Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஜேர்மனி உட்பட மேற்கு ஐரோப்பாவில் கடும் வெள்ளம்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

செய்திச் சுருக்கம்:

ஜேர்மனியில் கடும் வெள்ளத்தில் 48 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெல்ஜியம், நெதர்லாந்திலும் பாதிப்பு.

https://www.bbc.co.uk/news/live/world-europe-57853014

உறவுகள் நலமா?

Link to comment
Share on other sites

 • Replies 89
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமி

நான் பார்த்த ஒரு விசர் வேலையாலை உங்களை எல்லாம் தேட வைச்சிட்டன். பார்க்க கவலையாக இருக்கின்றது. தேடிய உறவுகளுக்கு,சொந்தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள். சிறித்தம்பி  நீங்கள் தொலைபேசியில் என்னை தேடிய

தமிழ் சிறி

எமது பகுதியில்.... தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. வடக்கு ஜேர்மனியில்... 59 பேர் அளவில், இறப்பு பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால்... பலரை காணவில்லை. அது கவலையான செ

shanthy

தேடியவர்களுக்கு நன்றி. நலமாக உள்ளேன். வெள்ளத்தில் காரில் நீந்திய அனுபவம் இதுவரை சந்தித்த இயற்கை அனர்த்தங்களில் இருந்து வேறுபட்டது. இன்னும் அந்த நினைவு கண்ணுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.   

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

செய்திச் சுருக்கம்:

ஜேர்மனியில் கடும் வெள்ளத்தில் 48 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெல்ஜியம், நெதர்லாந்திலும் பாதிப்பு.

https://www.bbc.co.uk/news/live/world-europe-57853014

உறவுகள் நலமா?

கோஷன். இங்கே. வருடம் முழுக்க. மழை தான். வாய்க்கல்கள். துப்பரவாகயிருப்பதால். வெள்ளம். பாய்ந்து ஓடிவிடும்  நான் சுகமாகயிருக்கிறேன் மற்றைய. யாழ்கள ஜேர்மன் உறவுகள் சுகமாகயிருபப்பார்கள்  என  நம்புகிறேன் மிகவும் அக்கறையுடன். விசாரித்தமைக்கு நன்றிகள் பல  கோடி. நீங்கள் எப்படியிருக்கீறிர்கள்? பெற்றேல். விலை. தான் மிக அதிகம்...

5 minutes ago, வாத்தியார் said:

Hochwasser in Köln: Stromausfälle und Verkehrschaos – das müssen Sie wissen. Lange Staus auf der A1 bei Erftstadt: Infolge des Unwetters waren mehrere Autobahnen in Nordrhein-Westfalen gesperrt. (Quelle: dpa/Marius Becker)

Erftstadt Unwetter DHL Wagen

DSC08434

ஓம். சரியான வெள்ளம் தான். .இது. நான் இருக்கும்  பகுதியில்லை. 

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

கோஷன். இங்கே. வருடம் முழுக்க. மழை தான். வாய்க்கல்கள். துப்பரவாகயிருப்பதால். வெள்ளம். பாய்ந்து ஓடிவிடும்  நான் சுகமாகயிருக்கிறேன் மற்றைய. யாழ்கள ஜேர்மன் உறவுகள் சுகமாகயிருபப்பார்கள்  என  நம்புகிறேன் மிகவும் அக்கறையுடன். விசாரித்தமைக்கு நன்றிகள் பல  கோடி. நீங்கள் எப்படியிருக்கீறிர்கள்? பெற்றேல். விலை. தான் மிக அதிகம்...

என்னுடைய ஊரிலிருந்து 30  km  க்கு அப்பால்
பலத்த சேதங்களும் உயிரிழப்புக்களும்.
ஹோலண்டை அண்மிய பிரதேசங்களில் கடுமையான பாதிப்பு. இதுவரை 70  பேர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதில் ஒரே நகரில் 60  பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறுகின்றார்கள்.
போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டுள்ளது.
நாளைவரை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 • Like 2
 • Thanks 1
 • Sad 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kandiah57 said:

 

ஓம். சரியான வெள்ளம் தான். .இது. நான் இருக்கும்  பகுதியில்லை. 

கந்தையா அண்ணை எந்தப்பக்கம்
கவனமாக இருங்கள் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மேற்கு ஐரோப்பாவில் பெரும் மழையினால் பெரும் வெள்ளம் குறைந்தது 66 பேர் இறந்துவிட்டனர் மற்றும் 70 பேர் காணவில்லை என்று செய்தியில் சொன்னார்கள்.

50 minutes ago, Kandiah57 said:

நான் சுகமாகயிருக்கிறேன்

மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

 

Link to comment
Share on other sites

ஒரு நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளார்களா....😢

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி? சுவி அண்ணாவும் அங்கு தானே?

54 minutes ago, goshan_che said:

இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

 

இங்கும் ஒன்ராரியோவில் இன்று கன மழை. Tornado ஒன்று வந்து Barrie என்ற ஊரில் பல வீடுகளையும் வாகனங்களை யும் கடுமையாக சேதப்படுத்தி சென்றுள்ளது. Flash flood தாழ்ந்த பகுதிகளில் இங்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

 

மிகவும் கவனமாக இருக்க வேண்டும், கோஷான்!

அனேகமாக விடுமுறை காலங்களில்  காட்டுப் பகுதிகளில் தான் முகாமிடுவது வழக்கம்!

ஒரு முறை இவ்வாறு சென்ற போது...எனது குடும்பமும்....இரண்டு நாய்களுமாக ஒரு காட்டருவியின் வழித் தடத்தில் நடந்து கொண்டிருந்தோம்! காட்டில் நிறைய மரங்களும் பற்றைகளும் நிறைந்திருப்பதால், அனேகமாக நெருப்பணைக்கும் படையினருக்காக அமைக்கப் பட்ட வழித்தடத்தில் அல்லது  காய்ந்து போய்க் கிடக்கும் காட்டருவியின் வழித்தடத்தில் நடப்பதே அனேகரின் வழக்கம்!

இவ்வாறு ஒரு முறை செல்கையில்...பாரிய சத்தமொன்று தூரத்தில் கேட்டது!நாங்கள் ஒன்றும் புரியாமல், வழித்தடத்தை விட்டு மேலே ஏறியதும்  வெள்ளம் அதி வேகமாகப் பாறைகளை உருட்டிய படியே பாய்ந்து வந்தது!

இந்தச் சம்பவத்தின் பின்னர்  வலு கவனம்!

 • Like 1
 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1300 பேரைக் காணவில்லை என்று காடியன் பத்திரிக்கை கூறுகின்றது.  கு. சா அண்ணா நலமுடன் இருப்பார் என நம்புகின்றேன்.

https://www.theguardian.com/world/2021/jul/16/western-germany-floods-angela-merkel-horror-catastrophe-deaths-missing-search-flooding-belgium

Edited by zuma
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பெர்லின் (சி.என்.என்) ஜெர்மனியில் சுமார் 1,300 பேர் கணக்கிடப்படவில்லை, ஒரு நூற்றாண்டில் பெய்த மழையால் மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளை பேரழிவு தரக்கூடிய கொடிய ஃபிளாஷ் வெள்ளம் ஏற்பட்டது, இது ஒரு பெரிய அளவிலான மீட்பு முயற்சியைத் தூண்டியது. மேற்கு மற்றும் தெற்கு ஜெர்மனியில் வேகமாக நகரும் நீரோடைகள் முழு நகரங்களையும் கிராமங்களையும் மூழ்கடித்து கட்டிடங்கள் இடிந்து விழுந்து குடியிருப்பாளர்களை சிக்கித் தவிக்கின்றன என்று போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கடுமையான வெள்ளத்தில் 55 பேர் இறந்துள்ளனர், ஆனால் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பெல்ஜியத்தில் ஜெர்மனி 49 பேர் இறந்த நிலையில், 6 பேர் இறந்தனர். லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான ரைன்லேண்ட்-பலட்டினேட் மாநிலத்தில், அஹ்ர்வீலர் மாவட்டத்தில் 1,300 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது. "
சில பகுதிகளில் 100 ஆண்டுகளில் இவ்வளவு மழைப்பொழிவை நாங்கள் காணவில்லை" என்று ஜெர்மன் வானிலை சேவை செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரியாஸ் பிரீட்ரிச் சி.என்.என். "சில பகுதிகளில் மழையின் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக நாங்கள் கண்டிருக்கிறோம், இது வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது, துரதிர்ஷ்டவசமாக சில கட்டிட கட்டமைப்புகள் இடிந்து விழுகின்றன."

ஒரு ஜெர்மன் மாநிலத்தில் குறைந்தது 30 பேர் இறந்தனர்

ஜெர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் 30 பேர் இறந்து கிடந்ததாக மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் சி.என்.என். செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வெள்ளத்தில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தெளிவாக இல்லை. ரைன்லேண்ட்-பலட்டினேட்டில், குறைந்தது 19 பேர் இறந்து கிடந்தனர், ஆனால் "அந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கோப்லென்ஸில் காவல்துறை செய்தித் தொடர்பாளர் சி.என்.என். பேட் நியூனேஹர்-அஹ்ர்வீலர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை, 1,000 க்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் அவசரகால தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டதாக உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.
ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், வாஷிங்டன் டி.சி.க்கு தனது ஸ்வான்சோங் விஜயத்தில் இருக்கிறார், தனது நாட்டின் சில பகுதிகளை தாக்கியுள்ள கொடிய வெள்ளம் ஒரு "பேரழிவு" என்று கூறினார். "இங்கே வாஷிங்டனில், எனது எண்ணங்கள் எப்போதுமே நம் தாயகத்தில்தான் இருக்கின்றன" என்று மேர்க்கெல் வியாழக்கிழமை ஒரு செய்தி மாநாட்டில் ஜனாதிபதி ஜோ பிடனுடனான சந்திப்புக்கு முன்னதாக கூறினார். "இந்த மணிநேரங்களில் அமைதியான இடங்கள் ஒரு பேரழிவைச் சந்திக்கின்றன, ஒரு சோகம் என்று ஒருவர் கூறலாம். கடுமையான மழை மற்றும் வெள்ளம் இதை விவரிக்க மிகவும் போதாத சொற்கள் - எனவே இது உண்மையில் ஒரு பேரழிவு." வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு மற்றும் உடனடி பதிலளிப்பதில் கவனம் செலுத்துவதாக மேர்க்கெல் கூறினார், ஆனால் மீட்புக்கு உதவ நீண்டகால நிதி உதவிக்கான ஒரு மூலோபாயத்தில் பணியாற்ற தனது நாட்டின் நிதியமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். .
"இந்த பேரழிவில் உயிர் இழந்தவர்களுக்காக நான் துக்கப்படுகிறேன் - இந்த எண்கள் எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, ஆனால் பலர் இருப்பார்கள்" என்று அவர் மேலும் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மேர்க்கலின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சீபர்ட் இரங்கல் தெரிவித்தார். "வெள்ளப் பகுதிகளில் ஏராளமான மக்கள் தாங்க வேண்டிய பேரழிவால் நான் அதிர்ச்சியடைகிறேன். இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள் தெரிவிக்கின்றன" என்று சீபர்ட் ட்விட்டரில் எழுதினார்.

https://www.cnn.com/2021/07/15/europe/germany-deaths-severe-flooding-intl/index.html

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, goshan_che said:

உறவுகள் நலமா?

 

8 hours ago, ஈழப்பிரியன் said:

ஜேர்மனி உறவுகள் எல்லோரும் நலமோ?

 

 

 

எமது பகுதியில்.... தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.
வடக்கு ஜேர்மனியில்... 59 பேர் அளவில், இறப்பு பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஆனால்... பலரை காணவில்லை. அது கவலையான செய்தி.

ஒரு நாளில், ஒரு சதுர மீற்றருக்கு... 20 லீற்றர் மழை பெய்தமையால், 
இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

Edited by தமிழ் சிறி
 • Like 1
 • Thanks 1
 • Sad 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, நிழலி said:

ஒரு நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளார்களா....😢

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி? சுவி அண்ணாவும் அங்கு தானே?

இங்கும் ஒன்ராரியோவில் இன்று கன மழை. Tornado ஒன்று வந்து Barrie என்ற ஊரில் பல வீடுகளையும் வாகனங்களை யும் கடுமையாக சேதப்படுத்தி சென்றுள்ளது. Flash flood தாழ்ந்த பகுதிகளில் இங்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.

சுவி அண்ணா பிரான்ஸ் என நினைகிறேன்.

குசா அண்ணையுடன்,  சாந்தி அக்காவுடன், ஏனையவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் விசாரித்தால் நல்லம்.

6 hours ago, புங்கையூரன் said:

மிகவும் கவனமாக இருக்க வேண்டும், கோஷான்!

அனேகமாக விடுமுறை காலங்களில்  காட்டுப் பகுதிகளில் தான் முகாமிடுவது வழக்கம்!

ஒரு முறை இவ்வாறு சென்ற போது...எனது குடும்பமும்....இரண்டு நாய்களுமாக ஒரு காட்டருவியின் வழித் தடத்தில் நடந்து கொண்டிருந்தோம்! காட்டில் நிறைய மரங்களும் பற்றைகளும் நிறைந்திருப்பதால், அனேகமாக நெருப்பணைக்கும் படையினருக்காக அமைக்கப் பட்ட வழித்தடத்தில் அல்லது  காய்ந்து போய்க் கிடக்கும் காட்டருவியின் வழித்தடத்தில் நடப்பதே அனேகரின் வழக்கம்!

இவ்வாறு ஒரு முறை செல்கையில்...பாரிய சத்தமொன்று தூரத்தில் கேட்டது!நாங்கள் ஒன்றும் புரியாமல், வழித்தடத்தை விட்டு மேலே ஏறியதும்  வெள்ளம் அதி வேகமாகப் பாறைகளை உருட்டிய படியே பாய்ந்து வந்தது!

இந்தச் சம்பவத்தின் பின்னர்  வலு கவனம்!

ஓம் ஒரு கண நேரத்தில் எல்லாம் மாறி விடும்.

Edited by goshan_che
 • Thanks 1
Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

 

குசா அண்ணையுடன்,  சாந்தி அக்காவுடன், ஏனையவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் விசாரித்தால் நல்லம்.

 

சாந்தியுடன் சற்று முன்னர் கதைத்தேன். ஒரு சிறு ஆபத்தில் இருந்து தப்பி இப்போது நலமாக இருக்கின்றார். அவரது இடத்தில் இரண்டு நாட்கள்  தடைப்பட்டு இருந்த மின்சாரம் இன்று தான் சரியாகியுள்ளது. 

கு.சா அண்ணர் இருக்கும் பகுதியும் பாதிக்கப்பட்ட பகுதி என சொன்னார்.றைன் நதி மழையால் பெருக்கெடுத்தமையே பெரும் அனர்த்தத்தின் காரணம் என்றார்

 • Like 2
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

சாந்தியுடன் சற்று முன்னர் கதைத்தேன். ஒரு சிறு ஆபத்தில் இருந்து தப்பி இப்போது நலமாக இருக்கின்றார். அவரது இடத்தில் இரண்டு நாட்கள்  தடைப்பட்டு இருந்த மின்சாரம் இன்று தான் சரியாகியுள்ளது. 

கு.சா அண்ணர் இருக்கும் பகுதியும் பாதிக்கப்பட்ட பகுதி என சொன்னார்.றைன் நதி மழையால் பெருக்கெடுத்தமையே பெரும் அனர்த்தத்தின் காரணம் என்றார்

சாந்தி அக்கா சுகம் என அறிந்தது சந்தோசம். நானும் எழுதும் போது யோசித்தேன். அவவின் கட்டுரை ஒன்றில் ரைன் நதியை ரயிலில் கடப்பது போல வரும். வீணாக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று எழுதவில்லை. 

கு. சா அண்ணையுடன் தொடர்பில் யாரும் உள்ளார்களா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி?

 

10 minutes ago, goshan_che said:

கு. சா அண்ணையுடன் தொடர்பில் யாரும் உள்ளார்களா?

குமாரசாமி அண்ணைக்கு... தற்போது தொலைபேசி எடுத்து பார்த்தேன்.
மணி அடிக்கின்றதே தவிர, பதில் வரவில்லை.

நேற்று பிற்பகல், மூன்று மணியளவில் (இதே நேரம்) ஒரு நகைச்சுவை காணொளி அனுப்பியிருந்தார்.

இந்த வெள்ளம்...  கண நேரத்தில், 
தாம் சுதாகரிக்க முன்னம்... பாய்ந்து வந்தது என்று, 
பாதிக்கப் பட்டவர்கள்... தொலைக் காட்சியில் தெரிவிக்கின்றார்கள்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

32 minutes ago, தமிழ் சிறி said:

 

நேற்று பிற்பகல், மூன்று மணியளவில் (இதே நேரம்) ஒரு நகைச்சுவை காணொளி அனுப்பியிருந்தார்.

 

 

அப்ப ரண களத்திலும் மனிதர் கிளுகிளுப்பாகத்தான் இருக்கின்றார்.😃

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி? சுவி அண்ணாவும் அங்கு தானே?

யாரு... ஒல்லி கட்டிக்கொண்டு கிணத்துக்கிள பாஞ்சு நீந்தப் பழகின ஆள்... 😁

சும்மா, மீன் மாதிரி நீந்திக் கொண்டு வந்துடுவார். 👌

உங்கை லண்டனிலை சரியான கோடை வெயில் அடிக்குது... 

பியரோடே, தல சந்திப்புக்கு போகப்போறன்... 😜

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு யேர்மனியின் பகுதி.

Reinland-Germany1.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் வாழ் உறவுகள்.. ஒவ்வொருத்தரா வந்து சைன் வைத்துட்டு போனால் நன்று... அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.👋

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, நிழலி said:

அப்ப ரண களத்திலும் மனிதர் கிளுகிளுப்பாகத்தான் இருக்கின்றார்.😃

அந்தாளின்ரை... சுபாவமே அப்படித்தானே, நிழலி. :)
அதனால்... நாம், எல்லோரும்... அவரை விரும்புகின்றோம். 💓

 (கையோடை... அவரின் திண்ணை தடையை எடுத்து விடுங்களேன்.)  🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கும் சுகங்களை  அறியத்தந்தமைக்கும் நன்றி உறவுகளே

குமாரசாமியண்ணையின் சுகங்கள் அறிய  ஆவல்

சுவி அண்ணை பரிசில் நிற்பதாக சொன்னார்

எனவே  கவலைப்பட ஏதுமில்லை

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாரு... ஒல்லி கட்டிக்கொண்டு கிணத்துக்கிள பாஞ்சு நீந்தப் பழகின ஆள்... 😁

சும்மா, மீன் மாதிரி நீந்திக் கொண்டு வந்துடுவார். 👌

உங்கை லண்டனிலை சரியான கோடை வெயில் அடிக்குது... 

பியரோடே, தல சந்திப்புக்கு போகப்போறன்... 😜

நாதம்ஸ்.... 
இங்கு, வெள்ளம் வந்த இடத்திலும்... 
சென்ற கிழமை,  பயங்கர வெய்யில் அடித்தது.
சனம் எல்லாம்.. சந்தோசப்பட,  இப்படி நடந்து விட்டது.

இந்த... வெள்ளம் வரப் போகுது என்று... ஏன் அறிவிக்கவில்லை என்று,
அறிவிப்பாளர் கேட்ட கேள்விக்கு.... 

கால நிலை அறிவிப்பாளர்,  தெரிவிக்கும் கருத்துக்களின் படி...
பூமியின் மேல் ....10 கிலோ மீற்றருக்கு மேல் பறக்கும், நவீன  விமானங்கள்... 
மேக மூட்டத்தை.. கலைத்து விடுவதால், அதற்குரிய சரியான முன்னறிவித்தல்களை...
கணித்து.. சொல்வது, கடினம் என்று சொன்னார். 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நாளை  செவ்வாய் (19 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 5)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்     SCO  vs   PNG   எல்லோருமே  ஸ்கொட்லாந்து வெல்வதாகக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா  அல்லது முட்டையா  என்று பொறுத்திருந்து பார்ப்போம்      6)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட்      OMA  vs  BAN   எல்லோருமே பங்களாதேஷ் வெல்வதாகக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா   அல்லது முட்டையா  என்று பொறுத்திருந்து பார்ப்போம் 
  • கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை  நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது என முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.     திங்கட்கிழமை ( 18 ) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  எங்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் குரல் கொடுப்பேன். வடக்கு மீனவர்கள் பிரச்சனை என்பது பெரும் பிரச்சனை அவர்கள் ஏற்கனவே துன்பத்தை சந்தித்தவர்கள் யுத்தத்தை நாம் விரும்பவில்லை யுத்தத்தை செய்தவர்களிடம் தர்க்க ரீதியிலான கருத்து இருந்தது. வடக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு  உள்ள தடையை அகற்ற வேண்டும். இந்திய மீனவர்கள் 30 வருடகாலமாக இலங்கை கடல்வளத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவில் தற்போது இலங்கை வளத்தை பயன்படுத்திய  ஓர் தலைமுறையே உருவாகி விட்டது. இந்தியாவில்கூட  மாநிலம் மாறி வேறு மாநிலத்தில் மீன்பிடிக்க முடியாத நிலையில் இலங்கை எல்லைக்குள் வருவதும்  பிரச்சினைக்குரிய விடயம். இதற்கு இலங்கை மீனவர்களிற்கு பாரிய கப்பல்களை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். கடற்றொழில் அமைச்சராக டக்ளசை நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது. இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ டக்ளஸிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது. இதனை வெறும் மீனவர்கள் பிரச்சனையாக மட்டும் அல்ல தமிழர்களின் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என அரசியல் தலைவர்களை கோர விரும்புகிறேன் என்றார். கடற்றொழில் அமைச்சராக டக்ளஸை நியமித்ததில் சதி உள்ளது - மனோ கணேசன்  | Virakesari.lk
  • “ போதி மரம்”  காலமை எழும்பி கடனை முடிக்க கிணத்தடிக்குப் போனா ,அடுப்புச் சாம்பலையும் கரியையும் கலந்து தும்பால இயத்துக்களை மினுக்கின படி “ கொஞ்சம் தண்ணி அள்ளித்தாவான்” எண்டு அம்மம்மா கேட்டா . மனிசிக்கு விடியல் கிணத்தடீல தான். அள்ளிக்குடுத்திட்டு் நானும் ,கடனை வைக்காமல் முடிக்க வேண்டும் இல்லாட்டி துன்பம் தான் எண்ட படியாத்தான் காலைக கடன் எண்டு சொல்லிறவங்களோ ? எண்டு யோச்சபடி வாளியோட நடந்தன் ,கடனை அடைக்க. ஒவ்வொருத்தனுக்கும் கிணத்தடியும் கக்கூசும் கூட போதி மரங்கள் தான் ஏனெண்டால் இங்க தான் கன பேருக்கு தத்துவம் பிறக்கிறது. ஓட்டைக்கிணத்து வாளீல தண்ணி அள்ளி ஒழுகிற கக்கூஸ் வாளீக்குள்ள விட்டிட்டு போய் குந்தி இருந்து போட்டு ,எட்டிப்பாக்க தண்ணி இல்லை எண்டேக்க தான் எனக்கு விளங்கிச்சு காதறுந்த ஊசியும் ஓட்டை கக்கூஸ் வாளியும் கடைசிவரை உதவாது எண்டு. வாளீன்டை ஓட்டையை அடைக்க பிலாக்காய்பால்ல இருந்து தார் வரை try பண்ணி கடைசீல புது வாளி வாங்கிக் கொண்டு வர கக்குசுக்கா? எண்ட கேள்வி வந்திச்சுது. ஓட்டைக் கிணத்து வாளி இடம் மாறி கழுவிறதுக்குப் போக புதிசு கப்பீல தொங்கிச்சுது. இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே எண்ட கிணத்தடி ஞானம் அப்ப பிறந்திச்சு. “என்ன கிணத்துக்கட்டில பிள்ளைய வளத்தின மாதிரி பறக்கிறாய் “ எண்டு அம்மா நான் அந்தரப்பட்டா பேசவா . அப்ப ஒருக்கா படுத்தால் என்ன எண்டு யோசிச்சன். படுத்தும் பாத்தன் ஆனாலும் பயமாய் இருந்திச்சு. பரிணாம வளர்ச்சியில் கிணறும் விடுபடேல்லை . வட்டக்கிணறு அதன் விட்டத்தில இருவது வீதம் இழந்து முக்கால் வட்டம் ஆனது. கல்லு மட்டும் அடுக்கின கிணத்துச்சுவர் , சீமெந்து பூசிக்கல்லு வைச்சு ஒரடி அகலமான கிணத்துக்கட்டானது அதோட நிலமட்டத்திலிருந்து உயரவும் தொடங்கியது . கைவாளி மறைஞ்சு துலா, கப்பி ஆனது. சீவின பூவரசந்தடீல கட்டின வாளி கையை நோகப்பண்ண கயிறு, chain எண்டு வந்தது.  கிணத்தடி எண்டது வெறும் தண்ணி இருக்கிற இடம் மட்டுமில்லை அதையும் தாண்டி விசேசமானது . தண்ணி இருக்கிற கிணத்துக்கு, தண்ணி அள்ள கப்பி இல்லாட்டி துலா கட்டி, கைப்பற்றப்பட்ட இருவது வீதத்தில அள்ளிற பக்கம் குளிக்கிறதுக்கு தோய்க்கிறதுக்கு சீமெந்து நிலம் வைச்சு, மழைகாலம் நிலம் வழுக்காம இருக்க சிப்பியை கவிட்டு ஒட்டி வைச்சு, அதோட சேந்த உடுப்புத்தோய்க்கிற கல்லும் பக்கத்தில ஒரு தொட்டியும் கட்டி, குளிக்கிற தண்ணி ஒடிற வாய்க்காலோட வாழை வைச்சு, கிணத்துக்கு கிட்ட ஒரு இளநி மரம் நட்டு , கிணத்துக்க இலையக்கொட்டிறத்துக்கு வேலியோட ஒரு வாதநாராயணி இல்லாட்டி பூவரசு இருக்க, அதில உடுப்பு போடுற கொடி கட்டி, இருந்தாத் தான் கிணத்தடி இல்லாட்டி அது வெறும் கிணறு.  தேவைக்கு வாழையிலை வெட்டப் போறதும் கிணத்தடி தான். இருட்டுப் பயத்தில மூத்தா போறதும் கிணத்தடி தான் . வீட்டை சண்டை பிடிச்சிட்டு அம்மாவை வெருட்ட இயக்கத்துக்குப் போயிடுவன் எண்டு சொல்லிற காலத்திக்கு முதல் கிணத்தடீல போய் தான் இருக்கிறது. கிணத்தடி பூதத்தை நம்பி இடம் பெயர்வுகளில பயத்தில நகை தாலி புதைச்சு வைச்சதும் கிணத்தடி தான்.  ஒவ்வொரு ஒழுங்கையிலும் எந்தக் கோடைக்கும் வத்தாத ஒரு வீட்டுக் கிணறு இருக்கும் .அதே போல் நல்ல தண்ணிக் கிணறும் ஒண்டும் இருக்கும். இந்தக்கிணறுகளும் ஒரு பொதுச் சொத்துதான் . பலர் குடிக்கவும் சிலர் குளிக்கவும் போறவை . இப்பிடி தண்ணி அள்ள ஆற்றேம் வீட்டை போகேக்க கிணத்தடீல சண்டையிருக்காது ஆனால் அரட்டை அரங்கம் இருக்கும் .  வேலைக்குப் போட்டு வந்த அப்பாட்டை இல்லாட்டி செத்த வீட்டுக்கு போய் வந்த அம்மாட்டை கிணத்தடீல இருந்து அவை தோஞ்சு கொண்டிருக்கேக்க விடுப்புக் கேக்கிறதும் நடக்கிறது . கிணத்தையும் ஒரு சாமி அறை மாதிரித்தான் சுத்தம் பத்தமா பாவிக்கிறது. செத்தவீட்டுக்கு போய் வந்தா , தலைமயிர் வெட்டீட்டு வந்தா இல்லாட்டி பொம்பிளைகளை அந்த மூண்டு நாளும் அள்ள விட மாட்டினம். விளக்கீட்டில ஒரு பந்தம் வைக்கிறதில இருந்து ஐயர் தாற தீத்தம் கொண்டே ஊத்திற வரை அதுக்கு ஒரு மரியாதை இருந்தது.  தண்ணி அள்ள கிராமப் பக்கம் தான் கைப்பட்டை இல்லாட்டி துலா இருந்தது . நாலு மரம் நட்டு குறுக்கு மரம் போட்டு சரி பண்ணி துலா கட்டிறது . நட்ட பூவரசங்குத்தி முளைச்சு சிலவேளை மரமாயும் வளந்திடும். வைரமான பனை மரத்தை சீவி ரெண்டாப்பிளந்து நடுவில இருக்கிற சோத்தியை கோதி எடுத்து , ரெண்டையும் சேத்து கட்டை இறுக்கி ,அடிபருத்தும் நுனி சிறுத்தும் இருக்க செய்யிற துலாவில சரியான இடம் பாத்து , வீட்டில வைக்கிற ஓட்டைக்கல்லு மாதிரி செவ்வக ஓட்டை வைச்சு குறுக்கு மரம் போட்டு துலாவை ஏத்தி விட அது காலத்துக்கும் இருக்கும். தென்னை எண்டால் அப்பிடியே சீவி வைக்ககலாம் , பத்து வருசத்திக்கு அசையாம இருக்கும். துலாவின்டை அடியில கட்டிற கல்லு டங்கு டங்கு எண்ட அடிக்க சத்தம் வரும் எண்டதால ரயரையும் சேத்துக்கட்டிறதும் வழக்கம் .  ஆனால் town பக்கம் கப்பி தான் கூட. கப்பிக்கு electricity board ல ஆரும் தெரிஞ்சவை இருந்தா high voltage வயர் இழுக்கிற மாபிள் கப்பி கள்ளமா எடுத்துப் பூட்டிறது இல்லாட்டி இரும்புக் கப்பிதான். கப்பிக்கயித்துக்கு மொத்தமான இளைக்கயிறு தான் நல்லம். நைலோன் கட்டினால் வாளி முடிச்சு நிக்காது அடிக்கடி வாளி கழண்டு கிணத்துக்க விழுந்திடும் ,ஆனாலும் அள்ளேக்க வாளிய உள்ள விட ஈசியா வழுக்கிக்ககொண்டு போகும் . தண்ணி அள்ளிறதுக்கு வாளியை தூக்கி கிணத்துக்க போடேக்க கப்பியின்டை தவாளிப்பிக்கால சிலவேளை கயிறு வெளீல பாஞ்சிடும் . கயித்தை எத்தி எத்தி அதை திருப்பி உள்ள போடுறதுகஸ்டம் . அதுகும் அள்ளிற சுகத்துக்கு முடிச்சுப் போட்ட நைலோன் கயிறெண்டால் சரி அவ்வளவு தான் . உயரம் காணாத வயசில அதை திருப்பிப்போட கிணத்துக் கட்டில ஏறித் துள்ள அப்பிடியே கயித்தோட கிணத்துக்க விழுந்து அம்மாவுக்கு தெரியாம ஏறி வந்ததும் நடந்தது.  பள்ளிக்குடத்தில வயல் கிணதுக்க குதிச்சு தான் நீந்தப் பழகினது எண்டு ஆரும் சொன்னதை கேட்டு உசுப்பாகி நானும் நீந்தப் போறன் எண்டு நல்லவேளை ஒரு நாளும் குதிக்கேல்லை. ஆனாலும் கள்ளமா கிணத்துக்க இறங்கினது நடந்தது. மழை காலத்தில நிரம்பிறதை எட்டிப் பாக்கிறது சந்தோசம் , தண்ணியும் நிறம் மாறி மஞ்சள் நிறமாக இருக்கும். கையால அள்ளிக் குளிக்கலாம் எண்டு பாத்துக்கொண்டிருக்க தண்ணி வத்தத்தொடங்கீடும்.  வீட்டுக்ககிணறு தான் இப்பிடி இறைக்கிறது ஆனால் தோட்டத்திக்கு் தண்ணி ஊர்வழிய சூத்திரத்தில மாடுகள் கட்டி , பட்டையில தான் இறைக்கிறது. வைரமாளிகை நாகலிங்கம் போடிற பனைமட்டை தொப்பியக் கவிட்டு விட்ட மாதிரித்தான் பட்டை இருக்கும். பனையோலையில கட்டிற பட்டை ஒழுகாம காலத்துக்கும் இருக்கும். பட்டையின்டை மூலைக்கு சாக்கு இல்லாட்டி பழைய ரயர் கட்டினால் அடி பட்டாலும் பிய்யாது. தோட்டத்திக்கு தண்ணி இறைக்க துலா மிதிக்கிறதும் இருந்தது , என்ன ரெண்டு பேர் தேவை . ஆனால் சூத்திர மாடு பழக்கி விட்டா ஆள் இல்லாமலே சுத்தும் தண்ணியும் இறைபடும் . தகரம் வைச்சு செய்யிற இரும்புப்பட்டையும் இருந்தது. அடீல ரெண்டு தட்டு வாளி போய் மடார் எண்டு தண்ணீல முட்ட திறக்கும். உள்ள தண்ணீர் நிரம்பினாப்பிறகு மேல வர தண்ணிப்பாரத்திக்கு தட்டு மூடும். சரியா ஒண்டு தண்ணியை கவிட்டுக் கொட்ட மற்றது கோலும். ஏன் இதுக்கு சூத்திரம் எண்டு பேர் வந்தது எண்டு அறிய வெளிக்கிட்டு; மாட்டை கட்டிற கயித்தின்டைநீளம் , அது சுத்திற வட்டத்தின்டை ஆரை , மாடு சுத்திற speed துலாவின்டை நீளம் , அதில் தொங்கிற கயித்திண்டை நீளம் , பட்டையின்டை அகலம் , தட்டின்டை ஓட்டை அளவு மாட்டு வாலின்டை நீளம், எண்டு எல்லா Data வும் computer ல feed பண்ண அது Google application form ஒண்டைத்தருது NASA க்கு வரச்சொல்லி அந்த சூத்திரம் (equation )என்ன எண்டு என்னைக்கேட்டு 🤔.  இறைக்க இறைக்க வத்தாத அறிவு மாதிரி NASA காரனுக்கே விளங்காத அறிவைத் தந்த அந்த கிணத்தடி போதிமரம் இப்ப புத்தர் எல்லாம் Bathroom வழிய குளிக்கிற படியால் வெறுமையானது . ஆனாலும் அழிந்த அந்த அவதாரம் மீண்டும் திருப்பி வரும் எண்ட நம்பிக்கையில் காத்திருக்கத் தொடங்கியது .   Dr.T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
  • இன்றைய இரண்டாவது போட்டியில் நமீபியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களை எடுத்தது.  பதிலுக்கு துடுப்பாடிய சிறிலங்கா அணி 3 விக்கெட் இழப்புடன்  100 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 மறுத்தான் 8 2 நந்தன் 8 3 முதல்வன் 6 4 சுவி 6 5 வாத்தியார் 6 6 ஏராளன் 6 7 ஈழப்பிரியன் 6 8 கோஷான் சே 6 9 வாதவூரான் 6 10 சுவைப்பிரியன் 6 11 எப்போதும் தமிழன் 6 12 கறுப்பி 6 13 ரதி 6 14 அஹஸ்தியன் 6 15 பிரபா சிதம்பரநாதன் 6 16 பையன்26 4 17 கிருபன் 4 18 நுணாவிலான் 4 19 நீர்வேலியான் 4 20 குமாரசாமி 4 21 தமிழ் சிறி 4 22 கல்யாணி 4   எல்லோரும் சிறிலங்கா வெல்லும் எனக் கணித்ததால் நிலைகளில் மாற்றம் இல்லை.
  • சாவகசேரியில் ஊத்துன  கழிவோயிலை  மாறி பார்த்துவிட்டான்கள்  போல் உள்ளது .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.