Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற சிங்கள மாணவி ஒருவர் சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் யாழ்ப்பாணத்தைப்பற்றி கூறிய விடயங்கள்


Recommended Posts

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற சிங்கள மாணவி ஒருவர் சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் யாழ்ப்பாணத்தைப்பற்றி கூறிய விடயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிங்கள மொழியில் இடம்பெற்ற இந்த உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பினை இங்கு இணைக்கின்றோம். #யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயக பிரதேசங்கள் குறித்து தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் மத்தியில் இந்த மாணவியின் வெளிப்படையான கருத்துக்கள் இங்கு காண்பிக்கப்படவேண்டியதாகும்.

கேள்வி:- உங்களுக்கு கிட்ட உள்ள பல்கலைக்கழகம் எது?

மாணவி:- சபரகமூவா பல்கலைக்கழகம்

கேள்வி:- இரத்தினபுரி மாணவர்களுக்கு சபரகமூவா பல்கலைக்கழகம் கிட்ட, கொழும்பில் உள்ள மாணவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகம் கிட்ட, பேராதெனியாவில் உள்ளவர்களுக்கு பேராதெனிய பல்கலைக்கழகம் கிட்ட, இரத்தினபுரி, பேராதெனியவில் உள்ளவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகம் மிகவும் தொலைவில் உள்ளது. கொழும்பில் உள்ளவர்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மிகவும் தூரத்தில் உள்ளது. அப்படி இருக்கும் போது உங்களுக்கு எப்படி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கிட்ட ஆகியது?

மாணவி:- எனக்கு மிகவும் ஆசை தமிழ்த்திரைப்படம் பார்ப்பதற்கு, அழகான உலகம் இருப்பது போல தெரிந்தது எனக்கு, அங்கு சென்றால் அப்படி வாழமுடியும் போல எனக்கும் தோன்றியது. நான் விரும்பியே அங்கு சென்றேன், முதலில் எனக்கு வவுனியா பல்கலைக்கழகத்திற்கு (applied science)தான் அனுமதி கிடைத்தது, நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு (Bio science ) விண்ணப்பம் செய்தேன், அதனால் தான் எனக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது.

கேள்வி:- யாழ்ப்பாணத்திற்கே போகவேண்டும் என்று எண்ணியது எதற்காக?

மாணவி:- எனக்கு யாழ்ப்பாணம் மிகவும் பிடிக்கும், முன்னர் எனது வீட்டுக்கு முன்னால் எம்பிலிப்பிட்டிய-யாழ்ப்பாணம் பஸ் போகும். அதை பார்க்கும் போது எனக்கு ஆசை வந்தது யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் போல.

கேள்வி:- எம்பிலப்பிட்டிய-யாழ்ப்பாணம் பஸ் ஓடிய காலத்தில் நீங்கள் பாடசாலை போயிருப்பீர்கள் அந்த காலத்தில் நிலைமை எப்படி?

மாணவி:- அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தை பற்றி நல்ல விதமாக அறிந்திருக்கவில்லை, ஆனாலும் அங்கு சென்றவுடன் விளங்கியது நாங்கள் நினைத்தது போல கறுத்தப்பேய் அங்கு இல்லை என்று.

கேள்வி:- பல்கலைக்கழகம் என்பது?

மாணவி:- எங்களுக்கு தெரியாத பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

கேள்வி:- கல்வி, யாழ்ப்பாணம் ஆகிய இரண்டும் இணையும் போது எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. (கேள்வி கேட்பவர் ஒரு பாடலை ஒலிபரப்பு செய்கிறார்) உங்களுக்கும் ஞாபகம் வருதா என்று பாருங்கள்.

பாடல்:

“வடக்கு எல்லையிலிருந்து வரும் காற்றிலே ....!
கொழுந்துவிட்டு எரியும் மடு மாதாவே (தேவாலயம்)
கண் இமை ஓரத்தில் கண்ணீரை மறைக்கும்
சரோஜா என் மகளே...
வெடி ஓசையால் உனது சின்னஞ் சிறிய
எழுத்துக்கள் கோணிப்போக
என்ன நான் செய்வது மகளே
ஆசிரியை நான் மாணவி ஆவாய் நீ
ஆனபோதும் நாம் ஒரு வகுப்பிலே
கழுத்தின் மேல் கைகள் போட்டு சிரித்த
உனது சின்னஞ் சிறிய நண்பர்கள் எங்கே..
கருணை இல்லாத உலகைக் கண்டு
எல்லையை விட்டு அவர்களோ தொலைவிலே
முகாமில் இருக்கும் அப்பா
கனவில் வந்து கைகளை நீட்டும் வரை
யாருக்கும் நீ உருத்தவில்லை மகளே
அதுவரை உன்னை யார் அன்பாய் அரவனைப்பாரோ என் மகளே
குழந்தைகள் அழும் குரலில்
மாளிகை கதவுகள் உன்னை அழைக்கும்
இல்லை, கைகளில் துவக்குகள் ஏந்த
எல்லை மதிலோ உன்னை அழைக்கும்
கொள்கலத்தில் உன்னை தனியாய் விட்டு
எப்படிச் செல்வேன் மகளே
தவிர்க்க முடியா சூழ்நிலை என்னை
போவென விரட்டுது மகளே
இறுதியில், ஒருமுறையாவது உன் முகம் காட்டி
சிரித்திடு என் மகளே"
மாணவி:- ஆம்.

கேள்வி:- யுத்தம் முடிவடைந்து ஒன்று ஒன்றரை வருடம் முடிவடைய முதல் நீங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் செல்கிறீர்கள். தவறான முடிவாக தெரியவில்லையா?

மாணவி :- இல்லை. எங்களுக்கு நிறைய ஆதரவு தந்தார்கள். நான் தங்கியிருந்த வீட்டில் இருந்த அக்கா தனது இரண்டு குழந்தைகளையும் எங்களிடம் தான் தந்துவிட்டு செல்வார் பார்த்துக்கொள்ள சொல்லி, அந்த அளவு நம்பிக்கை, அதே போல எமக்கும் நல்ல ஆதரவாக இருந்தார். அந்த அக்கா இறந்திட்டார், இறந்த பின் அந்த அக்காவை பல நாட்களாக நான் கனவில் கண்டேன், அந்தளவுக்கு நான் அதிர்ச்சியடைந்தேன், எனது சகோதரி போல உணர்ந்தேன், நான் நினைக்கின்றேன் நாங்கள் இன ரீதியாக பிளவுபடக்கூடாது, நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக அளவுகளை கைவிட்டு மக்களை மட்டும் கருத்தில் கொண்டு வாழ முடியும் என்றால் இதைவிட நன்றாக இருக்கும்.

கேள்வி:- உண்மையை கூறுங்கள் யாழ்ப்பணம் செல்ல பயம் வரவில்லையா?

மாணவி:- அங்குள்ள விரிவுரையாளர்கள் மிகவும் நல்லவர்கள். தமிழர் சிங்களவர் என்ற பிரிவு காட்டவில்லை, எனது விரிவுரையாளர் துவிச்சக்கர வண்டியில் தான் வருவார். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. உடைகளை பற்றிய கவலை எல்லாம் நமக்கு இருக்கவில்லை. கையில் கிடைக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு செல்லமுடிந்தது. நிறைய சுதந்திரம் நமக்கு கிடைத்தது. அங்குள்ள மக்களும் சாதாரணமானவர்கள். உண்மையில் எனக்கு கொழும்பு செல்ல பயம். (கேள்வி கேட்பவரின் கண்கள் ஆச்சரியத்தில் மேலெழும்புகின்றன) யாழ்ப்பாணத்தில் எங்கு வேணும் என்றாலும் செல்ல முடியும் எந்த பயமும் இல்லை.

52114089_2202446396739133_17634070909083
 
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Popular Now

 • Topics

 • Posts

  • சீனாக்காரன்… எஸ்கிமோவருக்கே, ஐஸ்கிறீம் விக்கிற ஆட்கள். 🤣 அவங்களுக்கே… அல்வாவா….  😂😂  
  • இரத்தினக்கல் தொகுதியை கொள்வனவு செய்ய 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வம் இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதியை (Sapphire Cluster) கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர். குருந்தம் வகைக்கு உட்பட்ட உலகின் மிகப்பெரிய நீலமணி - இரத்தினக்கல் எனக் கருத்தப்படும் இரத்தினக்கல் தொகுதி இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 510 கிலோகிராம் எடை கொண்ட இந்த இரத்தினக்கல் தொகுதி வீடொன்றிற்கு அருகில் கிணறு தோண்டும் போது கிடைத்திருப்பதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்தது; இதன் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்படுகிறது. இரத்தினக்கல் தொகுதியை கொள்வனவு செய்ய 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வம் | Virakesari.lk
  • இது அறிவுரை அல்ல. அடித்துவிடல் என்றால் என்ன என்பதற்கான உதாரணத்துடன் கூடிய விளக்கம்.  முன்பே சொல்லியுள்ளேன் .நான் அறிவுரை எல்லாம் யாருக்கும் இலவசமாக சொல்வதில்லை. அடித்து விடுவது உங்கள் உரிமை 🤣. அதை கேள்வி கேட்பது எங்கள் உரிமை🤣. 🙏🏾 நானும் உடன்படுகிறேன். மிகுதி நாதம் கையில்🤣.
  • (எம்.மனோசித்ரா) நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த போதே ரிஷாத் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலில் ஒரு கட்டமாகவே பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மீதான நெருக்கடிகள் அமைந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மைகளைக் கண்டறியாது இவ்வாறான பழிவாங்கல்களிலேயே அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவினை இன்று புதன்கிழமை குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.  இதன் போது அவருடன் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ரிஷாத் தரப்பினரை எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து நீக்கிவிட்டோம் - எதிர்க்கட்சி தலைவர் | Virakesari.lk
  • பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒருபோதும் நீக்கக்கூடாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் எங்கும் பரிந்துரைக்கவில்லை. ஒருசில தமிழ் பத்திரிகைகளில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல் முற்றிலும் பொய்யாகும் என ஆணைக்குழு நேற்று சுட்டிக்காடியது. முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று கலாநிதி ஜஹான் பெரேரா சாட்சியமளிக்கையில் இடையில் குறுக்கிட்ட ஆணைக்குழுவின் தலைவர், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கூடாது என இடைக்கால அறிக்கையில் ஆணைக்குழு பரிந்துரை செய்திருப்பதாக ஒருசில இணையத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. இது மற்றிலும் பொய்யான செய்தியாகும் என சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்து தெளிவுபடுத்துகையில், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஆணைக்குழு இரண்டுவிதமான பரிந்துரைகளை செய்திருக்கின்றது. ஒன்று குருகிய கால திட்டம் மற்றது நீண்டகால திட்டம். குருகிய கால திட்டமாக, யாரேனும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டால், அவர் தொடர்பான பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க, அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் குழு அமைக்கப்படவேண்டும். ஆலோசனைக்குழுவின் பரிந்துரைக்கமைய  ஜனாதிபதி குறித்த நபரை தடுப்புக்காவலில் நீண்டகாலம் வைக்காமல் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடல், அதேபோன்று நீண்டகாலம் ஒருவரை தடுப்புக்காவில் வைத்துக்கொண்டிருக்காமல் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருந்தால் உடனடியாக வழக்கு தொடுக்கவும் இல்லாவிட்டால் அவரை விடுவிக்கவேண்டும் போன்ற உடடியான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என பரிந்துரை செய்திருக்கின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கூடாது என ஜனாதிபதி விசாரணைக்குழு எங்கும் பரிந்துரைக்கவில்லை | Virakesari.lk
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.