Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட எய்படையான வில்லில் இருந்து சீறிச் செல்லும் அம்பு பற்றியே. நான் இங்கு தமிழர்களின் அம்பு கள் பற்றிய பல்வேறு தகவல்களை உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன்.

 


  • அம்புகளை விளைவிப்பவர்- அம்பன்
    • அம்பு விழும் எல்லை - ஏப்பாடு
    • Target or aim by an arrow - சரவியம்
    • அம்பு தைத்தல் - ஏவுண்ணுதல்
    • அம்பு விடும் போது கையில் போடும் உறை- கோதை, கைப்புடை, கைக்கட்டி (கொள்.:சூடாமணி )
    • மொட்டம்பு - உதண்
    • அம்புக்கட்டு - புதை, கட்டு, கற்றை (sheaf of arrows)
    • அம்புத் திரள் கட்டுங் கயிற்றின் பெயர்- பற்றாக்கை

 

  • அம்பின் அடி- குதை, பகழி, உடு, தாறு
  • அம்புத்தலை - புழுகு, குப்பி (head part of an arrow)
  • அம்பின் ஈர்க்கு- உடுவம், கோல் (shaft of an arrow)
  • அம்புத்தலையின் நுனி - சிலுக்கு (barb of an arrow)
  • சிறகுடன் கூடிய அம்பின் அடி - புங்கம்
  • சிறகு உள்ள அம்பின் உடுவப் பகுதி - கைப்புடை (கருநா.)
  • அம்பின் சிறகு - பக்கம், சிறகு (feather of an arrow)
  • புழுகும் உடுவமும் இணையும் இடம் - குழைச்சு (joining area of head and shaft of an arrow)
  • சுரை - உடுவத்தினை அம்புத்தலையினுள் நுழைக்க ஏற்றதாக அமைந்துள்ள வாய்பகுதி .. இதனாற்றான் குப்பி என்னும் பெயர் அம்புத்தலைக்கு(குப்பிக்கு சிறுவாய் தானே!) ஏற்பட்டதோ என்னவோ

main-qimg-b641968e974dfdfe80f0ce3281c8abb9.png

'படிமப்புரவு: அமசோன் | தமிழில் குறித்தவர்: நன்னிச் சோழன்'

 


அம்பின் வகைகள் :-

main-qimg-4495162128c38f7dde66374998e12c9e.jpg

'பகழி, வாளி, வண்டு, பாணம்

நிகழ்சரம், பத்திரி, சிலீமுகம், பல்லம்

புங்கம், கணை, குதை, கங்கபத்திரம்

அத்திரம், தோணி, கோல், விசிகம் அம்பே'

→ சேந்தன் திவாகரம்

.

'பகழி, வாளி, தோணி, வாணம்

கதிரம், பல்லம், கணை, கோல், சரமொடு

வண்டு, பத்திரம், சிலீமுகம், விசிகம், கோ

அம்பின் பெயர் உருவாகலும் உரித்தே'

→ பிங்கலம்

.

'கூரிய சரமே, வாளி, கொடுங்கணை, பகழி, வண்டு,

பாரிய கதிரம், அங்கபத்திரம், அத்திரம், கோல்,

பாணம், ஆசுகமே, பூதை, பத்திரி, விசிகம், புங்கம்,

தோணி, சாயகமே, பல்லம், தொடை, சிலீமுகமே, அம்பாம்"'

→ சூடாமணி

இவை தவிர இலக்கியங்களில் உள்ளவை பின்வருமாறு:-

சிரி, சிருகம், தோணியம், அங்கூடம், ஈ, விடூசி, அரி, ஏ, காண்டம், அப்பு, வாணி, வாசம்

சாயகம்—?

இவற்றின் சோகக் கதை யாதென்றால் இவை எவற்றினதும் வடிவங்களை எம்மால் அறியமுடியவில்லை என்பதே!... எதிர்காலத்தில் ஏதேனும் நிகழ்ந்தால் இவற்றின் வடிவங்கள் கிடைக்கலாம்.

 


  • கம்பராமாயண யுத்தகாண்டம்- நாகபாசப் படலம்
    • தாமரைத் தலை
    • வச்சிரப் பகழி
    • முச்சிரப் பகழி
    • அஞ்சலி
    • குஞ்சரக் கன்னம்
    • எரிமுகப் பகழி
    • உரும் இனப் பகழி
    • நெருக்கி மற்று அனந்த கோடி
    • முருக்கின் உற்று அனந்த கோடி
    • பிறைமுக வாளி
    • சூகம் ,சூபம்
    • கத்திவாளி அம்பு
      • இரும்பினால் செய்யப்பட்ட அம்பு - நாராசம், சலாகை

இவை எவற்றினதும் வடிவங்களை எம்மால் அறியமுடியவில்லை!

 


→ அம்பு வைக்குமிடம் - (quiver) அம்பறாத்தூணி/ அம்புறைத்தூணி/ இடுதி/ புட்டில்/ கோக்குஞ்சம்/ கலாமிடம்/ அம்புக்கூடு/ தூணீரம்/ ஆவநாழி/ ஆவம் /அம்புறை/ புழுகு /கலாபம்/ வட்டில்/ அம்புயம்

main-qimg-54fa9e5629998558b8084ecd5533e20a.jpg

 


  • கூடுதல் தகவல்கள்:-

செலுத்தப்படுவதை மட்டும் பார்த்தால் எப்படி.. செலுத்துவதையும் பார்க்க வேண்டாமா?

 


 

உசாத்துணை:

  • செ.சொ.பே.மு.
  • போரியல் அன்றும் இன்றும் - புத்தகம்

படிமப்புரவு

  • கூகிள்

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.