Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

main-qimg-0c764f841282e23f6e27db6098135e22.png

'முல்லைத்தீவுக் கடலில் சிறிலங்காக் கடற்படையின் டோறாவை இடிக்க நெருங்கும் கடற்கரும்புலிகளின் இடியன்'

 

எல்லா(hello)...

வணக்கம் …/\… தோழர்களே!

இன்று நாம் பார்க்கப்போவது கடற்கரும்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றியே... இவர்கள் ஈழத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் ஓர் படைப் பிரிவினர் ஆவர். இந்தக் கடற்கரும்புலிகள் இருவகைப் படுவார்கள்.

  • நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் - இவர்கள் ஓர் கடற் தற்கொடைப் படையினர் ஆவர். இவர்கள் தம் படகில் வெடிமருந்தினை நிரப்பி, அப்படகினை ஓட்டிச்சென்று, எதிரியின் கலத்தின் மீது மோதி வெடிக்கச் செய்து, அதை அழித்து தாமும் அழிந்துபோவார்கள். இவ்வகைப் படகுகளிற்கு இடியன்கவிப்படகுகரும்புலிப்படகு, குண்டுப்படகு, வெடிப்படகு மற்றும் சக்கை வண்டி என்று 6 பெயர்கள் உண்டு. இவ்வாறு இக்கரும்புலிப் படகுகளில் செல்வோர் 'இடியர்' என அழைக்கப்பட்டனர். 
    • இக் கடற் தற்கொடைப்படையில் ஆண்களிற்கும் பெண்களிற்கும் தனித்தனிப் பிரிவுகள் இருந்தன.
      • செவ்வானம் கடற்கரும்புலிகள் அணி
      • புகழரசன் கடற்கரும்புலிகள் அணி
  • நீரடி நீச்சல் கரும்புலிகள் (நீர்முழுகிகள்)- இவர்களும் ஓர் கடற் தற்கொடைப் படையினர் தாம். இவர்கள் நீரிற்கு அடியாற் நீந்திச் சென்று சென்று எதிரியின் கலத்தின் அடிப்பாகத்தில் குண்டினைப் பொருத்திவிட்டு அது அசைந்துவிடாதபடி பிடித்துக் கொண்டு நிற்பார்கள். அக்குண்டு நேரக் கணிப்பி பொருத்தியதாகவும் இருக்கும்; சிலவேளை உடனே வெடிப்பதாகவும் இருக்கும். குறித்த நேரம் வந்ததும் அக்குண்டு வெடித்து பொருத்தப்பட்டிருந்த கப்பலும் அழிய தாமும் அழிந்துபோவார்கள். சில வேளைகளில் இவர்களின் இலக்கிற்கு சிறிது தூரம் வரை கடற்புலிகளின் கலங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு எட்டத்தில் இறக்கிவிடப்படுவதும் உண்டு. அங்கிருந்து சிறிது தொலைவுவரை இவர்களோடு வேறுசில கடற்புலி போராளிகள் அல்லது கடல்வேவுப்புலிகள் நீந்திச் செல்வதுமுண்டு.
    • இந்த நீர்முழுகிகளும் இரண்டு பிரிவாக இருந்தனர், ஆண்களிற்குத் தனியாக பெண்களிற்குத் தனியாக என்று.
      • அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு → (இப்பிரிவானது 1995 இறுதிவரை 'அங்கயற்கண்ணி நீரடித் தாக்குதற் பிரிவு' என அழைக்கப்பட்டு வந்து, அதன் பின்னர், 96 நடுப்பகுதிவரை 'அங்கயற்கண்ணி விசேட நீரடி நீச்சல் பிரிவு' என அழைக்கப்பட்டு, அதன் பின்னர் 'அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு' என அழைக்கப்படலாயிற்று. )
      • கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு → (இப்பிரிவானது 1995 இறுதிவரை 'சுலோயன் நீரடித் தாக்குதற் பிரிவு' என அழைக்கப்பட்டு வந்து, அதன் பின்னர், 96 நடுப்பகுதி வரை 'சுலோயன் விசேட நீரடி நீச்சல் பிரிவு ' என அழைக்கப்பட்டு, அதன் பின்னர்  'சுலோயன் நீரடி நீச்சல் பிரிவு என அழைக்கப்படலாயிற்று. சுலோயன் என்று இருந்த இதன் பெயர், 2008 இல் இருந்து கங்கை அமரன் என்று பெயர் மாற்றமடைந்தது)

 

  • கடற்கரும்புலிகள் (முந்தைய இலச்சினை) - 2000

main-qimg-48eac31264d7ecfcf14c7bd797ca2299.png

 

  • கடற்கரும்புலிகள் (பிந்தைய இலச்சினை) - 2001-2009 end

main-qimg-5507e0e68b167bad26d326901d509f0e.jpg

 

இக்கட்டுரையில் நாம் இவர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றி காணப் போகிறோம். சரி வாருங்கள் இனி கட்டுரைக்குள் போவோம்..

இவர்களிடம் இருந்த கலங்களின் எண்ணிக்கை  - சிங்களவரால் கைப்பற்றப்பட்டவற்றை வைத்து கணிப்பிடப்பட்டவை:

  • கலங்கள் - தேவைப்படும் போது கலங்களை உண்டாக்குவார்கள். ஓரிரண்டு எப்போதும் இருப்பில் வைத்துக் கொள்வார்கள்.
  • நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் (Diver propulsion device) - 20+
  • மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board)- 6+
  • தாழ் மட்ட கலங்கள் (low planning vessel)= 5–10
  • மிக நொவ்விய கல (Very slender vessel) = 4–6
  • மாந்த ஏவரி(Human Torpedo) = 1/2

இப்படி அலைமேற்செல்லும் கரும்புலிக் கடற்கலங்களை குண்டுப்படகு/ கரும்புலிப் படகு/ இடியன் என்று அழைப்பார்கள். புலிகளிடம் மொத்தம் 13 விதமான குண்டுப்படகுகள் இருந்ததாக அறியப்படுகிறது.

இந்த கரும்புலிக் கலங்களின் அணியத்தின் முனையில் பொதுவாக ஒரு 2/ 4/ 5/ 6 அழுத்த உருகிழை(pressure fuse) பொருத்தப்பட்டிருக்கும். இவைதான் எதிரியின் கலத்தோடு இடியன்கள் மோதும் போது அவற்றின் அணியத்தில் வைக்கப்பட்டிருக்கும் சக்கையை(வெடிபொருள்) உயிர்பித்து வெடிக்க வைக்கும் இயற்றினங்கள்(instrument) ஆகும். இதனால் எதிரியின் கடற்கலன் சுக்குநூறாகவோ இரண்டாகப் பிளந்தோ அதன் அடியில் பெரும் ஓட்டை விழுந்தோ கடலினுட் மூழ்கும். ஒருவேளை கரும்புலித்தாக்குதலில் அந்தக் கலன் தப்பினாலும் அதற்கு ஏற்பட்ட பெரும்சேதத்தினைப் பயன்படுத்தி சண்டைவண்டிகள் அக்கலத்தினை தாட்டுவிடும்(will sink).

இது தவிர இவர்கள் கட்டுரமங்கள், மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board) போன்றவற்றையும் தற்கொடைத் தாக்குதலிற்குப் பயன்படுத்தினார்கள். இதில் குறிப்பிடத் தக்கது இவர்களின் மாந்த ஏவரிகள்(Human Torpedos) தாம். இவற்றினை இவர்கள் பயனுறுத்தினார்களா என்பது பற்றிய செய்திகள் அறியில்லை.

இனி இக்கலங்களிற்கான கலப்பெயர்களைப் பார்ப்போம்:

  • கட்டைப் படகு வகை:
    • தியாகன்
  • மாந்த ஏவரி (Human Torpedo):
    • MS-380
  • கவிர் வகுப்புப் படகு:
    • ஸ்ரெல்த் 16' :
      • தணிகை (முதலாவது இடியனின் கலப்பெயர்)
    • ஸ்ரெல்த் 23' :
      • (அறியில்லை)
  • குட்டி மிராஜ் வகுப்புப் படகு:
    • செம்பிறை, வீமன்
  • வெள்ளை வகுப்புப் படகு:
    • வாமன், தர்சன்
  • மிராஜ் வகுப்புப் படகு:
    • முத்துமணி, தீக்கதிர்
  • குருவி வகுப்புப் படகு:
    • குமரப்பா, புலேந்திரன், அப்துல்லா
  • வகுப்புப் பெயர் அறியா ஒரே வகுப்பைச் சேர்ந்த கலத்தின் பெயர்: அமுதன்
  • வகுப்புப் பெயர் அறியா ஒரே வகுப்பைச் சேர்ந்த கலத்தின் பெயர்: இசைமாறன் 
  • வகுப்புப் பெயர் அறியா ஒரே வகுப்பைச் சேர்ந்த கலத்தின் பெயர்: வரதன் மற்றும் மதன் 

 

சரி இனி இந்த அலைமேற்செல்லும் கலங்கள் பற்றிக் காண்போம். அதற்கு முன்னர் இந்தக் கடற்கலங்களின் நீள அகலத்தினைப் பற்றி ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இவை பற்றி நான் கீழே எழுதியிருப்பதெல்லாம் இதோ இந்தக் கொழுவியில் இருந்து எடுக்கப்பட்டவையே. இது சிங்களவரால் வெளியிடப்பட்டது ஆகும்.

  • முக்கிய சொற்கள்:-
    • கதுவீ = RADAR
    • கலவர் = crew
    • அணியம் - bow
    • கடையால் - stern
    • உருமறைப்பு = camouflage
    • வெளியிணைப்பு மின்னோடி= out board motor
    • அ = அல்லது
    • கடற்கலன் - sea vessel
    • சத்தார் = a cornered angle
    • ஓடு = shell
    • கூடு = hull
    • கவர் - prong

 


— கவிர் வகுப்புக் கலன் (Kfir class craft)

  • நீளம் = 16' 
  • அகலம்= 10'
  • வெளியிணைப்பு மின்னோடி = 1 x 250 HP/ 2x200HP
  • நிறம் = உருமறைப்பு
  • வேகம் = 50–55 kts
  • கலவர் = 2
  • எடை = 45-kilotone
  • தொலைத்தொடர்பு = VHF
  • ஆய்தம் = 01 x LMG (முன்)
  • முதன் முதலில் உண்டாக்கப்பட்டது: 1998

முதலில் நாம் பார்க்கப்போவது பரவலாக கரவுக்கலன்(stealth vrssel) என்று அறியப்பட்ட கடற்கரும்புலிக் கலத்தினைப் பற்றித்தான். இவையே புலிகளின் முதன்மையான கரும்புலிக் கலங்களாகும். இவ்வகைக் கலங்கள் சிறியவகை கலங்கள் ஆகும். இதில் 2 விதம் உண்டு.

இந்த கடற்கலன்களின் பக்கவாட்டில் உள்ள உள்ள இறகு போன்ற அமைப்பானது இவற்றின் அணியத்தினை(bow) வேக ஓட்டத்தின் போது மேலே தூக்க உதவியது. இதனால் இவற்றின் வேகம் நன்கு அதிகரிக்கப்பட்டது. மேலும் இவற்றின் கரவு அமைப்பானது எதிரியின் கதுவீ கண்ணில் மண்ணைத் தூவியது எனலாம். ஆனால் இவற்றால் அகச்சிவப்பு கரணங்களின் (infrared device) கண்களில் இருந்து தப்ப இயலாது.. அதில் இவற்றின் உருவம் தென்பட்டுவிடும். ஆனால் இவற்றைக் குறிவைத்துச் சுடுவது என்பது மிகவும் இயலாத ஒரு காரியம். அவ்வளவு வேகமாய்க் கடலில் ஓடும்; ஓட்டுவார்கள் கரும்புலிகள்.

இப்படகு எவ்வாறு உண்டாக்கப்பட்டது என்று இக்கொழுவியில்(link) விளக்கியிருக்கிறார்கள்:தமிழீழ விடுதலைப்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு குறித்த பார்வை …

இந்த வகைக் கலங்கள் அகச்சிவப்புத் திரையில் இப்படித்தான் தெரியும். 

main-qimg-3d3a308fb68ec38a8732e0c3ebd4c285.png

முன்பக்கத்தில் உள்ள அசாதாரண சட்டகம்(frame) ஆனது இக்கலத்தினை ஏனைய கலங்களின் கண்களிலில் இருந்து தென்படாமல் விலக்குகிறது . மேலும், சட்டகம் மற்றும் ஓடு(shell) ஆகிய இரண்டிற்குமான தந்திரிகை(wire) கலங்களின் உடல் வழியாக திரிக்கப்படாமல்(threaded) பக்கவோரம்(gunwale) மீது செல்கிறது.

main-qimg-0b9d28017bc5248101634124c6ebcb3a.png

' கரும்புலிக் கலனில் உள்ள அழுத்த உருகிழை'

→ இந்த இடியன் வகைக் கலங்கள் சிறப்பு நடவடிக்கைகளின் போது போராளிகளின் போக்குவரவிற்கு பயன்படுத்தப்பட்டது.

விதம் 1:

வெடிப்படகாகச் செல்லும் போது இதில் இருவர் பயணம் செய்தனர்; ஒரு ஓட்டியும் ஒரு தொலைத்தொடர்பாளரும். 

இவ்விதக் கலங்கள் தான் முதன் முதலில் இவ்வகையில் விளைவிக்கப்பட்டவை ஆகும். இவைதான் அதிகளவில் விளைவிக்கப்பட்ட கலங்களும் ஆகும். இந்தக் கடற்கலத்தின் இரு மருங்கிலும் இருக்கும் அந்த இறகு போன்ற உறுப்பில் பீகே சுடுகலன் பூட்டி தமிழரின் சிறப்புப்படைகள் களம் புகுந்தன.

main-qimg-0760496724ada744458680b5e5e00950.jpg

main-qimg-df3650a4a19e00a15af5d537de796f40.png

main-qimg-b8da89fa83ac0f9d2565208bbd3a87bd.jpg

'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை'

main-qimg-413057382e7cd57bf701060f1faa0fa1.jpg

'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை'

main-qimg-33eca9887405bf2661e714c8169b5140.jpg

'மூலைப்பார்வை'

  • விதம் 2 :

இதில் ஒருவர் மட்டுமே பயணம் செய்வார், இடியனாகச் செல்லும் போது.

main-qimg-a64c51d6d777a3cd0bd24463d2ae7c0b.png

main-qimg-37c34a08876fb9a4a16dc017da599fd8.png

 


  • விதப் பெயர் தெரியாக் கடற்கலம்

வேறுபாடான கவிர் வகுப்புக் கடற்கலத்தின் தோற்றத்தினை ஒத்த கடற்கலம்.

இதன் அணியத்தில் ஆட்கள் ஏறி அமர்ந்திருக்கலாம்!

கலப்பெயர்: ஸ்ரெல்த் 23 

  • நீளம் = 23' 
  • அகலம்= 10'

main-qimg-e740cec93680c72a1a4ba8b5799e70b0.jpg

main-qimg-b575c726a9f7aa5c071330488a81b01e.png

main-qimg-9e766505b163752e64b8723828d58ff3.png

'நீரினில் பாயும் கடற்கலம்'

main-qimg-5bf683979a84e4507efe0f2c01898c5f.png

'கடையால்'

 


— குட்டி மிராஜ் வகுப்புக் கலன் (Kutti Miraj class craft)

இவற்றிற்கு இரன்டு கவர்கள்(prong) மட்டுமே உண்டு. அதிலிருந்து செல்லும் சக்கைக்கான தந்திரிகையானது(wire), அணியத்தின் மேற்புறத்தால் சென்று சன்னத் தடுப்பு கட்டமைப்பில் ஓட்டையிட்டு உட்செல்கிறது.

  • நீளம் = 26'
  • அகலம்= 9'
  • வெளியிணைப்பு மின்னோடி = 1 x 85 HP
  • நிறம் = உருமறைப்பு
  • வேகம் = 30–35 kts
  • கலவர் = 2
  • தொலைத்தொடர்பு = VHF
  • ஆய்தம் = 01 x LMG (முன்)

Facebook - இருந்து எடுக்கப்பட்ட செய்தி:

"கடற்புலிகளின் படகோட்டி பயிலுனர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட பயிற்சிப்படகு. இக்கலங்களில் மூன்று இருக்கைகள் உள்ளன. (முன்னால் ஒன்று, பின்னால் இரண்டு).

ஆழ்கடல் வினியோக நடவடிக்கைக்காக தொடக்ககாலத்தில் பயன்படுத்திவந்த 'மிராஜ்' எனும் படகின் வடிவமைப்பை ஒத்த சிறிய வகைப் படகாக எம்மால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இப்படகை குட்டிமிராஜ் எனும் பெயர் சூட்டி அழைத்தோம்.

கடற்கரும்புலிகளுக்கான படகோட்டி பயிற்சிக்கும்,பயிற்சிக்காக கடலில் மிதக்கவிடப்படும் எதிரியின் படகுபோன்ற மிதவைமீதும் இப்படகால் துல்லியமாக நடுச்சாம இருளில் மோதிப் பார்த்து தாக்குதலுக்கான ஒத்திகைகளை மேற்கொள்வதற்கும் இப்படகு பெரும் உதவியாக இருந்தது.

இப்படகின் மூலம் சிறந்த திறமைமிக்க படகோட்டிகளை உருவாக்கும் பயிற்சிகளை,

→ லெப் கேணல் நிசாந்தன்,
→ லெப் கேணல் எழிற்கண்ணன்.
→ லெப் கேணல் பழனி,
→ லெப் கேணல் தன்ராஜ்,

ஆகிய கடற்புலிகளின் கட்டளையாளர்கள் வழங்கியிருந்தனர்."

பின்னர் இறுதிப்போரின் கடைசிக்காலங்களில் இவையும் எதிரியின் கலங்களை மூழ்கடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன.

1)

main-qimg-813040d7b23d8be9302e75f3acbfa957.jpg

'தோல்வியுற்ற கடற்சமரின் முடிவாய் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டபோது, 2009'

main-qimg-9cbc2d37e9a49f745abf63b80a235ede.png

'இதன் இரு கவர்கள்'

2)

main-qimg-f17767ae7debe99a38ed1ff220c60fd4.png

'பயிற்சியின் போது'

3) மேற்கண்ட Pink போன்று பச்சை கறுப்பிலும் ஒன்று இருந்தது.

4) அதே போன்று கபில (Brown) நிறத்திலும் ஒன்று இருந்தது

 


— புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை

இவ்வகைக் கலங்கள் எல்லாம் தாழ் தோற்றுருவ கலங்கள் (low profile vessel) ஆகும். இதில் 2 விதம் உண்டு.

  • உயரம் = 2.0 (விதம் 2)
  • வெளியிணைப்பு மின்னோடி:- விதம் - 1(சிறியது) = 1x <150HP
  • உள்ளிணைப்பு மின்னோடி:- விதம் - 2(பெரியது) = 1x <150HP
  • நிறம் = உருமறைப்பு, சாம்பல்
  • கலவர் = 1
  • வேகம் = ???
  • ஆய்தம் = சிறிய சுடுகலன்கள்

விதம் 1:

1)இதன் அணியத்தில் சுடுகலனிற்கான தண்டு உள்ளது.

main-qimg-5afce9e822f1ed1d74dd73504e641504.png

மேற்கண்ட கலத்தின் மீகாமன் அறை:

main-qimg-2db23067061e6f5b9842eecf4c65fbec.png

 

  • விதம் 2:

main-qimg-6cecbc37f0d7ca2df045f4369266d90d.jpg

 


— புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை

இவ்வகைக் கலங்கள் எல்லாம் தாழ் தோற்றுருவ கலங்கள் (low profile vessel) ஆகும். இவை எரிபொருள் காவிகளாகச் செயல்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

1.

main-qimg-a04722a735dea38f73af3534b7b5d768.png

மேற்கண்ட கலத்தின் கடையால் :

main-qimg-1c5cbb2e11a8100f1ebf53687d024c47.png

2)

main-qimg-c1a845edef841aae07e5d819bfba320c.jpg

3)

main-qimg-7d48e0fc3549d26d91b95f222aa9ae48.png

மேற்கண்ட கலத்தின் பின் பகுதி:

main-qimg-565198c53d5e315b8446d649a3f46cc2.png

 


— புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை

இவ்வகைக் கலங்கள் இவை எல்லாம் தாழ் மட்ட கலங்கள் (low planing vessel) ஆகும். இவை 30 அடி நீளமும் 3.5 அடி உயரமும் கொண்டவையாகும்.

  • வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP(mercury)

1)

main-qimg-41bcf0b77e6df9d08ce4c816fef97b69.jpg

main-qimg-985840a6ef97455b55fa4e83aa2289b9.png

'ஓட்டியிருக்கை'

main-qimg-767ff74eb825a2cc40db01a35a359e9a.png

'கடையால் (பக்கவாட்டுப் பார்வை)'

main-qimg-6b63a54e496ee2e2c1530ac62a4989da.png

'நடுப்பக்கம் (பக்கவாட்டுப் பார்வை)'

main-qimg-0109b293932eee747a31f18f0ef0e6ef.png

அணியம்(பக்கவாட்டுப் பார்வை)

main-qimg-22f4028e467c89edf679e55d4ce7e8ba.png

'கடையால்'

main-qimg-4b1b680c9b0f74c32ca8309bc7cb0294.png

main-qimg-1ca04ebe0518d053bf6dabf6bd4677d3.png

'கடையால்'

2)

main-qimg-0066a7402a4ab95e34e95595375a662d.jpg

main-qimg-624a8dcc59ccb69569a82245a678ae6d.png

அணியம்'

main-qimg-4ac204cfec6dddf35ecabc446a10822b.png

'ஓட்டியிருக்கை'

main-qimg-7205229a7c1e761c77d71a81dbdd4592.png

main-qimg-6f1c4a87b6a144e783e46b26366e3935.png

'கடையார்'

under side.png

'அடிப்பக்கம்'

 


— வகுப்புப் பெயர் அறியாக் கலன் (Class name unknown Craft)

இவ்வகைக் கலங்கள் கரும்புலிக் கலங்கள் ஆகும். இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும்

  • நீளம் = ??
  • அகலம்= ??
  • வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP
  • நிறம் = உருமறைப்பு
  • வேகம் = ???
  • கலவர் = 2
  • தொலைத்தொடர்பு = VHF
  • ஆய்தம் = 1x GPMG/ LMG

main-qimg-c96e0e432dc06062949e1ce875bd547f.jpg

'பக்கவாட்டுத் தோற்றம்'

main-qimg-eba42a365b8114781b27a02948f070b9.jpg

'சத்தார் தோற்றம்'

main-qimg-220a0342a2896f15eb7192af0782c0a7.png

'கடையால், கழுகு சத்தார் பார்வை'

main-qimg-4b4020250e938e7094b25c8e5be56a33.jpg

'கடையால்'

 


— ??? வகுப்புக் கலங்கள்:

  • நீளம் = ???
  • அகலம் = ???
  • உள்ளிணைப்பு மின்னோடி = 2 x X HP
  • நிறம் = சாம்பல்
  • கலவர் = 2 +
  • தொலைத்தொடர்பு = VHF

1)

main-qimg-fc8377e0e4b3e45a784801349fa1035a.jpg

gettyimages-1145558310-2048x2048.jpg

'படத்தில் முன்னே உள்ளதுதான் கரும்புலிக்கலன்.. பின்னால் தெரிவது தாழ்தோற்றுருவ மிக நொவ்வு கலன் (LPV- VSV)'

main-qimg-f4465c1fe6ef8c048df2730f16a23ec7.png

'பக்கவாட்டுத் தோற்றம்'

2)

main-qimg-0e2d5ff781e886cf8d4d1d7f29dfdf7b.png

 


— புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை

இது மிக நொவ்விய கல (Very slender vessel) வகையைச் சேர்ந்த ஒரு கரும்புலிக் கலனாகும்.

  • வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200Hp
  • நிறம் = சாம்பல், பச்சை
  • கலவர் = 1/2

1)

main-qimg-184d788f214a1e68243e5edb34c5e001.png

2)

main-qimg-37e8ed4ba8223727742daab8fe5eb3f9.jpg

main-qimg-7f22e14bc2ee5fa7564312eeb656ea53.jpg

main-qimg-15cb6c054da820312b821664df36381a.jpg

main-qimg-be30e20dcf85e4a3bd3e7832c5f16ebf.jpg

 


— வெள்ளை வகுப்புக் கலன் (Vellai class crafts)

வெள்ளை நிற மோல்டால் செய்யப்பட்டதால் வெள்ளை என்றே இவ் வகை கலங்களை அழைக்கலாயினர். இவ்வகைக் கலங்கள் கடற்புலிகளின் தொடக்க காலத்தில் சண்டைக் கலங்களாக பயன்படுத்தப்பட்டவை ஆகும். பின்னாளில் வேவ் ரைடர் வகைக் கலங்கள் சண்டைக்கு வந்ததால் இவை கரும்புலிக் கலங்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என்பது என் துணிபு . இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு முனை போன்ற கட்டமைப்பு வெளியில் நீண்டபடியிருக்கும். அணியத்தின் மேற்பகுதியில் 6 கவர்கள் நீண்டுகொண்டிருக்கும். இவையே சக்கைக்கான இயங்கு சக்தியை வழங்குகின்றன. 1996 ஆம் ஆண்டு முடியும் மட்டில் வரை சண்டைப்படகாகவும் அதற்குப் பின்னர் தேவைக்கேற்ப குண்டுப்படகாகவும் குறித்த காலத்திற்கு முன்னரும் பின்னரும் வழங்கல் படகாகவும் பயன்படுத்தப்பட்டன

  • நீளம் = ???
  • அகலம்= ??
  • வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200Hp
  • நிறம் = உருமறைப்பு, வெள்ளை
  • கலவர் = 3/4
  • வேகம் = ???
  • தொலைத்தொடர்பு = VHF
  • ஆய்தம் = 1x.50/ 1xFN MAG(முன்), 1xPK LMG (பின் ), 01 x RPG
  • புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது

இவற்றால் 5தொன் அளவிலான பொருட்களைக் காவிச்செல்ல இயலும். இவை கரும்புலிக் கலங்களாக களத்தில் ஆடிய போது 1.5 தொன் அளவு வெடிமருந்தினைக் காவிச்சென்றன.

வெள்ளா வகையின் முதலாவாது கலம் இதுதான்:-

main-qimg-e6ecd1eae08fb4516270890e5789894d.png

இதன் உட்புறம் இப்படி இருக்கும்:-

main-qimg-2328147996d73c53e04fa00c42b95767.png

இதிலிருந்த சிச்சிறு குறைகள் எல்லாம் களையப்பட்டு செந்தரப்படுத்தப்பட்டு பல படகுகள் கீழ்க்கண்ட வடிவில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன:-

1)

main-qimg-e24da752661b7f0ea05d4a463ffc505b.png

'சிறீலங்காப் படைகளால் கைப்பற்றப்பட்ட கரும்புலிக் கலம்

2)

main-qimg-6ed8751faa7da9b515fbe441a7ab851c.png

3)

main-qimg-df15b85c174ea4d75aef9cfb234d6416.png

'பக்கவாட்டுக் காட்சி'

main-qimg-bd26a9235dea7e9870bb18d081b791b8.png

'மேற்கண்ட கலத்தின் அணிய மேலோட்டின் தோற்றம் (கீழிருந்து மேல்நோக்கிய பார்வை)'

main-qimg-e05a1ac7d98b06256c5fd0516e257315.png

'கலத்தின் கடையால்'

main-qimg-5dc72f9f5a2ed9d189c5a722aa9261e0.png

'பின்னிருந்து முன்னோக்கிய காட்சி'

இந்த வெள்ளை வகுப்புக் கலங்கள் முதலில் தாக்குதல் கலங்களாக பயன்படுத்தப்பட்டதாக நான் முன்னர் கூறினேன் அல்லாவா. அப்போது புலிகளிடம் இருந்த இரு கலங்களின் பெயர் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அவை ஆவன: நெடுமாறன், டீசல்

 

 

இவற்றின் இன்னொரு விருத்து நான்காம் ஈழப்போரில் தாக்குதல் கலமாக பாவிக்கப்பட்டது.

அவற்றிற்கு வெள்ளை போன்றே கத்தேட்றல் கலக்கூடும் அணியமும் இருந்தாலும் வெள்ளையின் முதன்மை விருத்து போன்று நடுப்பகுதி மற்றும் கடையார் இருக்கவில்லை. எனினும் வெள்ளை போன்றே தளத்தில் ஒரு திறந்து மூடத்தக்க பெட்டி இருந்தது. தளப் பகுதியானது தட்டையாகவும் பக்கவோரத்திற்கு (gunwale) கம்பிவேலியும் இருந்தது. தளத்தில் ஒரு கனவகை தெறுவேயம் முதன்மையாக பூட்டத்தக்கவாறு சுடுகலத் தண்டும் அதற்கு முன்னால் ஒரு நடுத்தர சுடுகலன் பூட்டத்தக்கதாக ஒரு சுடுகலத் தண்டும் இருந்தது. கடையாரில் இயந்திரப் பகுதியின் பக்கவோரத்தின் மேல் இரு சிறிய வகை (இலகு இயந்திர சுடுகலன்) பூட்டத்தக்கதாக இரு சுடுகலத் தண்டுகள் இருந்தன. 

இதன் மின்னோடிகள் வெளியிணைப்பு மின்னோடிகளே. மொத்தம் இரண்டு பூட்டலாம்.

large.anotherversionofvellai.png.c6a9db3

large.lttecatamaranhullboat.jpg.f2f4da61

அணியம்

 

large_afew.png.0c89e644cba4ef06807d57890

large_bow.png.cd21fd82451f8ec72d4a8992a2

கடையாரிலிருந்து அணியம் நோக்கிய பார்வை

 

large.rearofthisboat.png.03fb35457259e78

கடையார். . கடையாரின் பக்கவோரத்தில் சுடுகலத் தண்டு ஒன்று பூட்டப்பட்டிருப்பதைக் காண்க

 


— குருவி வகுப்புக் கலன் : (kuruvi class craft)

இவ்வகைக் கலங்கள் 1995 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலப்பகுதியில் கிளாலி நீரேரியில் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டன. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட கலங்களின் பெயர்களாவன (எனக்குக் கிடைத்தவரை) - குமரப்பா, புலேந்திரன் - என்பதாகும். இவை 300 கிகி வெடிமருந்தை ஏற்றிச்செல்ல வல்லவை ஆகும்.

  • நீளம் = 18'
  • அகலம்= 9'
  • வெளியிணைப்பு மின்னோடி= 1 x 150HP
  • நிறம் = உருமறைப்பு
  • வேகம் = 30 kts
  • கலவர் = 1
  • ஆய்தம் = 1xRPG & 1x.50cal /1x7.52mm pk

main-qimg-a26c2fbe34e9b058c1263dd4823789a1.png

 


— புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை

இவை எல்லாம் ஒரு தாழ் தோற்றுருவ கல (LPV) வகையினைச் சேர்ந்த கரும்புலிக் கலங்களாகும்.

  • கலவர் = 1
  • வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP

main-qimg-29f240afe7b19fb26412e3659305123c.png

main-qimg-ff7152b623e61f0f87a952089bc58efc.png

'ஓட்டியிருக்கை'

main-qimg-11d7ba95dec31fcb2db14e4e2d020f04.jpg

'முன்பகுதிப் பார்வை' | அணியத்திற்குள் இருப்பது தெறோச்சி எறிகணை (howitzer shell).. இதுவே இக்கலத்தின் சக்கையாகும்(explosive content).

main-qimg-6c14fe4a98fbb02d31d120e068f4fee5.png

main-qimg-83f42e7cd9ed5357f22087250f307b42.png

'பின்பகுதி'

 


— புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை

இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டன. இவ்வகுப்பைச் சேர்ந்த இரு கலங்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அவை வரதன் மற்றும் மதன் என்பதாகும். 

  • வெளியிணைப்பு மின்னோடி = 2x 200hp
  • நிறம் = நீலம், பச்சை
  • தொலைத்தொடர்பு = VHF
  • கலவர் = 2

1)கரும்புலிக் கலங்களாக

இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் இரண்டு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும். 

main-qimg-97f248126932bcc9424016170903a5da.png

 

2 & 3)

E8K8wKWXMAIEfOE.jpg

'அண்மையாக்கப்பட்ட கடையால் & ஓட்டியிருக்கை'

 


— புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை

இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் இரண்டு கவர்(prong) முனை போன்ற கட்டமைப்பு வெளியில் நீண்டபடியிருக்கும்.

  • வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP
  • நிறம் = வண்ணமயம்
  • கலவர் = 1/2

main-qimg-9eb5a552cee71ed6bb3eee6209655181.png

மேற்கண்ட கலத்தின் அணியம்:-

main-qimg-fa8dcd92bb3f337f85f773e0cbf6efd0.png

 

2)இவற்றின் ஒரு சிலதின் மீகாமன் அறைக்கு கூடு போன்ற கட்டமைப்பு போடப்பட்டிருக்கிறது. அந்த கூட்டின் இருபக்கத்திலும் சன்னல் உள்ளது. முன்பக்கத்தின் அடிபகுதியில் ஒரு சதுர வடிவ ஓட்டை போன்ற கட்டமைப்பு உள்ளது. அணியத்தில் சரக்கறையும் உண்டு.

main-qimg-e00a4e8967c10dedec23335338ea9e45.png

 


— புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை

இது கட்டைப்படகு (dinghi class craft) வகை புளு ஸ்ரார் வகுப்பு கலன் ஆகும். இவை தாக்குதல் கலங்களாக காவிகளாக இடியன்களாக எனப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

  • இருப்பில் இருந்தவை: 100 - 120 (சிங்களம் கொடுத்த புலனம்)
  • நீளம் = 18.9'
  • அகலம் = 4.10'
  • உயரம் = 3'
  • தொலைத்தொடர்பு = VHF
  • கலவர் = 1/2
  • வெளியிணைப்பு மின்னோடி = 1x 85HP
  • நிறம் = வெவ்வேறு நிறங்கள்
  • வேகம் - 25- 30 kts

இடியன்களாக…..

  • ஆய்தம் = சிறிய சுடுகலன்கள்
  • கலவர் = 1/2
  • தொலைத்தொடர்பு = VHF/ GA antenna

1)

main-qimg-14d1006ea7fa3544fcec45d5fbd8c53c.png

2) இக்கலத்தின் பெயர் தியாகன் என்பதாகும்.

main-qimg-51e1c6365bb71b401094b443d6a057f8.png

3)

main-qimg-792b61542c551b63f022ac5ba07af306.png

4)

main-qimg-ece998f67506f34514683e62ffb86938.png

'புளூஸ்ராரில் போகும் கரும்புலி வீரன்'

5)

main-qimg-3e1c91aeff60d935531adf3fb2881892.png

main-qimg-53d8e88907c66167faf48359a31f54ed.png

 


மிராஜ் வகுப்புக் கலன் (Miraj class craft)

இவ்வகைக் கலங்கள் சரக்குக் காவ அல்லது ஆட்காவப் பயன்படுத்தப்பட்டன. கரும்புலிக் கலங்களாகவும் தாக்குதல்களின் போதும் சில வேளைகளில் பயன்படுவதுண்டு.

  • நீளம் =???
  • அகலம்= ???
  • உயரம் = 5'
  • வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP
  • நிறம் = உருமறைப்பு, கறுப்பு
  • தொலைத்தொடர்பு = VHF
  • கதுவீ = வட்டு வடிவம்
  • வேகம் : 35-40 kts
  • எடை = 45-kilotonne
  • ஆய்தம் = 14.7 mm / .50 முன் / பின் , சிறியளவிலான ஆய்தங்கள்
  • வகுப்பு 1(I)

இது கரும்புலிக் கலனாகும். இக்கலங்களால் 1.5தொன் அளவு பொருட்களைக் காவிச் செல்ல இயலும். இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும்.

Thirikka class Sea Black Tiger's boat.jpg

  • வகுப்பு 1(II)

மேற்கண்ட வகுப்பு 1 வடிவம் தான் இது.. இதற்கும் சன்னத் தடுப்பு கட்டமைப்பு உண்டு. . இதன் பொறி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு ஒரு பெட்டி போன்ற கவசம் கட்டப்பட்டுள்ளது.. இக்கலங்களால் 1.5தொன் அளவு வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும். இவை கரும்புலிக்கலங்களாகவும் தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டன.

  • உள்ளிணைப்பு மின்னோடி = 2
  • ஆய்தம் = 1x .50mm

1) கரும்புலிக்கலங்களாக…

main-qimg-278917475fee60219bf96d7b65c87452.png

main-qimg-43c21db7de61c1b001775a8c9359f239.png

main-qimg-e08155d924723f4cd1755f1e6c3db50a.jpg

main-qimg-484d8e40c84c33795413434dfb07dd43.png

main-qimg-c3bdabc13b3bd146da2581769c9a4fe4.png

main-qimg-71a83450d1fcb8530519940b0be14ca5.png

'சக்கை வைக்கும் உட்பகுதி'

main-qimg-6d6f2e8211c8b09a081308c0295df0fb.png

main-qimg-ea8c7197eaee7e64fcb273e1a3e0cc5e.png

'உ.மி. வைக்கும் பின்புறம்'

main-qimg-593a2c357a41bbdd93596d51bc4e3bcf.png

'பொறி உள்ள பின் பகுதி'

main-qimg-31660fb49328948811bdc7e3931d6ad8.png

main-qimg-b48bd478dacbc54f115efe0ad21e0072.png

'ஓட்டியின் இருக்கை'

main-qimg-79db3a10a7ab417073d0401d13107c5b.png

'மிராஜ் வகைக் கரும்புலிக் கலனில் உள்ள கவர்கள் '

 


  • கட்டுமரங்களையும் கரும்புலித்தாக்குதலுக்கு பயன்படுத்துவார்கள். அவற்றில் 5 குதிரை வலு கொண்ட வெளியிணைப்பு மின்னோடிகள் இருந்தன.

 

புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றி அறிய இக்கொழுவியினைச் சொடுக்கவும்…

சரி, இனி நீரடிக் கலங்கள் பற்றிக் காண்போம்.. கடற்புலிகள் திரையோடும் கடற்கலங்களை மட்டுமல்லாது நீரடிக் கலங்களையும் உருவாக்கியிருந்தனர் என்பது நாமறிந்தது.. இது பற்றி சென்ற விடையினில் நான் விரிவாக எழுதியிருந்தேன்.. இப்போது அவர்கள் பயன்படுத்திய நீர்மூழ்கிகள் என்னும் சொல்லினுள் அடங்காத கடற்கலங்கள் பற்றிப் பார்க்கப்போகிறோம்... இவை மிகவும் வேறுபாடான பற்பல வடிவுகளைக் கொண்டிருந்தன.. இவற்றின் வடிவங்கள் மலைக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் எந்தவொரு வளங்கள் அற்ற இடத்தில் இயங்கிய ஒரு இயக்கம் இப்படியெல்லாம் உருவாக்கியது ஆச்சரியத்தின் உச்சமே!

  • மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரி(diver aimed floating torpedo)

இதில் புலிகள் பல்வேறு வகையினை உருவாக்கியிருந்தார்கள். அவற்றின் வகைப் பெயர்க் குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.

1)

  • வெளியிணைப்பு மின்னோடி = 1x 15Hp
  • கலவர் = 1

main-qimg-fbb959c0cf52d227a8fd48cef59f92c2.png

main-qimg-5061e55cdac125a6545dda48b0c45053.jpg

'மிதக்கும் நீர்முழுகி இலக்கு ஏவரியுடன் ஒரு நீர்முழுகி கரும்புலி '

main-qimg-352f3e67e31d87ec367a0206058ebf8a.jpg

'மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரியுடன் ஒரு சிங்கள நீர்முழுகி'

2)

இருபுறமும் இரு உருளைவடிவ குழாய்கள், நடுவில் வெடிமருந்து நிரப்பப்பட்ட குழாய் என்பன உலோகமற்ற பொருளினால் இணைக்கப்பட்டுள்ளது.

  • வெளியிணைப்பு மின்னோடி= 1x 15Hp
  • கலவர் = 1

main-qimg-b26489db724d85ab9025660c84385c57.png

main-qimg-4c214514291c9e4220d4a119c9ffea8a.png

main-qimg-588ec7c353803a6ec090c5a91f89a968.png

main-qimg-0357a1e271e5fae934e992a9c6629dc9.png

3)இது சோதனைப் பதிப்பாக உருவாக்கப்பட்டிருந்த கலமாகும்.

main-qimg-3b8387f929a14bc403db058b61a4cd9b.png

main-qimg-64584ca679beb36dc0a2aaff87694ab1.png

'பக்கவாட்டுப் பார்வை'

main-qimg-2159d9d535c1e989a95040b685eec693.png

'மேலிருந்து சத்தார்ப்பார்வை'

மேற்கண்ட கலத்தின் பின்பகுதி:

main-qimg-dd4df448c43ad12f76643e5683796373.png

4)

qdwq.png

 


— மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board)

கடற்புலிகள் ஒற்றலுக்கும் ஊடுருவலுக்கும் இவற்றைப் பயன்படுத்தினார்கள். சிலது கரும்புலி கரணங்கள்(device) என்று விவரிக்கப்பட்ட்டாலும் இவை வெடிபொருட்களை நேரடியாக இலக்குக்கு கொண்டு செல்லவும் பயன்பட்டிருக்கலாம்.

main-qimg-6a6ba28ec02a4348bcc06dc7208a3077.png

'இப்படத்தில் 6 வகையான மன்னியக்க வலு மடவைப் பலகைகள் காட்டப்பட்டுள்ளன'

1.

main-qimg-a53562d367fe21653184e6cd44a5d573.png

2.

main-qimg-40d14b6457bcf560e36f7218e81a24b2.png

main-qimg-1b11aaded91df21d89e0ed79f84ff36e.jpg

'எவ்வாறு இதன் இயக்கம் இருந்திருக்கும் என்று போலச்செய்கிறார் சிறீலங்காத் தரைப்படை வீரன்'

3.

main-qimg-f999dce7f453b2d72490d9a126081360.png

4.

main-qimg-ea984d080ce3c64a81a55915c6324fa2.png

'எவ்வாறு இதன் இயக்கம் இருந்திருக்கும் என்று போலச்செய்கிறார், சிறீலங்காத் தரைப்படை வீரன்'

main-qimg-996f0dc933b652e9d72ee4efdded03a8.png

5.

main-qimg-a713daa33a28309b610b260dea7490ea.png

main-qimg-6f42344a94d5ae9eae9653fc658cf388.png

'இந்த வளைந்த கம்பி போன்று இருப்பதுதான் ஓட்டியிருக்கை'

 


  • நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்(diver propulsion device):

1) உள்ளூரில் உருவாக்கப்பட்ட நீர்முழுகி பிலிறுந்தக் கரணம். ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel)

main-qimg-cd6f40a56bd3c52d9e699fbc3ff2ee8d.jpg

main-qimg-79ffad5484b2fe827632509611777ceb.png

'சுக்கான் (மேலிருந்த பார்வை)'

2)

கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவுகளான கங்கையமரன் & அங்கயற்கண்ணி பிரிவுகள் பழைய உருசியா (Russia) உண்டாக்கிய(made) படைத்துறைத் தர கருவிகளான மீளுயிர்ப்பி(Re-breather) மற்றும் நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் (diver propulsion device) உள்ளிட்ட சிறிய அளவிலான கருவிகளைக் கொண்டிருந்தனர்.

main-qimg-f82c59c29fa96de7c1bdf1f77cf70824.jpg

'நிழற்படத்தின் முன்னால் இருப்பது உருசிய உருவாக்க நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்; பின்னால் இருப்பது IDA71 மீளுயிர்ப்பி'

main-qimg-fabea8c17220e77b284bcc3a05ba7df7.png

'உருசியா உண்டாக்கிய (russian made) நீர்முழுகி பிலிறுந்தக் கரணத்தின் மேற்பகுதி | பின்னால் இருப்பது 'IDA71 மீளுயிர்ப்பி'

main-qimg-db6c08a116bf479dfa410b9c534dbe0d.png

'உருசிய உண்டாக்கிய நீர்முழுகி பிலிறுந்தக் கரணத்தின் அடிப்பகுதி'

3) APOLLO AV-1 நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்

main-qimg-e67c29defffe47be98c9f87f9dd76df0.png

 


  • நீர்முழுகி உடைகள் & அணிகலங்கள்

main-qimg-11d84e3467ed57e7471442905866c1a5.png

சிறிய(சாம்பல், & மஞ்சள்) பெரிய(இளநீலம் ) ஒக்சியென் உருளைகள்(oxygen cylinders)

இரண்டு பெரிய ஒக்சியென் உருளைகளை பக்கவாட்டிலும் ஒரு மீளுயிர்ப்பியை நடுவிலும் கொண்ட ஓர் கரணம். இது என்னவென்று எனக்கு சரியாகத் தெரியவில்லை.. இதை ஒருவர் தன்னந்தனியாக முதுகில் காவிச் செல்லலாம்.

main-qimg-c2cb81d807cfef274ecdfa94051899d0.png

main-qimg-c2cb81d807cfef274ecdfa94051899d0.png

main-qimg-22c25de8aedef8d576c693600e73087c.png

main-qimg-db20b3acdc79c2787579f241ce60c381.jpg

'IDA71 மீளுயிர்ப்பி'

main-qimg-ea4ca4ad37e055be0fef8f21e0175072.png

'IDA71 மீளுயிர்ப்பி'

main-qimg-2badc66f1d27c821d158d9e2cf216931.png

மீளுயிர்ப்பிக்குள் இருக்கும் ஒக்சியென் குடுவை, சீரியக்கி(regulator) , counter lung, scrubber canisters .

main-qimg-e5c73bd2016131abd1b464f97949df56.jpg

மீளுயிர்ப்பி அணிந்த ஓர் சராசரி நீர்முழுகியின் தோற்றம் (கடற்புலிகளிடம் நீலம் மற்றும் கறுப்பில் நீர்முழுகி உடை இருந்தது)

main-qimg-10d5198408484c214783657aeb927fc3.png

'கடற்புலிகளின் நீர்முழுகி பிரிவினர் நீருக்குள் செல்கின்றனர்'

main-qimg-0d20d7540ca215f688d0d41ae554db5c.png

'நீரினுள் மிதக்கும் கடற்புலிகளின் நீர்முழுகி பிரிவினர்'

main-qimg-1bb91091ab9c420d77903dd2d150c4c7.png

'தூவிகள் (fins)'

main-qimg-1b0f328e06639a0d457ae7307b23fa31.png

'IDA-71 முகமூடி'

main-qimg-01016ef8272470193842b9dbb424cc27.png

'நீர்முழுகிகளால் அணியப்படும் உடைகள்'

main-qimg-867cd747dcf0c8a9c3ae2a7d8c7f9e64.png

'நீரடி நீச்சல் முட்டுகள் (gears)'

main-qimg-f9e20937803826e3e866967707a1188f.png

'AQUACOM STX-101 மேற்பரப்பு நிலைய தொடர்புப் பகுதி (surface station communication unit)'

main-qimg-5cba98d76c95e0d9ecc9b25083ec5b21.png

'BAUER mariner 200 காற்று அமுக்கி(air compressor)'

main-qimg-69fa931403e8b7129e3cd009d1713dd0.png

மற்றுமொரு விதமான நீர்முழுகி உடை. சிறீலங்கா இராணுவ வீரரின் வயிற்றில் உள்ள அந்த பைக்குள்தான் ஒக்சியென் குடுவை உள்ளது.

main-qimg-8beacee95ebda533394bae43a77e263f.png

main-qimg-890083552ba228a3b5cd59a145cd4653.png

'இந்த ஒக்சியென் குடுவைதான் அந்த செம்மஞ்சள் நிற பைக்குள் இருந்தது'

 


இடிப்பதற்கு சில மணிதுளிகள் முன்...

நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் தம் கடற்கலத்தால் எதிரியின் கடற்கலத்தோடு மோத முன்

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

என்று முழங்கி, அதன் பின்னர்

"கடலிலே காவியம் படைப்போம்"

என்று முழங்கி மோதி வெடிப்பார்கள்.

 


நான் குறிப்பிட்டிருப்பவை பிழையாக இருக்கும் பக்கத்தில் சரியானவற்றை எழுதிட எனக்கு உதவிடுங்கள். பெயர் மட்டுமே எனக்கு வேண்டும். வேறெதுவும் வேண்டும். வரலாற்றில் தமிழரிடமிருந்த கடற்கலங்களின் பெயர்கள் விடுபட்டுவிட்டன. இந்தத்தடவையாவது நாம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. 


 

உசாத்துணை:

படிமப்புரவு:

  • - இங்கிருந்துதான் இதனை பிரித்தெடுத்துள்ளேன். ஆதலால் தனியா பிரித்தெடுக்க முடியவில்லை. மறந்து விட்டேன்

 

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இவற்றிற்குள் கரும்புலிகளின் கடற்கலங்களின் படிமங்கள் கனக்க உள்ளன

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

நான் மேலே குறிப்பிட்டுள்ள இடியன் போன்ற ஆனால் வேறுபாடான தோற்றத்தைக்கொண்ட கடற்கலம் இதுதான்.

 

  • கலப்பெயர்: ஸ்ரெல்த் 23 

 

'ஸ்ரெல்த் 23' என்ற பெயர்ச்சொல்லின்  கீழ் அடுத்த வரியில் 'தமிழீழம்' என்று எமது நாட்டின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

 

 

Shutterstock_7838681c.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
  • மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரி(diver aimed floating torpedo)

 

எமது கடற்கரும்புலிகளின் இந்த மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரியின் நீள கலத்தை அறிய அருகில் நிற்கும் மக்களோடு இதை ஒப்பிடுக. அதற்காகத்தான் இந்தப் படிமத்தை இங்கே பதிந்துள்ளேன்.

 

Shutterstock_7881384a.jpg

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் நீரடி நீச்சல் ஏந்தனங்கள் | Underwater equipmenst of Sea Tigers

 

 

LTTE_scooter01.jpg

LTTE_scooter08.jpg

LTTE_scooter15.jpg

'நீர்முழுகி பிலிறுந்தக் கரணங்கள் (Underwater propulsion devices)'

 

LTTE unserwater equipments (10).jpg

LTTE unserwater equipments (4).jpg

LTTE unserwater equipments (3).jpg

'IDA71 மீளுயிர்ப்பி (rebreather)'

 

LTTE unserwater equipments (2).jpg

LTTE unserwater equipments.jpg

''நீர்முழுகி உடைகள்''

 

LTTE_scooter13.jpg

LTTE_scooter14.jpg

'அதை அணிந்துள்ள ஒரு சிங்கள வீரன்'

 

LTTE unserwater equipments (8).jpg

'நீரடி நீச்சல் முட்டுகள் (gears)'

 

LTTE unserwater equipments (5).jpg

''மற்றுமொரு விதமான நீர்முழுகி உடை'

 

LTTE unserwater equipments (7).jpg

'நீரடி நீச்சல் முட்டுகள் (gears)'

 

LTTE unserwater equipments (6).jpg

LTTE unserwater equipments (9).jpg

LTTE unserwater equipments (12).jpg

''தூவிகள் (fins)''

 

LTTE unserwater equipments (1).jpg

'ஒக்சியென் உருளைகள்'

 

LTTE unserwater equipments (11).jpg

''

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஒரு கவிர் வகுப்பு இடியன் நீரில் பாய்ந்தால் இப்படித்தான் தெரியும்

 

Idiyan jumping in water.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to கடற்கரும்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் - ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்+

தவறான தகவல் நீக்கப்பட்டு இவ் ஆவணம்  புதுப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

நான் ஒன்றும் போராளி அன்று. அன்னவர்களைப் பார்த்து வளர்ந்தவன். அவர்களின் வரலாறு மீது இருந்த ஈர்ப்பினால் என்னால் இயன்றளவு அவர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து கோர்வையாக்கி எழுதி வருகிறேன். எழுதும் போது அதில் ஏற்படும் தவறுகளை அச்சமயம் உள்ள தகவலின்படி என்னால் அடையாளம் காண ஏலாமல் இருந்தாலும் பின்னாளில் கிடைக்கும் தகவலை வைத்து முன்னர் எழுதியதிலுள்ள தவறுகளை சரிசெய்கிறேன். 

அப்படித்தான் இன்றும் பல தகவல் தவறுகளைச் சரி செய்தேன்.

இவ் ஆவணம் நான் சிறுகச் சிறுகச் சேகரித்த தகவல்களை ஒவ்வொன்றாகப் பதிவிட்டு இற்றைப்படுத்தியதால் உருவானதே. ஒரே நாளில் சேகரிக்கப்பட்டவை அன்று. இன்னமும் அங்கொன்று இங்கொன்றாகக் கிடைப்பவற்றை சேகரித்து பதிவிட்ட வண்ணமே உள்ளேன்.

இவை தொடர்பான தகவல் அறிந்தோர் விருப்பமிருந்தால் எனக்கு உதவுங்கள், சரியான வரலாற்றை எழுத.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

2006/06/17

 

சூன் 17, 2008 அன்று சிங்களக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டதென அவர்களால கூறப்படும் கரும்புலிப்படகு ஒன்று. 

அற்றை நாளில் மொத்தம் நான்கு புலிவீரர்கள் இருவேறு சமயங்களில் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் இருவர் குப்பி கடித்த போதிலும் ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாகவும் மற்றையர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர்பிழைக்க வைக்கப்பட்டதாகவும் சிங்களத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க:

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=18535

 

large.SeaBlackTigersboatcapturedbySriLan

 

large.SeaBlackTigersboatcapturedbySriLan

 

large.SeaBlackTigersboatcapturedbySriLan

large.SeaBlackTigersboatcapturedbySriLan

large.SeaBlackTigersboatcapturedbySriLan

large.SeaBlackTigersboatcapturedbySriLan

large.SeaBlackTigersboatcapturedbySriLan

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

வேறுபாடான தோற்றம் கொண்ட வெள்ளை வகுப்புப் படகின் படிமம் ஒன்றை சேர்த்திருக்கிறேன். இது சுதந்திரபுரத்திலிருந்து சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்ட படகாகும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.