Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சீனாவிடமிருந்து 200 மில்லியனுக்கு பதிலாக, 500 மில்லியனைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிடமிருந்து 200 மில்லியனுக்கு பதிலாக 500 மில்லியனைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சி

சீனாவிடமிருந்து 200 மில்லியனுக்கு பதிலாக, 500 மில்லியனைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சி

சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்படவுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை 500 மில்லியன் டொலராக அதிகரிக்க நடவடிக்கை இடம்பெற்று வருவதாக நிதி அமைச்சின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை எதிர்கொள்ளும் கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை கையாளும் முகமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடர்பான ஒப்பந்தம் குறித்து தற்போது நிதி அமைச்சிற்குள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.

இலங்கை சார்பாக கடன் வழங்குநராக செயற்படும் நிதி அமைச்சிற்கும் சீன அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் இந்த இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து 700 மில்லியன் டொலர் கடனைப் பெற இலங்கை ஒப்புக் கொண்ட நிலையில் மார்ச் மாதத்தில் முதல் 500 மில்லியன் டொலர் பெற்றுக்கொள்ளப்பட்டது.

மீதமுள்ள 200 மில்லியன் டொலர் ஜூலை மாதத்தில் பெறப்படவுள்ள நிலையில் சீன தூதுவர் மற்றும் சீன அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக நிதி அமைச்சின் செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் அந்நிய செலாவணி நெருக்கடியைத் தீர்க்க சீன வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் டொலர் கடனைப் பெற இலங்கை மத்திய வங்கி ஒப்புக் கொண்டது.

இதேவேளை கடந்த மே மாதம் இலங்கைக்கு பங்களாதேஷில் இருந்து 200 மில்லியன் டொலர் கடனும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1229691

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இதேவேளை கடந்த மே மாதம் இலங்கைக்கு பங்களாதேஷில் இருந்து 200 மில்லியன் டொலர் கடனும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களதேஷ் சீனாவின் பினாமியாக இருக்குமோ?
 பங்களதேஷ் காசு கொடுக்க கூடிய நிலையிலயா இருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூரோப்பிய நாடுகள்  gst யை எடுக்க போகினம்  என்று பயம் காட்டிக்கொண்டு உள்ளார்கள் இவர்கள் என்னடா என்றால் கடன் வாங்குவதில் புத்திசாலித்தனத்தை பாவிக்கினமாம் அந்த காசுக்கு எந்த இடத்தை தாரை வார்க்கிறார்களோ தெரியலை .

இனி வாங்கும் கடனுக்கு தலதா மாளிகையை அடமானமா வைத்து கடன் வாங்க சொல்லி போட்  வைக்கணும் .அதன் பின் தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு கஸ்ரம் இருக்கும் வரைக்கும் எங்க கிட்ட காசு இருக்கும்..

vlcsnap-error232_Fotor_Collage.jpg

           ======( சேட்டு)====

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தாநாள், moody ரேட்டிங் நிறுவனம் மேலே பாய்ந்தார்கள்.... இன்று கடனுக்கு நிக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் வாங்கியே காலத்தை கொண்டு போவினம் போல கிடக்கு😎

பொங்கினவனுக்கு ஒரு பொங்கல் பொங்காதவனுக்கு பல பொங்கலாம் 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் வாங்குகிறது என்று முடிவு எடுத்தாயிற்று எப்படியிருந்தாலும்  சீனாவிடம் போகப்போகிற நாடுதானே வாங்குமட்டும் யோசிக்காமல் வாங்குங்கோ. கடன் தாறவன்தான் யோசிக்கவேண்டும்.

இவர் ஏதோ பணம் கொட்டும் மந்திரவாதிபோல எதிர்வு சொன்னார்கள், அவரும் கையைத்தானே நீட்டுறார்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.