Jump to content

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர்? – (நீதி மறுப்பும் நீதி கோரலும்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 08

spacer.png

(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது.  — ஆசிரியர்) 

“துயரத்தின் வழி என்பது அநீதியின் பாதையே. அநீதியின் முகமோ இருண்டது, முட்கள் நிறைந்தது. மேடும் பள்ளமுமானது. நீரற்றது. நீரில்லா வழியில் நடந்தோம். நீங்கள் பார்த்துக் கொண்டேயிருந்தீர்கள். ” 

(08) 

கடந்து வந்த வாழ்க்கையைப் பேசுவது வேறு, அதிலுள்ள துயரத்தைப் பேசுவது வேறு. பலருக்கும் கடந்து வந்த வாழ்க்கையை நினைவு கூர்வது என்பது ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு மகிழ்ச்சியையோ மன நிறைவையோ தரக் கூடும். இத்தனையையும் கடந்து வந்திருக்கிறோமே என்ற ஆச்சரியமான இனிமையை அது அளிக்கும். ஆனால், துயரத்தையே காவிக்கொண்டு நடந்தவர்களுக்கு இது சற்று வேறு விதமான உளநிலையை உருவாக்குவது. மறுபடியும் அந்த வேதனைப் பரப்பில் கொண்டு சென்று சேர்த்து விடக்கூடியது. காயங்களைப் புதுப்பிப்பதைப்போல. ஆனாலும் வரலாற்றுக்கு எப்போதும் உண்மைகளே தேவை. அது கண்டிப்பான கிழவியல்லவா! அந்தக் கண்டிப்பு சில வேளைகளில் இரக்கமற்ற விதமாக உண்மைகளை அடியாழத்திலிருந்து தோண்டி எடுத்து விடுகிறது. இதில் மீள்வலி நிகழ்வது என்பது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சுகப்படுத்துவதற்கான ஒரு வழியே. எப்படியென்றால், முள் தைக்கும்போது ஒரு வலி. அதை எடுக்கும்போது இன்னொரு வலி. இந்த இரண்டாவது வலியைத் தாங்கிக் கொண்டாலே முள்ளை எடுத்துக் காலைப் பாதுகாக்க முடியும். வலியைப் போக்கிக் கொள்ளவும் முடியும். அந்த மாதிரியே இதுவும். 

ஆகவே உண்மைகளைப் பேசாதவரையில், ஆழ்மனதில் புதையுண்டிருக்கும் துயரத்தை எடுத்து வெளியே போடாத வரையில் பாரச்சிலுவை நம்மை அழுத்திக் கொண்டேயிருக்கும். என்பதால்தான் இதையெல்லாம் பேச வேண்டியுள்ளது. இதில் மாற்றுப் பார்வைகள் நிறைய இருக்கலாம். அது இயல்பே. ஆனால் எல்லாவற்றுக்கும் அப்பால் இவையெல்லாம் உண்மை என்பதில் ஒரே கருத்தே இருக்க முடியும். ஏனென்றால் இது உண்மையின் ஆதாரமல்லவா. 

இந்த உண்மைக்கு மேலும் ஒரு சாட்சியாக இருக்கும் கனகராயன்குளத்தைச் சேர்ந்த முத்தையா நல்லு (77) மேலும் சொல்கிறார், நமக்கு அப்ப வாக்குரிமையெல்லாம் கெடயாது. அதனால நம்ம யாரும் கண்டுக்கல்ல. அவங்களுக்கு எதுக்குத்தான் நாங்க வேணும்வேணும்னா கூலிக்கு ஆளிருந்தாப் போதும். அதுக்கு மேல என்ன வேண்டிக் கெடக்குஅதனாலே நாங்கதான் நம்மை காவிக் கொண்டு போக வேண்டியிருந்திச்சு. எவ்வளவு பெரிய கஸ்டம் அது தெரியுமாகாட்ட வெட்டினாக் கூட அதுக்க தண்ணியக் காண்றதுக்குப் பெரியபாடப்பா. தண்ணியுள்ள பக்கமெல்லாத்தையும் மத்தவங்க எடுத்துக் கிட்டாங்க. நமக்கு தண்ணியில்லாக் காடுதான் மிச்சம். அதுக்கதான் திரவியத்தை தேடிக்கணும். ஆனால்நம்மட சில ஆட்களுக்கு தண்ணிப் பக்கமா காணி வாய்ச்சது. வவுனியாப் பக்கமா அது கெடச்சிரிச்சி. ஆனா ரொம்ப எல்லாம் இல்லை. மத்தப்படி எல்லாருக்கும் இந்த வரண்ட காடுதான். எங்கட ரத்தத்தை ஊத்தித்தான் இதையெல்லாம் இப்பிடி ஆக்கியிருக்கிறம் என்று தன்னுடைய வளவையும் தோட்டத்தையும் காண்பித்தார் அவர். 

இன்று நல்லுவின் வளவும் தோட்டமும் மிக அழகாகவும் வளமாகவும் இருக்கிறது. அக்கம் பக்கத்தில் உள்ள காணிகளும் செழித்துக் கிடக்கின்றன. ஆனால் இடையிடையே சில காணிகள் தரிசு பத்திப்போயுள்ளன. விசாரித்தால், அவற்றில் உள்ளவர்கள் வேறு இடங்களை நோக்கிப் போய் விட்டனர் என்று சொல்கின்றனர், அயலவர்கள். இதற்கு முக்கிய காரணம், நடந்த போராகும். போரிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இவர்கள் வெளியேறிப்போய் வவுனியா நகர்ப்பகுதியில் வாழ்கின்றனர். 

மிகக் கஸ்டப்பட்டு வெட்டித் துப்புரவாக்கி, யானைக் காவல், பாம்புக்கடி போன்ற நெருக்கடிகளுக்குள்ளால் எல்லாம் தாக்குப் பிடித்திருந்தவர்களைப் போர் விரட்டிக் கலைத்தது. இந்த மக்களின் வாழ்க்கை இப்படித்தான் தொடர்ந்தும் இருந்திருக்கிறது. வேர்கொள்ள முடியாத தொடர் நெருக்கடிகளாக. 

ஒரு நெருக்கடியிலிருந்து மீள இன்னொரு நெருக்கடி என. பாருங்கள். முதலில் வன்முறையினால் தென்பகுதியிலிருந்து வெளியேற்றம். பிறகு இங்கே (வடக்கே) வந்தும் நிலையாக, நிம்மதியாக ஒரு இடத்தில் இருக்க முடியாது என்ற நிலை. இப்படி பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்குமிங்குமாக அலைய வேண்டியிருந்தது. இதனால் இவர்களுடைய பிள்ளைகளின் கல்வியில் பெரும் பாதிப்பேற்பட்டது. தொழில்களை நிரந்தரமாகத் தக்க வைப்பதற்கும் சிரமமாக இருந்தது. இருக்குமிடத்தை –நிலத்தைப் பெற்றுக் கொள்வதிலும் இந்த நிலைமை பிரச்சினைகளைக் கொடுத்தது. மிகக் கஸ்ரப்பட்டு வெட்டித் துப்புரவு செய்த காணிகளை விட்டுப்போவதென்பது, அதுவரையான உழைப்பை எந்தப் பெறுமதியுமில்லாமல் இழந்து போவதாகும். ஆனால் வேறு வழியிருக்கவில்லை. 

இந்தச் சிரமத்தையும் இழப்பையும் அதிகமாகச் சந்தித்தவர்கள் வவுனியா மாவட்டத்தில் குடியேறியோரே. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் குடியேறியோர் அநேகமாக உள்ளுருக்குள்ளேயே இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். அது ஏனையோரைப்போல எல்லோருக்கும் பொதுவானதாக இருந்ததால் இழப்புகளும் பொதுநிலைப்பட்டனவாகவே இருந்தன. ஆனால், இங்கிருந்தெல்லாம் வெளியேறி இன்னொரு தொகுதியினர் இந்தியாவுக்குப் படகுகளின் மூலம் சென்றனர். அப்படிச் சென்றவர்கள் அங்கே அகதிகள் முகாம்களில் அடைபட்டனர். இது இன்னொரு பெரிய துயரக் கதை. 

எப்படியோ இவர்களெல்லாம் ஊரை விட்டுப் போனோராகவே கருதப்பட்டனர். இதனால் இவர்களுடைய காணிகளை அக்கம் பக்கத்திலிருந்தவர்களும் வேறு இடங்களில் இருந்தவர்களும் குறைந்த விலையில் எடுத்துக் கொண்டனர். சில காணிகள் மட்டுமே உறவுகளாலும் ஊரவர்களாலும் காப்பாற்றப்பட்டன. ஆகவே இழப்புகளின் மத்தியிலேயே ஒரு சாராரின் வாழ்க்கை நீண்டது. 

இழப்புகளைச் சந்தித்து அதிலிருந்து மீண்டு வாழ்வது வேறு. அதையே வாழ்க்கை முழுவதும் கண்டு கொண்டு வாழ்வது வேறு. வாழ்க்கை முழுவதும் இழப்புகளோடு வாழ்ந்த வாழ்க்கையைச் சொல்லுகின்றார் இராஜரத்தினம் (87). 

நா திகணவுக்கும் பல்லேகலவுக்கும் இடையில இருக்கிற கெந்தெல்லல இருந்து வந்தன். நா மட்டும் தனியாவ வந்துக்கல்ல. இருவத்தஞ்சு குடும்பமா சேர்ந்து வந்தம். அங்கன இருந்து வரும்போது ஏகப்பட்ட பிரச்சினைகள். வெளிக்கிடும்போதே பல பிரச்சினைகள். அங்க கண்டில இருந்த அகதி முகாமில இருந்து ஆட்களை தனித்தனியாப் பேசித்தான் எல்லோருமே கௌம்பினோம். அதுக்கே ஏகப்பட்ட தொல்லைகள். பயம் வேற. அந்த நேரத்தில யார் கிட்டயும் எதையும் நம்பிப் பேசிட முடியாது. எவன் காதில எந்தப் பேய் குடியிருக்குமோயாரு கண்டா. அப்பிடி அங்க இருந்து தப்பி இங்க வந்தாஇது என்னடா சட்டீல இருந்து நெருப்புக்குள்ள விழுந்திட்டமா அப்பிடீங்கிற மாதிரி ஒண்ணுமே தெரியாத இடத்தில கொண்டாந்து எறக்கிட்டாங்க. கண்ணைக் கட்டி விட்ட மாதிரி ஒரே இருட்டு. ஒரே கொழப்பம். என்ன பண்றது எண்ணு ஒண்ணுமே புரியேல்ல. எதுக்கு இப்படி அவசப்பட்டுக் கிட்டோம்அப்படீங்கிற மாதிரித் தோணிச்சு. பேசாம வாரது வரட்டுமுன்னு அங்கனயே கெடந்திருக்கலாம். இதுக்குள்ள அவனவன் நம்ம தலையெப் பிச்சுக்கிற அளவுக்கு திட்டிறான். எதுக்கப்பா எல்லாத்தையும் இங்க இழுத்துக் கிட்டு வந்தஇங்க என்ன மசிரு கெடக் கெண்டு வந்தபேசாம அங்கனயே கெடந்திருக்கலாம் எண்ணு பொம்பளங்களே திட்டத் தொடங்கீட்டாங்க. அவங்களக் கோவிச்சுக்க முடியுமாஅவங்க நெலமையில அவங்க அப்பிடித்தான் இருப்பாய்ங்க. வயித்துப் பிள்ளையோட நிக்கிறவங்ககையில ஏந்திக் கிட்டு நிக்கிறவங்க.. இப்பிடி எத்தனை கோலம். 

எல்லாத்துக்கயும் சமாளித்துச்சுக்கறதுக்கு ரொம்பத்தான் ஆயிட்டுது. வேற வழியென்ன? இனி அங்க திரும்பிப் போயிட முடியுமா என்ன? அது தாயோட வயித்துக்க மறுபடி போற மாதிரில்லா. நம்மளப்போல வந்தவங்க ஆயிரமாயிரம்பேர். அவங்கள எல்லாம் அங்கங்க எண்டு ஒவ்வொரு மாவட்டங்களாகப் பிரிச்சு வெச்சு அனுப்பினாங்க. நமக்கு இங்க (கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயபுரம் என்ற இடத்துக்கு) வரக் கெடச்சிச்சி. இந்தப் பக்கம் அப்ப பெரிய யானைக்காடு. இந்தக் காட்டுக்கு வரவே முடியாது. வழியில அக்கராயன், வன்னேரி அந்தப்பக்கத்திலேயே யானை நிக்கும். மாலையாகீட்டா ஒரு ஆள் தலை காட்ட முடியாது. கொம்பன்தான் றோட்ல ஏறி நிக்கும். கொம்பன் நிண்டா நாம ஊருக்க படுத்துக்க வேண்டியதுதான்….” 

(வலிகள் தொடரும்) 

https://arangamnews.com/?p=6108

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 09

spacer.png

(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது.  — ஆசிரியர்) 

“எதற்காக இந்தப் பாதகம்? ஏனிந்தப் பாரபட்சங்கள், வேற்றுமைகள்? நாம் யார்? நீங்கள் யார்? திரைமறைவில் எதற்காக ஆயிரம் நாடகங்கள்? 

(09) 

மேலும் ஒரு இடைக்குறிப்பு – 

வடக்கு நோக்கி வந்த மலையக மற்றும் இந்திய வம்சாவழி மக்களின் பாடுகளையும் அவர்களுக்கு இழைப்படும் தொடர்ச்சியான நீதி மறுப்பையும் அவர்களுடைய இன்றைய நிலையைப் பற்றியும் எழுதப்படும் “இந்தத் தொடர் இப்பொழுது தேவைதானா? இது சமூகப் பிளவுகளை ஏற்படுத்தாதா? ஏன் பழைய –கடந்த காலத்துச் சங்கதிகளை இப்பொழுது கிண்டிப் பேச வேண்டும்?”என்று சிலர் கேட்கிறார்கள். 

இந்தக் கேள்வியின் உள்ளே மிகப் பயங்கரமான சூதான நோக்கம் மறைந்துள்ளன. 

நாங்கள் எப்படியும் நடந்து கொள்வோம். யாரையும் எப்படியும் நடத்துவோம். அதைப்பற்றி நீங்கள் எதுவும் பேசக் கூடாது என்பதே இதன் பின்னால் உள்ள தந்திரமாகும். 

மேலும் இவர்கள் சொல்கிறார்கள், “இந்த மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் இப்பொழுது பேசுவதால் தமிழ்ச்சமூகத்தின் ஒற்றுமையைச் சிதைப்பதாகி விடும். அது எதிரிகளுக்குச் சாதகத்தைக் கொடுக்கும். அது தமிழர் தரப்பின் அரசியலைப் பலவீனப்படுத்தும். அத்துடன் தேவையில்லாத வகையிலான சமூக முரண்பாடுகளை உருவாக்கும்” என. 

இதைக் கேட்கும்போது சிரிப்பே வருகிறது. ஆழமாக யோசித்தால் மன்னிக்கவே முடியாத கோபம் ஏற்படும். 

சாத்தான் வேதம் ஓதுகிறது என்பார்களே அது வேறொன்றுமில்லை, இதுதான். 

இப்பொழுது கூட இதையெல்லாம் பேசவேண்டியிருக்கிறது என்பதே மிகப் பெரிய துயரமும் வெட்கக் கேடுமாகும். ஏனென்றால் இப்போதும் இந்த மக்களுக்கு எதிராகத் தொடரப்படுகிறது நீதி மறுப்பு. பாரபட்சப்படுத்தல்கள். தம்மிலிருந்து வேறாக்கும் நடவடிக்கைகள். அதாவது சமகாலத்திலும் சமத்துவமாக இந்த மக்களை நோக்குவதற்கும் நேசிப்பதற்கும் நடந்து கொள்வதற்கும் நீங்கள் தயாரில்லை. என்பதால்தானே இதையெல்லாம் பேச வேண்டியுள்ளது. 

ஆகவே முதலில் இதைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள். 

நீங்கள் கூறுவதைப்போல கடந்த காலத்தை விட்டு விடலாம். ஆனால், சமகாலம் உங்களுக்குரியது. அந்தச் சமகாலத்தைப் பொறுப்பேற்று அதில் சரிகளை – நீதியை – சமத்துவத் தன்மையை, ஜனநாயகத்தை நிலைநாட்டுங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். பாரபட்சங்களை நீக்குங்கள். சமூக நீதியை நிலை நிறுத்துங்கள். தயவு செய்து நீதிமான்களாகவும் நியாயவாதிகளாகவும் நடக்க முற்படுங்கள். 

அப்படிச் செய்யும்போது இவற்றையெல்லாம் எழுதத்தான் வேண்டுமா என்று நாம் மீளாய்வு செய்யலாம். 

இரண்டாவது, இவை ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெருந்திரள் மக்கள் நேரில் சந்தித்த வாழ்க்கையின் வரலாறு. ஆகவே இந்த வரலாற்றுப் பதிவைச் செய்வது எந்த வகையில் தவறாகும்? 

மூன்றாவது, இந்தத் தொடரில் கூறப்படும் விடயங்கள் எதுவும் நடக்கவில்லை. பொய்யானவை என்றால் அதை உரிய ஆதாரங்களோடு யாரும் மறுக்கலாம். அல்லது இதற்கு மறுப்பான வகையில் தமது தரப்பு நியாயங்களை யாரும் முன்வைத்து விவாதிக்கலாம். 

இவையே இவர்கள் செய்ய வேண்டியது. பதிலாக எதையும் பேசவேண்டாம் என்று தந்திரமாக உண்மைகளை மறைக்க முற்படுவதல்ல. அது மேலும் அநீதியானதாகும். மேலும் அதிகாரத்தைத் தந்திரமாகப் பிரயோகிப்பதாகும். மேலும் குரல்வளையை நெரிப்பதாகும். மேலும் தவறுகளுக்கு இடமளிப்பதாகும். மேலும் துயரங்களை வளர்ப்பதாகும். மேலும் ஒடுக்குமுறைக்குப் பலியாவதாகும். மேலும் உண்மையைப் பலியிடுவதாகும். 

எனவே தவிர்க்க முடியாமல் இந்த வார்த்தைகளைப் பேசியே தீர வேண்டியுள்ளது. 

இராசரத்தினம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். 

4A0D2F25-C5B9-4B39-975E-D0E1B6064BA9.jpe

“ஜெயபுரத்துக்கு வர மொதல்ல நாங்க மூணு முகாம்களா மாறிக்கிட்டிருந்தம். வன்முறையால பாதிக்கப்பட்ட மாகாணங்கள்ல இருந்து வந்தவங்கள அங்கங்க முகாம்கள அமெச்சு வெச்சிருந்தாங்க. யாழ்ப்பாணத்தில புங்குடுதீவில ஒரு முகாம். அப்புறம் வன்னியில மல்லாவில, அக்கராயன்ல, மடு, வட்டக்கண்டல், நானாட்டன், கிளிநொச்சில குருகுலத்தில…. 

இப்பிடி ஒவ்வொரு இடத்திலயும் ஒரு அம்பது நூறு குடும்பங்கள்ணு வெச்சிருந்தாங்க. பிறவு கொஞ்ச ஆட்கள் அவங்கவங்களுக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு இடமாப் பாத்துப் போனாங்க. இதுக்கு முன்னாடி இங்க வந்திருந்த அவங்க உறவுக்காரங்க மூலமா இது அவங்களுக்கு சரியாச்சு. மத்தவங்கள்லாம் முகாம்லதான் இருந்தாங்க. 

அப்பிடியிருந்தவங்கள சேர்த்து ஒவ்வொரு இடமாப் பார்த்துக் குடியேத்தினாங்க. அப்பிடித்தான்  நாங்க இரண்டு பகுதியா ஆனைவிழுந்தானுக்கும் ஜெயபுரத்துக்கும் வந்தோம். 

ஆனைவிழுந்தானுக்கு 250 குடும்பங்கள். ஜெயபுரத்துக்கு குழந்த குட்டி அவங்களோடு பிள்ளைங்க எண்ணு மொத்தமா 538 குடும்பங்கள் வந்தன. 

ஜெயபுரத்தில் அப்பெல்லாம் பெரிய காடு. வனம். இது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எம்பத்து அஞ்சு, எம்பத்து ஆறுல. ஆளாளுக்குப் பிரிச்சு அந்தக் காட்டத்தான் காமிச்சாங்க. அதோட சரி. பிறகு அத வெட்டி, தீ வெச்சுக் கொளுத்தித்தான் குடிசையைப் போட்டம். அப்ப கிளிநொச்சி மாவட்டத்துக்கு அரசாங்க அதிபரா ஜெயநாதன் அப்பிடீன்னு ஒருத்தர் இருந்தாரு. ரொம்ப நல்லவரு. அவராப் பாத்து இந்தப் பக்கத்தில எல்லாருக்கும் காணியைக் குடுத்தாரு. அதனால அவரோட பேர்ல இந்த இடத்துக்கு ஜெயபுரம் அப்பிடீன்னு பேர வெச்சொம். அதோட அப்ப எழுத்தாளர் செங்கை ஆழியான் (க.குணராசா) ஏஜீஏ இருந்தாரு. அவரும் நம்மள கொஞ்சம் கவனமாப் பார்த்தாரு. அதால அவரோட பேர்ல ஆழிநகர் அப்பிடீன்னு இந்தப் பக்கமாக (ஜெயபுரத்தின் இன்னொரு பகுதி) ஒரு பகுதிக்கு பேர வெச்சாங்க. அப்படியே ஜெயபுரம் உருவாகிடிச்சி. 

ஆனா தண்ணி கெடயாது. தண்ணியில்லேண்ணா என்னதான் பண்ண முடியும்? இது எல்லாருக்குமே பெரிய பிரச்சினையா இருந்திச்சி. கொஞ்சத் தூரத்தில இருந்த தும்புருவில் கொளத்திலதான் குடிக்கிறதுக்கும் தண்ணி. குளிக்கிறதுக்கும் அங்கதான் போவாங்க. எல்லாச் சனங்களும் அதுதான் ஒரே தெய்வம். 

பிறகு கெணறு வெட்டிக்கிறதுக்கு எண்ணு ரெண்டாயிரம் ரூபா கொடுத்தாங்க. அந்தக் காச, சாப்பாடு, வெத்தல பாக்கு தேத்தண்ணி எண்ணு எடுத்துக்கிட்டு நாலஞ்சு குடும்பத்து ஆக்களாச் சேர்ந்து நாமளே கெணத்தை வெட்டினோம். ரொம்ப ஆழம். முப்பத்தெட்டு நாப்பது அடி ஆழம். 

ஆனா கெணத்தெக் கட்டுறதுக்கு தனியா சீமெந்த குடுத்தாங்க. அதுக்கு கூலிக்காரங்க நாங்கதான். அப்பிடியே  எல்லாத்துக்கும் கெணறு ஓரளவுக்குக் கெடச்சிச்சி. 

சாப்பாட்டுக்கு கொஞ்சப் பொருள் கொடுப்பாங்க. வாராவாரம் றேஷன் மாதிரி. அதை வெச்சு வாழ்க்கையை ஓட்டிக் கிட்டிருந்தொம். எங்களுக்கு உதவியா கியூடெக், உலக இந்து மகாசபை, கிளிநொச்சியில இருந்த குருகுலம் அப்டீன்ற மூணு அமைப்பு ஆக்கள் இருந்தாங்க. இவங்கதான் இந்தக் கிணறு வெட்டிக்கிறதுக்கும் அப்பறமா ஏதாவது வீட்டுப் பக்கத்தில சின்னதா தோட்டம் போட்டுப் பயிர் கொடி வெக்கிறதுக்கும் உதவினாக.  

ஆனா அதில ஒரு விசயம் நடந்திச்சி பாருங்க, அப்படியே ஒரு கொஞ்சப் பேரு மதம் மாறீட்டாங்க. பஞ்சம் வந்திச்சின்ன எல்லாமே போயிடும். பசி மனிசன மாத்திடும். களவு, விபச்சாரம் எல்லாம் பஞ்சத்திலதாங்க அதிகப் பொறக்கும்கிறது பார்த்திருப்பீங்க. அப்படியொரு பசிக் கொடுமை நமக்கு. வேலை கெடக்கலைன்னா வழியென்ன?ஆனா ஜனங்க அப்படிக் கெட்ட பழக்கத்துக்கெல்லாம் போகல்ல. நம்ம ஊரு கொஞ்சம் தனியா ஒதுக்கில கெடந்தது நல்லதாப் போயிடிச்சி. 

அப்ப ஜெயபுரத்தில யாரைப் பாத்தாலும் காட்டுவாசிங்க போலத்தான் இருப்பாங்க. அந்தளவுக்கு இது ரொம்பக் காய்ஞ்ச பூமி. வெயில் வாட்டிப் போட்டிடும். ஆனா ஒண்ணு பாருங்க. மனுஷங்க காலடி பட்டா அந்த எடம் எப்பிடியும் மாறீடும். மலைக்காடெல்லாம் கூட முன்னாடி எப்படி இருந்திச்சி? காடுதான? அந்தக் காட்ட நம்ம ஆட்கள்தானே தோட்டங்களாக்கினாங்க. அதுக்குப் போற வழியெல்லாத்துக்கும் பாதை எப்ப வந்திச்சி? தோட்டுத்துக்கு வந்த ஆட்கள்தானே பாதைகளயும் பாலத்தையும் போட்டாங்க. இதெல்லாத்தையும் யாருதான் இப்ப நினைச்சுப் பாக்கிறாங்க. 

அதவுடுங்க, 

இந்தக் காட்ட வெட்டித் துப்புரவாக்கி வீடெல்லாம் போட்டாலும் உழைப்புக்குப்  பிரச்சினை. தோட்டம் வெச்சுக்கலாம் என்றால் அதுக்கு தண்ணி இல்ல. கெணறு இருந்தாலும் அதின்ர ஆழத்தில இருந்து எடுத்து பயிர வளக்கிற அளவுக்கு ஜனங்கள் கிட்ட சக்தி கெடயாது. 

இதுக்க என்ன பண்ண முடியும்? ஆளையாள் மூக்கைப் பார்த்துச் சொறிஞ்சுக்க வேண்டியதுதான். அப்பிடியொரு நெலமை. அக்கம் பக்கத்தில வேலைக்குப் போறதுக்கு ஊர்கள் கெடயாது. கொஞ்சத் தூரத்தில இருந்த பல்லவராயன்கட்டு, கரியாலை எல்லாம் ரொம்பச் சின்ன ஊருக. அங்கனயே ஒரு பத்து இருவது குடும்பங்கள்தான். அவங்க வேலைய அவங்களே பாத்துக்குவாங்க. இதுக்கு நமக்கெங்க வேலை கெடக்கப்போவுது? 

வேலை இல்லைன்னாக்க வயித்துக்கு ஏது ஆகும்? பசிதான். பசி வந்திச்சின்னா எதுதான் மிஞ்சிக் கெடக்கும்? 

இதுக்குள்ள கஸ்ரம் தாங்க முடியாம கொஞ்ச ஆட்கள் அப்படியே மன்னார் பக்கமாவும் கிராஞ்சிப்பக்கமாவும் போய் இந்தியாவுக்கு போயிட்டாங்க. 

இதுக்குள்ள இந்திய ராணுவம் வந்திடிச்சு. அதோட எல்லாமே பிரச்சினையாகிடிச்சி. ஆனா அப்பத்தான் பூநகரிப் பக்கத்து ஆட்கள் ஜெயபுரத்துக்கு வந்தாங்க. பிறகு 1990ல இலங்கை ராணுவத்தோட புலிகளுக்கு சண்டை தொடங்கிச்சில்ல, அதோட பூனகரி ஆட்கள்ல பாதி ஜெயபுரத்துக்கு வந்திட்டாங்க. மிச்சப்பேர் யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் போயிட்டாங்க. 

பூனகரி ஆட்களும் வந்ததுக்கு அப்புறம்தான் ஜெயபுரம் கொஞ்சம் ஜனங்கள் நடமாடிற ஊர் மாதிரி தெரிஞ்சுது. அதுக்கு முன்னாடி ஏதோ ஒரு ஆதிவாசிகள் குடியிருப்பு மாதிரியில்லா இருந்திச்சு. இயக்கங்கள் போறப்பகூட நம்மளப் பாத்திட்டுப் போவாங்களே தவிர, வந்து பேசிறதெல்லாம் கெடயாது. ஏதோ பாதிக்கப்பட்டு வந்திருக்கிறாங்க. இந்தக் காட்டுக்க கெடக்கிறாங்க எண்ணு அவங்க நெனச்சிருக்கலாம். 

நாங்க வந்த காலத்தில இருந்தே ஒரு கோரிக்கையை வெச்சிட்டு வர்ரோம். ஜெயபுரத்துக்குப் பக்கத்தில இருக்கிற பண்டிவெட்டிக் கொளத்தை புனரமைச்சுத் தாங்க. அதைவெச்சு விவசாயம் செஞ்சுக்கலாம்ணு. அந்தக் கொளத்தைக் கட்டித் தந்தாங்கன்னா நம்மட ஜனங்கள்ட வாழ்க்கைல பெரிய மாற்றம் வந்திடுங்க. தண்ணி வேணுங்க எல்லாத்துக்கும். தண்ணி இல்லேன்னா இந்தப் பூமியே இல்லை. அப்டியே காஞ்சிடும்லா. 

ஆனா கொளத்தக் கட்டிறதைப் பற்றி ஆரும் கவலைப்படுறதா தெரியேல்ல. சந்திரகுமார் அப்டீன்னு ஒரு எம்பி இருந்தார்லா. அவர்தான் ஜனங்கள்ட கதையக் கேட்டிட்டு, அவங்கட நெலமையைப் பாத்திட்டு அந்தக் கொளத்தைக் கட்டலாம்னு சொன்னாரு. ஆனால் அவருக்கு தொடர்ந்து அதுக்கான சான்ஸ் கெடக்கல்ல. கொளத்து திட்டமும் படுத்திடிச்சி…. 

(தொடரும்) 

https://arangamnews.com/?p=6274

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 10

spacer.png

 

(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ, ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது. — ஆசிரியர்) 

எதற்காக இந்தப் பாதகம்ஏனிந்தப் பாரபட்சங்கள்வேற்றுமைகள்நாம் யார்நீங்கள் யார்திரைமறைவில் எதற்காக ஆயிரம் நாடகங்கள்?” 

(10) 

ஜெயபுரத்திலிருக்கும் மக்களுக்கு எப்போதும் உள்ள சவால் தொழில் பிரச்சினையே. அவர்கள் ஒரு ஒதுக்குப் புறமாக – காட்டின் நடுவே குடியேற்றப்பட்டதால் வந்தது இந்தப் பிரச்சினை. கிளிநொச்சியில் குடியேறியோருக்கு தொழில் பிரச்சினை குறைவு. கூலித்தொழிலாக இருந்தாலும் எதையோ செய்யக் கூடியதாக இருந்தது. அது ஒரு நகரமல்லவா. சம்பளம் குறைவாக இருந்தாலும் எதையாவது செய்து கொள்வதற்கு நகரத்தில் ஏகப்பட்ட வாய்ப்புகள் உண்டு. அதனால் எப்படியோ பிழைத்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. தவிர அங்கே இரணைமடுக் குளத்தின் நீர் மூலம் விரிந்து பரந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் செய்கை பண்ணப்படும் நெல் விவசாயம். இவை இரண்டும் அங்கே குடியேறியோருக்குப் பல விதமான தொழில்களைக் கொடுத்தன. குறைந்தது விறகு வெட்டி விற்றாவது சீவித்துக் கொள்ளலாம். பாதிக்கும் மேற்பட்டோர் அப்படித்தான் விறகு வெட்டியும் கிணறு தோண்டியுமே வாழ்க்கையை நடத்தினர். 

ஆனால் ஜெயபுரத்தில் இதற்கு வாய்ப்பே இல்லை. அங்கேயிருந்து அடுத்த கிராமத்துக்குச் செல்வதாக இருந்தாலும் காட்டு வழியேதான் போக வேண்டும். அப்படிப் போனாலும் அந்தக் கிராமங்களில் பெரிய தொழில்வாய்ப்பெல்லாம் கிடையாது. அங்கே இருப்பவர்கள் தங்களுடைய தொழில்களை தாங்களே பார்த்துக் கொண்டார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு எங்கே வேலையைக் கொடுக்கப்போகிறார்கள்? 

ஆகவேதான் இவர்களுக்கு வேலையில்லாப் பிரச்சினை பெரிதாக இருந்தது. இதனால் வெளியிடங்களை நோக்கி வேலை தேடி ஆண்கள் செல்லவேண்டிய நிலை. சில குடும்பங்கள் இதைத் தாக்குப் பிடிக்கவே முடியாது என்று தவித்துக் கொண்டிருந்தன. அப்போது இருந்த அரசியல் நெருக்கடிகளைக் காரணமாக எடுத்துக் கொண்டு படகேறி இந்தியாவுக்குப் போய்விட்டார்கள். 

இப்படிப் பாதிக்கு கிட்டவான குடும்பங்கள் ஜெயபுரத்தை விட்டு வெளியேறின. பாதிக்கு மேற்பட்டோர் வெளியேறிப் போனால் அந்த ஊர் எப்படியிருக்கும்? 

ஹம்சத்வனியின் ஒரு கவிதையில் வருவதைப்போல “ 

சிலுவை யேசுவைச் சிலந்தி மூடிற்று 

பிள்ளையார் பலிபீடத்தில் களிம்பு படிந்தது 

சருகடர்ந்த முற்றங்களில் பாம்புகள் ஊர்ந்தன 

மாமர ஊஞ்சல்கள் இற்று வீழ்ந்தன” என்று பாழடையத் தொடங்கியது ஜெயபுரம். 

ஆனால் இதற்குள் ஒரு அதிசயம் நடந்தது, பூனகரி இராணுவமுகாம் உண்டாக்கிய நெருக்கடியினால் அதைச் சுற்றியிருந்த பூனகரியின் பூர்வீக மக்களில் ஒரு தொகுதியினர் ஜெயபுரத்துக்கு வந்தனர். ஏனையோர் யாழ்ப்பாணத்துக்கும் சாவகச்சேரிக்கும் சென்று விட்டனர். இன்னொரு தொகுதியினர் முட்கொம்பன் என்ற இடத்தைத் தெரிவு செய்து அங்கிருந்த காட்டை வெட்டித் துப்புரவு செய்து அங்கே குடியேறினர். 

ஜெயபுரத்துக்கு வந்த பூனகரி வாசிகளால் ஜெயபுரம் உயிர்ப்படைந்தது. முக்கியமாக பூனகரியின் நிர்வாக மையமாக அது மாறியது. இதனால் ஜெயபுரம் சட்டென ஒரு மெல்லிய வளர்ச்சியை எட்டியது. 

இதைப்பற்றி மேலும் விவரிக்கிறார் இராசரத்தினம் – “ஜெயபுரத்தில இருந்தவங்க அதுக்குப் பிறகு (1990க்குப் பிறகு) கொஞ்சம் பிழைச்சுக் கிட்டாங்க. நாங்கூட ஒரு சலூனை வைச்சுக் கிட்டேன். எனக்கு இந்தத் தொழிலைப் பத்தி முன்னப் பின்ன எதுவுமே தெரியாது. எங்க குடும்பத்தில யாருமே இந்தத் தொழிலைச் செய்தவங்க கிடையாது. எல்லாரும் தோட்ட வேலை பாத்துக் கிட்டவங்க. வந்த இடத்தில நமக்குப் பொருத்தமான வேலை எதுவும் சரியாக் கிடைக்கல. அதனால கிடைக்கிற வேலையைச் செஞ்சிக்கிட்டு வந்தன். அத வெச்சு குடும்பத்தை, புள்ள குட்டிகளைச் சரியாப் பாத்துக்க முடியல்ல.  இதுக்கு என்ன பண்ணலாம்ணு யோசிச்சுக் கிட்டு இருக்கும்போதுதான் நமக்குப் பக்கத்தில இருந்த பையன், தான் வெச்சிருந்த சலூன விட்டுட்டு இந்தியாவுக்குக் கௌம்பினான். அப்ப அதை நாம எடுத்துக் கொள்ளலாம் எண்ணு எடுத்துக்கிட்டேன். 

இதப் பாத்தவங்க, “இது எப்புடிங்க? நீங்க சாமியாராட்டம் இருக்கிற ஆளு. வேட்டி சட்டை போட்டுக்கிட்டு ஊருல நாலு பேருக்கு வௌக்கம் சொல்கிற ஆளு. இப்பிடிப் போயி சலூன் கடை நடத்தலாமா?” அப்டீன்னு கேட்டாங்க. 

புள்ளங்க பசியில கெடந்து தவிக்கிறப்ப, பொண்டாட்டிக்கு கையில நாலு பணம் கொடுக்க வக்கில்லாம இருந்துக் கிட்டு ஊரு சுத்த முடியுமா? அவங்கள சரியா வெச்சுக்க வேணும்ணா உருப்படியா ஒரு தொழிலைப் பாக்கணும். தொழில்ணா அது தெய்வம் அப்டீண்ணு பேசாம சலூன் கடைய வெச்சுக் கிட்டேன். கண் பாத்தத கை செய்யும்லா. அது ஒரு ரெண்டு வாரத்தில சரியாயிடிச்சி. இதுக்குப் பிறகு ஒவ்வொருத்தனும் ஏதோ ஒரு தொழிலைப் புடிச்சிக்கிடணும்ணு ஓடிக்கிட்டிருந்தான். இது மத்தவங்களுக்கும் ஒரு முன்மாதிரியா இருந்திச்சில்ல. 

அத விடுங்க. இப்பிடி இருந்த ஜெயபுரத்தில நம்மள விட நமக்குப் பின்னாடி வந்த வெளியிடத்து ஆட்கள்கிட்டதான் நாங்க எதுக்கும் போறதுக்கு இருந்திச்சி. ஏன்னா, நிர்வாகத்தை அவுங்கதானே பாத்துக்கிட்டிருந்தாங்க. அப்ப நாங்க அவுங்க கிட்டத்தானே போகணும். கோப்றெட்யடி (கூட்டுறவுக்கடை) ஏஜீஏ கந்தோர், விவசாயக் கந்தோர், தபால் நிலையம், ஜீ.எஸ் எல்லாமே வேற இடத்துக்காரங்க. ஆனா நாம ஓரளவுக்கு சமாளிச்சுக் கிட்டம். அதோட தொண்ணூறுக்குப் பிறவு புலிகள் இங்க பலமா வந்திட்டாங்கல்ல. அவுங்க வந்தப் பிறகு வேற வேலைகள் எல்லாம் கெடைக்கத் தொடங்கிச்சி. …. 

இப்ப யுத்தம் முடிஞ்சுக் கிட்டதுக்குப் பிறகு ஜெயபுரத்துக்கு வந்தவங்கள்ள நெறயப் பேர் கௌம்பிப் போயிட்டாங்க. மீள் குடியேற்றத்தில திரும்ப வந்து ஊர்ல இருக்கிறோம். இப்ப கொஞ்சம் பரவாயில்ல. இந்தியாவுக்குக் கௌம்பிப் போனவங்கள்ள கொஞ்ச ஆக்கள் திரும்பி வந்திருக்கிறாங்க. அவுங்க பாடு சீரில்ல. சரியான தொழில் இன்னும் கஸ்டமாத்தானிருக்கு. 

முன்னாடி நா சொன்ன மாதிரி பண்டிவெட்டிக் கொளத்தக் கட்டினாக்க விவசாயம் செஞ்சுக்கலாம். பாதிப்பேருக்கு அது கஞ்சி ஊத்தும். ஆனா இதைப் பத்திப் பேசுறதுக்கு ஆள் கெடயாது. யாருதான் நம்மட வயித்தப் பாக்கப்போறாங்க?….” என்று கவலைப்படுகிறார் அவர். 

இதைப்போலத்தான் இந்த மக்கள் வாழ்கின்ற – வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்தின் நிலையும். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இன்னொரு கிராமம் ஊற்றுப்புலம். அங்கே உள்ளவர்களில் அநேகர் விவசாயக் கூலிகளாகவே இருந்தனர். முறிப்பு, உருத்திரபுரம், அக்கராயன் போன்ற இடங்களில் உள்ள நெல் வயல்களில் வேலை செய்கின்றவர்களாக இருந்தனர். நெற் செய்கைக் காலம் தவிர்ந்த ஏனைய காலங்களில் இவர்கள் செய்த தொழில்களில் ஒன்று  விறகு வெட்டுவது. 

தமக்கு அருகில் உள்ள காடுகளிலிருந்து விறகை வெட்டி சைக்கிளில் கட்டி ஊர் ஊராகச் சென்று விற்பது. பெரும்பாலும் கிளிநொச்சி நகரைச் சுற்றிய பகுதிகளுக்குச் சென்று இந்த விறவை விற்பார்கள். இப்படித்தான் கேப்பாப்பிலவு, மன்னாகண்டல் போன்ற இடங்களில் இருந்தவர்கள் புதுக்குடியிருப்புக்கு விறகு கட்டி விற்றனர். 

ஆக மொத்தத்தில் 2000 க்குப் பின்னரும் இவர்களுடைய வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டது என்றில்லை. ஆனால் இதற்குள் அடுத்த தலைமுறையினர் ஒருவாறு படித்துக் கொண்டனர். 

அது ஒரு பெரிய வாய்ப்பே. 

ஆனாலும் இந்த வாய்ப்பு  எல்லோருக்கும் எல்லாக் கிராமங்களுக்கும் கிட்டியது என்றில்லை. 

அடிக் கிராமங்கள் என்று சொல்லப்படும் தொலைதூரக் கிராமங்களில் உள்ளவர்களுக்குச் சரியான கல்வி கிட்டவில்லை. அவர்களுடைய நிலைமையைக் கருத்திற் கொண்டு செயற்படுவதற்குரிய பொறிமுறைகளும் இருக்கவில்லை. இதனால் அவர்களும் அடுத்த அடுத்த தலைமுறைகளாக கூலிகளாகவே கஸ்ரப்பட வேண்டியிருந்தது. 

இது வன்னியின் அத்தனை மலையக மக்கள் வாழ்ந்த இடங்களுக்கும் பொதுவான ஒரு நிலையாகும். 

(தொடரும்) 

https://arangamnews.com/?p=6347

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 11.

(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது. — ஆசிரியர்) 

அங்கீகரிப்பதும் ஏற்றுக் கொள்வதும் சமமாக நடந்து கொள்வதும் சம நீதியை வழங்குவதும் மிகச் சாதாரண – எளிய விசயங்கள். சக மனிதர் மீதான நேசிப்பிற்கான எளிய அடிப்படைகள். இதைச் செய்வதற்கே முடியாமலிருப்பது ஏன்ஏனிந்த அறிவீனம்எந்த விசம் இப்படி வேறாக்கி வைத்துள்ளது உம்மை? 

11 

வடபகுதியின் பொருளாதாரம் மூன்று பிரதான அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று விவசாயம். யாழ்ப்பாணத்தில் சிறுபயிர்ச்செய்கையான தோட்டங்களிலிருந்து இது உருவாகிறது என்றால் வன்னியில் நெற்செய்கையான வயல்களின் மூலம் நிகழ்ந்தது. இரண்டுக்கும் பிரதானமாக நிலம் வேண்டும். நிலமுள்ளோரே செய்கையாளர்கள். அதாவது உற்பத்தியாளர்கள். ஏனையோர் கூலிகள். இந்த உற்பத்திக்கான தொழிலாளர்கள். இதில் தொழிலாளர்களாக – கூலிகளாகவே வடக்கு நோக்கி வந்த மலையக மக்கள் இருந்தனர். நிலம் இல்லாத காரணத்தினால் கூலியாக இருக்க வேண்டிய நிலை. அப்படி அத்து மீறிக் காட்டை வெட்டி சிறிய அளவிலான நிலத்தை எடுத்துக் கொண்டாலும் பயிர்ச்செய்கைக்கான நீரில்லை. குறிப்பாகப் பாசன நீர் கிடையாது. அது ஒழுங்கமைக்கப்பட்ட குடியேற்றத்திட்டத்திற்கே வழங்கப்பட்டது. அதற்கே அது சாத்தியமும் கூட. 

எனவே விவசாய உற்பத்திப் பொருளாதாரத்தில் இந்த மக்களுக்கு இடமிருக்கவில்லை. இவர்கள் கூலிகளாகவே இருந்தனர். 

அடுத்தது, கடற்தொழில் சார்ந்த பொருளாதாரம். இதிலும் இவர்களுக்கு இடமில்லை. காரணம் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில்தான் கடற்கரை உண்டு. இந்தக் கடற்கரைகளில் பாரம்பரியமாகத் தொழில் செய்து வந்த மீன்பிடிச் சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தினர். புதியவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. சில இடங்களில் கரை வலை இழுக்கின்ற கூலிகளாக இந்த மக்கள் பயன்படுத்தப்பட்டனர். அவ்வளவுதான். மிகப் பிந்தித்தான் கல்லாறு, ஆனையிறவு போன்ற இடங்களில் உள்ள பரவைக் கடலில் இவர்கள் தொழில் செய்தனர். இந்தத் தொழில் நாளாந்த வாழ்க்கைப் பாடுகளுக்கான வருவாயைத் தருமே தவிர, பெரிய பொருளாதார அடிப்படைகளைக் கொண்டதல்ல. இன்னொரு வகையில் இந்த மக்கள் மீன்பிடியில் ஈடுபட்டனர். அது குளங்களில். வன்னேரிக்குளம், வவுனிக்குளம், தென்னியன் குளம், பல்லவராயன்  கட்டுக்குளம், முத்தையன் கட்டுக் குளம், விசுவமடுக்குளம், தவசி குளம், வவுனியாக் குளம், இரணைமடுக்குளம், கல்மடுக்குளம், கட்டுக்கரைக்குளம், முறிப்புக்குளம், மூன்று முறிப்புக்குளம் என வன்னியிலுள்ள குளங்களில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டனர். தொடக்கத்தில் தங்களுடைய உணவுக்காகவே இந்த மீன்பிடியைச் செய்தனர். இது 1960, 70, 80களில். அப்பொழுது பிற சமூகங்களைச் சேர்ந்தோர் குளத்து மீனைச் சாப்பிடுவது குறைவு. பின்னர் மெல்ல மெல்ல இந்த மீன்பிடி ஒரு தொழிலாக விருத்தியடைந்தது. தென்பகுதிக்கு இந்தக் குளத்து மீன் ஏற்றுமதியும் கருவாட்டு வினியோகமும் நடக்கத் தொடங்கியதால், இது நன்னீர் மீன்பிடியாக வளர்ந்தது. ஆனாலும் இதற்கு ஒரு எல்லை உண்டு. இது கடல் இல்லை. குளம் என்ற காரணத்தினால் வரையறுக்கப்பட்ட அளவில்தான் உற்பத்தி கிடைக்கும். அதற்கேற்ற அளவில்தான் தொழிலும் நடக்கும். இந்தத் தொழிலில் இப்பொழுது வன்னி முழுவதிலும் ஏறக்குறைய 1500 குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. 

ஆனாலும் மீன்பிடிப் பொருளாதாரத்திலும் இவர்கள் செல்வாக்குள்ள தரப்பினர் இல்லை. 

மூன்றாவது பனை தென்னை வளப் பொருளாதாரம். இதற்கு இரண்டு அடிப்படைகள் வேண்டும். ஒன்று தென்னைகளைப் பயிரிடுவதற்கான பெரும் நிலப்பரப்பு –தென்னந்தோட்டங்கள் அல்லது தென்னந்தோப்புகளை உருவாக்குவதற்கு. அப்படியென்றால்தான் தென்னையின் மூலமான பொருளாதார உற்பத்தியில் ஈடுபடலாம். இதற்கான காணிகள் இவர்களுக்கில்லை. இதைப்போலவே பனந்தோப்புகளைக் கொண்ட காணிகளும் இவர்களுக்கிருக்கவில்லை. எனவே இந்த இரண்டிலும் இவர்களுக்கு இடமில்லை. இதில் இன்னொரு இடமுண்டு. அது பனை தென்னை வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உற்பத்திகள். குறிப்பாக கள் இறக்குதல், பதனீர் உருவாக்கம், பனம்பொருள் உற்பத்திகள் போன்றவை. இதில் ஈடுபடுவதற்கான தொழிற் தேர்ச்சி இவர்களுக்கிருக்கவில்லை. ஒரு தொகுதியினர் இந்தத் தொழிலைப் பழகிச் செய்தாலும் இவர்களால் இந்தத் தொழிலை வன்னியில் செய்து வந்த சமூகத்தினருடன் போட்டி போட முடியவில்லை. இந்த உற்பத்திகளுக்கான கூட்டுறவுச் சங்கங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் இவர்கள் இரண்டாம் மூன்றாம் நிலையிலேயே இருந்தனர். மரபுவழிச்சமூகத்தினரே அங்கெல்லாம் ஆதிக்கம் செலுத்தினர். ஆகவே இங்கும் இவர்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை. 

ஆக மொத்தத்தில் மூன்று பிரதான பொருளாதார நிலையிலும் உற்பத்திகளிலும் இந்த மக்களுக்கு இடமிருக்காத காரணத்தினால் இவர்களுடைய சமூக வளர்ச்சி என்பது மட்டுப்பட்டதாகவே இருந்தது. விவசாயக் கூலிகளாக இருந்தவர்களில் ஒரு தொகுதியினர் பின்னர் மெல்ல மெல்ல வேறு தொழில்களிலும் ஈடுபட்டனர். கிணறு தோண்டுவது, காடுகளில் விறகு வெட்டுவது, மரம் அரிவது,உணவுக்கடைகளில் சமையல் செய்வது. ஏனைய கடைகளில் சிப்பந்திகளாக வேலை செய்வது, கால்நடைகளைப் பராமரிப்பது, வளவு வேலைகள், மேசன்,தச்சு வேலைகள், தையல், சிறுவாணிபம்– குறிப்பாக நடமாடும் வர்த்தகம்  என இது பல வகையில் விரிந்தது. இதற்கு இரண்டு தலைமுறைக் காலம் தேவைப்பட்டது. இரண்டாவது தலைமுறைதான் படிப்பிலும் ஈடுபடக் கூடியதாக இருந்தது. மெல்ல மெல்ல குத்தகைக்கு நிலங்களை எடுத்துப் பயிர்ச் செய்கையில் ஈடுபடவும் முடிந்தது. ஆனாலும் சவால்கள் குறையவில்லை. சமூக ரீதியான ஓரங்கட்டுதல்கள், புறக்கணித்தல்கள், நெருக்கடிகள் என இது தொடர்ந்தது. இப்போது கூட இந்த நிலை நீடிக்கிறது என்றால் அப்பொழுது இது எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். 

இதை எதிர்த்து நிற்கக் கூடிய பொருளாதார வலுவோ சமூகப் பொருளாதார அடையாளமே இல்லாத காரணத்தினால் இந்த மக்கள் செறிவாக வாழ்கின்ற பகுதிகளில் கூடக் குரலற்றோரோகவே இருந்தனர். சமூகப் பொருளாதார வளர்ச்சியில்லை என்றால் அந்தச் சமூகம் பல விதமான சிக்கல்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள நேரிடும். எப்போதும் ஒரு சீரற்ற – சமநிலையற்ற தாழ்நிலையிலேயே இருக்க நேரிடும். ஆயுதப்போராட்டமும் இயக்கங்களும் செல்வாக்குப் பெறும் வரையில் இந்த மக்களின் சமூகநிலை சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது. இயங்கங்களின் வருகை இந்த மக்களுடைய இருப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. பொருளாதார நிலையிலும் அதற்கான நிலம், கடல் வளத்தைப் பகிர்வது போன்ற அடிப்படைகளிலும் மாற்றங்களோ வளர்ச்சியோ ஏற்படவில்லை என்றாலும் சமூக நிலையில் இவர்கள் நிமிரக் கூடிய ஏது நிலைகள் தோன்றின. 

 

விடுதலை இயக்கங்களுடைய செயற்பாடுகளைப் பற்றி இன்று பலவிதமான விமர்சனங்கள் உண்டு. அனைத்து இயக்கங்களும் இந்த விமர்சனத்திற்குள் அடங்கும். ஆனால் அவற்றினால் பல நல்ல விசயங்கள் தமிழ்ப்பரப்பில் நடந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கு ஆதரவாக இந்த இயக்கங்கள் இருந்ததாகும். முக்கியமாக இந்த மக்களில் காணியற்றிருந்த குடும்பங்களுக்கு காணிகள் கிடைக்கும் நிலையை ஏற்படுத்தியமை. அதாவது நிலம் வழங்கியமையாகும். இது ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. பொருளாதார நிலையிலும் கல்வியிலும் இவர்கள் முன்னகரக் கூடியதாக இருந்தது. இது சமூகப் பண்பாட்டு நிலையில் ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றம் எனலாம். அதாவது இந்த நிலத்தில், இந்தப் பிரதேசத்தில் நாம் வாழமுடியும். எமக்கொரு வாழ்க்கையை இங்கே உருவாக்க முடியும். அது இங்கே உண்டென்ற தன்னம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் உருவாக்கியது. இது ஆயிரம் மடங்கு பலத்துக்குச் சமம். 

நிலமில்லை என்றால் எந்த மனிதராலும் எங்குமே வேர் விட முடியாது. தாமரை இலைத்தண்ணீரைப் போல எதிலும் நிலைகொள்ள முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். எனவேதான் நிலம் முக்கியமான –அடிப்படையான ஒன்றாக இருக்கிறது. 

வடக்கில் நிலமற்ற மக்களாக ஒரு காலம் பெருவாரியான ஒடுக்கப்பட்ட மக்கள் –தாழ்த்தப்பட்ட சாதியினர் இருந்தனர். நிலம் இல்லாத காரணத்தினால் இந்த மக்கள் நிலமுள்ளோரிடம் கூலிக்கு வேலை செய்ய வேண்டியிருந்தது. அல்லது அவர்களுடைய நிலத்தில் குத்ததைக்கோ வரிக்கோ தொழில் செய்யும் நிலை இருந்தது. அதாவது அவர்களுடைய நிலத்தில் வேலை செய்யும் ஆட்களாக இருக்க நேர்ந்தது. 

ஏறக்குறைய  இதே நிலைதான் மலையக மக்களுக்கும் வன்னியில் நேர்ந்தது. ஒரு சாரார் அத்துமீறி அக்கம் பக்கத்திலிருந்த அரச நிலத்தில் காடுகளை வெட்டி நிலத்தை எடுத்துக் கொண்டனர். இன்னொரு சாராருக்கு குறைந்தளவு நிலம் குடியிருப்புக்கென அரச நிர்வாகத்தினால் வழங்கப்பட்டது. இது பயிர்ச்செய்கைக்குரியதல்ல. குடியிருப்புக்கு மட்டுமானது. இதில் தண்ணீரைப் பெறுவது மிகக் கடினம். தண்ணியில்லாக்காட்டைக் காட்டினால் எப்படி அங்கே தண்ணீரைப் பெற முடியும்? உதாரணம் ஜெயபுரம்,செல்வாநகர், மலையாளபுரம்,பொன்னகர், முறிகண்டி செல்வபுரம் போன்ற குடியேற்றங்கள். மற்றொரு பிரிவினர் பெரிய அளவில் செய்கை பண்ணப்படும் வயல்களில் வேலைக்கும் வயற்காவலுக்குமாக குடியமர்த்தப்பட்டனர். ஆனால் இவர்களுக்குக் காணியில் உரித்துக் கிடையாது. அங்கே குடியிருக்கலாம். நிரந்தர வீட்டை அமைக்க முடியாது. மலையகத்தில் தோட்டங்களில் லயங்களில் இருந்ததைப்போல. இங்கே லயத்துக்குப் பதிலாகக் குடிசை. இதில் வேலைக்காக குடியிருக்கலாமே தவிர அந்தக் குடியிருப்பை உரிமை கோர முடியாது. இதற்கு உதாரணமாக கிளிநொச்சியில் “இராமநாதன் கமம்” என்ற ஆயிரம் ஏக்கர் காணியில் அங்கங்கே குடியமர்த்தப்பட்ட மக்கள். இதைப்போல “பசுபதி கமம்” என்ற காணியிலும். இதை விடச் சிறிய பெரிய கமங்களில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. 

இப்படியாக இருந்த நிலையில்தான் நிலமற்றிருந்த குடும்பங்களுக்கு நிலம் வழங்கும் நடவடிக்கையை தாம் எடுத்துக் கொண்ட அரசியல் அதிகாரத்தின் மூலமாக இயக்கங்கள் செயற்படுத்தின. ஆனால் இதை அவை சட்டபூர்வமாகச் செயற்படுத்த முடியாதல்லவா. அதாவது இப்படி நிலம் கிடைத்தாலும் அதற்குரிய ஆவணங்கள் – உரிமப்பத்திரங்கள் கிடைக்கவில்லை.  இருந்தாலும் அது வரையிலும் எதுவுமே இல்லை என்றிருந்த இந்த மக்களுக்கு இது பெரிய ஆறுதலாக இருந்தது. 

இதை இயக்கங்கள் இரண்டு மூன்று வகையாகச் செயற்படுத்தின. ஒன்று,மத்திய வகுப்புத்திட்டத்தின் கீழ் பெருமளவு நிலத்தை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டு அதை அபிவிருத்தி செய்யாமல் வைத்திருந்தோரின் காணிகளை அல்லது அந்தக் காணிகளை விட்டு விட்டு வெளிநாடுகளுக்குச் சென்றோரின் காணிகளை எடுத்து அவற்றில் இந்த மக்களைக் குடியேற்றியமை. 

இப்படியான நிலங்களில் கிளிநொச்சி,முல்லைத்தீவு அடங்கலாக 2500 குடும்பங்களுக்கு மேலானோர் குடியேற்றப்பட்டனர். உழவனூர், புன்னை நீராவி, பரந்தன் சிவபுரம் போன்றவை இதற்கு உதாரணம். அடுத்தது அரச காணிகளில் குடியிருப்புகளை உருவாக்கியமை. குறிப்பாகத் தங்களுடைய இயக்கங்களில் சாவடைந்த போராளிகளின் நினைவின் பேரால் இந்தக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. முன்னரே குறிப்பிட்டதைப்போல வவுனியாவில் புளொட்டும் ரெலோவும் இதைச் செய்தன. கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் மன்னாரிலும் புலிகள், ஈரோஸ், ஈபிஆர்எல்எவ் போன்றன இதைச் செய்தன. பின்னாளில் இந்த வகையான குடியிருப்புகள் பலவற்றை புலிகள் உருவாக்கினார்கள். அதிலொன்றே கேப்பாப்பிலவாகும். 

இன்னொரு வகையான குடியேற்றம், தனியாரின் உறுதிக் காணிகளில் மேற்கொள்ளப்பட்டதாகும். இந்தக் காணிகள் நீண்டகாலமாகவே பராமரிப்பின்றி இருந்தால், அவற்றின் உரிமையாளர்கள் இங்கேநாட்டில் இல்லை என்றால் அந்தக் காணிகளில் இந்த மக்களைக் கொண்டு போய் குடியேற்றினார்கள். காணி உரித்தாளர்கள் வரும்பொழுது அவர்களைத் தாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்ற துணிவின் அடிப்படையில் இது நடந்தது. இதற்கு உதாரணமாக இயக்கச்சியில் பனிக்கையடி, முல்லைத்தீவு –புதுக்குடியிருப்பில் எனப் பலவுண்டு. 

இயக்கங்கள் இப்படிச் செய்வதற்கு வாய்த்தது, வடக்கிலே அரச நிர்வாகம் ஸ்தம்பித்திருந்தமையாகும். இதனால் இதைச் செய்யக் கூடியதாக இருந்தது. என்றாலும் இதில் ஒரு பிரச்சினை இருந்தது. இந்த மக்களுக்குக் காணி கிடைத்தாலும் பலருக்கும் அதற்கான ஆவணங்களை – பத்திரங்களை – உடனடியாகப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இப்போது கூட இவர்களில் ஒரு தொகுதியினர் உரிய ஆவணமில்லாமல் சிரமப்படுகின்றனர். ஆனால் தொண்ணூறு விழுக்காட்டினருக்கு சிரமங்கள், காலதாமதங்கள், இழுத்தடிப்புகளின் மத்தியில் ஒருவாறு இப்பொழுது ஆவணங்கள் – பத்திரங்கள் கிடைத்து விட்டன. இதற்கான போராட்டம் கொஞ்சமல்ல. இருந்தும் இன்று இவர்கள் வெற்றியடைந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். 

தனியார் காணிகளில் இருந்தோருக்கு ஆவணங்கள் இல்லவே இல்லை. அவை உறுதிக் காணிகள் என்பதால் அவற்றை எவராலும் வழங்க முடியாது. வேண்டுமானால் காணிக்குச் சொந்தக்காரர்கள் மட்டுமே வழங்க முடியும். அதற்கு எத்தனைபேர் தயார்? 

ஆனாலும் அப்படியான அதிசயங்கள் நடந்துமிருக்கிறது. 

சில இடங்களில் மத்தியவகுப்புத்திட்டத்தில் தமக்குக் கிடைத்த காணிகளை இந்த மக்களுக்கு ஒரு சிலர் வழங்கியிருக்கிறார்கள். அதைப்போல தமது சொந்தக் காணிகளில் குடியிருந்தோருக்கான காணிகளை தனியாரிற் சிலர் வழங்கியுள்ளனர். அதில் ஒரு குடும்பத்தினர் மானிப்பாயைச் சேர்ந்த மேதர் குடும்பத்தினர். இவர்கள் இயக்கச்சியில் 15 ஏக்கர் நிலத்தை சுமார் 50 குடும்பங்ளுக்கு நன்கொடையாக வழங்கினர். இதற்கான ஏற்பாட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் செய்திருந்தார். இன்று இந்தக் குடியிருப்பில் சுமார் 70 குடும்பங்கள் வரையில் வாழ்கின்றனர். கல்வி, பொருளாதாரம், வீடு எனப் பல வகைியலும் மிக முன்னேறிய குடியிருப்புகளில் ஒன்றாகப் பனிக்கையடி இன்றுள்ளது. இதைப்போல கிளிநொச்சியில் பசுபதி கமத்தைச் சொல்ல வேண்டும். முன்னாள் சட்டமா அதிபரான சிவா பசுபதி குடும்பத்தினர் இங்கிருந்த 50 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு தங்கள் காணியில் ஒரு பகுதியை இனாமாக வழங்கியுள்ளனர். இங்கே இந்த மக்கள் ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தனர். நீண்டகாலமாக இந்தக் காணியில் தாங்கள் குடியிருந்து வருவதால் தமக்கு குடியிருப்பதற்கான நிலத்தை தர வேண்டும் என. இதைப் புரிந்துணர்ந்து கொண்ட சிவா பசுபதி குடும்பத்தினர் இவர்களுக்கான காணிகளை வழங்கினர். இதற்கு இணைந்து வேலை செய்தவர் காவேரிக் கலாமன்றத்தின் இயக்குநரான வண. பிதா யோசுவா. 

ஆனால் இவை அரிதான நடைமுறைகள். 

எப்படியோ நிலமொன்று கிடைத்து விட்டால் அங்கே ஒரு நிரந்தரத் தன்மை குடியேறி விடும். ஊரோடித் தன்மை இல்லாமற் போய் விடும். இந்த நிரந்தரத்தன்மையே எதையும் செய்யவும் திட்டமிடவும் கூடியதாக இருக்கும். மனதிலும் தாம் இங்கே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதால் மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும். இதெல்லாம் ஒரு சமூக வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதற்கான அடித்தளங்களாகும். 

(தொடரும்) 

https://arangamnews.com/?p=6508

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 12

spacer.png

(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது.  – ஆசிரியர்) 

யாருக்கும் பகிரத் தயாரில்லாத நீதி குப்பையில் வீசப்பட்டுள்ளது 

12 

ஒரு சமூகமாகத் திரள்வதற்கான பிரக்ஞை உருவாகுவதற்கு அடிப்படையானது நிரந்தரத்தன்மையும் பொருளாதார நிலையுமாகும். அது இல்லையென்றால் அந்தப் பிரக்ஞை எழாது. எழுந்தாலும் அது சமூகப் பிரக்ஞையாக உருவாகாது. வடக்கு நோக்கி வந்த மலையக மக்களிடத்திலும் இந்தியாவிலிருந்து வெவ்வேறு நிலைகளில் வந்து வன்னியிலிருந்தோரிடத்திலும் (இவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையானோர் உதிரிகளாக யாழ்ப்பாணத்திலும் இருந்தனர். குறிப்பாக கேரளத் தொடர்புடையோர். இதைப்பற்றி இன்னொரு பகுதியில் தனியாகப் பார்க்க வேண்டும்) சமூகமாகத் திரள்வதற்கான அடிப்படைகள் நீண்டகாலமாக உருவாகவில்லை. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக அப்படியானதொரு சிந்தனையோ எண்ணமோ உருவாகவில்லை. 

இதனால் இவர்கள் பெருவாரியாக வாழ்ந்தாலும் உதிரிகளைப்போலவே இருந்தனர். உதிரிகளை அல்லது உதிரி நிலையை எவரும் இலகுவாகக் கையாள முடியும். எத்தகைய பாதிப்புகளோ அநீதியோ இழப்புகளோ நேர்ந்தாலும் அதை எதிர்க்கவும் அதற்காகக் குரல் கொடுக்கவும் உதிரித்தன்மை இடமளிக்காது. 

இந்தத்தன்மை இவர்களை மிகப் பாதிப்புக்குள்ளாக்கியது. பொருளாதாரச் சுரண்டல் தொடக்கம் பாலியற் சுரண்டல் வரையில் இந்தப் பாதிப்பு நீண்டது. இது இவ்வாறான நிலைமையில் உள்ள அத்தனை சமூகத்தினருக்கும் நேரும் பொது விதியாகும். 

சமூகமாகத் திரளக் கூடிய நிலையோ அதற்கான கூட்டுணர்வோ இருந்தால்தான் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் கிடைக்கும். மட்டுமல்ல அந்தக் கூட்டுணர்வு தமது அடையாளத்தைக் குறித்துச் சிந்திக்கவும் வைக்கும். இதற்கு இரண்டு அடிப்படைகள் அவசியமானவை. ஒன்று நிரந்தரக் குடியிருப்பும் அதனூடான பொருளாதார வளர்ச்சியும் வேண்டும். மேலும் இது உண்டாக்கும் சமூக வளர்ச்சியாகும். அதாவது ஒரு மத்தியதர வர்க்க வளர்ச்சி இதற்குத் தேவை. ஆனால் இதை அடிநிலையில் உள்ள மக்கள் எட்டுவது எளிதானதல்ல. இரண்டாவது, இவர்களை ஒருங்கிணைக்கக் கூடிய அரசியற் சக்திகள் அல்லது தொழிற்சங்கங்கள். இது இவர்களுக்குக் கிட்டவில்லை. 

ஆக இந்த இரண்டு அடிப்படை வலுக்களும் இல்லாத நிலையில் உதிரி மக்களாகவே இவர்கள் வாழ வேண்டியதாயிற்று. ஆனால் இவர்களை ஒரு சமூகமாகவே அடையாளம் கண்டு பிற சமூகத்தினர் நடத்தினர். இது ஒரு சுவாரசியமான – ஆனால் துயரமான முரணாகும். 

தம்மிலிருந்து வேறுபடுத்திக் கொள்வதற்கு இவர்களை ஒரு தனிச் சமூகத்தினராக நோக்கியவர்கள் மறுபக்கத்தில் இவர்களை ஒரு சமூகத்தினர் என்ற வகையில் அவர்களுக்குரிய அடிப்படைத் தகுதிகளான அரசியல் பெறுமானத்தையும் சமூகப் பண்பாட்டு வலுக்களையும் அங்கீகரிக்கத் தயாராக இருக்கவில்லை. அதாவது இவர்களைத் தமக்குப் பயன்படுத்துவதற்கும் தமக்குக் கீழே வைத்துக் கொள்வதற்கும் விரும்பினார்களே தவிர, சக மனிதர்களாக அங்கீகரிக்கத் தயாராக இருக்கவில்லை. 

இதனால்தான் சுமார் ஐம்பது ஆண்டுகாலமாக – இரண்டு மூன்று தலைமுறைகளாக – இவர்கள் எந்த அடையாளத்தையும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்க வேண்டியிருந்தது. 

கூலிகளாக இருந்த மக்களை கிறிஸ்தவ அமைப்புகளும் இயக்கங்களுமே மெல்ல மெல்ல அடுத்த கட்ட நிலைக்கு உயர்த்தின எனலாம். ஆனால் இதில் கிறிஸ்தவ அமைப்புகள் இந்த மக்களை மதம் மாற்றிய சம்பங்களும் நிறைய நடந்துள்ளது. வன்னியில் உள்ள கிறிஸ்தவக் குடியிருப்புகளை நோக்கினால் இந்த உண்மை புரியும். குறிப்பாக புதிய கிறிஸ்தவக் கிராமங்கள் இந்த வகையானவை. ஆரோக்கிய புரம்,சமாதான புரம், அமெதி நகர் என்ற பெயர்களே இதற்கு அடையாளம். ஆனாலும் இதைத் தவிர்க்கவும் முடியாத நிலை இருந்தது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இது ஒரு அடையாள அழிப்பு. இது ஒரு வன்முறை. இது ஒரு தந்திரோபாயச் செயல் என இன்று யாரும் இதைப்பற்றிக் கூற முற்படலாம். ஆனால் இந்த மக்களுக்கு ஒரு சிறிய வீட்டையும் (உண்மையிலேயே இந்த வீடுகள் மிகச் சிறியவையே) ஒரு சிறு துண்டு நிலத்தையும் (இந்த நிலமும் மிகமிகச் சிறியதே. ஆகக் கூடியது கால் ஏக்கர் நிலம் மட்டுமே) இந்த அமைப்புகள் வழங்கின. இதில் கூடுதலான ஆர்வம் காட்டியவை தென்னிந்திய திருச்சபை தொடக்கம் றோமன் கத்தோலிக்கம் அல்லாத பிற கிறிஸ்தவப் பிரிவுகளேயாகும். 

இவை இந்த மக்களின் கல்வியில் கூடுதலான அக்கறையைக் காட்டின. இன்று இந்தச் சபைகளின் போதகர்களாக இந்தப் பிரதேசங்களில் இருப்பவர்களில் அநேகர் இந்த மக்களில் இருந்து உருவாகியவர்களே. அதைப்போல ஏனையவர்கள் படித்து பிற துறைகளில் மிளிரத் தொடங்கினர்.  இது 1990க்குப் பின்னரே ஓரளவுக்கு நிகழத் தொடங்கியது. 

1958 இல் வன்னியை நோக்கி வந்த இந்த மக்களிலிருந்து 1990களில்தான் அங்குமிங்குமாக அடையாளம் தெரியக் கூடிய ஆளுமைகள் மேற்கிளம்பத் தொடங்கினர். இவர்கள் வளர்ச்சியடைய மேலும் ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகள் தேவைப்பட்டது. அதற்குள் இவர்கள் பட்ட சிரமங்களும் சந்தித்த அவமானங்களும் சாதாரணமானதல்ல. இன்றும் இவர்களுக்குப் பெரும் சவால் உண்டு. இதைக் கடக்க முடியாமலே உள்ளனர். இதுதான்  பேரவலம். 

ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலத் துயரத்துக்குப் பிறகு கடுமையான சிரமத்தின் மத்தியில் படித்து முன்னேறினாலும் பிற தொழில்களாலும் உழைப்பினாலும் வளர்ச்சியடைந்தாலும் அதை அங்கீகரிப்பதற்கு தமிழ்ச்சமூகத்தின் மனதில்  இடமில்லை. இன்னும் இந்த நீதி மறுப்புத் தொடர்கிறது. இதனால்தான் நீதியைக் குப்பையிலே போட்டு விட்டு வேறு எதையோவெல்லாம் எடுத்து வைத்திருக்கிறோம் என்கிறேன். நீதியைக் குப்பையில் போட்டு விட்டால் மிஞ்சுவது என்ன? அதற்குப் பிறகு எப்படிச் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியும்?சமூக நீதியையும் ஜனநாயகத்தையும் எவ்வாறு எதிர்பார்ப்பது? 

இந்தச் சந்தர்ப்பத்திலும் தவிர்க்க முடியாமல் நாம் இயக்கங்களையே இங்கும் குறிப்பிட வேண்டியிருந்தது. இந்த மக்களை அனைத்துச் சுரண்டல்களில் இருந்தும் மீட்டது இயக்கங்கள்தான். அது முற்று முழுதான மீட்பு நடவடிக்கை என்று சொல்லமுடியாது விட்டாலும் சிறுவர் தொழிலாளர்களாகப் பயன்படுத்துவதையும் பாலியல் ரீதியான சுரண்டல்களையும் இயக்கங்களின் காலத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தினரால் மேற்கொள்ள முடியவில்லை. இவை இரண்டுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. 

இந்தக் காலப்பகுதியில் பெரும்பாலானோருக்கு நிரந்தரக் குடியிருப்புக்கான நிலம் கிடைத்த பின்பு விரைவான சமூக முன்னேற்றம் ஏற்பட்டது. விரைவான சமூக முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும்போது தாம் ஒரு தனிச்சமூகத்தினர் என்ற உணர்வுந்தலுக்குள்ளாகினர். ஆனால் இந்த வளர்ச்சியில் ஏற்படக் கூடிய சிக்கல்களும் உருவாகின. பலவகையான சிந்தனைப் போக்குகளும் நிலைப்பாடுகளும் உருவாகின. தாம் ஒரு சமூகத்தினர் என்றாலும் அதற்குள் எழுந்த அரசியல் உணர்வுகளும் சமூக நிலைப்பாடுகளும் பலவாகின. மத்தியதர வர்க்கத்தை நோக்கி வளர்ச்சியடையும் எந்தச் சமூகத்திலும் நிகழும் தளம்பலும் தடுமாற்றமும் இந்த மக்களிடமிருந்து வளர்ச்சியடைந்தோரிடத்தில் காணப்பட்டது. தம்மைத்தனித்து அடையாளம் காண்பதற்கும் அதை முன்னிறுத்துவதற்கும் பதிலாக வடக்கில் உள்ள பெருந்திரள் அரசியலுக்குள்ளும் அந்தச் சிந்தனைப் போக்கிற்குள்ளும் இவர்கள் சங்கமிக்கத் தொடங்கினர். சரியாகச் சொன்னால் கரையத் தொடங்கினர், ஆனால் எப்படித்தான் சங்கமித்தாலும் கரைந்தாலும் இவர்களைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டு வெளியே நிறுத்தி வைத்தது வடக்குச் சமூகம். 

(தொடரும்) 
https://arangamnews.com/?p=6730

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.