Jump to content

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டயகம சிறுமிக்கு நீதி கோரி ரிஷாத் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து எரிகாயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நியாயம் கோரி இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

211145238_576048060221738_84212961901729

கொழும்பு - பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்திற்கு முன்பாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் எஸ்.இராஜேந்திரன்,

வறுமை நிலையிலுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை இவ்வாறு வீடுகளில் பணிக்கு அமர்த்துகின்றனர். இவ்வருடத்தில் மாத்திரம் இது போன்று 10 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த சம்பவம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

216932237_351480039815380_24542985533447

வறுமையிலுள்ள குடும்ப பிள்ளைகளுக்கு இவ்வாறு அநீதி  இழைக்கப்படுவதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே உயிரிழந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்கும் வரை எமது போராட்டத்தை நாம் கைவிடப் போவதில்லை. பாராளுமன்றத்திலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த சிறுமி குறித்து கருத்து வெளியிடவில்லை.

217302018_363722678483091_82374901281373

தேர்தல் காலங்களில் சென்று வாக்கு கேட்கும் இவர்கள் , பாராளுமன்றத்தில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதன் காரணமாகவா இது தொடர்பில் கருத்து வெளியிடவில்லை என்று கேள்வியெழுப்புகின்றோம். எனவே அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் இதற்கான நீதியை வழங்க வேண்டும் என்றார்.

டயகம சிறுமிக்கு நீதி கோரி ரிஷாத் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

‘தொடர்ச்சியாக பல தடவைகள் இஷாலினி வன்புணர்வு’

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குச் சொந்தமான கொழும்பிலுள்ள வீட்டிலில்  பணிப்பெண்ணாக வேலைசெய்த  ஜூட் குமார் இஷாலினி என்ற சிறுமி, பலமாதங்களாக, நேரம் கிடைக்கும் போதெல்லாம்   பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்த ஜூட் குமார் இஷாலினியின் நீதிமன்ற வைத்திய  அறிக்கையிலேயே மேற்கண்ட விவரம் வெளியாகியுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரியவின் முன்னிலையில், பொரளை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற வைத்திய பரிசோதனை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு தடயவியல் மருத்துவர் எம்.என் ராஹூல் ஹக்வின் கையொப்பத்துடன் இவ்வறிக்கை, பொரளை பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இறந்த சிறுமி, தாக்கப்படவில்லை. சித்திரவதை செய்யப்படவில்லை. எனினும், எரிகாயங்களால், உடல் 72 சதவீதம் எரிந்துள்ளதென அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சிறுமி கர்ப்பமடையாது, நேரம் கிடைக்காத போதெல்லாம் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயினால் உடலின் மேல் பகுதியில் ஏற்பட்ட எரிகாயங்களில் கிருமிகள் தொற்றியமையால், ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாகவே இச்சிறுமி மரணமடைந்துள்ளார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்த, தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த, ஜூட் குமார் இஷாலினிக்கு (வயது 16) நீதி கோரி, அவருடைய சொந்த ஊரான டயகமவில், இன்று (20) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

Tamilmirror Online || ‘தொடர்ச்சியாக பல தடவைகள் இஷாலினி வன்புணர்வு’

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்த  நாசங்கள்  தெரியவரக்கூடாது என்பதற்காகவே  எரித்து இருக்கிறார்கள்😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

தீயினால் உடலின் மேல் பகுதியில் ஏற்பட்ட எரிகாயங்களில் கிருமிகள் தொற்றியமையால், ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாகவே இச்சிறுமி மரணமடைந்துள்ளார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியாயின் தீக்காயம் வந்தும் உடனடியாக ஆஸ்பத்திரி கூட்டிப்போகவில்லை?

**

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறுமி மரணம் குறித்து , இரண்டு போலீஸ் குழுக்கள் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளதாக, அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். காரணமானவர்கள், சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர், அந்த பெண் மீதான பாலியல் வன்முறை இறந்த தினத்தில் நடந்ததாக தெரியவில்லை, முன்னரும் பல தடவை நடந்திருக்கலாம் என்று சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை தந்திருப்பதாக சொல்கிறார்.

முன்னர் என்னும் போது, ரிஷாட் கைதுக்கு முன்னர் என்றால், இந்த விசாரணை வேறு பரிமாணம் எடுக்கும்.

அப்படி நிலையில், நான் மேலே கூறிய ரிஷாட் குறித்த கருத்துக்களை வாபஸ் வாங்க தயாராகவே உள்ளேன்.  

11 hours ago, Paanch said:

போனில் ஒரு தகவல் வந்தால்.... அந்தத் தகவல் முக்கிய தகவலா! அன்றிச் சாதாரண தகவலா!! என்பதைப்  போனை எடுத்துக் கேட்பதற்குமுன்னரே தெரியப்படுத்தும் தொழில் நுட்பம் கொண்ட போன்கள் எங்கே விற்கப்படுகின்றன? அதன் விலை என்ன.??   

அப்படி வர சாத்தியம் இல்லை. அப்படி வந்தாலும், வாங்க மாட்டீர்கள்.

முன்பு தந்தி, இருந்த போது, துர் செய்திகளை கொண்ட தந்திகள், சிவப்பு நிறத்தில் இருந்தனவாம்.

சிவப்பு நிற தந்தியுடன் ஊருக்கு டெலிவரிக்கு வந்தால், ஊரே அழுது கொண்டு ஓடுமாம்.... எந்த வீட்டுக்கு தந்தி போகிறது என்று. அவர் போக, போக, தமக்கு இல்லை என்று சிலர் நிக்க, புதிதாக, அழுபவர்கள், சேர ஊரே அல்லோலகல்லோலப்படுமாம்......

அதன் காரணமாக, கையில் வைத்திருக்காமல், மறைத்து வைக்க வேண்டும் என்று ஆர்டர் வந்ததாம்.

Link to comment
Share on other sites

6 hours ago, பிழம்பு said:

இந்நிலையில், எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்த,

அனுமதிக்கப்பட்டதன் பின்னரே மரணித்து இருப்பதால், அவரிடம் வாக்குமூலம் பெற்றிருப்பார்களே? அதுபற்றிய செய்திகள் ஏன் வெளிவரவில்லை.??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2021 at 21:28, nunavilan said:

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் இந்த விடயம் நடைபெற்றுள்ளமையினாலேயே வெளியில் தெரியவந்துள்ளது.

அவர் சிறையில் இருந்தமையாலேயே இது வெளியில் தெரிய வந்துள்ளது.

On 19/7/2021 at 07:47, Nathamuni said:

புலிகள் காலத்தில், மகிந்தா வலது கையாக இயங்கிய ரிஷாட், வில்பத்து காடு அழித்து தனது ஆதரவாளர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு பெரும் செல்வாக்குடன் விளங்கினார்.

ஆடிய ஆட்டம் என்ன? பேசிய இனவாதம் என்ன? சுரண்டிச் சேர்த்த சொத்து எவ்வளவு? எல்லாம் இழந்து உடுக்கை இழந்தவன் கைபோல ரிஷாட் இன்று வைத்திய சாலையில். தர்மம் நின்று கொல்லும். எவருடைய அதிகாரத்தில் இருந்துகொண்டு துள்ளினாரோ அவருடைய அதிகாரத்திலேயே சிக்கி சின்னா பின்னமாகி தவிக்கிறார். இப்பவாவது புரிய வேண்டும் இழந்தவர்களின் வலி. 

 

Link to comment
Share on other sites

<எந்தவித அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் விசாரணையை மேற்கொள்ளுங்கள். புதிய பொலிஸ் குழுவுக்கு விசாரணைகளை கையளியுங்கள்>
<இந்த விசாரணையில் இருந்து பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரியவை அகற்றுங்கள். அவரது விசாரணை நடவடிக்கையில் வெளிப்படைதன்மை இருப்பதாக தெரியவில்லை.>
<புதைக்கப்பட்ட இஷாலினியின் சடலம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, புதிய சட்ட வைத்திய விசாரணை அறிக்கை பெறப்பட வேண்டும்.>
<கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனை நேரடியாக சந்தித்து தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம், வேலு குமார் எம்பி, உதய குமார் எம்பி ஆகியோர் வலியுறுத்து>
பிரதி பொலிஸ் மாஅதிபரிடம், தமுகூ எம்பிக்கள் மேலும் கூறியதாவது,
“இது தமிழ், முஸ்லிம். சிங்கள இனப்பிரச்சினை அல்ல. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அரசியல் பிரச்சினையும் அல்ல. சட்டம் ஒழுங்கு பிரச்சனை."
"மரணமான இஷாலினியின் சந்தேகத்துக்கு இடமான மரணம் தொடர்பில் மேலதிக விபரங்களை இந்த புதிய பொலிஸ் குழு கண்டு பிடித்து நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.”
“வீட்டுப்பணியில் ஈடுபட இஷாலினியின் வயது உகந்ததா? அவரது மரணம் ஏன் சம்பவித்தது? தற்கொலை என பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலசூரிய எப்படி அதற்குள் முடிவுக்கு வந்தார்?"
"அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றால் அதற்கான காரணம் என்ன? அவர் தற்கொலை செய்துக்கொள்ள தூண்டப்பட்டாரா? பாலியல் நடைமுறைக்கு அவர் உள்ளாக்கப்பட்டாரா?"
"அவர் பணியில் இருந்த இல்லத்தின் அனைத்து உறுப்பினர்களின் வாக்குமூல, விசாரணை விபரங்கள் என்ன? அவர்கள் அனைவரும் முழுமையாக விசாரிக்கப்பட்டனரா? இஷாலினிக்கும், அவர் வசித்த வீட்டு உறுப்பினர்களுக்கும் இடையில், இவரது தொழிலை தவிர வேறு உறவுகள் இருந்தனவா?"
"நெருப்புக்காக பயன்படுத்தப்பட்ட லைட்டர் எவருடையது? மண்ணெண்னை ஊற்றி தற்கொலை செய்துக்கொண்டார் என கூறும் பொரளை பொலிஸ் பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரிய, தற்கொலை செய்து கொள்பவர் இயல்பாக தலையில் மண்ணெண்னையை ஊற்றிக்கொள்ளாமல், ஏன் தனது காலில் ஊற்றிக்கொண்டார் என்பதற்கு தரும் விளக்கம் என்ன?"
இக்கேள்விகளுக்கான விடைகளை பொலிஸ் விசாரணை குழு கூடிய விரைவில் நாட்டுக்கு பெற்றுத்தர வேண்டும்.”
“குற்றம் நிகழ்ந்து இருந்தால், குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்கள ஆலோசனை பெறப்பட வேண்டும். இவை அனைத்தையும் நாம் கண்காணிப்போம்.”
217511733_10215542132545586_241538467082
 
 
218290072_10215542131905570_370829705144
 
 
214004442_10215542132105575_520108300917
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு வருமான வரித்துறையும் கொஞ்சம் விசாரணையில் இறங்கினால் இன்னும் அதிகமான விபரங்கள்  வெளிவரலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கடந்த 5 நாட்களில் 399 வீதி விபத்துக்கள் பதிவு – 52 பேர் உயிரிழப்பு!

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, மலையகச் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொரளை பொலிஸாருக்கு மேலதிகமாக, கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரும் கொழும்பு தெற்கு பிரிவு குற்றவியல் விசாரணைப் பிரிவினரும் இந்த விசாரணைகளை மேற்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், குறித்த குழுக்கள் சிறுமி முன்னதாக தங்கியிருந்து பாடசாலைக்குச் சென்ற அவிசாவளை, புவக்பிட்டி – கிரிவந்தல பிரதேசத்தில் நான்கு பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சிறுமி கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் மற்றும் உப அதிபரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டயகம பகுதிக்கு சென்று, சிறுமியின் தாயாரிடம் இன்று மீளவும் வாக்குமூலம் பெறவுள்ளதுடன், ஏனைய சிலரிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன எனவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணியாற்றிய ஆண் பணியாளரின் கைபேசியை பொலிஸார் சில தினங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1229785

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட் வீட்டிலிருந்த இளைஞர் தும்புத்தடியால் தாக்கி வருகிறார் என்று தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்தார் ! - ஆர்.ரஞ்சினி

 

188274731_520639402580014_347615656082802527_n.jpg
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த இளைஞர் ஒருவர், தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருகிறார் என்று தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்ததாக உயிரிழந்த ஹிஷாலினியின் தாயாரான ஆர்.ரஞ்சினி தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைத் தெரிவித்தார். 

தான் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காகவே ஹிஷாலினி, ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு பணிப் பெண்ணாக சென்றார் என்றும் அவரது தாயார் ரஞ்சினி குறிப்பிட்டார்.

ரிஷாட் எம்.பியின் வீட்டிலுள்ள இளைஞர் ஒருவர் தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருவதாக, தனது மகள் தொலைபேசியூடாக தெரிவித்துக் கொண்டிருந்தபோது, தனது மகளிடமிருந்து தொலைபேசியைப் பறித்த அந்த இளைஞர், ரிஷாட் பதியூதீனின் மனைவியை ஹிஷாலினி எதிர்த்துப் பேசுகிறார் என்று தன்னிடம் கூறியதாக ஹிஷாலினியின் தாயார் தெரிவித்தார்.

தனது மகளை அடிக்க வேண்டாம் என ரிஷாட் பதியூதீனின் மனைவியிடம் தான் கேட்டுக்கொண்டதாகவும் ரிஷாட் எம்.பியின் வீட்டில் பணிபுரிய முடியாது என்று தனது மகள் இறுதியாக தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
 

http://www.battinews.com/2021/07/blog-post_413.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன ரீதியில் பார்த்தால்.....

நான் ஆரம்பத்தில், ஒரு சிறு அனுதாபத்தில் எனது பதிவுகளை இட்டு இருந்தேன். சில கள உறவுகள் கூட அதிருப்தி தெரிவித்து இருந்தார்கள்.

எனினும், தமிழர், இஸ்லாமியர் என்ற கோணத்தில், வரும் சில பதிவுகளை பார்த்தால், இந்த அதிருப்திகள் சரியானவை என்றே தோன்றுகிறது.

அதாவுல்லாவும், மனோ கணேசனும் ஒரு டிவி நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

அதாவுல்லா மலையக சமூகம் தொடர்பில், ஒரு இழிவான வார்த்தைப் பிரயோகம் செய்கிறார். வெகுண்ட மனோ, கண்ணாடி குவளையில் இருந்த தண்ணீரை அவர் மீது வீசி எறிகிறார்.

மலையக தமிழர்களை அந்தளவு கேவலமாக நினைக்கிறார்கள், இந்த இஸ்லாமியர்கள் என்று ஒரு பதிவும், தமிழர்களுக்கு எதிராக மோசமான, இன ரீதியான வேலைகளை செய்த ரிசாடின் குடும்பத்தின், இந்த வேலையும் அதே வகையில் பார்க்கப்படவேண்டும் என்ற பதிவும் பார்த்தேன்.

சரியோ, தவறோ, ஒரு விடயம் சாதரண குற்றமாக  பார்க்கப்படுவதுக்கும், இன  ரீதியில் பார்க்கப்படுவதுக்கும் உள்ள வித்தியாசத்தினை நான் உணர்கின்றேன்.

முதலில், சாதாரணமாகவே பார்த்தேன். இப்போது இனரீதியில் பார்க்கும் போது, கடும் கோபமும் வருகிறது.

எனது மேலேயுள்ள பதிவுகள் சிலரை நெளிய வைத்திருக்கும், பொறுத்தருள வேண்டுகின்றேன்.

மனோ கணேசன், களத்தில் இறங்கி உள்ளார் போல தெரிகிறது. கூத்தமைப்பு தமிழ் உறுப்பினர்கள், வழக்கம் போல, பிட்டுக்கு, தேங்காய் பூ தேவைதானா என்று அமைதியாக இருக்கிறார்க்ளோ என்று நினைத்தாலும், சாணக்கியன் தான் முதலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Nathamuni said:

இன ரீதியில் பார்த்தால்.....

நான் ஆரம்பத்தில், ஒரு சிறு அனுதாபத்தில் எனது பதிவுகளை இட்டு இருந்தேன். சில கள உறவுகள் கூட அதிருப்தி தெரிவித்து இருந்தார்கள்.

எனினும், தமிழர், இஸ்லாமியர் என்ற கோணத்தில், வரும் சில பதிவுகளை பார்த்தால், இந்த அதிருப்திகள் சரியானவை என்றே தோன்றுகிறது.

அதாவுல்லாவும், மனோ கணேசனும் ஒரு டிவி நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

அதாவுல்லா மலையக சமூகம் தொடர்பில், ஒரு இழிவான வார்த்தைப் பிரயோகம் செய்கிறார். வெகுண்ட மனோ, கண்ணாடி குவளையில் இருந்த தண்ணீரை அவர் மீது வீசி எறிகிறார்.

மலையக தமிழர்களை அந்தளவு கேவலமாக நினைக்கிறார்கள், இந்த இஸ்லாமியர்கள் என்று ஒரு பதிவும், தமிழர்களுக்கு எதிராக மோசமான, இன ரீதியான வேலைகளை செய்த ரிசாடின் குடும்பத்தின், இந்த வேலையும் அதே வகையில் பார்க்கப்படவேண்டும் என்ற பதிவும் பார்த்தேன்.

சரியோ, தவறோ, ஒரு விடயம் சாதரண குற்றமாக  பார்க்கப்படுவதுக்கும், இன  ரீதியில் பார்க்கப்படுவதுக்கும் உள்ள வித்தியாசத்தினை நான் உணர்கின்றேன்.

முதலில், சாதாரணமாகவே பார்த்தேன். இப்போது இனரீதியில் பார்க்கும் போது, கடும் கோபமும் வருகிறது.

எனது மேலேயுள்ள பதிவுகள் சிலரை நெளிய வைத்திருக்கும், பொறுத்தருள வேண்டுகின்றேன்.

மனோ கணேசன், களத்தில் இறங்கி உள்ளார் போல தெரிகிறது. கூத்தமைப்பு தமிழ் உறுப்பினர்கள், வழக்கம் போல, பிட்டுக்கு, தேங்காய் பூ தேவைதானா என்று அமைதியாக இருக்கிறார்க்ளோ என்று நினைத்தாலும், சாணக்கியன் தான் முதலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிகிறது.

நன்றி நாதமுனி. உங்களது சுய விளக்கம் கண்டு… உங்கள் மீதான மதிப்பை உயர்த்தி விட்டீர்கள். 🙂

செய்த தவறை ஏற்றுக் கொண்டு… அதற்காக வருத்தம் தெரிவிப்பதற்கும்.. உயர்ந்த உள்ளம் வேண்டும். 👍🏼

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

 

முதலில், சாதாரணமாகவே பார்த்தேன். இப்போது இனரீதியில் பார்க்கும் போது, கடும் கோபமும் வருகிறது.

 

இன ரீதியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. 

சாதாரணமாகப் பார்த்தாலே சமூகத்தில் பொறுப்பான பதவியில் உள்ள ஒருவரின் வீட்டில் இத்தனை உரிமை மீறல்களும் கொலையும் நடந்துள்ளது. அனுதாபப்பட எக் காரணமும் இல்லை.

தமிழ் அரசியல்வாதியொருவர் இதை செய்திருந்தாலும் கள உறவுகள் இதைக் கண்டித்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். ஆகவே தவறுகளைச் சுட்டிக்காட்ட இன ரீதியான பார்வை அவசியமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, இணையவன் said:

இன ரீதியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. 

சாதாரணமாகப் பார்த்தாலே சமூகத்தில் பொறுப்பான பதவியில் உள்ள ஒருவரின் வீட்டில் இத்தனை உரிமை மீறல்களும் கொலையும் நடந்துள்ளது. அனுதாபப்பட எக் காரணமும் இல்லை.

தமிழ் அரசியல்வாதியொருவர் இதை செய்திருந்தாலும் கள உறவுகள் இதைக் கண்டித்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். ஆகவே தவறுகளைச் சுட்டிக்காட்ட இன ரீதியான பார்வை அவசியமில்லை.

 

சமூகத்தில் பொறுப்பான பதவியில் உள்ள ஒருவரின் வீட்டில்...???😭

இங்கே  தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

சாதாரணமாகப் பார்த்தாலே சமூகத்தில் பொறுப்பான பதவியில் உள்ள ஒருவரின் வீட்டில் இத்தனை உரிமை மீறல்களும் கொலையும் நடந்துள்ளது. அனுதாபப்பட எக் காரணமும் இல்லை.

மிகவும் விளக்கமாக சொன்னீர்கள் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு செய்தவர்கள் மீது கோபம் வருவது மனிதத்தன்மை. இதில் இனப்பார்வை தேவையில்லை.

அதுவும் பாதிக்கப்பட்டவர் எமது இனத்தை சேர்ந்த ஒரு அபலை சிறுமி எனும் போது இதில் எந்த மனிதனுக்கும், எந்த தமிழனுக்கும் ரிசாட்டின் மீது அனுதாபம் வராது.

அப்படி அந்த சிறுமிக்கு ஒரு அனுதாப வார்த்தை கூட முதல் பதிவில் போடாமல், ரிசார்ட்டுக்கு எமது மனம் உருகிறது என்றால். 

ஒன்றில் நம் கண்ணை ரிசாட்டுக்கும் நமக்கும் இடையான ஏதோ ஒரு இணைப்பு (மதம், இனம், நட்பு) மறைக்கிறது என்று அர்த்தம் 

அல்லது

நாமும் அந்த துஸ்பிரயோகி போல் வக்கிர எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும்.

இதில் ரெண்டாவது காரணமாக இருக்காது என்று நான் நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஒன்றில் நம் கண்ணை ரிசாட்டுக்கும் நமக்கும் இடையான ஏதோ ஒரு இணைப்பு (மதம், இனம், நட்பு) மறைக்கிறது என்று அர்த்தம் 

அல்லது

நாமும் அந்த துஸ்பிரயோகி போல் வக்கிர எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும்.

இதில் ரெண்டாவது காரணமாக இருக்காது என்று நான் நம்புகிறேன்.

மீண்டும், மீண்டும், ஊகத்தில் கம்பு சுத்துதல்...

இதுக்கு தானே தல என்று சொல்கிறோம், எத்தனை நியானி வந்து, நியாயம் சொன்னாலும் அசராது.

தவறு என்றால், அதை உடனே ஏற்றுக்கொள்வதே, நான் கற்ற அறம்.

ஏற்றுக்கொண்ட பின்னும், அலம்பறை பண்ணுவதே உங்கள் அறம்...

🐎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் படுவதை சொல்வதன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

மனதில் படுவதை சொல்வதன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே.

 

மனதில் வரும் எல்லாவற்றையும் எழுத்தில் போட்டு, அவலத்தை சுமந்தவர்கள் பலர், பராபரமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'மகளின் மரணத்தில் நூறுவீதம் சந்தேகம் நிலவுகிறது': சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)
சிறிய தீயைக் கண்டால் கூட அச்சப்படும் என்னுடைய மகள் தானாகவே தீ மூட்டிக் கொள்ளுமளவிற்கு தைரியமானவர் அல்ல. எனவே அவருக்கு யாரேனும் தீ வைத்திருப்பார்கள் என்று நூறுவீதம் சந்தேகிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டு தீ காயங்களுடன் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் தெரிவித்தனர்.

59682616_2359056400820686_45143166230410

தங்களின் மகள் தொலைபேசியில் தம்முடன் பேசும்போது, தன்னை அங்குள்ளவர்கள் தும்புதடியால் தாக்குவதாகவும் தன்னால் அங்கு தொடர்ந்தும் இருக்க முடியாது என்பதால் உடனடியாக வந்து அழைத்துச் செல்லுமாறும் ஹிஷாலினி கூறியதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

கண்டியில் நேற்று செவ்வாய்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து ஹிஷாலினியில் தந்தை ஜெயராஜ் ஜூட்குமார் மற்றும் தாய் ஆர்.ரஞ்சனி ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜெயராஜ் ஜூட்குமார் - சிறுமியின் தந்தை

தொழிலுக்குச் செல்லுமாறு நாம் அவரை பலவந்தப்படுத்தவில்லை. அவர் விரும்பியே சென்றார். ஆண்களைப் பார்த்தால் விலகிச் செல்லும் பெண்பிள்ளை அவர். அவருக்கு என்ன நடந்தது என்று எமக்குத் தெரியாது. எனது மகள் சிறிய தீயைக் கண்டால் கூட அஞ்சுபவர். நாம் வீட்டில் தீ மூட்டினால் கூட அருகில் இருக்க மாட்டார்.

இவ்வாறு அச்சப்படுபவர் எவ்வாறு தனக்கு தானே தீ மூட்டிக் கொள்வார் என்பதில் எமக்கு பாரிய சந்தேகம் நிலவுகிறது. அவர் தீ மூட்டிக் கொண்டிருக்க மாட்டார். யாரேனுமொருவரால் தான் தீ மூட்டப்பட்டிருக்கும். அவருக்கு தீ வைத்திருக்கிறார் என்று நூற்றுக்கு நூறுவீதம் நாம் சந்தேகிக்கின்றோம். கொரோனாவினால் எனக்கு தொழில் இல்லை. தொழில்புரிவதற்கு இடமில்லை. எனக்கு காலில் உபாதை காணரமாக கஷ்டப்பட்டு தொழில் செய்ய முடியாது.

ஆர்.ரஞ்சனி - சிறுமியின் தாய்

கொவிட் நெருக்கடி நிலைமையால் நான் பெரும் கடன் சுமைகளுக்கு உள்ளானேன். என்னுடைய கணவர் மற்றும் மகன் ஆகிய இருவருமே தொழில் இன்றியே காணப்பட்டனர். இதன் காரணமாகவே நான் கடன் சுமைக்கு உள்ளானேன். மகளை அனுப்பி வைப்பதற்காக தங்க நகையை அடகு வைத்து 30,000 பணம் வைத்திருந்தேன்.

நீங்கள் பணிக்கு சென்றால் பிள்ளைகளை பராமறிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மகளை பணிக்கு அனுப்பி வைக்குமாறு, அவரை அழைத்துச் சென்ற நபர் கூறினார். அதன் போது வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் கடன் வழங்கியவர்கள் வீட்டு முற்றத்தில் வந்து கூச்சலிடுவார்கள். எனவே நான் தொழிலுக்குச் சென்று கடனை மீள செலுத்த உதவுவதாகவும் சகோதரனுக்கு மாத்திரம் இதனை செய்ய முடியாது என்று கூறியே என்னுடைய மகள் தொழிலுக்குச் சென்றார்.

உண்பதற்கு கூட உணவின்றி கஷ்டப்பட்டோம். எனினும் அங்கு சென்றதன் பின்னர் எனது மகள் என்னுடன் பேசும் போது, 'அம்மா என்னால் இங்கிருக்க முடியாது. என்னை அழைத்துச் செல்லுங்கள். இங்குள்ளவர்கள் என்னை தும்புதடியால் தாக்குகின்றனர்.' என்று கூறினார். ' ஏன் அவ்வாறு செய்கின்றார்' என்று நான் மகளிடம் வினவிய போது , அங்கிருந்தவர்கள் என்னுடைய மகள் வீட்டாரிடம் (மெடம்) மரியாதையின்றி நடந்து கொள்வதாகக் கூறினார்கள். அத்தோடு ' உங்களுடைய மகள் பணிப்பெண் அல்லவா? எனவே வீட்டாரிடம் மரியாதையாக பேசுமாறு உங்கள் மகளிடம் கூறுங்கள் ' என்றும் தெரிவித்தனர்.

என்னுடைய மகள் சிறியவர். அவரை தாக்க வேண்டாம் என்று அந்த வீட்டாரிடம் நான் கூறினேன். அவ்வாறிருக்கையில் இம்மாதம் 3 ஆம் திகதி மாலை 3 மணியளவில் என்னுடைய மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். 4 ஆம் திகதி சென்று நாம் மகளைப் பார்த்த போது அவர் மோசமான நிலையில் இருந்தார்.

மேலதிகமாக பணம் பெற்றுள்ளதால் நான் தொழிலுக்கு வருவதாகக் கூறினேன். 21 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் காலை அங்கு இருப்பேன் என்று கூறினேன். என்னுடைய மகள் அவராகவே ஏதேனும் செய்து கொண்டிருப்பார் என்றால் அந்த வீட்டில் ஏதேனும் நடந்திருக்க வேண்டும். இவ்வாறு மற்றொரு பிள்ளைக்கும் நடந்துவிடக் கூடாது. வறுமையின் காரணமாகவே என்னைப் போன்ற தாய்மார் இவ்வாறான தவறை இழைக்கின்றனர். எனவே குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் வணங்கிக் கேட்டுக் கொள்கின்றேன்.

கேள்வி : உங்களுடைய மகள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். அவ்வாறு இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளதா ?

பதில் : இல்லை. அவ்வாறு செய்து கொள்வதற்கான காரணிகள் காணப்பட்டாலும் தொலைபேசியில் அவர் யாருடனாவது பேசியிருக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் தாய் என்ற ரீதியில் எம்மிடம் ஏதேனும் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.

கேள்வி : 'மெடம் ' என்று யாரைக் கூறுகின்றீர்கள் ?

பதில் : ரிஷாத் பதியுதீனுடைய குடும்பத்தார்.

'மகளின் மரணத்தில் நூறுவீதம் சந்தேகம் நிலவுகிறது': சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் தெரிவிப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டு வேலைக்காரர்களில் ஒருவர் பலிக்கடாவாக்கப்படுவார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

வீட்டு வேலைக்காரர்களில் ஒருவர் பலிக்கடாவாக்கப்படுவார் 

ஒரு ஏழ்மையான தமிழ் குடும்ப பிள்ளையை சட்ட விரோதமா, வேலைக்கு எடுத்து, தும்புத்தடியால் அடித்து மட்டுமல்லாது, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளார்கள், பாவிகள்....

இவரை வேலைக்கு எடுத்த வீட்டின் புண்ணியவான், சட்டம் இயற்றும் பாராளுமன்ற உறுப்பினர்.

இவர்கள் மேல் அல்லாவின் சாபம் விழுவதாக.... 😰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

தன்னை அங்குள்ளவர்கள் தும்புதடியால் தாக்குவதாகவும் தன்னால் அங்கு தொடர்ந்தும் இருக்க முடியாது என்பதால் உடனடியாக வந்து அழைத்துச் செல்லுமாறும் ஹிஷாலினி கூறியதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

 

8 hours ago, பிழம்பு said:

கொரோனாவினால் எனக்கு தொழில் இல்லை. தொழில்புரிவதற்கு இடமில்லை. எனக்கு காலில் உபாதை காணரமாக கஷ்டப்பட்டு தொழில் செய்ய முடியாது.

அந்த பெற்றோரின் இயலாத் தன்மை இவர்களுக்கு சாதகமாய் போய்விட்டது. எத்தனை கனவுகளோடு வாழவேண்டியவள்? இப்படி அலங்கோலமாய் இறக்க வேண்டியதாய் விட்டது. இப்படி எத்தனை இளம் பெண் பிள்ளைகள் வெளியில் சொல்லமுடியாமல் இதற்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ? அரசியல் வாதிகளின் கூச்சல் இன்னும் இரண்டொரு நாளில் அடங்கி தங்கள் வேலையை பாக்கப் போய் விடுவார்கள். ஆனால் இந்த ஏழைகளின் கண்ணீர் மட்டும் துடைக்கப்படாது. அது அவர்களுக்கு மட்டும் நிரந்தரம்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.