Jump to content

யாழ் நூலகம்: பிரபாகரனின் ஆணையில் புலிகளால் எரிக்கப்பட்டதா? - என்.சரவணன்

Recommended Posts

6 hours ago, முதல்வன் said:

இதே அரசியல் அலசல் பகுதியில் திரி ஒன்றை திறந்து கற்றுகொள்ளவேண்டிய பாடங்கள், அல்லது இனி எவ்வாறான நடவடிக்கைகள் பலனைத்தரும் என்ற தலைப்பில் திரியை திறவுங்கள் விவாதிப்போம். அது பலருக்கும் பயனுள்ளதாக ஒரே திரியில் வாசிக்க கூடியதாக வரலாற்றை முன்னகர்த்தக்கூடியதாக இருக்கும்.

உங்கள் கேள்விகள், கருத்துகள் இன்னொரு பரிமாணத்தை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதை அலட்சியமாக தாண்டி முன்னேற்றகரமாக எதையும் செய்துவிட முடியாது. 

போராடிய தரப்பை குறைசொல்வதால் மட்டும் எதுவும் மாறிவிடப்போவதுமில்லை, போராடிய தரப்பின் மீதான விமர்சனங்களை புறந்தள்ளுவதினாலும் எதுவும் நடந்துவிடப்போவதுமில்லை.

உங்கள் புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி முதல்வன். நீங்கள் திறந்துள்ள ஈழத்தமிழர் அரசியல் ஏற்கனவே நிர்வாகத்தினால் pin செய்யப்பட்டிருப்பதால் அங்கு இவை பற்றி விவாதிக்கலாம் என்பது எனது எண்ணம்.

விவாதம் என்பது  ஆரோக்கியமாகதாக, கருத்து ரீதியானதாக அமைய வேண்டும். என்பதே இங்கு முக்கியம். எதிர் தரப்பில் விவாதிப்பவரை துரோகி என்று வசைபாடுவதே விவாதத்துக்கு பதில் விவாதம் என்று வரும் போது  விவாதம் பயன்றறு போகிறது. தமிழீழ விடுதலைக்காக தமது இளம் வயதில் நம்பிக்கையுடன் போராட வந்த இளைஞர்களும் இவ்வாறு தான் திசை மாற்றப்பட்டு தமக்குள் எதிரிகளை உருவாக்கி போராட்டத்தை சீரழித்தனர். இதற்குள் அனைத்து இயக்க போராளி இளைஞர்களும் அடக்கம். 

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, முதல்வன் said:

நானும் அந்தவிவாதத்தில் பங்கு கொள்ள தயார் கோசானுடன். 

@tulpen இதே அரசியல் அலசல் பகுதியில் திரி ஒன்றை திறந்து கற்றுகொள்ளவேண்டிய பாடங்கள், அல்லது இனி எவ்வாறான நடவடிக்கைகள் பலனைத்தரும் என்ற தலைப்பில் திரியை திறவுங்கள் விவாதிப்போம். அது பலருக்கும் பயனுள்ளதாக ஒரே திரியில் வாசிக்க கூடியதாக வரலாற்றை முன்னகர்த்தக்கூடியதாக இருக்கும்.

உங்கள் கேள்விகள், கருத்துகள் இன்னொரு பரிமாணத்தை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதை அலட்சியமாக தாண்டி முன்னேற்றகரமாக எதையும் செய்துவிட முடியாது. 

போராடிய தரப்பை குறைசொல்வதால் மட்டும் எதுவும் மாறிவிடப்போவதுமில்லை, போராடிய தரப்பின் மீதான விமர்சனங்களை புறந்தள்ளுவதினாலும் எதுவும் நடந்துவிடப்போவதுமில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்கு தெரிந்த வரையில் தனக்கு நியாயமான வகையில் போராட்டத்தை நடாத்தியது. அதற்கு தடைக்கற்களாக இருந்த தரப்புகளை எதிரிகளாக துரோகிகளாக அடையாளம் காட்டி போரிட்டது.  அந்த போரின் முடிவில் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போது தமிழ்மக்கள் அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை என்பது இதுவரை நடக்கும் அரசியல் நிகழ்வுகளில் கண்கூடு.அதற்கான காரணம் தமிழ்மக்களின் அரசியல் தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு மேல் கட்டமைக்கப்பட்டமை தான். 

தொடர்ந்தும் விவாதிக்க ஆசை ஆனால் இந்த திரியில் அல்ல. 

அப்படியில்லை விசுகு அண்ணை, துல்பன் போன்றவர்கள் தான் இப்போ எமக்குத்தேவை. அவர் புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்கிறார் என்றால், நிச்சயமாக அவர் புலிகள் மீது அளவுகடந்த பற்றும், நம்பிக்கையும் வைத்திருந்தமையே காரணம். 

அவர்கள் அவ்வளவு செய்தும் தமிழ் மக்களுக்கு விடிவுகிடைக்கவில்லையே என்ற ஆதங்கங்கள் அவரை புலிகள் எங்கே பிழைவிட்டார்கள் என்ற தேடலையும் கேள்விகளையும் முன்வைக்க உந்துகிறது. 

நாங்கள் உண்மையான எதிரிகளை இனங்காணாது கேள்வி கேட்பவர்களை எதிரியாக்குகின்றோம். அவர் தமிழ் மக்களின் விடிவு என்ற கொள்கைக்கு எதிரானவர் அல்ல. அதற்கு இப்போ என்ன தேவை என்ற தேடலுக்கு விடைதேடுபவர். 

நன்றி தம்பி

உங்கள் போன்ற அடுத்த தலைமுறை பிள்ளைகள் தான் இனி பாதையை வகுக்கணும். 

கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் முயல் பிடிக்கும் நாயை என்னால் கண்டு பிடிக்க முடியும்.

முள்ளிவாய்க்காலில் உங்களுக்கு கிடைத்த அடி போதாது என்பவருடன்

முள்ளிவாய்க்காலும் சரிதான் என்பவருடன் சேர்ந்து இருந்து பேச எனக்கு வராது.

எனவே நீங்கள் பேசப்போகும் அரசியல் திரியில் நான் எதுவும் எழுதி உங்கள் நோக்கை கெடுக்க மாட்டேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

உங்கள் புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி முதல்வன். நீங்கள் திறந்துள்ள ஈழத்தமிழர் அரசியல் ஏற்கனவே நிர்வாகத்தினால் pin செய்யப்பட்டிருப்பதால் அங்கு இவை பற்றி விவாதிக்கலாம் என்பது எனது எண்ணம்.

விவாதம் என்பது  ஆரோக்கியமாகதாக, கருத்து ரீதியானதாக அமைய வேண்டும். என்பதே இங்கு முக்கியம். எதிர் தரப்பில் விவாதிப்பவரை துரோகி என்று வசைபாடுவதே விவாதத்துக்கு பதில் விவாதம் என்று வரும் போது  விவாதம் பயன்றறு போகிறது. தமிழீழ விடுதலைக்காக தமது இளம் வயதில் நம்பிக்கையுடன் போராட வந்த இளைஞர்களும் இவ்வாறு தான் திசை மாற்றப்பட்டு தமக்குள் எதிரிகளை உருவாக்கி போராட்டத்தை சீரழித்தனர். இதற்குள் அனைத்து இயக்க போராளி இளைஞர்களும் அடக்கம். 

நிச்சயமாக. நான் அந்த திரியில் தொடங்கிவைத்துள்ளேன். உங்கள் மனதில் இந்தவிடயங்கள் நடக்காமல் இருந்தால், அல்லது வேறுவிதமாக (என்ன விதம் என்பதையும் குறிப்பிட்டால் நல்லது) நடந்திருந்தால் நாம் இப்போதிருக்கும் நிலையை அடைந்திருக்க தேவை இல்லை என்ற விமர்சனங்களை ஒன்றொன்றாக முன்வையுங்கள். 

எல்லார் மனதிலும் வெளி சொல்லாத கேள்விகளும் இருக்கும் விடைகளும் இருக்கும். அது எம் விடிவுக்கு பயன்பட்டால் நாமும்  விடுதலைப்  போராளிகளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

 செல்வி ரதி அவர்களே! தனிமனித செல்வாக்கு என்ற ஒரு விடயம் உண்டு.எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்?

 செல்வி ரதி அவர்களே! தனிமனித செல்வாக்கு என்ற ஒரு விடயம் உண்டு.அனைத்து தமிழினமும் அங்கு திரண்டு நிற்கவில்லை.

தனி மனித செல்வாக்கு எப்படி அவருக்கு வந்தது?...சாதி குறைந்த, அடி  தட்ட மக்கள் ஏன் அவருக்கு பின்னால் போனார்கள்  என்று யோசியுங்கோ 
 
Link to comment
Share on other sites

2 hours ago, ரதி said:

காரணம் அனைத்து தரப்பு மக்களிடமும் சகஜமாக எந்த பந்தாவும் இன்றி பழகினார். நகர மேயர் என்ற முறையில் யாழ் நகரை தனது வீடு போல் பராமரித்தார். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த போதும் எந்த பாதுகாப்பும் இன்றி நகரில் வலம்  வந்தார். எந்த பாதுகாப்பும் இன்றி நிராயுத பாணியாக இருந்த போதே சுட்டு கொல்லப்பட்டார். யாழ்பாணத்திற்கு பல மேயர்கள் பின்னர் வந்தார்கள். அதில் மேலும் இருவர் (திரு சிவபாலன், திருமதி சறோஜனி யோகேஸ்வரன்) விடுதலைப்புலிகளால் சுட்டு கொல்லப்பட்டார்கள். இருப்பினும்  இதுவரை யாழ்நகரின் சிறந்த மேயர் யார் என்றால் அது இன்றுவரை  திரு. அல்பிரட் துரையப்பா ஒருவர் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

தனி மனித செல்வாக்கு எப்படி அவருக்கு வந்தது?...சாதி குறைந்த, அடி  தட்ட மக்கள் ஏன் அவருக்கு பின்னால் போனார்கள்  என்று யோசியுங்கோ 
 
அப்ப.. ஈபி..ரெலோ பின்னாலும்.. புளொட்.. ஈபிடிபி பின்னாலும் போனவர்கள் நல்ல உயர்ந்த சாதி ஆக்களோ..??!

புலிகள்.. மற்றும் ஈரோஸ் (பாலகுமார் தலைமையிலானது) தான் கூடிய அளவு படித்த.. மற்றும் தமிழ் உயர் வகுப்பு மக்களின் பங்களிப்பை அதிகம் பெற்றிருந்தது. முதலில்.. இந்த சாதி அடிப்படையில்.. புலிகளை நோக்குவதை விடுங்கள். புலிகள் மாத்திரம் தான் கொள்கை அடிப்படையில் மக்களை சாதி வகுப்பு மத பிரதேச பேதமின்றி ஒருங்கிணைத்தார்கள். வேறு யாராலும் அது சாத்தியப்படவில்லை... படப் போறதும் இல்லை.

இங்கு முதல்வன் என்பர் சொல்லுறார்.. கண்மூடித்தனமான ஆதரவாம். அதென்ன கண்மூடித்தனமான ஆதரவு.. நியாயத்தின் தராசில் வைச்சு பேசிப்பாருங்கள்.. எது கண்மூடித்தனம் என்பது தெரியும்.

திட்டமிட்ட ஒரு இன அழிப்புச் செயற்பாட்டை தவறான அர்த்தப்படுத்தலுக்கு உட்படுத்தும் நோக்கில் தலைப்பிட்டு கொண்டு செல்லப்படும் இந்த தலைப்பில்.. அலசப்படுவது எல்லாம் கண்மூடித்தனமாகத் தெரியவில்லை.. புலிகள் அமைப்பின் கொள்கைப் பற்று.. இலட்சியப் பற்று.. அதன் மீதான கட்டுக்கோப்பான செயற்பாடுகளை மக்கள் இன்றும் வியந்து கொள்வது.. சிலருக்கு கண்மூடித்தனமான ஆதரவாகத் தெரிகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை உலக அரங்கில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்த போதும்.. புலிகள் மட்டுமே பல மாற்றங்களை சவால்களாக எடுத்து.. போராட்டத்தை இலட்சியப்பற்றோடு முன்னெடுத்தார்கள். இன்றும்.. புலிகள் விட்டிச் சென்ற எச்சங்கள் தான் ஈழத்தமிழனத்திற்கு உரிமை தேவை என்பதை சொல்ல பயன்படுகிறதே தவிர.. வேறு எவரினதும்..  சுயநல எடுப்பிலான செயற்பாடுகள் மக்கள் ஆதரவையோ.. சர்வதேச கவனிப்பையோ ஈர்க்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரதேசங்களில் சமூகரீதியான ஒடுக்கல்கள் இருந்தன என்பது மறுக்கமுடியாத உண்மைதான், அதன் காரணமாக உயர் சமூகத்தினரால்  பிற்படுத்தப்படுவதாக கருதிய மக்கள் தமது நலன்களுக்கு ஓரளவாவது உதவி செய்பவர்களுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதும் உண்மைதான்.

ஆனால் ஒரு பெரும்பான்மையினம், அதுவும் தமிழர்களின் சொந்த நிலப்பரப்பில்  வந்து முகாமிட்டு தங்கியிருந்து ஒட்டுமொத்த இனரீதியான ஒடுக்கல்களை  அழிவுகளை ,திட்டமிட்ட ரீதியில் மேற்கொண்டிருந்த அந்த காலத்தில், முழுக்க முழுக்க சிங்கள அரசியல் ராணுவ கொடூர அடக்குமுறையின்கீழ் வாழ்ந்து இருந்த காலகட்டத்தில்...

 ஒட்டுமொத்த இனமும் சிங்கள தேசத்தை வெறுத்து  அவர்களிடமிருந்து விடுதலைவேண்டும் என்று கொந்தளித்திருந்த கால கட்டத்தில்  ஒரு மனிதன் இனத்தின் உணர்வுகளைதான் முதலில் புரிந்து கொண்டிருக்கவேண்டும், அதற்கு மதிப்பளித்திருக்கவேண்டும்.

முதலில் இனம், அப்புறம்தான் மீதம் எல்லாம். சாதிமத பிரதேச வேறுபாடுகள் எல்லாம் அதற்கப்புறம்தான், 

போராட்டம் என்பது எல்லோரும் ஆயுதம் ஏந்தி எதிரிக்கெதிராக போராடுவது என்று அர்த்தம் இல்லை, உயர்ந்த நிலையில் இருக்கும்போதும் இனத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எதிரியை புறக்கணிப்பதுகூட இனத்துக்கான போராட்டம்தான்.

அதனை அல்பிரட் துரையப்பா செய்யவில்லை .

எந்த சிங்கள அரசு எம்மை நசுக்குகிறது என்று அந்தக்கால இளைஞர்கள் ,மக்கள் கட்சிகள் கொதித்துக்கொண்டிருந்ததோ, அதே  சிங்கள அரசின் அறிவிக்கப்படாத நாழ்நகர தளபதியாக இருந்திருக்கிறார் என்பது வரலாறு..

துரையப்பா துரோகி இல்லையென்றால், அக்காலத்தில் விடுதலை பெற்று தருவோம் என்று ரீல் விட்ட கட்சி தலைவர்களுக்கு இரத்த திலகமிட்டும், எந்தவித வசதிகளும் இல்லாமலே தனியாகவும் ஒரு சிலர் கொண்ட குழுவாகவும், சிங்கள ராணுவ இயந்திரத்துக்கெதிராக போராடி சித்ரவதைகளினால் சிறைகளிலும் சிறு சிறு மோதல்களிலும் செத்துப்போன இளைஞர்கள் யார்?

நகரத்தை அழகுபடுத்தினால் அவர் மக்களுக்கு நல்லது செய்தவர் என்று ஆகுமானால், 1995 யாழ்நகரத்தை கைப்பற்றியபின்னர் பூங்கா,நூலகம்,தெருக்கள்,கட்டிடங்கள் என்று புதுப்பித்து அழகாக்கிய சிங்கள அரசும் அதன் ராணுவமும் நல்லவர்கள் என்று ஆகிவிடுமா?

இனத்தின் உணர்வுகள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது சிங்கள அரச துணை இருக்கு என்ற இறுமாப்பில் துரையப்பா போன்றவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட  அந்த கால துரோக துளிகள்   ஓடையாகி நதியாகி ஏரியாகி, சமுத்திரமாகி   இறுதியில் துரோகங்களினாலேயே இந்த காலத்தில் முடித்தும் வைக்கப்பட்டது.

இறுதியில் துரோகங்கள்தான் வென்றது அதில் மாற்றுகருத்தில்லை, ஆனால் துரோகங்கள்  ஒருபோதும் பாராட்டுக்குரியது என்றாகிவிடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

தனி மனித செல்வாக்கு எப்படி அவருக்கு வந்தது?...சாதி குறைந்த, அடி  தட்ட மக்கள் ஏன் அவருக்கு பின்னால் போனார்கள்  என்று யோசியுங்கோ 
 
தமிழன். தமிழினம்.தனித்தமிழ்.தமிழனுக்கு ஒரு நாடு என்பதை தவிர வேறு மாற்றுக்கருத்துக்கள் இல்லை என்று சொன்னவரை என்ன செய்தீர்கள்?

இப்பவும் சும்மா எடுத்த வாக்குக்கு துரையப்பா குப்பை அள்ளினார். ரோட்டு கூட்டினார். கக்கூஸ் கழுவினார் எண்டு புகழாரம் சிந்திக்கொண்டு.....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

தமிழன். தமிழினம்.தனித்தமிழ்.தமிழனுக்கு ஒரு நாடு என்பதை தவிர வேறு மாற்றுக்கருத்துக்கள் இல்லை என்று சொன்னவரை என்ன செய்தீர்கள்?

இப்பவும் சும்மா எடுத்த வாக்குக்கு துரையப்பா குப்பை அள்ளினார். ரோட்டு கூட்டினார். கக்கூஸ் கழுவினார் எண்டு புகழாரம் சிந்திக்கொண்டு.....:cool:

அண்ணா , ஒரு குட்டி நாட்டில் சிறுபான்மையாய் இருந்து இருந்து கொண்டு எடுத்தவுடனேயே  நாட்டை பிரித்து தா என்று கேட்டது  தவறு ...சிங்களவர்களோடு இணைந்து இருந்து கொண்டு கொஞ்சம், கொஞ்சமாய்  சுயாட்சி கேட்டு இருக்கலாம் ...கிடைத்திருக்க கூடும் ...இனிக் கஸ்டம் ...பூச்சியத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.
தலைவரை மோட்டுத் தனமாய் உசுப்பி விட்டு அவரையும் ,அவர் குடும்பத்தையும்,பல்லாயிரக்கணக்கான போராளிகளையும் நாட்டுக்காய் என்று சொல்லி தேவையில்லாமல் சாகடித்தது தான் இந்த தமிழினம் செய்தது...தமிழீழம் என்று ஒன்று கிடைக்காது என்று சொன்ன அனைத்து  அரசியல்வாதிகள் ,புத்திஜீவிகள் போன்றோரை போட்டுத் தள்ளினது மட்டும் தான் கடைசியில் எஞ்சியது.,,அப்படி போட்டுத் தள்ளினதே இயலாமையின் வெளிப்பாடு தான் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொடுத்து, ராகம், அனுரா கம் பாடி.......அங்கோர் காற்சதங்கைக் காரியையும் கூட்டிக்கொடுத்த .....துரை என்றெல்லாம் அண்ணன் காசியால் (போ)தூற்றப்பட்டவருக்குத்தான் அந்தப் பதில் கிடைத்தது. 

சிங்களவர்களிடம் இருந்து தீர்வை பெற முடியாது.. தமிழ் மக்களுக்கு தமிழீழம் தான் தீர்வென்ற.. ஈழத்துக்காந்தி செல்வநாயகம்.. அவரை யாரப்பா உசுப்பேத்தினனீங்கள். 

1000 பையன்களை தாருங்கள் சிங்கள இராணுவத்தை விரட்டி தமிழீழம் அமைத்துத் தருவேன் என்று யாழ்ப்பாண எம் பியான மிஸ்டர் யோகேஸ்வரனை யாரப்பா உசுப்பேத்தினனீங்கள்.

வட்டுக்கோட்டைக்கு வாங்கோ.. இதோ இந்தத் தேர்தல் வெற்றியோடு தமிழீழம் அமைப்போம் என்று இரத்தத்திலமிட்ட அமிர்தலிங்கம்.. சம்பந்தன் வகையறாக்களை யாரப்பா.. உசுப்பேத்தினனீங்கள்.

ஈழத்தமிழர்களுக்கு ஒரே தீர்வு தமிழீழம் இதைச் சொல்ல டெசோ என்ற அமைப்பையும் உருவாக்கின தமிழ்நாட்டுக் கட்டுமரம்... கருநாநிதியை யாரப்பா உசுப்பேத்தினனீங்கள்..

தமிழீழம் அமைக்கிறம் என்று தமிழீழத்தை அடைமொழியாக்கி.. இயக்கம் அமைச்ச.. ஆக்கள்.. அவர் இவர் உவர் என்று.. இப்பவும் பலர் தாடியும் தலையும் நரைச்சுக்கிட்டு அலையினம்.. உவையை யாரப்பா உசுப்பேத்தினனீங்கள்..

இத்தனை உசுப்பேத்தல்களுக்கு பின்னாலும் யார் இருந்தவையோ.. அவை தான்.. புலிகள் அமைப்பையும் உசுப்பேத்தினவை. எனி அவையவை தொப்பி எடுத்துக் கொழுவிட்டு... லைக் பட்டினை அமத்தி முதுகு சொறிச்சுக்குங்க. 

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

இத்தனை உசுப்பேத்தல்களுக்கு பின்னாலும் யார் இருந்தவையோ.. அவை தான்.. புலிகள் அமைப்பையும் உசுப்பேத்தினவை. எனி அவையவை தொப்பி எடுத்துக் கொழுவிட்டு... லைக் பட்டினை அமத்தி முதுகு சொறிச்சுக்குங்க. 

அப்படி எல்லாம் அவர்களை சொறியவைக்க வேண்டாம் உறவே! தமிழீழம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கமே அவர்களை எப்போதோ சொறிய வைத்துவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

அண்ணா , ஒரு குட்டி நாட்டில் சிறுபான்மையாய் இருந்து இருந்து கொண்டு எடுத்தவுடனேயே  நாட்டை பிரித்து தா என்று கேட்டது  தவறு ...சிங்களவர்களோடு இணைந்து இருந்து கொண்டு கொஞ்சம், கொஞ்சமாய்  சுயாட்சி கேட்டு இருக்கலாம் ...கிடைத்திருக்க கூடும் ...இனிக் கஸ்டம் ...பூச்சியத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.
தலைவரை மோட்டுத் தனமாய் உசுப்பி விட்டு அவரையும் ,அவர் குடும்பத்தையும்,பல்லாயிரக்கணக்கான போராளிகளையும் நாட்டுக்காய் என்று சொல்லி தேவையில்லாமல் சாகடித்தது தான் இந்த தமிழினம் செய்தது...தமிழீழம் என்று ஒன்று கிடைக்காது என்று சொன்ன அனைத்து  அரசியல்வாதிகள் ,புத்திஜீவிகள் போன்றோரை போட்டுத் தள்ளினது மட்டும் தான் கடைசியில் எஞ்சியது.,,அப்படி போட்டுத் தள்ளினதே இயலாமையின் வெளிப்பாடு தான் 
 
இந்திராகாந்தி சிலோன் தமிழ் பொடியளை கூப்பிட்டு ஆயுதமும் குடுத்து பயிற்சியும் குடுத்தது புறா சுடவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அண்ணா , ஒரு குட்டி நாட்டில் சிறுபான்மையாய் இருந்து இருந்து கொண்டு எடுத்தவுடனேயே  நாட்டை பிரித்து தா என்று கேட்டது  தவறு ...சிங்களவர்களோடு இணைந்து இருந்து கொண்டு கொஞ்சம், கொஞ்சமாய்  சுயாட்சி கேட்டு இருக்கலாம் ...கிடைத்திருக்க கூடும் ...இனிக் கஸ்டம் ...பூச்சியத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.
தலைவரை மோட்டுத் தனமாய் உசுப்பி விட்டு அவரையும் ,அவர் குடும்பத்தையும்,பல்லாயிரக்கணக்கான போராளிகளையும் நாட்டுக்காய் என்று சொல்லி தேவையில்லாமல் சாகடித்தது தான் இந்த தமிழினம் செய்தது...தமிழீழம் என்று ஒன்று கிடைக்காது என்று சொன்ன அனைத்து  அரசியல்வாதிகள் ,புத்திஜீவிகள் போன்றோரை போட்டுத் தள்ளினது மட்டும் தான் கடைசியில் எஞ்சியது.,,அப்படி போட்டுத் தள்ளினதே இயலாமையின் வெளிப்பாடு தான் 
 
முரளிதரனை பார்த்து வாளந்த தாங்களா இப்படி எழுதுவது? 😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

எனக்கு வரலாறு சரியாகத்தெரியாது ஆனால் ஆரம்பத்தில் மாவட்ட சபைக்கு அதிக அதிகாரங்கள் கேட்டும் சிங்கள அரசுகள் வழங்கவில்லை என்று கூறுகிறார்கள், மாகாணசபை, தமிழீழம் எல்லாம் பின்னாலில் வந்ததாக இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎20‎-‎07‎-‎2021 at 19:48, nedukkalapoovan said:

சிங்களவர்களிடம் இருந்து தீர்வை பெற முடியாது.. தமிழ் மக்களுக்கு தமிழீழம் தான் தீர்வென்ற.. ஈழத்துக்காந்தி செல்வநாயகம்.. அவரை யாரப்பா உசுப்பேத்தினனீங்கள். 

1000 பையன்களை தாருங்கள் சிங்கள இராணுவத்தை விரட்டி தமிழீழம் அமைத்துத் தருவேன் என்று யாழ்ப்பாண எம் பியான மிஸ்டர் யோகேஸ்வரனை யாரப்பா உசுப்பேத்தினனீங்கள்.

வட்டுக்கோட்டைக்கு வாங்கோ.. இதோ இந்தத் தேர்தல் வெற்றியோடு தமிழீழம் அமைப்போம் என்று இரத்தத்திலமிட்ட அமிர்தலிங்கம்.. சம்பந்தன் வகையறாக்களை யாரப்பா.. உசுப்பேத்தினனீங்கள்.

ஈழத்தமிழர்களுக்கு ஒரே தீர்வு தமிழீழம் இதைச் சொல்ல டெசோ என்ற அமைப்பையும் உருவாக்கின தமிழ்நாட்டுக் கட்டுமரம்... கருநாநிதியை யாரப்பா உசுப்பேத்தினனீங்கள்..

தமிழீழம் அமைக்கிறம் என்று தமிழீழத்தை அடைமொழியாக்கி.. இயக்கம் அமைச்ச.. ஆக்கள்.. அவர் இவர் உவர் என்று.. இப்பவும் பலர் தாடியும் தலையும் நரைச்சுக்கிட்டு அலையினம்.. உவையை யாரப்பா உசுப்பேத்தினனீங்கள்..

இத்தனை உசுப்பேத்தல்களுக்கு பின்னாலும் யார் இருந்தவையோ.. அவை தான்.. புலிகள் அமைப்பையும் உசுப்பேத்தினவை. எனி அவையவை தொப்பி எடுத்துக் கொழுவிட்டு... லைக் பட்டினை அமத்தி முதுகு சொறிச்சுக்குங்க. 

நெடுக்ஸ் , தமிழ் அரசியல்வாதிகளை பற்றி ஏற்கனே நிகழ்வும் , அகழ்வும் பகுதியில் எழுதியிருக்கிறேன்....கட்டாயம் வாசித்து இருப்பீர்கள் என்று தெரியும் ... அதில ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கோ.
இப்ப நான் உங்களிடமும் ,உங்களை போல பிரபாகரன் முருகனுக்கே நிகரானவர்...போராளிகள் எங்கள் இரத்தம் என்று  இங்கே இருந்து கொண்டு எழுதிக் கொண்டு இருப்பவர்களிடம் ஒரு கேள்வி ?
இறுதி யுத்தம் ஆரம்பிக்கும் போது, புலிகள் ஆட் பற்றாக் குறையால் தவிக்கும் போது ஏன்  நீங்கள் போகவில்லை ? [இதில் நீங்கள் என்பது நெடுக்ஸ் மட்டுமல்ல .]...உங்கள் ஒரே குடும்பத்து உறுப்பினருக்கு ஏதாவது ஆபத்து என்றால் போகாமல் சாகட்டும் என்று வேடிக்கை பாத்திட்டு இருப்பீர்களா?
எயாப் போட் துறந்து தான் இருந்தது ...இறுதி வரை போவதற்கு தடை இருக்கவில்லை ...போன சிலரை எனக்குத் தெரியும் .
தலைவரை உசுப்பேத்தி தான் நடுக் காட்டில் அநாதையாய் விட்டீ ர்கள் 
இனி மேல் யாராவது வருவார்கள் உசுப்பேத்தி பப்பா மரத்தில் ஏத்தலாம் என்று கனவு காணாதீங்கோ .
ஊரில் 90களில் பிறந்த பிள்ளைகளுக்கு தலைவர் ,புலிகள் பெயரளவில் தெரியும் ....2000ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களுக்கு அதுவும் தெரியாது 
இனி மேலாவது உணர்ச்சி அரசியலை விட்டுட்டு யதார்த்தத்தை புரிந்து எழுதுங்கோ 

On ‎20‎-‎07‎-‎2021 at 19:05, karu said:

காட்டிக்கொடுத்து, ராகம், அனுரா கம் பாடி.......அங்கோர் காற்சதங்கைக் காரியையும் கூட்டிக்கொடுத்த .....துரை என்றெல்லாம் அண்ணன் காசியால் (போ)தூற்றப்பட்டவருக்குத்தான் அந்தப் பதில் கிடைத்தது. 

வணக்கம் ,அவசரத்தில  பேரை மாத்தி வந்திட்டிங்கள் போல 😉
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

முரளிதரனை பார்த்து வாளந்த தாங்களா இப்படி எழுதுவது? 😂😂😂😂

என்ன செய்ய மீரா , யுத்தத்தால் எதுவும் கிடைக்காது என்று உணர்ந்து கொள்ள அனுபவமும், வயசும் தேவையாயிருக்கு. 
 
20 hours ago, vasee said:

எனக்கு வரலாறு சரியாகத்தெரியாது ஆனால் ஆரம்பத்தில் மாவட்ட சபைக்கு அதிக அதிகாரங்கள் கேட்டும் சிங்கள அரசுகள் வழங்கவில்லை என்று கூறுகிறார்கள், மாகாணசபை, தமிழீழம் எல்லாம் பின்னாலில் வந்ததாக இருக்கலாம். 

இல்லை வசி எழுத்தவுடனே தமிழீழம் தான் கேட்டது ...இடையில் சுயாட்சிக்கு கருணா ஒத்துக் கொண்டுட்டார் என்று தான் துரோகியாக்கப்பட்டார்...அடைந்தால் தமிழீழம் என்று போராடி விட்டு இடையில் அதில் இருந்து வெளியேறினால் இறந்த போராளிகளை அவமதிப்பதாகும் என்று புலிகளால் சொல்லப்பட்டது ..கடைசியில் மிச்சம் இருந்த போராளிகளையும் கொண்டது தான் மிச்சம் 🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நெடுக்ஸ் , தமிழ் அரசியல்வாதிகளை பற்றி ஏற்கனே நிகழ்வும் , அகழ்வும் பகுதியில் எழுதியிருக்கிறேன்....கட்டாயம் வாசித்து இருப்பீர்கள் என்று தெரியும் ... அதில ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கோ.

இப்ப நான் உங்களிடமும் ,உங்களை போல பிரபாகரன் முருகனுக்கே நிகரானவர்...போராளிகள் எங்கள் இரத்தம் என்று  இங்கே இருந்து கொண்டு எழுதிக் கொண்டு இருப்பவர்களிடம் ஒரு கேள்வி ?
இறுதி யுத்தம் ஆரம்பிக்கும் போது, புலிகள் ஆட் பற்றாக் குறையால் தவிக்கும் போது ஏன்  நீங்கள் போகவில்லை ? [இதில் நீங்கள் என்பது நெடுக்ஸ் மட்டுமல்ல .]...உங்கள் ஒரே குடும்பத்து உறுப்பினருக்கு ஏதாவது ஆபத்து என்றால் போகாமல் சாகட்டும் என்று வேடிக்கை பாத்திட்டு இருப்பீர்களா?

எயாப் போட் துறந்து தான் இருந்தது ...இறுதி வரை போவதற்கு தடை இருக்கவில்லை ...போன சிலரை எனக்குத் தெரியும் .

தலைவரை உசுப்பேத்தி தான் நடுக் காட்டில் அநாதையாய் விட்டீ ர்கள் 
இனி மேல் யாராவது வருவார்கள் உசுப்பேத்தி பப்பா மரத்தில் ஏத்தலாம் என்று கனவு காணாதீங்கோ .
ஊரில் 90களில் பிறந்த பிள்ளைகளுக்கு தலைவர் ,புலிகள் பெயரளவில் தெரியும் ....2000ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களுக்கு அதுவும் தெரியாது

இனி மேலாவது உணர்ச்சி அரசியலை விட்டுட்டு யதார்த்தத்தை புரிந்து எழுதுங்கோ 

 உங்கள் எழுத்து மிகவும் சிறுபிள்ளைத் தனமாக உள்ளது. ஈழத்தைப் பொறுத்த வரை பல தமிழ் மக்கள் போராட்டத்துக்கு நேரடியாகவோ.. மறைமுகமாகவோ உதவித்தான் உள்ளார்கள். ஒரு சில நூறு பேர் காட்டிக்கொடுப்பு சொந்த இனக்கொலை துரோகங்களை செய்து கொண்டிருந்தாலும். எனவே.. உங்களின் உப்புச் சப்பற்ற முதலாவது பந்தியை அப்படியே தவிர்ப்பது நல்லது.

ஆம்.. தேசிய தலைவர் முருகனுக்கு நிகரானவர் தான். முருகன் என்பவர் வேல் கொண்டு எமது மண்ணை மக்களை காத்த மூத்த காவலன். எங்கள் முப்பாட்டன். அவரின் வரிசையில்.. தேசிய தலைவரும்.. தன் மக்களை மண்ணை நேசித்துக் கொண்டே இருந்தார்.. அவருக்கு சுயநலத்தோடு செயற்பட எத்தனையோ சந்தர்ப்பங்கள் அமைத்தும் மக்கள் மண் கொள்கை இலட்சியம் என்றே வாழ்ந்தார்.. வழிகாட்டினார். அப்படியொரு தலைமைத்துவ வீரனை.. உலகமே வியக்கிறது. உங்களுக்கு அந்த பண்புகளை புரியவில்லை என்பதற்காக..அப்படி இல்லை என்றாகாது.

நான் சொல்லவில்லை.. தேசிய தலைவரின் தலைமைத்துவப் பண்புகளை சிங்கள பேராசிரியர்கள் கூட வியந்து பாராட்டி உள்ளனர். ஏன் மகிந்த கும்பல் கூட பாராட்டி உள்ளது. ஆனால்.. கேவலம்.. உங்களைப் போன்ற ஒட்டுக்குழு பேப்பர்களை.. வானொலிகளை கேட்பவர்களுக்கு அந்தப் புரிதல் வர வாய்ப்பில்லை தான். அது சரி.. லண்டனில் இருந்து 2009 வரை இயங்கிய ஒட்டுக்குழு ஊடகங்கள்.. வானொலிகளுக்கு என்னாச்சு.. தேசக்காரர் எங்க ஓடிட்டாங்கள். எஜமானர்களை கைவிட்டிட்டினமோ..??!

நீங்கள் வாழும் வட்டம் சிறியது போலும். தமிழ் இளையோர் அமைப்புக்களை எல்லாம் கோத்தா தடை செய்திருக்கிறார். அந்தளவுக்கு.. 2000ம் ஆண்டு பிறந்த பிள்ளைகள் தெளிவா செயற்படுகிறார்கள். ஊரில் வெளிப்படையாக தொழிற்பட முடியாவிட்டாலும்.. பலர் தாம் அடிமைப்படுத்தப்பட்டுள்ளதை.. ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை உணர்கிறார்கள். ஆனால்.. சிங்கள எஜமான விசுவாச ஒட்டுக்குழுக்களுக்கும்.. அதன் வால்பிடிகளுக்கும்.. அந்த உணர்வு செத்துப் போய் பல காலம். உங்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது.

ஒரு இனத்தின் விடுதலை அந்த இனத்தின் தலைவனில் மட்டும் தங்கியில்லை.. அந்த இனத்தின் தேவைப்பாடு.. விடா முயற்சியில் தங்கியுள்ளது. வெறும் யுத்தம் மட்டுமல்ல... வெற்றியை தீர்மானிப்பது.. விவேகமும் தீர்மானிக்கும். 

யுத்த வெற்றிக்கான விலையை சிங்களம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. மொத்த தேசத்தையும் அடகு வைத்தாகிவிட்டது. இப்படியான விவேகமற்ற யுத்த வெற்றியை விட.. சொந்த மக்களின் மண்ணின் உரிமைக்குரலை உலகெங்கும் ஓங்கி ஒலிக்கவிட்டு ஓய்ந்த புலிகள் எவ்வளவோ மேல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nedukkalapoovan said:

ஆஹா நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை ...ஏற்கனவே தெரிந்தது  தான் ..வாயால் வடை சுடுகின்ற உங்களை போல எத்தனை பேரை பாத்திருக்கன்...இங்கயிருந்து காசை விசுக்கினால் தமிழீழம் பறந்து வரும் ...ஊரில் சாவது யாராருந்தாலும் பரவாயில்லை அது தலைவராய் இருந்தால் கூட 

சின்ன வயசில பள்ளிக் கூடத்தில டீச்சர் நெடுக்ஸ் நீங்கள் நேற்று விடுமுறையில் என்ன செய்தனீங்கள் ....அம்மா புட்டு அவித்தவ . அம்மா வீடு கூட்டினவா என்று சொல்றாப் போலவே இந்த வயசிலையும் வெட்கமில்லாமல் சொல்கிறீர்களே 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

வழமையான தங்கள் கருத்து வறுமையின் வெளிபாடு. தலைவரே போராளிகளை மக்களை கூட இருந்து சா என்று கேட்கவும் இல்லை சொல்லவும் இல்லை. மக்களின் பங்களிப்பை பல தளங்களுக்கும் விரிவு செய்ததால் தான்.. இன்றும் இல்லாத புலிகளுக்கு அவர்களின் கொள்கை தொடர்பில்.. சிங்களம்.. உட்பட.. ஏன் நீங்கள் கூட அஞ்சுகிறீர்கள்.

போராளிகளின் தியாகங்களை மதிக்கத்தெரியாத நீங்கள் எல்லாம்.. போராட்டம் பற்றிக் கதைப்பதே தவறு. சொந்தச் சுயநலனுக்காக.. மக்களையும் மண்ணையும் காட்டிக்கொடுத்தவனை புகழும் உங்களிடம் போய்.... வேறு எதனை எதிர்பார்க்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

காசு இருக்கிறவனை சாக சொல்லி கேட்கவில்லை என்று சொல்கிறீர்கள் ...அப்ப கஷ்டப்பட்டவன் தான் போராடி சாக வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

காசு இருக்கிறவனை சாக சொல்லி கேட்கவில்லை என்று சொல்கிறீர்கள் ...அப்ப கஷ்டப்பட்டவன் தான் போராடி சாக வேண்டும் 

ஆக உங்களுக்கு மாலைக் கண் என்பதற்காக.. உலகில் உள்ள எல்லாருக்கும் மாலையானதும் கண் தெரியாது என்பதாகாது. விளங்க மறுப்பவர்களுக்கு.. திரும்ப திரும்ப ஒன்றையே எழுதிக்கிட்டு இருக்க நமக்கும் நேரமில்லை. 

தூங்கிறவனை எழுப்பலாம்.. நடிக்கிறதுகளை எழுப்ப முடியாது.

நீங்க பேசாமல்.. அவன் முரளிதரனையும்.. சொந்த இனத்தையே சீரழிச்ச... ஒட்டுக்குழுக்களையும் பாராட்டிக்கிட்டு இருங்க. அதுதான் உங்களுக்கு சரியானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

ஓம் நான் நீங்கள் சொல்ற படி செய்றன் ...நீங்கள் போய் உங்கள் பிள்ளை ,குட்டிகளை கவனமாய் படிப்பிச்சு  கொண்டு இடைக்கிடையே கணனியில் வந்து இப்படி ஊரான் பிள்ளையை உசுப்பேத்துங்கோ . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

ஓம் நான் நீங்கள் சொல்ற படி செய்றன் ...நீங்கள் போய் உங்கள் பிள்ளை ,குட்டிகளை கவனமாய் படிப்பிச்சு  கொண்டு இடைக்கிடையே கணனியில் வந்து இப்படி ஊரான் பிள்ளையை உசுப்பேத்துங்கோ . 

யாவும் கற்பனை தான் தங்களுக்கு. 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2021 at 20:52, ரதி said:

என்ன செய்ய மீரா , யுத்தத்தால் எதுவும் கிடைக்காது என்று உணர்ந்து கொள்ள அனுபவமும், வயசும் தேவையாயிருக்கு. 
 
இல்லை வசி எழுத்தவுடனே தமிழீழம் தான் கேட்டது ...இடையில் சுயாட்சிக்கு கருணா ஒத்துக் கொண்டுட்டார் என்று தான் துரோகியாக்கப்பட்டார்...அடைந்தால் தமிழீழம் என்று போராடி விட்டு இடையில் அதில் இருந்து வெளியேறினால் இறந்த போராளிகளை அவமதிப்பதாகும் என்று புலிகளால் சொல்லப்பட்டது ..கடைசியில் மிச்சம் இருந்த போராளிகளையும் கொண்டது தான் மிச்சம் 🥴

முரளீதரன் ஒத்துக்கொள்ள என்ன தகுதி உள்ளது???

தலைமை & மத்திய குழு உள்ள போது இப்படியான முடிவு சரியா?

முரளீதரன் துரோகியாக அறிவிக்கப்பட இது மட்டுந்தான் காரணமா? நீங்கள் பூசனிக்காயை அல்ல பூசனி தோட்டத்தையே ஓர் பருக்கை சோற்றுக்குள் மறைக்க முற்படுகிறீர்கள்.

தாயகத்தில் மக்கள் போராளிகள் சாக நீங்களும் புலம்பெயர் நாட்டிற்கு ஓடி வந்ததை மறந்து விட்டீர்கள்..😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.