Jump to content

கிளிநொச்சியில்... ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு

கிளிநொச்சியில்... ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு

கிளிநொச்சியில் ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் நிதிப் பங்களிப்பில், நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால்  உருவாக்கப்பட்ட ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையம் நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இயக்கி’ உணவு விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்த உணவகத்தில் பாரம்பரிய உணவுகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்,  பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

44-1.jpg

https://athavannews.com/2021/1228893

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தமிழன்டா என்று சொல்லுறார் ....நல்ல விடயம் ....இதை பார்த்தவுடன் ஒரு காலத்தில் வன்னியில் இருந்த கடைகள் நினைவில் வருகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நானும் தமிழன்டா என்று சொல்லுறார் ....நல்ல விடயம் ....இதை பார்த்தவுடன் ஒரு காலத்தில் வன்னியில் இருந்த கடைகள் நினைவில் வருகிறது

நான் அந்த உணவகங்களில் சாப்பிட்டிருக்கிறேன். போராளிகளும் என்னுடன் சாப்பிடுவார்கள். ஆனால் ஒருபோதும் அவர்களது உணவுக்கான பணத்தை நான் கொடுக்க அனுமதிக்கவில்லை. கண்டிப்பான உத்தரவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேறுவகையான இயங்கியலுக்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கிறோம் என்பது வெளிப்படை.
 கடந்த கால அனுபவங்கள்இ  படித்த பாடங்கள் எங்களை வழிநடத்தட்டும்.
 சரியான தலைமைத்துவம் ஒன்று காலப் போக்கில் உருவாகி,  விட்ட குறை தொட்ட  குறையை தீர்த்து வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை உண்டு.
 அதுவரை தனிப்பட்டவர்களை தன்னிறைவடையச் செய்யும் செயல்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதே இப்போதைக்கு உள்ள தெரிவு  ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, சாமானியன் said:

நல்ல விடயம் ....தனித்தமிழன் தன்னிறைவடையும் பொழுது சிங்களம் வடபிராந்தியத்தில் பொதுநிறைவடைந்திருக்கும்....அதுதான் நியதி என்றால் யாராலும்தடுக்க முடியாது....

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

நான் அந்த உணவகங்களில் சாப்பிட்டிருக்கிறேன். போராளிகளும் என்னுடன் சாப்பிடுவார்கள். ஆனால் ஒருபோதும் அவர்களது உணவுக்கான பணத்தை நான் கொடுக்க அனுமதிக்கவில்லை. கண்டிப்பான உத்தரவு. 

என் அனுபவத்திலும் நான் கண்ட உண்மை. ஆனால் உத்தரவல்ல மீறமுடியாத, மனநெகிழ்வான, தயவான வேண்டுதல். 😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Paanch said:

என் அனுபவத்திலும் நான் கண்ட உண்மை. ஆனால் உத்தரவல்ல மீறமுடியாத, மனநெகிழ்வான, தயவான வேண்டுதல். 😌

ஏற்றுக்கொள்கின்றேன்  அண்ணா

அது  தலைமைவரை தெரிந்திருந்தது

புலம் பெயர்  தமிழரிடம் எதையும்  பெற்றுக்கொள்ள கூடாது என்பது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சாமானியன் said:

ஒரு வேறுவகையான இயங்கியலுக்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கிறோம் என்பது வெளிப்படை.
 கடந்த கால அனுபவங்கள்இ  படித்த பாடங்கள் எங்களை வழிநடத்தட்டும்.
 சரியான தலைமைத்துவம் ஒன்று காலப் போக்கில் உருவாகி,  விட்ட குறை தொட்ட  குறையை தீர்த்து வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை உண்டு.
 அதுவரை தனிப்பட்டவர்களை தன்னிறைவடையச் செய்யும் செயல்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதே இப்போதைக்கு உள்ள தெரிவு  ......

இது தான் நிஜம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

நான் அந்த உணவகங்களில் சாப்பிட்டிருக்கிறேன். போராளிகளும் என்னுடன் சாப்பிடுவார்கள். ஆனால் ஒருபோதும் அவர்களது உணவுக்கான பணத்தை நான் கொடுக்க அனுமதிக்கவில்லை. கண்டிப்பான உத்தரவு. 

புலம் பெயர்ந்தோர் செலவில் போராளிகள் தனிய வாங்கி சாப்பிடக் கூடாது ...மொத்த அனுப்பினால் தலைவர் வாங்கி சாப்பாடு போடுவார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

புலம் பெயர்ந்தோர் செலவில் போராளிகள் தனிய வாங்கி சாப்பிடக் கூடாது ...மொத்த அனுப்பினால் தலைவர் வாங்கி சாப்பாடு போடுவார் 

வணக்கம் சகோதரி

நன்றி மீள் வருகைக்கு.

முறைகேடுகள் நடக்காதிருக்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

வணக்கம் சகோதரி

நன்றி மீள் வருகைக்கு.

முறைகேடுகள் நடக்காதிருக்க...

நன்றி அண்ணா.
அது தெரியும் அண்ணா. ஆனாலும் ஒரு கேள்வி அவரது குடும்பத்திற்கு என்று அவரது மனைவியின் உறவினர்களால் வெளி நாட்டில் இருந்து அனுப்பப்பட்டதை அவர் வாங்கமலா:unsure: இருந்தார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

நன்றி அண்ணா.
அது தெரியும் அண்ணா. ஆனாலும் ஒரு கேள்வி அவரது குடும்பத்திற்கு என்று அவரது மனைவியின் உறவினர்களால் வெளி நாட்டில் இருந்து அனுப்பப்பட்டதை அவர் வாங்கமலா:unsure: இருந்தார் 

தெரியவில்லை சகோதரி.

அது அவருடைய குடும்ப விவகாரம்.

நீங்கள் ஒருமுறை என்னை லா சப்பலில் சந்தித்தால் நான் ஏன் சாப்பாட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி எழுதினேன் என்று தெரியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:
13 hours ago, சாமானியன் said:

அதுவரை தனிப்பட்டவர்களை தன்னிறைவடையச் செய்யும் செயல்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதே இப்போதைக்கு உள்ள தெரிவு  ......

இது தான் நிஜம்.

நீங்கள் சிவப்பில் அடையாளபடுத்திய சாமானியனின் நிஜ கருத்தே என்னை கவர்ந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் நிதிப் பங்களிப்பில்,

உணவுக்கடையை விட தமிழன் வேறு தொழிலில் அபிவிருத்தி யடைய முடியாதோ...
புலம்பெயர்ந்து  வந்தவனும் மூலைக்கு மூலை கடை போட்டு வியாபாரம் பண்ணுகிறான் ...அது (அவனது தனிப்பட்ட முயற்சி )

ராஜாங்க அமைச்சர், அதுவும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்திலிருந்து சாப்பாட்டு கடை தான் போட்டு தன்னிறைவடைய வைக்கலாம் என்றால் .....

இதுவும் "சிவப்பு சிந்தனை புரட்சிகர "கொள்கையோ தெரியவில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/7/2021 at 02:55, putthan said:

உணவுக்கடையை விட தமிழன் வேறு தொழிலில் அபிவிருத்தி யடைய முடியாதோ...
புலம்பெயர்ந்து  வந்தவனும் மூலைக்கு மூலை கடை போட்டு வியாபாரம் பண்ணுகிறான் ...அது (அவனது தனிப்பட்ட முயற்சி )

ராஜாங்க அமைச்சர், அதுவும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்திலிருந்து சாப்பாட்டு கடை தான் போட்டு தன்னிறைவடைய வைக்கலாம் என்றால் .....

இதுவும் "சிவப்பு சிந்தனை புரட்சிகர "கொள்கையோ தெரியவில்லை...

நலிவடைந்த பெண்கள் குடும்ப நிலை ஓரளவேனும் நிமிரட்டும் இப்படி பல அங்காடிகள் முளைத்து காணாமல் போகின்றன வியாபாரம் இன்மையாலும் புது வகையான கடைகள் வந்ததாலும் உதாரணத்துக்கு மட்டக்களப்பில் KFC கடை திறந்தார்கள் குடும்பம் குடும்பமாக போய் செல்பி எடுத்து ஆனந்தமடைந்தார்கள் ஆனால் அங்கிருக்கும் பெண்கள் நடத்தும் கடைகள் இலைக்கஞ்சிகள் அப்படியே ஊற்றி வைத்தால் போலவே  இருக்கின்றன . மனிதரில் ஏற்படும் மாற்றங்களில் கடந்து செல்பவை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.