Jump to content

ரஷ்யாவில் பொங்கி எழும் காட்டுத்தீ: 100,000 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவில் பொங்கி எழும் காட்டுத்தீ: 100,000 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!

ரஷ்யாவில் பொங்கி எழும் காட்டுத்தீ: 100,000 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!

பொங்கி எழும் காட்டுத்தீயில் இருந்து வரும் கடுமையான புகை, ரஷ்ய நகரமான யாகுட்ஸ்க், 50 பிற சைபீரிய நகரங்கள் மற்றும் குடியிருப்புகளை மூடியுள்ளது.

வடகிழக்கு சைபீரியாவில் உள்ள சாகா-யாகுடியா பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பரவலாக ஏற்பட்ட இந்த காட்டுத் தீ, வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை மற்றும் தீ பாதுகாப்பு விதிகளை புறக்கணித்தல் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் அவசர அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இப்பகுதியில் 187 தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த 24 மணித்தியாலத்தில் மொத்தம் 100,000 ஹெக்டேர் (சுமார் 247,000 ஏக்கர்) ஏரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து யாகுடியாவின் ஆளுநர் ஐசென் நிகோலாயேவ் கூறுகையில், ‘எங்கள் குடியரசில் காட்டுத்தீ ஏற்படும் நிலைமை மிகவும் கடினம். யாகுட்டியாவில் கடந்த 150 ஆண்டுகளில் வறண்ட கோடைகாலத்தை நாங்கள் அனுபவித்து வருகிறோம். ஜூன் மாதம் பதிவில் வெப்பமானதாக இருந்தது. இது, எங்கள் குடியரசில் கிட்டத்தட்ட தினசரி ஏற்படும் வறண்ட இடியுடன் சேர்ந்து, குறிப்பிடத்தக்க காட்டுத்தீயைக் கொண்டுவந்தது’ என கூறினார்.

இந்த தீ விபத்து, 51 நகரங்கள், குடியேற்றங்கள் மற்றும் யாகுட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. அத்துடன் நகரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர்.

ரஷ்யாவின் அவசர அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாகுடியாவிற்கு தீயணைக்கு இரண்டு விமானங்களை அனுப்பியுள்ளது. தீயணைப்பு முயற்சியில் 2,200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

https://athavannews.com/2021/1229438

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் பற்றி எரியும் காட்டுத் தீ

ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிந்து பல ஏக்கர் நிலப்பரப்புகளை நாசமாகியுள்ளது.

ரஷ்யா

ரஷ்யாவின் வனப்பகுதியில் 8 இலட்சம் ஹெக்டயர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

சைபீரிய வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. 

skynews-siberia-russia-forest-fires_5451

நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 500 ஹெக்டேயர் பரப்பளவில் 22 புதிய இடங்களில் நெருப்பு பற்றி எரிகிறது. இதனால் ஏற்பட்டுள்ள புகை மண்டலம் அப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது.

வனப்பகுதியை ஒட்டியுள்ள கோர்னி என்ற பகுதியை புகை சூழ்ந்துள்ளதால் அங்கு வாழும் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தொடர்ந்து எரியும் நெருப்பை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்களுடன், இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். 

நெருப்பு தொடர்ந்து எரிவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்காவில்  ஓரேகான் மாநிலத்தில் 3 இலட்சம் ஹெக்டயர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீயினால் ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளார்கள்.

ஓரிகான் மாநிலத்தில் வரலாற்றில் மிகப் பெரிய ஒன்றான அழிவுகரமான பூட்லெக் தீயை கட்டுக்குள் கொண்டு வர  2,000 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

கடந்த 6 ஆம் திகதி ஆரம்பித்த காட்டுத்தீயினால் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை விடப் பெரிய பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

_119488488_gettyimages-1233981753.jpg

13 அமெரிக்க மாநிலங்களில் பரவும் 80 க்கும் மேற்பட்ட பெரிய தீக்களில் இதுவும் ஒன்றாகும். இது வெப்ப அலைகள் மற்றும் அதிக காற்று ஆகியவற்றால் தூண்டப்படுகிறது.

காட்டுத்தீ  காரணமாக 2,000 குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு, குறைந்தது 160 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இதுவரை எரிந்து நாசமாகியுள்ளது.

கிளமத் நீர்வீழ்ச்சி மற்றும் ரெட்மண்ட் உட்பட பல நகரங்களில் வசிப்பவர்களுக்காக இரண்டு தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 

https://www.virakesari.lk/article/109728

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.