Jump to content

எண்பத்தி மூன்றினிலே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

<iframe src="https://www.facebook.coவெலிm/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fthamilarivu%2Fposts%2F4136726713041863&show_text=true&width=500" width="500" height="414" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

 

https://www.facebook.com/sithiravelu.karunanandarajah/videos/10153465194516950

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்பத்தி மூன்றினிலே

எண்பத்தி மூன்றினிலே -ஆ
இலங்கைத் தீவினிலே

எண்பத்தி மூன்றினிலே
இந்து மா கடலுக்கு நடுவினிலே - ஆடி
ஈர்பத்து மூன்றிற் தொடங்கியதே துயர்
இலங்கைத் தீவினிலே

கண்பட்டதோ இத் தமிழினத்திற்கென
கண்டவர் யாரும் வருந்திட எங்களைப்
புண்படச் செய்தனரே - ஒரு
போக்கிடமற்ற அகதிகளாக்கியே
எண்பட்ட யாவரையும் தமிழ்
என்றறிந்தால் உடன் கொன்றெறிந்தார் - அந்தோ
(எண்பத்தி...)

நெஞ்சங் குமுறிடவே-கற்பு
நீங்கிடச் செய்த கொடுமையிலே - அந்தப்
பஞ்சைத் தமிழ் மகளிர் - கொடும்
பாவிகளாற் தங்கள் ஆவியை விட்டிட
அஞ்சிய பாலகர்கள் - தங்கள்
அன்னையர் மார்பில் அமுதமருந்தியே
துஞ்சிய செய்திகளும் - பல
துயரக் கதைகளும் மறந்திடுமோ - அந்த (எண்பத்தி...)

தேயிலைத் தோட்டத்திலே - அந்தத்
தெற்கு இலங்கையிலே
ஆயிரமாயிரமாய்த் தமிழ்ச் சோதரர்
அன்று இனவெறியாற் கொலையுண்டதும்
நாயிலும் கீழ்க்கடையாய் - எம்மை
நாடற்ற பேர்களாய் ஆக்கிய பின்னரும்
காயும் இனவெறியால் - எம்மேல்
காறியுமிழ்ந்ததும் நெஞ்சை விட்டேகுமோ (எண்பத்தி...)

வெலிக்கடைச் சிறையில்-மனம்
வெம்பிக் கிடந்த எம் சோதரர் தன்னையே...
சிலிர்க்குதேயுடலம்...அந்தோ!
சிந்தனை செய்திடவும் மனம் கூசுதே...
பலிக்கு வெட்டினரே...
பத்மாசனப் புத்தன் முன் கண்களைக் குத்தியே
படையலிட்டனரே - அந்த
பாதகம் எங்களின் நெஞ்சை விட்டேகுமோ (எண்பத்தி...)

ஆண்ட அரச படை - எங்கள்
அன்னையர் தங்கையர் மானம் பறித்ததும்
மூண்ட பெருந்தீயில் - செல்வம்
முற்றும் இழந்து நாம் ஏதிலரானதும்
மாண்டவர் கண்களையே - அந்த
மானமிலாதவர் தோண்டி மகிழ்ந்ததும்
மீண்டும் நினைவலையில் - வந்து
மேவிட வெந்துயர் ஆவியைத் தீய்க்குது (எண்பத்தி...)

சிங்கள பௌத்தவெறி - எங்கள்
செந்தமிழ்த் தாயைச் சிதைத்த கொடுமையை
எங்கு முறையிடுவோம் - எமக்(கு)
ஈழத்தையன்றியே யாதும் புகலுண்டோ!
தங்கையர் தம்பிகளே! - தமிழ்
ஈழ சரித்திரம் நாளும் படித்து நீர்
பொங்குக பொங்குகவே - ஒரு
போக்கிடமற்ற அகதிகளாயினோம் (எண்பத்தி...)

மேற்குலகந்தனிலே - பொருள்
மேவிய வாழ்வொடு வாழினும் எங்களின்
நாட்டை மறப்போமோ! - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே-அன்னை
வீட்டை மறப்போமோ! - என்று
விம்மியழுது புலம்பிடும் எம்குரல்
கேட்டிருப்பாய் காற்றே - அந்த
கேவலைக் கீழ்த்திசை சென்றெமதீழத்தில்
மீட்டு முரையாயோ - நாங்கள்
விம்மியழவும் திறன் கெட்டுப் போயினோம் (எண்பத்தி...)

ஆற்றல் இழந்தவராய்- எங்கள்
அன்னை மொழியை மறந்தவராய்ப்-பெருங்
காற்றிற் கலந்தவராய் - கலாச்
சாரம் கலைகள்அழிந்தவராய்- நாம்
மாற்றினமாகுவதோ - இல்லை
மானத் தமிழர்களாய் என்றும் வாழ்வதோ
சாற்றிடுவாய் தாயே - ஹே!
சாமுண்டி காளீ! வீரகராளீ! (எண்பத்தி...)

1983 ஆடி 24 இல் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறையை நினைவு கூர்வோம்.

பாடியோர்: மாட்டின் சோபியா
பாடல்களும் மெட்டும்: யுகசாரதி (எஸ். கருணானந்தராஜா)
இசை: சதீஸ் குழுவினர்

 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/sithiravelu.karunanandarajah/videos/10153465194516950/

 ஈழத்தமிழரின் நிகழ்கால வரலாற்று கவிதை.

ஈழத்தமிழரின் நிகழ்கால வரலாறு தெரியாதவர்கள் இக்கவிதையை மனப்பாடம் பண்ணவும்.

இணைப்பிற்கு நன்றி உறவுகளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/sithiravelu.karunanandarajah/videos/10153465194516950

மிக்க நன்றி குமாரசாமி.  முடிந்தால் இதன் தலைப்பை முகப்பில் போட்டுவிடுங்கள்.  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வாத்தியார் said:

பாடியோர்: மாட்டின் சோபியா
பாடல்களும் மெட்டும்: யுகசாரதி (எஸ். கருணானந்தராஜா)
இசை: சதீஸ் குழுவினர்

 
பாடலை முழுமையாகப் பிரசுரித்தமைக்கு மிக்க நன்றிகள் வாத்தியார்.
 
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

இந்தியா உணவுப்பொதி போட்டதா...? எப்போது....?? வாய்கரிசிதானே போட்டது.😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

இந்தியா உணவுப்பொதி போட்டதா...? எப்போது....?? வாய்கரிசிதானே போட்டது.

 

நன்றி பாஞ்ச்.  எனக்கு அந்த நேரம் அப்படி வாயில் வரவில்லை.  அதனால் உணவுப்பொதியென்று போட்டுவிட்டேன்.  ஆஹா வாய்க்கரிசியே சிறப்பான உவமை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2021 at 00:08, வாத்தியார் said:

எண்பத்தி மூன்றினிலே

எண்பத்தி மூன்றினிலே -ஆ
இலங்கைத் தீவினிலே

எண்பத்தி மூன்றினிலே
இந்து மா கடலுக்கு நடுவினிலே - ஆடி
ஈர்பத்து மூன்றிற் தொடங்கியதே துயர்
இலங்கைத் தீவினிலே

கண்பட்டதோ இத் தமிழினத்திற்கென
கண்டவர் யாரும் வருந்திட எங்களைப்
புண்படச் செய்தனரே - ஒரு
போக்கிடமற்ற அகதிகளாக்கியே
எண்பட்ட யாவரையும் தமிழ்
என்றறிந்தால் உடன் கொன்றெறிந்தார் - அந்தோ
(எண்பத்தி...)

நெஞ்சங் குமுறிடவே-கற்பு
நீங்கிடச் செய்த கொடுமையிலே - அந்தப்
பஞ்சைத் தமிழ் மகளிர் - கொடும்
பாவிகளாற் தங்கள் ஆவியை விட்டிட
அஞ்சிய பாலகர்கள் - தங்கள்
அன்னையர் மார்பில் அமுதமருந்தியே
துஞ்சிய செய்திகளும் - பல
துயரக் கதைகளும் மறந்திடுமோ - அந்த (எண்பத்தி...)

தேயிலைத் தோட்டத்திலே - அந்தத்
தெற்கு இலங்கையிலே
ஆயிரமாயிரமாய்த் தமிழ்ச் சோதரர்
அன்று இனவெறியாற் கொலையுண்டதும்
நாயிலும் கீழ்க்கடையாய் - எம்மை
நாடற்ற பேர்களாய் ஆக்கிய பின்னரும்
காயும் இனவெறியால் - எம்மேல்
காறியுமிழ்ந்ததும் நெஞ்சை விட்டேகுமோ (எண்பத்தி...)

வெலிக்கடைச் சிறையில்-மனம்
வெம்பிக் கிடந்த எம் சோதரர் தன்னையே...
சிலிர்க்குதேயுடலம்...அந்தோ!
சிந்தனை செய்திடவும் மனம் கூசுதே...
பலிக்கு வெட்டினரே...
பத்மாசனப் புத்தன் முன் கண்களைக் குத்தியே
படையலிட்டனரே - அந்த
பாதகம் எங்களின் நெஞ்சை விட்டேகுமோ (எண்பத்தி...)

ஆண்ட அரச படை - எங்கள்
அன்னையர் தங்கையர் மானம் பறித்ததும்
மூண்ட பெருந்தீயில் - செல்வம்
முற்றும் இழந்து நாம் ஏதிலரானதும்
மாண்டவர் கண்களையே - அந்த
மானமிலாதவர் தோண்டி மகிழ்ந்ததும்
மீண்டும் நினைவலையில் - வந்து
மேவிட வெந்துயர் ஆவியைத் தீய்க்குது (எண்பத்தி...)

சிங்கள பௌத்தவெறி - எங்கள்
செந்தமிழ்த் தாயைச் சிதைத்த கொடுமையை
எங்கு முறையிடுவோம் - எமக்(கு)
ஈழத்தையன்றியே யாதும் புகலுண்டோ!
தங்கையர் தம்பிகளே! - தமிழ்
ஈழ சரித்திரம் நாளும் படித்து நீர்
பொங்குக பொங்குகவே - ஒரு
போக்கிடமற்ற அகதிகளாயினோம் (எண்பத்தி...)

மேற்குலகந்தனிலே - பொருள்
மேவிய வாழ்வொடு வாழினும் எங்களின்
நாட்டை மறப்போமோ! - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே-அன்னை
வீட்டை மறப்போமோ! - என்று
விம்மியழுது புலம்பிடும் எம்குரல்
கேட்டிருப்பாய் காற்றே - அந்த
கேவலைக் கீழ்த்திசை சென்றெமதீழத்தில்
மீட்டு முரையாயோ - நாங்கள்
விம்மியழவும் திறன் கெட்டுப் போயினோம் (எண்பத்தி...)

ஆற்றல் இழந்தவராய்- எங்கள்
அன்னை மொழியை மறந்தவராய்ப்-பெருங்
காற்றிற் கலந்தவராய் - கலாச்
சாரம் கலைகள்அழிந்தவராய்- நாம்
மாற்றினமாகுவதோ - இல்லை
மானத் தமிழர்களாய் என்றும் வாழ்வதோ
சாற்றிடுவாய் தாயே - ஹே!
சாமுண்டி காளீ! வீரகராளீ! (எண்பத்தி...)

1983 ஆடி 24 இல் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறையை நினைவு கூர்வோம்.

பாடியோர்: மாட்டின் சோபியா
பாடல்களும் மெட்டும்: யுகசாரதி (எஸ். கருணானந்தராஜா)
இசை: சதீஸ் குழுவினர்

 
 
 
 

பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/7/2021 at 06:32, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👍

நன்றி தமிழ்த்தேசியன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2021 at 20:38, வாத்தியார் said:

மேற்குலகந்தனிலே - பொருள்
மேவிய வாழ்வொடு வாழினும் எங்களின்
நாட்டை மறப்போமோ! - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே-அன்னை
வீட்டை மறப்போமோ! - என்று
விம்மியழுது புலம்பிடும் எம்குரல்
கேட்டிருப்பாய் காற்றே - அந்த
கேவலைக் கீழ்த்திசை சென்றெமதீழத்தில்
மீட்டு முரையாயோ - நாங்கள்
விம்மியழவும் திறன் கெட்டுப் போயினோம்

கவிதைக்கு நன்றி அங்கிள்
உங்கள் இலக்கிய ஆர்வத்தை உங்களுடன் வாழ்ந்தபோதே அறிந்து கொண்டேன்.
இன்னும் பல ஆக்கங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி வாத்தியார் அவர்களே!  என்னால் உங்களை யூகித்தறிய முடியவில்லை, மன்னிக்கவும்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.