Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற துயிலுமில்ல நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

செத்தவர் என்றும்மை செப்புவமோ - உமை
சென்மத்தில் நினைந்திடத் தப்புவமோ
குத்துவிளக்கதும் நீரல்லவோ - நாம்

கும்பிடும் தெய்வங்கள் நீரல்லவோ
நித்தமும் வாழுவீர் மாவீரரே - எங்கள்
நெஞ்சுகளில் இளம் பூவீரரே! 
"

-->வித்தொன்று விழுந்தாலே பாடலிலிருந்து

 

 

201628_104201269664010_929184_o.jpg

 

 

ஒரு படிமத்தில் உள்ள கல்லறையினையோ அ நினைவுக்கல்லினையோ அஃது எந்த துயிலுமில்லத்திற்கானது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பதெனில், அதில் உள்ள மாவீரர் பெயரினை எடுத்து இங்கு - http://veeravengaikal.com/ - போட்டால் இதில் இம்மாவீரர் வித்துடல் எங்கு விதைக்கப்பட்டிருந்தது என்ற தகவல் கிடைக்கும். அதன் மூலம் அப்படிமத்தில் உள்ளது எந்த துயிலுமில்லத்திற்கான கல்லறை எ நினைவுக்கல் என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஒரே பெயரில் பல மாவீரர்கள் இருக்கலாம். எனவே கவனம் கூட வேண்டும். ஆனால் நேரமின்மையால் நன்னிச்சோழன் ஆகிய நான் அவ்வாறு செய்யவில்லை. தேவைப்படுவோர் தேடிக்கொள்ளவும். நேரம் கிடைக்கும்போது பையப்பைய செய்து விடுகிறேன்.}

 

துயிலுமில்லங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், அவற்றைப் பற்றி நானொரு ஆவணம் எழுதியுள்ளேன், வாசித்துப்பாருங்கள்:-

 

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 201
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

துயிலுமில்ல உறுதிமொழி & பாடல்

 

 

  • எழுதியவர்: தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை
  • இசையமைப்பாளர்: திரு. "இசைவாணர்" கண்ணன்
  • பாடியவர்: அமரர் வர்ண இராமேஸ்வரன்
    • பின்னணிப் பாடகர்கள்: மேஜர் சிட்டு, ராதிகா, மணிமொழி, அபிராமி.
  • பாடப்பட்ட ஆண்டு: 1991
  • முதன் முதலில் ஒலிக்கவிடப்பட்ட இடம்: கோப்பாய் மா.து.இ. (1991)

prabakaran-flag.jpg

 

maaveerar-day-song-1.jpg

 

maaveerar-day-song-2.jpg

 

maaveerar-day-song-3.jpg

 

 

மாலை,

  1. 5:00 மணி சொச்சத்திலிருந்து 6:04:59 மணிக்கு முன்பாக - தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை முடிவடையும்
  2. 6:05 மணி - நினைவொலி எழுப்புதல்
  3. 6:06 மணி - அகவணக்கம்
  4. 6:07 மணி - பொதுச்சுடர் ஏற்றுதல். தொடர்ந்து நினைவுச்சுடர் & ஈகைச்சுடர் ஏற்றுதல், சம நேரத்தில் உறுதிமொழியும், அதனைத் தொடர்ந்து மாவீரர் நாள் பாடலும் ஒலிக்கத்தொடங்கும்

1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி, முதலாவது மாவீரர் நாளன்று, எஸ் ஜி சாந்தன் அவர்களின் நண்பனும் அஞ்சல்காரருமான பெருமாள் கணேசன் என்பவரால் மிக நல்ல பாடல் ஒன்று சாந்தன் அவர்களுக்காக எழுதப்பட்டது. எழுதப்பட்ட பாடலை எஸ் ஜி சாந்தன் அவர்கள் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்ற இடங்களில் ஒன்றான கோணாவில் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் மெட்டமைத்துப் பாடினார். அப்பாடலின் நிகழ்படப் பதிவு தேசியக்கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்டோரின் கவனத்தை ஈர்த்தது. அப்பாடலானது நன்கு பரவலறியாகி புகழ்பூத்த பாடலாகியது. இதுவே சாந்தன் அவர்களின் முதலாவது தமிழீழ விடுதலைப்போர்ப் பாடலாகும். அதன் பல்லவி வரிகள் பின்வருமாறு,

"வானம் பூமியானது
பூமி வானமானது - இங்கு
புழுதியெங்கும் குருதியாறு ஓடுகின்றது!
தேசம் நாசமானது..."

நானறிந்த மட்டில் மாவீரர்களுக்காகப் பாடப்பட்ட முதலாவது தமிழீழப் போரிலக்கியப் பாடலாக இது விளங்குகிறது. ஆனால் இன்று இதன் பல்லவி மட்டுமே அறியக்கூடியதான ஊழியால் நாம் இழந்துவிட்ட பல்வேறு போரிலக்கியப் பாடல்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக உள்ளது. 

 

ஆதாரம்: "சாந்தன்: புரட்சிப்பாட்டு யாத்திரை", பி.பி.சி. ஆங்கில பொட்காஸ்ற்

 

 

எஸ். ஜி. சாந்தன் அவர்களின் எழுச்சிப் பாடல்கள் தொகுப்பு

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இச்சிலையின் பெயர் அறிந்தோர் தெரிவித்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை துயிலுமில்லங்களினுள் கண்டிருக்கிறேன்.

 

 

"வாழ்கின்ற காலம்வரை
வாழ்த்துங்கள் வீரர்களை
பிறர்கென உயிர்க்கொடை  
கொடுப்பது தெய்வீகம்!"

 

 

 

2002<

வன்னியில்

 

15056339_336047216752404_7144085985548824788_n.jpg

 

s5467.jpg

 

nkn.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

உறுதியின் உறைவிடம் 

 

 

"தியாக மறவர் கூட்டமிங்கு
தீரமாகப் போர் புரிந்தார்
தீந்தமிழ்த்தாய் நலம் பேணவே!"

 

 

உறுதியின் உறைவிடம் என்ற பெயரினைக் கொண்ட இது மாவீரர் வீரவணக்கச் சின்னமாகும்.

 
 

மாவீரர் வீரவணக்க இலச்சினை.jpg

 

 

 

இதன் சிலை விருத்து:

 

 

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்த சின்னம்

kj.jpg

ufow.png

 

 

 

ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்த சின்னம்

Kanagapuram Martyr's graveyard in Kilinochchi767.jpg

3-2.jpg

2-2.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் பொதுத் திருவுருவப்படம்

 

 

"தேசத்தையும் மாந்தரையும்
கண்மணி போல் காத்து வந்தார்
தங்கள் தேகம் பலியாக்கியே!"

 

 

இதைத்தான் அனைத்து மாவீரர்களின் படிமங்களும் வைக்க இயலாத இடத்தில் பொதுவாக சில மாவீரர் படங்களோடு வைத்து வீரவணக்கம் செலுத்துவர். இதனோடு "முதல் மாவீரர்களின் படங்கள்"ஓடு கூடியவரையான மாவீரர்களின் திருவுருவப்படங்களும் வைக்கப்பட்டிருக்கும். 

 

 

மாவீரர் இலச்சினை.jpg

 

 

 

 

இதன் சிலை விருத்து (version):

இது மட்டு. தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்டிருந்தது. முதன்மை சுடர் பீடத்திலிருந்து பார்க்கின் - இரு ஒலிமுகங்களிற்கும் நடுவில், முதன்மைச் சுடர்ப் பீடத்திற்கு அருகில், (45 பாகை கோணத்தில்)/ (V வடிவிலெனில் அதன் கவட்டில்) அமைக்கப்பட்டிருந்தது.

தமிழீழ மாவீரர் துயிலுமில்லம் - Tamil Eelam Maaveerar Thuyilumillam (18).jpg

main-qimg-173b832fef090083092491f42ba63616.png

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

முதல் மாவீரர்
லெப். சங்கர் அவர்களின் நினைவாய் உதயபீடம் படைமுகாம் துயிலுமில்லத்தில் எழுப்பப்பட்ட கல்லறை

 

large_Lt.Shankarstomb.jpg.be609cd08dfce2bec202b1867578139c.jpg

 

  

On 11/7/2021 at 15:36, நன்னிச் சோழன் said:

உதயபீடம்

 

13680727_993369757462884_450471314383292983_n.jpg

 

13716226_993369707462889_124436516540602009_n.jpg

'இதுதான் லெப் சங்கர் அண்ணாவின்ர கல்லறை'

 

z3a3.jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் துயிலுமில்ல ஒலிமுகங்கள்

 

 

"மாவீரர் வாழ்ந்த வாழ்க்கை
அர்த்தமுள்ள வாழ்க்கையடா - அவர்

வாழும் சரித்திரத்தில் 
மரணம் கூட மடிந்ததடா"

 

 

இதன் முதன்மை வாயிலிற்குள்ளால்தான் வித்துடல்கள் காவிச் செல்லப்படும்.

 

1991 ஆம் ஆண்டு புதுவை இரத்தினதுரை அவர்களால் தான் "மாவீரர் துயிலும் இல்லம்" என்ற பிடாரச் சொல் முன்மொழியப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் துயிலும் இல்லம் "கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்'' ஆகும்.

 

wer32.jpg

 

large.81688645.jpg.1aac8ddcf9182027a7e57e3399685d43.jpg

 

hb.jpg

 

Scannen0004-Kopie.jpg

 

vanni.jpg

 

bvu8.jpg

'?????? கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கிறது'

 

Maaveerar-Thuyilum-Illam-3.jpg

 

5.jpg

10.jpg

'கனகபுரம் ஒலிமுகம் (பழையது)'

 

10710659_1633355693558352_1924458378556678989_n.jpg

'கனகபுரம் ஒலிமுகம் (புதியது)'

 

unnamed (7).jpg

'கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கிறது'

noi.jpg

'மேற்கண்ட கட்டுமான வேலைகள் முடித்த பின் புத்துயிர் பெற்று எழுந்த கோப்பாய் துயிலுமில்லத்தின் ஒலிமுகம் '

 

m-thugi-.jpg

'ஈச்சங்குளம்'

 

m20.jpg

'முள்ளியவளை'

 

d65.jpg

'தலைநகர்'

 

k8.jpg

 

81796464.jpg

'தரவை'

 

311021_131032807004768_660096942_n.jpg

'உடும்பன்குளம்'

 

ste 3.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் முடிந்த பின்னர்

 

துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் முடிந்த பின்னர் துயிலுமில்லத்தினுள்ளிருந்து பொதுமக்கள் வெளியேறும் காட்சி. முதன்மை வாசல் உட்பட மூன்று வாசல்களுக்குள்ளாலும் மக்கள் வெளியேறுகின்றனர். 

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (33).jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு இடித்தழிக்கப்பட்ட துயிலுமில்லங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட எச்சங்கள் இவ்வாறு கண்ணாடிப் பெட்டியில் இடப்பட்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் வைக்கப்பட்டிருக்கும்.  ஏனைய மாவட்டங்கள் பற்றி நானறியேன்!

 

 

"மாவீரரான செல்வங்களே!
மனிதம் உள்ளவரையில் நின்று வாழ்வீர், தெய்வங்களே!"

 

66.jpg

 

383260_131032053671510_1623085490_n.jpg

 

fu.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

முதன்மை சுடர்ப் பீடம்

இங்குதான் பொதுச்சுடர் ஏற்றப்படும்

 

 

"ஒளி தீபம்தான் தேசம் போலத் தோணுதே!
தனித் தேசம் காணப் போரிடு என்றே கூறுதே!"

 

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (23).jpg

'முதன்மைச் சுடர் கொளுந்துவிட்டு எரிவதைக் காண்க'

 

FLW21.png

 

 

 

iy.png

'???'

 

 

 

கிளி. கனகபுரத்தில் பொதுச்சுடர் ஏற்றும் முதன்மை சுடர்ப் பீடம்:-

main-qimg-35ad24c2575465a524d7c58df35767f7.png

maaveerar thuyilumillam (2).jpg

 

 

 

 

 

maaveerar thuyilumillam (7).jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஈகைச்சுடர்கள்


மக்கள் ஏற்றும் சுடரின் பெயர் ஈகைச்சுடர் என்பதாகும்

 

 

 

"கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம் - உங்கள்
கனவுதனை நினைவாக்கித் தொடர்கிறோம்"

 

 

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

5.jpg

 

1.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் துயிலுமில்லங்களின் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் ஓர் பலகை

 

10407341_1783654078526376_3072659698786073242_n.jpg

 

 

11-1.jpg

 

 

maaveerar.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் பெற்றார் அணியிசை வகுப்பு
 

 

"மாவீரர் பெற்றோரே! 
மனம் சோர வேண்டாமே!
தானாக விடிந்திடும் ஈழம்!"

 

மாவீரர் துயிலுமில்லத்தினுள் நுழையும் போது மாவீரர் பெற்றார் அணியிசை வகுப்புடன் அழைத்து வரப்படும் காட்சி. இதுவொரு தமிழீழ பண்பாட்டுச் சடங்கு ஆகும்.

இவர்களை வீதியில் மாவீரர் துயிலுமில்லம் தொடங்கும் குறிப்பிட்ட இடத்திலிருந்து மாவீரர் துயிலுமில்லத்தின் முற்றம் வரை அணியிசைக் கலைஞர்கள் அழைத்து வருவர். அணியிசைக் கலைஞர்கள் முன் வர அவர்கட்குப் பின்னார் ஒரு கிடைவரிசையில் போராளிகள் (பெரும்பாலும்) அல்லது மாணாக்கர் கைகளைக் கோர்த்தபடி நடந்து வருவர். அவர்கட்குப் பின்னால் மாவீரர் பெற்றார் வருவர். இவ்வாறு இவர்கள் நுழையும் போது இரு மருங்கிலும் பொதுமக்கள் நின்றிருப்பர். இவ் அணியிசைக் கலைஞர்களாக, நானறிந்த வரை, பாடசாலை மாணவர்களே கடைமையாற்றினர்.

 

பல்வேறு மாவீரர் துயிலுமில்லங்களை நோக்கிச் செல்லும் அணியிசை வகுப்புகள்:
 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (4).jpg

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (8).jpg

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (37).jpg

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (3).jpg

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (5).jpg

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (15).jpg

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (19).jpg

 

அணியிசை வகுப்பிற்குப் பின்னால் செல்லும் மாவீரர் பெற்றார்/உறவினர் (பெற்றார் வரமுடியா இடத்தில்):

நவம்பர் 27 என்றாலே மழை தான்.
 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (36).jpg

 

இரு மருங்கிலும் நின்று இவர்களைக் காணும் பொதுமக்கள்:

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (38).jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் முழுத் திரைப்பிடிப்புப் படிமம்

 

 

2008 இறுதியில் மாவீரர் துயிலுமில்லங்கள் "விடுதலை வயல்கள்" என்றும் சுட்டப்பட்டன, போரிலக்கியப்பாடலூடாக. படம் எடுக்கப்படும் போது கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 


"பெற்றவரை மறந்து,
ஒவ்வொரு பொழுதிலும் எம்மை நினைத்து,
சாவினில் வாழ்வளித்து,
சாகும் போதிலும் எம்மை நினைத்து,

வேரோடு பகை வீழ்த்த வீச்சோடு களமாடி வேதனை தீர்த்தவரே!
மண்ணுக்குள் விதையாகி மடிப்பூக்கள் எனவாகி விண்ணுக்குள் சென்றவரே!
கல்லறை மீது துயில்பவரே!"

 

 

  • முழுப் படிமம்:

main-qimg-36560bb4c9da07b630bd1cb7842b84bc.png

 

  • ஒலிமுகமும் சூழலும்:-

main-qimg-27afa0450a7d55f1e2432baae8162fb3.png

 

  • முதன்மைச் சுடர்ப் பீடமும் சூழலும்:

main-qimg-deb00337fc98b1fd9c01364d75eb4b6a.png

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நினைவுச்சுடர்

 

வேறொரு மா.து. கல்லறை அமைக்கப்பட்டு அதற்கான நினைவுக்கல் வேறொரு மா.து. நாட்டப்பட்டு இரண்டிற்கும் உறவினர்களால் செல்லமுடியாது இருப்பின், பல்வேறு காரணங்களால், "நினைவுச்சுடர்" என்ற ஒன்று உறவினர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் அமைத்துக் கொடுக்கப்படும். உரியவர்கள் ஒவ்வொரு தேசிய நாளிலும் வந்து அங்கு விளக்கெரித்துவிட்டுச் செல்வர்.

எனது குடும்பத்தினருக்கான கல்லறை தென்மராட்சியில் இருந்ததால் நாங்கள் கிளிநொச்சி கனகபுரத்தில் இருந்த நினைவுச்சுடரிற்கு ஒவ்வொரு ஆண்டும் சென்று விளக்கெரிப்போம். அது ஒரு தீப்பந்தம் வடிவில் இருந்தது, கீழுள்ளது போன்று. 

இதற்கும் சில பேரால் செல்லமுடியாது இருக்கும். அவ்வாறு உரியவர்கள் வராமால் இருப்பவைக்கு போராளிகள் ஆளிட்டு விளக்கேற்றுவர்.

ஒவ்வொரு தடவையும் மாவீரர் நாளன்று து. செல்லும் போது அம்மா, கூடுதலான பூக்களும் சாம்பிராணிக் குச்சியும் கொண்டு வருவார். எமது பயன்பாட்டிற்குப் போக எஞ்சியவையை ஓடியோடி ஒவ்வொரு நினைவுதீபங்களின் அடியிலும் குத்தி எரித்துவிட்டு பூக்களையும் சாற்றிவிட்டு எங்களின் நினைவுச்சுடரிற்குத் திரும்புவேன். இன்றும் இது பசுமையான நினைவாக நெஞ்சில் நிலைத்துள்ளது.

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (31).jpg

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (20).jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடலிலே வீரச்சாவடைந்தோரிற்காக நினைவு வணக்கம் செய்து கடலினுள் வைத்து பொதுச்சுடர் ஏற்றி கடலினுள் விடப்படும் 

"நினைவுச்சுடர்"

 

 

"காற்றோடு காற்றாகக் கரைந்து போனவர்கள்,
கடலோடு கடலாகக் கரைந்து போனவர்கள்,
அன்னையைவிட அதிகம் அணைத்தது, உன்னைத் தானே!
கடலலையே! கடலையே!
உரிமையோடு உன்னைக் கேட்கின்றோம் - நீ 
கரையைத் தொடும் போது எம் மக்களுக்கு காதோடு சொல்லிவிடு,
'விடுதலையை வென்றெடுங்கள், விடுதலையை வென்றெடுங்கள். அப்பொழுது அவர்கள் வருவார்கள்.' "

--> மேஜர் பாரதி, விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளர்

இப்பண்பாடானது லெப் கேணல் மறவன் மாஸ்டர் அவர்களின் ஆலோசனையின் பேரில் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை அவர்களால் 2000 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு தமிழீழம் சிறீலங்காப் படைகளால் வன்வளைக்கப்படும்வரை தொடரப்பட்டது.

main-qimg-9eae0ca3107c45c0af261a6fdd69ef92.jpg

 

(Oct 31, 2003 வரை வீரச்சாவடைந்த மொத்த கடற்புலி மாவீரர்கள் 1066)

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வீரவணக்கக்கொடி

 

 

இதுவும் மாவீரர் வாரத்தில் துயிலுமில்லமெங்கும் - மட்டும் - தமிழீழத் தேசியக் கொடியோடு பறந்துகொண்டிருக்கும். 

துயிலுமில்லத்தில் நான்கு விதமான கொடிகள் பறப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

  1. ஒன்று எமது நாட்டின் தேசியக்கொடி. இதன் பெயர் புலிக்கொடி ஆகும்.
  2. இரண்டாவது எமது தேசத்தின் நிறங்களைத் தாங்கிய கொடி. இதன் பெயர் வெற்றிக்கொடி ஆகும். இது நீள்சதுர சிவப்பும் மஞ்சளும் கொண்ட கொடி. இவற்றின் செந்தர வடிவம் மேலே சிவப்பும் கீழே மஞ்சளும் கொண்ட நீள்சதுர வடிவிலான கொடியேயாகும். ஆனால் மாவீரர் துயிலுமில்லங்களில் இதனோடு சேர்த்து மேலும் சிலதைக் காணக்கூடியதாகயிருக்கும். அவற்றின் பெயர் நானறியேன். இரு முக்கோணங்கள் (/\) மேலும் கீழுமாக பொருத்தப்பட்டு பெறப்பட்ட நீள்சதுர வடிவிலான கொடியென, செங்குத்தான (||) மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் இணைக்கப்பட்டு பெறப்பட்ட நீள்சதுர வடிவிலான கொடியென, ஒரு நிறம் சூழ உள்ளே இன்னொரு நிறம் (இந்நிறம் சிறிய சதுர வடிவில் இருக்கும்) இருப்பதான கொடியென இரு வெற்றிக்கொடிகள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டது போன்றதென இவை பறக்கவிடப்பட்டன.
  3. மூன்றாவது முக்கோண வடிவிலான சிவப்பு & மஞ்சள் கொடிகள். இதன் பெயர் எழுச்சிக்கொடி ஆகும். 
  4. நான்காவதான உந்த நீள்சதுர வடிவில் இருக்கும் கொடி. இதன் பெயர் வீரவணக்கக்கொடி என்று நினைக்கிறேன். இதன் மூலப் பெயர் எனக்குத் தெரியவில்லை. இது செங்குத்தான நீள்சதுர வடிவில் மஞ்சள் சிவப்பு ஆகிய இரு நிறங்களில் காணப்படும். இதில் வரையப்பட்டுள்ளவை ஆவன:
  • தாயகத்தின் தேசப்படம் பின்புலத்தில் - இது இரு கொடிகளிலும் வெளுறிய சிவப்பு நிறத்தில் காணப்படும்.
  • மாவீரர் வீரவணக்கச் சின்னமும் ("உறுதியின் உறைவிடம்") அதன் அடியில், முன்புலத்தில், சிட்டிகளும் - இவை கறுப்பு நிறத்தில் காணப்படும்.

துயிலுமில்ல மஞ்சள் கொடி.jpg

'இது வரலாறு கற்றலிற்காக என்னால் செய்யப்பட்ட திரைப்பிடிப்பு ஆகும்'

 

image (20).png

'மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இக்கொடி பறப்பதைக் காண்க'

32119434892_ba1f214986_o.jpg

'புலிக்கொடியோடு அந்த நீள்சதுரக் கொடியும் பறப்பதைக் காண்க'

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 மாவீரர் இறுதி ஊர்வலம்

 

 

மாவீரர் மண்டபத்தில் வீரவணக்கக் கூட்டம் முடிந்த பின்னர் குறித்த போராளியின் சந்தனப்பேழை/ மாவீரர் படமானது மஞ்சள் சிவப்பு நிறத் துணிகளாலும் பிற தமிழீழத் தமிழர் பண்பாட்டுகளோடும் (மலர் மாலைகள், வாழை மரங்கள், எழுச்சிக் கொடி, தேசியக் கொடி) ஒப்பனை செய்யப்பட்ட ஊர்தியில் மாவீரர் துயிலுமில்லம் நோக்கி எடுத்துச் செல்லப்படும். அப்போது அவ்வூர்திக்கு முன்னால் இம்மாவீரர் பற்றி அறிவித்தப்படி ஒரு முச்சக்கர தானுந்து அல்லது வேறு ஏதெனும் ஒரு ஊர்தியில் சிலர் செல்வர். பின்னால் ஒரு சோகமான இசை ஒலிக்கவிடப்பட்டிருக்கும். சில வேளைகளில் வித்துடல் தாங்கிய ஊர்தியிலேயே ஒலிபெருக்கி பூட்டி அறிவிப்பும் செய்தபடி செல்வர்.

இவ்வித்துடல் தாங்கிய ஊர்தியின் நான் மூலைகளிலும் சில வேளைகளில் இருப்பக்கம் முழுதிலும் துமுக்கிகள் ஏந்திய போராளிகள் அமர்ந்திருப்பர், படைய மரியாதையாக. இவ்வாறான செயலிற்கு ஆண் மாவீரர் எனில் ஆண் போராளிகளும் பெண் மாவீரர் எனில் பெண் போராளிகளுமாக அமர்ந்திருப்பார். 

July 11,2007 Funeral - A 'Viththudal' of a Tiger cadre is being carried to Thuyilumillam according to the tradition of Tamil Tigers.jpg

'சங்கீதன் என்ற இயக்கப்பெயரைக் கொண்ட மாவீரரதும் ஆறுமுகம் ஆனந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட மாவீரரதும் வித்துடல்கள் கொண்ட சந்தனப்பேழைகள் துயிலுமில்லத்தை நோக்கிக் கொண்டுசெல்லப்படுகின்றன. மேலும் இப்படத்தில் இருந்து நாம் அறிவது யாதெனில் சந்தனப் பேழைகளில் மாவீரரின் பெயர் விரிப்புகளும் இடம்பெற்றிருந்தது என்பதாகும். '

 

துயிலுமில்லம் இருக்குமிடத்தை அண்டியதும் போராளிகள் வித்துடல் ஊர்தியின் பின்னால் அணிவகுத்து நடந்து செல்வர். துயிலுமில்லத்தை நெருங்கும் முன்னரே வித்துடல் தாங்கிய ஊர்தி நிறுத்தப்பட்டு வித்துடலை போராளிகள் சுமந்து செல்வர் (சில வேளைகளில் ஒலிமுக வாசலிலேயே வித்துடல் தாங்கிய ஊர்தி நிறுத்தப்படுவதுண்டு). பின்னால் போராளிகள் அணிநடையாகச் செல்வர். இவ்வித்துடலின் முன்னே அணியிசைக் குழுவினர் வாய்த்தியங்கள் இசைத்தபடி அணிநடையில் செல்வர்.

32599520967_6f4bec5732_o.jpg

'கடற்கரும்புலி லெப் கேணல் சஞ்சனா நினைவுருவப்படம் தாங்கிய வித்துடல் ஊர்தி'

 

k8.jpg

''மா. து.இ. ஒன்றின் ஒலிமுக வாசலில் வித்துடல் தாங்கிய ஊர்தி நிறுத்தப்பட்டு அதிலிருந்து வித்துடல் இறக்கப்படப்போவதைக் காணலாம்''

 

 

 

 

=========================================

 

 

 

 

ஒலிக்கவிடப்படும் சோக இசையைக் கேட்டதும் அது பயணிக்கும் வீதியில்/தெருவில் வசிக்கும் பொதுமக்கள் வித்துடல் ஊர்தியை மறித்து சந்தனப் பேழையின் மேல் (விரும்பிய பக்கத்தில்) மலர்களைத் தூவி மலர் வணக்கம் செய்வர்.  அவ்வீதியில் இருக்கும் வீடுகளில குத்துவிளக்கு ஏற்றிவைத்தும் வீரச்சாவடைந்த மாவீரருக்கு மரியாதை செய்வர். சிலர் வித்துடல் ஊர்தியை மறித்து அதன் முன்னர் குடத்தில் நீரை எடுத்து ஊற்றுவர். இவற்றையெல்லாம் மக்கள் தாமாக விரும்பி செய்தனர். ஒரு பண்பாடாக அவர்களால் போற்றப்பட்டது.

maaveera.png

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

துயிலுமில்லத்தினுள் இப்படித்தான் காவிச் செல்லப்படும்... எப்பொழுதும் ஆட்களே காவிச் செல்வர்... 

 

 

"வாய்வார்த்தை பேச்சாக வாழ்ந்ததில்லை 
எங்கள் புலிகள்

செயலொன்றே மூச்சாகத் திகழ்ந்தார்கள் 
தமிழ் விடிவெள்ளிகள்"

 

 

LTTE coffins, julai 11 2007.jpg

'கிளிநொச்சிக்கு கிட்டவாக நடந்த அமுக்கவெடித் தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல் தாங்கிய சந்தனப்பேழைகளை மாவீரர் துயிலுமில்லத்தினுள் எடுத்துச் செல்லும் போராளிகள் | சூலை 11, 2007.'

 

 

 

==========================

 

 

 

 

இப்படத்தில் உள்ளது போன்று நடைபெறுவது அரிது . இது மட்டக்களப்பு தரவை துயிலுமில்லத்தில் நடைபெற்றது ஆகும். இரும்புத் தண்டுகளில் சந்தனப் பேழையைத் தாங்கிச் செல்லும் நிகழ்வு மிகவும் அரியது. இவ்வாறு தரவை துயிலுமில்லத்தில் மட்டுமே நடைபெற்றதை காண முடிகிறது, அதுவும் நான்காம் ஈழப்போரில் மட்டுமே.

ba_27_01_05_02.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

  இறுதிவணக்கம்

 

 

"சூரிய தேவனின் வேருகளே! 
ஆயிரம் பூக்களை சூடுகிறோம்!

போரினில் ஆடிய வேருகளே! - விட்டுப் 
போகின்ற வேளையில் பாடுகிறோம்"

 

மாவீரர் துயிலுமில்லத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் ஒரு மாவீரரின் சந்தனப் பேழையானது துயிலுமில்லத்தினுள் இறுதிவணக்கத்திற்காக வைக்கப்படும். மாவீரர் துயிலுமில்லத்தினுள் நடைபெறும் வித்துடல் ஒன்றிற்கான இறுதிவணக்க நிகழ்வு இதுவாகும். இதில் வீரச்சாவு வீட்டிற்கு வர முடியாமல் போனவர்கள் மற்றும் பழகிய போராளிகள் என பலர் வந்து இறுதிவணக்கம் செலுத்திவிட்டுச் செல்வர்.

அப்போது ஒலிபரப்பப்படும் சோக இசையைத் தொடர்ந்து "சூரிய தேவனின் வேருகளே" என்ற இயக்கப்பாடல் ஒலிக்கவிடப்படும் (மூன்றாம் ஈழப்போரின் தொடக்கத்திலிருந்து இது பாவிக்கப்படுகிறது) இப்பாடலானது வீரவணக்க நிகழ்வுகளில் மலர்வணக்கத்தின் போதுகூட ஒலிக்கவிடப்படுவதுண்டு.

zdsa.jpg

 

lt. col. arjunan.jpg

லெப். கேணல் அர்ச்சுணன் அவர்களின் வித்துடலிற்கு போராளி ஒருவர் மலர்மாலை அணிவிக்கிறார். பின்னால் பிரிகேடியர் கடாபி, கேணல் வேலவன், லெப் கேணல் ராஜேஸ் எனப் பலர் வரிசையில் காத்திருக்கின்றனர். தமிழீழக் காவல்துறைப் போராளி உட்பட பலர் சூழ்ந்து நிற்பதைக் காண்க

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வித்துடல் மேடை

 

 

"அன்னை மண்ணில் விடுதலைப் பண்ணை இசைத்திட வீழ்ந்திட்ட வீரர்களே - உங்கள்
கனவு பலித்திட நாளும் களத்தினில் பலமாய் நாங்கள் நடந்திடுவோம்"

 

 

பின்னர் அங்குள்ள வித்துடல் மேடை நோக்கி தாங்கிச் செல்லப்பட்டு அங்கு வைக்கப்படும். அதற்குள் "சூரிய தேவனின் வேருகளே" என்ற பாடல் ஒலித்து முடிவடைந்திருக்கும். அதாவது பொதுச்சுடர் பீடம் பின்னால் இருக்கக்கூடியதாக வித்துடல் வைக்கப்பட்டிருக்கும். அச் சந்தனப் பேழையானது மஞ்சள்-சிவப்பு நிறத் துணியின் மேலே தான் வைக்கப்படும். பின்னர் குத்துவிளக்கு ஏற்றுவர்.

 

Lt. Col Arjunan.jpg

'லெப். கேணல் அர்ச்சுணனின் வித்துடலானது வித்துடல் மேடையை நோக்கி படிக்கட்டில் தூக்கிச் செல்லப்படுகிறது. வித்துடல் மேடை தமிழரின் பண்பாட்டிற்கு ஏற்ப அலங்கரிக்கப்பட்டுள்ளதை நோக்குக.'

 

sa.jpg

'வேறொரு மாவீரரின் வித்துடல் வைக்கப்பட்டுள்ளதை நோக்குக.'

 

maaveerar thuyilum illam (4).jpg

'ஒரே நேரத்தில் பல சந்தனப் பேழைகள் பொதுச்சுடரைச் சுற்றி வைக்கப்பட்டிருப்பதைக் காண்க. அத்துடன் அவை எவ்வாறு அழகுற தேசியங்களால் சோடிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நோக்குக.'

 

வைத்த பின்னர் வித்துடல் மேடையில் நின்றபடி பொறுப்பாளர் ஒருவர் இறுதியாய் மாவீரருக்காக அங்கே கூடியுள்ள மக்கள் முன்னிலையில் உறுதியுரை வாசிப்பார். அப்போது வித்துடல் பேழையின் இரு மரங்கிலும் இப்படி கவனநிலையில் நிற்கும் போராளிகள்,

asd.jpg

ஒரு பெண் போராளியின் வித்துடல் வைக்கப்பட்டுள்ளது

 

உடனே தம் தலைகளைக் குனிந்து இப்படி நிற்பர், ஒரு கண நேரம்.

large.Uruthimozhireading.jpg.a42ba6efea2e5712e9f79802e86d1da7.jpg

'அருகில் குத்துவிளக்கு சுடர்விட்டு எரிவதைக் காணவும்'

 

NFLSA.png

 

அகவணக்கம் முடிந்த அடுத்த கணமே வித்துடலைச் சுற்றி நான்கு மூலைகளில் நின்றிருக்கிற துமுக்கி (rifle) ஏந்திய போராளிகள் நால்வர், மூன்று முறை வெற்று வேட்டுகளை தீர்ப்பர். பின்னர் துயிலுமில்லப் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி’ ஒலிபரப்பப்படும் (இப்பாடலானது மாவீரர் நாள்களில் உறுதிமொழியுடன் சேர்த்து  ஒலிக்கவிடப்படும்.). அப்போது அனைவரும் வீரவணக்கம் செலுத்துவர். 

 

இதுவொரு தமிழீழப் பண்பாட்டுச் சடங்கு ஆகும்!

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 விதைப்பு
 

 

"சொந்த உறவுகள் துன்பம் சுமக்கையில் உம்மைப் பலிகொடுத்தீர்!"

 

பின்னர், வீழ்ந்து வித்தாகிய மாவீரரின் வித்துடல் கொண்ட சந்தனப் பேழையானது இவ்வாறு கயிறுகள் மூலம் விதைகுழியினுள் இறக்கப்படும், பழகிய அ உறவுக்காரப் போராளிகளால் (!?).

 

 

 

f7.jpg

மேஜர் புகழ்மாறன் அவர்களின் வித்துடல் விதைகுழியினுள் விதைக்கப்படுகிறது

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

விதைகுழி

 

 

"மண்ணில் விதையாய் விழுவது
மீண்டும் மீண்டும் முளைப்பது - என்றும்
மீண்டும் மீண்டும் முளைப்பது

எங்கள் மாவீரர் தானது!
தமிழா உன் திருநாளாம் 
மாவீரர்கள் தினமதுதானே! "

 

 

இதற்குள் தான் வித்துடல் கொண்ட சந்தனப் பேழை விதைக்கப்படும். துயிலுமில்லத்தில் வித்துடல்கள் விதைக்கப்படும் போது வித்துடலின் கால் து. ஒலிமுகத்தை நோக்கியதாக இருக்கும்படியாகவே விதைப்பர். விதைக்கப்பட்ட பின்னர் பொதுமக்களும் போராளிகளும் இறுதியாக வந்து இருகைகளாலும் மண்ணை அள்ளி விதைகுழியினுள் போட்டுவிட்டுச் செல்வர். சில வேளைகளில் வெள்ளை மணல் கிடைக்குமாயின் வெள்ளை மணலே தூவப்படுவதுண்டு. ஆட்கள் மண் போட்டுச் சென்றபின் எஞ்சியிருக்கும் மண்ணை இன்னும் நிரம்பிடாத குழியினுள் மண்வெட்டியின் துணையுடன் இட்டு நிரப்புவர்.

மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெறும் இவ்வித்துடல் விதைப்பில் பால் மற்றும் வயது வேறுபாடின்றி அனைவரும் (ஆண், பெண், குழந்தை, சிறுவர்) கலந்துகொள்வர், ஒரு பிடி மண்ணும் போட்டுச் செல்வர். 

 

few3.png

'விதைகுழியின் இருபக்கமும் இவ்வாறாக புலிவீரர் அகவணக்கமாக நிற்பர், பெரும்பாலான இடங்களில்'

 

 

cytyt.jpg

'போராளிகள் இவ்வாறுதான் வரிசையாக வந்து விதைகுழிக்குள் மண்தூவிச் செல்வர்'

 

4as4.jpg

'பொதுமக்கள் இவ்வாறுதான் வரிசையாக வந்து விதைகுழிக்குள் மண்தூவிச் செல்வர். அவர்களது அரத்த உறவினர் யாரேனும் மண்தூவ வரும் போது அவர்களை பெண்/ ஆண் போராளிகள் தாங்கிப்பிடித்திருப்பர். ஏனெனில், அவர்கள் பிரிதுயரால் மயங்கி உள்ளே விழுந்துவிடாமல் இருப்பதற்கு'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

(மேலுள்ள மறுமொழிப்பெட்டிகளில் உள்ள வித்துடல் விதைப்புத் தொடர்பான தகவல்கள் விரைவில் விரிவாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.)

--> 19/11/2023

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

துயிலுமில்லத்தினுள்ளிருந்த ஏதோ ஒன்று

 

பார்ப்பதற்கு நன்கு சோடிக்கப்பட்டதாக பூக்கூடை போன்று தோற்றமளிக்கிறது. என்னவென்று எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஒருவேளை பொதுச்சுடர் பீடத்திலுள்ள அந்த பொதுச்சுடர் ஏற்றும் கிண்ணத்திற்கு மேலே வைக்கப்பட்டுள்ள சோடிக்கப்பட்ட தட்டாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

சரியாக என்னவென்று அறிந்தவர்கள் வரலாற்றைக் கடத்த தெரியப்படுத்துங்கள்.  

(நீங்கள் ஆரும் சொல்லித் தரமாட்டியள் எண்டு தெரியும்... பரவாயில்லை, நானே நாடியறிந்துகொள்கிறேன்😏😤.)

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (32).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.