Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வெட்டுப்படையான கோடாரி பற்றியே. நான் இங்கு தமிழர்களின் கோடாரிகள் பற்றிய பல்வேறு தகவல்களை ஆய்வுசெய்திருப்பதோடு அவற்றின் வடிவங்களையும் கண்டறிந்து உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன்.

 


1)கைக்கோடாரி - சிறிய கோடாரி

main-qimg-69569ca243fec1328dbb3aef0b506859.png

'இது எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற படமாகும்'

main-qimg-118dc1193ba985bbe0a1e217ddc929e7.jpg

'இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் . | படிமப்புரவு: Blogger.com - Create a unique and beautiful blog. It’s easy and free. ''

  • சப்பைக் கோடாரி- தட்டையாய் அமைந்திருக்கும் ஒருவகை கைக்கோடாரி.

main-qimg-b12ca88c5da13f59c116462e46db6b1f.jpg

2) கோடாரி/ தாத்திரம் / தறிகை- ஒருகையாலே பயன்படுத்தலாம். வடிவம் படிமத்தில் இருப்பதுதான் !

இது ஒரு பொது படைக்கலம் தான். இது கமத்திற்கும் சமருக்குமென பயன்படுத்தப்பட்டது.

main-qimg-787d3f9e18dad8abfa4fa198f3cb11b6.jpg

'படிமப்புரவு: Home'

main-qimg-af602a19749aa28b9f32953ba1925f2c.png

'படிமப்புரவு: fb'

3)கொண்டைக் கோடாரி- அலகில் கொண்டை போல இருக்கும் கோடாரி. ஒரு கையாலே பயன்படுத்தும் சிறிய கோடாரி. இதுவும் ஒரு வகையான கைக்கோடாரியே.

main-qimg-8353a9d56dbcf512fe18320dcf762873.jpg

'படிமப்புரவு: கூகிள் | கோடாரி அமெரிக்க ஆதிவாசிகளினுடையது ஆகும். வடிவத்திற்கு மட்டும் கண்டுகொள்க. இவ்வடிவமானது செ.சொ.பே.மு. படத்துடன் உள்ளது.'

4)குடாரம்/ குடாரி - வீரபத்திரரின் கையில் இவ்வாய்தம் உள்ளது. குடத்தின் வடிவம் போலமைந்த அலகினைக் கொண்ட கோடாரி; நீண்ட கைபிடி காணப்படும்.

  • குட> குடா> குடாரம்

main-qimg-0f20954b772af86b9b9f4a3de09073aa.jpg

கீழ்க்கண்ட படத்தில் ஒரு வகைக் குடாரி தெரிகிறது பாருங்கள். இது ஓர் சிலையில் இருந்து எடுக்கப்பட்டதாகு. ஓர் இடத்தில் ஒரு படையின் படம் இருக்கிறது என்றால், அஃது அவ்விடத்தில் வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப் பட்டதாக இருக்குமேயன்றி வேறொன்றில.

main-qimg-6a082911b9439ced12b88e65d3a9d1bf.png

'திரிபுராந்தகர், காஞ்சி கைலாசநாதர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்' | படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை '

 

5) நவியம்/ தலைக்கனக் கோடாரி - அலகில் கனம் கொண்ட நசித்து அழிக்கும் கோடாரி. படதில் காட்டப்பட்டுள்ளது போலல்லாமல் இதன் பிடி ஆனது நல்ல நீளமாக இருக்கும்.

"நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து" (புறநா. 36)

  • நசி → நவி → நவியம்

main-qimg-2e0aa5de69008a8a45da2cbaf4e327b0.png

main-qimg-15e4dc1316a92cccffaff8f5acb74a48.jpg

'பன்றிக்குத்திப் பட்டான் கல் (சதிக்கல்) | பாகலஹள்ளி சென்றாய பெருமாள் கோயில், தருமபுரி | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு| படிமப்புரவு: தமிழ் இணைய நூலகம்'

6) உல் - கற்கோடாலி -இதன் அலகு மட்டும் கல்லால் செய்யப்பட்டிருக்கும். பிடியானது எஃகாலோ அல்லது மரத்தாலோ செய்யப்பட்டிருகும். அலகின் கனத்திற்கு ஏற்ப கைபிடி குறுகியோ நீண்டோ காணப்படும்.

main-qimg-a206dea8f019e6f663883e3db2f8c77d.jpg

7)குந்தாலி/ குந்தாலம்

  • குத்து → குந்து → குந்தாலி

main-qimg-169bfe98eea52faa8f98fb22f8218e29.png

8)சிறுகாம்புக் கோடாரி - மெல்லிய காம்பினைக் கொண்ட கோடாரி.. ஒரு கையாலே பயன்படுத்தலாம்.

(இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .)

  • இதில் தடித்த காம்பு இருந்தால் அது பெருங்காம்புக் கோடாரி என்று அழைக்கப்படும்.

main-qimg-775dcc6bb1c2d26171fa8545094f2dce.png

'படிமபுரவு: கண்டி அருங்காட்சியகம்'

9)சூர்க்கோடாரி (Tamil’s pole-axe) - கைபிடி நீளமான மழு/ தடித்த குடாரத்தினை பக்க வாட்டிலும் கூரான ஆணி அல்லது சங்கினை முனையிலும் கொண்ட கோடாரியாகும்..

  • இதில் கீழே காட்டப்பட்டுள்ளதில்,
    • முதலாவது படம் எட்டையபுரம் அரசவையில் இருந்து எடுக்கப்பட்டது,
    • இரண்டாவது படம் பாரத துணைக் கண்டம் முழுவதிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

main-qimg-164205166e2750a6a6f0ed8fc9868246.jpg

main-qimg-7bf1982c0ee8ac0b2c9f57ace6b56ea2.jpg

'படிமப்புரவு: google'

10)அங்குசக் கோடாரி - அங்குசமும் மழுவும் ஒருங்கே அமைந்த கோடாரி.

main-qimg-2ea27ebd7ab9e63c46fa8f2883a170ed.jpg

11)பெயர் தெரியாக் கோடாரி

main-qimg-1c227adb9cbdc7099e520b7e864fc1c5.png

'உமையொருபாகர், தஞ்சாவூர் திருக்கோழம்பியம் | படிமப்புரவு: தகவலாற்றுப்படை'

12)பெயர் தெரியாக் கோடாரி

இது வழக்கத்திற்கு மாறான ஓர் வடிவினைக் கொண்டுள்ளது. இது போன்ற வகையைச் சேர்ந்த கோடாரி உலகில் எங்கும் இல்லை.

main-qimg-874a2a445a7c2ca5fde56e0f49345978.png

'சங்ககாலச் சேரர் | கி.மு.2-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு : தமிழிணையம் - தகவலாற்றுப்படை'

13) பிறைமுகக் கோடாரி/ மழு/ தண்ணம்- கீழே காட்டப்பட்டுள்ளதைப் போன்றுதான் இருக்கும். மேற்புறம் பிறைநிலவு போன்ற வடிவமும் கொண்ட கோடாரி. ஒருகை அல்லது இருகையால் பயன்படுத்தலாம். இது பண்டைய பாரத துணைக்கண்டம் & ஈழத்தீவு முழுவதும் பயன்படுத்தப்பட்ட கோடாரியாகும்.

main-qimg-e3759656877b608026c4c1b7cf5a1fce.jpg

main-qimg-2e880198b7f663c5098f4e9e6bfddae5.png

'இத்தெய்வத்தின் கையில் இருக்கும் தலைக்கனமான மழுவினை நோக்கவும்'

மழுவின் ஒரு விதம்:-

இது நவியம் போன்று பெரும் பிடி அல்லாமல் கைக்கோடாரியை விடப் பெரியதான பிடி கொண்டதே. இவ்வடிவம் தமிழர்க்கே உரித்தானதாகும்.

main-qimg-4823e7504226b55b8c0d3311e39ba1e9.png

'சங்ககாலச் சேரர் | கி.மு.2-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு : தமிழிணையம் - தகவலாற்றுப்படை '

மழுவின் ஒரு விதம்:-

இது நவியம் போன்று பெரும் பிடி அல்லாமல் கைக்கோடாரியை விடப் பெரியதான பிடி கொண்டதே. இவ்வடிவம் தமிழர்க்கே உரித்தானதாகும்

main-qimg-c1a591f4fc6cae253b073bd6c98c13e4.png

'பிற்காலச் சேரர் (கொங்கு நாடு)| கி.பி.15-16 ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - பாலக்காடு | காசுப் படிமப்புரவு :தமிழிணையம் - தகவலாற்றுப்படை'

 


உசாத்துணை:

  • செ.சொ.பே.மு.
  • கிடைத்த படங்களை வைத்து சொற்களின் பொருளோடு வைத்துப்பார்த்து எழுதினேன்

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Link to comment
Share on other sites

வாசிக்க பிரமிப்பாகத்தான் இருக்கு. ஆனால் உதுகளைப் பார்த்து விதம் விதமாய் வெட்டுங்களோ என்ற பயமும் வரத்தான் செய்கின்றது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.