Jump to content

பாகிஸ்தான், பேருந்து குண்டுவெடிப்பில்... 9 சீனர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் பேருந்து குண்டுவெடிப்பில் 9 சீனர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், பேருந்து குண்டுவெடிப்பில்... 9 சீனர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மற்றும் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பயங்கரவாத தாக்குதலினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரை 4 பொறியியலாளர்கள் உட்பட குறைந்தது 8 உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறைந்தது 30 பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்த பேருந்தில் காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால்உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் மேல் கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள தாசு நீர் மின் நிலையம் அருகே இன்று புதன்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

https://athavannews.com/2021/1228588

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு 140 கோடியில் 9 தலைகள்  குறைவு😢

Link to comment
Share on other sites

சீனா Uyghur இல் உள்ள இஸ்லாமியர்கள் மீது மனித வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மோசமான அடக்குமுறைகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றது. பாலியல் வன்முறையை ஒரு பெரிய ஆயுதமாக அங்குள்ள இளம் மற்றும் நடுத்தர வயதுடைய பெண்களின் மிது பிரயோகித்துக் கொண்டு இருக்கின்றது. Uyghur மக்களின் மரபுவழி கலாச்சாரத்தை துறந்து சீன கலச்சாரத்தை பின்பற்ற வைப்பதற்காக கட்டாயப்படுத்தி Uyghur அல்லாதவர்கள் மூலம் கர்ப்பமாக்குதல், குடும்பங்களை பிரித்தல், பெரும் சிறைகளை  உருவாக்கி இளைஞர்களை சித்திரவதை செய்தல் / கொல்லுதல் போன்றவற்றைத் தொடர்கின்றார்கள். மேலை நாடுகளும், ஐ நா வும் மனிதவுரிமை மீறல் என்ற பலவீனமான பல்லவி மூலம் சீனாவை வழிக்கு கொண்டு வர இதனை ஒரு ஆயுதமாக பாவிக்கின்றனர். 

எதிர்காலத்தில் இஸ்லாமிய தீவிரவாத மற்றும் அடிப்படைவாத அமைப்புகளின் கோபம் சீனா மீதும் சீனர்கள் மீதும் திரும்பப் போகின்றது என்பதற்கான ஒரு தாக்குதலாக இது அமைகின்றது என நினைக்கின்றேன்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி மிக மோசமான குற்றச்சாட்டை சீனா மீது கூறுகிறீர்கள் ? 

☹️

Link to comment
Share on other sites

13 minutes ago, Kapithan said:

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி மிக மோசமான குற்றச்சாட்டை சீனா மீது கூறுகிறீர்கள் ? 

☹️

https://www.aljazeera.com/news/2021/6/10/china-accused-of-crimes-against-humanity-of-uighurs-in-xinjiang

https://www.bbc.com/news/world-asia-china-55794071

https://www.bbc.com/news/world-asia-china-22278037

https://en.wikipedia.org/wiki/Xinjiang_internment_camps#:~:text=The mass internment of Uyghurs,are held in the camps.

இவை தவிர யாழில் உலகச் செய்திகள் பகுதியில் நுணாவால் இணைக்கப்பட்ட சில திரிகளும் உள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை ஊருக்கு போய் பஸ் பயணம் போக ஏறும்போது உள்ளே சீனாக்காரர் யாராவது இருக்கிறாங்களா என்று பார்த்துபயணம் செய்யுங்கப்பா. இதுபோல இலங்கையில் நடக்க இன்னும் அதிகம் நாளில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா சீனாவை சிக்கலில் மாட்டிவிட பார்க்கிறது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்தும் வெற்றிடத்துள் சீனா நுழைய முயன்றால், உகிர் பிரச்சனை எல்லாத்தையும் சேர்த்து இஸ்லாமிய தீவிரவாதிகளோடு சிண்டு முடியும் ஐடியா போலப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக இது இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

அமெரிக்கா சீனாவை சிக்கலில் மாட்டிவிட பார்க்கிறது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்தும் வெற்றிடத்துள் சீனா நுழைய முயன்றால், உகிர் பிரச்சனை எல்லாத்தையும் சேர்த்து இஸ்லாமிய தீவிரவாதிகளோடு சிண்டு முடியும் ஐடியா போலப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக இது இருக்கலாம்.

நாம் சீரியல் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

நாம் சீரியல் பார்ப்போம்.

இவங்கள் ஆளையாள் மாறி மாறி அடிபட குண்டு வெடிப்பில் எங்கட சனமும் மாட்டாதவரை ஓகே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

இவங்கள் ஆளையாள் மாறி மாறி அடிபட குண்டு வெடிப்பில் எங்கட சனமும் மாட்டாதவரை ஓகே.

ஆப்கானிஸ்தானில் தொடங்கினால் கிந்திகளின் தலைகள் தானே??

நம்மை வந்தடைவதற்குள் உலகம் சுருண்டு விடும்?

Link to comment
Share on other sites

மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவின் மனிதஉரிமை பேணல் குறைவாக இருக்கலாம். ஆனால் ஆசியநாடுகளுடன் ஒப்பிடும் போது அதன் தரத்தில் பெரிய மாற்றம் இல்லை. இந்தியாவின் காசுமீரில் நடப்பதைவிட. மியன்மாரில் நடப்பதை விட  சீனாவில் நடப்பது குறைவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

அமெரிக்கா சீனாவை சிக்கலில் மாட்டிவிட பார்க்கிறது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்தும் வெற்றிடத்துள் சீனா நுழைய முயன்றால், உகிர் பிரச்சனை எல்லாத்தையும் சேர்த்து இஸ்லாமிய தீவிரவாதிகளோடு சிண்டு முடியும் ஐடியா போலப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக இது இருக்கலாம்.

எனக்கு இந்தியா மீது தான் சந்தேகம்.

5 minutes ago, manimaran said:

மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவின் மனிதஉரிமை பேணல் குறைவாக இருக்கலாம். ஆனால் ஆசியநாடுகளுடன் ஒப்பிடும் போது அதன் தரத்தில் பெரிய மாற்றம் இல்லை. இந்தியாவின் காசுமீரில் நடப்பதைவிட. மியன்மாரில் நடப்பதை விட  சீனாவில் நடப்பது குறைவு

மணிமாறா
ஏனையா இலங்கையை பட்டியலில் இருந்து எடுத்து விட்டீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

ஆப்கானிஸ்தானில் தொடங்கினால் கிந்திகளின் தலைகள் தானே??

நம்மை வந்தடைவதற்குள் உலகம் சுருண்டு விடும்?

சொல்ல முடியாது - பிராந்தியத்தில் சீனாவை குறி வைக்க அமெரிக்கா முடிவு செய்தால் இருக்கும் இடமெல்லாம் அடி விழும். 

ஆனால் இந்த அளவுக்கு அமெரிக்கா போகும் என்று நானும் நினைக்கவில்லை.

44 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கு இந்தியா மீது தான் சந்தேகம்.

சீனாவை தனியே சீண்டும் அளவுக்கு தில் இல்லை. ஆனால் இவர்களின் மறை கரம் பாலூசிஸ்தான் வரை நீண்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

https://www.aljazeera.com/news/2021/6/10/china-accused-of-crimes-against-humanity-of-uighurs-in-xinjiang

https://www.bbc.com/news/world-asia-china-55794071

https://www.bbc.com/news/world-asia-china-22278037

https://en.wikipedia.org/wiki/Xinjiang_internment_camps#:~:text=The mass internment of Uyghurs,are held in the camps.

இவை தவிர யாழில் உலகச் செய்திகள் பகுதியில் நுணாவால் இணைக்கப்பட்ட சில திரிகளும் உள்ளன. 

நானும் வெள்ளயள் எண்டாப் பால் என நம்பின காலமொன்ரிருந்தது. 

😀

1 hour ago, manimaran said:

மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவின் மனிதஉரிமை பேணல் குறைவாக இருக்கலாம். ஆனால் ஆசியநாடுகளுடன் ஒப்பிடும் போது அதன் தரத்தில் பெரிய மாற்றம் இல்லை. இந்தியாவின் காசுமீரில் நடப்பதைவிட. மியன்மாரில் நடப்பதை விட  சீனாவில் நடப்பது குறைவு

மேற்கு; ஒழுங்குபடுத்தப்பட்ட சனனாயக உரிமை மீறல்.

மேற்கு அல்லாதது; ஒழுங்குப்டுத்தப்படாத மனித உரிமை மீறல்.

அம்புட்டுதே..😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Uyghur மக்களின் மரபுவழி கலாச்சாரத்தை துறந்து சீன கலச்சாரத்தை பின்பற்ற வைப்பதற்காக சீனா கட்டாயப்படுத்தவில்லை.
Uyghur மக்ககள் முஸ்லிம் மதத்தை பின்பற்ற தொடங்கியவுடனேயே தங்கள் மரபுவழி கலாச்சாரத்தை தூக்கி எறிந்துவிட்டு அரபிய காலாச்சாரத்தையே பின்பற்றி வருகின்றனர்.சீனாவின் கட்டுப்பாட்டில் இல்லையானால் அங்கே இன்னொரு அவ்கானிஸ்தானும் தலிபான்களும் தோன்றியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: சீனா கடும் கண்டனம்!

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: சீனா கடும் கண்டனம்!

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு, சீனா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் சீன தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் சீனாவைச் சேர்ந்த 7 பொறியாளர்கள், 2 இராணுவ வீரர்கள் உள்பட 13பேர் உயிரிழந்தனர். 39க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் சீன நாட்டினர், அமைப்புகள் மற்றும் திட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாகிஸ்தானின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக சீனா பல பில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது. ஆனால் சீன நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களை பிரிவினைவாத குழுக்கள் எதிர்த்துவருகின்றன.

சீனா உதவியுடன் நடைபெறும் திட்டங்களால் உள்ளூர்வாசிகளுக்கு குறைந்த அளவே பலன் கிடைப்பதாகவும், பெரும்பாலான வேலைகள் வெளியாட்களுக்குச் செல்வதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

https://athavannews.com/2021/1228748

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு பொர்ட் சிற்றிக்கு போகும் பொழுது கவனமாக போக வேண்டும்... ... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, putthan said:

கொழும்பு பொர்ட் சிற்றிக்கு போகும் பொழுது கவனமாக போக வேண்டும்

வாய்ப்பிருக்கிறது 
ஆனால் முஸ்லீம் தீவிரவாதத்தால் இல்லாமல்  ஊரிலிருந்து வரும் கழுகாரின் தகவல்களின் படி 
சிங்கள நோனாக்களை யுவான்களை காட்டி சப்பைமூக்கன்கள் மடக்கி கொண்டு ஒய்யாரமாக போவதை பார்த்து பொருமிகொண்டிருக்கும் சிங்களே வாலிபர்களால் இந்த நிலைமை ஏற்படலாம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, அக்னியஷ்த்ரா said:

வாய்ப்பிருக்கிறது 
ஆனால் முஸ்லீம் தீவிரவாதத்தால் இல்லாமல்  ஊரிலிருந்து வரும் கழுகாரின் தகவல்களின் படி 
சிங்கள நோனாக்களை யுவான்களை காட்டி சப்பைமூக்கன்கள் மடக்கி கொண்டு ஒய்யாரமாக போவதை பார்த்து பொருமிகொண்டிருக்கும் சிங்களே வாலிபர்களால் இந்த நிலைமை ஏற்படலாம்  

அதை பார்க்க எங்களுக்கே இரத்தம் கொதிக்கிறது  என்றால் எங்களுடைய சகோதரஜாக்களுக்கு எப்படியிருக்கும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.