Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட தடுபடையான கேடகங்கள் பற்றியே. நான் இங்கு தமிழர்களின் கேடகங்கள் பற்றிய பல்வேறு தகவல்களை உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன்.

 


1)கடகம்/ கடகு/ கேடகம்/ கேடயம்/ சேடகம்/ வட்டணை - அனைத்து விளிம்புகளும் வளைந்து தொடுமாறு வளைவாக அமைக்கப்பட்ட சிறிய வட்ட வடிவ கேடகம்

"கேடகம் வெயில்வீச' - (கம்பரா. கடிமண. 33)

"மயிர்ப்புளக சேடகமு மேந்தி" (சூளா. அரசி. 159)

"இட்ட வட்டணங்கன் மேலெறிந்த வேல்" (கலிங்.413), (யாழ்.அக.)

"கடகு" - (சீவக.2218, உரை)

"கடகம்" - (திவா.)

main-qimg-5998bbc4b71fb140140259f0ad190555.jpg


2)கடிகை/ கடித்தகம் - மிகுந்த காவலான அரணைத் தரும் கேடகம்

"கடித்தகப் பூம்படை கைவயி னடக்கிக் காவல்" (பெருங். உஞ்சை.53:140)

"கடிகை" - (சிலப்.4:173,அரும்)


2)கிடுகு - நல்ல மறைப்பைத் தரும் கிடுகு

"வார்மயிர்க் கிடுகொடு" (சீவக. 2218)


3)தண்டை - பிரப்பங்கேடகம் - Ratan shield

பிரப்பந்தடியால் செய்யப்பட்ட கேடகம்.

"வள்ளித் தண்டையும்" (சீவக 2218)

main-qimg-51eef634e1bb7689e877481d49efa58b.png

'இது சீனர்களுடையது... அறிவதற்காக மட்டும் கொடுத்துள்ளேன்.'

 


4)மரத்தால் ஆன கேடகம் - மரவட்டணம்/ மரத்தட்டு/ பலகம்

பலகம் - (பிங்)

main-qimg-1beebe88bdc863c17913c805fe302c8d.png

 


5) தோலினாலியன்ற கேடகம் - தோல், தோற்பரம், தோற்பலகை

"தோலின் பெருக்கமும்" (தொல்.பொருள். 67)

"போர் மயிர்க் கேடகம் புளகத் தோற்பரம்"(சீவக. 2218)

"தோற்பலகை" சூடாமணி

main-qimg-95bfa4ff4749f238fdcd1b84bd4286f6.jpg

6) மாயிரும்பஃறோல் - மிகப் பெரிய தோற்கவசம்

"மையணிந் தெழுதரு மாயிரும் பஃறோல்" (சிறு செங்குவளை, 52,5)


7) தட்டு/ மட்டம் / வட்டம்- மட்டமான ஒரே சீரான வட்ட வடிவ கேடயம்

மட்டம் - (வின்.அக)

தட்டு - (பிங்)

"ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப" (திருமுரு.111);

main-qimg-7c7e929f6e8cf7287c21354d822b28d7.jpg


8)பரிசை/ மாவட்டணம்/ தட்டியம் - பெரிய வட்டமான பாதி உடலை மறைக்கும் வகையில் அமைந்த கேடயம்.

"நீடிய பரிசையே மாவட்டண நெடியவட்டம்" - (பிங்)

''தட்டியம்'' - (திவா)

main-qimg-d7b3062e60e7d6939bb0b5c9b60771cb.jpg


9) நெடியவட்டம்- நெடிய வட்டமான முழு உடலையும் மறைக்கும் வகையில் அமைந்த பெரிய கேடயம்.

''நெடியவட்டம்'' - (பிங்)

"நீடிய …. நெடியவட்டம்" (சூடாமணி)

main-qimg-4cd50933374ff9176c1a6604924030fb.png

 

10)

நெஞ்சிலிருந்து அடிவயிறு வரையில்லான உய்ரம் உடைய கேடகம். இதன் விதப்பான பெயர் அறிய முடியவில்லை. ஆனால் இதே போன்ற ஒத்த வடிவிலான கேடகம் பாண்டைய சேர நாடான தற்போதைய கேரள மாநிலத்தில் உள்ளது..

main-qimg-85079af3c9469e9c1825181db27a143c.png

'பெரிய கிழங்கன் நடுகல் | சிலை உள்ள இடம்: ஈரோடு அருங்காட்சியகம் | படிமப்புரவு: தகவலாற்றுப்படை'

 

11)

கழுத்திலிருந்து மரும உறுப்பு வரையிலான உயரம் உடைய கேடகம். இதன் விதப்பான பெயர் அறிய முடியவில்லை. இதன் விளிம்புகள் யாவும் உட்பகுதியுடன் ஒப்பிடுகையில் தடித்து காணப்படுகின்றன.

main-qimg-335774c17538e2b0c700c78491501348.png

'நடுகல் வீரன் | கிடைத்த இடம்: ஈரோடு கோபிச் செட்டிப்பாளையம் | படிமப்புரவு: தகவலாற்றுப்படை '

 

12)

இது மிகவும் அகலமான அதே நேரம் மேற்கண்ட இரண்டைக் காட்டிலும் உயரமான கேடகம் ஆகும். இதன் இருபக்க விளிம்புகளும் தட்டையாக காணப்படுகின்றன. அதே நேரம் இதன் கைபிடியும் தடித்து உள்ளது. இதன் விதப்பான பெயர் அறிய முடியவில்லை.

main-qimg-f8b3461e42bf26c39d92e667831f5091.png

'கி.பி.12 ஆம் நூற்றாண்டு | சோழர் காலம் '

 

13) இது சிறியதே... இதே போன்ற பெரிய வடிவுடையது அசோகரின் காலத்தில் வட இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

main-qimg-d6e30679d394b33260b159c3873b0aa9.png

'ஈழத்தின் மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காசு | படிமப்புரவு: சிங்கள இணையத்தளம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது.. | காலம்: அறியில்லை'


  • வெட்டி, கானப்படம் - காடுக் கொடிகளாலான கேடயம்
  • ஏனப்படம் - பன்றித்தோல் போர்த்திய/ பன்றிப்படம் வரைந்த கேடயம்
  • கிடுகின் படம் - தோல் அல்லது மூங்கினால் செய்யப்பட்ட சிறுவடிவுடைய கேடகம்

இவை மூன்றும் மட்டும் போரியல் அன்றும் இன்றும் என்னும் புத்தகத்தில் இருந்து எடுத்தனான்.


உசாத்துணை:

  • செ.சொ.பே.மு.
  • தண்டை - J.P.Fabricius Tamil and English Dictionary
  • ஏனையவற்றை எனக்கு கிடைத்த படங்களை வைத்தே எழுதியுள்ளேன்.

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.