Jump to content

உன்னை நீ அறிவாய்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நீ அறிவாய் 

ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் பொதுவாகவே நீங்கள் கலைப்பிரிவிலோ அல்லது விஞ்ஞானப் பிரிவிலோ கல்வியை தொடர்ந்தாலும் முதலில் நீங்கள் இந்த கிரேக்க தத்துவவியளாளர்களின் தத்துவ சிந்தனைகளை கட்டாய பாடமாக படிக்க வேண்டும். இந்த பாடத்தில் சித்தி அடைந்தால் மாத்திரமே நீங்கள் தொடர்ந்து ஏனைய பாடங்களை படிக்க முடியும். இவை எமக்கு ஒன்றை தெளிவாக சொல்லி இருக்கிறது நீ எதை கற்றாலும் ஆழ்ந்த அறிவோடும் தேடலோடும் அதை கற்றுக்கொள்ளுவது மட்டும் இன்றி உன்னை நீ அறிய வேண்டும். இந்த வகையில் சோக்கிரட்டீஸ்,பிளாட்டோ,அடிஸ்டோட்டில் என்னும் தத்துவவியளாளர்கள் முக்கியமானவர்கள். எனக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாதது மட்டும் தான் என்று சொன்ன யார் இந்தக் கிழவன் சோக்கிரடீஸ் எல்லோரும் மனிதர்கள் தானே அப்படி எவரைத் தேடுகிறான். அவன் தேடியதெல்லாம் அறிவும் ஞானமும் கொண்ட மனிதனையும் அந்த அறிவையும் ஞானத்தையும் விற்பனை செய்யாமல் சமரசம் செய்யாமல் கற்றுக் கொடுக்கும் அந்த மனிதர்களை தான். இன்று எந்த தேடல்களோ அல்லது ஆழமான அறிவு இன்றி தமக்கே எல்லாம் தெரிந்தது போல் ஆண்டுக்கு ஒரு புத்தகங்களை எழுதி வரும் பேசி வரும் எழுத்தாளர் என்று சொல்பவர்கள் போல் இன்றி சோக்கிரடீஸ் எந்த புத்தகங்களோ அல்லது குறிப்புகளோ எழுதவில்லை. மாறாக தத்துவார்த்த விவாதங்கள் மூலம் அறிவையும் ஞானத்தையும்  சிந்தனையையும் வளர்த்து தேடி வந்தார். ஏன் எதற்கு எப்படி என்று கேள்வி கேக்கும் இளையர்களை தேடினான். அறிவு என்றால் என்ன,சிந்தனை என்றால் என்ன, ஏன் எதற்காக மனிதன் தவறு செய்கிறான் என்ற எல்லா கோள்வி விவாதங்களையும் இளைஞர் மத்தியில் விதைத்தார். பகலிலும் விளக்கோடு திரிந்து மனிதர்களை தேடினான் பைத்தியக்காரன் என்றும் கிரேக்க இளைஞர்களை புரட்சிக்கு திரட்டும் புரட்சிக்ககாரன் என்றும் இவரை சிறையில் அடைத்து நஞ்சு கொடுத்துக் கொன்றனர். தப்பிக்கக் கூடிய வழிகள் இருந்தும் எந்த சமரசங்களுடன் தன் சித்தாந்தத்தை விட்டுக் கொடுக்கவுமில்லை விற்பனை செய்யவும் இல்லை. தோல்வியோ வெற்றியோ எந்த சமரசங்களுக்கும் போகாமல் கொண்ட கொள்கை உறுதியோடு இன்று இல்லா விட்டாலும் என்றோ ஒரு நாள் தங்கள் இலட்சியம் சிந்தனை வடிவம் பெறும் என்ற நம்பிகையோடு மரணத்தை எதிர் கொண்ட  மகத்தான மேதகு மிக்க மனிதர்கள் போலவே நின்றால் மாத்திரம் போதாது நீ நின்ற இடத்தில் நிற்க வேண்டும் என்று சொல்லுவது போல் (Not only stand you must stay ). அறிவும் ஞானமும் படைத்த அரிஸ்டோட்டல் விடை பெற்றபோது ஏதென்ஸ் நகரமே ஒரு கணம் பேச மறந்தது. இதன் பின் உணர்ந்தது எவ்வளவு பெரிய தத்துவ அறிஞரை இந்த தேசம் அவரை நஞ்சு அருந்த வைத்து கொன்று விட்டதென்றும்  ஏதென்ஸ் நகரின் தத்துவ மேதையை தாம் இழந்து விட்டோம் என்றும். 

பா.உதயன்✍️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.