Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு!!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சுத்தி வளைக்காமல் "எனக்கு ஊசி போட பயம்" என்று சொல்லுங்கோ அக்கா.

எறும்பு கடிச்சது நோவை விட குறைவானது ஊரில்  ஊசியை பார்த்து அரை நாள் வேப்பமரத்தில் நின்ற நானே போட்டு விட்டேன்  அடம்பிடிக்காமல் போய்  போடுங்கோ .

(மேல் உள்ளதை படித்து விட்டு பல்லை நறநறக்க வேண்டாம் 🤣)

பெருமாள்…. ரதிக்கு, பெரிய வாய்தானே தவிர… சரியான பயந்தாங் கொள்ளி. 🤣

Link to comment
Share on other sites

 • Replies 89
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பெருமாள்

இறப்பு எண்ணிக்கை குறைவும்  கொரனோ வின் வழமையான அகோரத்தாண்டவமும் இல்லாமல் இரண்டு ஊசி போட்டவர்களுக்கு  சாதாரண காய்செல் போல் வந்து போவதாலும் இன்னும் பலருக்கு பொசிட்டிவ்  என்று சோதனைகள் காட்டியும் எந்த அறி

குமாரசாமி

நமக்கும் வாய் சும்மா இருக்காது....எதுக்கும்  தேவாரம் திருவிசைப்பாவை படிச்சுக்கொண்டு சிவனே எண்டு திரிவம்....😎 சொற்றுணை வேதியன் சோதி வானவன்😂

nedukkalapoovan

கொரோனாவை முற்றாக அழிக்க முடியாது. அது எனி சீசனல் புளூ அல்லது தடிமன் மாதிரி ஆகிவிட்டது. எனவே வக்சீனை போட்டு போட்டு பாதிப்பை குறைச்சு பாதுகாத்துக் கொண்டு மீண்டும் இயல்புக்குத் திரும்புவதை விட வேற வழியில

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

பெருமாள்…. ரதிக்கு, பெரிய வாய்தானே தவிர… சரியான பயந்தாங் கொள்ளி. 🤣

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி. நான் இந்தப்பக்கம் வரலை.

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஊசிக்கதைய விட்டுட்டு யார் யாரு இங்க வந்து ஊர் சுற்றப்போறீங்கள் அத முதல்ல சொல்லுங்கள் இலங்கை பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டாமா

அதுமட்டும் இல்லாமல் இலங்கயில் பல வெளிநாட்டில் உள்ளவர்கள் அதிக வட்டிக்கு சேமிப்பு செய்துள்ளதாகவும் கேள்விப்பட்டேன் சிங்களவர்களாக இருக்கலாம் தமிழர்களாகவும்  இருக்கலாம்😎

Edited by தனிக்காட்டு ராஜா
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

#கொரோனா வீரியம் அடைந்து செல்லும் போது அதற்கு ஏற்ற மாதிரி 5,6 ஊசி போடுவீர்களா?#

மருத்துவ சிபுணர்கள் 5,6 தடுப்பு ஊசி போடுவது எல்லோருக்கும் நல்லது என்று பரிந்துரைத்தால் நான் போடுவேன். கோவிட் தடுப்பு ஊசிக்கு நான் பதிந்தபோது ஓகஸ்டில் பதியும்படி சொல்லிவிட்டனர். முயற்சி செய்து முதலே போட்டேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎-‎07‎-‎2021 at 12:13, பெருமாள் said:

சுத்தி வளைக்காமல் "எனக்கு ஊசி போட பயம்" என்று சொல்லுங்கோ அக்கா.

எறும்பு கடிச்சது நோவை விட குறைவானது ஊரில்  ஊசியை பார்த்து அரை நாள் வேப்பமரத்தில் நின்ற நானே போட்டு விட்டேன்  அடம்பிடிக்காமல் போய்  போடுங்கோ .

(மேல் உள்ளதை படித்து விட்டு பல்லை நறநறக்க வேண்டாம் 🤣)

ஊசி போட பயமோ தெரியாது ஆனால் விருப்பம் இல்லை ...நான் பொதுவாய் இந்த ஊசி என்று இல்லை எந்த ஊசியுமே போடுவதில்லை 
 
On ‎22‎-‎07‎-‎2021 at 11:03, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் ஊசி போடுவது உங்களுடைய தனிப்பட்ட விடயம், ஆனால் 👆🏽நீங்கள் இப்படியும் சொல்லிவிட்டு ஊசியும் போடப்போவதில்லை என்றால் எப்படி? 

இந்த Corona இலகுவில் போகப்போவதில்லைதான் ஆனால் அதிகளவு மக்கள் தடுப்பு ஊசி போட்டபின்புதான் lockdown நீக்கப்பட்டால்தான் வேலையின்மை பிரச்சனை குறையும், இந்த COVID lockdown காலத்தில் பாடசாலைகளும் இல்லாதமையால் சிறுவர் சிறுமியர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது( சில இடங்களில் மாணவர்கள் பாடசாலை நேரம் என்பது வன்முறை மிகுந்த பெற்றோரிடம் இருந்து தப்ப ஒரு தற்காலிக புகலிடம்.. ) அதுவும் ஓரளவிற்கு குறையும். இப்படி நிறைய விடயங்கள் இந்த தடுப்பு ஊசி போடுவதில் தங்கியுள்ளது. 

மீண்டும் இது உங்களது தனிப்பட்ட விடயம், ஆனாலும் சமூக கடமை என்ற ஒன்றும் எங்களுக்கு உள்ளது. உங்களது குடும்ப வைத்தியருடன் கலந்தாலோசித்து செய்யுங்கள்.. 

இரு ஊசி போட்டவர்களுக்கும் கொரோனா இருக்கும் ...அவர்கள் தான் தாங்கள் ஊசி போட்டு விட்டோமே என்று கவலையீனமாய் இருப்பார்கள் ...அவர்கள் மூலமாய் தான் முக்கியமாய் மற்றவர்களுக்கு பரவ கூடும் ...நான் பொதுவுடத்தில் ,வேலையிடத்தில் மாஸ்க் போட்டுக் கொண்டு தான் நிக்கிறேன் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஊசி போட பயமோ தெரியாது ஆனால் விருப்பம் இல்லை ...நான் பொதுவாய் இந்த ஊசி என்று இல்லை எந்த ஊசியுமே போடுவதில்லை 

விளங்குது 🤣 இரண்டு ஊசி போட்டு நோயெதிர்ப்பு உருவாகி கொள்ளும் காலம் ஒவ்வொரு ஊசிக்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும் என்கிறார்கள் அதன்பின் மாஸ்க் இல்லாமல் திரிந்தவர்களை  கொரனோ தாக்குது ஆனால் கல்யாணம் கட்டிய மாப்பிளை இரண்டாம் வருஷம் அடங்கின பூம் பூம் மாடு மாதிரி இருப்பாரே அவரை போல்   சாதரண காய்ச்சல் போல் வந்து போகுது சிலருக்கு செல்ப் டெஸ்ட் கிட் அதில் பொசிட்டிவ் காட்டும் காய்ச்சலும் இல்லை தடிமனும் இல்லை . இனி உங்கடை இஷ்ட்டம் .

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஏன் பயப்பட வேண்டும்? இங்கு தோள்பட்டையில் ஊசி அடிக்கின்றார்கள். வேறு நாடுகளில் எந்த இடத்தில் என்று தெரியவில்லை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎-‎07‎-‎2021 at 11:49, விசுகு said:

அது மட்டுமல்ல இவர்களே  மற்றவர்களை காவு  கொடுக்கப்போகிறார்கள்??

என்னைக்கேட்டால்

இவர்களுக்கான  மருத்துவ  செலவு  மட்டுமல்ல இவர்களால்  மற்றவர்களுக்கு  தொற்று  ஏற்பட்டால்

அவர்களுக்குமான  மருத்துவ  செலவையும்  இவர்கள்  தான்  கட்டணும் என்று  சட்டம்  கொண்டு  வரணும்

இங்கேயும்  கொஞ்சபேர்

ஒன்றுக்கும்  அடங்காம

ஊசியும்  போடாமல்  திரிஞ்சவ

கொரோனா  வந்து குடும்பமாக வாட்டில  கிடந்து  வந்திருக்கினம்??

அதோட இன்னும் 2 குடும்பத்துக்கு  கொடுத்திருக்கினம்

இவர்களைக்கண்டால்

எனக்கு பத்திக்கொண்டு  வரும்

நீங்கள் கட்டாயப்படுத்தி நான் ஊசி போட்டு ஒத்துக்காமல் மண்டையை போட்டால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா😉
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

நீங்கள் கட்டாயப்படுத்தி நான் ஊசி போட்டு ஒத்துக்காமல் மண்டையை போட்டால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா😉
 
இங்கே நீங்கள் நான் என்ற பேச்சுக்கே இடமில்லை.

லட்சக்கணக்கான இழப்பிலிருந்து இன்று நூற்றுக்கணக்கான இழப்பு என்று வைத்திருப்பதற்கு காரணம் ஊசி மட்டுமே.

அதைத்தவிர வேறு வழியில்லை.

இல்லை உலக வைத்தியர்கள் ஆராய்ச்சியாளர்களை விட நாம் நினைப்பது சரி என்று நீங்கள் முடிவுக்கு வந்தால் அல்லது அவ்வளவு உறுதியாக நீங்கள் நம்பினால் அதற்கான செலவை பொறுப்பெடுப்பதில் என்ன தடுமாற்றம்??

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

எனக்கு கட்டாயம் கொரோனா வந்து நான் ஆஸ்பத்திரியில் போய் இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் போல 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 minutes ago, ரதி said:

எனக்கு கட்டாயம் கொரோனா வந்து நான் ஆஸ்பத்திரியில் போய் இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் போல 

கருத்து களத்தில் எழுதுவதெல்லாம் நல்லது நடக்கும் என்றே.

சில விடயங்களில் விளையாடக்கூடாது சகோதரி. இது உயிர் கொல்லி நோய்.

அண்ணா சொன்னால் ஊசி போடுவீர்கள் என்று தான்.😍

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

கருத்து களத்தில் எழுதுவதெல்லாம் நல்லது நடக்கும் என்றே.

சில விடயங்களில் விளையாடக்கூடாது சகோதரி. இது உயிர் கொல்லி நோய்.

அண்ணா சொன்னால் ஊசி போடுவீர்கள் என்று தான்.😍

எனக்கு விளங்குது நன்றி அண்ணா 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

எனக்கு விளங்குது நன்றி அண்ணா 

அக்கோய், இதென்ன விளையாட்டு? டபாரெண்டு ஓடிப்போய் ஊசியை போடுங்கோ....

ஊசி அடித்தது என்று பஸ்ஸோர்ட் டிலை அடித்தால்  தான் பக்கத்து பிரான்சுக்கும் போகேலும்.

வேலை இடத்துக்கு போகவும், பசுவிலை, ரயிலிலை ஏறவும், அந்த சேர்டிபிகேட் தேவை எண்டும் வரலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அக்கோய், இதென்ன விளையாட்டு? டபாரெண்டு ஓடிப்போய் ஊசியை போடுங்கோ....

ஊசி அடித்தது என்று பஸ்ஸோர்ட் டிலை அடித்தால்  தான் பக்கத்து பிரான்சுக்கும் போகேலும்.

வேலை இடத்துக்கு போகவும், பசுவிலை, ரயிலிலை ஏறவும், அந்த சேர்டிபிகேட் தேவை எண்டும் வரலாம்.

நாதமுனியர்,  
இங்கு... விமானத்தில் ஏற, விமான நிலையத்திற்கு செல்லும் முன்..
இரண்டு தடுப்பு ஊசி போட்டிருந்தாலும், உள்ளூரில் உள்ள... 
கொரோனா சோதனை நிலையங்களில், 24 மணித்தியாலத்திற்கு முன்பு எடுத்த...
கொரோனா அறிகுறி இல்லை என்ற அத்தாட்சி பத்திரத்தை,
விமான நிலைய வாசலில், காட்டினால் தான் உள்ளே... அனுமதிப்பார்கள்.

உள்ளூரில்... அதனை, இலவசமாக சோதனை செய்வார்கள்.
விமான நிலையத்தில்.. செய்வது என்றால், "30 ஐரோ"  கைக்காசை கொடுக்க வேண்டும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

அரசு அனேகமா எல்லோரும் போடும் வரை பார்த்துக்கொண்டு இருக்குது.

பிறகு, ஒரு இறுக்கு இறுக்க, போடாதவையள் வேலைக்கு போகேலாது, பொது போக்குவரத்திலை ஏற ஏலாது. பிளேன் ஏற ஏலாது எண்டு சொல்ல, கண பேர் அப்பதான் ஓடி முழுசுவினம்....

அப்ப காரணம் இல்லாமல் போடாமல் இருந்த ஆட்கள், கொடுங்கோ காசை எண்டுவாங்கள்... 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

அரசு அனேகமா எல்லோரும் போடும் வரை பார்த்துக்கொண்டு இருக்குது.

பிறகு, ஒரு இறுக்கு இறுக்க, போடாதவையள் வேலைக்கு போகேலாது, பொது போக்குவரத்திலை ஏற ஏலாது. பிளேன் ஏற ஏலாது எண்டு சொல்ல, கண பேர் அப்பதான் ஓடி முழுசுவினம்....

அப்ப காரணம் இல்லாமல் போடாமல் இருந்த ஆட்கள், கொடுங்கோ காசை எண்டுவாங்கள்... 

ஜேர்மனியில்.... இது வரை, இரண்டு ஊசி போட்டவர்கள்... 48 % மானவர்கள் மட்டுமே.
அதற்காக... எனது மாகாணத்தில், வருகின்ற  கிழமை... மட்டும்.....

"ஊசி... போட காத்திருக்க வேண்டாம், 
உடனே... வாருங்கள், ஊசி போடுங்கள்"

என்று... அறிவித்தல்  செய்து உள்ளார்கள்.
எவ்வளவு ஆட்கள்.... அந்தச்  சந்தர்ப்பத்தை பயன் படுத்தப் போகின்றார்கள் என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சொல்வேன்

36 minutes ago, Nathamuni said:

அரசு அனேகமா எல்லோரும் போடும் வரை பார்த்துக்கொண்டு இருக்குது.

பிறகு, ஒரு இறுக்கு இறுக்க, போடாதவையள் வேலைக்கு போகேலாது, பொது போக்குவரத்திலை ஏற ஏலாது. பிளேன் ஏற ஏலாது எண்டு சொல்ல, கண பேர் அப்பதான் ஓடி முழுசுவினம்....

அப்ப காரணம் இல்லாமல் போடாமல் இருந்த ஆட்கள், கொடுங்கோ காசை எண்டுவாங்கள்... 

இதைத்தான் நான் இங்கு தடுப்பூசி போட மறுப்பவர்களுக்குச் சொல்வேன்.
சில இடங்களில் பலரும் ஒரே மாதிரி யோசிப்பதால்  
பலருக்கும் நன்மை கிடைக்கும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஊசி போட பயம் என்றால் பக்கத்து கடையில் ரெண்டு பியர் வாங்கி ஒன்றை குடித்து விட்டு இன்னொன்றை காண்ட்பாக்கில் வைத்து எடுத்து சென்று ஊசி போடும் இடத்தில் வைத்து குடித்துவிட்டு போனால் ஒரு தெகிரியம் வரும்… நான் அப்படித்தான் செய்தேன்…

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஊசி போட பயம் என்றால் பக்கத்து கடையில் ரெண்டு பியர் வாங்கி ஒன்றை குடித்து விட்டு இன்னொன்றை காண்ட்பாக்கில் வைத்து எடுத்து சென்று ஊசி போடும் இடத்தில் வைத்து குடித்துவிட்டு போனால் ஒரு தெகிரியம் வரும்… நான் அப்படித்தான் செய்தேன்…

ஜோவ் ஓணாண்டிப்புலவரே,

ஊசியை போட்டு தண்ணியே அடிக்க கூடாது என்பது மன்னர் கட்டளை... நீர் வேறு தண்ணி அடித்து போனதுமல்லாமல், மடியில் வேறு ஒன்று கொண்டு போனீரோ?

யாரங்கே, இந்த ஓணாண்டியை கட்டித் தூக்குங்கள்.... தலைகீழாக, மூக்குப்பொடியை, ஒரு தாம்பாளத்தில் கொண்டு வாருங்கள்.  😳

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

ஜோவ் ஓணாண்டிப்புலவரே,

ஊசியை போட்டு தண்ணியே அடிக்க கூடாது என்பது மன்னர் கட்டளை... நீர் வேறு தண்ணி அடித்து போனதுமல்லாமல், மடியில் வேறு ஒன்று கொண்டு போனீரோ?

யாரங்கே, இந்த ஓணாண்டியை கட்டித் தூக்குங்கள்.... தலைகீழாக, மூக்குப்பொடியை, ஒரு தாம்பாளத்தில் கொண்டு வாருங்கள்.  😳

ரெம்ப சங்கடமாக இருக்குறது நண்பர்களே..😁

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

ஊசி அடித்தது என்று பஸ்ஸோர்ட் டிலை அடித்தால்  தான் பக்கத்து பிரான்சுக்கும் போகேலும்.

பிரான்சு நல்ல நடு  எண்டுறாங்கள் நானும் ஒருக்கால் போய் சுத்தியடிக்கத்தான் இருக்கு 😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

பிரான்சு நல்ல நடு  எண்டுறாங்கள் நானும் ஒருக்கால் போய் சுத்தியடிக்கத்தான் இருக்கு 😎

பிரான்ஸ் கிஸ் அடிக்கத் தெரியுமோ?

தெரியாவிட்டால் கற்றுக் கொண்டு போகவும்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

ஏன் பயப்பட வேண்டும்? இங்கு தோள்பட்டையில் ஊசி அடிக்கின்றார்கள். வேறு நாடுகளில் எந்த இடத்தில் என்று தெரியவில்லை

ஊசியை எங்க போட்டால் என்னப்பு? ஊசியை கண்டுதானே பயப்பிடுகிறா அக்காச்சி. ஊசியை மறைத்துக்கொண்டு குத்த வேண்டியான்.

7 hours ago, ரதி said:

எனக்கு கட்டாயம் கொரோனா வந்து நான் ஆஸ்பத்திரியில் போய் இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் போல 

இதென்ன கேள்வி? அப்படி நடக்க கூடாது என்றுதானே இத்தனைபேர் குத்தி முறிகிறார்கள். இவவுக்கு ஊசிபோட போய் ஊசியை முறித்துப்போடுவா போல கிடக்கு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பிரான்ஸ் கிஸ் அடிக்கத் தெரியுமோ?

தெரியாவிட்டால் கற்றுக் கொண்டு போகவும்.

யாரிடம்?

என்ன கேள்வி?😜

அதை தவிர வேறு ஒன்றும் அறியோம் பராபரனே 😀

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

பிரான்ஸ் கிஸ் அடிக்கத் தெரியுமோ?

தெரியாவிட்டால் கற்றுக் கொண்டு போகவும்.

ஊரிலையே எல்லாத்தையும் கரைச்சு குடிச்சிட்டுத்தான் வந்தனாங்கள் 😎

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • குணாவின் நஞ்சுண்ட காட்டை வாசித்த போது அவர் எமது விடுதலை போராட்டத்தில்  ஏற்பட்ட தவறுகளை சீர்பார்த்து, சுயவிமர்சனம் செய்து முன்செல்வ ர் என்று பார்த்தால், திரும்பவும், குண்டு சட்டிக்கில் குதிரை ஓடுகின்றார். அன்ரன் பாலசிங்கம் என்று நினைத்து தமிழ்ச்செல்வன் ரேஞ்சுக்கு அரசியல் விமர்சனம் செய்கிறார். 
  • ஆப்பிள் ஸ்டோர்  ரூம்களில் வயது போனவர்களுக்கு பேரன் பேத்திகள் ஐபோனை  பரிசாக கொடுத்து விட உபயோகிக்க தெரியாமல் இருப்பார்கள் அவர்களுக்கு இலவச கிளாஸ் ரூம் எப்படி ஆப்பிள் போன் இலகுவாக பாதுகாப்பாக உபயோகிப்பது துலைந்தால் எப்படி சமாளிப்பது போன்ற விடயங்களை இலவசமாக சொல்லிக்கொடுப்பார்கள் அப்பிளின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் பின் ஆப்பிளை பின்பற்றி மற்றைய கொம்பனிகள் செய்தது .இங்கு என்னதான் குத்தி முறிந்தாலும் சரி வராது அப்படியான கிளாஸ் ரூம் ஒன்லைனில் சொல்லிக்கொடுக்கிறார்கள் கொரனோ காரணமாக . அக்காசிக்கு  வயது போயிட்டுது🤣 அப்படியான ஒன்றுக்கு இவ  மினக்கெட்டால்  நல்லது .
  • தமிழ்நாட்டு தமிழரை தேடிவருவார்கள். அவர்களே பெரும்பான்மை தமிழர், அதோடு அவர்கள் இந்தியாவில் ஒரு பலம்பொருந்திய தேசிய இனம்.  
  • உள்ளக சுயநிர்ணய கோரிக்கை மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய உரிமை கோருவோம் என்று சுமந்திரன் பாராளுமன்றத்தில் உரையாற்றி இருப்பது உண்மையா??
  • அண்மையில் சுமந்திரன் IBC தமிழுக்கு வழங்கிய செவ்வி இங்கே பகிரப்படுகிறது. இச் செவ்வியின் போது சுமந்திரன் நம்பும் தமிழ் தேசியம், உள்ளக சுயநிர்ணயம் இலங்கை நாட்டில் சட்டரீதியாக பெற்றுக்கொவதற்கான சாத்தியப்பாடும், அது தொடர்ந்தும் மறுக்கப்படுகின்ற பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் இது தொடர்பில் தமிழ்த் தலைமைகளின் முயற்சிகள் மற்றும் அதில் சர்வதேச சமூகத்தின் வகிபாகத்தை பற்றி கலந்துரையாடி இருந்தார். மேலும் பிராந்திய மற்றும் உலக வல்லரசு நாடுகள் தமிழர் பிரச்சினையை ஒரு துருப்புசீட்டாக பாவிப்பதை எமக்கு சாதகமாக எவ்வாறு மாற்றிக்கொள்வது பற்றியும் வடகிழக்கில் சீனாவின் ஆதிக்கத்திற்கான எதிர்ப்பிற்கும் இந்தியவின் பாதுகாப்பு கரிசனைகளை ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களையும் விளக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழர் பிரதேசங்களில் ஹிந்துத்துவ கொள்கைகள் நிலைகொள்வதற்கான சாத்தியப்பாடுகள், 2020 தேர்தலில், சுமந்திரனுக்கான விருப்பு வாக்குகள் அரைவாசியாக சரிவதற்கான காரணங்கள், வடகிழக்கில் இந்தியாவின் ஆக்கிரமிப்பின் விளைவுகள், தமிழ் அரசியலில் அப்புக்காத்து அரசியலின் செல்வாக்கு, மற்றும் ஆயுத போராட்டத்தின் நியாயத்தன்மை பற்றி கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.