Jump to content

மணிமேகலையின் காதலும் துறவும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மணிமேகலையின் காதலும் துறவும்

 
 

மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். இப்பெயரைக் கொண்டு இவரது ஊர் சீத்தலை என்றும் இவர் மதுரையில் கூல வாணிகம் செய்து வந்தவர் என்றும் அறிகிறோம். பௌத்த மதப் பரப்பலுக்காக ஒரு தனிக் காவியமே படைத்த இச்சாத்தனார் ஒரு பௌத்த நெறியாளர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழின் முதல் காப்பியம் என்ற பெருமைக்குரிய சிலப்பதிகாரமும் சாத்தனாரின் மணிமேகலையும் கதைத் தொடர்ச்சியால் இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப் படுகின்றன. சிலப்பதிகாரத்தின் முப்பெரும் கதை மாந்தர்களாம் கண்ணகி, கோவலன், மாதவி மூவரில் கோவலன் மாதவி இருவருக்கும் பிறந்த ஒரே மகளே மணிமேகலை. இவளே மணிமேகலைக் காப்பியத்தின் தலைவி.

காப்பியத் தலைவி மணிமேகலையை மாதவியின் கூற்றில் வைத்து காப்பியம் அறிமுகம் செய்யும் பகுதி பின்வருமாறு:

காவலன் பேர்ஊர் கனைஎரி ஊட்டிய

மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை

அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்

திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்        (2: 54-57)

இவ்வடிகளில் மாதவி, மணிமேகலையைக் கண்ணகி மகள் என்று சிறப்பிப்பதோடு இவள் தவத்திற்குரியவள் என்றும் கணிகையாகத் தீத்தொழில் புரிந்து வாழமாட்டாள் என்றும் தெளிவு படுத்துகின்றாள். ஆக மணிமேகலை, தாய் மாதவியால் ஆடலும் பாடலும் கூடிய பரத்தமை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்பட்டு தவ வாழ்க்கைக்கு உரியவளாகிறாள். இது மாதவியின் விருப்பம். மணிமேகலை தவ வாழ்க்கையை விரும்பி ஏற்றாளா? இல்லையா என்பது காப்பியத்தில் பேசப்படவில்லை.

      காப்பியத்தில் மணிமேகலையின் அறிமுகம் அவளின் கண்ணீரோடுதான் தொடங்குகிறது. கண்ணீருக்குக் காரணம் மாதவி, தோழி வயந்தமாலையிடம் சொல்லிய கோவலன் கண்ணகியர் அடைந்த பெருஞ்சோகம் குறித்த விவரிப்பு. தாயின் துயரத்தோடு ஒன்றி கண்ணீர் வடிக்கிறாள் மணிமேகலை. ஒரு காப்பியத் தலைவியைக் கண்ணீரோடு அறிமுகம் செய்யும் சாத்தனாரின் உட்குறிப்பு கதையின் ஊடாக மணிமேகலையைத் தொடர்வோருக்கே புலப்படக்கூடியது.

      காவியத்தின் தொடக்கத்தில் உவவனத்திற்கு மணிமேகலை வந்துள்ளாள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவளைச் சந்திக்கத் தேரேறி வருகிறான் உதயகுமாரன். அவன் தேரொலி கேட்டு வருவது உதயகுமாரனே என்றும் அவன் தன்மேல் காதல் உடையவன் என்றும் மணிமேகலை சுதமதியிடம் கூறுகிறாள். உதயகுமாரனிடமிருந்து தப்பிக்க உவவனத்துப் பளிக்கறையில் புகுந்துகொள்கிறாள் மணிமேகலை. தேடிவந்த மணிமேகலையைக் காணாமல் சுதமதியிடம் அவள் எத்திறத்தாள்? என்று வினவும் உதயகுமாரனுக்கு சுதமதி கூறும் விடை முக்கியத்துவம் உடையது.

எத்திறத் தாள்நின் இளங்கொடி? உரைஎன

குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின்

முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்

பருகாள் ஆயின்இப் பைந்தொடி நங்கை

ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி

காமற் கடந்த வாய்மையள் என்றே

தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப    (5: 12-18)

‘முருகவேளை ஒத்த உன் இளமை அழகினை அவள் தன் கண்ணாலும் பார்க்கமாட்டாள். முன்வினைப் பயனால் தவநெறி புகுந்தவள். தீயோரைச் சுடுகின்ற சாபமாகிய அம்பினை உடையவள். காமனை வென்ற வாய்மை யுடையவள்’ என்றெல்லாம் சுதமதி மணிமேகலை குறித்து உதயகுமாரனுக்கு சொன்ன விவரிப்பு முற்ற முழுதாகக் காப்பிய ஆசிரியனின் கூற்றே ஆகும். ஏனெனில் இக்கூற்றில் பொதிந்துள்ள மணிமேகலை பற்றிய மதிப்பீடுகள் எவையும் அவள் யதார்த்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு அல்ல. படைப்பாசிரியர் சாத்தனார் மணிமேகலைக்கு விரும்பிச் சூட்டிய கிரீடமாகவே ஊழ்தரு தவத்தள் சாபசரத்தி காமற்கடந்த வாய்மையள் என்ற இம்மதிப்பீடுகள் அமைந்துள்ளன. குறிப்பாக, காமற் கடந்த வாய்மையள் என்று சாத்தனார் சுதமதி வாயிலாக மணிமேகலைக்கு தரும் அடைமொழி காப்பியத்தின் போக்கில் எவ்வாறு ஒத்தும் உறழ்ந்தும் நிற்கின்றது என்பதனை இனிக் காண்போம்.

      உவவனத்தில் பளிக்கறையில் மறைந்துகொண்ட மணிமேகலைக் கண்டு தன் காதலைத் தெரிவிக்க முயன்று முடியாமல் திரும்பும் உதயகுமாரன் சுதமதியிடம் மணிமேகலையை அவள் பாட்டி சித்திராபதியைக் கொண்டு அடைவேன் (வஞ்சி நுண்இடை மணிமே கலைதனைச் சித்திரா பதியால் சேர்தலும் உண்டு) என்று சொல்லிவிட்டுப் புறப்படுகிறான். உதயகுமாரன் புறப்பட்டுவிட்டான் என்று தெரிந்து பளிக்கறையை விட்டு வெளியே வந்த மணிமேகலை உதயகுமாரனைக் குறித்தும் அவன் சொன்னவை குறித்தும் தன்நிலை குறித்தும் மிகவும் வெளிப்படையாகச் சொல்லும் பின்வரும் பகுதி கூர்ந்து கவனிக்கத்தக்கது.

பளிக்கறை திறந்து பனிமதி முகத்துக்

களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகிக்

கற்புத் தான்இலள் நல்தவ உணர்வுஇலள்

வருணக் காப்புஇலள் பொருள்விலை யாட்டிஎன்று

இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது

புதுவோன் பின்றைப் போனதுஎன் நெஞ்சம்

இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை

இதுவே ஆயின் கெடுகதன் திறம்!என       (5: 84-90)

‘இவள் கற்பு இல்லாதவள், நல்ல தவ உணர்வும் இல்லாதவள், குலமரபின் படியும் தனக்கொரு காவல் அற்றவள், பொருளுக்காகத் தன்உடலை விற்பவள்’ என்றெல்லாம் என்னைக் குறித்து மிகஇழிவாகப் பேசி என்னை அடைய விரும்புகின்றான் என்பது தெரிந்தும் அதனைப் பொருட் படுத்தாமல் அந்தப் புதிய ஆடவனின் பின்னே என் நெஞ்சமும் செல்கின்றதே. இதுதான் காமத்தின் இயல்பா? அப்படியாயின் அக்காமத்தின் வலிமை கெட்டொழியட்டும்.

      மணிமேகலை தோழி சுதமதியிடம் மனந்திறந்து கூறுவதாக வரும் இப்பகுதி உண்மையில் மணிமேகலையின் நிலை என்ன? என்பதனை நமக்குத் தௌ;ளத் தெளிவாகக் காட்டுகிறது. மணிமேகலை இதுவரை காமத்தின் வயப்படாதவள், இப்பொழுதுதான் முதன்முறையாக ஒரு ஆடவனைக் கண்டு அவன்மேல் காதல் கொள்கிறாள். உதயகுமாரன் தன்னை விரும்புகின்றான் என்பதனைத் தன்பாட்டி சித்திராபதியிடமிருந்து தெரிந்துகொண்ட வயந்தமாலை அதனை ஒருநாள் தன்தாய் மாதவியிடம் சொல்லக் கேட்டிருக்கிறாள் அவள். அப்பொழுதெல்லாம் அவளுக்கு உதயகுமாரனைக் குறித்து யாதொரு சிந்தனையும் தோன்றியதில்லை. இப்பொழுது பளிக்கறைக்கு உள்ளிருந்து அவனைக் கண்டபொழுதுதான் அவள் காதல் வயப்பட்டாள். அதிலும் தன்னைக் குறித்து அவன் மிகக்கேவலமாகப் பேசியதைக் கேட்டபிறகும் அவன் பின்னாலேயே தன் மனம் செல்லுகிறது. இதுதான் காமமா? என்று முதன்முறையாக அந்த அனுபவம் குறித்துக் கேள்வி எழுப்புகிறாள் மணிமேகலை. அப்படியானால் இதற்கு முன்பே சுதமதி வாயிலாக சாத்தனார் சொன்ன, காமற் கடந்த வாய்மையள் என்ற மதிப்பீட்டிற்கு என்ன பொருள். காமத்தை அடைந்த பிறகல்லவா? அதனைக் கடக்க வேண்டும். இங்கே மணிமேகலை அடைந்த காமத்தைக் கடக்கத் துணிகிறாள்.

இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை

இதுவே ஆயின் கெடுகதன் திறம்!என 

இதுதான் காமத்தின் இயல்பா? அப்படியானால் அந்தக் காமம் என்னை விட்டு விலகி அழிந்து போகட்டும் என்று காமத்தைக் கடக்கக் கருதுகிறாள். ஆனால் மணிமேகலை உண்மையில் காமத்தைக் கடந்து வென்றாளா? என்பதனைக் காப்பியத்தின் தொடர் நிகழ்ச்சிகளில் நாம் காணவேண்டும்.

      காமத்தை எதிர்கொள்ளாமலே அதனைக் கடந்திருக்க வேண்டிய மணிமேகலை ஏன் உதயகுமாரனிடத்தில் காதல் கொண்டாள். காப்பிய ஆசிரியனுக்கு விடைசொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ‘மந்திரம் கொடுத்த காதை’ இதற்குப் பதில் சொல்கிறது. சென்ற பிறவியில் அசோதர நாட்டு மன்னன் இரவிவன்மன் அமுதபதி இணையருக்குப் பிறந்த பெண் இலக்குமி. அவளே இந்தப் பிறவியில் மணிமேகலையாகப் பிறந்துள்ளாள். இலக்குமியின் கணவனாக இருந்தவன் இராகுலன். அவன் மன்னன் அத்திபதி நீலபதி இணையருக்குப் பிறந்தவன். அந்தப் பிறவியில் இராகுலனைத் திட்டிவிடம் என்னும் பாம்பு கொன்றுவிட இலக்குமி அவனோடு தீக்குளித்து இறந்து போனாள். இந்த இலக்குமி இராகுலன் இணையரே இப்பிறவியில் மணிமேகலை உதயகுமாரனாகப் பிறந்துள்ளார்கள் என்ற செய்தியை பீடிகை கண்டு பழம் பிறந்துணர்ந்தும் மணிமேகலா தெய்வம் உரைத்தும் தெரிந்துகொண்டாள் மணிமேகலை. மேலும்,

உவவன மருங்கில் உன்பால் தோன்றிய

உதய குமரன் அவன்உன் இராகுலன்

ஆங்குஅவன் அன்றியும் அவன்பால் உள்ளம்

நீங்காத் தன்மை நினக்கும்உண்டு ஆகலின்

கந்த சாலியின் கழிபெரு வித்துஓர்

வெந்துஉகு வெங்களர் வீழ்வது போன்ம்என

அறத்தின் வித்துஆங்கு ஆகிய உன்னைஓர்

திறப்படற்கு ஏதுவா சேயிழை! செய்தேன்    (10: 42-49)

உவவனத்தில் காமத்தோடு உன்னைநாடி வந்த உதயகுமாரனே உன்னுடைய முற்பிறப்புக் கணவனாகிய இராகுலன். அதனால்தான் அவன் உன்னை விரும்பியதோடு மட்டுமல்லாமல் நீயம் அவனிடத்தில் நீங்காத விருப்பம் கொண்டாய். உன் உள்ளத்தில் தோன்றிய அக்காமம், கந்தசாலி என்னும் நெல்லின் மிகச்சிறந்த வித்து வெந்து உருகுகின்ற உப்பு நிலத்தில் வீழ்வதைப் போன்றது என்று கருதி அறத்தின் வித்தாகிய உன்னைச் சரியான நிலைக்கு ஆற்றுப்படுத்தவே இத்தீவிற்குக் கொண்டுவந்தேன் என்று மணிமேகலா தெய்வம் மணிமேகலையிடம் உரைத்தது.

      மணிமேகலா தெய்வத்தின் இக்கூற்று சில விளக்கங்களை சாத்தனார் சார்பாக நின்று நமக்குத் தெரிவிக்கின்றது. ஒன்று, மணிமேகலை உதயகுமாரனைக் கண்டு காதல் வயப்பட்டது முன்வினைத் தொடர்ச்சியே, காமவயப்படுதல் என்ற குறையைக் காப்பியத் தலைவிமேல் சுமத்தமுடியாது. இரண்டு, தெய்வம் மணிமேகலையை இத்தீவிற்குக் கொண்டு வரவில்லையெனில் அறத்தின் வித்தாகிய மணிமேகலை காமம் என்ற வெங்களர் நிலத்தில் வீழ்ந்துவிட வாய்ப்பிருக்கிறது. மூன்று, பிறவிகள் தோறும் தொடரும் கணவன் மனைவி உறவுகள் வினைப்பயனால் விளைவது, அதனை வெல்லுதல் அத்துனை எளிமையானதன்று.

      தெய்வத்தின் இச்சீரிய முயற்சியால் பழம் பிறப்புணர்ந்து உதயகுமாரன் மேல் கொண்ட காமத்தை வெல்லவேண்டிய மணிமேகலை அதற்கு நேர்மாறாக முற்பிறப்புக் கணவன் என்று உதயகுமாரன் மேல் கூடுதல் ஈர்ப்புடையவளாக மாற்றம் பெறுகிறாள். ஒரு பக்கம் கொண்ட துறவிக் கோலத்தால் இயல்பாக எழும் காதலை அடக்கிய தவிப்பும் மறுபுறம் முற்பிறவிக் கணவன் என்பதனால் உதயகுமாரன் மீதான ஈர்ப்புமாக மணிமேகலையின் மனம் ஊசலாடுகிறது.

      ஆபுத்திரனின் அமுதசுரபி பெற்று பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என உண்டி கொடுத்து உயிர்க்குலம் காக்கும் கடமையில் ஈடுபட்டுவரும் மணிமேகலைக்கு உதயகுமாரனின் சந்திப்பு மீண்டும் சிக்கலை உருவாக்குகிறது.

      சித்திராபதியால் தூண்டப்பட்ட உதயகுமாரன் குதிரைகள் பூட்டப்பட்ட நெடுந்தேரில் ஏறி மணிமேகலை தங்கியிருந்த உலக அறவியை அடைந்தான். அங்கே மணிமேகலை, கையில் அமுதசுரபி ஏந்தி பெரும்பசி உடைய வறியவர் களுக்கெல்லாம் மிகுதியான உணவினை வாரி வழங்கிக் கொண்டிருந்தாள். மணிமேகலையைக் கண்டவுடன் பெருகிய காமத்தோடு அவளை நெருங்கிப் பேசத் தொடங்கினான் உதயகுமாரன். முன்பு உவவனத்தில் இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை இதுவே ஆயின் கெடுகதன் திறம்!என, காமத்தைக் கடக்க உறுதி பூண்ட மணிமேகலை, இப்பொழுது, இவன் எனது முற்பிறவிக் கணவன் இராகுலனே என்று நினைக்கிறாள். அவன் பாதங்களில் விழுந்து வணங்குவதும் தகுதியானதே என்று கருதி அவனடி தொழுது வணங்கி நிற்கிறாள்.

என்அமர் காதலன் இராகுலன் ஈங்குஇவன்

தன்அடி தொழுதலும் தகவு!என வணங்கி

அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்

இறைவளை முன்கை ஈங்குஇவன் பற்றினும்

தொன்று காதலன் சொல்எதிர் மறுத்தல்

நன்றி அன்று!என நடுங்கினள் மயங்கி             (18: 128-133)

உதயகுமாரனை வணங்கியதோடு அல்லாமல் மணிமேகலையின் சிந்தனையோட்டம் பல தடைகளைத் தாண்டி பெருக்கெடுக்கிறது. எனது நெஞ்சம் கட்டுப்பாட்டினை இழந்து உதயகுமாரனிடத்திலே சென்றாலும் வளைகள் குலுங்கும் எனது கரங்களை அவன் பற்றினாலும் முற்பிறப்புக் கணவனாகிய இவன் பேச்சை மறுத்தல் கூடாது என்று மனதில் உறுதி கொள்கிறாள் மணிமேகலை.

      காப்பியத்தின் இப்பகுதி மணிமேகலையின் மனஓட்டப் பதிவு என்பதனை நாம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். வெளிப்படையாகப் பேசுகிற பேச்சைவிட மனத்துக்குள்ளே ஒருவர் பேசுகிற பேச்சே உண்மைக்கு நெருக்கமாயிருக்கும். மன ஊசலாட்டத்தின் வெளிப்பாடுகள் யாவும் நம் விருப்பின் பல முகங்கள். இங்கே மணிமேகலையின் மனஓட்டத்தில் உதயகுமாரன் நம் கரங்களைப் பற்றினாலும் நாம் ஒன்றும் மறுத்துப் பேசக்கூடாது என்று நினைப்பது அவன் அத்துமீறி விடுவானோ என்ற அச்சத்தில் தோன்றுவது. ஆனால் இவள் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறாள் நம் நெஞ்சம் கட்டுப்பாடிழந்து அவனிடத்திலே சென்றுவிட்டால் அதையும் நாம் ஏற்றுக்கொள்வது தான் நல்லது என்று. ஆக, மணிமேகலையின் மனம் உதயகுமாரனை அடையத் முடிக்கிறது, அதற்குக் காரணம் அவன் முற்பிறப்புக் கணவன். மணிமேகலா தெய்வம் நினைத்தது வேறு, நடந்தது வேறு. தெய்வம் நினைத்தது என்னவென்றால் மணிமேகலை பழம்பிறப்பு உணர்ந்தால் உதயகுமாரன் மீது ஏற்பட்ட காதலும் அதனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியும் நீங்கிவிடும் அதனால் அவள் தெளிவு பெற்று அறத்தின் வித்தாக மாறுவாள் என்பதுதான். ஆனால் நிலைமை தலைகீழாகிப் போனது பழம்பிறப்பு உணர்ந்ததால் மணிமேகலை உதயகுமாரன் காதல் இன்னும் நெருக்கமாகிப் போனது. கதையின் போக்கிலேயே இதற்கு ஒரு தீர்வும் கிடைக்கின்றது.

      மயங்கிய மணிமேகலை தெளிவு பெறுகிறாள். அவளின் காதல் மனம் அடங்கி, துறவு மனம் விழிக்கிறது. மீண்டும் உதயகுமாரனைச் சந்தித்தால் துறவு வெல்லுமா? காதல் வெல்லுமா? என்ற ஐயத்தில் அதற்கான வாய்ப்பைத் தவிர்க்க விரும்பி காயசண்டிகை என்ற விஞ்சையப் பெண்ணாக மாற்றுரு கொள்கிறாள் மணிமேகலை. காயசண்டிகை உருவில் இருப்பவள் மணிமேகலையே என்று தெரிந்துகொண்ட உதயகுமாரன் அவளை நெருங்கி உரையாட, உறவாட, உண்மை அறியாத காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் உதயகுமாரனை வாளால் வெட்டிக் கொன்றுவிடுகிறான். கொலையுண்டு வீழ்ந்து கிடக்கும் உதயகுமாரனின் உடல்கண்டு மீண்டும் தடுமாறுகிறாள் மணிமேகலை.

      உதயகுமாரனின் வெட்டுண்ட உடலைக் கண்டு மணிமேகலை புலம்பும் காட்சியில் மணிமேகலையின் தவக்கோலத்தை நாம் காண முடியவில்லை. கணவன் அல்லது காதலனின் மரணத்திற்கான புலம்பலாகவே அக்காட்சியைப் படைக்கின்றார். சாத்தனார்.

காதலனே! திட்டிவிடம் என்னும் தீண்ட உன்உயிர் நீங்கிய அந்தநாளில் பெருநெருப்புடைய ஈமத்தீயில் விழுந்து நான் உயிரைவிட்டேன். உவவனத்தில் உன்னிடம் என் உள்ளம் சென்றதைத் தவிர்க்க முடியவில்லை. என்று தொடங்கும் மணிமேகலையின் புலம்பலில்

திட்டி விடம்உண நின்உயிர் போம்நாள்

கட்டுஅழல் ஈமத்து என்உயிர் சுட்டேன்

உவவன மருங்கில் நின்பால் உள்ளம்

தவிர்விலேன்     .. .. .. .. .. ..                       (21: 11-14)

வைவாள் விஞ்சையன் மயக்குஉறு வெகுளியின்

வெவ்வினை உருப்ப விளிந்தனை யோ!என

விழுமக் கிளவியின் வெய்துஉயிர்த்துப் புலம்பி

அழுதனள் ஏங்கி அயாஉயிர்த்து எழுதலும்

செல்லல் செல்லல்! சேயரி நெடுங்கண்!

அல்லிஅம் தாரோன் தன்பால் செல்லல்!

நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம்

மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம்

பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால்            (21: 23-31)

கூரிய வாளினையுடைய விஞ்சையன் காஞ்சனன் என்னைத் தன்மனைவி காயசண்டிகை எனத் தவறாக உணர்ந்து சீற்றம் கொண்டு உன்னைக் கொன்றுவிட்டானே என்று அழுது புலம்பி ஏக்கப்பெருமூச்சுடன் உதயகுமாரனை நெருங்குகின்றாள். தவக்கோலம் பூண்ட மணிமேகலையின் இப்புலம்பலில் மிக்குத் தோன்றுவது காமத்தைக் கடந்கவியலாத அவளின் இயல்பான சோகமே. நிலைமை கட்டுமீறிப் போவதை உணர்ந்த கந்திற்பாவை செல்லாதே! செல்லாதே மணிமேகலையே உதயகுமாரனை நெருங்கிச் செல்லாதே என்று எச்சரிக்கைக் குரல் எழுப்புகிறது. கந்திற்பாவையின் எச்சரிக்கை எழாமல்போனால் மணிமேகலையின் காதலும் துயரமும் துறவு என்ற கட்டினையும் மீறிச் செயல்பட்டிருக்கும் என நாம் ஊகிக்க முடியும்.

      கந்திற்பாவையே இச்சிக்கலான சூழலை முடிவுக்குக் கொண்டுவருகின்றது. சென்ற பிறப்பில் இவன் உனக்குக் கணவனாகத் தோன்றியதும் அவனுக்கு நீ மனைவியாகத் தோன்றியதும் அந்தப் பிறப்பினில் மட்டுமல்ல அதற்கு முன்னும் முன்னும் பல பிறப்புகளில் தொடர்ந்து வந்துள்ளது பிறவியில் அழுந்துகின்ற தடுமாற்றத்தினைப் போக்க முயலுகின்ற தவக்கோலப் பெண்ணாகிய நீ இவன் மரணத்திற்காகத் துன்பம் கொள்ளாதே என்று மணிமேகலையின் தவக்கோலத்தை நினைவுபடுத்தி காமத்தைக் கடக்க வேண்டிய கடமையை அறிவுறுத்துகின்றது.

      காப்பியத்தின் தொடக்கத்தில் சுதமதி கூறிய காமற் கடந்த வாய்மையள் என்ற தகுதிப் பாட்டினை ஒத்தும் உறழ்ந்துமே மணிமேகலையின் வாழ்க்கைப் பயணம் நடைபோடுகின்றது. மாதவி தவக்கோலத்தை புனைந்துவிட்டாள். தோழி சுதமதி அக்கோலத்திற்கு ஒரு பெரிய அங்கீகாரத்தை வாய்மொழியாக வழங்கிவிட்டாள். மணிமேகலா தெய்வம்தான் அவளின் தவக்கோலத்திற்கு ஓர் அர்த்தத்தை ஏற்படுத்துகின்றான். மணிமேகலை என்ற இயல்பான பெண்ணுக்கும் மணிமேகலை என்ற தவமகளுக்குமான மோதலே காப்பியத்தை நடத்திச் செல்கின்றது. உதயகுமாரனின் மரணம் இப்போராட்டத்தை ஓர் உச்சக் கட்டத்திற்குக் கொண்டு சென்று சிக்கலை ஒருவாறு முடித்தும் வைக்கிறது. காதலனாம் உதயகுமாரனின் மரணத்திற்குப் பின்னும்கூட அவன்தாய் பட்டத்தரசியை காதலன் பயந்தோய்! என்று விளித்து அறம் சொல்லத் தொடங்குகிறாள் மணிமேகலை.

காப்பியத் தலைவியை அறிமுகப்படுத்தும் போதே கண்ணீரோடு அறிமுகப் படுத்தினார் சாத்தனார் என்று முன்னர் குறிப்பிட்டேன். மணிமேகலையின் கண்ணீருக்குக் காரணம் தவக்கோலம். பிறர் ஏற்றிவைத்த சுமையோடு அதனைச் சுமக்கவும் முடியாமல் இறக்கி வைக்கவும் தோன்றாமல் அவள் படும் வேதனையின் முற்குறியே மணிமேகலையின் கண்ணீர். ஆசிரியர் சாத்தனார் மணிமேகலையின் இந்த உள்முரணை முழுதாக உணர்ந்தே காப்பியம் படைக்கின்றார். அதனால்தான் மணிமேகலையின் உள்மன ஓட்டங்களையும் தடுமாற்றங் களையும் ஆசிரியனின் அனுமதியோடு நாம் கேட்க முடிகிறது. இதுவே படைப்புக்கும் படைப்பாளிக்குமான வெற்றி.https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37450-2019-06-14-08-43-00

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.