&பெ)

main-qimg-2c757d90043a7d48593c575db3e2e943.png

  • தமிழீழ பேக்குவரத்து கழகம்
    • ஓட்டுநர் பயிற்சிக்கல்லூரி

main-qimg-d7549752135c38df203262eb4dcbf25b.png

  • தமிழீழ நீதிநிருவாகத்துறை
    • தமிழீழ சட்டக்கல்லூரி
    • தமிழீழ சட்டவாக்க கழகம்
    • நீதிமன்றங்கள்
      • உச்ச நீதிமன்றம்
      • மேன் முறையீட்டு நீதி மன்றம்
      • விசேட நீதி மன்றங்கள் (தேவையேற்பட்டால் மட்டும் அமர்வுகள் இடம்பெறும்)
      • மேன் நீதிமன்றம்
      • மாவட்ட நீதி மன்றம் ( குடியியல் & குற்றவியல்)
  • அரசியற்துறை
    • அரசியல் தொடர்புப் பிரிவு
    • மக்கள் தொடர்புப் பிரிவு
    • நிதித்துறை(அரசியல் துறைக்கானது)
    • பரப்புரை பிரிவு
    • கொள்கை முன்னெடுப்புப் பிரிவு
    • தமிழீழ அரும்பொருள் காப்பு நடுவம்
    • சமூக மேம்பாட்டுப் பிரிவு (1990-2009)
  • தமிழீழ வன வளத்துறை
    • வனவள பாதுகாப்பு பிரிவு
  • தமிழீழ மீன்பிடித்துறை
  • தமிழீழ நிதித்துறை
    • நிர்வாக நிதிப்பிரிவு
    • கணக்காய்வுப் பிரிவு
    • கொடுப்பனவுப் பிரிவு
    • அன்பகம் (கணக்காய்வுப்பகுதி நடுவப் பணியகம்)
    • வருவாய்த்துறை
      • வருமானவரிப் பிரிவு
      • சுங்கவரித் துறை
      • ஆயப் பகுதி- வரித் தீர்வு
      • புலனாய்வுத்துறை (வருவாய்த்துறைக்கானது)
  • தமிழீழ நிர்வாக சேவை
    • சமூகப் பொருளாதார அபிவிருத்தி வைப்பகம்
    • கிராமிய வைப்பகம்
    • வேளாண் வாணிபம்
    • மருந்துச்சாலை
    • – முன்பள்ளி மேம்பாட்டு பிரிவு
    • – தொழில்பயிற்சி மையம்
    • – கல்வி பொருளாதார ஆய்வு அபிவிருத்தி நிறுவனம்
    • – சிறுவர் இல்லங்கள்
    • – நிர்வாகம்
    • – புள்ளவிபரம்
    • – காணிப்பகுதி
    • – திட்டமிடல் ஆலோசனை பகுதி
    • – நிதிப்பகுதி
    • – நில அளவை பகுதி
    • – கூட்டுறவுப் பகுதி
    • – பொறியியல் பகுதி
    • – உள்ளூராட்சி மன்றம்
    • – மேம்பாட்டுப் பகுதி
    • – ஆய்வு அபிவிருத்தி நடவடிக்கை நிறுவனம்
    • வேளாண்பகுதி
    • கடல்வாணிபப்பகுதி (தமிழீழ மீனவர்கள் மீன்பிடிக்கும்போது கடற்புலிகள் கடலில் தரித்து நின்று காப்புக் கொடுத்தனர்)

main-qimg-608246d6e46b49adb71bfc953d607ac0.png

'கிளிநொச்சி தமிழர் புனர்வாழ்வுக் கழக அலுவலகம்' | படிமப்புரவு: யூடியூப்பில் இருந்து என்னால் உருவாக்கப்பட்ட படிமமாகும்.

  • தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO)
    • யாழ்ப்பாண மாவட்டம்:
      • வடக்கு - கிழக்கு அபிவிருத்தி புனர்வாழ்வுக்கழகம்
      • யாழ்ப்பாண அபிவிருத்திப் புனர்வாழ்வு நிறுவனம்
      • சிறுவர் பாடசாலை ஆசிரியர் பயிற்சி நிலையம்
      • முன்பள்ளிக் கல்வி மேம்பாட்டு நிலையம்.
      • உழைப்பாளரை இழந்த பெண்களுக்கான வாழ்வு நிலை
      • வலுவிழந்தோருகுக்கான வாழ்வு நிலையம்
      • போசாக்கு புனர்வாழ்வு நிலையம்
      • வாழ்வகம்
      • அறிவு வளர்ச்சி நிலையம்
      • வெண்புறா தொழில்நுட்ப நிறுவனம்
      • சமுக பொருளாதார வளர்ச்சி நிறுவனம்
      • சமுதாய முன்னேற்றக் கழகம்
    • கிளிநொச்சி மாவட்டம்:
      • வடக்கு - கிழக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம்
      • கிளிநொச்சி அபிவிருத்தி அகதிகள் புனர்வாழ்வுக்கழகம்
      • கிராமியப் புனர்வாழ்வு அபிவிருத்தி நிறுவனம்
      • அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம்
      • கிளிநொச்சி கிழக்கு புனர்வாழ்வு நிறவனம்
      • பூநகரி அபிவிருத்திப் புனர்வாழ்வுக் கழகம்
      • பூநகரி - முழங்காவில் அபிவிருத்தி நிறுவனம்
      • அக்கராயன் அபிவிருத்தி நிறுவனம்
      • கரைச்சி வடக்கு அபிவிருத்தி நிறுவனம்
    • தெந்தமிழீழம்:
      • பல பாடசாலைகள்
  • ஊடகப்பிரிவு
    • – தமிழீழ தேசிய தெலைக்காட்சி
      • – நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு, ஒளிவீச்சு காணொளி, சஞ்சிகை தயாரிப்பு)
    • – புலிகளின் குரல் (தமிழீழ வானொலி - தமிழ் , சிங்களம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் ஒலிபரப்பப்பட்டது)
    • – ஈழநாதம் (நாளிதழ்)
    • – – வெள்ளிநாதம் [வார இதழ் (வெள்ளிக் கிழமைகளில் மட்டும்) ]
    • – சுதந்திரப் பறவைகள் (பெண்களுக்கான இருமாத இதழ்)
    • –  அக்கினி வீச்சு (கையெழுத்து இதழ் | போராளிகளின் கவிதைகள் ஓவியங்கள், மாவீரர் நினைவுகள், கட்டுரைகள், பொதறிவுத் தகவல்கள் முதலான ஆக்கங்களை வெளியிட்டு அவர்களின் படைப்பாற்றல் வளர்க்கப்பட்டது.)
    • – விடுதலைப்புலிகள் (மாத இதழ்)
    • – வெளிச்சம் (மாத இதழ்)
    • – நாற்று (மாத இதழ்)
    • – காப்பரண் (பனை-தென்னைவள அபிவிருத்தி ஒன்றியத்தால் வெளியிடப்பட்ட மாத இதழ்)
    • – செய்திக்கதிர் (மாத இதழ்)
    • – எரிமலை (மாத இதழ்)
    • – களத்தில் (மாத இதழ்)
    • – ஆதாரம் (சமூக, பொருளாதார, விஞ்ஞான ஆய்வு மாத இதழ்)
    • – சூரியப் புதல்வர்கள் (மாத இதழ்)
    • – சுதந்திரதாகம் (மாத இதழ்)
    • – தமிழீழச் செய்திகள் (மாத இதழ்)
    • Hot Spring (ஆங்கில மாத இதழ்)
    •  දේදුන්න (சிங்கள நாளேடு)
    • – விழி (மருத்துவ இதழ்)
    • –  தலைநகர் (தெந்தமிழீழ மாதயிதழ்)
    • – கணிநுட்பம் (தொழில்நுட்ப இதழ்.. கணினிப் பிரிவால் வெளியிடப்பட்டது ஆகும்)
    • – படியுங்கள் அறியுங்கள் (உள்ளக இதழ்- போராளிகளுக்கு மட்டும்)
    • – திரைப்பட உருவாக்கப் பிரிவு
    • – ரதன் கலையகம் (திரைப்பட மொழியாக்கப்பிரிவு)
    • – தர்மேந்திரா கலையகம் (திரைப்பட வெளியிட்டுப் பிரிவு)
    • மாங்கனி கலையகம்
    • – இணைய செய்தி நிறுவனங்கள் (தமிழ்நெற் என்ற ஆங்கில இணையமும் புதினம் என்ற தமிழ் செய்தி இணையமும் நேரடி தொடர்பாடலுடன் செயற்பட்டிருந்தன)
    • – பல சமூக செய்தி இணையத்தளங்கள் ( போர் முடிவுக்குப் பின்னர் பல மூடப்பட்டு விட்டன)
  • ஊரகவளர்ச்சி பிரிவு
    • சிறுவர் போசாக்கு பராமரிப்புப் பூங்கா
    • மின் வழங்கல்
    • கிராம அபிவிருத்தி செயற்பாடுகள்
    • விலங்கியல் பண்ணைகள்
    • பொருண்மிய மதியுரையகம்
    • தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
    • பயிரமுது தொழிற்சாலை ( இயற்கை உரம்)
    • பொருண்மிய வைப்பகம்
    • கிராமிய வைப்பகம்
  • தலைமைச்செயலகம்
    • தலைவருக்கான தனிச்செயலகம்.
    • தலைமைச்செயலக பாதுகாப்பு அணி
  • புதிய போராளிகள் இணையும் செயலகம்
  • தமிழ் மொழி காப்புக் கழகம் -
    • தமிழ் வளர்ச்சிக் கழகம் (மக்கட் பெயர்க் கையேடு-460000, சமற்கிருத-தமிழ் அகராதி, அறிவியல் அகராதி ஒன்று இவர்களால் அணியமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது மற்றும் பல புத்தகங்கள்.. அனைத்தும் முள்ளிவாய்க்காலில் எரிந்து அழிந்தன; அழிக்கப்பட்டன )
  • தமிழீழ கல்விக் கழகம்
    • தமிழீழ மாணவர் அமைப்பு
    • சிறுவர் இல்லங்கள்
    • கல்வி நிறுவனங்கள் ('அன்னை பூபதி' பொதறிவுப்போட்டி இவர்களால் நடாத்தப்பட்டது)
    • கணனி நிலையங்கள்
  • அர்ச்சயா பழச்சாறு உற்பத்திகள் (இந்தியப் படைகள் வருமுன்வரை)
  • பசுமை வேளாண் சேவை - (கமக்காரர்களுக்கானது)
  • தமிழீழ ஆய்வு நிறுவனம்
  • அறிவமுது பொத்தகசாலை
  • மருதம் வாணிபம்.
    • மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்)
  • சேரன் வாணிபம்,
    • சேரன் சுவையகம்
  • சோழன் வாணிபம்
    • சோழன் தயாரிப்புகள்
    • சோழன் எண்ணை வாணிபம்
  • பாண்டியன் வாணிபம்
    • பாண்டியன் பல்பொருள் வாணிபம்
    • பாண்டியன் புடவை வாணிபம்
    • பாண்டியன் சுவையூற்று
    • பாண்டியன் எரிபொருள் வாணிபம்
    • பாண்டியன் உதிரிகள் வாணிபம்
    • பாண்டியன் அச்சகம்
    • பாண்டியன் உற்பத்திப் பிரிவு,
  • இசைவிழி வாணிபம் (விளையாட்டுச் சாமான், உடுப்பு என்று எல்லாம் கிடந்தது.. கிளிநொச்சி வருவாய்த்துறைக்கு கீழ் இருந்தது.)
  • பொன்னம்மான் உரவகை வாணிபம்
  • இளவேனில் வாணிபம் (எரிபொருள் உதிரிகள் கட்டடப்பொருள் விற்பனை நிலையம்).
  • தென்றல் இலத்திரனியலகம்
  • இளந்தென்றல் குடிவகைப் பிரிவு
  • இளந்தென்றல் தங்ககம்,
  • எ9 தங்ககம்
  • தமிழ்மதி நகை மாடம், தமிழ்நிலா நகை மாடம், தமிழரசி நகை மாடம்……. என மொத்தம் எட்டு நகைக் கடைகள் இருந்தன.
  • அந்திவானம் பதிப்பகம்
  • அன்பு அச்சகம்
  • காலணி (பாதணி உற்பத்தி மையம்)
  • மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி)
  • கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை
  • பப்படம் தொழிற்சாலை
  • தளவாட உற்பத்தி நிலையம்
  • எழுகை தையல்பயிற்சி மையம்
  • விடிவெள்ளி (பெண்கள் மட்டுமே- அனைத்து விதமன உத்தியோக வேலைகள்)
  • வெண்புறா ( செயற்கைகால் உற்பத்தி நிலையம்)

main-qimg-21e80d3f0a59ebe78e7503fee78b2508.png

'வெண்புறாக் கட்டடம்'

  • ஈழநிலா படைப்பகம்
  • இசைவாணி தொலைத் தொடர்பகம்
  • அருச்சுனா புகைப்படக் கலையகம்
  • பொற்காலம் வண்ணக் கலையகம்
  • ஒளிநிலா திரையரங்கு
  • ஆவணப்படுத்தல் பிரிவு / ஆவணக் காப்பகம்
  • தமிழீழ பதிப்புத்துறை
  • நளன் வானொலி தொலைத் தொடர்புப் பிரிவு
  • நடராசன் ஒளிப்பதிவுப் பிரிவு (உள்ளக படப்பிடிப்பு, களப் படப்பிடிப்பு)
  • விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
    • மகளீர் கலை பண்பாட்டுக் கழகம்
  • அரங்க செயற்பாட்டுக் குழு
  • தமிழீழ இசைக்குழு
  • ரசிகன் கலைக் குழு()
  • வீதி நாடகக் குழு
  • தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை
  • தமிழீழ விளையாட்டுத்துறை
  • தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம் -INTELSAT என்னும் செய்மதி இவர்களால் பயன்படுத்தபட்டது.
  • தமிழீழ வானிலை அவதானிப்பு நிலையம் - INTELSAT என்னும் செய்மதி இவர்களால் பயன்படுத்தபட்டது.
  • தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம்
  • தமிழீழ வைப்பகம் ( 'சிறப்பு ஊற்றுக்கண்' தேட்டத்திட்டம், 'தமிழமுதம்' சேமிப்புத் திட்டம் )
  • தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை (தமிழீழ வரலாற்றுக்கல்வி நூல் வெளியீடு)
  • மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு)
  • மனிதநேய கண்ணிவெடியகற்றம் பிரிவு
  • திட்டம் மற்றும் மேம்பாட்டுக்கான பிரதேச செயலகம் 
  • தமிழீழ வரலாற்றுப் பதிவேடுகள் பேணிக்காத்தல் பகுதி
  • சூழல் நல்லாட்சி ஆணையகம்
  • வடகிழக்கு மனிதவுரிமைச் செயலகம்(NESHOR)
  • அறிக்கை / ஆவணப்பகுதி
  • நிருவாகச் செயலகம்
  • மக்கள் தொடர்பகம்
  • அனைத்துலகத் தொடர்பகம்
  • வாணிபப் பிரிவு
  • தேசிய உட்கட்டுமான பாதுகாப்புப் பிரிவு
  • தமிழீழ கல்வி மேம்பாட்டு கழகம்
  • ராஜன் கல்விப் பிரிவு
  • தமிழீழ வழங்கல் பிரிவு
  • கொள்வனவுப் பகுதி
  • உணவுப்பகுதி
  • தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம்
  • வானதி வெளியீட்டகம்
  • காயப்பட்ட போராளிகள் பயிற்சிக் கல்லூரி
  • தமிழீழ மாவீரர் சிற்பக்கலைக் கூடம்
  • தமிழீழ வைப்பகம் (TE Bank) - தமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam
  • தற்சார்பு தொழில் முயற்சி நிதியம்
  • தமிழீழப் பெண்கள் ஆய்வு நிறுவனம்
    • பண்டாரவன்னியன் உற்பத்திச்சாலை (பெண்களுக்கானது-வவுனியா கொந்தக்காரன் குளம் - இங்கு மாச்சில்லு(விசுக்கோத்து), இனிப்பு, மிட்டாய் என்பன விளைவிக்கப்பட்டன(produced) )
  • பெண்கள் தொழிற்பயிற்சி மையம்
  • தொழிற்றுறை மேம்பாட்டு நிறுவனம்
  • சிறுவர் பாதுகாப்பு வழங்குரிமைச் சபை

 


main-qimg-0e47befe71bfa82027b6b1b7a1cb33d4.jpg

  • தமிழீழ காவற்றுறை
    • குற்றத் தடுப்புப் பிரிவு
    • குற்றப் புலனாய்வுப் பிரிவு
    • விசாரணைப் பிரிவு
    • காவல்துறை படையணி
    • காவற்றுறை சிறப்பு அதிரடிப்படை – ( மக்கள்),
    • தமிழீழ போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு ( நுழைவிசைவு வழங்கும் பகுதி)
    • தமிழீழ காவற்றுறை ஆய்வுத் திணைக்களம்
    • நகரப் போக்குவரத்துப் பிரிவு
    • உள்ளக பாதுகாப்புப் பிரிவு
    • மக்கள் தொடர்பு சேவைப் பிரிவு
    • காவல்துறை மருத்துவப் பிரிவு
    • தமிழீழ காவல்துறை பயிற்சிக் கல்லூரி
    • தொழில்நுட்பப் பிரிவு
    • சிறுவர் அமைப்பு
      • சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ( கருணா நிலையம்)

என இன்னும் பல பிரிவுகள் இருந்தன.

main-qimg-80f19bbbf61b8ef3e780db64fefeb40f.png

'கிளிநொச்சி மாவட்ட தலைமை காவற்றுறை பணியகம்' | படிமப்புரவு: யூடியூப்பில் இருந்து என்னால் உருவாக்கப்பட்ட படிமமாகும்.

main-qimg-be17b8355644c9972be772279db80781.png

'பணியகத்தின் முக்கிய வாசல்.. இடது புறத்தில் தெரிவது கயஸ் ஊர்தி.. வலது புறத்தில் வாயில்காப்போன் நிற்கிறார். அங்கு தெரியும் அந்த வளைவுதான் இக்கட்டடத்திற்கு எதிரிலிருந்த கிளிநொச்சி முத்தவெளி மைதானத்தின் நுழைவுவாயில்' | படிமப்புரவு: யூடியூப்பில் இருந்து என்னால் உருவாக்கப்பட்ட படிமமாகும்.

main-qimg-b99334b626add4501d765864398f35fd.png

'கிளிநொச்சி மாவட்ட காவற்றுறை உயர் அதிகாரி' | படிமப்புரவு: யூடியூப்பில் இருந்து என்னால் உருவாக்கப்பட்ட படிமமாகும்.

வன்னி பெருநிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ காவல் நிலையங்களின் இருப்பிடத்தைக் காட்டும் நிலவரை(map)

main-qimg-a605f0cdd9121e44ece8b203b5dd4606.jpg

 


விடுதலைப் புலிகள் தங்கள் விடுதலைப்போரில் சிறப்பாகப் பணியாற்றியோருக்காகவும் வேளாண்மையில் சிறப்பாகச் செயல்பட்டோருக்காவும் பல்வேறு விருதுகள் வழங்கியிருந்தனர்.. அவை பின்வருமாறு

விருதுகள் :-

  • மாமனிதர் - தமிழ்த்தேசியப்பணி, சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கான விருது.
  • நாட்டுப்பற்றாளர் - நாட்டிற்காய் வீரச்சாவு எய்திய இயக்கத்தில் அல்லாதோருக்கான விருது.
  • வேளாண் மன்னர் - வேளாண்மையில் சிறந்து விளங்கியோருக்கான விருது.

 

பதக்கங்கள்:-

main-qimg-157c48d55ec4d47f212ab1170c56a099.jpg

  • ஒளிஞாயிறு - போரியலின் குறிப்பிட்ட துறையில் தனியாள் மிகையியல்பு(extraordinary) செயல்திறனிற்காக வழங்கப்படும் பதக்கம்.
  • மறமாணி - போரியலில் தனியாள் செயல்திறனிற்கான பதக்கம்.
  • மறவர் - கரும்புலிகளுக்கும், குழுத் தாக்குதல்களில் செயல்திறனிற்காக வீரர்களுக்கும், மூன்று தாக்குதல்களில் பங்குகொண்ட வானோடிகளுக்கும் வழங்கப்படும் பதக்கம்.
  • நீலப்புலி - 5 தாக்குதல்களில் பங்குகொண்ட வானோடிகளுக்கு வழங்கப்படும் பதக்கம்.
  • புயல்வீரன் - கடல் மற்றும் தரைப் போரில் சிறப்பாக செயல்பட்ட புலிவீரர்களுக்கு வழங்கப்படும் விருது. வேவுப்புலிகளுக்கும் வழங்கப்பட்டது.

 


இவை தவிர புலிகள் தம் விடுதலைப் போரில் இறந்த மாவீரர்களைப் நினைவு கூறுவதற்காக கீழ்கண்டவற்றை உருவாக்கியிருந்தனர்

  • மாவீரர் குடும்ப நலன் காப்பகம்
  • மாவீரர் பணிமனை
  • மாவீரர் துயிலும் இல்லங்கள்
  • மாவீரர் துயிலுமில்லம் புனரமைப்புக் குழு
  • மாவீரர் அரங்குகள்.
  • மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
  • மாவீரர் நினைவு வீதிகள்.
  • மாவீரர் நினைவு குடியிருப்புத் திட்டங்கள்.
  • மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
  • மாவீரர் நினைவுப் பூங்காக்கள் (தியாகசீலம் பூங்கா, சந்திரன் பூங்கா)
  • மாவீரர் நினைவு படிப்பகங்கள்.
  • மாவீரர் நினைவு நூலகங்கள்.
  • மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.

இத்துடன் தியாகசீலம் என்னும் ஒன்றினையும் உருவாக்கியிருந்தனர்.. அதன் பணிகளாவன:

  1. வீரச்சாவடைந்த போராளின் உடலங்களை தூய்மைப்படுத்தி அவர்களின் உடலங்கள் கெட்டுப் போகாத அளவுக்கு தயார்படுத்தி ( அதாவது இன்போம் பண்ணுவது என்று மக்கள் கூறுவது) இராணுவ உடை அணிந்து சந்தனப் பேழையில் அவர்களை கிடத்தி உறவினர்களிடம் கையளிக்கும் வரை அத்தனையையும் செய்யும் இடமான “தூண்டி” என்று ஆரம்ப நாட்களில் அழைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் பாசறையை பின்னாட்களில் புனிதத்துவம் மிக்க பெயரான ”தியாகசீலம் ” என்று உணர்வுகளில் அணைத்துக் கொண்டனர்.
  2. முகம் மறைக்கப்பட்ட மறைமுக போராளிகளின் வித்துடல்களை விதைத்த போது அல்லது நடுகற்களை நட்ட போது அவற்றை தியாக சீலம் என்றே அணைத்துக் கொண்டனர். (பல இரகசிய காரணங்களுக்காகவே அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டதும், முகமறியா மறைமுகங்களாய் அவர்கள் தூங்கியதும் வெளிப்படையான உண்மை. தமிழீழ விடுதலைக்கு பின்பான காலம் அவர்களின் முகம் யார் என அடையாளப் படுத்தப் பட்டிருக்கலாம்.)
  3. வீரச்சாவடைந்த மாவீரர்களின் உடலங்கள் வந்த போது பலவற்றில் அடையாளத் தகடுகள் இல்லாத நிலை இருந்தது. அது எதிரியிடம் பிடிபட்டு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தி னூடாக வந்த போராளிகளின் உடலங்களாக இருக்கலாம் அல்லது சண்டைக்களங்களில் புலிகளால் மீட்கப் பட்டாலும் கழுத்தில் இடுப்பில் கையில் என கட்டப்பட்டிருந்த மூன்று தகடுகளும் தவறி இருக்கலாம். அது எவ்வாறோ போராளிகளின் உடலங்களை புலிகளால் அடையாளப்படுத்த முடியாத சந்தர்ப்ப ங்களில் படையணி அல்லது துறைசார் போராளி நண்பர்கள் அல்லது இறுதியாக எடுக்கப்பட்டிருந்த தனிநபர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த காயவிபரங்களை வைத்து அடையாளம் காண முயன்றும் அதிலும் தோல்விகளை சந்தித்து அடையாளம் காண முடியாத பல நூறு வித்துடல்களை விதைத்த போது அவர்களுக்கான பொதுப்பெயராக “தியாகசீலம்” என்ற உணர்வுமிக்க புனிதத்தை அணைத்துக் கொண்டனர்.
  4. இவ்வாறு இவர்கள் விதைக்கப்பட்ட இவர்களை அடையாளம் காணும் சந்தர்ப்பம் ஓர்நாள் வரும் என்றே எம் தேசியத்தலைவர் நம்பிக்கை கொண்டிருந்தார். தமிழீழம் மலர்ந்த பின் தமிழீழ தேசத்தில் எம் மக்களின் DNA க்கள் பரிசோதிக்கப் படும் போது இந்த மாவீரர்களின் DNA எந்த உறவுகளோடு ஒத்துப் போகுதோ அதை வைத்து இந்த உடலம் யாருடை யது என்பதை இனங்காண முடியும் என்ற தூரநோக்க சிந்தனை அவரை ஆறுதல்படுத்தியது. அதனால் தான் இந்த தியாகசீலர்களை அவர் மாவீரர் துயிலும் இல்லங்களில் அடையாளங்கள் அற்று விதைத்த போதும் தியாகசீலம் என்ற அடையாளத்தை கொடுத்ததனர்.

புலிகள் தங்கள் வீரர்கள் இறக்கும் போது அவர்கள் இறந்து விட்டார் என்று அறிவிப்பதில்லை.. மாறாக வீரச்சாவடைந்து விட்டார் என்றே அறிவித்தனர். அவ்வாறு வீரச்சாவடைந்து விட்டவரின் உடலத்தினை பிணம் என்றோ சடலம் என்றோ அழைப்பதைல்லை.. அவர்கள் விடுதலைப் படையினர் என்பதால் போரில் இறந்த தம் வீரர்களை மாவீரர் என்றும் அவரின் உடலத்தினை வித்துடல் என்றும் அழைத்தனர். அவ்வித்துடல்கள் புதைக்கப்படும் குழிகள் விதைகுழிகள் என்று அழைக்கப்பட்டன.. அங்கு புதைக்கப்படுதல் என்னும் சொல் கையாளப்பட்டதில்லை. மாறாக விதைக்கப்படுதல் என்னும் சொல்லே கையாளப்பட்டது.. இவர்களின் வித்துடல்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் பேழைகள் என்று அழைக்கப்பட்டன. அக்குழிகளில் வித்துடல் இடப்பட்ட பின்னர் அவற்றினைச் சுற்றி கல்லறைகள் கட்டப்படும்.. அவ்வாறு பெருமளவில் கல்லறைகள் கொண்ட இடங்கள் துயிலுமில்லம் என்று அழைக்கப்பட்டது. இத்துயிலுமில்லங்களில் வித்துடல்கள் இல்லாதோருக்காக/ கிடைக்காதோருக்காக நினைவுக்கற்கள் என்பவையும் நடப்பட்டிருந்தன. இவை அவர்களைக் குறித்த தகவல்களையும் நினைவுகளையும் தாங்கி நின்றன.

  • எ.கா :-'அஆ மாவீரரின் வித்துடல் அஆ துயிலுமில்லத்தில் உள்ள அஆ விதைகுழியில் புனித மரியாதையுடன் விதைக்கப்பட்டது'

main-qimg-ba028bdddea094efeeb5854f2ecd1189.png

'விதைகுழியில் மாவீரரின் வித்துடல் கொண்ட பேழை விதைக்கப்படுகிறது'

 

  • துயிலுமில்ல முகப்புத் தோற்றம்:

இந்த முகப்பினை ஒலிமுகவாயில் என அழைப்பர். அதன் பொருள் புலி வாழும் இடத்தின் முகவாயில் என்பதாகும்.

main-qimg-120899c2a81eaa355a8760d005e4e6fb.jpg

 

  • நினைவுக்கற்கள்:

main-qimg-200e995be2715f4632cafcc3389cd5bb.jpg

 

  • கல்லறைகளின் எழில் மிகு தோற்றம்:

அங்கு பொறிக்கப்பட்டிருக்கும் சொற்றொடர்:

'போரென வெற்றியென நின்றவர்கள்

போகும்போது தமிழீழம் என்று சொன்னவர்கள்'

main-qimg-d2af9914e45dc4139f32b38ca993dcec.jpg

main-qimg-584b6790caf72e4b21a93ce7df9e102e.png

 

மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்கள்:

முல்லைத்தீவு நித்திகைக்குளம் காட்டுப்பகுதி - (முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று தலைவர் மாமா முதன்மைச் சுடரை ஏற்றி அக வணக்கம் செலுத்திய இடம்)

  • அம்பாறை மாவட்டம்

கஞ்சிகுடிச்சாறு உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

  • மட்டக்களப்பு மாவட்டம்

தரவை மாவீரர் துயிலுமில்லம்.

தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்.

கல்லடி மாவீரர் துயிலுமில்லம்.

மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம்.

  • திருகோணமலை மாவட்டம்

ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம்.

வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம்.

பெரியகுளம் மாவீரர் துயிலுமில்லம்.

உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்.

  • மன்னார் மாவட்டம்

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்.

முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம்

பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்.

  • வவுனியா மாவட்டம்

ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

  • கிளிநொச்சி மாவட்டம்

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்.

முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்.

  • யாழ்ப்பாண மாவட்டம்

தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம்.

வலிகாமம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம். (தமிழீழ தேசத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லம்)

வடமராட்சி கிழக்கு எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

வடமராட்சி உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்.

தென்மராட்சி கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம்.

  • முல்லைத்தீவு மாவட்டம்

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்.

அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்.

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம்.

துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

நெடுங்கேணி களிக்காடு மாவீரர் துயிலுமில்லம்

மணலாறு ஜீவன்முகாம்/ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்.

மணலாறு டடிமுகாம்/ புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம்.

  • இறுதிப் போர்க்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பகுதிகள்:

தேவிபுரம் '' பகுதி குடியேற்ற திட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை)

இரணப்பாலை பெருந்தோட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை)

வலைஞர் மடம் தெற்கு களித்தரைப் பகுதி (பெப்ரவரி இறுதியில் இருந்து மார்ச் முதலாவது கிழமை வரை)

இரட்டைவாய்க்காலையும் வலைஞர் மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி (மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை)

வெள்ளா முள்ளிவாய்க்கால் கப்பல் வீதிக்கு அண்மையில் உள்ள இடம்.(ஏப்ரல் 21- மே 12 வரை)

மே 13,14,15 அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விதைக்கப்பட்டது.

மே 16,17,18 விதைக்கப்படவில்லை; விடுபட்டன.

main-qimg-61c9fc2a3aaf917ca5cdcacb6a8aa1f5.jpg

 


விடுதலைப்புலிகளிடம் இருந்த மக்கள் கட்டுமானங்கள் தொடர்பான ஒருசில கோப்பு நிழற்படங்கள்:

 

 

தமிழீழ வனவள பாதுகாவலர் பிரிவின் வில்லை(badge).


இதன் மேற்பகுதியில் "வனப்பாதுகாவலன்" என எழுதப்பட்டுள்ளது.

தமிழீழ-வன-வளப்-பாதுகாப்பு.jpg

படிமப்புரவு: தமிழீழ ஆவணக்காப்பகம்

 

Bank of Tamileelam.jpg

 

Tamil develepment kalakam.jpg

 

main-qimg-676274e01651d4f22f42186ad633fe5e.jpg

main-qimg-e711b79f93e2d2051ee7bc6109ba0afb.jpg

main-qimg-e099461400151e06f0f68d6b0c769c31.png

main-qimg-3d932854c0d99b16a668ec1533a703c0.png

main-qimg-5a8c0d8d24b215c5cb33b4d5a9c09825.jpg

main-qimg-7fa52aea844046a83fbec3787de4b187.jpg

 

மகளீர் பிரிவு:-

main-qimg-86708159ef5631a4b9669bdb7cfcd3b9.png

 

main-qimg-70686340d4bd46d6b195c5092358966a.jpg

main-qimg-6cfe28e1aea5911ceb36b4862d729dbd.jpg

main-qimg-8718d48151306d98b8a90768b1afffda.png

main-qimg-2140df8654740049a2647587a963c82b.png

main-qimg-e03a902828e448770968ba07764ce043.png

CWRD.jpg

main-qimg-1b3733dcd7d84c4d07c48dc24e928edc.jpg

main-qimg-fa01ebd0ed74e9a08b60239be1bed15b.jpg

main-qimg-1343f26755b0d78357781c48d2038c61.png

main-qimg-27589363363c7dd1b15c5fd06d375868.png

main-qimg-9b972b1f7e5b1065aabf6ebbf3ba5098.png

main-qimg-1b65b4fe66d345df560f254ca5a7262e.png

main-qimg-688afd286be779f7a2f94ebd865f5e9d.jpg

main-qimg-bc5d7c4d39c5ebd4d68d2e3b172c410e.png

main-qimg-ea03439db4c8e425a0c928ce97f9127b.png

main-qimg-5566c554201bfcb996c8a9ddbb3e4469.png

main-qimg-77e4d8e2fed57945742cd92fdc7285ae.png

main-qimg-f8557053a0a1dba43c8d8f32046dd5e5.png

main-qimg-bc7525fab922dba92cdd653ef3392847.png

main-qimg-58fc9bf550c23a4a8d0247608954b22f.png

main-qimg-41f0df785db15ca50c541bcb9ac51aea.png

main-qimg-5daf50e1f2e5f27e4fe8b07eae93d1b1.png

image.png

8C2A9696_resize.jpg

gettyimages-3101984-2048x2048.jpg

 


  • ஒரு பக்கம் பார்த்தால் எப்படி மறுபக்கம் பார்க்க வேண்டாமா?

 

 

 

உசாத்துணை:

படிமப்புரவு

தொகுப்பு & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்த மக்கள் கட்டுமானங்கள் - ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்

பெரு மூச்சு  மட்டுமே மிஞ்சுது

(இவற்றில்  சிலவற்றில் நானும் இருந்திருக்கின்றேன்)

  • Like 1
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்த மக்கள் கட்டமைப்புகள் - ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்+

மருத்துவ மனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில் நிறுவனமயப்பட்டு இயங்கிவந்தவற்றை பட்டியலிட்டுள்ளேன், முதலாவதாக!

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.