Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழத்தில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்களினுள் இருந்த கல்லறைகளின் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்கள் பற்றியே. இந்த துயிலுமில்லங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன என்று முதலில் பார்ப்போம்.

main-qimg-61c9fc2a3aaf917ca5cdcacb6a8aa1f5.jpg

'தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இருப்பிடங்களை காட்டும் படம் | படிமப்புரவு: fb'

main-qimg-f6926747938666913c834e99d562b567.png

 

 


மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்களின் பெயர் விரிப்பு:-

முல்லைத்தீவு நித்திகைக்குளம் காட்டுப்பகுதி - (முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று தலைவர் மாமா முதன்மைச் சுடரை ஏற்றி அக வணக்கம் செலுத்திய இடம்)

  • அம்பாறை மாவட்டம்

உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

  • மட்டக்களப்பு மாவட்டம்

தரவை மாவீரர் துயிலுமில்லம்.

தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்.

கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்.

மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம்.

  • திருகோணமலை மாவட்டம்

ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம்.

வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம்.

உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்.

  • மன்னார் மாவட்டம்

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்.

முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம்

பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்.

  • வவுனியா மாவட்டம்

ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

  • கிளிநொச்சி மாவட்டம்

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்.

முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்.

  • யாழ்ப்பாண மாவட்டம்

சாட்டி மாவீரர் துயிலுமில்லம்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் (தமிழீழத் தேசத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லம்)

எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம்  

உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம்

  • முல்லைத்தீவு மாவட்டம்

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்

அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்

தேராவில் மாவீரர் துயிலுமில்லம்

ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

களிக்காடு மாவீரர் துயிலுமில்லம்

மணலாறு ஜீவன்முகாம் எ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்

மணலாறு டடிமுகாம் எ புனிதபூமி எ கோடாலிக்கல் மாவீரர் துயிலுமில்லம்

 

 


இந்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப வடிவத்தாலும் தோற்றத்தாலும் நிறத்தாலும் மாறுபட்டன. இவையெல்லாம் அந்தந்த கோட்ட மாவீரர் பணிமனை பொறுப்பாளரால் மேற்பார்வையிடப்பட்டன. அவரின் உத்தரவின் பேரில்தான் இவையாவும் வடிவமைக்கப்படுவதுண்டு; இதுவே வழக்கம். இப்படி ஒரு மாவீரர் துயிலுமில்லம் தோன்றுவதை புலிகள் 'முகையவிழ்த்தல்' என்று குறிப்பிடுவார்கள். நானும் அதையேதான் இவ்வாவணத்திலும் கையாண்டுள்ளேன்.

இவ்வொவ்வொரு கல்லறைகளினதும் குறிப்புகள் தாங்கிய அந்த அதன்(விதப்பான பெயர் தெரியவில்லை.. கட்டடக் கலையில் அவ்வளவு அறிவில்லை) பின்பக்கத்தின் மேற்புறத்தில் எண்கள் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டிருக்கும் . இது அந்தத்தக் கல்லறைகளின் எண்ணாகும். இதை வைத்து கல்லறைகளை இலகுவாக அடையாளம் காண முடியும்.

அடுத்து, கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்களைப் பற்றி பார்க்கப்போவதோடு தென் தமிழீழ மாவீரர் துயிலுமில்ல வாயில்களையும் தோற்றங்களையும் உங்களிற்கு காட்டுகிறேன்.

வாருங்கள் தகவலிற்குள் தாவுவோம்….

 


  • 1983 - 20 பெப்ரவரி 2009 வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = அண்ணளவாக 24,000 (தவிபு அலுவல்சார் எண்ணிக்கை)
  • 1982 - 2009 மே 18 நள்ளிரவு வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை 25,500 - 26,500

தன்னிலாபத்திற்காக மாவீரர்கள் எண்ணிக்கை 50,000+ என்று கூவித்திரிவோரை நம்பவேண்டாம். சிங்களத்தின் இறுதிப் போர் பற்றிய ஒருதலைப் பக்கமான அறிக்கையிலும் 27,000+ என்றுதான் உள்ளதை என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்(Humanitarian operation analysis)


 

1) கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம்

  • இருந்தவிடம்: இது கொடிகாமம்-பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்தது.
  • முகையவிழ்த்தது: ஏப்ரல் 7, 1991
  • முதல் வித்து: வீரவேங்கை மைக்கேல்

main-qimg-ecc4a10fca1e73e62c43a08a144e6b42.jpg

1995 ஆம் ஆண்டு சிங்களத்தால் அழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்:-

main-qimg-699288593b614a19ff964152714a185e.png

2002 இற்குப் பின்னரான ஒலிமுகம்:

மாவீரர் துயிலும் இல்லம் - கொடிகாமம் 2.jpg

 

2) எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

  • முகையவிழ்த்தது: 1990
  • இடிக்கப்பட்டது: 1995
  • புனரமைக்கப்பட்டது: 2002
  • முதல் வித்தும் விதைக்கப்பட்டதும்: லெப். செல்வம் சூன் 16, 1991
  • 2002 வரையிலான மொத்த
    • கல்லறைகள் - 290
    • நினைவுக்கற்கள் - 490
    • தியாகசீலம் - 24

main-qimg-73f2249dea8f84fedefdf27a2e54401e.jpg

main-qimg-34813fce17d2ab167197947e6d259505.png

'அதன் சுற்றுச்சுவர்'

2002 இலிருந்து இடித்தழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்:

321197_131744680266914_1932014995_n.jpg

 

3) கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்

இங்குதான் முதன் முதலில் மாவீரர் ஒருவர் விதைக்கப்பட்டார்.

  • இருந்தவிடம்: இராசவீதி, கோப்பாய்
  • முகையவிழ்த்தது: சூலை 14, 1991
  • முதல் வித்து: கப்டன் சோலை
  • மொத்த பரப்பளவு: 12 ஏக்கர்
  • 2002 வரையிலான மொத்த
    • கல்லறைகள் - 654
    • நினைவுக்கற்கள் - 1199

main-qimg-4edffae6d51402d8a7dd3bc9f4100645.png

main-qimg-140abbc50e2637d5b374bbced3642d95.png

2002 இலிருந்து இடித்தழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்:

noi.jpg

1991 இலிருந்து 1996 இடித்தழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்,  கல்லறைகள் & நினைவுக்கற்கள்:

1994 jaffna.jpg

jaffna 1995.png

kopay 1994.jpg

 

4) முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்

  • முகையவிழ்த்தது: சூலை 28, 1991
  • முதல் வித்து: 2ஆம் லெப். சிகானு (ஆ.க.வெ இல்)
  • மொத்த பரப்பளவு: 15 ஏக்கர்
  • இருந்தவிடம்: கிளிநொச்சியில் இருந்து 51 கி.மீ இலும் மன்னாரில் இருந்து 70கி.மீ தொலைவிலும் உள்ளது.
  • 2002 வரையிலான மொத்த
    • கல்லறைகள் - 603
    • நினைவுக்கற்கள் - 348

main-qimg-50b6db929190eed94d9b2a80882e25ba.png

main-qimg-6a75aa10db4b4c1274e9ca22ea04256e.png

'பின்னால் மங்கலாக ஒலிமுகமும் தெரிகிறது'

 

5)ஆங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

  • முகையவிழ்த்தது: சூலை 18, 1998
  • முதல் வித்து: வீர. புரட்சிகா
  • மொத்த பரப்பளவு: 10 ஏக்கர்
  • 2002 வரையிலான மொத்த
    • கல்லறைகள் - 533
    • நினைவுக்கற்கள் - 126

main-qimg-5cb1bff6ed570fcc68da7e748d55677a.png

main-qimg-4907a8a27d7c010749fc37c0d6605ef7.png

'ஆலங்குளத்தில் பொதுச்சுடர் ஏற்றுமிடம்'

main-qimg-1ea8f41bf4235465e8ad511c7c8241a3.png

'ஆலங்குளம் ஒலிமுகம்'

 

6)கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்

  • முதல் வித்து: லெப். பரமசிவம்
  • இருந்தவிடம்: மட்டு-திருமலை வீதியில் வாகரைக்கும் கதிரவெளிக்கும் இடையில்
  • 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 279

main-qimg-fc2e7deb6dd31ba3651aa9a7282e2108.png

main-qimg-37db32b22c4f7a75b6314bfb20175bdb.png

'ஒலிமுகம்'

 

7)தரவை மாவீரர் துயிலுமில்லம்

  • முகையவிழ்த்தது: பெப்ரவரி 25, 1991
  • முதல் வித்து: லெப். விகடன்
    • (கண்டலடி-கட்டுமுறிவு நோக்கிய சிங்களத்தின் முன்னேற்றத்திற்கு எதிரான எறிகணை வீச்சில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். அவர்களில் முன்னவர் இவரே.)
  • 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 2500+

large.large.main-qimg-0ff23882868fb3c1a9

main-qimg-1ac011c17bb39bdca37d0ce65fb3546e.png

main-qimg-173b832fef090083092491f42ba63616.png

'தரவையில் பொதுச்சுடர் ஏற்றுமிடம் | 180 பாகைக் காட்சி'

main-qimg-26839e2e9adde2c4ba3ef2aa3b4a2335.png

'தரவை ஒலிமுகமும் உள்வீதியும் '

 

8)மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம்

main-qimg-d338adb0ded14d1b3b343d7d7c5a115b.png

 

9)தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்

  • முதல் வித்து: (நிலை அறியில்லை) சுதா
  • 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 487

கல்லறைகள் கட்டும் முன்:-

main-qimg-14fbcbfb8303b7e7224837856d2a14c0.png

கல்லறைகள் கட்டிய பின்:-

main-qimg-f5fddf3ee99b7a7ee6604a0264208b77.png

 

ste 3.jpg

'ஒலிமுகம்'

 

10)ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

  • முகையவிழ்த்தது: சனவரி 19, 1991
  • முதல் வித்து: லெப். நிக்ஸன் & லெப். லவன்
  • மொத்த பரப்பளவு: 5 ஏக்கர்
  • 2002 வரையிலான மொத்த
    • கல்லறைகள் - 391
    • நினைவுக்கற்கள் - 385

main-qimg-d6d84d93444a438aa2c71fb1d132c7f0.png

ஒலிமுகம்:

m-thugi-.jpg

 

11)வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

  • முதல் வித்து: வீர. வாசுகி

main-qimg-5f9a408e17223d3631f94fe6b5c70fd1.png


12)மன்னார் ஆட்காட்டிவெளி துயிலுமில்லம்

mannaar aatkaatti veli.jpg

 

13)மன்னாரில் இருந்த ஏனைய இரு துயிலுமில்லங்களில் ஒன்று

எதுவெனத் தெரியவில்லை!

main-qimg-1fd076a2b1a9fe493b5dc62be01afe4a.png

 

14)கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

  • 2004 வரையிலான மொத்த
    • கல்லறைகள் - 1,213
    • நினைவுக்கற்கள் - 755

large.8-1.jpg.1af7ba21604b6a5c9032f7f693bc98c9.jpg

'இங்கு இரு விதத் தோற்றங் கொண்ட நினைவுக்கற்கள் இருந்தன.'

main-qimg-e42af7716307932330dd8d8f4f20122d.png

'இங்கு மூ விதத் தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.'

நான் மேலே கொடுத்துள்ள படிமங்களில், இடது பக்கம் இருக்கின்ற கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியனவே வலது பக்கம் இருக்கின்ற இரு கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களாக மேம்படுத்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆயினும் இது என்னுடைய கருதுகோளே அன்றி அறுதிப்படுத்தப்பட்டதன்று.

ஒலிமுகம் (பழையது):

5.jpg

10.jpg

ஒலிமுகம் (புதியது):

எப்போது பழையதை இடித்துவிட்டு புதியதை கட்டினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், தமிழீழ தேசியப் பதக்கம் பெற்ற ஓவியர் புகழேந்தி அவர்கள் நிற்பதை வைத்து (அவர் வந்து சென்ற காலத்தை வைத்துப் பார்த்தால்) இது 2005இற்குப் பின்னரே இடித்துப் புதுப்பிக்கப்பட்டுள்ளதை அறியலாம்.

10710659_1633355693558352_1924458378556678989_n.jpg

 

15)முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்

2004 ஆம் ஆண்டில் இது தான் இரண்டாவது மிகப்பெரிய துயிலுமில்லமாகும்.

  • 2004 வரையிலான மொத்த
    • கல்லறைகள் - 1,670
    • நினைவுக்கற்கள் -905

main-qimg-ec202f8d86da78c253c42f7872b8726e.png

'இங்கு இரு விதத் தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.'

m20.jpg

'ஒலிமுகம்'

2004 இற்குப் பின்னரான ஒலிமுகம்:

large.mulliyavalaiolimukam.jpg.b593b77dc

 

16)அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்

இங்கு மூன்று வித தோற்றங்கொண்ட கல்லறைகள் இருந்தன. அறியில்லா குறிப்பிட்ட ஆண்டு வரை இங்கிருந்த மொத்த,

  • கல்லறைகள் - 74
  • நினைவுக்கற்கள் - 73

main-qimg-280355dd0b3b7ae5d8ca7858f93c73cd.jpg

alampil maaveerar thuyilumillam (3).jpg

நினைவுக்கல்:

alampil maaveerar thuyilumillam (1).jpg

 

17) உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்

இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே!

விதம் 1:

main-qimg-8889a08ff966dea3d9bdc6a074a917be.png

விதம் 2:

maaveerar thuyilum illam (5).jpg

 

18) புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம்

இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே. அக்கல்லறைகள் இரண்டு விதத்தில் இருந்தன.

விதம் 1:

9SaysWaxCHwaurQ0XuPP.jpg

விதம் 2:

இவ்விதம் தான் முதன்முதலில் கட்டப்பட்டது ஆகும்.

koodaalikkal.jpg

பொதுச்சுடர் மேடை:

co2CGlXqdiq1gskXlSTR.jpg

 

19) தேராவில் மாவீரர் துயிலுமில்லம்

இங்கு ஒரு விதமான கல்லறையும் ஒரு விதமான நினைவுக்கல்லுமே இருந்தது.

இது விசுவமடுவில் அமைந்திருந்தது.

main-qimg-91d6759cd3424946570989a74406642f.png

ஒலிமுகம்:

Family members and Tamil rebels pay last respects to Eliyathambi Kathrchewan, a Tamil Tiger rebel known as Lt. Col Arjunan, april 20,2007.jpg

"வித்துடல்: லெப். கேணல் அர்ச்சுனனினது ஆகும்"

 

20) சாட்டி மாவீரர் துயிலுமில்லம்

  • 2002 வரையிலான மொத்தக் கல்லறைகள்: 4
  • 2002 வரையிலான மொத்த நினைவுக்கற்கள்: 150

saatti.jpglarge.velanaisaatti.jpg.7dc29665c2a30b0c

'சாட்டி ஒலிமுகம்'

 

saatti ninaivukakrkal.jpg

'நினைவுக்கற்கள்'

 

21) உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம்

இங்கிருந்த கல்லறைகளும் நினைவுக்கற்களும் (தனியான படிமம் சேர்த்துள்ளேன்) தரவை மாவீரர் துயிலுமில்லததில் இருந்தவற்றைப் போன்றே இருந்துள்ளன என்பதை கீழக்கண்ட படிமத்தில் புலப்படுபவற்றை வைத்து அடையாளம் காணக்கூடியவாறு உள்ளது.

அம்பாறை உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம் (2).jpg

ஒலிமுகம்:

311021_131032807004768_660096942_n.jpg

 

22)  ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

இங்கு ஒரு விதமான நினைவுக்கல்லும் அறியில்லா வடிவிலான கல்லறையும் இருந்தது. இதுவரையிலும் கிடைத்த படிமம் கல்லறை கல்லால் கட்டப்படும் முன் எடுக்கப்பட்டதாக உள்ளதால கல்லறையின் வடிவத்தை அறியமுடியவில்லை.

இது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் கோட்டத்தில் இருந்த ஆலங்குளம் என்ற ஊரில் அமைந்திருந்தது. இதை தலைநகரின் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்

கல்லறைகள்:

Maaveerar Day in Tunukkai, 2002.jpeg

நினைவுக்கற்கள்:

Tunukkai Tuilum Illam, 2002.jpeg

 

23)உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்

இங்கு ஒரு விதமான நினைவுக்கல்லும் ஒரு கல்லறையும் இருந்தது. 

இதனது ஒலிமுக வடிவம் எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தினதைப் போலவே கட்டப்பட்டிருந்தது, ஆனால் மஞ்சள் நிறத்தில் (கனகபுரத்தினதை ஒத்த நிறம்) .

கல்லறை & நினைவுக்கல்:

Uduthurai Tuilum Illam, 2005.jpeg

 


ஏனைய 5 துயிலுமில்லங்கள் பற்றி என்னிடம் தகவல் இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்டவற்றைவிட பல்வேறு வடிவ கல்லறைகளின் படங்கள் இருப்பில் உள்ளன.


 

  • இறுதிப்போர் காலத்தில் கிளிநொச்சி மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பரப்புகள்:

--> தர்மபுரம் (காலம் அறியில்லை) 

  • இறுதிப் போர்க்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பரப்புகள்:

-->தேவிபுரம் '' பகுதி குடியேற்ற திட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை)

-->இரணப்பாலை பெருந்தோட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை)

-->வலைஞர் மடம் தெற்கு களித்தரைப் பகுதி (பெப்ரவரி இறுதியில் இருந்து மார்ச் முதலாவது கிழமை வரை)

-->இரட்டைவாய்க்காலையும் வலைஞர் மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி (மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை)

-->வெள்ளா முள்ளிவாய்க்கால் கப்பல் வீதிக்கு அண்மையில் உள்ள இடம்.(ஏப்ரல் 21- மே 12 வரை)

-->மே 13,14,15 அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விதைக்கப்பட்டது.

-->மே 16,17,18 விதைக்கப்படவில்லை; விடுபட்டன.

 

இவ்வாறு இறுதிநேரத்தில் விதைக்கப்பட்டவை கீழ்க்கண்டவாறு தோற்றமளித்தன:

சனவரி 20 பிற்பாடில் இருந்து மே 12 வரை

ltte cemetry in mullivaaykkal.. some interior place.jpg

 

 


  • கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடத்தின் தோற்றம்

main-qimg-cdde6077eaf1d2e4a74f296508a69a49.png

main-qimg-afafe1e5b56e971b2617d2306dd0939b.jpg

 


உசாத்துணை:

  • புலிகளால் வெளியிடப்பட்ட ஒரு நிகழ்படம்(video)
  • சொந்த அறிவை வைத்து ஆராச்சிகள் மூலம் தேடியெடுத்து எழுதியவை
  • ஈழநாதம்: 28/11/2004

படிமப்புரவு

  • Vimeo
  • sea tigers
  • 85% screenshots only

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to ஒவ்வொரு துயிலுமில்லத்திலும் இருந்த கல்லறைகள் & நினைவுக்கற்களின் தோற்றங்கள் - ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் தொடர்பான தமிழீழ நடைமுறையரச காலச் சொல்லாடல்கள்

 

 

  1. களச்சாவு - களத்தில் பகையோடு பொருதுகையில் மரித்தல்
  2. காயச்சாவு - களத்தில் பகையோடு பொருதி விழுப்புண் ஏந்தி பண்டுவம் பெறுகையில் பலனளிக்காத போது மரித்தல்.
  3. வீரச்சாவு - பொதுவாக மரித்த ஒரு புலிவீரனை ஒருங்கே குறிக்கும் பொதுச்சொல்
  4. மாவீரர் - தமிழீழ விடுதலைக்காக களமாடி வீழ்ந்து விதையான தவிபு & ஈரோஸ் இயக்கம் மற்றும் 10 தனிக்குழுப் போராளிகளை மட்டும் குறிக்கும் சொல்.
  5. வீரவேங்கை - இது ஒவ்வொரு கல்லறையின் தற்குறிப்பின் உச்சியில் எழுதப்பட்டிருக்கும் சொல்லாகும். இது குறிக்கோள் விலகிச்சென்று தேசவஞ்சகராகி ஒட்டுக்குழுவாகிய குழுக்களின் உறுப்பினர்களிலிருந்து விடுதலைப்புலிப் போராளிகளை வேறுபடுத்திக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட சொல்லாகும். இதுவே தமிழீழ படைத்துறையின் அடிப்படை தரநிலையும்கூட.
  6. துயிலுமில்லம் - மாவீரர்களது வித்துடல் விதைக்கப்பட்டு செப்பனிட்டு பேணிக் காக்கப்பட்ட இடுகாடு
    1. இச்சொல்லானது 'துயிலும் இல்லம்' என்று பிரித்தும் எழுதப்படுவதுண்டு. ஆனால் துயிலுமில்ல ஒலிமுகத்தில் 'துயிலும் இல்லம்' என்று தான் எழுதப்பட்டிருக்கும்!
    2. முகையவிழ்த்தல் - துயிலுமில்லம் ஒன்றை வித்திட்டு புதிதாய் தோற்றுவித்தலைக் குறிப்பதற்காக பாவிக்கப்படும் பண்டைய தமிழ்ச் சொல்
    3. விடுதலை வயல்கள் - 2008 இறுதியில் எஸ் ஜி சாந்தன் அவர்களால் பாடப்பட்ட ஒரு போரிலக்கியப்பாடல் மூலம் துயிலுமில்லங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல். 
  7. நினைவொலி - நவம்பர் 27 அன்று சரியாக மாலை 6.05 மணிக்கு மாவீரர்களுக்காக எழுப்பப்படும் ஆலய மணியோசை.
  8. மாவீரர் மண்டபம் - மாவீரரான போராளியின் வித்துடல் கொண்ட சந்தனப் பேழை முதலில் வீட்டில் வைக்கப்பட்டு உரித்துடையோரின் வீரவணக்கத்திற்குப் பின்னர், பொதுமக்களின் வீரவணக்கத்திற்காக இவ்வாறான "மாவீரர் மண்டபங்க"ளினுள் வைக்கப்பட்டிருக்கும்.
  9. மாவீரர் நினைவு மண்டபம் - மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கான பொதுமக்களின் மலர்வணக்கத்திற்கென்று சிறப்பாக கட்டப்பட்ட மண்டபம்
  10. மாவீரர் நினைவாலயம் - மாவீரர் வாரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் கொட்டகை. இது வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும்.
  11. வீரவணக்க நினைவாலயம்: குறித்த சில மாவீரர்களுக்காக வீரவணக்கம் செலுத்த நிரந்தரமாகக் கட்டப்பட்டிருக்கும் நினைவாலயம். இங்கே அக்குறித்த மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்படும். 
  12. வளைவுகள் - மாவீரர் வாரத்தில் மாவீரர்களின் படங்கள்/ சமர்க்களப் படங்கள் தாங்கிய அலங்கார வளைவுகள்
  13. அகவணக்கம் - வீரச்சாவடைந்த புலிவீரனிற்கு தலைகுனிந்து செலுத்தப்படும் வணக்கத்திற்கான பெயர்
  14. சுடர்வணக்கம் - மாவீரரிற்காக சுடரேற்றி (பொதுக் குத்துவிளக்கு) செலுத்தப்படும் வணக்கம்
  15. மலர்வணக்கம் - மாவீரருக்கு மலர்தூவி செலுத்தப்படும் வணக்கம்
  16. வீரவணக்கம் - வீரச்சாவடைந்த புலிவீரனிற்கான இறுதி அஞ்சலியில் செலுத்தப்படும் வணக்கத்தினைக் குறிக்கும் சொல். (This is not equivalent to salute)
  17. வீரவணக்கக் கூட்டம் - மாவீரனிற்காக நடைபெறும் கூட்டத்தை குறித்த சொல். இன்று இச்சொல் தமிழ்நாட்டில் பரவலாக கையாளப்படுகிறது
  18. சந்தனப்பேழை - வித்துடல் வைக்கப்பட்டிருக்கும் அழகுற வடிவமைக்கப்பட்ட சந்தன மரத்தாலான பேழை. இது பச்சை மற்றும் கடுஞ்சிவப்பு நிறங்களில் இருந்தது. கடுஞ்சிவப்பு நிறமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதுண்டு. தொடக்க காலத்தில் தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டன
  19. வித்துடல் - மாவீரனது பூதவுடல்/ சடலம்
  20. வித்துடல் மேடை - ஒரு மாவீரரின் சந்தனப்பேழை மாவீரர் துயிலுமில்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குவைத்து அகவணக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் மேடை. அங்கு ஒரு சத்தார் பாட்டில் மக்களை நோக்கி வைக்கப்பட்டுள்ள மேசைமேல் வித்துடல் பேழை வைக்கப்படும்.
  21. வித்து - விதைக்கப்படும் அ விதைக்கப்பட்ட வித்துடல்
  22. விதைத்தல் - வித்துடலை புதைத்தல்
  23. விதைகுழி - துயிலுமில்லத்தில் வித்துடல் விதைக்கப்படும் 6*6 அடி குழி
  24. தியாக சீலம் :- https://www.uyirpu.com/?p=7211
  25. நினைவுக்கல் - முகவரி அறிந்த மாவீரனது வித்துடல் இல்லா அ கிடைக்காவிடத்து உரியவர் குறிப்புகளோடு நினைவாய் எழுப்பப்படும் கல்.
    1. அதே சமயத்தில் வித்துடல் ஒரு துயிலுமில்லத்திலும், அவருக்கான நினைவுக்கல் இன்னுமோர் துயிலுமில்லத்திலும், வைப்பது புலிகளின் இன்னுமொரு வழமையாகும். தென்தமிழீழ மாவீரர் பலரின் வித்துடல்கள் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்திலும், முள்ளியவளை துயிலுமில்லத்திலும், விதைக்கப்பட்டிருந்தன
  26. கல்லறை - 6 அடி நீளத்தில் இருக்கும் முகவரி அறிந்த மாவீரனது வித்துடல் கொண்ட கல்லால் கட்டப்பட்டு அழகுற வடிவமைக்கப்பட்டு உரியவர் குறிப்புகள் தாங்கிய உடையவர் உறைவிடம்
  27. மாவீரர் பீடம் - நினைவுக்கற்கள் மற்றும் கல்லறைகளை ஒருங்கே குறிக்கும் சொல்
  28. முதன்மைச் சுடர்ப் பீடம் - இது பொதுச்சுடர் ஏற்றும் பீடத்தைக் குறிக்கும் சொல்
  29. பொதுச்சுடர் - கட்டளையாளர்களாலும் தவிபு தலைவராலும் ஏற்றப்படுவது
  30. ஈகைச்சுடர் - பொதுமக்களால் ஏற்றப்படுவது
  31. நினைவுச்சுடர் - வீரச்சாவடைந்த மாவீரரின் கல்லறைக்கும் நினைவுக்கல்லிற்கும் உறவினர்களால் செல்ல முடியாதபக்கத்தில் தமக்கு அருகில் இருக்கும் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒரு தீப்பந்தம் ஏற்றி வீரவணக்கம் செலுத்த இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கும். அந்த தீப்பந்தத்தின் பெயரே நினைவுச்சுடர் ஆகும். கடலிலே வீரச்சாவடைந்தோருக்கு கடலில் ஏற்றப்படும் சுடரினையும் 'நினைவுச்சுடர்' என்றே கடற்கரையோர மக்கள் அழைப்பதுண்டு.

 

புலிகள் தங்கள் வீரர்கள் இறக்கும் போது அவர்கள் இறந்து விட்டார் என்று அறிவிப்பதில்லை. மாறாக வீரச்சாவடைந்து விட்டார் என்றே அறிவித்தனர். அவ்வாறு வீரச்சாவடைந்து விட்டவரின் உடலத்தினை பிணம் என்றோ சடலம் என்றோ அழைப்பதில்லை. அவர்கள் விடுதலைப் படையினர் என்பதால் போரில் இறந்த தம் வீரர்களை மாவீரர் என்றும் அவரின் உடலத்தினை வித்துடல் என்றும் அழைத்தனர். அவ்வித்துடல்கள் புதைக்கப்படும் குழிகள் விதைகுழிகள் என்று அழைக்கப்பட்டன. அங்கு புதைக்கப்படுதல் என்னும் சொல் கையாளப்பட்டதில்லை. மாறாக விதைக்கப்படுதல் என்னும் சொல்லே கையாளப்பட்டது. இவர்களின் வித்துடல்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் பேழைகள் என்று அழைக்கப்பட்டன. அக்குழிகளில் வித்துடல் இடப்பட்ட பின்னர் அவற்றினைச் சுற்றி கல்லறைகள் கட்டப்படும். அவ்வாறு பெருமளவில் கல்லறைகள் கொண்ட இடங்கள் துயிலுமில்லம் என்று அழைக்கப்பட்டது. இத்துயிலுமில்லங்களில் வித்துடல்கள் இல்லாதோருக்காக/ கிடைக்காதோருக்காக நினைவுக்கற்கள் என்பவையும் நடப்பட்டிருந்தன. இவை அவர்களைக் குறித்த தகவல்களையும் நினைவுகளையும் தாங்கி நின்றன." (வி.இ. கவிமகன்)

  • எ.கா :-'அஆ மாவீரரின் வித்துடல் அஆ துயிலுமில்லத்தில் உள்ள அஆ விதைகுழியில் முழுப் படைய மரியாதையுடன் விதைக்கப்பட்டது'

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வித்துடல் விதைப்பின் போது வாசிக்கப்படும் உறுதியுரை

 

(ன்/ள் பால் வேறுபாடுகள் வாசிப்பில் காட்டப்படும்)

 

"{(முழுத் திகதி) அன்று [(காரணம்) (சமர்க்களத்தில் எனில் "வீரச்சாவு" அ நோயெனில் "சாவு")] தழுவிக்கொண்ட - கட்டளையாளர் எனில் மட்டும் பதவிநிலை கூறப்படும். தொடர்ந்து தரநிலையுடனான இயக்கப்பெயரோடு அன்னாரது முழுப்பெயர், நிரந்தர வதிவிடம், தற்காலிக வதிவிடம் எனபன முறையே வாசிக்கப்படும்.}

"இம்மாவீரருக்காக எமது தலைகளைக் குனிந்து வீரவணக்கம் செலுத்தும் இவ்வேளை, எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகக் கலந்துவிட்ட இறுதி இலட்சியமாம் தமிழீழத் தாயகத்தை மீட்டெடுக்கும் புனிதப்போரிலே வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் வேங்கைகள் வரிசையிலே இங்கே மீளாத்துயில்கொள்ளும் (தரநிலையுடன் இயக்கப்பெயர்)-உம் சேர்ந்துகொண்டான்.

"சாவு இவனது பேச்சையும் மூச்சையும் நிறுத்தியதே தவிர இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கியுள்ளது.

"இவன் ஆணிவேர் அறுபடாத ஆலமரம். மீண்டும் வேர்விடுவான், விழுதெறிவான். புதிதாகப் பிறக்கும் புலிகளுக்குள்ளே இவன் புகுந்துகொள்வான்.

"நெஞ்சு கனக்கும் தாயக விடுதலைக் கனவோடு எமைப்பிரிந்து செல்லும் இவனின் கனவை நாங்கள் நனவாக்குவோமென்று இவனது விதைகுழியில் உறுதியெடுத்துக்கொள்வோம்.

"தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையையும் வழிகாட்டலையும் ஏற்று நின்றும் துணிந்து சென்றும் களமாடி வீரச்சாவடைந்த இந்த வீரனுக்கு நாங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தும் இவ்வேளையிலே எங்கள் தாயகப் போருக்கு மீண்டும் எங்களை தயார்படுத்திக் கொள்கின்றோம்.

"ஒருகண நேரம் இந்த வீரனுக்காக குனிந்து கொண்ட தலைகளை மீண்டும் நிமிர்த்திக்கொண்டு புனிதப் போருக்குப் புறப்படுகின்றோம்."

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

(நான்மூலைகளிலிருந்தும் வெற்று வேட்டுகள் மும்முறை ஒரே சமயத்தில் தீர்க்கப்படும், நான்கு போராளிகளால்.)

 

கிட்டிப்பு: கேணல் ராஜு வீரவணக்க கூட்ட நிகழ்படத்திலிருந்து

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் பீடங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் விதம்

 

large_biu8.jpg.fe8003485c5118c8c98008430

'தலைநகர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்'

கல்லறைகள் & நினைவுக்கற்கள் மாவீரர் துயிலுமில்லங்களினுள் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அப்பகுதிகளைச் சுற்றி உள்வீதிகள் இருக்கும். இப்பகுதிகள் யாவும் சதுர வடிவிலே பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதியும் நிரை நிரையாக மேலும் பிரிக்கப்பட்டிருக்கும். அந்நிரைகளில் உள்ள கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் என்பன எண்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். இவ்வெண்கள் கல்லறைகளினதும் நினைவுக்கற்களினதும் தலைப்பகுதியில் (உடையவரின் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும் கல்லின் பின்புறத்தில்) வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டு வெள்ளை நிறத்தில் வட்டமிடப்பட்டிருக்கும்.

இவ்வெண்கள், நிரைகள் அடங்கிய பட்டியலை மாவீரர் துயிலுமில்லத்தினுள் தொண்டர் சேவைக்காக வந்திருப்போர் (பெரும்பாலும் மாணவர்கள்) வைத்திருப்போர். தம் உறவின் மாவீரர் பீடத்தை மறந்த அல்லது கண்டுபிடிக்க இயலாத உறவினர்கள் இவர்களிடம் வந்து உதவி பெற்றும் தம் உறவு உறங்கும் மாவீரர் பீடத்தை அடையாளம் கண்டுகொள்வர்.

நினைவுச்சுடர் ஏற்றுபவர்கள், தமக்கு விரும்பிய ஒரு நினைவுச்சுடர் தண்டை ஏற்றிவிட்டுச் செல்லலாம். 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+

 துயிலுமில்லப் படிமங்கள்:

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அகவணக்கம் செலுத்துவதற்காக அழைப்பு விடுக்கும் படியாக சொல்வது

 

 

போராளிகள் பொதுவாகக் கூறுவது: (1993இற்கு முன்னர் வரை) 

"இதுவரை காலமும் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் இன்னுயிர் நீத்த பொதுமக்களுக்கும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துவோம்"

.

 

"நிறைவு செய்வோம்."

மூலம்: காற்று வெளி திரைப்படத்திலிருந்து

 

 

--------------------------------------------------------

 

 

போராளிகள் பொதுவாகக் கூறுவது: (1993இற்கு பின்னரிருந்து) 

"இதுவரை காலமும் தாயக மண் மீட்புப் போரில் களமாடி வீரச்சாவடைந்த போராளிகளுக்கும் அதன்பால் உயிர்நீத்த பொதுமக்களுக்காகவும் அகவணக்கம் செலுத்துவோம்."

.

"நிறைவு செய்வோம்."

 

கிட்டிப்பு: உறவினர் (போராளி)

 

 

--------------------------------------------------------

 

 

மாவீரர் நாள் கையேட்டில் உள்ளது:

"தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களையும் சிறிலங்கா-இந்திய படைகளாலும் இரண்டகர்களாலும் படுகொலைசெய்யப்பட்ட மக்களையும், நாட்டுப்பாற்றாளர்களையும், மாமனிதர்களையும், நினைவுகூர்வோமாக."

.

"நிறைவு செய்வோமாக"

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தியாகசீலம்

 

 

கிட்டிப்பு (credits) https://www.uyirpu.com/?p=7211

 

  1. வீரச்சாவடைந்த போராளிகளின் உடலங்களைத் தூய்மைப்படுத்தி அவர்களின் உடலங்கள் கெட்டுப் போகாத அளவுக்கு தயார்படுத்தி ( அதாவது இன்போம் பண்ணுவது என்று மக்கள் கூறுவது) படையச் சீருடை அணிவித்து சந்தனப் பேழையில் அவர்களை கிடத்தி உறவினர்களிடம் கையளிக்கும் வரை அத்தனையையும் செய்யும் இடமான “தூண்டி” என்று ஆரம்ப நாட்களில் அழைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் பாசறையை பின்னாட்களில் புனிதத்துவம் மிக்க பெயரான ”தியாகசீலம் ” என்று உணர்வுகளில் அழைத்துக் கொண்டனர்.
  2. முகம் மறைக்கப்பட்ட மறைமுக போராளிகளின் வித்துடல்களை விதைத்த போது அல்லது நடுகற்களை நட்ட போது அவற்றை தியாகசீலம் என்றே அழைத்துக் கொண்டனர். (பல இரகசிய காரணங்களுக்காகவே அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டதும், முகமறியா மறைமுகங்களாய் அவர்கள் தூங்கியதும் வெளிப்படையான உண்மை. தமிழீழ விடுதலைக்கு பின்பான காலம் அவர்களின் முகம் யார் என அடையாளப் படுத்தப்பட்டிருக்கலாம்.)
  3. வீரச்சாவடைந்த மாவீரர்களின் வித்துடல்கள் வந்த போது பலவற்றில் அடையாளத் தகடுகள் இல்லாத நிலை இருந்தது. அது எதிரியிடம் பிடிபட்டு அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக வந்த போராளிகளின் உடலங்களாக இருக்கலாம் அல்லது சண்டைக்களங்களில் புலிகளால் மீட்கப் பட்டாலும் கழுத்தில் இடுப்பில் கையில் என கட்டப்பட்டிருந்த மூன்று தகடுகளும் தவறி இருக்கலாம். அது எவ்வாறோ போராளிகளின் வித்துடல்களை புலிகளால் அடையாளப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் படையணி அல்லது துறைசார் போராளி நண்பர்கள் அல்லது இறுதியாக எடுக்கப்பட்டிருந்த தனிநபர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த காயவிபரங்களை வைத்து அடையாளம் காண முயன்றும் அதிலும் தோல்விகளைச் சந்தித்து அடையாளம் காண முடியாத பல நூறு வித்துடல்களை விதைத்த போது அவர்களுக்கான பொதுப்பெயராக “தியாகசீலம்” என்ற உணர்வுமிக்க புனிதத்தை அழைத்துக் கொண்டனர்.
  4. இவ்வாறு இவர்கள் விதைக்கப்பட்ட இவர்களை அடையாளம் காணும் சந்தர்ப்பம் ஓர்நாள் வரும் என்றே எம் தேசியத்தலைவர் நம்பிக்கை கொண்டிருந்தார். தமிழீழம் மலர்ந்த பின் தமிழீழத் தேசத்தில் எம் மக்களின் DNA க்கள் பரிசோதிக்கப்படும் போது இந்த மாவீரர்களின் DNA எந்த உறவுகளோடு ஒத்துப் போகுதோ அதை வைத்து இந்த உடலம் யாருடையது என்பதை இனங்காண முடியும் என்ற தூரநோக்க சிந்தனை அவரை ஆறுதல்படுத்தியது. அதனால் தான் இந்த தியாகசீலர்களை அவர் மாவீரர் துயிலும் இல்லங்களில் அடையாளங்கள் அற்று விதைத்த போதும் தியாகசீலம் என்ற அடையாளத்தை வழங்கினர்.
Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.