Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சீனாவின் ஊடுருவல்: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகையை ஏற்படுத்தும்-ஞா.ஸ்ரீநேசன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் ஊடுருவல்: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகையை ஏற்படுத்தும்-ஞா.ஸ்ரீநேசன்

 

DSCN1080 1 730x438 1 சீனாவின் ஊடுருவல்: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகையை ஏற்படுத்தும்-ஞா.ஸ்ரீநேசன்

அபிவிருத்தி என்கின்ற போர்வையில் சீனாவின் இலங்கை மீதான ஊடுருவல் என்பது நிச்சயமாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரியதொரு பகையை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இருக்கும்  என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு  கருத்து தெரிவித்த அவர்,

சீனா தற்போது வடபுலம் யாழ்ப்பாணம் வரை ஊடுருவி இருக்கின்றது. பூநகரியில் கௌதாரிமுனையில் இப்போது கடலட்டை வளர்க்கும் ஒரு பண்ணையை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இதுகூட இங்கு இருக்கின்ற மக்களுக்கு தெரியாமல் நடந்து இருக்கின்றது, முறையான அனுமதி பெறப்பட வில்லை, இப்படி யெல்லாம் பார்க்கின்ற போது இன்று சீனா யாழ்ப்பாண குடாநாட்டு பக்கமாகச் சென்றால் அது இந்தியா இலங்கை மீது ஆத்திரம் அடையக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடும்.

ஆகவே இந்நிலையில் பார்த்தால் அவர்கள் எங்களுக்கு அபிவிருத்தி என்ற போர்வையில் வருகின்ற போது இந்தியா தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனும் நிலைக்கு வரும். எனவே சீனாவும் இந்தியாவும் போட்டி போடுகின்ற மோதுகின்ற ஒரு போர்க் களமாக இந்து மா சமுத்திரத்தில் இலங்கை மாறப் போகின்றது என்ற கேள்வி எமக்குள் எழுகின்றது.

எனவே இப்படியான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அண்மையில் உள்ள இந்தியா, ஜப்பான், சீனா போன்ற மற்றய நாடுகளோடு பொதுவான சமநிலையான முறைமையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆலோசனையாக இருக்கின்றது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கின்ற போது அது இந்தியாவிற்கு விடுக்கின்ற ஓரு சவாலாகத் தான் பார்க்கப் படுகின்றது, ஏன் என்றால் இன்று சீனா ஒரு முத்துமாலை வியூகத்தை அமைத்து வருகின்றது. பாக்கிஸ்தானாக இருக்கட்டும் நேபாளமாக இருக்கட்டும் மியன்மராக இருக்கட்டும் வங்காளதேசாக இருக்கட்டும் எல்லா நாடுகளிற்கும் அளவிற்கு அதிகமான கடன்களை கொடுத்து பொறிக்குள் விழுத்தி அந்த இந்தியாவை சுற்றி பெரிய தொரு முத்துமாலை வியூகத்தை அமைத்து இருக்கின்றது. அந்த முத்துமாலை வியூகத்தில் முக்கியமான ஒரு கேந்திர நிலையமாக இப்போது இலங்கை மாறி இருக்கின்றது.

வட புலத்தில் அவர்கள் தங்களுடைய கால்களை தரிப்பார்களாக இருந்தால் இந்தியாவின் ஆயுத களஞ்சிய மென்பது தென்னிந்தியா பக்கமாக இருக்கின்றது. ஆகவே நவீன தொழில் நுட்பங்களை வைத்துக் கொண்டு இந்தியாவை முழுமையாக அவதானிப் பதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது. இந்த நிலையில் நான் சொல்லக் கூடிய ஒரு விடயமாக இருப்பது நிச்சயமாக சீனா கிழக்கிலும் வடக்கில் கால் ஊன்றுகின்ற போது நிச்சயமாக இந்தியாவிற்கு ஒரு பெரிய ஆத்திரத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயலாக அது இருக்கும் அதன் மூலமாக இந்தியா மாத்திரம் அதனை எடுத்துக் கொள்ளாமல் யப்பானும் விரும்பாது, அமெரிக்கா விரும்பாது, மேற்குலக நாடுகளும் விரும்பாது, எனவே அபிவிருத்தி என்கின்ற போர்வையில் சீனாவின் இலங்கை மீதான ஊடுருவல் என்பது நிச்சயமாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரியதொரு பகையை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இருக்கும் சில வேளைகளில் கச்சதீவை கூட இந்தியா மீளப் பெறக்கூடிய நிலமை ஏற்படலாம்” என்றார்.

 

 

https://www.ilakku.org/chinasinfiltration-animosity-sri-lanka-india/

Link to comment
Share on other sites

சீனாவின் ஆதிக்கம் பெரும்பாலும் பொருளாதார ரீதியானது. 

தமிழ் அரசியல்வாதிகள் ஏன் அநாவசியமாக துள்ளிக் குதிக்கிறார்கள் ?

அரசியல் பாமரனாகிய எனது பார்வையில்

இந்தியாவை மீறி தமிழர்களுக்கு ஒரு துரும்பும் கிடைக்காது என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. எதிர்பாராத வகையில் அது மாறிவிட்டது. பலம், வளம் இரண்டும் இல்லாத நாம் இரண்டு தரப்புடனும் சுமூகமாகச் செல்வதே நல்லது.

என்றாவது ஒரு நாள் சிங்களம் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் வரும். அப்போது இளைய புதிய அரசியல்வாதிகள் அறிவுபூர்வமாகச் செயற்படுவார்கள் என்று நம்புவோம்.

 • Like 6
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எலும்புத் துண்டு கிடைத்தால் துள்ளிக் குதிக்க வேண்டியதுதான்...😜

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

தமிழ் அரசியல்வாதிகள் ஏன் அநாவசியமாக துள்ளிக் குதிக்கிறார்கள் ?

உண்மையாகவே இவர்கள் பிரச்சனை விளங்கவில்லை, 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகைமை வந்தால் இவர்கள் எதுக்கு பதறுகிறார்கள்?

இலங்கை என்பது தமிழர்களை தங்களது தேச பிரஜைகள் என்று மனதார ஏற்றுக்கொண்ட ஒருநாடா?

அல்லது இந்தியா என்பது என்றைக்காவது ஒருநாள் தமிழர்கள் நலனை மனதார கருதி செயல்பட்டநாடா?

எதிரியும் எதிரியும் மோதிக்கொள்ளும்போது இடையில் புகுந்து விலக்கிவிட நமக்கு என்ன தேவையிருக்கிறது?

பெயரளவில் இவர்கள் தமிழர்கட்சிகள் என்ற நாமம் சூடிக்கொண்டாலும்  சிங்கள தேசத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடகூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

சீனாவின் ஆதிக்கம் பெரும்பாலும் பொருளாதார ரீதியானது. 

தமிழ் அரசியல்வாதிகள் ஏன் அநாவசியமாக துள்ளிக் குதிக்கிறார்கள் ?

அரசியல் பாமரனாகிய எனது பார்வையில்

இந்தியாவை மீறி தமிழர்களுக்கு ஒரு துரும்பும் கிடைக்காது என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. எதிர்பாராத வகையில் அது மாறிவிட்டது. பலம், வளம் இரண்டும் இல்லாத நாம் இரண்டு தரப்புடனும் சுமூகமாகச் செல்வதே நல்லது.

என்றாவது ஒரு நாள் சிங்களம் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் வரும். அப்போது இளைய புதிய அரசியல்வாதிகள் அறிவுபூர்வமாகச் செயற்படுவார்கள் என்று நம்புவோம்.

 

27 minutes ago, valavan said:

உண்மையாகவே இவர்கள் பிரச்சனை விளங்கவில்லை, 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகைமை வந்தால் இவர்கள் எதுக்கு பதறுகிறார்கள்?

இலங்கை என்பது தமிழர்களை தங்களது தேச பிரஜைகள் என்று மனதார ஏற்றுக்கொண்ட ஒருநாடா?

அல்லது இந்தியா என்பது என்றைக்காவது ஒருநாள் தமிழர்கள் நலனை மனதார கருதி செயல்பட்டநாடா?

எதிரியும் எதிரியும் மோதிக்கொள்ளும்போது இடையில் புகுந்து விலக்கிவிட நமக்கு என்ன தேவையிருக்கிறது?

பெயரளவில் இவர்கள் தமிழர்கட்சிகள் என்ற நாமம் சூடிக்கொண்டாலும்  சிங்கள தேசத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடகூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.

விசயம் அதுவல்ல.... கையை மீறி விசயம் போட்டுது.... நீங்களாவது, இந்தியா.... இந்தியா என்று உருட்டிக்கொண்டிருங்கோ என்று சொல்லி இருக்கு... அந்தப்பக்கமா சிவாஜிலிங்கம் வேற உருட்டுறார். வேறு பக்கமா ஸ்ரீதரன்....

அய்யாமாரே, இவர்களை, இந்த டெல்லிக்காரரை, நம்பி எந்த பிரயோசனமும் இல்லை. மாறாக சீனா நமது பிரதேசத்தில் முதலீடு செய்து, அமைதியை உருவாக்கினால், புலம்பெயர் தமிழர்கள் நம்பிக்கையுடன் வந்து, அவர்களுடன் சேர்ந்து வணிகம் செய்வார்கள் என்று அடித்து விடுங்கள், துணிவுடன்....

அதுவே, இன்று சரியான அரசியல்...

 • Like 3
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

நீங்களாவது, இந்தியா.... இந்தியா என்று உருட்டிக்கொண்டிருங்கோ என்று சொல்லி இருக்கு... அந்தப்பக்கமா சிவாஜிலிங்கம் வேற உருட்டுறார். வேறு பக்கமா ஸ்ரீதரன்....

இவர்களை தூண்டி விடுவது, அண்மையில் சீனாவை கையாள்வது எவ்வாறு என்று தமக்கு  தெரியும் என்று  தம்பட்டம் அடித்த ஹிந்தியை தூதரகம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 இந்தியாவுக்கு எப்போதும் உருட்டி விளையாடுவதற்கு தறுகாயாக  தமிழ்த்தலைமைகள் இருக்கிறார்கள். எந்தப்பக்கம் உருட்டினாலும் உருண்டுகொண்டே இருப்பார்கள். அது அவர்களின் ராஜதந்திரம்.  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் சீன அதிகார போட்டி இருக்கும் வரைக்கும்  ஈழத்தமிழர் பிரச்சனை மூடப்பட்டே இருக்கும். காரணம் எமது தமிழ் அரசியல் தலைவர்களின் தீவிரம் அப்படி.
சர்வதேச அரசியலில் தமது தேவைக்காக யாராவது ஈழத்தமிழர் பிரச்சனையை தூசு தட்டி நல்ல தீர்வு வந்தால் ஒழிய வேறு வழியில்லை.

எமது அரசியல் தலைவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய சோத்து மட்டைகள்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நாதம் வழமை போல் சீமான் பொய் சொல்கிறார் என்று நாம் சொன்னால் - “ஐயோ அகதிகள் பாவம்” என சம்பந்தமில்லாமல் நீலிகண்ணீர் வடிக்கிறார்🤣. மேலே யார் அகதிகள் பற்றி தப்பாக பேசியது? யாருமில்லை. இங்கே பேச்சு சீமானின் பொய்யை பற்றி மட்டுமே. அகதிகள் பற்றிய கரிசனை எல்லாருக்கும் உண்டு.  மேலே மிக தெளிவாக குறிப்பிட்டேன் சீமான் கடிதம் கொடுத்திருந்தால் அது ஒரு வழக்கின் ஆதாரம் என்பதாக மட்டுமே கருதப்பட்டிருக்கும்.  ஏற்கனவே இலங்கையில் உயிராபத்து உள்ளவராக உள்ள இலங்கையர் ஒருவரை - அவரின் உயிருக்கு ஆபத்து என்பதை நிறுவ சீமானின் கடிதத்தையும் ஒரு சாட்சியாக நீதி மன்றம் ஏற்றிருக்கலாம்.  இலங்கை எம்பிகள் கொடுக்கும் கடிதம், இலங்கை வக்கீல்கள் கொடுக்கும் கடிதம் போல, தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சின்ன கட்சியின் தலைவரின் கடிதம் என்ற அளவில் அதை நீதி மன்று கையாண்டிருக்கும்.  ஆனால் சீமான் சொல்வது போல் ஏதோ இவர் கடிதம் கொடுத்தால் இந்த நாடுகள் உடனே அந்தஸ்து கொடுத்தது என்பது விளக்கம் இல்லாத மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலைதான். அதில் கூட 10 வருடத்துக்கு முன் ஒரு தடவை இலங்கை போன சீமானுக்கு - இப்போ இலங்கையில் ஒருவருக்கு உயிராபத்து என்பது எப்படி தெரியும் என்ற கேள்வி நிச்சயம் எழும்.  ஆகவே 400 பேர் என்பதும் நம்பவியலாதது. மூன்று நாட்டில் 400 கடிதம் என்றால் ஒரு நாட்டில் அண்ணளவாக 125 கடிதம்.  கொடுக்கும் கடிதம் ஒவ்வொன்றிலும் அந்த நபரை தனக்கு எப்படி தனிப்பட்டு தெரியும், அவருக்கு என்ன ஆபத்து, அதைதான் இந்தியாவில் இருந்தபடி எப்படி தனிப்பட்டு அறிந்தேன் என விளக்க வேண்டும்.  சும்மா போட்டோ கொப்பி மாரி அடித்து அனுப்பினால் அதை கனம் பண்ண மாட்டார்கள். அல்லது கூலிக்கு கடிதம் கொடுக்கும் professional witness என்றே கருதுவார்கள். ஏலவே சீமான் பல பொய்களை நா கூசாமல் சொல்பவர் என்பதால் இதையும் ஒரு மிகைப்படுத்தல் என்றே பார்க்க முடியும். கெளரவம்,  விதி, போன்ற சினிமா படங்கள் போலன்றி evidence ஐ ஒரு நீதி மன்று எப்படி அணுகும் என்ற அடிப்படை புரிதல் இருந்தாலே சீமானின் 400 பேர், கப்ஸா என்பது வடிவாக புரியும்.  சீமான் இலங்கையில் சந்தித்த ஒரு சிலரின் வழக்குகளுக்கு இப்படி கடிதம் கொடுத்திருக்கலாம். சீமான் பின் வருமாறு கூறி இருந்தால் அதில் யாரும் பிழை காண முடியாது.  “எனக்கு தெரிந்த சில ஈழத்தமிழர்களுக்கு உயிராபத்து என்பதை உறுதி செய்து நான் கொடுத்த்த கடிதத்தை, ஆதாரங்களில் ஒன்றாக ஏற்று இந்த நாடுகள் அவர்களுக்கு தஞ்சம் அளித்தன”.  ஆனால் சீமான் சொன்னது? ஏதோ தான் கடிதம் கொடுத்தால் இந்த நாடுகள் எல்லாம் உடனே குடியுரிமை கொடுக்கும் என்பதான சோடிப்பு. இதைதான் கருணாநிதியும் செய்தார்.  ஆனால் கருணாநிதி பரம்பரை கள்ளன் - லேசில் மாட்ட மாட்டார். சீமான் பஞ்சத்துக்கு கள்ளன் - பொய் சொல்லி மக்களை ஏய்க்க வேண்டும் என்று தெரிகிறது ஆனால் எப்படி மாட்டு படாமல் பொய் சொல்வது என தெரியவில்லை🤣.
  • மாவீரர்களுக்கு வீரவணக்கம்
  • நாதம் இன்னும் கள விதிகளைப் படிக்கவில்லைப் போல: ஒருவர் உங்கள் கருத்துக்குப் பதில் எழுதிய பின்னர் மீளப் போய் உங்கள் கருத்தை மாற்றுவது தவறு! பொதுவான திரியில் "எனக்கு முதுகு சொறி அல்லது விலகிப் போ" என்பதும் விதி மீறல்! இதை பற்றி ஒரு நாற்சந்திக் காவியமே இருக்கிறது! எனவே காணொளி வடிவில் வரும் வரை இருக்காமல் போய் விதிகளை வாசியுங்கோ! தவித்த அகதிக்குக் கிடைத்த சிறு குச்சி "நான் மட்டும் தான் கொம்பானேன்" என்று பொய் சொல்வது மிகுந்த "பெருந்தன்மை" என நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?😎 முடிவாக நாம் சொல்வது, சீமானின் வழமையான புழுகு மூட்டைகளில் இது ஒன்று அவ்வளவே!  
  • வணக்கம் அண்ணா, கள்ள உண்ணாவிரதம் இருந்தவர்கள் யாரும், ஈழத்தமிழர்களை இரட்சிக்க வந்ததாகவும், தலைவரின் அவதாரமாகவும் சொல்லிக் கொள்வதில்லையே? அதனால் அவர்கள் எப்படிப் போனால் நமக்கென்ன? பலரும் அகதி அந்தஸ்தா, குடியுரிமையா என்ற ஆராய்சியில் இறங்கி விட்டிருப்பது தெரிகின்றது.. அது தேவையற்றது என்பது என் கருத்து... பல கடித, ஆவணங்களில் ஒன்றாக சிலருக்கு நாம் தமிழர் கடிதமும் உதவி இருக்கலாம்... முன்னாளில் நாம் தமிழரில் இணைந்து பயணித்த அய்யநாதன் தான் பலமுறை சீமான் கையெத்துப் பெற்று கடிதங்களை நாடு கடத்தப்பட இருந்தவர்களுக்கு அனுப்பியதாக கூறியுள்ளார்... சரி. திரு.சீமான் இப்போது இதனை கூற காரணம் என்ன? என் தனிப்பட்ட ஆய்வு (my own analysis). நாம் தமிழர் இயக்கம் பின்னர் கட்சி, ஈழத்தமிழர் பொருளாதாரத்தைக் கொண்டு கட்டி எழுப்பபட்ட, வளர்க்கப்பட்ட ஒரு அமைப்பு என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கென தனியான ஆராய்ச்சி எதுவும் தேவையற்றது... கட்சி ஓரளவில் வளர்ந்து பொருளாதார ரீதியாக சொந்தக்காலில் நிற்கத்தொடங்கியதும் நாம் தமிழர் தொனி (tone) கொஞ்சம் மாறத்தொடங்கியது.. ஈழத்தமிழரும் கொஞ்சம் தருவதாக... இன்று, ஈழத்தமிழருக்கு குடியுரிமை பெற்றுக்கொடுத்ததே நான் தான் என சொல்வதன் பொருள், நாளை நான் ஈழத்தை பெற்றுத் தருவேணே இல்லையே, பணம் தரவேண்டியது உங்கள் கடமை என ஒரு கருத்தியலை உருவாக்குவதற்கான முதற்படி...
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.