Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் குறித்து தாயிடம் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம்!

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் குறித்து தாயிடம் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது பொற்றோர் உள்ளிட்ட 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட இரண்டு விசேட விசாரணை குழுக்கள் நேற்று டயகம பகுதிக்கு சென்று விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்தன என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி, சிறுமியின் தாயிடம் இரண்டாம் நாளாகவும் நேற்று சுமார் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அதேநேரம் குறித்த சிறுமியை ரிசாட் பதியூதீனின் வீட்டிற்கு அழைத்து சென்ற தரகரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1229976

Link to comment
Share on other sites

 • Replies 99
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இணையவன்

இன ரீதியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.  சாதாரணமாகப் பார்த்தாலே சமூகத்தில் பொறுப்பான பதவியில் உள்ள ஒருவரின் வீட்டில் இத்தனை உரிமை மீறல்களும் கொலையும் நடந்துள்ளது. அனுதாபப்பட எக் காரணமும் இல்லை.

தமிழ் சிறி

ரிஷாட் பதியுதீனின்... வீட்டில் நடந்த, இந்த  தமிழ்ச்  சிறுமி மீதான பாலியல் வன்கொடுமையும், தீயிட்டு கொன்றதும்... ஒரு தமிழ் அரசியல் வாதியின்  வீட்டில்... முஸ்லீம் சிறுமிக்கு நடந்திருந்தால், காத்

satan

இத்தனை ஆயிரம் மக்களை திட்டம் போட்டு துடிக்க துடிக்க கொன்றுபோட்டு, மனிதநேயப்போர் செய்தோம் உலகிலேயே ஒழுக்கம் நிறைந்த இராணுவம் என்று கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல்  நெஞ்சை நிமித்திக்கொண்டு திரிகிற பிசாச

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

சிறுமியின் தாயிடம் இரண்டாம் நாளாகவும் நேற்று சுமார் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

தாயாரை குற்றவாளியாக்குகிற திட்டமோ? அப்படி என்ன பத்து மணித்தியால விசாரணை, இரண்டு நாளாக? மகளுக்கு பிடித்த உணவு என்ன?  நிறம் என்ன என்று விசாரதிருப்பினமோ? மரணம் நிகழ்ந்தது றிஷாத்து வீட்டில். தாயிடம் விசாரணை? அவர்களே இழப்பிலும், இயலாமையிலும் கலங்குகிறார்கள். இவர்கள் வேற.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

தாயாரை குற்றவாளியாக்குகிற திட்டமோ? அப்படி என்ன பத்து மணித்தியால விசாரணை, இரண்டு நாளாக? மகளுக்கு பிடித்த உணவு என்ன?  நிறம் என்ன என்று விசாரதிருப்பினமோ? மரணம் நிகழ்ந்தது றிஷாத்து வீட்டில். தாயிடம் விசாரணை? அவர்களே இழப்பிலும், இயலாமையிலும் கலங்குகிறார்கள். இவர்கள் வேற.

பாவப்பட்ட கதை கடைசியில் சிறுமி மீது பழியை போட்டு தப்ப பார்க்கினம் நேற்றும் இன்றும் வரும் செய்திகள் தடம் மாறிக்கொண்டு உள்ளன .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

டயகம சிறுமி ஹிசாலினிக்கு ஏற்பட்ட கொடூரம்! திசை திருப்பப்படும் விசாரணைகள்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற  சிறுமி தொடர்பான விசாரணைகள் திசைத்திருப்பப்படுவதாக ஹிசாலினியின் தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

 ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது பிள்ளையை தொழிலுக்காகவே அங்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அவரது உடல் சவப்பெட்டியிலேயே எமக்கு கிடைத்தது.

பிள்ளைக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக காவற்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லாமல் இங்கு வந்து அவர்கள் எழுப்புகின்ற கேள்விகள் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

பிள்ளைக்கு இங்கு வைத்து என்ன ஆனது, பிள்ளை இங்கு யாருடனும் தொடர்பில் இருந்தாரா? போன்ற கேள்விகளை அவர்கள் எழுப்புகிறார்கள்.

நாட்டின் முக்கிய இடத்தில் இருக்கின்றவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்றால், நாட்டில் இவ்வாறு எத்தனை சம்பவங்கள் வெளியில் தெரியாமல் இடம்பெற்றுக்கின்றன? எமது பிள்ளைக்கு நியாயம் கிடைக்கும் வரையில் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தமாட்டேன் என்று எமது பிள்ளையின் உடல் மீது சபதம் எடுத்திருக்கிறேன் என ஹிசாலினியின் தாயார் மேலும் தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/article/hisalini-s-death-1626942721

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இத்தனை ஆயிரம் மக்களை திட்டம் போட்டு துடிக்க துடிக்க கொன்றுபோட்டு, மனிதநேயப்போர் செய்தோம் உலகிலேயே ஒழுக்கம் நிறைந்த இராணுவம் என்று கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல்  நெஞ்சை நிமித்திக்கொண்டு திரிகிற பிசாசுகளிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

அப்படி சிறுமியில் தவறு இருக்கும் பட்ஷத்தில், தாயாரை கூப்பிட்டு சொல்லியிருக்க வேண்டும் அல்லது வீட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டும். அதைவிட்டிட்டு தண்டிக்கவும், கொலை செய்யவோ அல்லது தூண்டவோ இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? யார் கொடுத்தார் அந்த உரிமையை? நல்ல ஒரு வக்கீல் பொறுப்பெடுத்தால் வளத்தில் வந்து சமரசம் செய்வினம். 

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது!

July 23, 2021

 

 

வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறைப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண இன்று (23.07.21) தெரிவித்துள்ளார்.

ரிஷாட்டின் மனைவியான 46 வயதுடைய ஷெஹாப்தீன் ஆயிஷா , மனைவியின் தந்தையான 70 வயதுடைய மொஹமட் ஷெஹாப்தீன் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் சிறுமியை கொழும்புக்கு அழைத்துவந்து பணிக்கு அமர்த்திய தரகரான டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர் எனப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சந்தேக நபர்களை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைச்செய்தபோது, தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை கவனிப்பதற்கு சட்டமா அதிபர் சஞ்ஜய ராஜரட்ணம் நேற்று (22.07.21) குழுவொன்றை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2021/163753

ரிஷாட்டின் மைத்துனரும் கைது!

July 23, 2021

பணிப்பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனரான 44 வயதுடைய செயாப்தீன் ஷ்மதீன் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவற்துறைப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண இன்று (23.07.21) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்த மற்றுமொரு பெண் ஒருவரே இவ்வாறு வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைச்செய்தபோது, தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் 20 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த காவற்துறைப் பேச்சாளர், குறித்த சிறுமிக்கு முன்னதாக அங்கு இரண்டு பெண்கள் பணிபுரிந்துள்ளதாகக் கூறினார்.

அவர்கள் இருவரையும் தரகரான டயகம பிரதேசத்தைச் சேர்ந்த பொன்னையா பண்டாரம் என்பவர் அழைத்து வந்துள்ளதாகத் தெரிவித்த காவற்துறைப் பேச்சாளர், அந்த பணிப்பெண்களில் ஒருவரின் தற்போதைய வயது 22 என்றும் மற்றையவரின் வயது 30 என்றும் குறிப்பிட்டார்.

டயகம பகுதியில் வசிக்கும் 22 வயது யுவதி, 2015 – 2019 காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்துள்ளார். அதன்போது, நபர் ஒருவரால் இரண்டு முறை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டாக யுவதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இது தொடர்பான விசாரணையில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரனான மதவாச்சி பகுதியை சேர்ந்த 44 வயதுடைய செயாப்தீன் ஷ்மதீன் என்ற நபரே வன்புர்ணவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, விசாரணை அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டயகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கு புறம்பாக இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பேச்சாளர், முன்னாள் அமைச்சரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து குறித்த யுவதி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, வீட்டில் பணிபுரிந்த டயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

https://globaltamilnews.net/2021/163757

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தற்போதுள்ள  முஸ்லிம்கள் தங்களை அரபிகள் போலவே பீல் பண்ணி வருகிறார்கள் உதாரணமாக வெள்ளிக்கிழமைகளில் ஜிம்மாவுக்கு கட்டாயம்  போகணும்  பெண்கள் அபாயா போடணும் வீட்டுக்கு வேலைக்கு ஆட் கள் வேணும் அரபிகள் போல  அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள் அப்படியே கொன்றும் இருக்கிறார்கள் .

சவுதியில் கொல்லப்பட்ட  றிசானாவுக்கு நீதி கேட்ட சமூகம் இன்று இந்த பிள்ளைக்கும் நீதி கேட்கிறது கேட்டும் கிடைக்காத ஒன்றை இலங்கையில்  கேட்கிறம் 

ஆழ்ந்த அனுதாபங்கள் சகோதரி

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஒரு கூட்டு பயங்கரவாதிகள் குடும்பம்.

றிஷாத்துடன் அவரது சகோதரரும், ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பில் உள்ளே.

ரிஷாட் கடந்த அரசாங்க காலத்தில், வர்த்தக அமைச்சராக சதோச நிறுவனத்தில் கொள்ளை அடித்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

இப்போது பணிப்பெண் இறந்த விவகாரத்தில், மனைவியும், மனைவியின் தந்தையும் கைதாகி உள்ளனர்.

இந்த பெண்ணையும், இதுக்கு முன்னர் பணி செய்த இரு பெண்களையும் பாலியல் வன்புணர்வு செய்தார் என்று மதவாச்சி பகுதியை சேர்ந்த, ரிஷாட் மனைவியின், சகோதரர், கைதாகி உள்ளார்.

இந்த பாலியல் வன்புணர்வு விசயத்தில், ரிஷாட்க்கு ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு போலீசார் பதில் சொல்லவில்லை.   

சகோதரர், சகோதரி வீடு வரும்போது, உந்த கேவலமான வேலைகளை செய்துள்ளாராம். சகோதரிக்கு தெரியாமலா நடந்து இருக்கும்?

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2021 at 01:01, satan said:

 

அந்த பெற்றோரின் இயலாத் தன்மை இவர்களுக்கு சாதகமாய் போய்விட்டது. எத்தனை கனவுகளோடு வாழவேண்டியவள்? இப்படி அலங்கோலமாய் இறக்க வேண்டியதாய் விட்டது. இப்படி எத்தனை இளம் பெண் பிள்ளைகள் வெளியில் சொல்லமுடியாமல் இதற்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ? அரசியல் வாதிகளின் கூச்சல் இன்னும் இரண்டொரு நாளில் அடங்கி தங்கள் வேலையை பாக்கப் போய் விடுவார்கள். ஆனால் இந்த ஏழைகளின் கண்ணீர் மட்டும் துடைக்கப்படாது. அது அவர்களுக்கு மட்டும் நிரந்தரம்.  

ஏழைகள் வாழ்வு என்றும் கண்ணீரில்தான் இறைவா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, colomban said:

ஏழைகள் வாழ்வு என்றும் கண்ணீரில்தான் இறைவா

தவறு சகோ 

எனது பிள்ளைகள் அவர்களது 18 வயதிலிருந்தே வார இறுதி நாட்களில் வேலைக்கு போகிறார்கள். (இங்கே சட்டப்படி 16 வயதுக்கு பின் வேலைக்கு போகலாம்)

எனவே தவறிழைத்த அல்லது நாட்டின் சட்டத்தை மதிக்காதவர்களின் தவறே இது. 

இவர் போன்ற இனத்தையே காட்டுக்கொடுப்பது தன் இனத்தின் அழிவில் சுகம் காணும் பச்சோந்திகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்??

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:

தவறு சகோ 

எனது பிள்ளைகள் அவர்களது 18 வயதிலிருந்தே வார இறுதி நாட்களில் வேலைக்கு போகிறார்கள். (இங்கே சட்டப்படி 16 வயதுக்கு பின் வேலைக்கு போகலாம்)

எனவே தவறிழைத்த அல்லது நாட்டின் சட்டத்தை மதிக்காதவர்களின் தவறே இது. 

இவர் போன்ற இனத்தையே காட்டுக்கொடுப்பது தன் இனத்தின் அழிவில் சுகம் காணும் பச்சோந்திகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்??

இங்கே இருக்கும் பிள்ளைகள் விடுமுறையில் பாட் டைமா வேலைக்குப் போறதும். அந்த பிள்ளைகள் பள்ளிக்கே போகாமல் குழந்தை பருவத்தை அனுபவிக்காமல் வறுமை காரணமாய் வேலைக்கு போவதும் ஒன்றா அண்ணா 

 • Like 1
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை தொடர்பாக றிஷாத் பதியுதினின் மனைவி, மாமாவும் கைது செய்யபட்டுள்ளார்களாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

குடும்பமே அசிங்கம் போலுள்ளதே. பணம் படுத்துற பாடு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கை எம்.பி. ரிஷாட் வீட்டில் மலையக சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு எனப் புகார்

 • ரஞ்சன் அருண்பிரசாத்
 • பிபிசி தமிழுக்காக
30 நிமிடங்களுக்கு முன்னர்
BABUJI MUTHULIGAM

பட மூலாதாரம்,BABUJI MUTHULIGAM

 
படக்குறிப்பு,

பெண்கள், சிறார்களுக்கு எதிரான வன்முறைக்கு நீதி கோரி பெண் உரிமை ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.

இலங்கை முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய இந்திய வம்சாவளி தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு, தீ காயங்களுடன் இறந்த சம்பவத்தை அடுத்து, நாட்டின் பல இடங்களில் சிறார் மற்றும் பெண் உரிமைகள் தொடர்பிலான போராட்டங்கள் வலுப் பெற்றுள்ளன.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய 16 வயது சிறுமி, கடந்த 3ஆம் தேதி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

கடந்த 15ம் தேதி உயிரிழந்த அந்த சிறுமியின் பிரேதப் பரிசோதனை, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது.

அதில், சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.

 

அத்துடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பொரள்ளை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி இறந்தது தொடர்பாக இதுவரை சுமார் இருபதுக்கும் அதிகமான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ரிஷாட் மனைவி கைது

இந்த நிலையில், சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோர் நேற்று (ஜூலை 23) அதிகாலையில் கைது செய்யப்பட்டனர்.

குற்றவியல் விசாரணை திணைக்களம்.

இதேவேளை, ரிஷாட் பதியூதீன் அமைச்சராக பதவி வகித்த 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலத்தில், அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ இல்லத்தில், பணிப்பெண்ணாக வேலை செய்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக ரிஷாட் பதியூதீன் மைத்துனரை (மனைவியின் சகோதரர்) போலீசார் நேற்று கைது செய்தனர். 22 வயதாகும் மலையக பெண் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து இந்த நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் போராட்டம்

பட மூலாதாரம்,KRISHANTHAN

 
படக்குறிப்பு,

நீதி கேட்டுப் போராட்டம்

இது குறித்து காவல்துறை ஊடக பேச்சாளர் கூறுகையில், "16 வயது சிறுமியின் உயிரிழப்பு தொடர்பான விசாரணையில் கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்தே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்," என்று தெரிவித்தார்.

4 பேர் நீதிபதி முன் ஆஜர்

குறித்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரை நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு - புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

காவல்துறை வேண்டுகோளை ஏற்று அந்த நால்வரையும் 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சந்தேக நபர்களை வரும் 26ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணியாற்றிய 11 மலையக பெண்கள், பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக தகவல் கிடைத்துள்ளது என பிரபல சிங்கள நாளிதழ் திவயின இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி இன்று இலங்கையில் மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

11 மலையக பெண்களுக்கு என்ன நடந்தது?

ரிஷாய் பதியூதீன்

பட மூலாதாரம்,BABUJI MUTHULIGAM

 
படக்குறிப்பு,

மலையகப் பெண்களுக்கு நடந்தது என்ன?

11 மலையக பெண்களும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும், அவர்களில் இருவர் மர்மமான முறையில் இறந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண், பம்பலபிட்டி பகுதியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், 16 வயது சிறுமி தீ காயங்களுடன் இறந்ததாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய இரண்டு மலையக தமிழ் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக காவல்துறை சிறப்புக் குழுவொன்று மலையகம் சென்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆண் ஊழியர் தாக்கினார்: சிறுமியின் தாய்

இதற்கிடையே, மலையகத்தின் ஹட்டன் - டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி இறந்த விவகாரத்தில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் நிலவுவதாக அவரது தாய் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி

பட மூலாதாரம்,GNANASANGARY SABTHSANGARY

 
படக்குறிப்பு,

கிளிநொச்சியில் ஒரு போராட்ட வாசகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஊழியர், தனது மகளை தும்பு தடியால் தாக்குவதாக தனது மகள் தன்னிடம் கூறியதாகவும் அவரது தாயார் குறிப்பிட்டார்.

எனினும், ரிஷாட் பதியூதீனின் மனைவியை அந்த சிறுமி எதிர்த்துப் பேசியதனாலேயே, தான் அந்த சிறுமியை தாக்கியதாக, குறித்த இளைஞன் தொலைபேசி மூலம் தன்னிடம் தெரிவித்ததாகவும் அந்த சிறுமியின் தாயார் கூறியிருந்தார்.

குடும்ப வறுமை காரணமாகவே தனது மகளை வேலைக்கு அனுப்பியதாகவும் தனது மகளின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி, தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அந்த தாய் வலியுறுத்தினார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பதில்

மலையக மக்கள் போராட்டம்.

பட மூலாதாரம்,KRISHANTHAN

 
படக்குறிப்பு,

மலையக மக்கள் போராட்டம்.

ரிஷாட் பதியூதீன் வீட்டில், 16 வயது சிறுமி பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பான தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

அவரது வீட்டிற்கு அருகே அறையொன்றில், அந்த சிறுமி தினமும் இரவு அடைக்கப்பட்டு, அதிகாலை வேலையிலேயே கதவு மீண்டும் திறக்கப்பட்டது தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

18 வயதுக்கு குறைவான சிறுமியொருவரை இரவு நேரத்தில் தனியான அறையில் பாதுகாப்பற்ற முறையில் அடைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றம்சாட்டப்படும் நபர்களுக்கு 2 முதல் 10 வருடங்கள் வரை தண்டனை கிடைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சிறார் விற்பனை, சிறார்களை விலைக்கு வாங்குவது போன்ற செயல்களுக்கும் அதற்கு உடந்தையாக இருப்பது, இலங்கை தண்டனை சட்ட கோவையின் 360சீ ஷரத்தின்படி, சிறை தண்டனை வழங்கக்கூடிய குற்றம் என அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு நீதி கோரி போராட்டம்

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் சிறுமி இறந்த விவகாரத்தில் நீதி கேட்டு கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தலைநகரம், மலையகம், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரியும், சிறார் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் போராட்டத்தில் குரல்கள் ஒலிக்கப்பட்டன. இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அரசை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

https://www.bbc.com/tamil/sri-lanka-57954339

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

இங்கே இருக்கும் பிள்ளைகள் விடுமுறையில் பாட் டைமா வேலைக்குப் போறதும். அந்த பிள்ளைகள் பள்ளிக்கே போகாமல் குழந்தை பருவத்தை அனுபவிக்காமல் வறுமை காரணமாய் வேலைக்கு போவதும் ஒன்றா அண்ணா 

 

நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை

16 வயதில் வேலைக்கு போவது  தவறல்ல

ஆனால் சட்டமும்  அரசும் அவர்களுக்கான  பாதுகாப்பை  தரணும் என்பதற்கே  எழுதினேன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

11 தமிழ் சிறுமிகள் இம்சிக்க பட்டிருக்கிறார்கள்.

ஒருவருக்கு ஒரு வருடம் என பார்த்தாலும் 11 வருடமாக நடக்கும் கொடுமை இது.

இன்னொரு பெண் சில வருடங்கள் முன் ரயிலில் பாய்ந்து இறந்திருக்கிறார்(கொலை?).

இத்தனையும் ரிசாத் வெளியே இருக்கும் போது நடந்தவை.

ஆனால் இங்கே இந்த பாலியல் வன்புணர்வு விசயத்தில், ரிஷாட்க்கு ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு போலீசார் பதில் சொல்லவில்லை. 

என்று சிலர் அங்கலாய்கிறார்கள். எப்படியாவது இந்த கொடுமைகளில் ரிசாத் சம்பந்தபடவில்லை என நிறுவ தலைகீழாக நிற்கிறார்கள்.

என்ன இருந்தாலும் யாழ் வெளியேற்றத்துக்கு தமிழரை பழி தீர்த்த தலைவன் அல்லவா ரிசாத்.

விட்டு கொடுக்க கஸ்டமாய்தான் இருக்கும்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேவலம் கெட்ட குடும்பம். குடும்பமே இப்படித்தானா இருக்கும். 

அடுத்த 8 வருடங்களுக்குள் ரிசாட் தப்பிப்பிழைக்க வழியில்லை. கோட்டா அரசுத் தலைவராக இருக்கும் வரை ரிசாட் அரச பக்கம் பிரழ்வதுக்கு வாய்ப்பே இல்லை. (அரச பக்கத்துக்கு பிரழ்வதற்கு ரிசாட் எப்பவோ ரெடி, கோட்டாதான் சேர்க்க ரெடியில்லை). இந்நிலையில் இந்தச் சிறுவியின் கொலை ரிசாட்டின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு பெரும் சவாலாகவே இருக்கும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் லெவல் வேற, அந்தளவிற்கு இவர் இன்னும் வளரேல்லை, இனிமேல்  வளரவும் சந்தர்ப்பம் இல்லை. அனிஞாயமாக சேர்த்த பெயரும், பொருளும், வக்காலத்தும் கனகாலம் நிலைக்காது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தினால் பழிவாங்கப்பட்டுள்ள றிசாத் பதியுதீனை மேலும், மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை - சிறிதரன் Mp

Saturday, July 24, 2021  www.jaffnamuslim.com  

ரிசாட் பதியுதீன் சிறையில் இருக்கின்ற பொழுது மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். 

 

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவரிடம், அமைச்சரின் இல்லத்தில் பணிக்க அமர்த்தப்பட்ட சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டறிக்கை ஒன்றையும் விடவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 19/7/2021 at 17:43, ரதி said:

நீங்கள் எப்படிப்பட்டவராய் இருப்பீர்கள் என்பது இப்படியான உங்கள் கருத்துக்களை பார்க்கும் போது தெரிகிறது .ஒரு சிறுமி பாலியல் வன்புணர்வுக்காகி கொலை செய்யப்பட்டு இருக்கிறால்..ஒரு குடும்பமே சேர்ந்து ஒரு சிறுமியை துடிக்க ,துடிக்க  எரித்து கொலை செய்து இருக்கிறார்கள் 
  .   நீங்கள் றிசாத்திற்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் . அனுதாபப்படுகிறீர்கள்.
அந்த சிறுமி நாட் பட்ட பாலியல் வன்புணவுக்காளாகி இருக்கிறால் என வைத்திய அறிக்கை கூறுகிறது .
அதை விட ஒரு  தமிழனாய் இருந்து கொண்டு, மன்னாரில் எவ்வளவு தமிழ் காணிகளை இவர் ஆட்டையை போட்டு இருப்பார் இருவருக்கு பரிதாபம் பார்க்க உங்களால் எப்படி முடியுது?

இன்று நடந்ததற்காக வருத்தப்படும் தாங்கள் 2008 இல் முரளிதரன் & சந்திரகாந்தன் குழுவினரால் திருமலைச் சிறுமியின் சம்பவம் தொடர்பாக மூடி மறைப்பது ஏன்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வகையில், இந்த சிறுமி 7 மாதம் முதல்தான் ரிசாட் வீட்டுக்கு வந்தார். ஆனால் 12 வயது முதலே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்பது போல வழக்கை திசை திருப்பி, அவர் இறக்கும் முன் கொடுத்ததாக ஒரு பொய் வாக்குமூலமும் தயார் என்று கேள்வி.

 

3 hours ago, கற்பகதரு said:

அரசாங்கத்தினால் பழிவாங்கப்பட்டுள்ள றிசாத் பதியுதீனை மேலும், மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை - சிறிதரன் Mp

Saturday, July 24, 2021  www.jaffnamuslim.com  

ரிசாட் பதியுதீன் சிறையில் இருக்கின்ற பொழுது மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். 

 

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவரிடம், அமைச்சரின் இல்லத்தில் பணிக்க அமர்த்தப்பட்ட சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டறிக்கை ஒன்றையும் விடவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

 

குறைந்த பட்சம் - தப்பு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்றாவது சொல்லி இருக்கலாம்.

சில அடிப்படைவாத முஸ்லிம்கள் ரிசாத்துக்கு வெள்ளை அடிக்க முயல்வதையாவது இன அபிமானம் என புரிந்து கொள்ளலாம். இவருக்கு என்ன?

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

சில அடிப்படைவாத முஸ்லிம்கள் ரிசாத்துக்கு வெள்ளை அடிக்க முயல்வதையாவது இன அபிமானம் என புரிந்து கொள்ளலாம். இவருக்கு என்ன?

அமைதி மதத்தினர்களை குளிர்ச்சியடைய செய்கிறாராம். ஆனால் குற்றவாளிகளை ஊக்குவிக்கிறார் பாதுகாக்கிறார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மலையக சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை

 

WhatsApp Image 2021 07 21 at 11.26.43 மலையக சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை

மலையகத்தைச் சேர்ந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் எவையுமில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்,

சிறுமி தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து எந்த வாக்குமூலத்தையும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர், இன்னொரு நபரே என்ன நடந்தது என வாக்குமூலம் வழங்கினார் என்று  மருத்துவர்களே குறிப்பிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சிறுமி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது நிபுணர்களின் ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/there-is-no-evidence-that-the-hill-girl-committed-suicide-national-child-protection-authority/

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத்தின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணிபுரிந்த 11 பெண்கள் துஷ்பிரயோகம் – காவல்துறை தகவல்

July 24, 2021
 
Share
 
 72 Views

download 3 3 ரிஷாத்தின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணிபுரிந்த 11 பெண்கள் துஷ்பிரயோகம் - காவல்துறை தகவல்முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணிபுரிந்த 11 பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது என திவயின என்ற சிங்கள  செய்தி இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து மேலும் அந்த செய்தியில் தெரிவித்துள்ளதாவது,


 
இதற்கு முன்னர் மலையக தோட்டப் புறங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 11 யுவதிகள் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணியாற்றிய காலத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக காவல் துறையினர்  மேற்கொண்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும் முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிப்பெண்ணாக அழைத்து வரப்பட்ட யுவதி ஒருவர் பம்பலப்பிட்டி பகுதியில் இரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து  காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சராகக் கடமையாற்றிய போது அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தில் யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக  காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்,  தான் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தையும் அந்த அறையையும் காவல் துறையினருக்கு காண்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கப் படுகின்றது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த வேளை தீக்காயங்கள் காரணமாக சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து ரிஷாத்தின் மனைவி, மனைவியின் தந்தை, மைத்துனர் மற்றும் தரகர் ஆகியோர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

நேற்று காலை கைது செய்யப்பட்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்துக்காக குற்றஞ் சாட்டப்பட்டவர் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு பணிப் பெண்ணாகக் கொண்டு வரப்பட்ட இளம் யுவதிகள் மற்றும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தப் பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக பிரதான காவல் துறை  பரிசோதகர் பெண் அதிகாரி வருணி போகஹவத்தவை  நியமிக்க மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நடவடிக்கை எடுத்துள்ளார் .

அதன்படி, ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பாலியல் துஷ் பிரயோகத்திற்கு உட்பட்ட யுவதிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக வருணி போகஹவத்த  தலைமையிலான விசேட குழு மலையக தோட்டப்புறப் பகுதிகளுக்குச் சென்றுள்ளது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சகல யுவதிகளும் மலையக தோட்டப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், நேற்று கைது செய்யப்பட்ட தரகர் மூலமாக அனைவரும் கொழும்பு அழைத்து வரப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டு பணிப் பெண்களான யுவதிகள் மற்றும் சிறுமிகளைக் கொழும்புக்கு அழைத்து வந்த தரகருக்கு இலட்சக் கணக்கான பணத்தைச் செலுத்த அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டின் பின்புறத்தில் தனியாக அமைந்துள்ள சிறிய இருட்டு அறையில் மேற்படி யுவதிகள், சிறுமிகள் விடப்படுவதாகவும் இரவு 10.30 மணியளவில் குறித்த அறையின் கதவை அடைப்பதாகவும் மறுநாள் காலை 5.30 மணிக்கு  திறக்கப் படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், அவர்கள் கழிப்பறைக்குச் செல்லக் கூட அனுமதிக்கப் படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேலும்  டயகம சிறுமியை வீட்டுப் பணிப் பெண்ணாக அழைத்து வந்த தரகரிடம் நீண்ட நேரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி பல முக்கியமான தகவல்களைக் கேட்டறிந்துள்ளனர்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் 05 காவல்துறை விசேட குழு குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப் படுகின்றது.

நன்றி -தினக்குரல்

 

https://www.ilakku.org/11women-who-worked-maids-in-rishads-house-were-abused/

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
41 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அமைதி மதத்தினர்களை குளிர்ச்சியடைய செய்கிறாராம். ஆனால் குற்றவாளிகளை ஊக்குவிக்கிறார் பாதுகாக்கிறார்.

இன மத வேறுபாடுகளை தாண்டி ஒரு சிறுமியின் பாலியல் வன் கொலையை கண்டிக்க முடியாத அளவுக்கு அரசியல் ஆதாய கணக்கு கண்ணை மறைக்கிறது.

சாணாக்கியனை தவிர சகல வடக்கு கிழக்கு தமிழ் அரசியல்வாதிகளும் வாய் மூடிகளாய் இருப்பது ஏன்? இவர்களை விட மனிதநேயமுள்ள சிங்களவர்கள் சிலர் இதில் அக்கறையாக உள்ளார்கள். வெட்கம்கெட்ட தமிழ் அரசியல்வாதிகள்.

Edited by goshan_che
 • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.