Jump to content

கடற்புலிகளின் கட்டளைப் படகு | ஆவணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 


வணக்கம் மக்களே..

இன்று நாம் பார்க்கப்போவது கடற்சமர்களின் போது கடற்புலிகள் ஓட்டிய பக்கவாடுகள் நெஞ்சுயர்ந்ததாக இருந்த கடற்கலம் பற்றியே!


 

  • வகுப்புப் பெயர் அறியாக் கலம் (Class name unknown craft):

 

main-qimg-93ed06c98ab1a7d337aad9f887c091a3.png

'படிமப்புரவு: நான் ஆக்கியது'

இந்தப் படகின் கலப்பெயர் காமினி என்பதாகும். இதன் கட்டளையாளராக லெப். கேணல் இரும்பொறை மாஸ்டர் பணியாற்றியுள்ளார்.

இக்கலமானது கடற்புலிகளின் ஏனைய கலங்களினின்று வேறுபடுகின்றது. இக்கலனின் முழுப்படம் எனக்குக் கிடைக்கப் பெறவில்லை. இதன் உட்பக்கமானது நன்கு தாழ்வாக உள்ளது. இதன் பக்கவாடு நன்கு உயரமாக உள்ளது. நடுத்தர சுடுகலத் தண்டின் உயரத்திற்கு பக்கவாடு உயரமாக உள்ளது.. கிட்டத்தட்ட ஒரு சராசரி மாந்தனின் நெஞ்சளவு உயரமாக உள்ளது. பக்கவாடு முற்றுமுழுதாக ஆடியிழையால் ஆனது ஆகும். இங்கு கம்பி வேலி இல்லை.

photo61.jpg

'அணியத்தில் உள்ள ZPU-2 | வலது பக்கவாட்டில் உள்ள Dshk | அணியத்தின் ஆக முன்புறத்தை நோக்குக'

photo19.jpg

'அணியத்தில் உள்ள ZPU-2 | வலது பக்கவாட்டில் உள்ள Dshk | அணியத்தின் ஆக முன்புறத்தை நோக்குக'

photo13.jpg

'அணியம்'

அணியத்தின் ஆக முன்புறமானது குடையப்படவில்லை. அது தனித் தளமாகவே உள்ளது. கிட்டத்தட்ட பண்டை வெள்ளையர்களின் பாய்மரக்கப்பல்களின் சக்கரம் வைக்கப்பட்டிருக்கும் பகுதியை அதன் கீழ்ப்பகுதியில் இருந்து நோக்குவது போன்ற கற்பனையை இப்படகின் அணியத்தை நோக்குவதுடன் ஒப்பிடவும்.

photo14.jpg

'மீகாமன் இருப்பிடம் | மீகாமன் இருப்பிடத்திற்கு முன்பகுதியில் FN MAG இயந்திரச் சுடுகலன் பூட்டப்பட்டுள்ளது | மீகாமனிற்கு வலதுபக்கத்தில் தலைகீழ் பானா வடிவ கம்பி உள்ளது '

அதன் மீகாமன் அறையானது அறைபோன்று தென்படவில்லை. அதற்கு கவசம் போன்ற அறை அமைப்பும் இல்லை. திறந்தே காணப்படுகிறது. இது படகின் வலது பக்காவோரத்தோடு(gunwale) ஒட்டியே உள்ளது. மீகாமன் இருப்பிடம் தளத்தில் இருந்து நன்கு உயர்ந்தே உள்ளது. மீகாமன் இருப்பிடத்தில் இரண்டு இருக்கைகள் உள்ளன. மீகாமன் கீழே வீழுந்துவிடாமல் இருக்க வலதுபக்கத்தில் ஒரு கம்பியானது தலைகீழ் பானா வடிவில் போடப்பட்டுள்ளது.

photo17.jpg

'கடையால் ZPU-2 | மீகாமன் இருப்பிடத்தில் இருவர் உள்ளனர்'

இதன் அணியத்திலும் கடையாலிலும் தலா ஒரு 14.5mm ZPU-2 சுடுகலன் பொருத்தப்பட்டுள்ளது. இவையிரண்டும் தளத்தில் இருந்து சற்று உயர்ந்தே காணப்படுகின்றன. ஆனால் அவையின் உயரத்தில் இரண்டிற்கும் இடையில் வேறுபாடு உண்டு. அஃது யாதெனில் அணியத்தில் உள்ள ZPU-2ஐக் காட்டிலும் கடையாலில் உள்ள ZPU-2 ஆனது கொஞ்சம் தாழ்ந்தே உள்ளது. ஏனெனில் அணியமானது குடையப்படாமல் இருப்பதாலும் அணியத்தின் பக்கவாடு இரு பக்கங்களிலும் உள்ள பக்கவாட்தில் இருந்து சற்று உயரமாக இருப்பதாலும் அணிய ZPU-2 ஆனது கடையால் ZPU-2 ஐக் காட்டிலும் உயரமாக உள்ளது. இவ்வுயரமானது முதன்மைத் தண்டின் உயரத்தால் உண்டாக்கப்பட்டது ஆகும்.

வலது பக்கத்தில் Dshk-உம் மீகாமன் அறைக்கு முன்புறத்தில் இடது பக்கத்தில் ஒரு PK-உம் பொருத்தப்பட்டுள்ளது. ஆக மொத்தம் நான்கு சுடுகலங்கள் உள (2 முதன்மை, 2 பக்கவாடு). கதுவீயும்-RADAR (வட்டு வடிவம்) உள்ளது. தொலைத்தொடர்புக் கருவியாக VHF & நடைபேசி(walky talky) உள்ளது.

photo15.jpg

' VHF கதைப்பவர் கடற்புலிகளின் கட்டளையாளர் லெப்.கேணல் இரும்பொறை மாஸ்டராவார்'

unidentified craft 2.png

'மேற்குறிப்பிடப்பட்ட படகில் இருந்து சிறீலங்காக் கடற்படையின் டோறா வேகத் தாக்குதல் கலம் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சி'

unidentified craft.png

'மேற்குறிப்பிடப்பட்ட படகில் இருந்து சிறீலங்காக் கடற்படையின் டோறா வேகத் தாக்குதல் கலம் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சி'

 

main-qimg-b0f39b6e3ac21ef49187b56c163c1528.png

‘இக்கலத்தின் பக்கவாட்டு உயரத்தினை இப்படத்தைக் கொண்டு அளவிடவும். அருகில் நிற்பது பாரதிதாசன் என்ற கலப்பெயர் கொண்ட வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப்படகு’

இதே போன்ற இன்னொரு படகின் பெயர் இளந்தாரகை என்று அறிகிறேன்.

 


உசாத்துணை:

  • படங்களை வைத்தே எழுதினேன்

படிமப்புரவு

http://aruchuna.com

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

இதுதான் நான் சொன்ன அந்த நெஞ்சுயர்ந்த பக்கவாடுகள் கொண்ட கடற்கலம். இதன் வகுப்புப் பெயர் யாதென நானறியேன்.

 

 

அதன் கடையாரில் காயம்பட்ட கடற்புலிக்கு பண்டுவம் நடக்கிறது:

fsda.png

 

 

பக்கவாட்டுச் சுடுகலன்:

f32r2342.png

 

rf232.png

.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.