Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழில் உள்ள படைப்பிரிவுகள் குறித்த பண்டைய சொற்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

main-qimg-799ff5391efeb2d67673fcc7be377402.png

'படிமப்புரவு: சொந்தமாக உருவாக்கியது'

படை - தற்காலத்தில், ஒருநாட்டின் ஆணையமுள்ள படைக்கலம் ஏந்திய வீரர்கள் கூட்டத்தையும்(army) அவற்றினுட்படும்,

 • மூவேறு பூதங்களிற்கான படைகளையும்[தரைப்படை(நிலம்), கடற்படை(நீர்), வான்படை(காற்று)],
 • விதவிதமான போர்ச் செயல்கள் செய்யும் வீரர்களை அவர்தம் செயல்களிற்கு ஏற்ப தனித்தனிப் படையாக(force) பிரித்து (அதிரடிப்படை, தற்கொடைப்படை, துணைப்படை, எல்லைப்படை போன்றவை) அவற்றையும் படை என்னும் சொல்லால் குறிப்பதுவே

படை என்னும் சொல்லின் பொருளாகும்.


 1. பகுதி - படையில் உள்ள ஒரு சிறிதளவு(section)
 2. பக்கம் - படையின் ஒரு பக்கம்(side)
 3. கை - Flank (பண்டைய காலம் & தற்காலம்)
 4. இறகு - தற்காலத்தில் Wing-இற்கு நிகரான சொல். பண்டைய காலத்தில், பேரணியின் ஒரு இறகு . திருக்குறளின் படைமாட்சி அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் '7 படையுறுப்புகள்' என்பவை யாவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில்
 5. அளவுபடை - மிகச்சிறிய படை
 6. நாரி- இச்சொல் வரிசையாகத்தொடுத்த மாலைபோன்று திகழும் படை அணி என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. என்கிறது செ.சொ.பே.மு. . என் விளக்கமும் அதுவே!
 7. தாக்கு - பொருள் படை என்பதாகும். மேலும் இதன் பொருள் தாக்கு, மோதுகை, நொறுக்குதல் போன்றனவாகும். அதாவது சமரில் தாக்கும் படையின் உட்பிரிவுகளில் ஒன்று என்னும் பொருளில் இங்கு வழங்கியுள்ளேன்
  1. ஆதாரம்: "தாக்கர்தாக் கரந்தையுற" (மாறானலங். 440)
 8. வானி - பண்டைய காலத்தில் வானுயர்ந்த (மனிதர்களிற்கு அது வானுயர்ந்ததே) கொடிகளை(துகிற்) தாங்கிச் செல்லும் படை(force).
 9. வலம் - பல சேனைகளின் சேர்வால் ஏற்படும் படை வலம் ஆகும் . இச்சொல் வின்சன் அகராதியில் இடம்பெற்றுள்ளது. சூடாமணியில் பலம் எனவுள்ளது.
  1. ஆதாரம் : "சேனையே கவனம், கூடிச் செறி பலம் பரிக லம்தான்" சூடாமணி - 183
 10. சேனை - தற்காலத்து வடபிராந்திய தரைப்படை, கிழக்கு பிராந்திய தரைப்படை போன்றவையாகும். (சோழர்களிடம் ஒன்றில் இருந்து மூன்று சேனை இருந்தது). ஒக்க சேனையும் ஒருசேர படை எனக் குறிக்கப்பட்டது. | பிராந்தியம் - சமற்..
  1. கவனம் - இது சேனையின் மறு பெயராம்!
   1. ஆதாரம்: "சேனையே கவனம்," சூடாமணி, 183
   2. சமற்கிருதத்தில் படை/சேனை என்னும் பொருளில் இச்சொல் வழங்கப்படவில்லை - Kavana, Kavaṇa, Kavanā: 8 definitions
  2. இதன் கட்டளையாளர்களாய் இருந்தவர்களைக் காண இங்கே சொடுக்கவம்: படைத்தலைவன் என்னும் சொல்லுக்கான ஒத்த தமிழ்ச் சொற்கள் எவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில்
 11. தளம் - மேற்கண்ட ஒரு சேனையுட்படும் தரைப்படை, கடற்படை, வான்படை ஆகிய முப்பூதங்களிற்கான படைகளையும் துணைப்படை, எல்லைப்படை, அதிரடிப்படை, தற்கொடைப்படை போன்றவற்றையும் குறிப்பது. ஒரு பிராந்தியத்திற்குள்ளேயே பல தளங்கள் இருக்கும். இவையெல்லாம் இருக்கும் இடத்தையும் தேவையையும் கருத்தில் கொண்டே இதனுட்படும். இவை இருக்கும் இடத்தினால் அவ்விடத்திற்கு தளம் என வழங்கி, அதுவே பிற்கலத்திலும், பேந்து தற்காலத்திலும் 'படைத்தளம்' என்னுஞ்சொல்லில் வரும் தளத்தின் பொருளை தாங்கிற்று.
  1. இந்த தளமே தண்டமென வழங்கப்பட்டதாக சூடாமணி குறிப்பிடுகிறது. எனவே இதிலிருந்து நாமறிவது யாதெனில், தளமளவு வீரர்கள் கொண்டது ஒரு தண்டம் ஆகும். (மதுரை மீது ஈழ அரசன் பராக்கிரமபாகுவின் இரு தண்டப் படை வந்ததை இவ்விடத்தில் நினைவு கூறுகிறேன்)
   1. ஆதாரம் : திவா, "தளமே தண்டம்" சூடாமணி - 183
  2. இதன் கட்டளையாளர்களாய் இருந்தவர்களைக் காண இங்கே சொடுக்கவம்: படைத்தலைவன் என்னும் சொல்லுக்கான ஒத்த தமிழ்ச் சொற்கள் எவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில்
 12. அணி - தற்காலத்தில் Team | பண்டைய காலத்தில் தளத்தின் உட்பிரிவுகளாக விளங்கியவை. அக்காலத்தில், இவற்றை விடவும் சிறிய வீரர் கூட்டம் இருந்ததுண்டு.
 13. படையணி - ஒரு குறிப்பிட்ட அளவு, குறிப்பிட்ட வேலையை மட்டுமே செய்யும் வீரர்களைக் கொண்ட கூட்டம்.
  1. ஆதாரம்: சோழர்களின் 33 படையணிகள் Chola military - Wikipedia
 14. கூளப்படை - பல வகைப் படைகள் கலந்த படை
 15. படைச்சாத்து- பல வகைப் படைகளின் கூட்டம்
 16. படைக்குட்டம் - கடலின் கரை போன்ற பெரும் படை
 17. மூகை- மூகை என்றால் படைக் கூட்டம்(army group) என்று பொருள்.
 18. அதிகம்- ஒரு பிரிவில் அதற்குரியதான வீரர்களைவிட மிதமிஞ்சிய வீரர்கள் இருந்தால் அவ்வீரர்கள் அதிகம் எனப்படுவர். (அர்தசாஸ்திரத்தில் இருந்தே இப்பொருளை எடுத்தேன், சொல்லையன்று!)
 19. திரள் - குறிப்பிட்ட ஒரு படையின்(force) திரள்
  1. "மதமாபுரவித்திரள்கைப்" வில்லிபாரதம், 210
 20. தானை - காலாட்படை
  1. தானாகச் செல்லும் படையாகிய காலாட்படையினை தானை என்றனர் பண்டைத்தமிழர். இதை தற்காலத்தில் சேனைக்கு ஒத்த சொல்லாக சிலர் கருதுகின்றனர், அது தவறு. சேனை என்பது மொத்தமானது.
  2. ஆதாரம்: தானை என்பதன் பொருள் என்ன?
  3. → தேரும் குதிரை மூலம் இயங்குவதால் அதுவும் குதிரையினுள் அடங்கிவிடும்.
 21. பாடி - பாடிவீட்டினுள் தங்கியிருக்கும் வீரர்களைக் குறித்த சொல்
 22. தாணையம் - படைத்தளம் மற்றும் அதற்குள் குழுமியிருக்கும் சேனை.
 23. கோட்டைக்கட்டு - கோட்டையினைப் பாதுகாக்கும் படை.
 24. மரபுப்படை - மரபுவழித் தாக்குதல் செய்யும் வல்லமை படைத்த படை. அதாவது முப்படைகளையும் கொண்ட படை.
 25. கரந்தடிப்படை - கரந்தடித் தாக்குதல்கள் செய்வதில் வல்ல படை

தமிழில் உள்ள சமற்கிருத சொற்கள்:-

 • பதாகினி - படையின் மறு பெயர்
  • ஆதாரம் : " ஊனம் இல் படை மூவைந்தாம் உறுபதா கினியும் அப்பேர்" சூடாமணி - 183
 • பதாதி - ஒரு யானையும், ஒரு தேரும், மூன்று பரியும், ஐந்துகாலாட்களும் கொண்ட அளவுபடை
  • தானையின் மறு பெயராகவும் பதாதி வழங்குகிறது.
   • ஆதாரம் : "தானையே பதாதி" சூடாமணி, 143
 • வாகினி - 81 யானைகளும் 81 தேர்களும் 243 குதிரைகளும் 405 காலாட்களும் உள்ள படையின் பிரிவு
 • அனீகம் - அக்குரோணியிற் பத்திலொரு பகுதி
 • பலம் - பல சேனைகளின் கூட்டத்தால் ஏற்படும் பலத்தால் அப்பிரிவிற்கு ஏற்பட்ட பெயர் . தமிழில் வலம் எனப்படும்.
  • ஆதாரம் : "சேனையே கவனம், கூடிச் செறி பலம் பரிக லம்தான்" சூடாமணி - 183
 • சாதுரங்கம் - இது நாற்படை எனத் தமிழில் வழங்குகிறது
 • ககனம், நிதானம், வருதம், வருதினி, தந்திரம், நிகிதம் - தமிழில் விதப்பான(specific) பொருள் இல்லை! என்னவென்றும் அறியமுடியவில்லை.

கூடுதல் தகவல்:-

படைத்தலைவன் என்னும் சொல்லுக்கான ஒத்த தமிழ்ச் சொற்கள் எவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில்

பண்டைய தமிழர்களிடம் எத்தனை வகையான படைகள் இருந்தன? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில்


 • பிற்சேர்க்கை(2–17–2021):

சூடாமணிப் பாடல்-183

"தானையே பதாதி, வெய்ய

தந்திரம், தளமே தண்டம்

வானியே ககனம், யூகம்

வாகினி, அணிகம், பாடி

சேனையே கவனம், கூடிச்

செறிபலம், பரிக லம்தான்

ஊனமில் படை மூவைந்தாம்

உறுபதா கினியும் அப்பேர்"

இப்படல் மூலம் நாமறிவது யாதெனில் "தானை, பதாதி, தந்திரம், தளம், தண்டம், வானி, ககனம், யூகம், வாகினி, அனீகம், பாடி, சேனை, கவனம், பலம், பரிகலம்" ஆகிய பதினைந்தும் (மூவைந்தாம் எனப் பாடலில் உள்ளது) உள்ள ஒரு படையே ஊனம் இல்லாத படையென அக்காலத்தில் கொள்ளப்பட்டது.


உசாத்துணை:

 • செ.சொ.பே.மு.
 • சூடாமணி

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.