Jump to content

மாதவிடாய் காலத்திலும் மனைவியை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு வைத்துக் கொண்ட கணவன்

Recommended Posts

மாதவிடாய் காலத்திலும் மனைவியை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு வைத்துக் கொண்ட கணவன்

  • பெண்கள் மீதான வன்முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாலியல் துன்புறுத்துல் குறித்து எகிப்திய பெண்கள் தங்கள் மெளனத்தைக் கலைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி திருமணத்துக்குப் பிறகு பெண்களின் விருப்பமின்றி உடலுறவு வைத்துக் கொள்ளும் Marital Rape குறித்து தற்போது குரல் எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள். இது இப்போது வரை ஒரு கண்டுகொள்ளப்படாத விஷயமாக இருக்கிறது.

குறிப்பு: இந்த கட்டுரையில் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட காட்சிகள் விவரிக்கப்பட்டு இருக்கின்றன.

34 வயதான சஃபா திருமணம் நடந்த அன்று இரவே, அவரது கணவரால் வன்புணரப்பட்டார். அதில் அவருக்கு தொடைப் பகுதியிலும், மணிக்கட்டிலும், வாய் பகுதியிலும் காயம் ஏற்பட்டது.

"எனக்கு அப்போது மாதவிடாய். நான் உடலுறவுக்கு அன்று இரவு தயாராகவில்லை" என்கிறார் சஃபா.

"என் கணவரோ, நான் அவரோடு ஒரு நெருக்கமாக உடலுறவு கொள்ளாமல் தவிர்ப்பதாகக் கருதினார். அவர் என்னை அடித்தார், கையில் விலங்கிட்டார், என் குரல்வளையை நெரித்தார், என்னை வன்புணர்ந்தார்".

இத்தனை நடந்த பிறகும், சமூக விழுமியங்களைக் கருதி சஃபா தன் கணவருக்கு எதிராக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு மாற்றம் வந்தது. 'நியூட்டன்ஸ் க்ராடில்' என்கிற தொலைக்காட்சித் தொடரில், ஒரு கணவர், தன் மனைவியைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது போல் ஒரு காட்சி இருந்தது.

இது பல பெண்களின் கொடூர நினைவுகளை நினைவுகூர வைத்தது. ஆனால் அக்காட்சிகள், தாங்கள் அனுபவித்த கொடுமைகளை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக பேசவும், பகிர்ந்து கொள்ளவும் வழிவகுத்தது.

பெண்கள் மீதான வன்முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சில வாரங்களுக்குள் நூற்றுக் கணக்கான பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை பகிர்ந்தனர். இதில் ஸ்பீக் அப் என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் 700 பெண்கள் பகிர்ந்து கொண்டனர். அவர்களில் 27 வயதான சனாவும் ஒருவர்.

"அவன் என் தேவதூதனாக இருந்தான். திருமணமாகி ஓராண்டு காலத்துக்குள் நான் கர்ப்பமடைந்தேன். என் குழந்தையையும் பெற்றேடுக்கவிருந்தேன்" என அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் கூறுகிறார்.

"எங்களுக்குள் ஒரு சிறிய சண்டை வந்தது. அவன் என்னை தண்டிக்கத் தீர்மானித்தான்"

"என் சம்மதமின்றி, என்னை வன்புணர்ந்ததால், என் கரு சிதைந்துவிட்டது"

சனா தன் விவகாரத்துக்காக தனியாக போராடினார். தற்போது பிரிந்து வாழ்ந்தாலும், தனக்குப் பிறக்காத குழந்தையை நினைத்து வருந்துகிறார்.

கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது அல்லது காட்டுமிராண்டித்தனமாக உடலுறவு கொள்வது இப்போதும் எகிப்தின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. குறிப்பாக திருமண இரவன்று இது நடக்கிறது.

ஒரு பெரிய பாடகரின் மனைவி திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வு குறித்து கண்ணீரோடு பேசிய காணொளி இன்ஸ்டாகிராமில் வைரலானது. பல பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளானது.அதன் பிறகு இப்படிப்பட்ட திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வு குறித்த விவாதம் அதிகரித்தது.

மேலும், இப்படிப்பட்ட வன்புணர்வுகளை சட்ட அமைப்புகள் குற்றமாகக் கருத வேண்டும் என குரல் எழுப்பினார்.

பெண்கள் மீதான வன்முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அப்பாடகரோ அது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என நிராகரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6,500 (திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வு, பாலியல் வன்கொடுமைகள் பாலியல் துன்புறுத்தல், கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது) போன்ற சம்பவங்கள் பதிவாவதாக அரசின் தேசிய பெண்கள் கவுன்சில் கூறுவதாக கடந்த ஜனவரி 2015-ல் வெளியான ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

"எகிப்தில் இருக்கும் பொது கலாச்சாரத்தில், திருமணம் என்பது மனைவி 24/7 மணி நேரமும் உடலுறவுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்கிற பொது புத்தியைத் உண்டாக்குகிறது" என்கிறார் வழக்குரைஞர் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டு மையத்தின் செயல் இயக்குநர் ரெடா டன்போகி.

பெண்கள் தங்கள் கணவர்களோடு உடலுறவு கொள்ள மறுத்தால், அவர்கள் பாவிகள் ஆவர். அவர்களை தேவதைகள் இரவு முழுக்க சபிக்கும் போன்ற சில மதம் சார்ந்த நம்பிக்கைகள் எகிப்தில் நிலவுகின்றன என்றும் கூறிகிறார் ரெடா.

இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும் நோக்கில், டர் அல் இஃப்தா (Dar al-Ifta) என்கிற எகிப்தின் இஸ்லாமிய ஆலோசனைக் குழு அமைப்பிடம் கேட்ட போது "கணவன் வன்முறையைப் பயன்படுத்தி தன் மனைவி உடன் உடலுறவு கொள்ள விரும்பினால், அவன் (கணவன்) சட்டப்படி பாவியாகிறான். மனைவிக்கு நீதிமன்றம் செல்வதற்கான உரிமை உண்டு. கணவன் மீது புகார் கொடுக்கவும், அவனுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவும் உரிமை உண்டு" என்கிறது.

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டு மையம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 200 திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வுகளை ஆவணப்படுத்தி இருக்கிறது. இதில் பெரும்பாலானவைகள் முதலிரவு குறித்த அச்சத்தில் ஏற்படுபவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. என்கிறார் ரெடா.

எகிப்திய சட்டங்கள் திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வுகளை குற்றமாகக் கருதுவதில்லை. மேலும் அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பதும் சிரமமாகிறது. ஆனால் உலக சுகாதார அமைப்போ அதை ஒரு பாலியல் வன்முறையாகக் கருதுகிறது.

எகிப்து கொடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெரும்பாலான திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வு வழக்குகளுக்கு, எகிப்தின் 60ஆவது தண்டனைச் சட்டத்தினால் தண்டனை கிடைப்பதில்லை.

"ஷரியா சட்டங்களின் பால் தீர்மானிக்கப்படும் உரிமைக்கு இணங்க, நல்லெண்ண நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் காரியங்களுக்கு இந்த தண்டனைச் சட்டங்கள் பொருந்தாது" என்கிறது அச்சட்டம்.

ஆனால் ரெடாவோ, திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வை, பெண்களின் உடலில் காணப்படும் சிராப்புகள், காயங்கள், வாய் பகுதியைச் சுற்றி இருக்கும் காயங்களைக் கொண்டு நிரூபிக்கலாம் என்கிறார்.

எகிப்தில் மாற்றங்கள் மெல்ல வருகின்றன. இப்போதும் பழமைவாத மதிப்புகள் தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வினால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள், மெல்ல கேட்கப்படத் தொடங்கி இருக்கின்றன.

சஃபா மற்றும் சனா ஆகியோரின் பெயர்கள் அவர்களின் பாதுகாப்பு கருதி மாற்றப்பட்டு இருக்கின்றன.

https://www.bbc.com/tamil/global-57857722

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி தமிழில் வரும் இது போன்ற பதிவுகள் குறித்து, பிபிசி தமிழ் Youtube சேனல் இல் திட்டி எழுதுகிறார்கள்.

ஒரு, இரு சம்பவங்கள் நடக்கலாம், அதுபோல ஆண்களும் சில பெண்களால் வேறு வகை பாதிப்புக்கு உள்ளாகலாம். உதாரணமாக, மாத விடாய் உள்ள நிலையிலும், மது போதையில், தயாராக இல்லாத ஆணினை, உறவுக்கு அழைப்பதும், மறுத்தால், நீயெல்லாம் ஒரு ஆண் மகனா என்று திட்டி அவமானப் படுத்தி, அதகளப்படுத்துவதும் பிரிட்டனில் நடக்கிறது. இதனால், உதவி கேட்டு ஆண்கள் போலீசாரை அழைத்து உள்ளனர்.

உதாரணமாக, domestic violence என்பது, பெண்கள் ஆண்களால் தாக்கப்படுவது என்ற கருத்து பிரிட்டனில் இருந்தது.

இப்போது,  ஆண்களும் பெரும் கோபக்கார பெண்களின், வன்முறைக்கு உள்ளாகி உதவி கேட்கிறார்கள். அது மட்டுமல்ல, ஓரின கலியாணம் செய்யும் ஆண்களில், ஒருவர், அடுத்தவரை தாக்குவதும், பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும் நடைபெறுவதாக எழுதுகிறார்கள்.

ஆக, இது இந்தியாவில் அல்லது இஸ்லாமிய உலகில் மட்டுமே நடப்பது போல, பிபிசி தமிழ் அடித்து விட்டுக்கொண்டிருப்பது தவறு.

போன வருடம் இதே பிரிட்டனில்தான் வீதியால் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை, போலீஸ்க்காரர் கடத்தி, வன்புணர்வு செய்து கொலை செய்தார்.

அந்த பெண், பீரியட் காலத்தில் இருந்தாரா, இல்லையா என்று அவர் கவலையா பட்டிருப்பார். சும்மா அடித்து விட கூடாது, டெல்லியில் இருந்து இயங்கும் பிபிசி தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'My husband was an angel - then he raped me'
- By Wael Hussein - BBC News, Cairo
முதலாவது இதுதான் BBC ஆங்கிலத்தில் வந்த தலைப்பு.. ஆங்கில தலைப்பில் எந்தவித கோளாறும் இல்லை.. BBC தமிழ்தான் இந்த மாதிரி தலைப்புகள் சில்லறைத்தனமாக போடுவதை நிறுத்தவேண்டும்..
அப்பொழுதுதான் தலைப்பிற்கு ஏற்ப கருத்துகளை கூறலாம்..

இந்த மாதிரி ஒரு தலைப்பைப்போட்டால் வேறுவிதமாகத்தான் கருத்தை எழுதுவார்கள்..

இரண்டாவது ஒப்பீட்டளவில் உடல்ரீதியான வன்முறை மற்றும் பாலியல் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள், அதிலும் இஸ்லாமிய நாடுகள், ஆசிய நாடுகளில் அதிகம்..சிறுவயது திருமணங்கள், கூட்டு பாலியல் வன்முறை , இன்னமும் நடைபெறுகிறது.. 
இந்த கட்டுரை சொல்வது பழைமைவாத கருத்துகளை உடைய எகிப்து போன்ற நாடுகளில் மாற்றங்கள் உடனடியாக நிகழாது, இந்த மாதிரி வன்புனர்வு செயல்களிலிருந்து பெண்கள், சிறுமிகளை பாதுகாக்கவேண்டும் என்பதே.. 

மூன்றாவது, இது அவுஸ்ரேலியாவில் ஆண்கள் எதிர்கொள்ளும் உடல், உள ரீதியான வன்முறைகள், மற்றும் பாலியல் வன்முறைகளைப்பற்றி கூறுகிறது(Male victims of domestic violence have few places to turn or services to call)

https://www.google.com.au/amp/amp.abc.net.au/article/12495738

எங்களது சமூகத்தில் ஆண்களை, அவர்களது மனைவி/காதலி/தாய், எப்படி மனரீதியாக, உடல் ரீதியாக கொடுமைபடுத்துகிறார்கள் என்பதும், அதிலிருந்து மீள அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் வேறு கதை 

இறுதியாக இந்த செய்தி “ சமூக சாளரத்திற்குள்” இருந்தால் நன்று என நினைக்கிறேன்!!

BBC ஆங்கில இணைப்பு

https://apple.news/AXTYLrWOoQEaxYaxW6oqY0Q

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

https://www.mankind.org.uk/

We receive calls from male victims of domestic abuse across all age ranges and professions:

• From dustmen and doctors, to, bankers and builders

• From men in their 20s to men in their 80s

• From men in England, Northern Ireland, Scotland and Wales.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு எதிராக எழுதுவது நோக்கம் அல்ல.

ஆனால் சில பெண்கள், தமக்கு பெண் என்பதற்காக, சமூகம் தந்துள்ள சில, அடிப்படை உரிமைகளை தவறாக பயன்படுத்துவதை கவனிக்க முடியும்.

அது ஏனைய உண்மையாகவே பாதிக்கப்படும் பெண்களுக்கு பெரும் தீங்கினை விளைவிக்கும் என்பதை அவர்கள் உதாசீனம் செய்கிறார்கள்.

ஒரு ஆண் ஆசிரியர், தனக்கு போட்டியான இன்னோரு மாணவிக்கு கூடுதல் புள்ளிகள் அளித்தார் என்று, பாலியல் சீண்டுதல் செய்தார் என்று போலியாக முறைப்பாடு செய்து, அந்த ஆசிரியரின் வாழ்வினை 5 வருடம் சீரழித்த சிறுமியையும் பிரிட்டனில் பார்த்தோம். 5 வருசத்தில் மனைவி,, குடும்பம், பிள்ளைகளை, வேலையை இழந்து.... கடைசியில், அந்த பெண்ணின் தாயார் பழைய notebook ஒன்றை கிளறிய போதே, மகள் எழுதி வைத்திருந்த குறிப்பை பார்த்து, கேள்வி கேட்டு, அதிகாரிகளிடம் சொல்லி, ஆசிரியர் வெளியே வந்தார்.

அதே பாடசாலை, மீண்டும் வேலை கொடுக்க முன்வந்த போது, கடவுளே, இந்த ஆசிரியர் தொழிலே வேண்டாம் என்று கும்புடு போட்டு விட்டு போய் விட்டார் அந்த நல்ல ஆசிரியர்.

உண்மையில் இன்னுமொரு பெண்ணின், அதாவது அந்த தாயாரின், மனசாட்சி உறுத்தி இருக்காவிட்டால், அந்த அப்பாவி ஆசிரியர், ஒரு அவல வாழ்வே வாழ்ந்திருப்பார். 

2018 ஜனவரியில், மூன்று வாரங்கள் தொடர்ந்து நான்கு பாலியல் வன்முறை வழக்குகள், விசாரணைக்கே எடுக்க முடியாதவை  என்று நீதிமன்றம் தூக்கி வீசியது. 

அந்த வழக்குகளை போட்டிருந்த போலீசாரையும், அரச வழக்கு தொடரகத்தினையும் நீதிமன்றம் கண்டித்தது. ஒரு வழக்கில், முக்கியமான சான்றினை மறைத்த போலீஸ் அதிகாரிக்கு தண்டனையும் கொடுத்தது.

உடலுறவின் போது, நிறுத்து என்று சொன்னபின்னும் தொடர்ந்து இயங்கிய ஒருவர், அந்த கணத்தில் இருந்து பாலியல் வன்முறையாளர் ஆகினார் என்று நீதிமன்றில் நிறுத்தப்பட, போலீசாரையும், அரச வழக்கு தொடரகத்தினையும் நீதிமன்றம், உங்களுக்குத்தான் வேலை இல்லை என்றால் எங்களுக்கும் இல்லை என்று நினைக்கிறீர்களா என்று, வாங்கு, வாங்கு என்று வாங்கியது.

டாக்ஸி டிரைவர் கூடுதலாக பணம் கேட்க்கிறார் என்று, பாலியல் புகார் கொடுத்தார் ஒரு பெண்.... நல்ல வேலை, அவர்கள் உரையாடலை அந்த டிரைவர் பதிவு செய்ய, பெண் சிறை சென்றார்.

இதுவே பிபிசியின் உலகளாவிய இயக்கத்துக்கு லைசென்ஸ் பணம் செலுத்துபவர்கள் நாட்டில் இன்றய நிதர்சனம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பும் ,செய்தியும் ஒன்றை சொல்ல நாதம் இன்னொரு பக்கத்தால் தவில் வாசிக்கிறார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

தலைப்பும் ,செய்தியும் ஒன்றை சொல்ல நாதம் இன்னொரு பக்கத்தால் தவில் வாசிக்கிறார் 

அக்கோய், நான் ஒன்றும் தவில் வாசிக்கவில்லை.... முதலில் என்ன விசயம் என்று புரிந்து பேசுங்கோ...

பிபிசி தமிழ் டெல்லியில் இருந்து இயங்குகிறது.

இதன் எழுத்துக்கள், கட்டுரைகளின் தரம் குறித்து பலர் கரிசனை கொள்கிறார்கள். பிபிசிக்கு லைசென்ஸ் கட்டணம் செலுத்துபவன் என்ற முறையில் எனக்கு சில கரிசனங்கள் உண்டு. இங்கே இது போன்ற அபத்தங்கள் வந்தால், உடனே முறைப்பாடுகள் போகும். 

இன்னும் பல உறவுகள் கூட, பிபிசி தமிழுக்கு என்ன நடந்தது என்று பதிந்திருந்தார்கள். ஆங்கிலத்தில் தலைப்பினையும், தமிழில் தலைப்பினையும் பாருங்கள். இலங்கை மித்திரன் லெவலில் போடுகிறார்கள்.

பிபிசி தமிழ் என்ற பெயரில் யாரோ ஒருவர், இஸ்லாமிய உலகில் மட்டுமே நடப்பதாக பண்ணும் அலம்பரைக்கு, பதிலாக, இங்கேயும் நடக்கின்றது என்று எனது பதிவு தனித்தவிலாக போகிறது.

உண்மையில் இது, (இஸ்லாமியர் மீதான) இன வன்மம்.... 

சரி, அதில் என்ன குறை கண்டீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த கட்டுரை சொல்வது பழைமைவாத கருத்துகளை உடைய எகிப்து போன்ற நாடுகளில் மாற்றங்கள் உடனடியாக நிகழாது, இந்த மாதிரி வன்புனர்வு செயல்களிலிருந்து பெண்கள், சிறுமிகளை பாதுகாக்கவேண்டும் என்பதே..

எகிப்தில் பஸ்சில் பயணிக்கும் பெண்கள் அடையும் துனபுறுத்தல்கள் பற்றி நான் ஒரு எகிப்தியர் எழுதிய கட்டுரை முன்பு படித்தனான் 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எகிப்தில் பஸ்சில் பயணிக்கும் பெண்கள் அடையும் துனபுறுத்தல்கள் பற்றி நான் ஒரு எகிப்தியர் எழுதிய கட்டுரை முன்பு படித்தனான் 😟

இது வட ஆபிரிக்கா எங்கும் நிறைந்துள்ளது. பெண்களை தரம் குறைந்தவர்களாக போக பொருளாக பார்க்கும் பார்வை எல்லா சமூகத்திலும் இருந்தாலும் எகிப்து, துனிசியா ஒரு படி மேல். எனது நண்பி ஒருவர் அவரின் கணவருடன் ஷாம் அல்சேய்க் போயிருந்தார். கணவரின் முன்பே அவருக்கு தொல்லை கொடுத்தது மட்டும் இன்றி, கணவருடன் “டீல்” வேறு பேச போயுள்ளார்கள்.

பெண் அதிகாரியிடம் பதில் சொல்ல முடியாது என சொல்லும் ஆட்களை மத்தியகிழக்கில் வேலை செய்பவர்கள் நிச்சயம் கண்டிருப்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பிபிசிக்கு லைசென்ஸ் கட்டணம் செலுத்துபவன் என்ற முறையில் எனக்கு சில கரிசனங்கள் உண்டு.

இதுக்கு ஒரு அருமையான விவேக் கொமடி சீன் போடலாம்….வேண்டாம் நாதம்ஸ் கோபிப்பார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எகிப்தில் பஸ்சில் பயணிக்கும் பெண்கள் அடையும் துனபுறுத்தல்கள் பற்றி நான் ஒரு எகிப்தியர் எழுதிய கட்டுரை முன்பு படித்தனான் 😟

அது கொழும்பில் மோசமாக உள்ளதே....

30 minutes ago, goshan_che said:

இது வட ஆபிரிக்கா எங்கும் நிறைந்துள்ளது. பெண்களை தரம் குறைந்தவர்களாக போக பொருளாக பார்க்கும் பார்வை எல்லா சமூகத்திலும் இருந்தாலும் எகிப்து, துனிசியா ஒரு படி மேல். எனது நண்பி ஒருவர் அவரின் கணவருடன் ஷாம் அல்சேய்க் போயிருந்தார். கணவரின் முன்பே அவருக்கு தொல்லை கொடுத்தது மட்டும் இன்றி, கணவருடன் “டீல்” வேறு பேச போயுள்ளார்கள்.

பெண் அதிகாரியிடம் பதில் சொல்ல முடியாது என சொல்லும் ஆட்களை மத்தியகிழக்கில் வேலை செய்பவர்கள் நிச்சயம் கண்டிருப்பர்.

நண்பி சும்மா உங்களுக்கு இறுக்கி இருப்பா.... தல.... 😁

அட.... நம்ம தலயா கொக்கா... நண்பியை அனுப்பி விட்டு..... சரிதான் இந்த இறுக்கு இறுக்குதே என்று என்று தலையில் அடித்து இருப்பார்..... 😜

இதுக்கு வடிவேலு காமெடி சீன் போட்டு தலயை சிரிக்க வைக்கலாம் தான்.... வேணாம்.... 

தல... சிரிச்சு சிரிச்சே.... மட்டையாயிரும்.... :grin: 

***

அது சரி என்ன லேட்டா வந்திருக்கிறியள்..... நேத்தே எதிர்பார்த்தேனே.... ஐ சே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

பெண் அதிகாரியிடம் பதில் சொல்ல முடியாது என சொல்லும் ஆட்களை மத்தியகிழக்கில் வேலை செய்பவர்கள் நிச்சயம் கண்டிருப்பர்.

ஓம் மத்தியகிழக்கில் வேலை செய்பவர்கள் சொன்னதாக அவர்களை பற்றிய கதைகள் கேள்விபட்டுள்ளேன். அவர்கள் சிந்தனை முறை அப்படி மோசமாக தான் உருவாக்கபட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் மாதவிடாய் ஒரு மேட்டரே இல்லையே.😂

கேடு கெட்ட தமிழ் பிபிசிக்கு செய்திகளுக்கு பஞ்சம் போல் தெரிகின்றது.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கட்டுரை இஸ்லாமியர் மீதான வன்மம் என்பதை விட BBC தமிழிற்குதான் இஸ்லாமியர் மீதான வன்மம் எனக்கூறவேண்டும். 

மேலும் இந்த மாதிரி குடும்ப வன்முறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான(ஆண், பெண் மீதான) என்பதால் அவற்றிற்கான தீர்வுகளும் வேறாக இருக்கும்.

சமூகம், சமூக அந்தஸ்து, சமய பழக்கவழக்கங்கள், ஆண் பெண் உடல்வலிமை பற்றிய எண்ணம், 
இவை பற்றிய சமூக விழிப்புணர்வு, அரசியல், உதவும் நிறுவனங்களின் நிலை போன்றவற்றால் இந்த குடும்பவன்முறை தீர்வுகளில் சமமின்மை நிலவுகிறது.. 

சரி அது போகட்டும், இங்கே ஆண்கள் மீதான அடக்கமுறைகள் வெளியே வருவதில்லை, அவர்களைப்பற்றி அக்கறையில்லை, இப்பொழுதெல்லாம் பெண்கள் பொய்புகார் செய்கிறார்கள் என்றால் ஆண்கள் ஏன் தமது பிரச்சனைகளை வெளியே வந்து கூறுவதில்லை?

மாற்றங்கள் என்பது உடனடியாக நிகழாது என்றால் ஏன் அதைப்பற்றிய விழிப்புணர்வு செய்திகளை பகிர முன்வருவதில்லை.. பெண்கள் தமது “ பெண்கள்” என்ற அடையாளத்தை பயன்படுத்தி இந்தமாதிரி விடயங்களில் அனுகூலங்களை அடைகிறார்கள் என்று கூறுவதை விடுத்து, ஆண்கள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளிப்படையாக கதைக்க முன்வரவேண்டும்.. பிரச்சனைகளை உரிய நிறுவனங்களை அனுகி கூறும் பொழுது இதனால் இந்தமாதிரி குடும்ப வன்முறைகளிலிருந்து ஆணோ பெண்ணோ மீள உதவும். தற்கொலைகள்/கொலைகள் முற்று முழுவதாக நிறுத்த முடியாவிட்டாலும் குறைக்கலாம். 

இன்னொன்றையும் கவனித்தேன், இங்கே இந்த பதிவில் மட்டுமல்ல, பொதுவாக நான் கவனித்த ஒன்று, ஒருவரின் கருத்துக்களுக்கு பதில் கருத்து எழுதுவதாக நினைத்து எழுதும் சில கருத்துக்களை பார்க்கும் பொழுது, இடம், பொருள், பதிவின் தன்மை, பதிவின் நோக்கம் எல்லாம் மறந்து  எழுதும் கருத்துக்களால் மற்றவர்கள் (உதாரணத்திற்கு இங்கே யாழ்  இணைய வாசகர்கள்) முன் அவர்களது நிலையை/மதிப்பை குறைத்துக்கொண்டு போகிறார்களோ என்ற எண்ணமும் ஏற்படுவதுண்டு.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

தலைப்பும் ,செய்தியும் ஒன்றை சொல்ல நாதம் இன்னொரு பக்கத்தால் தவில் வாசிக்கிறார் 

நாதம்ஸ் தான் வழமையாக வாசிக்கும் ரப்லொயிட் செய்திகளைத்தானே தந்திருக்கின்றார்! இதில் ஏன் குறைகாண்கின்றீர்கள்?😁

13 hours ago, Nathamuni said:

இதன் எழுத்துக்கள், கட்டுரைகளின் தரம் குறித்து பலர் கரிசனை கொள்கிறார்கள். பிபிசிக்கு லைசென்ஸ் கட்டணம் செலுத்துபவன் என்ற முறையில் எனக்கு சில கரிசனங்கள் உண்டு. இங்கே இது போன்ற அபத்தங்கள் வந்தால், உடனே முறைப்பாடுகள் போகும். 

உங்கள் கரிசனைகளையும் அவர்கள் கவனத்துக்குக் கொண்டுபோனால் நல்லது.😎

https://www.bbc.co.uk/contact/complaints

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இது வட ஆபிரிக்கா எங்கும் நிறைந்துள்ளது. பெண்களை தரம் குறைந்தவர்களாக போக பொருளாக பார்க்கும் பார்வை எல்லா சமூகத்திலும் இருந்தாலும் எகிப்து, துனிசியா ஒரு படி மேல். எனது நண்பி ஒருவர் அவரின் கணவருடன் ஷாம் அல்சேய்க் போயிருந்தார். கணவரின் முன்பே அவருக்கு தொல்லை கொடுத்தது மட்டும் இன்றி, கணவருடன் “டீல்” வேறு பேச போயுள்ளார்கள்.

பெண் அதிகாரியிடம் பதில் சொல்ல முடியாது என சொல்லும் ஆட்களை மத்தியகிழக்கில் வேலை செய்பவர்கள் நிச்சயம் கண்டிருப்பர்.

மிகவும் உண்மை. நான் எத்தனையே சந்தர்பங்களில் கண்டுள்ளேன்

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

சரி அது போகட்டும், இங்கே ஆண்கள் மீதான அடக்கமுறைகள் வெளியே வருவதில்லை, அவர்களைப்பற்றி அக்கறையில்லை, இப்பொழுதெல்லாம் பெண்கள் பொய்புகார் செய்கிறார்கள் என்றால் ஆண்கள் ஏன் தமது பிரச்சனைகளை வெளியே வந்து கூறுவதில்லை?

பெண் என்றால் பேயும் இரங்கும். பெண்ணின் கண்ணீர் வலிமையானது.
இதனால் பெண்கள் பிரச்சினகள் முதன்மை படுத்தப்படுகின்றான. 
ஆண்கள் அப்படியல்லவே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ் தான் வழமையாக வாசிக்கும் ரப்லொயிட் செய்திகளைத்தானே தந்திருக்கின்றார்! இதில் ஏன் குறைகாண்கின்றீர்கள்?😁

அது வாசித்தது, broadsheet பேப்பரில்.....😁

மின்னம்பலம், தமிழ்மிரர் பதிவுகாரர்..... பொல்லு கொடுத்து அடிவாங்க கூடாது.... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்தக்கட்டுரை இஸ்லாமியர் மீதான வன்மம் என்பதை விட BBC தமிழிற்குதான் இஸ்லாமியர் மீதான வன்மம் எனக்கூறவேண்டும். 

அதனை தான், எனது பதிவுகள் மூலம் டெல்லியில் உள்ளவர்கள், பிபிசியின் சொந்த நாட்டில் ஒரு பிரச்சனையுமே இல்லை என்பது போல, அடித்து விட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்றே சொல்கிறேன். 

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னொன்றையும் கவனித்தேன், இங்கே இந்த பதிவில் மட்டுமல்ல, பொதுவாக நான் கவனித்த ஒன்று, ஒருவரின் கருத்துக்களுக்கு பதில் கருத்து எழுதுவதாக நினைத்து எழுதும் சில கருத்துக்களை பார்க்கும் பொழுது, இடம், பொருள், பதிவின் தன்மை, பதிவின் நோக்கம் எல்லாம் மறந்து  எழுதும் கருத்துக்களால் மற்றவர்கள் (உதாரணத்திற்கு இங்கே யாழ்  இணைய வாசகர்கள்) முன் அவர்களது நிலையை/மதிப்பை குறைத்துக்கொண்டு போகிறார்களோ என்ற எண்ணமும் ஏற்படுவதுண்டு.. 

அது யாழின் தனித்தன்மை.....

வெறுமனே வாசித்து விட்டு போகாமல், வேடிக்கையான விவாதம் மூலம், விசயங்களை பகிர்கிறோம், புரிகிறோம்.

பெண்களே அருவருக்கும், இந்த தலைப்பில், கருத்துக்களை அவ்வாறு தான் பகிர முடியும். வெறுமனே.... ஒரு டாக்டர் போல... சுகாதாரம் அது இது என்று பேசி, வாசிப்பவர் முகம் சுளிப்பை இன்னும், மோசமாக்க கூடாது அல்லவா.

44 minutes ago, colomban said:

மிகவும் உண்மை. நான் எத்தனையே சந்தர்பங்களில் கண்டுள்ளேன்

எது? கணவன் முன்னால், மனைவிக்கு ரேட் பேசுவதை நேரில் பார்த்து விட்டு, பேசாமல் போய் இருக்கிறீர்களா?

என்ன கொழும்பான் இதெல்லாம்? 😁

ஒரு பெண் அதிகாரத்துக்கு வருவது, முக்கிய தகுதியால்.... அவருக்கு பதில் சொல்ல முடியாது என்றால், வேலையை விட்டு தூக்க மாட்டார்களா?

ஆனாலும், அந்த பெண் அதிகார தோரணையில், நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்காவிடில், இதுக்கு போய் ஊரிலை ஆடு, கோழி மேய்க்கலாம்... சரிதான் போம்மா, என்று சொல்லும் சுஜ மதிப்பு இருந்தால் மட்டும், எதிர்க்கலாம்.

***

எனது நினைவு சரியானால், முடிக்காத தனது மத்திய கிழக்கு வேலை வரலாற்றினை எழுதிய நிழலி, ஒரு பெண் boss உடன் வாக்குவாதம் செய்ததாக எழுதி இருந்தார், என்று நினைக்கிறேன் ..... (தவறாக இருக்கலாம், இருந்தால், நிழலி திருத்தவும்) 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

அது கொழும்பில் மோசமாக உள்ளதே....

வழுக்கை ஆறு என்று யாழ்பாணத்தில் ஒரு ஆறு உள்ளதாம் நான் அதை பார்க்கவில்லை. இலங்கை சென்ற போது மகாவலி ஆறு பார்த்துவிட்டேன்.
இங்குளளவர்கள் நைல் நதியை பற்றி பேசினால் நான் யாழ்பாணத்திலும் ஒரு ஆறு உள்ளது என்று சொல்வது போன்று இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விளங்க நினைப்பவன் said:

வழுக்கை ஆறு என்று யாழ்பாணத்தில் ஒரு ஆறு உள்ளதாம் நான் அதை பார்க்கவில்லை. இலங்கை சென்ற போது மகாவலி ஆறு பார்த்துவிட்டேன்.
இங்குளளவர்கள் நைல் நதியை பற்றி பேசினால் நான் யாழ்பாணத்திலும் ஒரு ஆறு உள்ளது என்று சொல்வது போன்று இருக்கிறது.

விளங்க நினைப்பவரே, நீங்கள் விளங்க வேண்டியது என்ன எண்டால், எங்கட ஊரிலேயே மட்டுமல்ல, நாம் வாழும் ஊரிலேயே பெண்களுக்கு பெரிய பிரச்சனை...

அதுக்குள்ள, அடுத்த ஊரிலை தான் அந்த பிரச்சனை என்று குளற கூடாது எண்டதை...

அதுக்கு போய், வழுக்கை ஆறு, மகாவலி ஆறு..... அப்புறம் நைல் ஆறு....

இந்த டெல்லியில், பஸ்சில் ஒரு பெண்ணை எப்படி நாசம் பண்ணி, கொலையும் செய்து, தூக்கில் தொங்கினார்கள் என்று உலகே அறியும். அந்த டெல்லியில் இருந்து கொண்டு, எகிப்பில் இப்படி நடக்குறதாம் என்று சொல்லும் கொடுமை.... 😰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வழுக்கை ஆறு என்று யாழ்பாணத்தில் ஒரு ஆறு உள்ளதாம் நான் அதை பார்க்கவில்லை. இலங்கை சென்ற போது மகாவலி ஆறு பார்த்துவிட்டேன்.
இங்குளளவர்கள் நைல் நதியை பற்றி பேசினால் நான் யாழ்பாணத்திலும் ஒரு ஆறு உள்ளது என்று சொல்வது போன்று இருக்கிறது.

வழுக்கைஆறு சண்டிலிப்பாய் சங்கானை ஊடாக ஓடுகின்றாது, இது கூட தெரியாதா? நல்லா விளங்க வேண்டும் விளங்க நினைப்பவரே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழுக்கையாறு ......!   😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

எது? கணவன் முன்னால், மனைவிக்கு ரேட் பேசுவதை நேரில் பார்த்து விட்டு, பேசாமல் போய் இருக்கிறீர்களா?

கணவன் முன்னால் அல்ல. கணவனிடமே. இதை நீங்கள் வட ஆபிரிக்காவில் கொஞ்ச காலமாவது செலவழித்து இராவிட்டால் விளங்கி கொள்வது கடினம்தான். நிச்சயம் எகிப்து, துனிசியா போன்ற நாடுகளில் இந்த நெருக்குவாரம் குறிப்பாக மேற்கைதேய பாணியில் உடையணிந்து செல்லும் வெள்ளை தோல் அல்லாத பெண்கள் மீது உண்டு. ஜீன்ஸ், டீசேற் போட்ட ஆசிய பெண் என்றால் அவர் போகப்பொருள் என நினைக்கும் அவர்கள் மனநிலையே காரணம்.

டுபாய், கட்டாரில் இப்படி அல்ல ஆனால் அங்கே இவை வேறு விதமாக வெளிப்படும்.

இதைதான் கொழும்பானும் உறுதி செய்கிறார்.

59 minutes ago, Nathamuni said:

ஒரு பெண் அதிகாரத்துக்கு வருவது, முக்கிய தகுதியால்.... அவருக்கு பதில் சொல்ல முடியாது என்றால், வேலையை விட்டு தூக்க மாட்டார்களா?

மீண்டும் தவறான புரிதல் - நான் சொல்லுவது கஸ்டம்ஸ், பாங்க் போன்ற இடங்களில். கஸ்டமராக வரும் அரபிக்கு விளக்கம் கொடுக்கும் பொறுப்பில் இருப்பவர் பெண் என்றால் - கூப்பிடு ஆம்பிளையை என கேட்பவர் பலர் உள்ளனர். இந்த நாடுகளில் அந்த கோரிக்கை ஏற்கவும் படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்தில் ஒரு புரட்சி நடந்தது நினைவுண்டா? அதில் கூட பெண்கள் மீது பாலியல் அத்துமீறல் நடந்தது. ரோட்டுக்கு வந்து போராடாடும் பெண் எதுக்கும் தயாராயிருப்பார் என்ற மனநிலைதான் காரணம்.

ஆனால் எவ்வளவு கட்டுபாடான சமூகம் ஆயினும் ஈரானிய போராட்டங்களில் இவை குறைவு. 

வட ஆபிரிக்க அரபிகளின் கலாச்சாரத்துக்கும், இரானிய பாரசீகர் கலாச்சாரத்துக்கும் உள்ள வித்தியாசம் இது.

அதுக்காக ஈரானில், டெல்லியில், யூகேயில் இது நடப்பதே இல்லை என்றல்ல. ஆனால் எகிப்தில் இது அதிகம்.

பிபிசி தமிழ் ஆனந்தி அக்காவிற்கு பின் முழுக்க முழுக்க ரோ வசம் ஆகி விட்டது. இது படி படியாக 90 களின் இறுதியில் தொடங்கி இப்போ டெல்லி போனதுடன் முழுமை அடைந்து விட்டது.

ஆனால் பிபிசி தமிழ் டெல்லி, யூகேயில் நடப்பதை பற்றி எழுதாமல் இதை ஏன் எழுதுகிறது என்பதும், இது இஸ்லாமியர் மீதான வன்மம் என்பதும் சிறு பிள்ளைதனமானது.

இங்கே முஸ்லீம் என்பதற்காகவே குட்டு வேண்டும் கொழும்பான் கூட இதை இப்படி பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொன்று, இங்கே பலர் சொன்னது போல, பி பி சி உலக சேவையின் ஆங்கில நிருபர், கெய்ரோவில் இருக்கும் வாகீல் உசேன் இதை எழுது உள்ளார். அதை பிபிசி தமிழ் உலக சேவை, தமிழ் மொழி பெயர்த்து போட்டுள்ளது. உலக சேவை என்பதால் இப்படி பல உலக விடயங்களை போடுவார்கள்தானே? 

பெண்கள் மீதான பாலியல் சீண்டல் எகிப்தில் endemic (வாழ்கையோடு ஒன்றியது?) என்கிறது இந்த கட்டுரை.

https://www.bbc.com/news/world-middle-east-54643463 

எகிப்தின் வீதிகளில் பாலியல் தொந்தரவு 👇

https://www.sat7uk.org/sexual-harassment-on-the-streets-of-egypt/?cn-reloaded=1 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.