Jump to content

ஒளிப்பதிவு சட்டமூலத்தை திரும்பப் பெற வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்து!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசி மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி வரியை இரத்து செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின்

ஒளிப்பதிவு சட்டமூலத்தை திரும்பப் பெற வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்து!

மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்டத் திருத்தமூலத்தை திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுத்தியுள்ளார்.

இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில், ‘புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்தங்கள், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஒளிப்பதிவு சட்டத் திருத்தமூலம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவிடும் என திரைபிரபலங்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1226995

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.