Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கடற்புலிகளால் கடலில் ஓட்டப்பட்ட, நெஞ்சுயர்ந்த பக்கவாடுகள் கொண்ட கடற்கலன் - ஆவணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறி 

தோற்றிடினும் வரலாறின்றி சாகேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!

 


வணக்கம் மக்களே..

இன்று நாம் பார்க்கப்போவது கடற்சமர்களின் போது கடற்புலிகள் ஓட்டிய பக்கவாடுகள் நெஞ்சுயர்ந்ததாக இருந்த கடற்கலம் பற்றியே!


 

  • வகுப்புப் பெயர் அறியாக் கலம் (Class name unknown craft):

main-qimg-93ed06c98ab1a7d337aad9f887c091a3.png

'படிமப்புரவு: நான் ஆக்கியது'

இந்தப் படகின் பெயர் காமினி என்பதாகும். இது இள பேரரையன்(Lt.Col) இரும்பொறை மாஸ்டரின் படகாகும். இக்கலமானது கடற்புலிகளின் ஏனைய கலங்களினின்று வேறுபடுகின்றது. இக்கலனின் முழுப்படம் எனக்குக் கிடைக்கப் பெறவில்லை. இதன் உட்பக்கமானது நன்கு தாழ்வாக உள்ளது. இதன் பக்கவாடு நன்கு உயரமாக உள்ளது. நடுத்தர சுடுகலத் தண்டின் உயரத்திற்கு பக்கவாடு உயரமாக உள்ளது.. கிட்டத்தட்ட ஒரு சராசரி மாந்தனின் நெஞ்சளவு உயரமாக உள்ளது. பக்கவாடு முற்றுமுழுதாக ஆடியிழையால் ஆனது ஆகும். இங்கு கம்பி வேலி இல்லை.

photo61.jpg

'அணியத்தில் உள்ள ZPU-2 | வலது பக்கவாட்டில் உள்ள Dshk | அணியத்தின் ஆக முன்புறத்தை நோக்குக'

photo19.jpg

'அணியத்தில் உள்ள ZPU-2 | வலது பக்கவாட்டில் உள்ள Dshk | அணியத்தின் ஆக முன்புறத்தை நோக்குக'

photo13.jpg

'அணியம்'

அணியத்தின் ஆக முன்புறமானது குடையப்படவில்லை. அது தனித் தளமாகவே உள்ளது. கிட்டத்தட்ட பண்டை வெள்ளையர்களின் பாய்மரக்கப்பல்களின் சக்கரம் வைக்கப்பட்டிருக்கும் பகுதியை அதன் கீழ்ப்பகுதியில் இருந்து நோக்குவது போன்ற கற்பனையை இப்படகின் அணியத்தை நோக்குவதுடன் ஒப்பிடவும்.

photo14.jpg

'மீகாமன் இருப்பிடம் | மீகாமன் இருப்பிடத்திற்கு முன்பகுதியில் PK சுடுகலன் உள்ளது | மீகாமனிற்கு வலதுபக்கத்தில் தலைகீழ் பானா வடிவ கம்பி உள்ளது '

அதன் மீகாமன் அறையானது அறைபோன்று தென்படவில்லை. அதற்கு கவசம் போன்ற அறை அமைப்பும் இல்லை. திறந்தே காணப்படுகிறது. இது படகின் வலது பக்காவோரத்தோடு(gunwale) ஒட்டியே உள்ளது. மீகாமன் இருப்பிடம் தளத்தில் இருந்து நன்கு உயர்ந்தே உள்ளது. மீகாமன் இருப்பிடத்தில் இரண்டு இருக்கைகள் உள்ளன. மீகாமன் கீழே வீழுந்துவிடாமல் இருக்க வலதுபக்கத்தில் ஒரு கம்பியானது தலைகீழ் பானா வடிவில் போடப்பட்டுள்ளது.

photo17.jpg

'கடையால் ZPU-2 | மீகாமன் இருப்பிடத்தில் இருவர் உள்ளனர்'

இதன் அணியத்திலும் கடையாலிலும் தலா ஒரு 14.5mm ZPU-2 சுடுகலன் பொருத்தப்பட்டுள்ளது. இவையிரண்டும் தளத்தில் இருந்து சற்று உயர்ந்தே காணப்படுகின்றன. ஆனால் அவையின் உயரத்தில் இரண்டிற்கும் இடையில் வேறுபாடு உண்டு. அஃது யாதெனில் அணியத்தில் உள்ள ZPU-2ஐக் காட்டிலும் கடையாலில் உள்ள ZPU-2 ஆனது கொஞ்சம் தாழ்ந்தே உள்ளது. ஏனெனில் அணியமானது குடையப்படாமல் இருப்பதாலும் அணியத்தின் பக்கவாடு இரு பக்கங்களிலும் உள்ள பக்கவாட்தில் இருந்து சற்று உயரமாக இருப்பதாலும் அணிய ZPU-2 ஆனது கடையால் ZPU-2 ஐக் காட்டிலும் உயரமாக உள்ளது. இவ்வுயரமானது முதன்மைத் தண்டின் உயரத்தால் உண்டாக்கப்பட்டது ஆகும்.

வலது பக்கத்தில் Dshk-உம் மீகாமன் அறைக்கு முன்புறத்தில் இடது பக்கத்தில் ஒரு PK-உம் பொருத்தப்பட்டுள்ளது. ஆக மொத்தம் நான்கு சுடுகலங்கள் உள (2 முதன்மை, 2 பக்கவாடு). கதுவீயும்-RADAR (வட்டு வடிவம்) உள்ளது. தொலைத்தொடர்புக் கருவியாக VHF & நடைபேசி(walky talky) உள்ளது.

photo15.jpg

' VHF கதைப்பவர் கடற்புலிகளின் கட்டளையாளர் இள பேரரையன்(லெப்.கேணல்.) இரும்பொறை மாஸ்டராவார்'

unidentified craft 2.png

'மேற்குறிப்பிடப்பட்ட படகில் இருந்து சிறீலங்காக் கடற்படையின் டோறா வேகத் தாக்குதல் கலம் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சி'

unidentified craft.png

'மேற்குறிப்பிடப்பட்ட படகில் இருந்து சிறீலங்காக் கடற்படையின் டோறா வேகத் தாக்குதல் கலம் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சி'

 

main-qimg-b0f39b6e3ac21ef49187b56c163c1528.png

‘இக்கலத்தின் பக்கவோர உயரத்தினை இப்படத்தைக் கொண்டு அளவிடவும்’

 


உசாத்துணை:

  • படங்களை வைத்தே எழுதினேன்

படிமப்புரவு

http://aruchuna.com

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.