Jump to content

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர்? – (நீதி மறுப்பும் நீதி கோரலும்)

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர்? – (நீதி மறுப்பும் நீதி கோரலும்)

spacer.png

(இனவன் முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இது தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் தொடக்கி வைக்கிறது.) 

நீதி வழங்கப்படாததையும் விட மோசமானதுநீதியைப் பற்றிய பசப்பு வார்த்தைகளாகும் 

 (அறிமுகம்) 

 (01) 

தென்னிலங்கையிலிருந்து வடக்கு நோக்கி வந்த மலையக மக்களின் தொடரும் பிரச்சினைகள், அவர்களுடைய சமூக பொருளாதார நிலைமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்களைக் குறித்த உரையாடல்கள் அண்மைக்காலத்தில் சற்று உரத்த குரலில் கேட்க ஆரம்பித்துள்ளன. இது கொஞ்சம் ஆறுதலான விசயம். ஆனால் நிறைவடையக் கூடியதல்ல. ஏனென்றால் இன்னும் கூட அவர்களும் அவர்களுடைய பிரச்சினைகளும் அவர்களுடைய சமூக பொருளாதார நிலைமை, பண்பாடு போன்றவையும் மைய உரையாடலுக்குட்படுத்தப்படவில்லை. இப்போது நடக்கும் உரையாடல்கள் கூட  மிகச் சிறியதொரு வட்டத்தினராலேயே மேற்கொள்ளப்படுகிறன. மைய உரையாடற் பரப்பிற்கு இந்த விசயம் வருவதற்கு இன்னும் நீண்ட நெடும்பயணம் செய்ய வேண்டும். அது சாதாரணமானதல்ல. கடினமான பயணம். 

ஏனென்றால் மலையக மக்களை யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகம் நோக்குகின்ற விதம் அப்படியானது. அவர்களைத் தங்களுக்கு அப்பாலான –பிறத்தியாராகவே நோக்கி வருகிறது அது. அதாவது தங்களையும் விட குறைவானோர் – கீழானோர் என்ற நோக்கில். இதில் எல்லாச் சாதி, சமூகப் பிரிவினரும் ஒரே மாதிரியே செயற்படுகின்றனர். அதாவது தாங்கள் வேறு. அவர்கள் வேறு என்ற விதமாக. 

இந்த வேற்றுமை நிலையை அகற்றுவதற்கு இந்த உரையாடல்கள் நல்லதொரு பங்கை ஆற்றும் என்று நம்பலாம். இங்கே இதைக்குறித்துப் பேச முற்படும்போது இன்றைய சூழலில் இது அவசியமற்ற ஒன்று எனப் பலரும் வாதிடக் கூடும். இதற்கான காரணமாக அவர்கள் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு இந்த உரையாடல்களும் இந்த விசயத்தை முன்னெடுத்துப் பேசுவதும் வாய்ப்பளிப்பதாக அமைந்து விடும். தமிழ்த்தேசிய வாதத்தையும் தமிழ்த்தரப்பையும் இது பலவீனப்படுத்தக் கூடும் என்றெல்லாம் கூறக்கூடும். ஆனால் இந்தக் காரணங்கள் ஏற்கக் கூடியவையல்ல. ஏனெனில் இந்த மக்களோ இந்த விசயத்தைப் பேசுகின்றவர்களோ ஒரு போதுமே அப்படியான எதிர்நிலை மனப்பாங்கோடும் சிந்தனையோடும் இதை முன்னெடுக்கவில்லை. 

மாறாக நீண்ட காலமாகவே இந்தப் பிரச்சினை பேசப்படாது தந்திரமாகக் கடந்து செல்லப்படுகிறது. தொடர்ந்து புறக்கணிப்பும் ஒடுக்குமுறையும் நிகழ்த்தப்படுகிறது. பண்பாடு, பொருளாதாரம், சமூக நிலை போன்றவற்றில் ஒடுக்குப்படுவது, சுரண்டப்படுவது மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் இவர்கள் சுரண்டப்படுகிறார்கள். அதுவும் இரட்டை ஒடுக்குமுறையாக, இரட்டைச் சுரண்டலாக. ஒன்று தமிழ்த்தரப்பினால். மற்றது சிங்கள அதிகாரத் தரப்பினால். இதை நேரடியாகவே சொல்வதாக இருந்தால் சமூக பொருளாதார ரீதியில் கூலிகளாக நடத்தப்படுவது மட்டுமல்ல அரசியற் கூலிகளாகவும் இவர்கள் நடத்தப்படுகிறார்கள். இப்படி கூலிகளாக நடத்தப்படுவதும் சுரண்டப்படுவதும் எந்த வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியது? இதற்கு என்ன நியாயமுண்டு? இதை மாற்றியமைப்பதற்கு யார் தயார்? அந்தத் தரப்புகளை யாராவது அடையாளப்படுத்த முடியுமா? 

இதற்கு யாரும் பொருத்தமான பதிலைத் தரப்போவதில்லை. எனவேதான் இதைப் பொது உரையாடற் பரப்பிற்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. 

(02) 

இந்த மக்கள் 1958இலிருந்து வடக்கே வந்தவர்கள். முதலாவது வருகை 1958 இனவன்முறையினால் நிகழ்ந்தது. அடுத்த பெரிய வருகைகள் 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் நடந்த இன வன்முறையினால் ஏற்பட்டவை. இந்த மூன்று பெரு வருகைகளிலும் ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் வரையில் கட்டம் கட்டமாக வடக்குக்கு வந்தனர். வடக்குக்கு என்றால் கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு. 

இந்த வன்முறைகளின்போதெல்லாம் தெற்கிலிருந்து (மேற்கு மற்றும் மத்திய, வடமத்திய, ஊவா மாகாணங்கள் உள்ளடங்கலாக) வடக்கு நோக்கி வந்த ஏனைய தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். அல்லது உறவினர்களின் இடங்களுக்குச் சென்றனர். பெரும்பாலும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று விட்டனர். இதற்கு நல்லதொரு உதாரணம், 1977 வன்முறையினால் அகதியான தமிழர்களைக் கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு ஏற்றி வந்த லங்கா ராணி என்ற கப்பலை மையமாக வைத்து எழுதப்பட்ட அருளரின் நாவல். நாவலின் பெயரும் “லங்கா ராணி”யே. 

ஆனால், மலையக மக்கள் என்ற இந்திய வம்சாவழியினராக இருந்தவர்கள் அப்படிச் செல்ல முடியவில்லை. அவர்களுக்கு ஏற்கனவே வடக்கில் சொந்த ஊர்களிருக்கவில்லை. உறவினர்களும் இருக்கவில்லை. இதனால் கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் இறக்கப்பட்டனர். சிறிய எண்ணிக்கையானோர் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களெல்லாம் பின்னர் இந்த இடங்களிலேயே குடியமர்த்தப்பட்டனர். சிலர் தாமாகவே அங்கங்கே தமக்கு வசதிப்பட்ட இடங்களில் குடியேறினர். வேறு வழி இருக்கவில்லை. 

இந்தக் குடியமர்த்தலானது அநேகமாகச் சட்டபூர்வமாக நடக்கவில்லை. ஆகவே கிடைத்த இடத்தில் குந்துவோம் என்று குடியேறினார்கள். ஒரு சிறிய தரப்பினருக்கே காணிகள் கிடைத்தன. ஏனையோர் அரச காணிகளைப் பிடித்துக் குடியேறினா். அதற்கே ஏராளம் கெடுபிடிகளை நிர்வாக ரீதியில் சந்தித்தனர். 

1958இல் வந்த முதலாவது வருகையினருக்கு பரந்தன் –முல்லைத்தீவு வீதியிலுள்ள தருமபுரம் என்ற இடத்தில் நிலம் வழங்கப்பட்டது. இதில் 680 குடும்பங்கள் குடியேறக் கூடியதாக இருந்தது. அப்பொழுது அது காட்டுப்பகுதி. காடென்றால் பெருங்காடு. யானையும் கரடியும் பாம்பும் உள்ள காடு. அதை இவர்கள் வெட்டித் துப்புரவு செய்தே குடியேறினார்கள். தண்ணீரை எடுப்பதே அப்போது பெரிய பிரச்சினையாக இருந்தது. சுற்றயல்களிலும் குடியிருப்புகளோ கிராமங்களோ இருக்கவில்லை. ஆகவே தனித்தே எல்லா நெருக்கடிகளையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. வேறு வழியில்லை. எந்த நிலையையும் சமாளித்தே – எதிர்கொண்டே ஆக வேண்டும் என்ற நிலை தொடர்ந்தது. ஆகவே எல்லாத் துயரங்கள், அவலங்களையும் சமாளித்துக் கொண்டே குடியேறினார்கள். 

பிறகு 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் வந்தவர்கள் விசுவமடு – ரெட்பானா, உழவனூர், கிளிநொச்சி தெற்கில் இப்போதுள்ள தொண்டமான் நகர், செல்வாநகர், மலையாளபுரம், பாரதிபுரம், கிருஸ்ணபுரம், அம்பாள்குளம், உதயநகர், புதுமுறிப்பு, ஊற்றுப்புலம், கோணாவில், மணியங்குளம், ஆனைவிழுந்தான், ஜெயபுரம், இயக்கச்சி போன்ற இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். இதைப்போல வவுனியாவில் கன்னாட்டி, செட்டிகுளம், …….போன்ற கிராமங்களிலும் நெடுங்கேணியில் டொலர் பாம், கென்பாம், நாவலர் பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் முல்லைத்தீவில் மன்னாகண்டல், முத்தையன்கட்டு போன்ற இடங்களிலும் குடியமர்த்தல் செய்யப்பட்டனர். அதிகமாக தாமாகவே காடுகளை வெட்டிக் குடியேறினார்கள் என்றே சொல்ல வேண்டும். 

இதைத் தவிர ஒரு தொகுதியினர் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிற தேவைகளைக் கருதி வயல் நிலங்களை அண்டிய பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இந்த வயல் நிலங்கள் அனைத்தும் யாழ்ப்பாணத்தவர்களுக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி,நெடுங்கேணி, வவுனியா, கன்னாட்டி போன்ற இடங்களில் ஏற்கனவே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்திட்டங்களின் மூலமாகக் குடியேறியேருக்கும் சொந்தமானவை. ஆகவே இங்கே இவர்கள் கூலிகளாகவே குடியேற்றப்பட்டனர். இன்னும் இவர்களுடைய தலைமுறைகள் இங்கு காணியற்ற நிலையிலேயே உள்ளனர். 

ஏனையோரும் கூலிகளாகவே இங்கே தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. தாங்களாக வெட்டித் துப்புரவு செய்த காணிகளில் குடியிருந்தாலும் தொழிலுக்காக இவர்கள் நிலக்கிழார்களையே தஞ்சமடைய வேண்டியிருந்தது. ஏனென்றால் இவர்களுடைய குடியேற்றமானது அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படவில்லை. அதற்குரிய வளங்கள் வழங்கப்படவுமில்லை. 

அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் என்றால் அதற்கு தொழில் வாய்ப்பு உட்பட அடிப்படைக் கட்டுமானங்கள் அத்தனையும் இருக்கும். குறிப்பாக நீர்ப்பாசனம், வீட்டு வசதி, பாசன நிலம் (வயல்) சிறுதானியப் பயிர்ச்செய்கைக்கும் குடியிருப்புக்குமான மேட்டு நிலம், பாடசாலைகள், பஸ் போக்குவரத்து, கமநல சேவைகள் நிலயம், வீதி மற்றும் வடிகாலமைப்பு வசதிகள், விளையாட்டு மைதானம், மருத்துவமனை, பொதுச் சந்தை என அடிப்படை வசதிகள் இருக்கும். இதைப் பெற்றுக் குடியேறியவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள். இவர்கள் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்களும் மாதகல், வட்டுக்கோட்டை, பளை, கோப்பாய், இடைக்காடு, பருத்தித்துறை, தென்மராட்சி, காரைநகர் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களாகும். 

இந்த மலையக மக்கள் அங்கீகரிக்கப்படாத குடியேற்ற வாசிகள் என்பதால் இவர்கள் சுயாதீனமாகக் காடுகளை வெட்டிக் குடியிருப்புகளை அமைத்ததால் இந்த வசதிகள் எதுவும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. என்பதால் இவர்கள் இந்தப் பிரதேசங்களில் – காடுகளின் மத்தியில் –சிறிய குடிசைகளைப் போட்டுக் கொண்டு குடியிருந்தனர். தண்ணீருக்கு மிக மிகச் சிரமப்பட்டனர். இவர்களுடைய பிரதேசம் நீர்ப்பாசனத்துக்கு வெளியே –மேட்டுப்பகுதியில் இருந்ததால் தண்ணீரைக் காண்பதே அபூர்வமாக இருந்தது. இவ்வளவுக்கும் இவர்களே இந்த மாவட்டங்களில் உள்ள கிணறுகளை கடந்த ஐம்பது ஆண்டுகளாத் தோண்டியவர்கள். ஆனால் தங்களுக்கு ஒரு கிணறு இல்லாத நிலையில் வாழ்ந்தனர். பின்னர் மெல்ல மெல்ல தங்கள் காணிகளிலேயே கிணறுகளைத் தோண்டினாலும் இந்தக் கிணறுகள் மண் கிணறுகளாகவே இருந்தன. இந்த மண் கிணறுகள் ஆபத்தானவை. ஆண்டுதோறும் இந்தக் கிணறுகளில் தவறி விழுவோரின் தொகை கூடிக் கொண்டேயிருந்தது. நீரும் சுத்தமானதில்லை. வேறு வழியின்றி இவற்றையே பயன்படுத்த வேண்டியிருந்தது. 

இதைப்போல வயல்களில் வேலை செய்வோரின் வீடுகள் வருடத்தின் பெரும்பாலான நாட்களிலும் பசியிலும் பட்டினியிலுமே வெந்தது. மாரி மழை வெள்ளத்தில் மூழ்கியது. பாம்புகளும் பன்றியும் யானையும் விரட்டின. ஆனாலும் வேறு கதியில்லை. இதற்குள்தான் வாழ வேண்டும் என்ற விதி. மலையகத்தில் எப்படிக் கொத்தடிமை நிலை இருந்ததோ அதை ஒத்த – அதையும் விட மோசமான நிலையே இங்கே நிலவியது. அங்கே தொழிற்சங்கங்களாவது இருந்து ஏதோ சாட்டுக்காவது குரல் கொடுத்தன. இங்கே குரலற்ற மனிதர்களாகவே கிடந்துழல வேண்டியதாயிற்று. 

(தொடரும்) 

https://arangamnews.com/?p=5560

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2021 at 22:07, கிருபன் said:

. மைய உரையாடற் பரப்பிற்கு இந்த விசயம் வருவதற்கு இன்னும் நீண்ட நெடும்பயணம் செய்ய வேண்டும். அது சாதாரணமானதல்ல. கடினமான பயணம்

கட்டுரையை வாசித்த பொழுது உணரமுடிந்தது.. ஏற்கனவே யாழ்ப்பாணதமிழர்களுக்குள் பல பிரிவுகள், அதையே இணைக்கமுடியாதளவிற்கு அவர்களுடைய பழக்கவழக்கங்கள், பெருமைகள் தடை. இவர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நீண்ட தூரம் பயணிக்கவேண்டும்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 02

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 02

— கருணாகரன் — 

(இனவன் முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது. — ஆசிரியர்)   

“நியாயம் கேட்கும்போதெல்லாம் அவர்கள் வேறு கதைகளையே பேசுகிறார்கள். நீதியைக் கோரும்போது அவர்கள் வேறேதோ சொல்ல முற்படுகிறார்கள்” 

(02) 

வடக்கு தமிழர்களை நம்பி வந்த மலையகத் தமிழர் 

வன்முறையினால் பாதிக்கப்பட்டு வடக்கே வந்த மலையக மக்களை வரவேற்பதற்கு அப்பொழுது யாருமே இருக்கவில்லை. வடக்கில் அவர்களுக்கு உறவுகளே இல்லை. வடக்கு அவர்களுக்கு அறிமுகமான – பரிச்சியமான பிரதேசமும் அல்ல. ஆனால் அவர்கள் நம்பி வந்தது வடக்கில் உள்ளவர்கள் தமிழர்களை. அது தமிழ்ப்பிரதேசம் என்பதால். ஆகவே அந்தப் பிரதேசம் தம்மைப் பாதுகாக்கும். அல்லது தமக்கு அது பாதுகாப்பானதாக இருக்கும். அங்கே உள்ளவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்கள் தங்களை வரவேற்று ஆதரிப்பார்கள் என. 

அவர்களுடைய இந்த நம்பிக்கைக்கும் எதிர்பார்க்கைக்கும் மாறான விதமாகவே நிலைமைகளிருந்தன. வடக்கே வந்த மக்கள் எந்த வகையிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக –எச்சரிக்கையாக இருந்தது யாழ்ப்பாணச் சமூகம். அப்படி நுழைந்து விட்டால் அவர்கள் (மலையக மக்கள் –அப்பொழுது இந்த மக்களை யாழ்ப்பாணத்தவர், இந்தியாக்காரர், தோட்டக்காட்டார், வடக்கத்தையார், கள்ளத்தோணிகள் என்ற பெரும் சொற்களால்தான் குறிப்பிட்டனர்) காலப்போக்கில் யாழ்ப்பாணச் சமூகத்தோடு கலந்து விடுவார்கள் என்ற எச்சரிக்கையில் யாழ்ப்பாணத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். 

அப்போதிருந்த தமிழரசுக் கட்சி, பின்னர் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவை  இந்த மக்களைக் குறித்து சிந்திக்காமல்  பெருந்தவறிழைத்தன. தமிழ்க் காங்கிரஸ் (சைக்கிள்காரர்) எப்போதுமே மலையக மக்களுக்கு எதிரான சிந்தனைப்போக்கினைக் கொண்டது என்பதால் அதனிடம் இந்த விசயத்தில் புதிதாக நீதியை எதிர்பார்த்திருக்க முடியாது. ஆகவே அது இவர்களைப் பொருட்படுத்தவேயில்லை.  

ஆனால் துயரம் என்னவென்றால், இடதுசாரிகளும் இவர்களைப் போல அன்று பெருந்தவறிழைத்தனர். அப்பொழுது இடதுசாரிகள் ஓரளவு பலமான நிலையிலிருந்தனர். ஆனாலும் அவர்கள் கூட இந்த மக்களின் விசயத்தில் சரியாக – நீதியாக நடந்ததில்லை என்பது வரலாற்றுத்துயரே. 

என்றாலும் இடதுசாரிகள் மட்டும்தான் வன்னிக்குச் சென்று இந்த மக்களுக்காக நிறைய வேலை செய்தனர். ஆதரவாக நின்றனர். தருமபுரம், விசுவமடு, நெடுங்கேணி, முத்தையன்கட்டு, செட்டிகுளம், வவுனியாவின் எல்லைக்கிராமங்கள், நெடுங்கேணி போன்ற இடங்களில் எல்லாம் இடதுசாரிய இளைஞர்கள் மும்முரமாக இந்த மக்களுக்கான ஆதரவுப் பணிகளைச் செய்தனர். தருமபுரத்திலிருந்து களனி என்ற இதழ் கூட இந்த இளைஞர்களால் வெளியிடப்பட்டது. 

இடதுசாரிகள் ஆதரவு 

எனினும் இவர்களுடைய இந்த ஆதரவில் கூட பல கேள்விகளுண்டு. ஏனென்றால் இந்த மக்களை யாழ்ப்பாணத்திற்குள் ஏற்றுக் கொள்வதைப் பற்றிச் சிந்திக்காமல் இருந்தமைக்குரிய வெளிப்படையான காரணம் என்ன? இந்த மக்களின் மத்தியில் இடதுசாரிகள் வேலை செய்தாலும் இவர்களை அமைப்பாக்கம் செய்யத் தவறியதேன்? அன்று கூலிகளாகவே இவர்களை வைத்துச் சுரண்டலுக்குட்படுத்திய சமூக அமைப்பைப்பற்றி இவர்கள் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்? அத்தகைய சுரண்டலுக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராக ஏன் போராட்டங்களை நடத்தவில்லை? குறைந்த பட்சம் தொழிற்சங்கங்களைக் குறித்துக் கூட ஏன் சிந்திக்கவில்லை? எல்லைகளைப் பாதுகாக்கும் நோக்கில் நெடுங்கேணி, வவுனியா போன்ற இடங்களில் இந்த மக்களை நகர்த்த முற்பட்டது ஏன்? 

இந்த மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் இன்று பதிலளிக்கக் கூடியவர்கள் யார்? 

காணி இருந்தும் கொடுக்கவில்லை 

இவ்வளவுக்கும் யாழ்ப்பாணத்தில் ஏராளமான அரச காணிகள் அப்போதுதிருந்தன. உதாரணமாக, இப்போது “சிங்களவர்களைக் கொண்டு வந்து குடியேற்ற முற்படுகிறது அரசாங்கம். அங்கே ஒரு பெரிய பௌத்த விகாரையைக் கூடக் கட்டியிருக்கிறது” என்று புலம்புகிறார்களே, இதே நாவற்குழிப்பகுதி உட்படப் பல இடங்களில் நிறைய அரச காணிகள் இருந்தன. ஆனால் மனதில்தான் இடமிருக்கவில்லை. எனவேதான் இந்தச் சனங்கள் வன்னியில் நிறுத்தப்பட்டனர். 

வன்னி இவர்களுக்கு முற்றிலும் புதியது. நிலம், சூழல், தொழில் எல்லாமே அந்நியமானது. மலையகத்தில் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்து பழகியவர்களுக்கு இங்கே காட்டை வெட்டி, அதிலே ஒரு குடிசையைப் போட்டுக் கொண்டு, யானைக்கும் நுளம்புக்கும் பாம்புக்கும் நடுவில், வயலிலும் சிறுதானியச் செய்கை நிலத்திலும் மிளகாய், வெங்காயத் தோட்டங்களிலும் வேலை செய்வதென்பது இலகுவான ஒன்றாக இருக்கவில்லை. மலையகத்திலிருந்து வரும்போது கையிலோ மடியிலோ எதையும் எடுத்துக் கொண்டு வந்தவர்களுமில்லை. அப்படியானதொரு வசதியான வாழ்க்கையைக் கொண்டிருந்தவர்களுமில்லை. 

இப்படி அநாதரவான நிலையிலிருந்து வந்தோருக்கு இங்கே வடக்குக் கிழக்கிலிருந்த அரசியற் தரப்புகளோ நிர்வாகத் தரப்புகளோ விசேட உதவிகள் எதையும் செய்ததும் இல்லை. விசேட ஏற்பாடு கூட வேண்டாம், சாதாரணமான– நியாயமான வசதிகளை –அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொடுக்கவில்லை. அப்படி ஏற்பாடுகள் எதையும் செய்து கொடுத்தால் இந்த மக்களை குறைந்த கூலியில் வைத்திருக்க முடியாது என்பதே இதற்கான காரணமாக இருந்தது. இதனால் பெரும் போராட்டத்தின் மத்தியிலேயே வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. 

என்ன நிலை வந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு கதியில்லை அல்லவா! மறுபடி எப்படித் தென்பகுதிக்கு (மலையகத்துக்குச் செல்வது) என்ற கேள்வி இவர்களை எந்தச் சோதனைகளையும் ஏற்கும் நிலைக்குத் தள்ளியது. இருந்தும் ஒரு சிறிய எண்ணிக்கையானோர் இங்கே இருக்க முடியாது. இதையெல்லாம் தாக்குப் பிடிக்க முடியாதென்று மறுபடியும் திரும்பிச் சென்று விட்டனர். ஏனையோர் நிரந்தரக் கூலிகளாகினர். 

ஏறக்குறைய ஒரு தலைமுறை இந்தக் கூலி வாழ்க்கையில் உக்கியது. உணவுக்கே பலரும் சிரமப்பட்டனர். அதை விடப் பாதுகாப்பற்ற குடிசைகளில்,இருளில், காட்டின் மத்தியில் வாழும் அவலம். இந்தச் சூழலில் இவர்கள் ஏறக்குறைய இயந்திரங்களைப் போலவே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.  

ஒரு சமூகத்திடமுள்ள ஆன்மீகம், பண்பாடு போன்றவற்றுக்கான சூழலும் நிலைமையும் இல்லாத உழைப்பாளர்களின் நிலை என்பது இயந்திரத்தன்மைக்கு நேர் நிகரானது. ஏனெனில் கோயில், திருவிழா, பண்டிகை, நாடகம், கூத்து (அன்றைய கலை வடிவங்களிவை) போன்றவற்றில் இவர்களால் பங்கேற்கவே முடியாத நிலையே அன்றிருந்தது. ஒரு தலைமுறைக்குப் பின்னரே – குறைந்தது பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே –இவர்களால் மெல்லிய அளவில் கலைச் செயற்பாடுகளிலும் பண்பாட்டு நடவடிக்கைகளிலும் மதம் சார்ந்த வழிபாடுகளிலும் ஈடுபட முடிந்தது. 

இலக்கியப் பதிவுகள் 

அகதி வாழ்வின் துயரத்தில் –அலைதலின் போது – வெளிப்படும் உணர்வுகள் ஈழத் தமிழிலக்கியம் மற்றும் கலை வெளிப்பாடுகளில் ஒரு முக்கியமான அம்சமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதை இரு நிலைகளில் நாம் நோக்க முடியும். ஒன்று புலம்பெயர்ந்து சென்ற நாடுகளில் அகதிகளாக வாழ்ந்தோரின் புலப்பாடுகளும் வெளிப்பாடுகளாகவும் உள்ளன. இன்னொன்று உள் நாட்டுக்குள்ளேயே அகதிகளாக (போர்ச் சூழலிலும் வன்முறைச் சூழலிலும் அகதிகளாக) வாழ்ந்தோரின் புலப்பாடுகளும் வெளிப்பாடுகளுமாகும். 

இதற்குக் காரணம் இந்த அகதிகளிற் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் வன்னியைச் சேர்ந்த கீழ் மற்றும் மேல் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தோர். அதோடு இவர்கள் எழுத்தறிவுள்ள –வெளிப்பாட்டுச் சூழமைவுள்ளோராக இருந்தமையுமாகும். ஆனால் வடக்குக் கிழக்கிற்கு வந்த மலையக மக்கள் இந்த நிலையில், இந்தச் சூழமைவில் இருக்கவில்லை. 

1958இல் நிகழ்ந்த வன்முறைக்கான பதிவாக வரதரின் “கற்பு” உள்ளிட்ட கதைகளும் கவிதைகளும் பின்னாளில் 1977இன் வன்முறையோடிணைந்த வெளிப்பாடாக அருளரின் “லங்கா ராணி”, வ.ஐ.ச. ஜெயபாலனின் “உயிர்த்தெழுந்த நாட்கள்” நீள் கவிதை போன்றவையும் உள்ளன. ஆனால் மூன்று பெரும் வன்முறைகளையும் அதைத் தொடர்ந்து பேரிடர் அகதி வாழ்க்கையையும் சந்தித்தும் அதைப் பற்றிய எந்தப் பதிவையும் வெளிப்படுத்தல்களையும் இன்றளவும் செய்ய முடியவில்லை இந்தச் சனங்களால். 

மிகப் பிந்தி, 2010 அளவில்தான் வன்னியில் இவர்கள் நிலைகொள்ளத் தவித்த வாழ்க்கையைப் பற்றிய ஒரு கதையை “பெருமாள் கணேசன்” எழுதியிருந்தார். மற்றும்படி மௌனப்பரப்பே மிஞ்சிக் கிடக்கிறது. இதனால் இந்த மக்களின் வரலாற்று வெளியென்பது பேசாப்பொருளாக கடந்து செல்லப்படுகிறது. இந்தத் துயரம் பெரியது. ஏனென்றால் பெரும் இடப்பெயர்வுகளையும் அதனால் புதிய சூழலில் சந்தித்த தலைமுறைகளின் உத்தரிப்பையும் பதிவு செய்ய முடியாமல் இவர்கள் இருந்தனர் என்பது குரலற்றவர்களின் வாழ்க்கைக்கான சான்றாகும். இவர்களுடைய இந்தப் பாடுகள் நிறைந்த வாழ்க்கையைப் பற்றி வெளியே – ஏனையோர் கூட கரிசனை கொண்டு எழுதியதாகவோ பேசியதாகவோ இல்லை. இதுவும் ஒரு வகையில் வரலாற்று அநீதி என்றே கொள்ளப்பட வேண்டியது. 

(தொடரும்) 
 
https://arangamnews.com/?p=5631

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதின்ம வயதுகளில் திருகோணமலையில் இருந்த பொழுது என்னை யாழ்ப்பாணிகள், கர்வம் பிடித்தவர்கள் எனக்கூறிய பொழுதுகளில் கோபம் வந்தது, ஆனால் பின்நாளில் வெளியுலகத்தை பார்க்க தொடங்கிய பின்பும், தனிப்பட்ட அனுபவங்களின் பின்பும் எண்ணங்கள் மாறத்தொடங்கின.. 

இப்பொழுது இந்த கட்டுரையை வாசிக்கும் பொழுது, அவர் கூறியதில் பிழையில்லை என்றே நினைக்க தோன்றுகிறது.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தினால்த்தான் எல்லாப் பிரச்சினையும் வந்திருப்பது இக்கட்டுரையின்மூலம் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இப்படியொரு சமூகமே இருந்திருக்காவிட்டால் மட்டக்களப்பானும், திருகோணமலையானும், மலையகத்தானும் நிம்மதியாக இருந்திருப்பார்கள் என்பது திண்ணம்.

போராட்டம்கூட யாழ்ப்பாணத்தானின் கெளரவத்திற்காகவும் ஏனைய தமிழ் சமூகங்களைச் சிறுமைப்படுத்தவுமே ஆரம்பிக்கப்பட்டது என்பதையும், சிங்களவர்களால் தமிழினம் மீது நடத்தப்பட்டதாகப் புனையப்பட்ட யாழ்ப்பாணத் தமிழனின் புரட்டுக்களை அடிப்படையாக வைத்தும், சாதிவெறியும் பிரதேசவாதமும் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் நம்புகிறேன்.

இன்று யாழ்ப்பாணச் சமூகம் அனுபவிக்கும் அனைத்து அவலங்களுக்கும் காரணம் அவர்கள் மலையகத் தமிழனையும், மட்டக்களப்புத் தமிழனையும் திருகோணமலைத் தமிழனையும், ஏழை சிங்களவனையும் கீழாக நடத்தியமையே என்றும் முழுமையாக நம்புகிறேன்.

முடிவாக, யாழ்ப்பாணத்தமிழன் ஏனைய சமூகங்களால் ஒதுக்கப்படவேண்டிய, கற்காலத்து அடிப்படைவாத, நாகரீகமடையாத சமூகம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணேசன் பெருமாளின் கோரா தமிழ்ப்பக்கத்திற்குப் போனால் யாழ்ப்பாணத் தமிழன் எவ்வளவு கொடூரமானவன் என்பதையும், அவன் முன்னெடுத்த போராட்டம் ஏன் எதிர்க்கப்பட வேண்டியதொன்று என்பதும் தெளிவாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
20 minutes ago, ரஞ்சித் said:

கணேசன் பெருமாளின் கோரா தமிழ்ப்பக்கத்திற்குப் போனால் யாழ்ப்பாணத் தமிழன் எவ்வளவு கொடூரமானவன் என்பதையும், அவன் முன்னெடுத்த போராட்டம் ஏன் எதிர்க்கப்பட வேண்டியதொன்று என்பதும் தெளிவாகும்.

அண்ணை இவரின்ர தற்குறிப்பு கொழுவியை ஒருக்கா தரமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
53 minutes ago, ரஞ்சித் said:

யாழ்ப்பாணத்தினால்த்தான் எல்லாப் பிரச்சினையும் வந்திருப்பது இக்கட்டுரையின்மூலம் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இப்படியொரு சமூகமே இருந்திருக்காவிட்டால் மட்டக்களப்பானும், திருகோணமலையானும், மலையகத்தானும் நிம்மதியாக இருந்திருப்பார்கள் என்பது திண்ணம்.

போராட்டம்கூட யாழ்ப்பாணத்தானின் கெளரவத்திற்காகவும் ஏனைய தமிழ் சமூகங்களைச் சிறுமைப்படுத்தவுமே ஆரம்பிக்கப்பட்டது என்பதையும், சிங்களவர்களால் தமிழினம் மீது நடத்தப்பட்டதாகப் புனையப்பட்ட யாழ்ப்பாணத் தமிழனின் புரட்டுக்களை அடிப்படையாக வைத்தும், சாதிவெறியும் பிரதேசவாதமும் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் நம்புகிறேன்.

இன்று யாழ்ப்பாணச் சமூகம் அனுபவிக்கும் அனைத்து அவலங்களுக்கும் காரணம் அவர்கள் மலையகத் தமிழனையும், மட்டக்களப்புத் தமிழனையும் திருகோணமலைத் தமிழனையும், ஏழை சிங்களவனையும் கீழாக நடத்தியமையே என்றும் முழுமையாக நம்புகிறேன்.

முடிவாக, யாழ்ப்பாணத்தமிழன் ஏனைய சமூகங்களால் ஒதுக்கப்படவேண்டிய, கற்காலத்து அடிப்படைவாத, நாகரீகமடையாத சமூகம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அண்ணை நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் எண்டு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத் தமிழன் எங்கு இன்று வாழ்ந்துவந்தாலும் அவன் படும் துயரங்கள் லேசாக கடந்துசெல்லக்கூடியவை அல்ல.நிச்சயம் பேசப்படவேண்டியவை, தீர்க்கப்படவேண்டியவை. இன்றுவரை ஒரு வயிற்றுச் சோற்றுக்காக அல்லற்படும் அவனது வாழ்க்கைபற்றி எழுதப்பட்டும், பேசப்பட்டும் தீர்வுகள் காணப்படுவது அவசியம். அதுபற்றிய முயற்சிகள் காலம் தாழ்த்தியாவது முன்னெடுக்கப்படுவது வரவேற்கப்படவேண்டியதே.

ஆனால், இந்த தீர்வுக்கான முயற்சியாக அல்லது அந்த முயற்சியின் மூலம் கண்டறியப்பட்ட அந்த அவலங்களுக்கான மூல காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் சுட்டிக் காட்டும் இந்த நோக்கத்தின் உண்மையான பின்புலம் பேசப்படவேண்டியதொன்று.

இக்கட்டுரைகளின் முதலாவது பதிவில் இனக்கலவரங்கள் மிக இலகுவாகக் கடந்து செல்லப்பட்டு (இதற்குக் காரணமானவர்கள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டு) , அதன்பின்னர் அவர்கள் வாழத்தொடங்கிய வன்னியின் காட்டுப்பகுதியின் அசெளகரியங்கள்கூட யாழ்ப்பாணத்தவரின் மூலம் ஏற்படுத்தப்பட்டவையாகக் காட்டப்படுகிறது. வன்னியின் கொசுக்கடியும், யானை கரடியின் தாக்குதல்களும் யாழ்ப்பாணத்தானால் முடுக்கிவிடப்பட்டதாகவே கருதப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

அதே போல் பின்னர் வரும் பந்திகளில் பேசப்படும் யாழ்ப்பாணத்திற்குள் மலையகத் தமிழர்கள் அனுமதிக்கப்படவில்லையென்றும், வெலி ஓயா போன்ற சிங்கள் ஆக்கிரமிப்புக் குடியேற்றங்களை ஒட்டி, பகடைகளாக குடியேற்றப்பட்டார்கள் என்றும் கூறப்படுவதுகூட யாழ்ப்பாணத்தினால்த்தான் என்பது போல எழுதப்படுகிறது. ஆனால், இங்கு குடியேறியவர்கள் தமது விருப்பத்தின்பேரிலேயே குடியேறியதாக கூறுவதும், பின்னர் இவர்கள் குடியேற்ற எல்லைகளில் பலியாடுகளாக நிறுத்தப்பட்டார்கள் என்பதும் ஒன்றோடு ஒன்று முரண்படுகின்றனவே? அப்படியானால், இவர்களை குடியேற்ற எல்லைகளில் குடியேற்றியது யார்? யாழ்ப்பாணத்துத் தமிழனா? புலிகளா? அல்லது அரசா? அதையும் கூறிவிட்டுச் சென்றிருக்கலாமே?

லங்கா ராணியில் வந்து இறக்கப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தார் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட, மலையகத் தமிழர்கள் வன்னியில் கைவிடப்பட்டார்கள் என்றும், அதன் பின்னரான அவலங்கள் அனைத்துமே யாழ்ப்பாணத்தினால் உருவாக்கப்பட்டவை என்றும் கூற முற்படுகிறது.

வடபகுதி தமிழர்களின் மலையகத் தமிழர் மீதான பார்வை ஒரு ரகசியமல்ல. வடக்கத்தையான் என்பதும், தோட்டக் காட்டான் என்பதும் பரவலாகப் பேசப்பட்ட சொற்பதங்கள் தான். இவை தவறானவை என்பதும், இச்சமூகம் பல வழிகளில் வடபகுதி தமிழர்களால் சமமாக நடத்தப்படவில்லையென்பதும் உண்மைதான். ஆனால், இக்கட்டுரையில் 55 களினதும் 77 களினதும் காலப்பகுதியில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த "அநியாயங்கள்" இப்போதும் இருக்கின்றனவா என்பதுபற்றி ஏன் எதுவும் கூறவில்லை? 

ஈழத்தமிழினம் போராட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு, பெரும் இழப்புக்களைச் சந்தித்து நிற்கும் இவ்வேளையில், இதுபோன்ற பழைய உள்ப்பிரச்சினைகள் பற்றிப் பேசப்படவேண்டுமா என்று கேட்பதே அபத்தம் என்று கூறி, பிடிவாதமாக இதுபேசப்பட்டவேண்டும் என்று "சுயவிமர்சனம்" என்கிற போர்வையில் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தினை இன்னும் மேலேறி தாக்க நினைப்பதால் எழுதுபவர்கள் அடையப்போகும் நண்மை என்ன? 

யாழ்ப்பாணத் தமிழனினாலேயே மலையகத் தமிழன் இன்றுவரை அல்லற்படுகிறான் என்று பேசிவரும் ஒரு சிலரிடம் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன

1. மலையகத் தமிழனின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டபோது (யாழ்ப்பாணத்தின் பங்களிப்புடன்), சாஸ்த்திரியின் நாடான இந்தியா இம்மக்கள் பாதிக்கப்படப்போவதுபற்றி அறிந்திருக்கவில்லையா?

2. சிங்களவர்களால் மலையகத் தமிழர்கள் அடித்துவிரட்டப்பட்டபோது, அல்லது வன்னியில் கொசுக்கடிக்கும், யானை - கரடித் தாக்குதலுக்கும் முகம் கொடுத்தபோது அவர்களின் தாய்நாடான இந்தியா எதையுமே செய்யாமல் விட்டது ஏன்? இன்று யாழ்ப்பாணத்தமிழன் மேல் முழுப்பழியினையும் போட்டுவிட்டு தப்ப நினைப்பவர்கள் ஏன் இந்தியாவின் இயலாமை பற்றிக் கேள்வி எழுப்பவில்லை?

3. இலங்கை அரசுகளிடம் தொடர்ச்சியாக மலையகத் தமிழர்களின் வாக்குகளை லஞ்சமாக முன்வைத்து தமக்கான சலுகைகளையும், பதவிகளையும் பெற்றுக்கொண்டு மலையகத் தமிழனின் பிரதிநிதிகள் என்று கூறி அரசியல் செய்யும் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏனைய மலையக மக்கள் கட்சிகளும் இதுவரையில் இம்மக்கள் தொடர்பாக ஏன் எதனையும் செய்யவில்லை என்பதுபற்றி ஏன் இவர்கள் கேள்வி கேட்கவில்லை?

4. இன்றுவரை தோட்டங்களில் வேலை செய்வதற்கு நாள்ச் சம்பளமாக 1000 ரூபாய்களைக் கொடுக்க மறுக்கும் சிங்கள தொழில் அதிபர்களுக்கும், அத்தொழில் நிறுவனங்களுக்கான ஆசீரை வழங்கும் சிங்களப் பேரினவாதத்திற்கும் எதிராக ஏன் இதனை எழுதுபவர்கள் கேள்விகளை முன்வைக்கவில்லை? அல்லது இந்த சம்பள சுரண்டல் கூட யாழ்ப்பாணத்துத் தமிழனின் திட்டப்படி நடப்பதாக இவர்கள் கருதுகிறார்களா?

5. இந்தியாவுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிவரும் மலையக அரசியல்வாதிகள் இந்தியாவின் தலையீட்டுடன் இம்மக்களுக்கான வாழ்வினை ஏன் மேம்படுத்தவில்லையென்பதை ஏன் இதுவரை கேட்கவில்லை?

6. வடபகுதியில் இன்று அப்பகுதி மக்களுடன் கலந்துவிட்ட மலையகத் தமிழனின் வழித்தோன்றல்கள் பொருளாதார ரீதியில் சுரண்டப்படுவதாக இங்கு பதிந்து ஆத்திரப்படும் சிலர், இதனைவிடவும் பன்மடங்கு மலையகத் தமிழர்கள் மலையகத்திற்கு வெளியே கொழும்பு உட்பட பல சிங்களப் பகுதிகளில் யாழ்ப்பாணத்தானைக் காட்டிலும் மிகவும் கேவலமான இனவாதத்திற்கும், பொருளாதாரச் சுரண்டலுக்கும் இன்றுவரை முகம்கொடுத்துவருகிறார்கள் என்பதைப் பற்றியோ அல்லது அதற்கான காரணங்களைத் தேடுவதுபற்றியோ அக்கறைப்படாதது ஏன்?

7. 80 களின் ஆரம்பத்திலிருந்து 2009 வரையான போராட்டத்தில் கலந்துவிட்ட மலையகத் தமிழனின் வன்னிப்பகுதி வழித்தோன்றல்கள் வன்னியில் வாழ்ந்த வடபகுதி தமிழினின் வாழ்க்கையினையே பகிர்ந்துகொண்டார்கள் என்பதையும், போராட்டம் அவர்களை தமிழனாகவே மதித்து ஏற்றுக்கொண்டது என்பதையும், இம்மக்களை எவருமே வேற்றினமாகவோ அல்லது மலையகம் என்றோ பிரிக்கவில்லையென்பதையும், வன்னியின் வீரம் மிக்க மக்களாகவே கணிக்கப்பட்டார்கள் என்பதையும் ஏன் இக்கட்டுரை பேச மறுக்கிறது?

8. இறுதியாக, இன்று மலையகத் தமிழன் வாழும் வாழ்க்கையினைக் காட்டிலும் இழிவான வாழ்வினை வாழும் வன்னியின் வடபகுதித் தமிழனின் அவலங்கள் அப்படியே இருக்க, அவர்கள் மீதான சிங்கள பேரினவாத பெளத்தர்களின் இனவழிப்பு தங்கு தடையின்றி நடந்துவர, அரச பாதுகாப்போ அல்லது அரசியல் கவசமோ அற்ற அநாதைகளாக இத்தமிழினம் நலிவுற்றிருக்கும் இத்தருணத்தில், 55 களிலும், 77 களிலும் யாழ்ப்பாணத்துத் தமிழனினால் இவர்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள் என்பதற்கான நீதியினை இம்மக்களின் அவலக் குவியல்களில் தேட முற்படுவது இழிவானதாக இவர்களுக்குத் தெரியவில்லையா?

இதற்கெல்லாம் ஒரு அடிப்படைதான் இருக்கமுடியும். அதாவது இன்று வடபகுதித் தமிழன் பற்றிப் பேசவோ அல்லது அக்கறைப்படவோ எவரும் இல்லையென்பதும், அவன்மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் எவற்றிற்குமே எவரும் எதிர்வினையாற்றப்போவதில்லையென்பதும் என்பதுமே இன்று இத்தமிழன் மீதான அவசர விமர்சனங்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன என்று நான் நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல், " அன்று எங்களை இழிவாக நடத்தினீர்கள் அல்லவா? அதற்கான தண்டனையினை இன்று அனுபவிக்கிறீர்கள்" என்பதனை நினைவுபடுத்தும் ஒரு முயற்சியே இந்த விமர்சனங்களின் பின்னால் ஒளிந்திருப்பதாக நான் நம்புகிறேன். 

ஆனால், என்ன, இந்த விமர்சனங்கள் இன்று பலருக்கும் பல காரணங்களுக்காகத் தேவைப்படுகிறது. தத்தமது பார்வையில் யாழ்ப்பாணத்தமிழன் எவ்வளவு இழிவானவன் என்பதனையும் இக்கட்டுரையினையும் ஒப்பிட்டு நோக்கி, ஒரு பொதுவான நிறுவலுக்கு இவர்கள் வந்துவிடுகிறார்கள். "பார்த்தீர்களா, நான் நினைத்ததைப்போலவே அவன் எவ்வளவு இழிவானவன் ?" என்று இலகுவாக அவர்களால் நிறுவிவிட முடிகிறது. அதுமட்டுமல்லாமல், இக்கட்டுரைகள் இனிவரப்போகும்  வடபகுதித் தமிழன் மீதான காழ்ப்புணர்வின் விமர்சனங்களுக்கு முன்னோடி  வடிகாலாக அமைந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. 

52 minutes ago, நன்னிச் சோழன் said:

அண்ணை நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் எண்டு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா?

நான் கீழே எழுதியதைப் படித்தீர்கள் என்றால் நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரியும் சோழன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

அண்ணை இவரின்ர தற்குறிப்பு கொழுவியை ஒருக்கா தரமுடியுமா?

https://ta.quora.com/profile/Gnanamuthu-Sundararajah

மலையகத் தமிழனை வடபகுதித் தமிழன் கீழ்த்தரமாக நடத்தினான் என்றும் ஈழத்தமிழினப் போராட்டம் அநீதியானது என்றும் பொதுவெளியில் எழுதிவரும் கொழும்பில் வசிக்கும் ஒரு மலையகத் தமிழர்.

பெருமாளைத் தேடி வருகிறேன்.

https://ta.quora.com/profile/Ganeshan-Karuppiah

இவர் இன்னொருவர். கொழும்பில் வசிக்கும் மலையகத் தமிழர். 83 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவராம். தனது அவலங்களுக்கு ஈழத்தமிழனின் போராட்டமும், வடபகுதித் தமிழனின் அகம்பாவமும் காரனம் என்று நம்பி பொதுவெளியில் எழுதிவருபவர்.

இவரைத்தான் பெருமாள் கணேசன் என்று எண்ணிவிட்டேனோ தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, ரஞ்சித் said:

இவங்கள் இரண்டுபேரும் ஒரு ஊத்தைவாளி ஆக்கள் அண்ணை. மேற்கண்ட கட்டுரையினை எழுதும் அளவிற்கு இவங்களுக்கு வக்கில்லை. விடிஞ்சால் பொழுதுபட்டால் எமது தொடர்பான கேள்விகளில் ஈழத்தில் நடந்த எல்லாவற்றிற்கும் புலிகள்தான் காரணம் என்று தாளம்போட்டு பாட்டிசைக்கிற ஆக்கள். 

மேலும், இவையள் இரண்டுபேரும் தமிழ்நாட்டுக்காரர் என்பதால் தமிழ்நாட்டு அரசியல் கட்சியான திமுக-வின் தீவிர விசிறிகள். திமுக பற்றிய மறுமொழிகளில் எங்களை தேவையில்லாமல் உள்ளுக்கு இழுத்து ஏதேனும் சொறிச்சேட்டை விடுவினம். 

இவையள் இரண்டு பேரின்ர கொள்கைகள் (அவையளின்ர வாயாலே நித்தம் உரைப்பவை):

  1. தலைவர் மாமா போராடியதே தவறு. பணிந்து போயிருக்க வேண்டும்.  அத்தோடு சில நேரங்களில் 'தலைவர் மாமா வீரர், தீரர் ஆனால் மோசமான பயங்கரத்தின் மறு வடிவம்' என்ற பொருளிலும் எழுதுவினம். 
  2. அமிர்தலிங்கம் மிகவும் நல்லவர். (புசுபுசு பூனை என்ட ரேஞ்சிற்கு எழுதுவினம்)
  3. கருணாநிதியை ஏதோ கடவுள் என்ட ரேஞ்சிற்கு எழுதுவினம்.
  4. வந்த இந்தியக் காவாலிகள் மிகவும் நல்லவர்கள். தலைவர் மாமாதான் தேவையில்லாமல் அவங்களுக்கு எதிரா ஆயுதம் தூக்கினவர். 
  5. இந்தியக் காவாலிகள் பாதக செயலகள் எதுவும் செய்யவில்லை. என்கேனும் ஓரிரண்டு சிறியவை நடந்திருக்கலாம். அவையாவும் தெரியாத்தனமாக நடந்தவை. 
  6. யாழ்ப்பாணிக்கு இந்த அழிவு தேவைதான் (அழிவுற்றது யாழ் மட்டுமோ? அப்ப கண்ணுக்கு முன்னால் அழிஞ்ச எங்கட வன்னி என்ன மிளிருதோ? கண் பிடரிக்குள் போலும்!)

மொத்தத்தில், ஒரு தமிழ்நாட்டு திமுக ஆதரவுத் தமிழனின் நிலைப்பாடு & மனநிலை (எந்தக் காலத்திலும் எங்கள் வலிகள் விளங்காத ஒரு இனம்) என்னாவோ அது இந்த ஊத்தைவாளியளின்ர வாயில் இருந்து வரும். இது மட்டுமல்ல, கோரா திமுகாவின்ர ஒட்டு மொத்த கருத்தும் இவையள் இரண்டுபேரின்ர கருத்தோடு ஒத்துப்போபவையே.

அவ்வளவே!

இதில் கவனிக்க வேண்டியது என்னவெண்டால், வாழ்வது ஈழத்தில், ஆனால் ஆதரவு கிந்தியாவிற்கும் திமுகாவிற்கும். இனப்பாசம் எண்டும் ஒண்டு இருக்கல்லோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
8 hours ago, ரஞ்சித் said:

மலையகத் தமிழன் எங்கு இன்று வாழ்ந்துவந்தாலும் அவன் படும் துயரங்கள் லேசாக கடந்துசெல்லக்கூடியவை அல்ல.நிச்சயம் பேசப்படவேண்டியவை, தீர்க்கப்படவேண்டியவை. இன்றுவரை ஒரு வயிற்றுச் சோற்றுக்காக அல்லற்படும் அவனது வாழ்க்கைபற்றி எழுதப்பட்டும், பேசப்பட்டும் தீர்வுகள் காணப்படுவது அவசியம். அதுபற்றிய முயற்சிகள் காலம் தாழ்த்தியாவது முன்னெடுக்கப்படுவது வரவேற்கப்படவேண்டியதே.

ஆனால், இந்த தீர்வுக்கான முயற்சியாக அல்லது அந்த முயற்சியின் மூலம் கண்டறியப்பட்ட அந்த அவலங்களுக்கான மூல காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் சுட்டிக் காட்டும் இந்த நோக்கத்தின் உண்மையான பின்புலம் பேசப்படவேண்டியதொன்று.

இக்கட்டுரைகளின் முதலாவது பதிவில் இனக்கலவரங்கள் மிக இலகுவாகக் கடந்து செல்லப்பட்டு (இதற்குக் காரணமானவர்கள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டு) , அதன்பின்னர் அவர்கள் வாழத்தொடங்கிய வன்னியின் காட்டுப்பகுதியின் அசெளகரியங்கள்கூட யாழ்ப்பாணத்தவரின் மூலம் ஏற்படுத்தப்பட்டவையாகக் காட்டப்படுகிறது. வன்னியின் கொசுக்கடியும், யானை கரடியின் தாக்குதல்களும் யாழ்ப்பாணத்தானால் முடுக்கிவிடப்பட்டதாகவே கருதப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

அதே போல் பின்னர் வரும் பந்திகளில் பேசப்படும் யாழ்ப்பாணத்திற்குள் மலையகத் தமிழர்கள் அனுமதிக்கப்படவில்லையென்றும், வெலி ஓயா போன்ற சிங்கள் ஆக்கிரமிப்புக் குடியேற்றங்களை ஒட்டி, பகடைகளாக குடியேற்றப்பட்டார்கள் என்றும் கூறப்படுவதுகூட யாழ்ப்பாணத்தினால்த்தான் என்பது போல எழுதப்படுகிறது. ஆனால், இங்கு குடியேறியவர்கள் தமது விருப்பத்தின்பேரிலேயே குடியேறியதாக கூறுவதும், பின்னர் இவர்கள் குடியேற்ற எல்லைகளில் பலியாடுகளாக நிறுத்தப்பட்டார்கள் என்பதும் ஒன்றோடு ஒன்று முரண்படுகின்றனவே? அப்படியானால், இவர்களை குடியேற்ற எல்லைகளில் குடியேற்றியது யார்? யாழ்ப்பாணத்துத் தமிழனா? புலிகளா? அல்லது அரசா? அதையும் கூறிவிட்டுச் சென்றிருக்கலாமே?

லங்கா ராணியில் வந்து இறக்கப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தார் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட, மலையகத் தமிழர்கள் வன்னியில் கைவிடப்பட்டார்கள் என்றும், அதன் பின்னரான அவலங்கள் அனைத்துமே யாழ்ப்பாணத்தினால் உருவாக்கப்பட்டவை என்றும் கூற முற்படுகிறது.

வடபகுதி தமிழர்களின் மலையகத் தமிழர் மீதான பார்வை ஒரு ரகசியமல்ல. வடக்கத்தையான் என்பதும், தோட்டக் காட்டான் என்பதும் பரவலாகப் பேசப்பட்ட சொற்பதங்கள் தான். இவை தவறானவை என்பதும், இச்சமூகம் பல வழிகளில் வடபகுதி தமிழர்களால் சமமாக நடத்தப்படவில்லையென்பதும் உண்மைதான். ஆனால், இக்கட்டுரையில் 55 களினதும் 77 களினதும் காலப்பகுதியில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த "அநியாயங்கள்" இப்போதும் இருக்கின்றனவா என்பதுபற்றி ஏன் எதுவும் கூறவில்லை? 

ஈழத்தமிழினம் போராட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு, பெரும் இழப்புக்களைச் சந்தித்து நிற்கும் இவ்வேளையில், இதுபோன்ற பழைய உள்ப்பிரச்சினைகள் பற்றிப் பேசப்படவேண்டுமா என்று கேட்பதே அபத்தம் என்று கூறி, பிடிவாதமாக இதுபேசப்பட்டவேண்டும் என்று "சுயவிமர்சனம்" என்கிற போர்வையில் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தினை இன்னும் மேலேறி தாக்க நினைப்பதால் எழுதுபவர்கள் அடையப்போகும் நண்மை என்ன? 

யாழ்ப்பாணத் தமிழனினாலேயே மலையகத் தமிழன் இன்றுவரை அல்லற்படுகிறான் என்று பேசிவரும் ஒரு சிலரிடம் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன

1. மலையகத் தமிழனின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டபோது (யாழ்ப்பாணத்தின் பங்களிப்புடன்), சாஸ்த்திரியின் நாடான இந்தியா இம்மக்கள் பாதிக்கப்படப்போவதுபற்றி அறிந்திருக்கவில்லையா?

2. சிங்களவர்களால் மலையகத் தமிழர்கள் அடித்துவிரட்டப்பட்டபோது, அல்லது வன்னியில் கொசுக்கடிக்கும், யானை - கரடித் தாக்குதலுக்கும் முகம் கொடுத்தபோது அவர்களின் தாய்நாடான இந்தியா எதையுமே செய்யாமல் விட்டது ஏன்? இன்று யாழ்ப்பாணத்தமிழன் மேல் முழுப்பழியினையும் போட்டுவிட்டு தப்ப நினைப்பவர்கள் ஏன் இந்தியாவின் இயலாமை பற்றிக் கேள்வி எழுப்பவில்லை?

3. இலங்கை அரசுகளிடம் தொடர்ச்சியாக மலையகத் தமிழர்களின் வாக்குகளை லஞ்சமாக முன்வைத்து தமக்கான சலுகைகளையும், பதவிகளையும் பெற்றுக்கொண்டு மலையகத் தமிழனின் பிரதிநிதிகள் என்று கூறி அரசியல் செய்யும் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏனைய மலையக மக்கள் கட்சிகளும் இதுவரையில் இம்மக்கள் தொடர்பாக ஏன் எதனையும் செய்யவில்லை என்பதுபற்றி ஏன் இவர்கள் கேள்வி கேட்கவில்லை?

4. இன்றுவரை தோட்டங்களில் வேலை செய்வதற்கு நாள்ச் சம்பளமாக 1000 ரூபாய்களைக் கொடுக்க மறுக்கும் சிங்கள தொழில் அதிபர்களுக்கும், அத்தொழில் நிறுவனங்களுக்கான ஆசீரை வழங்கும் சிங்களப் பேரினவாதத்திற்கும் எதிராக ஏன் இதனை எழுதுபவர்கள் கேள்விகளை முன்வைக்கவில்லை? அல்லது இந்த சம்பள சுரண்டல் கூட யாழ்ப்பாணத்துத் தமிழனின் திட்டப்படி நடப்பதாக இவர்கள் கருதுகிறார்களா?

5. இந்தியாவுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிவரும் மலையக அரசியல்வாதிகள் இந்தியாவின் தலையீட்டுடன் இம்மக்களுக்கான வாழ்வினை ஏன் மேம்படுத்தவில்லையென்பதை ஏன் இதுவரை கேட்கவில்லை?

6. வடபகுதியில் இன்று அப்பகுதி மக்களுடன் கலந்துவிட்ட மலையகத் தமிழனின் வழித்தோன்றல்கள் பொருளாதார ரீதியில் சுரண்டப்படுவதாக இங்கு பதிந்து ஆத்திரப்படும் சிலர், இதனைவிடவும் பன்மடங்கு மலையகத் தமிழர்கள் மலையகத்திற்கு வெளியே கொழும்பு உட்பட பல சிங்களப் பகுதிகளில் யாழ்ப்பாணத்தானைக் காட்டிலும் மிகவும் கேவலமான இனவாதத்திற்கும், பொருளாதாரச் சுரண்டலுக்கும் இன்றுவரை முகம்கொடுத்துவருகிறார்கள் என்பதைப் பற்றியோ அல்லது அதற்கான காரணங்களைத் தேடுவதுபற்றியோ அக்கறைப்படாதது ஏன்?

7. 80 களின் ஆரம்பத்திலிருந்து 2009 வரையான போராட்டத்தில் கலந்துவிட்ட மலையகத் தமிழனின் வன்னிப்பகுதி வழித்தோன்றல்கள் வன்னியில் வாழ்ந்த வடபகுதி தமிழினின் வாழ்க்கையினையே பகிர்ந்துகொண்டார்கள் என்பதையும், போராட்டம் அவர்களை தமிழனாகவே மதித்து ஏற்றுக்கொண்டது என்பதையும், இம்மக்களை எவருமே வேற்றினமாகவோ அல்லது மலையகம் என்றோ பிரிக்கவில்லையென்பதையும், வன்னியின் வீரம் மிக்க மக்களாகவே கணிக்கப்பட்டார்கள் என்பதையும் ஏன் இக்கட்டுரை பேச மறுக்கிறது?

8. இறுதியாக, இன்று மலையகத் தமிழன் வாழும் வாழ்க்கையினைக் காட்டிலும் இழிவான வாழ்வினை வாழும் வன்னியின் வடபகுதித் தமிழனின் அவலங்கள் அப்படியே இருக்க, அவர்கள் மீதான சிங்கள பேரினவாத பெளத்தர்களின் இனவழிப்பு தங்கு தடையின்றி நடந்துவர, அரச பாதுகாப்போ அல்லது அரசியல் கவசமோ அற்ற அநாதைகளாக இத்தமிழினம் நலிவுற்றிருக்கும் இத்தருணத்தில், 55 களிலும், 77 களிலும் யாழ்ப்பாணத்துத் தமிழனினால் இவர்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள் என்பதற்கான நீதியினை இம்மக்களின் அவலக் குவியல்களில் தேட முற்படுவது இழிவானதாக இவர்களுக்குத் தெரியவில்லையா?

இதற்கெல்லாம் ஒரு அடிப்படைதான் இருக்கமுடியும். அதாவது இன்று வடபகுதித் தமிழன் பற்றிப் பேசவோ அல்லது அக்கறைப்படவோ எவரும் இல்லையென்பதும், அவன்மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் எவற்றிற்குமே எவரும் எதிர்வினையாற்றப்போவதில்லையென்பதும் என்பதுமே இன்று இத்தமிழன் மீதான அவசர விமர்சனங்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன என்று நான் நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல், " அன்று எங்களை இழிவாக நடத்தினீர்கள் அல்லவா? அதற்கான தண்டனையினை இன்று அனுபவிக்கிறீர்கள்" என்பதனை நினைவுபடுத்தும் ஒரு முயற்சியே இந்த விமர்சனங்களின் பின்னால் ஒளிந்திருப்பதாக நான் நம்புகிறேன். 

ஆனால், என்ன, இந்த விமர்சனங்கள் இன்று பலருக்கும் பல காரணங்களுக்காகத் தேவைப்படுகிறது. தத்தமது பார்வையில் யாழ்ப்பாணத்தமிழன் எவ்வளவு இழிவானவன் என்பதனையும் இக்கட்டுரையினையும் ஒப்பிட்டு நோக்கி, ஒரு பொதுவான நிறுவலுக்கு இவர்கள் வந்துவிடுகிறார்கள். "பார்த்தீர்களா, நான் நினைத்ததைப்போலவே அவன் எவ்வளவு இழிவானவன் ?" என்று இலகுவாக அவர்களால் நிறுவிவிட முடிகிறது. அதுமட்டுமல்லாமல், இக்கட்டுரைகள் இனிவரப்போகும்  வடபகுதித் தமிழன் மீதான காழ்ப்புணர்வின் விமர்சனங்களுக்கு முன்னோடி  வடிகாலாக அமைந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. 

நான் கீழே எழுதியதைப் படித்தீர்கள் என்றால் நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரியும் சோழன்.

அச்சொட்டான கேள்விகள்.👌
என்ர மனதில் இருந்த எண்ணங்களை தகுந்த சொற்களால் அப்படியே எழுதிப்போட்டியள். 👏👏

இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் இதில் இருக்கும் பாதிக்கு கூட அவங்களில் ஒருவனாலும் விடையென்ன, உருப்படியான மறுமொழியே கொடுக்க முடியாது என்பது திண்ணம்.

---------------------------

இஞ்சயிருந்து அங்க ஒப்பந்தத்தால் திரும்பிப் போன ஆக்களையே கவனத்தில் எடுக்காத அவங்கட கிந்திய அரசு, - ஓமண்ணை, 1991 காவாலிகளின் தலைவன் ரஜீவ் மேலே அனுப்பப்பட்டபோது, கோவையில் ஒரு மலை அடிவாரத்தில் வாழ்ந்து வந்த(அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்ட) இஞ்ச இருந்து திரும்பிப்போன மலையக மக்கள் மீது கோவை காவல்துறையினர் பாரிய வன்முறையினை கட்டவிழ்த்து விட்டனர், உசாவல் என்ட பேரில் - இஞ்ச இருக்கிற மலையக மக்களையா கவனத்தில் எடுக்கப்போகிறது?

சரி அதை விடுங்கோ, கிளிநொச்சியில் குடிஅமர்த்தப்பட்ட பெரும்பாலான மலையக மக்கள் வன்னி மக்களோடே பெருமளவு கலந்து போயினர். இளந்தலைமுறையின் பேச்சு வழக்கும் மாறிவிட்டது. அவர்களில் சிலபேர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் வித்தாகினர். அவங்களை எதுக்காக இப்போது அன்னியப்படுத்தப் பார்க்கிறீர்கள்?

----------------------

நீங்கள் இன்று வரை ஆதரவளிக்கும் உங்கள் இந்திய அரசே உங்களை கவனிக்கவில்லை, இதில் அடுத்தவனை ஏன் குறை சொல்கின்றனர்? அதிலும், இப்போது போரால் முற்றாக  நலிவுற்றுப் போயிருக்கும் ஒரு சமூகத்தைப் பார்த்து? 

இப்போதைய சூழ்நிலையில் இப்படி எழுதுவதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. வெறுப்பே இன்னமும் மேலோங்கும்! பழைய கசப்புகளை வைத்து ஏலாத இக்காலத்தில் வெறும் வார்த்தைகளால் பழிதீர்க்கப் பார்க்கும் மட்டமான அரசியல் நோக்கம் கொண்ட கட்டுரை இது! 

(அந்தக் காலத்தில் மலையகத் தமிழர்களை ஏன் யாழில் குடி அமர்த்தவில்லை என்பதை என் தாய்மூலம் கேட்டறிந்த பின்னரே இதை எழுதியுள்ளேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில யாழ் தமிழர்கள், மலையக தமிழர்களை மோசமாக நடத்தினர் என்பதற்கு இந்த யாழிலேயே பல கருத்தாளர்கள் மலையக சிறுமிகளை வேலைக்கு வைத்தல் பற்றிய திரியில் தாம் கண்டதை எழுதியதை பார்த்தாலே விளங்கும்.

சிலதை உண்மையான அணுகுமுறையில் அணுக வேண்டும். வன்னி, திருமலை, மட்டகளப்பு, மலையகம் எங்கினும் தம்மை யாழ் தமிழர்கள் நடத்திய விதம் பற்றி ஒரு அதிருப்தி இருக்கிறது. பெருமளவில். இப்படி அத்தனை மாவட்ட மக்களும் உணரும் படி இது ஒன்றும் பொய்யாக கட்டமைக்கபட்டதாக இருக்காது.

இதற்கும் போராட்டத்துக்கும் பெரிய தொடர்பில்லை. ஆனால் இது பொய்யுமல்ல.

அதே போல் நாடு கடத்தப்பட்ட மலையகமக்களை, மடு ரெயில் நிலையத்தில் வைத்து இறக்கி, வன்னியில் குடியேற்றிய யாழ் தமிழர்களும் இருந்தார்கள்.

இப்போ வன்னியில் இருக்கும் அந்த மக்கள், இன்னும் மலையகத்தில் இருக்கும் மக்களை விட சற்று மேம்பட்டே இருப்பதும் உண்மையே.

அனைத்து இயக்கங்களும் இவர்களை பாரபட்சம் இன்றி நடத்தியதும் உண்மை.

ஆகவே இதில் இரு வேறு கோணங்கள் உண்டு.

ஆனால் இதை போராட்டத்துடன் இணத்து கதைப்பது - மடை மாற்றும் வேலைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் இதை போராட்டத்துடன் இணத்து கதைப்பது - மடை மாற்றும் வேலைதான்.

எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? நான் எழுதுவதனையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

அந்தக் காலத்தில் மலையகத் தமிழர்களை ஏன் யாழில் குடி அமர்த்தவில்லை என்பதை என் தாய்மூலம் கேட்டறிந்த பின்னரே இதை எழுதியுள்ளேன்)

நன்னிச்சோழன், உங்களது அம்மா கூறிய “ அந்த காலத்தில் மலையகத்தமிழர்களை ஏன் யாழில் குடி அமர்த்தவில்லை என்பதற்கான காரணங்கள் இந்த கட்டுரையுடன் ஒத்துப்போகிறதா இல்லையா? 

நான் இந்த கட்டுரையை அரசியல் ரீதியாக பார்க்கவில்லை, எனக்கு அந்தளவிற்கு அரசியல்பற்றிய அனுபவங்களும் இல்லை.. ஆனால் பார்த்த/கேட்டு அறிந்த சம்பவங்களை வைத்து அவர்கள் மேல் இயல்பான அனுதாபம் உள்ளதை மறுக்கவில்லை.. 

முன்னொரு போதும் இல்லாத வகையில் இவைபற்றி இப்பொழுது பேசப்படுவது ஏன்? 

ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அபிப்பிராயங்கள், கருத்துக்கள் இருக்கும்..தமிழர்கள் சமூக, பொருளாதார முன்னேற்றங்களை காணவேண்டுமாயுன் ஒன்றினைந்து செயற்பட வேண்டும், அதற்கு பரஸ்பர நம்பிக்கை, வெளிப்படையான கருத்துக்கள் இருப்பது அவசியம் இல்லையா? 

அதன்படிதான் நான் இந்த கட்டுரையை அனுகினேன்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? நான் எழுதுவதனையா? 

இல்லை ரஞ்சித்.

யாழ்பாணத்தவர் சக தமிழருக்கு செய்த அநியாயத்துக்கும், போராட்டம் அதன் போக்கு, ஒட்டு மொத்த தமிழருக்கும் நடக்கும் அநியாயங்களை ஒன்றாக இணைத்து அதன் பிரதிபலந்தான் இது என நிறுவுவோரை சொன்னேன்.

சொல்லப்போனால் யாழ்பாண மேலாதிக்க மனோநிலையை உள்ளிருந்து உடைக்க முற்பட்ட சக்தி, ஓரளவு 83-09 உடைத்த சக்திதான் போராட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்னிச்சோழன், உங்களது அம்மா கூறிய “ அந்த காலத்தில் மலையகத்தமிழர்களை ஏன் யாழில் குடி அமர்த்தவில்லை என்பதற்கான காரணங்கள் இந்த கட்டுரையுடன் ஒத்துப்போகிறதா இல்லையா? 

நான் இந்த கட்டுரையை அரசியல் ரீதியாக பார்க்கவில்லை, எனக்கு அந்தளவிற்கு அரசியல்பற்றிய அனுபவங்களும் இல்லை.. ஆனால் பார்த்த/கேட்டு அறிந்த சம்பவங்களை வைத்து அவர்கள் மேல் இயல்பான அனுதாபம் உள்ளதை மறுக்கவில்லை.. 

முன்னொரு போதும் இல்லாத வகையில் இவைபற்றி இப்பொழுது பேசப்படுவது ஏன்? 

ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அபிப்பிராயங்கள், கருத்துக்கள் இருக்கும்..தமிழர்கள் சமூக, பொருளாதார முன்னேற்றங்களை காணவேண்டுமாயுன் ஒன்றினைந்து செயற்பட வேண்டும், அதற்கு பரஸ்பர நம்பிக்கை, வெளிப்படையான கருத்துக்கள் இருப்பது அவசியம் இல்லையா? 

அதன்படிதான் நான் இந்த கட்டுரையை அனுகினேன்.. 

மேற்கண்ட கட்டுரைக்குள் குறிப்பிடப்பட்டிருக்கும் 1950 இற்குப் பிறகு வந்தவர்கள் எதற்காக யாழிற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதை எனது வயதிற்கு ஏற்ப விளங்கக்கூடியவாறு தெளிவாக விளக்கினார். 

அவர் சொன்ன காரணம்:

இவர்களுக்கு முன்னர் சிறு தொகையாக சிதறாக வந்தவர்கள் - 1950 இற்கு முன்னர் - யாழிற்குள் குடியமர்த்தப்பட்டதாகவும் (எனது அரத்த உறவு ஒருவர் இவர்களில் ஒருவருடனான காதலால் எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணமும் செய்தார்) அவர்கள் எனது முன்னோரிடம் வேலை செய்ததாகவும், அப்போது அவர்கள் பல்வேறு இடங்களில் செய்த சில ஒக்கமே வெறுக்கத்தக்க சம்பவங்களால் - தன் தாத்தா வீட்டில் நடந்த 3 சம்பவங்களைக்கூட குறிப்பிட்டார் - பின்னாளில் பெருமளவில் இடம்பெயர்ந்து வந்தவர்களும் இதே செயலினை பன்மடங்கு செய்யக்கூடும் என்பதாலும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.

(இவ்வெறுக்கத்தக்க காரணியை தவிர்த்து இன்னும் ஒரு காரணியும் - 'தோட்டாக் காட்டான்' வகையறா - குறிப்பிட்டார். அதை இங்கே குறிப்பிட விரும்பவில்லை)

ஆனால் மேற்கண்ட கட்டுரையானது ஒட்டுமொத்தமாக யாழ்ப்பாணத்தவர்களின் தகட்டுச் சதியால்தான் இவர்கள் வன்னியில் குடியமர்த்தப்ப்ட்டனர் என்ற வரம்பிற்கு எழுதப்பட்டுள்ளது நகைப்பிற்கும் வெறிப்பிற்கும் ஆனது. தங்களுக்கு முன்னர் யாழ் வந்தோர் செய்த சம்பவங்களை எல்லாம் கட்டுரையாளர் மறைத்துவிட்டார்(அவருக்கு தெரியாதோ! இல்லை அறியவில்லையோ!).

குறிப்பிட்டிருந்தால் இருபகுதி முன்னோரையும் நாங்கள் இளையோர் தராசில் போட்டு நிறுத்திருக்கலாம்🤣🤣🤣

பிரபா அவர்களே, இக்கட்டுரை ஒன்றும் மலையகத் தமிழனை மனதில் வைத்து எழுதப்பட்டது மாதிரி தெரியவில்லை. அம்மக்களது பெயரால் வட தமிழீழம் மீது சாதிய தாக்குதல் & பழைய பகை மொத்தமாக இறக்க முனைகிறார்கள்.  முளையிலேயே கொட்டனால் அடித்து துரத்த வேணும். (நேற்று வாசித்த சாதிக் கட்டுரையில் இருந்து அக்கால சாதி பற்றி கொஞ்ச தகவல்கள் கிடைத்துள்ளது. அதை வைத்து இங்கு கம்பு சுற்றப் போகிறேன்😁😁. )

----------------------------------------

எதிர்கால தலைமுறையின் கேள்விக்கணை: 
(மேற்கண்ட கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 'சாதியம்🤬🤢🤮' என்ற ஆயுதத்தை கையில் எடுத்தபடி... )

  1. இவர்கள் அக்காலத்தில் ஏன் யாழிற்கு செல்ல முனைந்தார்கள்? 
  2. ஏன் என்ர செல்லக்குட்டி 'வன்னிமாயில்' இருக்கேலாதோ? கிளிநொச்சியில் எவ்வளவு காடிருந்தது(நானிருந்த சிற்றூரைச் சுற்றிக் காடுதான் முழுவதும்). எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து காட்டை வெட்டி நாடாக்கியிருக்கலாம்தானே? நிறையப்பேர் இருந்தால் காட்டுவிலங்குகளின் தாக்குதல் குறைந்திருக்கும் அல்லவா? சிலவேளை இல்லாமலும் போயிருக்கக்கூடும்! அது அப்படியே ஒரு நகரமாகக் கூட மாறியிருக்கும்!
  3. இல்லை, அந்தக் காலத்தில் வன்னியிலும் மக்கள் வாழ்ந்தனர். அவர்களோடு சேர்ந்து வாழ்ந்திருக்கலாமே? 
  4. அவங்களோட வாழ விருப்பமில்லையென்றால் - மேற்கண்ட கட்டுரையின் கருப் பாணியில் - அவர்கள் என்ன உங்களை விட சாதி குறைவானவர்களா? 
  5. அவங்களோட வாழ விருப்பமில்லாமல் யாழிற்குத்தான் வர வேண்டுமென்று ஒற்றைக்காலில் ஏன் நின்றீர்கள்? 
  6. நீங்கள் எல்லாரும் ஒரே ஊரில் இருந்து உங்களுக்குள் ஒரு சமூகத்தினை உருவாக்கியிருந்தால் அது ஒரு பெரும் பலமாக, நீங்கள் கூறும் பாணியில் என்றால் ஒரு புது சாதியாககூட இருந்திருக்குமல்லாவா? எவ்வளவு தொழில் கற்றறிந்திருப்பீர்கள்? அவற்றைக்கொண்டு புது வணிகம்கூட தொடங்கியிருக்கலாம் அல்லவா? பலங்கொண்டு உங்கள் தராதரத்தினை உயற்றி பலமானவையை எதிர்த்திருக்கலமால்லவா? 
  7. உங்களுக்குத்தான் முன்னமே தெரிந்திருந்ததே யாழ்ப்பாணி இப்பிடித்தான் என்று, பேந்தென்ன மண்ணாங்ஙட்டிக்கு அவர்களோடு சேர்ந்திருக்க விரும்பினீர்கள்? பிடிக்காதவனோடு உங்களுக்கு என்ன பறையல்? 

மேலும் போரால் நலிவுற்ற நாதியற்று நிற்கும் இக்காலத்தில் இந்த கட்டுரை தேவையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நன்னிச் சோழன் said:

நன்னி,

இம்மக்களை வன்னியில் குடியமர்த்த வேறு காரணமும் இருந்தது. அது வன்னியில் தமிழர் இருப்பை உறுதி செய்தல். 

அதிக நிலமும், குறைந்த தமிழர்களும் இருந்த இடம் வன்னி. திருமலையில் நடப்பதை பார்த்து உசாரான தமிழர்கள் இவர்களை வன்னியில் குடியேற்றுவதன் மூலம் அந்த நிலத்தினை தமிழ் நிலமாக வைத்திருக்க முயன்றார்கள்.

அதே போல் யாழ்பாணம் அப்போது சன அடர்த்தி கூடிய இடமாகவும் இருந்தது. வன்னியில் பண்ணைகளில் வேலை வாய்ப்பும் இருந்தது. ஆகவே இதை கட்டுரையாளர் பார்வையில் மட்டும் பார்க்கவியலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, goshan_che said:

நன்னி,

இம்மக்களை வன்னியில் குடியமர்த்த வேறு காரணமும் இருந்தது. அது வன்னியில் தமிழர் இருப்பை உறுதி செய்தல். 

அதிக நிலமும், குறைந்த தமிழர்களும் இருந்த இடம் வன்னி. திருமலையில் நடப்பதை பார்த்து உசாரான தமிழர்கள் இவர்களை வன்னியில் குடியேற்றுவதன் மூலம் அந்த நிலத்தினை தமிழ் நிலமாக வைத்திருக்க முயன்றார்கள்.

அதே போல் யாழ்பாணம் அப்போது சன அடர்த்தி கூடிய இடமாகவும் இருந்தது. வன்னியில் பண்ணைகளில் வேலை வாய்ப்பும் இருந்தது. ஆகவே இதை கட்டுரையாளர் பார்வையில் மட்டும் பார்க்கவியலாது.

அட இது நல்ல விடயம்தானே.

கோசான் அண்ணை என்ன சொல்கிறார் எண்டால்...

தாய் நிலத்தில் இனத்தின்ர இருப்பை உறுதிசெய்வதற்காகவும்,

தமிழர் தலைநகர் திருமலையில் தமிழர்கள் தொடர் சிங்கள குடியேற்றத்தால் சிறுபான்மை ஆக்கப்பட்டதுபோன்று தமிழர் சிறிதளவு இருந்து நிலங்கள் பெருமளவில் வெறுசாக இருந்த வன்னி பெருநிலப்பரப்பிலும் அவ்வாறு நடந்தேறி விடக்கூடாது என்பதற்காகவும், 

  ஏற்கனவே சனத்தொகை அதிகமாகி அங்கிருந்த மக்களுக்கே வேலைவாய்ப்பற்று இருந்த யாழில் குடியேற்றாமல் வேலைவாய்ப்பு அதிகமாக இருந்த பண்ணைகள் கொண்ட வன்னி பெருநிலப்பரப்பில் அகதியாக வந்த தன் இனத்தினை அங்கு குடியேற்றியிருக்கிறார்கள் பூர்வகுடி தமிழ் மக்கள்(இரண்டுமே தமிழர்தான்). 

இதில் எந்த பிழையும் இருப்பதாக எனக்குப்படவில்லை. வேலைவாய்ப்பில்லாத இடத்தில் இருந்து என்ன செய்யப்போகிறீர்கள்? வேலைவாய்ப்பு இருக்கிற இடத்தில் இருந்தால்தானே பிழைக்க முடியம். 

அடுத்து, 

எனது தாயார் கூறியதில் இருந்து...

இவ்வாறு வந்த மக்களில் பெரும்பான்மையானோருக்கு தேயிலைதொழில் கைவந்த கலையாக இருந்ததாகவும் மற்ற வேலைகள் செய்வதில் கொஞ்சம் சுணக்கம் காட்டியதாகவும் - 'சுணக்கம்' என்பதைவிட 'தெரியவில்லை' என்ற சொல் பொருத்தமானது. நாம் அவர்கள் இடத்தில் இருந்து இதனை கவனித்தால் தம் வாழ்நாளை தேயிலை தோட்டங்களிலே கழித்தததால் அவர்கள் இன்ன பிற வேலைகள் அறியாதிருந்திருக்கின்றனர் என கருத இடமுண்டு. அதேநேரம் இதை அவர்களின் அறியாமை அ சோம்பேறித்தனம் எனவும் அவர்களை அந்நிலையில் வைத்திருந்த தோட்ட முதலைகளின் கொத்தடிமைத்தனம் எனவும்கூட கொள்ளலாம் - அதனால் வேலை தெரியாதவர்களை ஏற்கனவே வேலையற்ற இடங்களில் வைத்திருப்பதைவிட அவர்கள் நன்கறிந்த வேலையோடு தொடர்புடைய இடங்களில் குடியமர்த்துவதால் அவர்களும் தாமறிந்த வேலைகள் & இயன்றால் தம்மவர்களையே சேர்த்து தொழில்கள் ஏதேனும் செய்து பிழைத்துக்கொள்ள வாய்ப்புண்டு என்ற நன்னோக்கதிலும் அங்கு குடியமர்த்தியிருக்கிறார்கள் என்றும் கூறலாம் & நோக்கலாம்.

ஆனால்  வடக்குநோக்கி இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் வசதியாக வாழும் வாய்ப்பினை எதிர்ப்பார்த்தனர் எனலாம்(மேற்கண்ட கட்டுரையில் எழுதப்பட்டிருப்பதன் பொருள்களில் ஒன்று). ஏனப்பா எல்லா வசதியும் இருக்க வட தமிழீழம் என்ன சிங்கப்பூரே? ஏற்கனவே சிங்கள பேய்களின் கழுப்பார்வை கொண்ட மண். உழைத்தால்தானே கட்டுமானங்களை எழுப்பி நிறுவலாம்? அது இல்லாமல் வந்தவுடன் எல்லாம் கிடைக்க அங்கு ஒரு அரசு கூட இல்லையே. மக்களின் உழைப்புத்தானே அங்குமிருந்தது. மேலும், நொந்துதான் நொங்ஙு தின்ன வேண்டும்!

ஆனால் குடியேறிய மக்களுக்கு இனத்தாய்நிலத்தைக் காப்பதற்கு சோம்பேறித்தனமோ?😪... 

இந்த வேலை எங்களுக்கு சரிப்பட்டு வராது கொத்தடிமைதான் சரியானது என்றெண்ணி தோட்டத்திற்கே திரும்பினர் மலையக மக்கள். 

-----------------------------------------

எனதுதாய் இன்னுமொன்றினைக் கூறினார்... என்னென்டால், 

முதல் அலையில் வந்த மக்களிற் சிறு தொகையானோர்(மலையக மக்களும்தான்) யாழ் பாடசாலைகள் போன்றவற்றில் ஏதிலி முகாம்கள் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டனர் என்றும் அவர்களுக்கு ஏற்கனவே கலவரத்தால் கஸ்டத்தில் இருந்த உள்ளூர் மக்கள் தங்களால் இயன்ற உதவிகள் செயதனர் என்றும் கூறினார்.

ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் தென்னிலங்கை திரும்பினர் என்றார் மேலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவாதிக்கப்   படும்  தலைப்புடன் ஒன்றுக்கு ஒன்று என்ற ரீதியில் தொடர்பு படாவிட்டாலும்  நடந்து முடிந்த சம்பவங்கள் உருப்பெற்றிருந்த தடங்களை  பின் வரும்   நிலவரங்கள் தழுவி நிற்குமாப்     போல் தெரிவதால் பதியலாம் என யோசித்தேன் .

டொலர்,   கென்ட் பண்ணை கதை ஒத்தது தான் …

பாடசாலை நண்பர்கள் பலர்  40 வருடங்களின்   மீள்  சேர்ந்து,  ஊரில் நலிவடைந்தோருக்கு கல்வி, வாழ்வாதாரம், தன்னிறைவடைதலை மேம்படுத்தல் என்று சிறிதாக செய்யத் தொடங்கியிருக்கிறோம். 
கிழக்கு மாகாணத்தின் எல்லைப்பகுதிகளை ஒட்டி அமைந்திருக்கும் கிராமங்கள் ஆரம்ப   கட்ட     தெரிவாக இருக்கின்றன .

திட்டங்களில் ஒன்று குடும்பங்களுக்கு கோழிக்கூடு அமைத்து குஞ்சுகளும் வாங்கிக் கொடுத்து ஆறு மாதங்களுக்கு பராமரிப்புச் செலவும் கொடுப்பது .. மீள் சுழட்சி முறையில் அவர்களே அதன் பின்னர் அதனை தொடர்ந்து செய்வது  .

 ஒரு 15  குடும்பங்கள் அளவில் திட்டம் தற்சமயம் நடைமுறைப்படுத்தப் பட்டு போய்க்கொண்டிருக்கிறது.

உலகெங்கும் சிதறிக்கிடக்கும் நண்பர்களை உள்வாங்கும் அலுவலும்  தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சிலநாட்களின்  முன்னர்  சேர்ந்த நண்பன் ஒருவன் சொன்னான் ..

 " மச்சான்,  உந்த கோழிக்கூட்டு அலுவல் எல்லாம் உண்மையில் பிரயோசனம் இல்லை .. கோழிக்கு வருத்தம் வந்து,  அல்லது பாம்பு,   கீரி எதும் பிடித்துக் கொண்டு   போனால் அதோட  கடையை மூடி விட்டு விடுவினம்"

"பெருமெடுப்பில் பண்ணை அமைப்பதுவும் அதனை  இந்த பயனாளிகளை  கொண்டு நடாத்துவதுவும் - (இன்னுமொரு 25 வருடத்திற்கு இனக்கலவரம் இந்த நாட்டில் வர சந்தர்ப்பம் இல்லை என்ற எடுகோளுடன் )- அவைகளை தன்னிறைவடைய செய்வத்தில் காத்திரமான பங்கை அளிக்கும் "

அவனுக்கு   50-100  ஏக்கர் என்ற அளவில் காணிகளை 99 வருட குத்தகைக்கு பெற  கூடிய தொடர்புகள் உண்டு .

"காடு கெடுத்து பண்ணை அமைக்கும் ஆரம்ப செலவை நண்பர் நாம் மேற்கொள்வோம். பயனாளிகள் பண்ணையை நடாத்திச் செல்லட்டும் " என்கிறான் அவன் 

யார்   அந்த பயனாளிகள் -  

இவர்களை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும் விவசாயக் காணி பகுதிக்குள் வரவழைத்து அங்கே அவர்களை ஒன்று சேர்க்கக் கூடிய நடைமுறைச் சாத்தியமான நிதி வளங்களை பெற்றுக்    கொள்ளக் கூடிய நிலைமையில் இல்லாதவர்கள்..

ஏறக்குறைய மலையகத்தில் இருந்து வந்த தமிழர்களின் நிலை போன்றது தான் இதுவும்..

ஒரு பத்து பதினைந்து வருடங்களின் பின்னர் யாழ் களத்தில் அந்த நேரம் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் சங்கரனும்  சங்கரியும் இப்போ இங்கே பதிவுகளில் போய்க்கொண்டிருப்பது மாதிரியான விமர்சங்களை முன்வைப்பது எனது மனத்திரையில் ஓடி இதழ் வழியே  ஒரு சிறு புன்னகையாக மாறி சிந்தி நிற்கின்றது ...
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 03

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 03

— கருணாகரன் — 

(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது. — ஆசிரியர்)   

(03) 

“குரலற்றவர்களுக்கு நீதியுமில்லை. கருணையில் இடமுமில்லை. தனித்து விடப்பட்டவர்களின் துயரங்களே அவர்களுடைய வழி நீளமும்.” 

தங்களுடைய நிலையை தாமே வெளிப்படுத்தவும் முடியாது. தங்களைப் பற்றி பிறரும் பேசாத ஒரு நிலையே வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுடைய வாழ்க்கையாக இருந்தது. இதனால்தான் இவர்கள் பேசாப் பொருளாக விலக்கப்பட்டனர். குரலற்றோராக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். வடக்கு நோக்கி வந்து 60 ஆண்டுகள் கடந்த பின்னும் இவர்களைப் பற்றி, இவர்களுடைய சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலைமைகளைப் பற்றி எந்தத் தரப்பினாலும் எத்தகைய ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. 

இவ்வளவுக்கும் இவர்கள் வடக்கில் கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு அண்மையான சனத்தொகைத் தாக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் நான்கில் ஒரு பகுதியினர் என்ற அளவுக்குள்ளனர். 

அப்படியென்றால் அரசியல் பிரதிநிதித்துவத்திலும் பண்பாட்டு அடையாளத்திலும் சமூக பொருளாதாரத்திலும் வளப்பகிர்விலும் பிற அதிகாரங்களிலும் இவர்களுடைய இடம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. 

ஏனென்றால் இவர்கள் கூலிகள்… கூலிகள்… கூலிகள்… 

கூலிகளிலும் பல வகையுண்டு. குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் உள்ள கூலிகள் அந்த நிலத்தின் வாழ்க்கைத் தொடர்ச்சியைக் கொண்ட வறிய மக்கள். அல்லது ஒடுக்கப்பட்ட – தாழ்த்தப்பட்ட சமூகத்தினர். இவர்களுக்கு அந்தந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியாகவே வாழ்ந்த வாழ்க்கை அனுபவப் பலமும் வரலாற்றுத் தொடர்ச்சி என்ற வலுவும் இருந்தது. ஏற்ற இறக்கமுடைய சமூக நிலை என்றாலும் அயலவர்களுடனான உறவு இருந்தது. 

எனவே இவர்கள் கூலிகள் என்ற நிலையிலும் சற்றுப் பலமானவர்களாகவே இருந்தனர். 

அத்துடன் காலனித்துவகாலத்தில் (கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்) கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டும் தொடர்ச்சியாக ஏற்பட்ட அரசியற் பொருளாதார மாற்றங்களினாலும் வடக்கிலிருந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் மெல்ல மெல்ல வலுவான நிலையைப் பெற்று முன்னேறத் தொடங்கினர். 

கல்வியிலும் பண்பாட்டிலும் கடினமான நிலைகளில் எப்படியோ தமக்கான இடத்தை நிறுவிக் கொண்டவர்கள், தங்களை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலைப் பெற்றனர். 

ஆனால் மலையகத்திலிருந்தும் தென்பகுதியிலிருந்தும் இடம்பெயர்ந்து வந்த இந்தக் கூலிகள் அப்படியல்ல. இவர்களுக்கு இது புதிய சூழல். இடமும் தொழிலும் முற்றிலும் புதியது. அயலர்கள்(தமிழர்) புதியவர்கள் –அந்நியர். அதைப்போல வாழ்விடமும் முற்றிலும் புதியதாக இருந்ததால் இவை எல்லாவற்றையும் கூட்டாக எதிர்கொள்வதில் மிகக் கடினமான நிலைகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. 

முக்கியமாக வடக்கிலுள்ள அனைத்துத் தரப்பினராலும் இவர்கள் புறத்தியாராகவே பார்க்கப்பட்டனர். நடத்தப்பட்டனர். ஆக மிக அடிநிலையிலிருந்தே தம்மைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இதற்கு நல்ல உதாணம், இவர்களுக்கு வடக்கு மக்களால் இடப்பட்ட அடையாளக் குறியாகும். வடக்கத்தையார், இந்தியாக்காரர், தோட்டக்காட்டார், வந்தேறிகள் என்ற அடையாளப்படுத்தல்களால் குறிப்பிடப்பட்டதிலிருந்தே இவர்களைக் குறித்து வடக்கு மக்களிடம் எத்தகைய மனநிலை இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மிகப் பிந்தியே மலையக மக்கள் என்ற சொற்பதம் பிரயோக நிலைக்கு வந்தது. இதற்குக் காரணம், விடுதலை இயக்கங்களே. 

மற்றும்படி இவர்கள் விவசாயக் கூலிகளாகவும் நகரங்களிலும் கிராமங்களிலும் விளிம்பு நிலைத் தொழிலைச் செய்வோராகவுமே இருந்தனர். 

காணியற்றவர்கள் என்பதால் குடியிருப்பே பெரும் சவாலாக இருந்தது. இந்தப் பிரச்சினை இன்றும் (2021 இலும்) தொடர்கிறது என்பது எவ்வளவு அவலம்? 

1958இல் வந்தவர்களுக்கு தருமபுரத்தில் ஒரு தொகுதி காணி வழங்கப்பட்டது. அப்பொழுது தருமபுரம் பெருங்காடு. அந்தக் காட்டையே இவர்கள் வெட்டித் துப்புரவு செய்து குடியேறினர். பின்னர் வந்தவர்களுக்கு இதுவும் இல்லை. அவர்கள் தாமாகவே காடுகளை வெட்டி அங்கங்கே குடியேறினார்கள். வவுனியாவில் 1977இல் சில இடங்களில் காணிகள் கிடைத்தன. இதற்கு காந்தியம் உதவியது. ஆனால் இதெல்லாம் நீர்ப்பாசனக் காணிகளே அல்ல. 

வன்னியின் குடியமைப்பு விவரத்தைப் பற்றி ஒரு சிறிய விளக்கம் இந்த இடத்தில் சொல்லவேண்டும். முதலாவது பூர்வீக வன்னி மக்கள். இவர்கள் காலாதிகாலமாக வன்னிக் கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். இவர்களுடைய குடியிருப்புகள் இரண்டு வகையான அடிப்படைகளில் அமைந்தது. ஒன்று, குளங்களை – அதனையொட்டிய நீராதாரங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாயக் குடியிருப்புகள். வன்னியிலுள்ள பெரும்பாலான ஊர்கள் குளங்களின் பெயரோடு இணைந்திருப்பதை நீங்கள் இந்த இடத்தில் நினைவு கொண்டு பார்க்கலாம். கொந்தக்காரன்குளம், கூமாங்குளம், ஒட்டறுத்த குளம், ஐயன்குளம், அனிஞ்சியன்குளம், பன்றிக்கெய்த குளம், பாண்டியன் குளம், பாவற்குளம், செட்டிகுளம், உக்கிளான் குளம், பண்டாரிகுளம், திருநாவற்குளம், தவசிகுளம், கோயில்குளம், இறம்பைக்குளம், சமளங்குளம், ஆசிகுளம், மாதர்பணிக்கங்குளம் என பல நூறு குளக்குடியிருப்புகள் உண்டு. 

இரண்டாவது, கடலோரங்களில் அமைந்த மீனவக் குடியிருப்புகள். இரண்டும் நீரை அடிப்படையாகக் கொண்டமைந்தவை. இவையே பூர்வீக வன்னியின் குடியிருப்பு முறைமையும் இதனோடிணைந்த பொருளாதார முறைமையுமாகும். 

1950களில் இதனோடிணைந்த விவசாயக் குடியேற்றங்கள் புதிதாக வன்னியில் ஆரம்பிக்கப்பட்டன. இரணைமடு, வவுனிக்குளம், முத்தையன்கட்டுக்குளம், அக்கராயன் குளம், வன்னேரிக்குளம், விசுவமடுக்குளம் என பல குளங்கள் புதிதாக இதற்கெனக் கட்டப்பட்டன. 

இந்தக் குளங்கள் அத்தனையும் நீர்ப்பாசனக் குளங்களாகும். அதாவது பூர்வீக வன்னியின் சிறிய குளங்களைப் போலன்றி இவை பிரமாண்டமான பாசனை வசதியைக் கொண்டமைந்தவை. 

இந்தப் பாசன நீரை ஆதாரமாகக் கொண்ட நெல் மற்றும் மேட்டு நிலப் பயிர்ச்செய்கைக்கான ஏற்பாடுகளோடு இந்தக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கான குடியிருப்பாளர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்தே கொண்டு வரப்பட்டனர். 

இவர்களுக்கு பாசனத்தில் பயிர் செய்யக் கூடிய நிலமும் குடியிருப்புக்கான நிலமும் வழங்கப்பட்டன. அத்துடன், இவர்களுக்கான குடியிருப்புக்கு வீடுகளும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. 

இந்தக் குடியேற்றத்திட்டங்கள் பல வகையான அடிப்படைகளில் வேறு அமைக்கப்பட்டது. மத்திய வகுப்புத்திட்டத்தில் 30 ஏக்கரிலிருந்து 15 ஏக்கர் வரையில் வழங்கப்பட்டது. படித்த வாலிபர் திட்டம். இதில் ஐந்து ஏக்கரிலிருந்து மூன்று ஏக்கர் வரை வழங்கப்பட்டது. படித்த மகளிர் திட்டம், விவசாயிகள் திட்டம் எனப் பல வகையான திட்டங்களுக்கூடாக பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வன்னியெங்கும் குடியேற்றப்பட்டன. 

இன்றைய வன்னி மாவட்டங்களில் கணிசமானோர் இவ்வாறு குடியேற்றப்பட்டவர்களால் நிரப்பப்பட்டோரே. இவர்களுக்கான பாடசாலைகள், வீதிகள், தபால் நிலையங்கள், மருத்துவமனைகள், சந்தைகள், கூட்டுறவுக்கடைகள், விவசாய நிலையங்கள், நிர்வாகப் பணிமனைகள், மின்சாரம் என அனைத்தும் சிறப்பு ஏற்பாடாகச் செய்து கொடுக்கப்பட்டன. 

இதனால் இந்தக் குடியேற்றவாசிகள் மிக விரைவாக வன்னியில் புதியதொரு வலுவான சமூகமாகத் திரட்சியடைந்தனர். பெருமளவு நிலத்தையும் வளத்தையும் கொண்டவர்களாக இருந்த காரணத்தினாலும் யாழ்ப்பாணத் தொடர்பினாலும் இவர்களுடைய வளர்ச்சி விரைவாக நிகழ்ந்தது. 

ஆனால், வன்னிக்கு வந்த – வடக்கிற்கு வந்த மலையக மக்களுக்கு இதெல்லாம் கிடைக்கவே இல்லை. இதைப்பற்றி யாரும் சிந்திக்கவுமில்லை. 

இவர்களுக்குக் கிடைத்ததெல்லாம் புறம்போக்கு நிலம் என்ற கிறவல் பிட்டிகளே. இதைக்கூட இவர்கள் மிகச் சிரமப்பட்டு அத்துமீறலாக பிரவேசித்து, வெட்டித் துப்புரவு செய்துதான் எடுத்துக் கொண்டனர். 

இதில் ஒரு துளி நீரைக் காண்பதே அபூர்வம். 

ஆனாலும் இதை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில் வேறு என்னதான் செய்ய முடியும்? 

இந்தச் சூழ்நிலையில்தான் இவர்கள் தங்கள் குடியிருப்புகளை அமைத்தனர். அத்தனையும் சின்னஞ்சிறு குடிசைகள். 

1958 தொடக்கம் 1977, 1983 எனத் தொடர்ந்த வன்முறைப் பெயர்வுகளில் வந்த இந்த மக்களின் இரண்டாவது கட்ட அவலம் இந்தக் குடிசைகளில் தொடர்ந்தது. 

மலையகத்தில் உள்ள லயங்களுக்கு நிகராகவே இந்தக் குடிசைகள் அப்போதிருந்தன. 

(தொடரும்) 
 
https://arangamnews.com/?p=5684

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 04

spacer.png

இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது.  — ஆசிரியர்   

(04) 

பிறத்தி என விலக்கி வைத்தல் நீதியின் எந்த முறையிலானது நண்பரே! சேர்ந்திருப்போம் என்பது உங்களின் கீழே அடங்கியிருத்தல்தானா?” 

புறம்போக்கு நிலத்தில் பிறத்தியாரை இருத்துவதைப்போலவே எரிந்த காட்டின் நடுவிலும் ஓரங்களிலும் குடிசைகளைப் போட்டுக் கொண்டிருந்த மக்களைப் பாம்புகளும் நுளம்பும் யானையும் உலைத்துக் கொண்டிருந்தன. 

ஏறக்குறைய காட்டுவாசிகளைப் போலவே இருந்தனர். 

கொழுத்தும் வெயிலும் கொட்டும் மழையும் பாடாய்படுத்தியது. 

“அப்பெல்லாம் புள்ளைங்கள எப்பிடிக் காப்பாத்றது எண்ணே புரியல்லப்பா. ஒரு மழைக்கே தாக்குப் பிடிக்க முடியாம இருக்கும். அந்த மழையில ஐஞ்சு பத்து எண்ணு பிஞ்சிப் புள்ளைங்கள்ளாம் செத்துத் தொலையும். வேற என்னதான் வழி?” என்று அந்த நாட்களைத் துயரத்தோடு நினைவு கூருகிறார் தருமபுரத்திலிருக்கும் மூதாட்டி கருப்பாயி முத்துச்சாமி. எண்பத்தி ஆறு வயதுடைய இந்த முதிய பெண்ணிடம் சொல்வதற்கு ஏராளம் கதைகள் உள்ளன. அத்தனை கதையும் நம் மனச்சாட்சியை உலுக்குவன. கேள்விகளை எழுப்புவன. 

பகல் முழுதும் எறிக்கும் வெயிலில் போய் வேலை செய்ய வேண்டும். அல்லது கொட்டும் மழையில் நின்று உழைக்க வேண்டும். தினக்கூலிகளின் விதி இதை விட வேறு எப்படி இருக்கும்? 

இரவு யானைக்கும் பாம்புக்கும் நுளம்புக்கும் அஞ்சிப் பாதித்தூக்கத்தில் விழித்திருக்க வேண்டும். நெருப்பை நாலு திக்கிலும் மூட்டிவிட்டு  வீட்டைச் சுற்றிக் காவலிருக்க வேண்டும். 

இதை விட நல்ல தண்ணியில்லை, நல்ல சாப்பாடில்லை, நல்ல சூழல் இல்லை என்ற காரணங்களினால் போசாக்கில்லாத நிலையில் நோய்த்தாக்கம் வேறு ஆட்டிப்படைத்தது. பனையால் விழுந்தவரை மாடு ஏறி மிதித்தது பழைய கதை என்றால் “மலையால் வந்தவரை காடேறி மிதிக்கிது” என்று புதிய கதை தொடர்ந்தது. 

அடுத்தது, போக்குவரத்துப் பிரச்சினை, பள்ளிக் கூடப் பிரச்சினை என்று எல்லாமே பிரச்சினையாகவே இருந்தன. ஏழைகளுக்கும் கூலிகளுக்கும் பிரச்சினையன்றி வேறு எதுதான் கிடைக்கும்? 

இந்த நிலையில் முதல் தலைமுறை எதுவுமே செய்ய முடியாமல் அப்படியே கூலிகளாக உக்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் எவரும் தொடர்ந்து படிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். 

இதைப்பற்றி அக்கறைப் படுவதற்கு அன்று யாரும் இருக்கவுமில்லை. அப்பொழுது இன்றுள்ளதைப்போல என்.ஜீ.ஓ (NGO) க்களும் பெரிதாக வளர்ச்சியடைந்திருக்கவில்லை. 

ஆகவே இப்போதையைப் போல வாழ்வாதாரம் வழங்குகிறோம். அகதிகளுக்கு உதவுகிறோம். வீடு கட்டித் தருகிறோம். இலவச மின்னிணைப்புக் கிடைக்கும். குறைந்த கட்டணத்தில் நீர் விநியோகம் கிடைக்கும் என்று  யாரும் வந்து எதிரே நிற்கவில்லை. இவர்களுக்காக எந்தக் கொடிகளும் அசையவுமில்லை. 

“காடோ மேடோ முள்ளோ கல்லோ நீயாகவே எழுந்து வா” என்று விதியுரைத்தது. 

மனித நேயம் அநேகமாகப் பொய்யுரைத்தது. 

ஆனால் மனித இயல்பென்பது எந்த நெருக்கடிச் சூழலிலும் தன்னைத் தக்க வைத்துக் கொண்டு முன்னகர எத்தனிப்பதல்லவா. ஏன், உயிர்களின் இயல்பே அப்படித்தானே. 

குளிர் அடர்த்தியாகும்போது துருவத்துப் பறவைகள் கண்டம் விட்டுக் கண்டம் வலசைகளாகப் பறப்பது எதற்காக? 

தம்மைத் தக்க வைத்துக் கொள்வதற்காத்தானே. யானைகளும் பன்றிகளும் மான்களும் கூட ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு எதற்காக நகர்ந்து செல்கின்றன? தமக்கான உணவுக்காவும் நீருக்காகவும் அல்லவா! 

சின்னஞ்சிறு எறும்புகள் கூட எப்படியோ தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்கின்றன. 

அப்படித்தான் இந்த மக்களும் அவ்வளவு அலைச்சல்கள், புறக்கணிப்புகள், ஒடுக்குதல்கள், துயரங்களின் மத்தியிலும் மெல்ல மெல்லத் தங்களை நிலைப்படுத்தத் தொடங்கினார்கள். 

ஆனால் அது எளியதாக இருக்கவில்லை. 

பாருங்கள் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று. 

“வெட்டித்துப்புரவு செய்த காட்டுக் காணிகளில் குடிசைகளை மட்டும் போட்டுக் கொள்ளுங்கள். வீடு கட்டுகிற வேலையை எல்லாம் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று அப்போது கிளிநொச்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வீரசிங்கம் ஆனந்தசங்கரியே இந்த மக்களை எச்சரித்திருக்கிறார். இதை இன்னும் சிலர் துயரத்தோடு நினைவு கூருகிறார்கள். 

1970களில் கிளிநொச்சியில் தீவிரமான அரசியல் செயற்பாட்டில் இயங்கிய செல்லையா குமாரசூரியர் கூட இந்த மக்களுடைய நலன்களைக் குறித்து விசேட கவனமெடுக்கவில்லை. ஆனால் அவர் அப்போது ஏறக்குறைய மூவாயிரம் வரையான கிளிநொச்சி மாவட்டத்தின் ஏனைய மக்களுக்கு வேலை வாய்ப்புகள், காணி போன்றவற்றில் வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார். குறைந்தபட்சம் இந்த மக்கள் வாழ்கின்ற இடங்களில் பொதுக்கிணறுகளைக் கூட அமைக்கவில்லை. 

இதெல்லாம் இன்று முன் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளல்ல. வரலாற்றுண்மைகளாகும். 

இப்படி வஞ்சிக்கப்பட்ட வரலாற்றிற்கூடாகவே இவர்கள் தங்களை மெல்ல மெல்லக் கட்டியெழுப்பத் தொடங்கினர். 

இதில் இடத்துக்கிடம் வேறுபாடுகள் காணப்பட்டன. வவுனியாவில் தங்கியிருந்த இந்த மக்களை காந்தியம் அமைப்பைச் சேர்ந்த டொக்ரர் ராஜசுந்தரம்டேவிட் ஐயா போன்றோர் கவனித்தனர். இவர்கள் செய்த வேலை இந்த மக்களை வவுனியாவின் எல்லைப் புறங்களில் கொண்டு சென்று குடியமர்த்தியதே. 

ஆனால் இந்தக் குடியேற்றங்கள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக இந்த மக்களோடு இணைந்து வேலைகளைச் செய்தனர். 

ஒரு கட்டம் வரையில் இந்த மக்களுக்கு அது தேவையாகவும் ஆறுதலாகவும் இருந்தது. 

ஆனால் இவர்கள் இருவரும் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்ட கையோடு இவர்களுடைய நிலை நெருக்கடிக்குள்ளாகியது. 

எல்லைப் புறங்களில் குடியமர்த்தப்பட்டதால் இன வன்முறையும் அரச படைகளின் அத்துமீறல்களும் இவர்களை நேரடியாகப் பாதித்தன. ஏனென்றால் இவர்களே அடி வாங்கக் கூடிய முன்னரங்கினராக (Buffer) நிறுத்தப்பட்டிருந்தனர் அல்லவா! 

இதனால் மலையத்திலிருந்து அடிவாங்கி வந்தவர்கள் இங்கும் அடிவாங்க வேண்டியிருந்தது. 

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்தோருக்கு இந்த அவலம் இல்லை என்றாலும் புறக்கணிப்பின் அரசியலால் நிறையக் கஸ்ரங்களை எதிர் கொண்டனர். 

கிளிநொச்சியில் ஒரு தொகுதியினர் ஒன்று சேர்ந்து ஒரு பிரதேசத்தைத் தெரிவு செய்து காடுகளை வெட்டி அங்கே குடியேறினர். அல்லது பின்னாளில் இந்த இடங்களில் விடுதலை இயக்கங்கள் குடியேற்றங்களைச் செய்தன. 

அந்தக் கிராமங்கள்தான் இன்றுள்ள பாரதிபுரம், தொண்டமான் நகர், மலையாளபுரம், செல்வா நகர், ஊற்றுப்புலம், ஜெயபுரம், ஆனைவிழுந்தான், மணியங்குளம், இந்திராபுரம், சதாபுரம், முறிப்பு, காந்தி கிராமம், பொன்னகர், அம்பாள்குளம் போன்றவை. 

நாற்பது ஆண்டுகளாகியும் இந்தக் கிராமங்கள் இன்னும் எப்படியுள்ளன என்று பார்த்தால் எல்லாமே புரியும். 

(தொடரும்) 

https://arangamnews.com/?p=5866

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 05

spacer.png

(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது. — ஆசிரியர்)   

(05) 

நாங்கள் வேறு நீங்கள் வேறு என்றானால் 

நமக்கொரு நீதி பிறர்க்கொரு நீதி என்றாகுமே – நாமென்றோர் எண்ணம் என்றேனும் தோன்றாதோ 

கிளிநொச்சியில் குடியேறிய மக்களுக்கு வேறு வகையான நெருக்கடிகள், பிரச்சினைகள் இருந்தன. குறிப்பாக காணிப்பிரச்சினை, வீட்டுப்பிரச்சினை, தொழில் மற்றும் வருமானப் பிரச்சினை, பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான கல்வி, தாங்கள் வாழ்கின்ற பகுதிகளில் பாடசாலைகளை அமைக்கும் பிரச்சினை, போக்குவரத்துக்கான வீதி, குடிநீர் மற்றும் பயிர்ச்செய்கைக்கான நீர்ப் பிரச்சினை, சமூக நிலையில் சமத்துவமற்ற நிலை, கோயில்களில் பங்கில்லை – உரிமை இல்லை என்ற நிலை என இந்தப் பிரச்சினைகளின் பட்டியல் நீண்டது. 

பெரும்பாலானவர்கள் கூலிகளாகவே இருந்ததாலும் காட்டோரத்தின் புதிய குடியேற்ற வாசிகள் என்பதாலும் இயல்பாகவே ஏற்படுகின்ற பிரச்சினைகளும் இவர்களைச் சூழ்ந்திருந்தது. 

தங்களுடைய பிரச்சினைகளைப் பற்றி எவருடனும் பேசக் கூடிய அமைப்போ தலைவர்களோ இவர்களிடம் உருவாகவும் இல்லை. அதனால் அத்தனை நெருக்கடிகளும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. 

இதனால்தான் இவர்களுடைய பிரச்சினைகளும் தீரவில்லை. பிரதேசங்களும் முன்னேற்றமடையாமல் நீண்டகாலமாக இருந்தன. 

குறித்துச் சொல்வதாக இருந்தால் 2000 ஆண்டுவரையில் இவர்களுடைய வீடுகளில் சீமெந்தினால் கட்டப்பட்ட பாதுகாப்பான கிணறுகளே இருந்ததில்லை. இவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் ஒரு வீதி கூட ஒழுங்காகப் போடப்பட்டதில்லை. 2009க்குப் பிறகு – யுத்தம் முடிந்த பின்னரே அநேகமாக இவர்களுடைய வீடுகள் குடிசையிலிருந்து கல் வீட்டுக்கு – ஓட்டு வீட்டுக்கு வந்தது எனலாம். வீதிகள் புனரமைக்கப்பட்டதும் வீடுகளுக்கு மின்சாரம் வந்ததும் கிணறுகள் கட்டப்பட்டதும் கூட 2009 க்குப் பிறகுதான். 

அந்தளவுக்கு பின்தங்கிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டிருந்தனர். 

ஆனால் அத்தனை பேரும் கடுமையான உழைப்பாளிகள். அதுவும் ஆண்களும் பெண்களும் சமமாக வேலை செய்கின்றவர்கள். உடல் உழைப்பாளிகள். கொஞ்சம் பெரியவர்களாக வளர்ந்து விட்டால் பிள்ளைகளும் வேலைக்குப் போகத் தொடங்கி விடுவார்கள். அவர்களும் உழைப்பாளிகளாகி விடுவார்கள். கொஞ்சம் பெரியவர்கள் என்றால் பத்துப் பன்னிரண்டு வயது ஆனவுடன். 

இன்று குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி, அவர்களுடைய உரிமைகளைப் பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால் அன்று (பத்துப் பதினைந்து ஆண்டுகளின் முன்பு – ஏன் இப்பொழுதும் இந்த நிலை இவர்களிடம் முற்றாக மாறவில்லை) இந்தப் பத்துப் பன்னிரண்டு வயதுப் பிள்ளைகள் வயலில் கதிர் பொறுக்கினார்கள். கிளிகளைக் கலைத்தனர். பன்றிக்கும் காட்டெருமைக்கும் யானைக்கும் எதிராக நெருப்பை மூட்டி விட்டு காட்டோரங்களில் பயிர்களுக்குக் காவலிருந்தனர். தோட்ட வேலைகளிலும் வயல் வேலைகளிலும் ஈடுபட்டனர். வீட்டுப்பணிக்குச் சென்றனர். கடைகளில் உதவியாளர்களாக வேலை செய்தனர். இப்படிப் பல வேலைகளிலும் இந்தச் சிறார்கள் உழைப்பாளர்களாக இருந்தனர். 

இப்படிச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக உழைத்தும் குடும்பங்களின் பொருளாதாரம் உயர்ந்ததா என்றால் இல்லை என்பதே பதில். 

காரணம், உழைப்பு அதிகம். கூலி (சம்பளம்) குறைவு. 

இதேவேளை இப்படிச் சிறுவயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் இவர்களால் படிக்க முடியவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இதை ஒரு நல்ல வசதியான ஏற்பாடாகவே நிலங்களை வைத்திருந்தோரும் கடைகளை வைத்திருந்தோரும் விரும்பினர். அப்படியென்றால்தானே குறைந்த கூலியில் நிறைய வேலையாட்கள் கிடைப்பர். நிறைய வேலையாட்கள் இருந்தால் கூலியை உயர்த்த வேண்டியதில்லை. 

இதனால் இவர்களுடைய அடுத்தடுத்த தலைமுறையிலும் அநேகர் கூலிகளாகவே வாழ்க்கையைத் தொடர வேண்டியிருந்தது. 

உலகம் முழுவதும் கூலி உழைப்பாளிகள் இப்படி எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் அதிகம். உத்தரவாதமில்லாத ஊழியம். பாதுகாப்பில்லாத வாழ்க்கை மற்றும் தொழில் ஏற்பாடுகள். இதிலும் சீசன் தொழில்களில் தங்கியிருப்போர் மாற்றுச் சீசன்களில் வருமானத்தை இழக்க வேண்டிய நிலை என்பது மிகத் துயரமானது. பருவகாலப் பயிர்ச்செய்கை இதில் முக்கியமான ஒன்று. வன்னியில் தோட்டச் செய்கையும் வயல் விதைப்பு –அறுவடையும் பிரதான சீசன் தொழில்கள். இதனால் குறிப்பிட்ட சீசனைத் தவிர்ந்து மீதிப் பாதிக்காலத்தை நெருக்கடிகளில் கழிக்க வேண்டும். 

இதேவேளை இதைப்பற்றிப் பேசுவதற்கோ நியாயம் கேட்பதற்கோ தொழிற்சங்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் எதுவும் இல்லை என்ற நிலையில் நிராதரவான ஒரு சூழலிலேயே இவர்கள் வாழ வேண்டிய அவலம் நீடித்தது. 

இப்படித்தான் வன்னி வாழ் மலையக மக்கள் தங்களுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொள்ள வேண்டி இருந்தது. 

இதற்குள் யுத்த நெருக்கடிகள் வேறு. 

போராட்டமும் போரும் தீவிரமடைய இந்தக் குடும்பங்களிலிருந்தே பெருமளவு இளைஞர்களும் பெண்களும் போராட்டத்தில் ஈடுபடத்தொடங்கினர். இதனால் இவர்களுக்கே இழப்புகளும் அதிமாகின. இதைப்பற்றிப் பின்வரும் அத்தியாயங்களில் விரிவாக நோக்கலாம். 

இதேவேளை கிளிநொச்சி முல்லைத்தீவு தவிர்ந்த வவுனியா மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்ட மலையக மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளும் சவால்களும் மிக அதிகம். அதிகமென்ன, உச்சம் எனலாம். 

இவர்கள் குடியமர்த்தப்பட்டனர் என்று ஏன் இங்கே அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால், அப்பொழுது (1977 தொடக்கம்) வவுனியா மாவட்டத்தின் எல்லையோரத்தைப் பாதுகாப்பது ஒரு பெரிய நெருக்கடியாக தமிழ்ச்சமூகத்திற்கு இருந்தது. 

சிங்களக் குடியேற்றங்கள் விரைவுபடுத்தப்பட்டு நகர்த்தப்படுவதை தமிழர்கள் எதிர்கொள்ள முடியாமல் தவித்தனர். 

இதற்கு ஒரு எதிர் ஏற்பாடாக –நல்லதொரு வாய்ப்பாக வன்முறையினால் பாதிக்கப்பட்டு வடக்கு நோக்கி வந்த இந்த மலையக மக்கள் பயன்படுத்தப்பட்டனர். 

இவர்களுக்கு காணிகளை வழங்கி, எல்லைப்புறங்களில் குடியேற்றினால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என்ற அடிப்படையில் இவர்களுடைய காணிப் பிரச்சினைக்கும் தீர்வைக் காணலாம். சிங்களக் குடியேற்றத்தையும் தடுத்து விடலாம் என்று தமிழ் மூளைகள் சிந்தித்தன. 

அந்த அடிப்படையில் நெடுங்கேணிக்குத் தெற்கே தொடக்கம் வவுனியாவின் பெரும்பாலான எல்லைக்கிராமங்களை நோக்கி இந்த மக்கள் நகர்த்தப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். 

இதில் காந்தியத்தின் பங்கு அதிகமாக இருந்தது. 

ஆனால் இங்கே ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். 

இந்த மக்களைக் குடியேற்றி விட்டு காந்தியத்தினர் விலகி விட வில்லை. இவர்களுடன் கூடவே இருந்து வேண்டிய உதவிப்பணிகளைச் செய்து கொடுத்தனர். 

ஆனாலும் இது நீடிக்கவில்லை. அதற்கிடையில் அரசு இந்தப் பணிகளில் ஈடுபட்ட டேவிட் ஐயா, டொக்ரர் ராஜசுந்தரம் போன்றோரைக் கைது செய்தது. 

இந்தக் கைதுகளோடு நிலவரம் மாறியது. 

அடுத்து என்ன நடக்கும்? என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டது. 

மறுபடியும் திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக் கட்டி விடப்பட்டதைப் போன்ற நிலை இவர்களைச் சூழ்ந்தது. தெற்கில் அடிவாங்கியது போதாதென்று இங்கேயும் அடி வாங்க வேண்டியிருந்தது. 

கூடவே போர் நெருக்கடிகளும் அதிகரிக்க இவர்கள் அதற்கும் முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. 

எல்லைக் கிராமங்கள் என்பதால் முன்னரங்கில் தொடர்ந்தும் அடிவாங்க வேண்டிய நிலை உருவானது. 

1980களில் இவர்களின் கிராமங்கள் பல படுகொலைக்களங்களாகின. “ஒதியமலை” இதற்கு ஒரு சிறந்த உதாரணம். 

(தொடரும்) 

https://arangamnews.com/?p=5922

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 06

spacer.png

(இன வன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது. — ஆசிரியர்) 

 எத்தகைய அநீதியின் முன்னும் இறுக்கமான அமைதியோடு நில்லுங்கள் 

அவமானங்களைச் சகித்துக் கடவுங்கள் என்றால்நீதியின் முன்னே யார்?” 

ஒரு இடைக்குறிப்பு – 

இந்தத் தொடர், வடக்கு நோக்கி வந்த இந்திய வம்சாவழி மக்களின் சமூக பொருளாதார ஆய்வொன்றை மேற்கொள்வதற்கான முற்குறிப்புகளாகவே எழுதப்படுகிறது. இது வெளிவரத் தொடங்கியதிலிருந்து எதிரும் புதிருமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு தரப்பு ‘’இது அவசியமானது. இப்போதாவது இந்த விடயம் பேசப்படுகிறதே. கட்டாயம் இது உரையாடப்படவே வேண்டும்’’ என்கிறது. மறுதரப்போ, ‘’கடந்த காலத்தை மீளக் கிளறுவதால் பயனென்ன? நடந்தது நடந்து விட்டது. இனி நடக்கவேண்டியதைப் பார்ப்போம். இதுவரை நடந்ததையும் கடந்ததையும் விட இப்போதுள்ள துயரம் பெரிதல்ல. இன்றுள்ள நெருக்கடிகளையும் கடந்து விடுவோம்” என்கிறது. இவர்களில் அந்தச் சமூகத்திலிருந்து படித்து பெரிய ஆளுமைகளாக வந்த சிலரும் உள்ளடங்குகின்றனர். இதை நாம் புரிந்து கொள்ள முடியும். மத்தியதர வர்க்கத்தினராக இவர்கள் வளர்ச்சியடையும் போது இத்தகைய குணாம்சமும் அதற்கான மனநிலையும் உருவாகுவது இயல்பு. அதையே இவர்கள் பிரதிபலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு மற்றவர்களுக்கு நிகரான பொறுப்பொன்றுண்டு. தமது சமூகத்துக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை எதிர்ப்பதும் அந்த மக்களை மேம்படுத்துவதும் இந்தப் பொறுப்பிலுண்டு. 

இதேவேளை  இந்த மக்களுடைய காணிப் பிரச்சினை மற்றும் சமூக நிலைபற்றிய ஆய்வுகளையும் உரையாடல்களையும் வன்னி மாவட்டங்களில் மேற்கொள்வதற்கு சில அமைப்புகள் முன்வந்துள்ளன. இது வரவேற்கத்தக்கது. ஆனால், அவை சுயாதீனமாக அந்தப் பணியை மேற்கொள்வதற்கு வழமையான அதிகார சக்திகள் முட்டுக்கட்டை போட்டுள்ளன. குறிப்பாக கிளிநொச்சியில் இந்தப் பணிகளில் ஈடுபட முன்வந்தோர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் இந்தப் பணிகளில் ஈடுபட முன்வைந்த சில அமைப்புகள் பின்வாங்கியுள்ளன. இது நிலைமையில் எந்தப் பெரிய முன்னேற்றமும் எட்டப்படவில்லை. அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதையே காட்டுகிறது. 

ஆகவே இந்த மக்களுடைய பிரச்சினைகளையும் வாழ்க்கைச் சவால்களையும் நாம் உரத்த குரலில் பேசியே தீர வேண்டியுள்ளது. 

இனி பகுதி (06) 

போராட்டமும் போரும் தீவிரமடைய வவுனியா மாவட்டத்தில் குடியேற்றப்பட்டோர் அங்குமிங்குமாக அலையத் தொடங்கினர். இவர்களில் ஒரு தொகுதியினர் முல்லைத்தீவு மாவட்டத்தை நோக்கி நகர்ந்தனர். குறிப்பாக முத்தையன்கட்டுப் பக்கமாக. ஏனையோர் முல்லைத்தீவின் கிராமங்களை நோக்கிச் சென்றனர். ஒரு தொகுதியினர் வவுனியா வடக்கில் நெடுங்கேணியை அண்மித்த கிராமங்களில் தஞ்சமடைந்தனர். இன்னொரு தொகுதியினர் கிளிநொச்சிக்குச் சென்றனர். 

இப்படிச் சிதறிய மக்கள் உடனடியாக தங்களை அந்தந்த இடங்களில் நிலைப்படுத்திக் கொள்வதற்கு மிகச் சிரமப்பட்டனர். ஆனாலும் வேறு வழியின்றி அங்கே உள்ள நிலைமையையும் அந்தச் சூழலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது அவர்களுடைய வளர்ச்சிப் பாதையில் மேலுமொரு தடங்கலை உண்டாக்கியது. திரும்பத்திரும்ப இடம்பெயர்ந்து அகதியாகுதல் என்பது இலகுவானதல்லவே! 

ஆனாலும் கொஞ்சக் காலத்தில் அந்தந்த இடங்களில் ஒருவாறு தம்மை நிலைப்படுத்திக் கொண்டனர். இருந்தாலும் யுத்தம் அதற்கு முழுதாக அனுமதிக்கவில்லை. யுத்தச் சூழல் இவர்களுக்கு நிரந்தரக் காணிகள் கிடைப்பதையே தாமதப்படுத்தியது. இயக்கங்கள் முயற்சித்து சில சில குடியிருப்புகளை உருவாக்கின. 1990க்குப் பின்னர் புலிகள் இவர்களுடைய இருப்பிடம் தொடர்பாக கூடுதலான கரிசனையைக் கொண்டிருந்தனர். அதற்கு முன்பு ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் போன்றன கரிசனை காட்டின. 1990களில் வவுனியாவில் புளொட்டும் ரெலோவும் இந்த மக்களில் ஒரு தொகுதியினருக்க காணிகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன. இந்தச் சந்தர்ப்பத்தில் இவை இரண்டும் வவுனியா நகரப்பகுதியில் மட்டுமே இயங்கக் கூடியதாக இருந்ததால், நகரைச் சூழமைந்த பகுதிகளிலேயே இவர்களுக்கான காணிகள் வழங்கப்பட்டன. இதில் ஈரப்பெரிய குளம் 50 வீட்டுத்திட்டம், ஆச்சிபுரம், திருநாவற்குளம் போன்றவை முக்கியமானவை. 

ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மிதவாத சக்திகளான தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றன இந்த மக்களுடைய பிரச்சினைகளில் அக்கறை கொள்ளவேயில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 1977இல் பலமாக இருந்த காலத்தில் கூட சொல்லிக் கொள்ளும் அளவுக்கு உருப்படியான எந்தத் திட்டத்தையும் எவ்விதமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. 

ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி இந்த மக்களுடைய வாக்குகளை அறுவடை செய்வதில் இவை தந்திரமாக அக்கறை கொண்டிருக்கின்றன. இந்த அருவருப்பான உண்மையை தமிழ்ச்சமூகம் கண்டு கொண்டேயிருக்கிறது. 

ஏராளம் புறக்கணிப்புகள், நெருக்கடிகள், துயரங்களின் மத்தியிலும் 1958 க்குப் பிறகு படிப்படியாக வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மலையக அல்லது இந்திய வம்சாவழிக் கிராமங்கள் உருவாகியிருந்தன. இதில் அதிக கிராமங்கள் வவுனியாவிலும் கிளிநொச்சியிலுமே உள்ளன. இந்தக் கிராமங்களில் முன்பு 100 வீதமும் இந்திய வம்சாவழி மக்களே குடியிருந்தனர். யுத்தம், இடப்பெயர்வுகள், கால நீட்சியினால் ஏற்பட்ட ஏனைய தொடர்பாடல்கள், உறவு போன்றவற்றினால் இப்பொழுது ஒரு சிறிய விகிதத்தில் பிற இடங்கள், ஊர்களைச் சேர்ந்தவர்களும் இந்தக் கிராமங்களில் வாழ்கின்றனர். 

ஆனாலும் இந்தக் கிராமங்கள் இந்திய வம்சாவழி மக்கள் வாழும் கிராமங்களாகவே உள்ளன. இதனை இவற்றைப் பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடியும். 

ஏனைய பிரதேசங்களின் வளர்ச்சியை இங்கே காண முடியாது என்பது இதில் முக்கியமானது. இதற்கான காரணத்தையும் உளவியல் பின்னணியையும் நாம் முற்பகுதிகளில் விளக்கியிருந்தோம். மாற்றான்தாய் மனப்பாங்கின் வெளிப்பாடாக இந்த மக்களை புறத்தியில் வைத்து நோக்குவதே இதற்குக் காரணம் என. இந்த மக்களுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பொது வெளியில் பேச முற்பட்டால் அல்லது இவர்களுக்கு யாராவது குரல் கொடுக்க முன்வந்தால் அவர்கள் இனங்காணப்பட்டு ஒதுக்கப்படுகிறார்கள். அவமதிக்கப்படுகிறார்கள். நெருக்கடிக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வசைக்கப்படுகிறார்கள். 

இதற்கு அண்மையில் பகிரங்க வெளியில் நடந்த ஒரு உதாரணம், ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் வெளிப்படுத்திய ஒரு செய்தியின் விளைவை எதிர்கொள்ள முடியாத பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் வசைகூறலாகும். 

பெருமாள் கணேசன் என்ற அதிபர் தரமுடைய ஒருவருக்கு தகுதியான பாடசாலை நிர்வாகப் பொறுப்பை வழங்குவதில் காணப்பட்ட அநீதியை தமிழ்ச்செல்வன் வெளிப்படுத்தியிருந்தார். இந்த நியமனம் சமூகப் பின்னணியை மனதில் வைத்தே இழுத்தடிக்கப்படுவதாகவும் இந்த அநீதி பாரபட்சங்களின் அடிப்படையில் இழைக்கப்படுவதாகவும் தகுந்த ஆதாரங்களோடு (சான்றாதாரங்களோடு) தமிழ்ச்செல்வனால் முன்வைக்கப்பட்டது. 

இதனால் உண்டான நிர்வாக மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமற் போனபோது தமிழ்ச்செல்வனை நோக்கி அவருடைய சமூக அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வசைச் சொல்லைப் பயன்படுத்தித் தரக்குறைவான முறையில் திட்டினார் சிறிதரன். 

இது மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இதைக் கண்டித்து கிளிநொச்சி நகரில் மக்கள் போராட்டங்களை நடத்தினர். அத்துடன் இந்தப் பாரதூரமான விடயத்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று அதன் தலைவர் சம்மந்தனிடம் நேரில் கோரிக்கையும் விடப்பட்டது. 

ஆனாலும் அந்தத் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை. குறைந்த பட்சம் வருத்தம் கூடத் தெரிவிக்கப்படவில்லை. இனிமேல் இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்காது என்று உறுதி கூடக் கூறப்படவில்லை. 

இது இந்த மக்களுக்கு மிக வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளித்தது. 

(தொடரும்) 

https://arangamnews.com/?p=5990

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 07

(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது. — ஆசிரியர்) 

 “கேள்விகள் எதுவும் வேண்டாம். குற்றச்சாட்டுகளை நிறுத்துங்கள் என்றால் எங்கள் குரல் வளையில் செருகப்படுவது கத்தியன்றி வேறென்ன?” 

(07) 

வன்னியில் தங்களுடைய கிராமங்கள் தீண்டத்தகாதவை போல ஒதுக்கப்படுவதையிட்ட கவலை இருந்தாலும் அதைப் பற்றிப் பேசுவதற்கு எந்த வழியும் அவர்களுக்கு இருக்கவில்லை. ஒரு எளிய உதாரணம், முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்தையன்கட்டுக்கு வடக்கே இந்த மக்களால் உருவாக்கப்பட்ட மன்னாகண்டல் என்ற கிராமம். அங்கே தண்ணீரைக் காணவே முடியாது. நிலத்தைத் தோண்டினாலும் 100, 150 அடிக்கும் கீழேதான் நீரைக் காண முடியும். என்னுடைய வாழ்க்கையில் இப்படியான ஒரு சூழலைக் காணவே இல்லை. 1970 களின் இறுதிப் பகுதியில் – 80 களின் முற்பகுதியில் மன்னாகண்டலுக்குச் சென்றவர்கள் இந்த உண்மையை உணர்ந்திருப்பார்கள். இன்றும் அந்தக் காட்சி பெரும் வேதனை அளிப்பதாகவே மனதில் உள்ளது. குடி நீருக்காக அந்த மக்கள் அன்று பட்ட அவலம் சொல்லி மாளாது. ஒரு ஒதுக்குப் புறத்தில், காட்டோரமாக இருந்த அந்தக் கிராமத்தில் யானையும் கரடியும் நுளம்பும் அவர்களைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது.  பஞ்சத்தில் அவர்கள் மெலிந்து உருக்குலைந்து போயிருந்தனர். ஏறக்குறைய எத்தியோப்பிய மனிதர்களைப் போல. இன்றைக்கு அவர்களில் எத்தனைபேர் தப்பிப் பிழைத்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன். 

அந்த இடத்தை விட்டு வெளியேறினால் வேறு எங்கே போவதென்று தெரியாமல் இருந்ததால் அந்தக் கொடுமையான சூழலுக்குள் கிடந்து உழன்றனர். எந்த மீட்பரும் அவர்களுக்கிருக்கவில்லை. இப்போது கூட இந்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கேட்கவோ அவமானப்படுத்தப்படுவதைப் பற்றிப் பேசவோ அதைத் தடுக்கவோ யாருமில்லாத போது அன்று யார் இருந்திருக்க முடியும்? 

இப்படித்தான் ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த மக்கள் பாடுகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தனர். கிளிநொச்சி நகருக்கு தெற்கே காடாக இருந்த கிறவல் பிட்டிகளிலேயே இவர்களுடைய குடியிருப்புகள் உருவாகின. இந்தக் கிறவல் பிட்டிகளில் நீரைக் காணவே முடியாது. ஆழமாகத் தோண்டினாலும் அபூர்வமாகவே தண்ணீரைக் காண முடியும். இதனால் குடியிருக்கின்ற வீட்டுச் சூழலில் கூட ஒரு பயிர் பச்சையை உண்டாக்க முடியாது. 

மட்டுமல்ல, கோடையில் கொழுத்தும் வெயிலில் இந்தப் பிரதேசம் அனலாக எறிக்கும். இதனால் ஆட்களின் தோற்றமே காய்ந்து கருவாடாகியதைப் போலிருக்கும். இந்த நிலையில் இவர்களுடைய தோற்றத்தை வைத்தே இவர்களை அடையாளம் காணக் கூடிய நிலை இருந்தது. 

இதெல்லாம் எவ்வளவு கொடுமையான நிலை? 

ஆனால் அப்படித்தானிருந்தது. 

மனிதர்கள் வாழ்வதற்கு மிக மிக முக்கியமானது நிலமும் நீரும். இரண்டும் சரியாக இருந்தால்தான் ஒரு குடிசையையாவது போட்டுக் கொண்டு குடியிருக்க முடியும். அந்தக் குடியிருப்பில் எதையாவது செய்ய முடியும். இரண்டும் சீராக இல்லை என்றால் லேசில் உருப்படவே முடியாது. 

இப்போதும் மலையகத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு ஒரு துண்டுக் குடியிருப்பு நிலத்தைச் சொந்தமாகத் தாருங்கள் என்றே கேட்கிறார்கள். சொந்த நிலம் இல்லை என்றால் எதையும் செய்ய முடியாது. லயங்களில் வாழ வேண்டியதுதான். 200 ஆண்டுகள் வரை வாழ்ந்தாலும் தங்களுக்கென்றொரு குடிலோ, மரமோ வைக்க முடியாத நிலை. அது ஒரு அந்தர வாழ்க்கை. 

ஏறக்குறைய இதே நிலைதான் வடக்கு நோக்கி வந்த மக்களுக்கும் நடந்தது. இதில் பாதிப்பேர், கஸ்ரமான சூழலிலும் காடுகளை வெட்டி, கடினமான நிலத்தைத் தோண்டி, சின்னஞ்சிறிய குடிசைகளைப் போட்டுக் கொண்டு குடியிருந்தனர். அதிலிருந்தே படிப்படியாக தம்மைக் கட்டியெழுப்பினர். தங்களை நிலைப்படுத்திக் கொள்வதற்கு ஏறக்குறைய இரண்டு தலைமுறைக்காலம் வேண்டியிருந்தது. ஊற்றுப்புலம், தொண்டமான் நகர், ஜெயபுரம், பொன்னகர், மலையாளபுரம், பாரதிபுரம், செல்வா நகர், கிருஸ்ணபுரம், காந்தி கிராமம் போன்ற கிராமங்கள் இத்தகையன. 

ஏனையோர் வேறு ஆட்களுடைய காணிகளில் குடியிருந்தனர். குறிப்பாக வயல்களிலும் தோட்டங்களிலும் கூலிக் குடும்பங்களாகக் குடியிருந்தனர். அந்தக் காணிகளின் காவலர்களாகவும் அந்தக் காணிகளில் கூலிகளாகவும் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்ய வேண்டியவர்களாக இருந்தனர். ஆனால் ஒரே கூலிதான் கிடைத்தது. அதுவும் குறைந்த கூலி. குடும்பம் வேலை செய்தாலும் ஓரிருவருக்கே சம்பளம் கிடைத்தது. இப்படி இருந்தாலும் இவர்கள்தான் பின்னாளில் அதிகம் கஸ்ரப்பட வேண்டியிருந்தது. 

ஏனென்றால் ஏனையோர் எப்படியோ கஸ்ரப்பட்டும் நிலத்தை எடுத்துக் கொண்டனர். இவர்கள் இரவல் காணிகளில் இருந்ததால் நிலமற்றவர்களாகினர். இது உண்டாக்கிய அவலத்தை 2009 போர் முடிந்த பிறகு நடந்த மீள் குடியேற்றக் காலத்தில் தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது. மீள்குடியேற்றத்தின்போது நிலமுள்ளோருக்கே வீட்டுத்திட்டம் கிடைக்கும் என்ற விதிமுறை. அப்படியென்றால் நிலம் வேண்டுமே என்ற பிரச்சினை எழுந்தது. இது உண்டாக்கிய நெருக்கடிகள் பெரிதாகின. ஏறக்குறைய முப்பது ஆண்டுக்கு மேலாக குடியிருந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமில்லை என்றால், ஒரே நாளில் நடுத் தெருவுக்கு வந்ததாக இவர்கள் உணர்ந்தனர். ஆனாலும் வேறு வழியிருக்கவில்லை. புதிய இடத்தை நோக்கி நகரவே வேண்டியிருந்தது. அல்லது இருந்த காணியில் வீடமைப்பதற்கு ஒரு துண்டு நிலத்தையாவது பெற வேண்டும் என்று போராட வேண்டியதாயிற்று. அது லேசான காரியமல்ல. (இதைப்பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்). 

அரச காணிகளில் காடு வெட்டித் துப்புரவு செய்து குடியிருந்தவர்களுக்கு சொந்தக்காணியாக அவை மாறினாலும் அவற்றிற்குரிய உரிமப் பத்திரங்களைப் பெறுவதில் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. ஏனென்றால் இதெல்லாம் சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட குடியிருப்புகளல்ல. அதாவது அரசாங்கத்தரப்பின் அனுமதியோடோ தீர்மானத்தின் அடிப்படையிலோ உருவாக்கப்பட்ட குடியேற்றத் திட்டங்களல்ல. என்பதால் காணி உரிமப் பத்திரத்தை வழங்க முடியாது என நிர்வாக அதிகாரிகள் கையை விரித்து விட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தை பாராளுமன்றத்திற்கு எடுத்துச் சென்று அங்கே சட்டமூலத்தில் சேர்த்திருக்க வேண்டியது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடப்பாடாக இருந்தது. ஆனால் அதை அவர்கள் செய்யத் தவறினர். இதற்கு ஒரு முக்கிய காரணம், இந்த மக்களுக்கு அப்பொழுது இந்தப் பிரதேசங்களில் வாக்குரிமை இருக்கவில்லை. வாக்கில்லாத மக்களால் என்ன பயன் என்று இவர்கள் கருதினர். இன்னொரு காரணம், இவர்கள் கூலி நிலையிலிருந்து அடுத்த கட்டத்துக்கு –மத்தியதர நிலைக்கு வளர்ச்சியடையக் கூடாது என்பது. 

இதனைப் பற்றி இங்கே விபரிக்கிறார் வவுனியா மாவட்டம், கனகராயன்குளத்தைச் சேர்ந்த முத்தையா நல்லு என்பவர். “1966 ஆம் ஆண்டு அவிசாவளையிலிருந்து கனகராயன் குளத்துக்கு வந்தேன். அண்ணன்மார் கூடத்தான் வந்தேன். அப்ப நான் இளந்தாரி. இங்க வந்து காடு வெட்டி குடியேறினோம். வந்த உடன எல்லாம் காடோ காணியோ கிடைக்கவில்லை. அண்ணன்மார் ஒரு முதலாளியோட காணியில வேலை பார்த்தாங்க. அவங்களோடு நானும் ஒண்ணாக இருந்து வேலை செஞ்சன். அதுக்கப்பறமே இங்க உள்ள பெரிய குளம் பக்கமாக காட்டப் பாத்து வெட்டினோம். ஆனா ரொம்பக் காலமாக இதுக்கு பேர்மிட் கிடையாதுன்னுட்டாங்க. சரி, அது வாற நேரம் வரட்டும். அவங்க தாற நேரம் தந்துக்கட்டும் எண்டு நாம அங்கயே குடியேறினம். அப்பறமா ரொம்ப நாளைக்கு அப்பறம்தான் துண்டு (அனுமதிப்பத்திரம்) கெடச்சிச்சு. ஆனா இந்தக் காணியோட வெட்டின பல பேத்துக்கு இன்னுமே துண்டு கெடக்காம இருக்கு. இதுக்க பாருங்க, கனகராயன்குளம் மெயின் ரோட்டுப் பக்கத்தில இப்ப 2014க்குப் பிறகு காடு வெட்டிய ஆக்களுக்கெல்லாம் கையில பேர்மிட் கெடைச்சிருக்கு. இது ஆள் பாத்துச் செய்யிற காரியந்தான?” என்கிறார் நல்லு. இவருக்கு இப்பொழுது வயது 77.  

936734CC-ECAA-42D7-B2A1-27E48263F2C7.jpe

அவர் மேலும் சொல்கிறார். அப்பெல்லாம் இந்தப் பக்கமா யாரும் லேசுல வந்துக்க முடியாது. அதுவும் பொழுது இறங்கிட்டா ஊருக்கு வெளியில போகவும் ஏலாது. ஊருக்குள்ள யாரும் வரவும் ஏலாது. யானை தெருவில நிக்கும். தெரு எப்பிடியிருக்கும் தெரியுமாஅதொரு காட்டுப் பாதைதான். அந்தக் காட்டுப்பாதையில யானைதானே நிக்கும்அதின்ட பாதையில நாம எப்பிடிப் போறதுஆனா அதுக்கதான் நாம வாழக் கிடந்தோம். குழந்த பெத்துக்கிறதா இருந்தாலும் செரி,அந்தரம் அவசரத்துக்கு ஆஸ்பத்திரிக்குப் போறதா இருந்தாலும் செரி எல்லாமே இந்தக் காட்டுக்கத்தான். அப்ப நாம வாழக்கெடக்கோமா சாகக் கெடக்கோமா எண்ணே புரியாது. அப்படியெல்லாம் கெடந்துதான் இந்த மண்ணை வெளிக்க வெச்சோம். மண் வெளிச்சால் நாம வெளிச்ச மாதிரித்தான். ஆனா அதெல்லாம் லேசுப்பட்ட காரியமல்லேப்பா. அது நெனச்சால இப்பக் கூட கண்ணுல நீர் பொங்கும். மனசுக்கு கல்லு அழுத்தும். எவ்வளவு கஸ்ரம்பொம்பளங்க பாடு ரொம்பக் கொடுமை. வெறுங் காட்டுப் பிராணி போலல்லவா இதுக்க கெடந்தாங்க..” என்று கண்களைத் துடைத்தார் நல்லு. 

இந்த மாதிரி கடந்த காலத்தை நாம் அவர்களிடம் கேட்பதே பழைய காயத்தைப் புதுப்பிக்கிற ஒன்றுதான். ஆனால் வரலாற்றுக்கு ஆதாரங்கள் தேவை என்பதால் இந்த அத்து மீறலைச் செய்ய வேண்டியிருக்கிறது. இது தப்புத்தான். தெரிந்து கொண்டே மறுபடியும் அவர்கள் சிரமப்பட்டுக் கடந்த வந்த பாதையில் நினைவுகளால் தள்ளி விடுவதைப் போன்றது. இதனால் சிலர் இதைப்பற்றிப் பேச விரும்புவதில்லை. பலர் பேசித்தான் ஆக வேண்டும் என்று நிற்கிறார்கள். 

(தொடரும்) 

https://arangamnews.com/?p=6068

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.