Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழரின் மதிற்போர் இயந்திரங்கள்:

வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் கோட்டை மதிலினை பாதுகாக்க இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது.

 

தமிழரின் ஆய்தங்கள் இருவகைப்படும்.

  • கைக்கொள்படை/ கைப்படை : - (hand hold weapons)
    • கைவிடுபடை
    • கைவிடாப்படை
  • கைக்கொள்ளாப்படை: - ( siege & defense tools)

 

~ கோட்டை(Fort)- கவை, அலக்கு, ஆவரணம்

main-qimg-10bc6ba10cade42b530ed6d97a6d6e5f.jpg

 

பெருவிடை….பொறுமையுடன் வாசிக்கவும் ….

 

  • இலக்கிய ஆதாரங்கள் :

"… மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்

கருவிர லூகமும்கல்லிமிழ் கவணும்

பரிவுறு வெந்நெயும்பாகடு குநிசியும்,

காய்பொன் னுலையும் கல்லிடு கூடையும்

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும்

கவையும் கழுவும் புதையும் புழையும்

ஐயவித் துலாமும் கைபெய ருசியும்

சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்

எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும்

கோலும் குந்தமும் வேலும் பிறவும்...”

ஆதிகால காதை - மதுரைக் காண்டம்

—சிலப்பதிகாரம் (வரி 207- 217)

 


101 - மாற்றவர் மறப்படை மலைந்துமதில் பற்றின்

நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கியெறி பொறியுந்

தோற்றமுறு பேய்களிறு துற்றுபெரும் பாம்புங்

கூற்றமன கழுகுதொடர் குந்தமொடு கோண்மா.

102 - விற்பொறிகள் வெய்யவிடு குதிரைதொட ரயில்வாள்

கற்பொறிகள் பாவையனம் மாடமடு செந்தீக்

கொற்புனைசெய் கொள்ளிபெருங் கொக்கெழில்செய்கூகை

நற்றலைக டிருக்கும்வலி நெருக்குமர நிலையே.

103 - செம்புருகு வெங்களிக ளுமிழ்வதிரிந் தெங்கும்

வெம்புருகு வட்டுமிழ்வ வெந்நெய்முகந் துமிழ்வ

வம்புமிழ்வ வேலுமிழ்வ கல்லுமிழ்வ வாகித்

தம்புலங்க ளால்யவனர் தாட்படுத்த பொறியே.

104 - கரும்பொனியல் பன்றிகத நாகம்விடு சகடங்

குரங்குபொரு தகரினொடு கூர்ந்தரிவ நுண்ணூல்

பரந்தபசும் பொற்கொடிப தாகையொடு கொழிக்குந்

திருந்துமதி றெவ்வர்தலை பனிப்பத்திருந் தின்றே.

— — → (சீவக சிந்தாமணி - நாமகள் இலம்பகம் - 101- 104)

 


மதுரைக்கோட்டை மதில் மீது கீழ்வரும் போர்க்கருவிகள் & இயந்திரங்கள் இருந்தன:-

 

1)ஆண்டலையடுப்பு - கீழே உள்ள மூன்றும் இதனுள்தான் வைக்கப்பட்டிருக்கும்... இது ஆந்தையின் தலை போன்ற அமைப்புள்ள பாத்திரமாகும்.

main-qimg-d2f122eede5290c6a5126142c5cf0428.jpg

→ காய்பொன் உலை- உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு, செப்புக் குழம்பு

→ பாகடு குழிசி- சூடான தேன் கொண்ட பாத்திரம்.

→ பரிவுறு வெந்நெய்- சூடான எண்ணெய் கொண்ட பாத்திரம்.

→ காடி/ மிடா - கீழே உள்ளதைப் போன்ற ஓர் பெரிய அடுப்பில்தான் மேலேயுள்ள மூன்றும் காச்சப்படும்.

main-qimg-db9fe99f643ff516c603f42d67136d5d.jpg

 

2)விதப்பு- இதிலிருந்துதான் எதிரி மீது எண்ணெய் போன்றவை ஊறப்படும்.

main-qimg-af99b5b9adb9e110e9dc3d557d5d2f4e.jpg

 

3)கவண்/ இடங்கணிப்பொறி (இடம் + கணி + பொறி ) :

main-qimg-eddabc76bfca0fc105574ec755e092eb.jpg

 

4)கல்லிடுகூடை- எதிரிகள் மீது வீசுவதற்கு கோட்டை மதில் மேல் வைக்கப்பட்டிருக்கும் எறிகற்கள் கொண்ட கூடை.

  • உலக்கல் - எறிவதற்கு வைக்கப்பட்டிருக்கும் உருண்டு திரண்ட பெரிய கல்.

main-qimg-47aaada68ec03f2d87a7ef370ef6fa33.jpg

 

5)தூண்டில்/ பெருங்கொக்கு- கொக்கு போன்று இதன் நுனியில் ஒரு கொளுக்கி இருக்கும். இதன் மூலம் அகழியினுள் உள்ள எந்த பொருளையும் இலகுவாக வெளியில் தூக்கி வீசி விடலாம்.

main-qimg-6bc9e5085b29e17a6ca23211689359d0.jpg

"கிரேக்கர்களின் இது போன்று ஏதேனும் ஒன்று இருந்திருக்கலாம்"

 

6)தொடக்கு/ நூக்கியெறி பொறி - இதன் நுனியில் ஒரு கயிறு/ சங்கிலி இருக்கும்.இதன் மூலம் எதிரி வீரனின் கழுத்தினுட் செருகி அவனைப் பிடித்து கழுத்தில் பிடித்து தூக்கி கொன்று வீசி விடலாம்.

main-qimg-f87b842213e901c2cb45b9ef5fd019f2.jpg

 

7)கவை/ நெருக்குமர நிலை- மதில் மீது ஏறுவோரை மறித்துத் தள்ளும் ஆயுதமிது. மிக நீண்ட கைப்பிடி கொண்டது.

main-qimg-995cd0b7805cb9ef9526837e2d1ba7ed.jpg

 

8)புதை- அம்புக்கட்டு

main-qimg-4dd62390f3721be60efa332cc397d1e4.jpg

 

9)ஏப்புழை/ சூட்டிஞ்சி - சிறுசிறு துளைப் பொந்துகள் போலிருக்கும் இவற்றிலிருந்து எதிரி நோக்கி அம்பு எய்யப்படும்.

  • வில்லியர் மேல்நின்று மறைந்து அம் பெய்தற்குரிய புழைகளையுடையது எயில்

main-qimg-c82e763c1849d36bd530e0a3d5524e93.jpg

 

10)ஆரல்/ குருவித்தலை - மதிற்சுவரின் மேல் மறைப்பு

main-qimg-6a3ea3671b2addc96ebaac163e4a5929.jpg

 

11) ஞாயில்/ நாயில் - கோட்டை சுவரில் உள்ள குருவித்தலைகள். இங்கிருந்து எதிரி மீது தாக்குதல் தொடுப்பார்கள்.

  • இங்கு தெரியும் அந்த இரு குருவித்தலைகளுக்கு இடையில் உள்ள வெளி - குடிஞை/ஏவறை

main-qimg-35fd66ea6d05d3862e3544efbde31146.jpg

12)கைப்பெயர் ஊசி- எந்தப்பக்கம் குத்தினாலும் சங்குதான். கோட்டை மதிலின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அல்லது மதிலில் இருந்து எறியப்படும்…..ஒருவேளை எதிரிகள் மதில் மேல் எறி மதிலின் உச்சியைப்பிடிப்பவர் இதன் மேல் கை வைத்தால் இது அவர்களின் கையினைக் கிழித்துவிடும்.

main-qimg-23a64b3fcb55c127b9b468e625a70dad-c.jpg

13)சென்றெறி சிரல்/ கையம்பு - இது dart போன்ற கையால் எறியும் ஆயுதம்தான்.

main-qimg-0774777195aada16cab35d79e8ba5d57.jpg

14)பணை- பருமையான மூங்கில்

main-qimg-a2eb82de49ac4286a0dd100aeb5a80b6.jpg

15) சீப்பு - கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழ விடும் தாழ்மரம்

main-qimg-44139ea7cfa521b893a45f6a50358f80.jpg

16) கவர்தடி- இரு பக்கமும் கூரான எறிபடை… எறியவும் செய்யலாம்; குத்தவும் செய்யலாம்.

main-qimg-cbfc582e5815061f9a26808777f5ef2a.jpg

17)கழு/ கழுக்கோல்/ யானைத்தடை -கோட்டைக்கு முன்னால் எதிரிப் படைகளின் மதிற்போர்க்கருவிகள், போரானைகள் உள்நுழையாமல் இருக்க வைக்கப்பட்டிருக்கும்.

main-qimg-5f022a994ec0008511be26c470ac1ceb.jpg

main-qimg-7baa4301f6137cb754e4aab2020cdf91.jpg

18)எந்திரவில்/ வளைவிற்பொறி/ வேலுமிழ்ப் பொறி/ அம்புமிழ்ப் பொறி :

main-qimg-6022f88cdbf9cfb3cea282d875b1bee3.jpg

 

  • இதில் வைத்து எதிரி நோக்கி எய்யப்படும் எறிபடையின் பெயர் நாளிகம்
  • கீழ்க்கண்ட நாளிக இலைகள் (அலகு.. ஆய்தவியலில் பண்டைத்தமிழர் இதனை இலை என்றனர்) நீலகிரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டவை ஆகும்.

main-qimg-8ada615f8a11e71003a5b372ea941c7b.jpg

main-qimg-066dcbe8e74da0c596659c1a4cbc638e.jpg

main-qimg-48d04d725f55831bc8fea6f501f32a11.jpg

main-qimg-f98aa5353a32d1d21f5d3536d557ef1c.jpg

main-qimg-d622ca43c25f6a55439999a73e2b5f6c.jpg

main-qimg-d7eeeb5ce277a674171bf9986b5efc06.jpg

main-qimg-bb56fd407d7728ea5ead3b115373aa19.jpg

main-qimg-6ecd8a776e4b8bf79fc28fa8271a8ccd.jpg

அன்பார்ந்த மக்களே, மேலே உள்ளது போன்ற இலைகள் பண்டைய உரோமபுரிக்கு உட்பட்டிருந்த ஓர் போர்களத்தில் இருந்து கண்டெடுக்கபட்டுள்ளன.. மேற்கண்டவற்றை ஆங்கிலத்தில் cross iron bolts என்பார்கள்.

ஆக, தமிழ் நாட்டிலும் கண்டெடுக்கப்பட்டவையும் நாளிகக் இலைகளே என்ற முடிவுக்கு வருகிறேன்!

 

19)ஐயவித்துலாம் /ஐயவி/ நாஞ்சில்/ ஞாஞ்சில்- கோட்டை வாயிலையும் அகழி தொடக்கத்தையும் இணைக்கும் ஓர் தூக்கு பாலம்.

நா- துலை

main-qimg-6d0cdc38a9014b4631c8ea62fc999c2e-c.jpg

 

20)குடப்பாம்பு/ கத நாகம்- எதிரி வீரர்கள் மீது எறிய குடத்தினுள் வைக்கப்பட்டிருக்கும் பாம்புகள்.

21)பாவை- உண்மையான வீரர்கள் போன்று செய்யப்பட்ட பொம்மை பொய் வீரர்.

main-qimg-ff6a0be92e758a25a32e67653dd76d13.png

22)தீயம்பு

main-qimg-0ac347123aa503c762e336e42de819c4.jpg

 

23) வல்லயம் - கோட்டையின் மதிலில் இருந்துகொண்டு கீழே உள்ள வீரரை குத்த பயன்படும் ஈட்டி. முனையில் கூரிய இரும்புள்ள மிகவும் நீளமான கையிற்வைத்து எதிரியை குத்தும் ஒருவகை ஈட்டி ஆய்தம்.

main-qimg-a7024376d541111c467bcebbf6150cf5.png

24)தாமணி-பொருட்களைக்கட்டி வைக்க உதவும் கயிறு.

main-qimg-fbfae7970e0cc59c570f84c7e20918e3.jpg

25)நாராசம் -இது ஒரு இரும்பால் ஆன அம்பு.

  • சலாகை - இது ஒரு இரும்பால் ஆன சிறு அம்பு.

main-qimg-12b686381acb00c1eb32cb63d3ad6cb9.png

 

26)கழுகு -போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்ல கழுகளும் பயன்படுத்தப்பட்டன.

main-qimg-a32251593f72c04686b70204fb883d30.jpg

 

27)மிளை/ காவற்காடு/ கணையம் - கோட்டை அகழிக்கு முன்னுள்ள செயற்கைக் காடு.

இங்கு தோட்டி எனப்படும் இரும்பு முட்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும். காவல்காட்டினுள் வேலியாக நொச்சிமரங்களும் முள்வேலிகளும் அமைந்திருந்தன. இதனை வாழ்முள்வேலி,இடுமுள்வேலி எனப் பகுத்து காட்டரணைப் பலப்படுத்தியுள்ளனர்.

  • வாழ்முள்வேலி - என்பது முள் செடிகளையும் மரங்களையும் வளர்த்து அவற்றால் ஆக்கிய வேலியைக் குறிப்பது. இத்தகைய வாழ்முள்வேலியைப் பெரும்பாணாற்றுப்படையின் (பா.வரி.125-126) புலப்படுத்துகிறது.
  • இடுமுள்வேலி - முள்ளை வெட்டிக்கொண்டு வந்து பிற இடத்தில் இடப்படும் வேலி எனப்படும்.

காட்டரணை முற்றுகையிடும் பகைவர்களின் உயிரைக் கவரும் வகையில் பல நிறம் கொண்ட தவளை, பூராண், நண்டு, கம்பளிப்புழு, பல்லி, பூதிப்புழு, கவுதாரி ஆகியவற்றுடன் கீழாநெல்லியின் பட்டை, இலை, மலர், கனி, வேர், தண்ணீர்முட்டான் கிழங்கு, சேங்கொட்டை மரம், எருமையாட்டம் கொடிகளின் சாற்றுடன் சோர்த்துப் புகையை உருவாக்கினால் அப்புகை பகைவர்களின் திறனை அழித்து அவர்களின் கண்களைக் குரடாக்குவதுடன் பகைவர்களைக் கொல்லும் திறன் உள்ளது.—(அ.மாணிக்கம் -அர்த்த சாஸ்திரம் பொருள் நூல் - ப-777)

main-qimg-956e352f1911f0a3f2dbfe0e72363dfb.jpg

 

28)அகழி/ உடுவை/ கயம்/ காடி/ ஓடை/ நீரரண் - (moat) கோட்டையைச் சுற்றியுள்ள நீரரண்.

  1. Ditch - கிடங்கு/ உடு
  2. கிடங்கில் - கிடங்கால் காக்கப்பட்ட இடம்

எதிரிகள் அகழியில் உள்ள நீரை அருந்தும் பொழுது அவர்களை அழிக்கும் வகையில் அவர்கள் அறியாவண்ணம் சேங்கொட்டை, அரங்கன்,நாயுருவி,மருதமரம் ஆகியவற்றின் மலர்களுடன் ஏலமரம், தானிமரம், குங்கிலியம், ஆலாலம் ஆகியவற்றின் சாறும் செம்மறியாட்டின் குருதியுடன் மக்களின் குருதியையும் சேர்த்து நன்கு அரைத்து அதனைப் பிண்ணாக்குடன் நீரில் கலந்து விட்டால் இந்நிரை அருந்துபவனும் தொடுபவனும் உடனே இறந்துவிடுவான். மேலும் கிடங்கினுள் உடைந்த கண்ணாடிக் குவளைகளும் இருந்தன.- அ.மாணிக்கம் - அர்த்தசாஸ்திரப் பொருள் நூல் -ப-778

main-qimg-6d9c4363836a091c588316ff8ac1e7a3.png

 

29)செய்கொள்ளி - நெருப்பு வைக்கப்பயன்படும் கொள்ளி. இதன் மூலம் தரையில் இருந்தபடி அடட்டாலைகளையோ இல்லை கோட்டை மதிலில் இருந்தபடி படையெடுத்து வந்த வீரர்களையோ கொழுத்தலாம்.

main-qimg-6888686347178f9ea944cf8efee39663.jpg

 

30)பரிசை/ தட்டி - இடைவெளி இல்லாமல் வைரம் ஏறிய மரங்களால் அமைக்கப்பட்டு கோட்டை மதிலில் வைக்கப்பட்டிருக்கும். பகைவர் எய்யும் அம்புகளை இது தாங்கும்.

main-qimg-7654992dd190e93d3fe9a04e825550c1.jpg

 

31)கோண்மா - புலி , சிங்கம் முதலிய கொடிய வன விலங்குகள் கோட்டை மதிலில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. மதிலை தொடுவோரை இவை கவனித்துக்கொள்ளும்.

32)சுண்டுவில்

main-qimg-23672b19248d5ba78153ac74eaba39df.jpg

 

33)கூர்ந்தரி நுண்ணூல்- தொட்ட கையை அறுக்கும் நுண்ணூல்= மாஞ்சா நூல்

main-qimg-0ea2cd9bd2ff7c76268321b995608dd7.jpg

 

34)கற்பொறி - அவிழ்த்துவிட்டால் கீழே வந்து வீழ்ந்து எதிரியைத் தாக்கும்.. மீண்டும் இதனை சுழற்றி எடுத்துப் பயன்படுத்தலாம்.

main-qimg-e0bb3c93688e097039a5d24c7cd836eb.png

 

35) அடிப்பனை- கோட்டை மதிலில் இருந்து எதிரிகள் மீது இதனை எறிவார்கள்.

main-qimg-b61a46061232f71ac46b7e724834abab.jpg

 

36)விடு சகடம்- உருட்டி விடப் படும் தீச்சக்கரம்

  • விடு - விடுதல்

main-qimg-fe647ea5001f0309165c1fdce0092f90.png

 

37)முட்செடி- இக்கொடி கோட்டை மதில் மீது படரவிடப்பட்டிருக்கும்.

main-qimg-46a46431332480408191c035cb3b96e9.jpg

 

38)நச்சுக்கொடி- இக்கொடி கோட்டை மதில் மீது படரவிடப்பட்டிருக்கும்.

main-qimg-4c1b9c361e4070144d4f7dc8b84ba6c3.jpg

 

39)மதிலுண் மேடை/ அகப்பா/ பரிகை - கோட்டை மதிலில் நடக்கும்படி ஏற்படுத்தப்பட்ட மேடு.. இங்கு நிண்டபடி எதிரி மீது போர்புரிவார்கள்

main-qimg-48ae0357c31287c28df0e6e38378f0b0.jpg

 

40)நூற்றுவரைக் கொல்லி - ஒரே நேரத்தில் பல பேரை கைலாயம் காண வைக்கலாம்.

main-qimg-1132cebc56a4b8e0e8942935cca36a07.jpg

 

41)நிலவரண்

காட்டரணையும் நீரரணையும் கடந்து வெற்றி பெற்ற மன்னர்கள் அதனை அடுத்து தண்டை நிலப்பகுதியில் அமைந்துள்;ள நிலவரணை முற்றுகையிடுகின்றான். “நிலவரண் இருநிலைகளில் அமைந்திருக்கும். பகைவர்கள் புறமதிலைப் பற்றாமை பொருட்டு அதன் புறத்தேயுள்;ள வெள்ளிடை நிலமும் பகைவர் முற்றுகை நீடித்திருக்கும் போது அகத்தாருக்கு வேண்டும் உணவுப்பொருள்களைப் பயிர் செய்யும் வகையில் மதிலின் உட்புறமாக விடப்படும் தண்டை நிலம் நிலவரணாகும் எனத் தேவநேயப்பாவாணர்( தேவநேயன்- பழந்தமிழாட்சி-பக்-64) நிலவரணிற்கு விளக்கம் கூறியுள்ளார்.

அகழிக்கும் மதிலுக்கும் இடைப்பட்ட இடமான புறநகரினை நிலவரண் என்பர். இங்கு காவல் வீரர்கள் தம் பாசறையை அமைத்துக் காவல் காட்டினையும் அகழியையும் அழித்துக்கொண்டு வரும் பகைவர்களின் படைகளை எதிர்த்துத் தடுத்து நிறுத்துவர். கோட்டைக்குள் வசிக்கும் மக்கள் தத்தம் வீடுகளில் பயன்படுத்தி வெளியேற்றும் கழிவுநீரும், மழைக்காலத்தில் கோட்டையில் இருந்து வெளியேறும் நீரும் அகழியைச் சென்று அடைவதற்கு முன்பாக இந்நிலவரணைக் கடந்து செல்கிறது. கோட்டைக்குள் வசிக்கும் மக்கள் இந்நீரை பயிர்செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்வர். இதனால் பகைவர்களின் நீண்ட நாள் முற்றுகையைச் சமாளிக்க இயலும். இத்தகைய சிறப்பிற்குரிய இவ்வரணைப் பாதுகாக்காவிடில் மக்கள் முற்றுகைக்காலங்களில் துயர்பட நேரிடும். இதனைப் புறநானூற்றுப்பாடல் (பா.எ.44) படம்பிடித்துக்காட்டியுள்ளது.

 

42)முடக்கறை- உட்பகுதியில் வாயிலுக்கு மேலுள்ள அம்பு வரும் துளைகள் .

main-qimg-a328f5730daed8cd0e7c31b7d9824324.jpg

 

43)அட்டாணி - கோட்டை மதில் மேல் உள்ள மண்டபம்

44)நீர்வாளி- ஏற்பட்ட நெருப்பினை அணைக்க உதவும் நீர் கொண்ட வாளி.

main-qimg-f0424225a80241962a19dc9d2d5bce44.jpg

45) அட்டாலகம் / அட்டாலை/ மேவறை - கோட்டை மதிலுக்கு மேலே ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் காவலரண். உள்ளே இருப்பவருக்கு வெளியே உள்ளவர்கள் தெரியக்கூடியவகையிலும் சிறு துளைகள் கொண்டு இருக்கும் போர்க் காலங்களில் இதன்மூலம் ஈட்டி, வில்லம்பு கொண்டு வெளியே உள்ளவர்களை தாக்க வசதியாக இருக்கும். வெளியில் இருப்பவர்களுக்கு உள்ளே இருப்பவர்களைக் காண இயலாது என்ன செய்கிறார்கள் என்றும் அறிய இயலாது.

main-qimg-c7cc16fdb6a1237798505818bbf9ed00.jpg

 

46)வாயில் / கௌனி/ ஆத்தானம்/ அரிகூடம்/ கோட்டி- இது கோட்டைக்கான போக்குவரத்து வாசல்.

  • ஒலிமுகவாயில்/ ஆசாரவாயில்/ தலைவாயில் - கோட்டையின் முக்கிய வாயில்.
    • நகரவாயிற்றிணையின் பெயர்- அளிந்தம்
    • நகரவாயிற் படிச்சுறுள்- அத்திகை
    • கவாடம் - கதவு

main-qimg-39919fbbe137236d7c235c08f3729171.jpg

 

47)சுருங்கை/ கற்புழை/ மூடுவழி- கோட்டையிலிருந்து வெளியேறும் இரகசிய வழி.

main-qimg-c2dba366caf25325286968fd9b506921.jpg

 

48)சிகரி / துருக்கம்/ துருவம்/ அருப்பம்/ அழுவம் - மலைமேலுள்ள கோட்டை.

main-qimg-5003fbbe77a197cf87de2693fff23c75.jpg

 

49) கணையமரம் /துஞ்சுமரம் - மதிற்கதவுக்கு வலிமையாக உள்வாயிற்படியில் குறுக்கேயிடும் மரம்.

main-qimg-5ce09cd80615cfb87e91c3bc02c48b06.jpg

 

50) புழை - புழை என்பது ஒரு கோட்டைக்கு பாதுகாப்பான, கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு வழியாகும். இது முக்கிய நுழைவுவாயிலில் இருந்து வேறு ஒரு இடத்தில் இருக்கும்.

main-qimg-6664128e944b6e4e2962bafaf380cb80.png

 

51) எழு - மதிலின் உள்வாயிற் புறத்தே நிலத்தில் இருந்து கஓட்டைக் கதவின் நடுப்பகுதிவரை உயர்ந்து எழுந்து நிற்கும் வலுவான மரம்.

main-qimg-fb538db41c1f827004357991c5fb49ac.png

 

52)சாலம்- தொடக்ககாலத்தில் கோட்டைகளை வெறுங்கல்லால் அன்றி, மரமுஞ் சேர்ந்தே கட்டினர்.

main-qimg-4499c181ec660c36d943109f1134e974.jpg

 

53) அரணி/ கடகம்/ பீலி/ புறம்/ வாடம்/ வேதி / அல்/ ஓதை/ நொச்சி/ வரைப்பு/ ஆரை/ உல்லி/ ஆர்மை/ பரிகம்/ புரிசை/ தொடை, தகைப்பு, வரணம், வேணகை, மதிற்சுற்று - மதில்(wall)

  • கடிமதில் - காவல் மிகுந்திருந்த மதில்
  • இறைப்புரிசை, நெடுமதில் - மிகவும் உயர்ந்த மதில்
  • பதணம் - Rampart
  • குமரி மதில்- அழியா மதில்

மதிலரண் வகைகள்-

மதிலரண் மதில், எயில், இஞ்சி, சோ என நால்வகைப்படும்.

  • உயரமொன்றேயுடையது மதில்/ அகமதில்
  • உயரத்தொடு அகலமுமுடையது எயில்
  • அவற்றொடு திண்மையு முடையது இஞ்சி/ புறமதில் . புறமதிலில்தான் மேற்கூறிய பலவகைப் பொறிகள் அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் செம்பு புனைந்தியற்றியதாகவும் சிறுபான்மை அரைத்த சாந்திட்டமைத்ததாகவும் பகைவரால் எளிதில் தாக்க முடியாதவாறு திண்ணிதாகக் கட்டப்பட்ட மதில் ஏனை வகை மதில்களிலும் மிக இறுகியிருத்தல் பற்றி இஞ்சி எனப்பட்டது.
  • அம் மூன்றொடு அருமையுமுடையது சோ
  • இடைமதில் - Curtain wall
  1. வண்சிறை- zwinger

ஒவ்வொரு மதிலுக்கும் காவலரும், மதில நாயன் என்னும் காவல் தலைவனும் இருப்பர்.

  • கோட்டைக்குள் நகர்- அகநகர்
  • மதிலுக்குள் உள்ள நிலம்- காப்பு
  • கற்பா, கற்பு - உண்மதிலின் வாரியுள் உயர்ந்தநிலம்
  • உவளகம்- கோட்டையின் உட்பக்கம்.
  • செப்புப்புரிசையிருந்த நகர் துவரையெனப் பெயர்பெற்றது
  • கோசம் - கோட்டை மதிலில் நன்கு உறையிடப்பட்ட இடம்.. விதப்பாக என்னவென்று தெரியவில்லை!
  • அரசர் வீதி- பூரியம்
  • அரசிருக்கை- அரியாசனம், அத்தாணி, வேந்தவை
  • அரசரில்லம்- சாலை, மாளிகை, குலம், அரண்மனை, பவனம், கோவில்.
  • ஓதை/ ஆள்வாரி நிலம்- மதிலைக் காப்பாற்றும் படையினருக்கு மதிலையொட்டினாற் போல் உதவுஞ் சாலை இதுவாகும். (paved passage along the walls within a fortification)
  • பெருகாரம்- இது கோட்டையினுள்ளே சுற்றிவரும் பெரியபாதை.
  • பதப்பாடு - வீரர்களீற்கு தேவையா உணவுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பகுதி

main-qimg-84091118e494109819308f362fc089af.jpg

 

54)எதிர்க்கொத்தளம் - கோட்டையரணுக்கு பாதுக்காப்பாக வெளியே கட்டப்பட்டிருக்கும் மற்றோர் கொத்தளம்.

main-qimg-5f14903df4f859c742e2e061834710a9.jpg

 

55) கொத்தளம்/ தோணி/ கொம்மை - கொத்தளம் என்பது, கோட்டை மதில்களில் இருந்து வெளித் துருந்திக் கொண்டிருக்கும் ஓர் அமைப்பு ஆகும்.

main-qimg-34c90c2699367d73c559b6c898fdcc33.png

main-qimg-fe397753b9b3399872f2afdff00cba41.jpg

 

56)கருவிரலூகம்/ குரங்கு- கோடை மதிலில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் . பெரும்பாலும் தாட்டான் வகை குரங்குளே அங்கு கட்டி வைக்கப்பட்டிருக்கும். இவை மேலே வரும் எதிரியினைக் கடித்துக் குதறும்.

main-qimg-6924154ba3ab037e516289fbd94ebcdd.jpg

 

57) முதலை, காராம், விடங்கர்- இவை எல்லாம் அகழிக்குள் இருந்தன.

  • இலக்கிய ஆதாரம் :-

''யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி,
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர்,''

-புறநானூறு - 37. புறவும் போரும்!

( புலன கிட்டிப்பு(credit): User-10516302009741184618)

main-qimg-128fc43afeb4d37d5fe378e47fca2d08.jpg

 

58)கோட்டைப்படி- சோபானம்

main-qimg-f27a1d8dc8bedd043e634c880598b886.jpg

 

59)கரும்பொன்னியல் பன்றி: - இரும்பு நிறம் கொண்ட பன்றி- காட்டுப்பன்றி.

இவற்றினை கோட்டைக் கொத்தளங்களில் கட்டி வைத்திருப்பதால் இவை எழுப்பும் ஒலியினைக் கேட்டு எதிரியின் யானைப் படை திணறி ஓடும்.. மேலும் இவற்றிற்கு மேலே எண்ணெய் பூசி நெருப்பினை வைத்து எதிரியினை நோக்கி ஓட விடுவதால் அவை எதிரியினைக் குழப்புவதோடு மட்டுமல்லாமல் அவனின் யானைப்படையினை மிரள வைக்கும். இவ்வாறு பல போர்கள் வரலாற்றில் நடைபெற்றுள்ளன.

main-qimg-e3c59d13511d55f28f76d28f3697fa29.jpg

 

60)தோற்றமுறு பேய்களிறு - அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட யானை -

இவ்யானைகளானது மதிலின் பின் புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இவை மதிலை கடந்து வருபவர்களை சிதறடிக்கும்.

main-qimg-71a50dbba44c78128b221b7df7bb51f1.webp

main-qimg-bf02b3462136b075c665fd782697a09d.png

 

61)நரலை- ஒலியெழுப்பும் ஓர் மதிலுறுப்பு. ஆனால் என்னவென்று தெரியவில்லை

62)துற்றுபெரும் பாம்பு - மலைப்பாம்பு

இது எதிரிகளை அச்சமுறுத்தவும் சில வேளைகளில் அவர்களை விழுங்கவும் செய்திருக்கும்.

63)பொருதகரி-

64)எழில்செய் கூகை-

65)வெய்யவிடு குதிரை

66)பொற்கொடி - Flags

67)பதாகை - Banners

68) அலங்கம்/அலங்கன் - Bartizan

main-qimg-b2e390bd42b7c4e44ca34849cafb5897.png

 

69)வகுமுகம் - ஒரு அட்டாலகத்தின் மேற்பக்கம் மூடி அதற்கு பல முகங்கள்(வெளிப் பார்க்கக்கூடிய துளைகள்) இருந்தால் அது வகுமுகம் எனப்படும்(வகுக்கப்பட்ட முகங்கள்)

 


  • மேலும் பார்க்:-

கோட்டைக்கு வெளியே களமுனையில் நடைபெற்ற போரின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்

 



  • குறிப்பு:

இவை மென்மேலும் தமிழ் ஆராச்சியாளர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இதிலுள்ள தகவல் செம்மைப்படுத்தப்பட்டு சரிதவறுகள் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டும். 

 


 

உசாத்துணைகள்:

படிமப்புரவு

 

தொகுப்பு & வெளியீடு :

நன்னிச் சோழன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

படிமங்கள் ஐரோப்பியப் போர்ச்சூழலில் இருப்பதால் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படக்கூடும். எமது சூழலில் அவ்வாயுதம் இருந்தும் அது பற்றிய படிமம் எம்மிடம் இல்லத சமயத்தில், பிறநாட்டிடம் அவ்வாயுதம் பற்றிய படிமம் இருந்தமையால் யாமதையெடுத்து இங்கு விளக்கத்திற்காக கொடுத்துள்ளோம்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.