Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகவுள்ள ஓலா மின்சார இருசக்கர வாகனம்: என்ன முக்கியத்துவம்?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகவுள்ள ஓலா மின்சார இருசக்கர வாகனம்: என்ன முக்கியத்துவம்?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
ஓலாவின் மின்சார வாகன தொழிற்சாலை: முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,OLA

இந்தியாவின் முன்னணி வாடகை வாகன சேவை நிறுவனமான ஓலா, தனது மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பதற்கான முன்பதிவைத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அமைந்து வரும் உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகனத் தொழிற்சாலையில் இதற்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதாக ஓலா தெரிவித்துள்ளது.

ரூ.499-க்கு மின்சார இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதால், இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வாகனத்தின் விலை தற்போது சந்தையில் விற்பனையாகும் மின்சார இருசக்கர வாகனங்களைவிட ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாக இருக்கும் என ஓலா நிறுவனம் கூறுகிறது. ஆனால் இதுவரை விலை குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.

 

எப்போது இந்த வாகனம் விற்பனைக்கு வரும் என்பது குறித்தும் ஓலா நிறுவனம் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. முன்பதிவு செய்தவர்கள் வாகனத்தைச் சோதனை ஓட்டம் செய்து பார்க்கும் வாய்ப்பும் இப்போது இல்லை.

கறுப்பு வண்ணத்திலான ஒரு வாகனத்தை ஓலா இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் ஓட்டிச் செல்வது போன்ற ஒரு காணொளியை அண்மையில் அவர் பதிவிட்டிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

எனினும் என்னென்ன வண்ணங்களில் இருசக்கர வாகனம் தயாரிக்கப்படுகிறது, என்னென்ன வசதிகள் இருக்கப் போகின்றன என்பவை உள்ளிட்ட விவரங்களை ஓலா அறிவிக்கவில்லை.

இவை அனைத்தும் விரைவில் வெளியாகும் என தனது இணையத்தளத்தில் ஓலா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தனது விற்பனை நடவடிக்கையைத் தொடங்கியுள்ள ஓலா நிறுவனம், முன்பதிவுப் பணத்தைத் திரும்பப் பெறும் வசதியையும் வழங்கியுள்ளது.

ஓலா தொழிற்சாலையின் முக்கியத்துவம் என்ன?

ஓலாவின் மின்சார வாகன தொழிற்சாலை: முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,OLA

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்து வரும் தொழிற்சாலையில் ஆண்டொன்றுக்கு மின்சாரத்தில் இயங்கும் இரண்டு கோடி ஸ்கூட்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை தயாரிக்க உள்ளதாக அந்த நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக 2,400 கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுக்கும் ஓலா நிறுவனத்துக்கும் இடையே கடந்த டிசம்பர் மாதம் கையெழுத்தான நிலையில், கடந்த ஜனவரி மாதம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவுற்று, பிப்ரவரி மாதம் மாதம் முதல் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலையாக உருவெடுக்கவுள்ள இதன் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவுற்று, வாகன உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று ஓலா இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் அண்மையில் அறிவித்திருந்தார்.

அதன்படி நான்கே மாதங்களில் பணிகள் நிறைவுறும் நிலையை அடைந்திருப்பதாகவும் அவர் தனு சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடந்த ஜூன் 30-ஆம் தேதி சந்தித்த பவிஷ் அகர்வால் தொழிற்சாலைக் கட்டுமானப் பணி குறித்து விளக்கமளித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இதுதொடர்பாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு மற்றும் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய சிறப்பம்சங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

 • 2,400 கோடி ரூபாய் முதலீட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் கிருஷ்ணகிரியில் அமையும் உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலையான இதன் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • ஒரு கோடி மனித பணிநேரத்தில் அதிவேகமாக கட்டுமான பணிகளை மேற்கொண்டு, திட்டத்தின் முதல் அலகில் விரைவில் வாகன உற்பத்தியை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓலாவின் மின்சார வாகன தொழிற்சாலை: முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,OLA

 • சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கட்டப்படும் இந்த தொழிற்சாலையின் உட்பகுதியிலேயே சுமார் இரண்டு ஏக்கர் அளவில் காட்டை ஏற்படுத்தி, பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுதவிர தொழிற்சாலை வளாகத்தில் மொத்தம் 10 ஏக்கர் அளவுக்கு காடுகளை உருவாக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.
 • இங்கு உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கான மின்கலன் (பேட்டரி) இங்கயே தயாரிக்கப்படவுள்ளது.
 • தொழிற்சாலையின் ஒட்டுமொத்த கட்டுமான பணிகள் நிறைவுற்றவுடன் சராசரியாக இரண்டு நொடிக்கு ஒரு ஸ்கூட்டர் வீதம் உற்பத்தி செய்யப்படும்.
 • இதன் மூலம், உலகின் இருசக்கர வாகன உற்பத்தியில் 15 சதவீதத்தை இந்த ஒரே தொழிற்சாலையால் தயாரிக்க முடியும்.
 • இங்கு உற்பத்தி செய்யப்படும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இந்தியா மட்டுமின்றி ஐரோப்பா, பிரிட்டன் லத்தீன் அமெரிக்கா, ஆசியா - பசிபிக், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பிராந்தியங்கள் மற்றும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்பட உள்ளது.
ஓலாவின் மின்சார வாகன தொழிற்சாலை: முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,OLA

 • இந்தியாவின் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்ட தொழிற்சாலையாக அமைக்கப்படும் இங்கு வாகன வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சுமார் 3,000 ரோபாட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன.
 • இங்கு அடுத்த சில மாதங்களில் உற்பத்தி செய்யப்படவுள்ள இருசக்கர வாகனங்கள் மிகச் சிறந்த வடிவமைப்பு, கழற்றிக்கூடிய வகையிலான மின்கலன், நீடித்த உழைப்பு உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷோவில் ஐஎச்எஸ் மார்க்கிட் இன்னோவேஷன் விருது மற்றும் ஜெர்மன் டிசைன் அவார்ட் உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளது.

https://www.bbc.com/tamil/india-57859450

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • https://www.facebook.com/profile.php?id=100073156405565 சேரமானின் ஆவி வல்ல முனி என்னும் பெயரில்  மீண்டும் வருகிறது .......😀
  • தமிழ்நாட்டில் தமிழர்க்கு மட்டுமே வேலை: ராமதாஸ் வலியுறுத்தல்! மின்னம்பலம்2021-10-20 தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், தேசிய மொழியான இந்தியை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்று கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதை சுட்டிக் காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(அக்டோபர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டில் உணவு வினியோகிக்கும் தனியார் நிறுவனத்தின் சேவை பிரதிநிதி ஒருவர் வாடிக்கையாளரிடம் பேசும் போது, இந்தி தேசிய மொழி என்பதால் அனைவரும் கொஞ்சமாவது இந்தி கற்றிருக்க வேண்டும் என்று கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் சேவை வழங்காதது மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் இந்தி மொழியை கற்றிருக்க வேண்டும் என்று அந்நிறுவன பிரதிநிதி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல... நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்று தான். அலுவல் மொழியாக இந்தி இருந்தாலும் கூட, பிற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. ஆனாலும் பல்வேறு வழிகளில் தமிழர்கள் மீது இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தனியார் உணவு வினியோக நிறுவனம் தான் இத்தகைய முயற்சியில் முதலில் ஈடுபட்டது என்று கூற முடியாது. வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ‘‘ இந்தியனாக இருந்து கொண்டு இந்தி பேசத் தெரியாதா?’’ என்ற அவமதிக்கும் வகையிலான கேலி வினாக்கள் தமிழர்களை நோக்கி எழுப்பப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. தமிழகத்தில் இந்தி தெரியாததால் தமிழர் ஒருவருக்கு வீட்டுக் கடன் மறுக்கப்பட்ட கொடுமையும் நடந்தது. இவை ஏற்க முடியாதவை. தமிழ்நாட்டில் இத்தகையக் கொடுமைகள் இனியும் நடக்கக்கூடாது என்பது தான் தமிழக மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். இந்த எதிர்பார்ப்புகளை தமிழக அரசு ஒரே ஒரு சட்டத்தின் மூலம் மிகவும் எளிதாக நிறைவேற்றி விட முடியும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்றுவதன் மூலம் இச்சிக்கலை தீர்க்க முடியும். ஆனால், அதைச் செய்ய தமிழ்நாடு அரசு தயங்குவதன் நோக்கம் தான் புரியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணி இடங்கள் தமிழர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்காக தனிச் சட்டம் இயற்றப் பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்தியப் பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளை முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலை கிடைப்பது மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் அனைத்து நிலைப் பணியாளர்களும் தமிழ் மொழியில் பேசுவர் என்பதால் இத்தகைய மொழிச் சிக்கல்களும், அதனால் ஏற்படும் சர்ச்சைகளும் தடுக்கப்படும். பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நிலைப்பாட்டை திமுகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்தால்,‘‘தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும்’’ என்று தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்றுவதன் மூலம் இத்தகைய சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும். அதேபோல், 100% அரசு வேலைவாய்ப்புகளும் தமிழர்களுக்கே கிடைக்க வகை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலை தவிர்த்த பிற பணிகள் முழுக்க முழுக்க தமிழர்களுக்கே வழங்கப்படுவதும், மத்திய அரசு அலுவலகங்களில் இடை நிலைப் பணிகளில் 50% இடங்கள் தமிழர்களுக்கே வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்கள் மொழி சார்ந்து அவமதிக்கப்படுவதற்கு முடிவு கட்டப்படும். எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் அரசு பணிகளில் 100 விழுக்காடும், தனியார் தொழில் மற்றும் சேவை வழங்கும் நிறுவனப் பணிகளில் 80 விழுக்காடும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப் படுவதை உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.   https://minnambalam.com/politics/2021/10/20/17/pmk-ramadoss-says-job-should-be-allocate-to-only-tamil-people
  • மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ மின்னம்பலம்2021-10-20 மதிமுகவின் தலைமை கழக செயலாளராக  அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துரை வைகோவை கட்சிக்குள் கொண்டுவரவேண்டும் அவருக்கு பதவி அளிக்க வேண்டும் என்று பலர் மதிமுகவில் வலியுறுத்தி வந்த நிலையில்,  ‘வாரிசு அரசியலை எதிர்த்தே திமுகவில் இருந்து வெளியே வந்த  தான், தனது கட்சியிலும் வாரிசை கொண்டுவருவதா என்ற விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும்’ என்று உண்மையிலேயே வைகோ அஞ்சினார். ஆனால் மாவட்டச் செயலாளர்களின் தொடர் வற்புறுத்தல்களை அடுத்து  இதுகுறித்து விவாதிக்க இன்று (அக்டோபர் 20)  மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் மாசெக்கள், அரசியல் ஆய்வு மையக் கூட்டத்தைக் கூட்டினார் வைகோ. இந்த கூட்டத்தின் முடிவில், ‘துரை வைகோ மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மதிமுகவின் சட்டப்படி இந்த பதவியில் அவரை நியமிக்க எனக்கு அதிகாரம் இருந்தாலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 106  பேர்களில் 104 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்” என்று அறிவித்தார் வைகோ. இன்று (அக்டோபர் 20) காலை 7 மணி பதிப்பில், துரை வைகோவுக்கு என்ன பதவி? இன்று மதிமுக மாசெக்கள் கூட்டம்  என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில்,  “இளைஞரணிச் செயலாளராக துரை வைகோவை நியமிக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். இளைஞரணி என்றால் அது கட்சியின் துணை அமைப்பாகிவிடும். எனவே ‘பேரன்ட் பாடி’எனப்படும் தலைமைக் கழகத்திலேயே புதிய பதவியை உருவாக்கி அதில் துரை வைகோவை அமர வைப்பது என்று சிலர் கூறுகிறார்கள். தலைமை நிலைய செயலாளர் போன்ற பதவி மதிமுகவில் உருவாக்கப்படலாம். அல்லது இப்போது இருக்கும் துணைப் பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் பதவிக்கு துரை வைகோ நியமிக்கப்படலாம்”என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படியே துரை வைகோ தலைமை கழக செயலாளராக இன்று மாலை அறிவிக்கப்பட்டிருக்கிறார்.   https://minnambalam.com/politics/2021/10/20/30/mdmk-head-quarters-Secretary-durai-vaiko-elected 
  • நாளைக்கு பையன் ஜேர்மன் தாத்தாவுடன் ஐக்கியமாகச் சாத்தியம் இருக்கு😂
  • சங்கீத கலா ரசிக மணிகள்......!   😂
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.