Jump to content

சோறு எதிர் (vs) சாதம்: ஏன் தமிழ்நாட்டில் சோறு என்று சொல்வதில்லை


Recommended Posts

சோறு - சாதம்

இந்த சொற்களுக்கு பின்னால் 

மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. 

நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம்?

கல்யாண விருந்தில் சத்தமாக "சோறு கொண்டு வாங்க" என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை. 

காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை ஒரு தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள். 

நகைச்சுவைத் துணுக்குகளில், திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் பிச்சைக்காரர் கதாபாத்திரம் "அம்மா, தாயே சோறு போடு தாயீ" என்று கூறுவதாக வரும். 

எந்த பிச்சைக்காரனாவது "அம்மா தாயே சாதம் போடுங்க" என்று வருகிறதா?

அது ஏன்? 

திட்டமிட்டுச் சோறு கீழான ஒன்றாக காட்டப்படுகிறது; சாதம் உயர்வான ஒன்றாக மாற்றப்படுகிறது. 

சோறு என்பது சங்க இலக்கிய காலத்தில் இருந்து நம்முடன் வருகிறது. 

"பெருஞ்சோற்று உதியன்" என்ற அடைமொழியுடன் புறநானூற்றில் வேந்தர்கள் வந்து போகிறார்கள். "வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்று பாரதி பாடியுள்ளான். 

இழிவு செய்யும் இடங்களில் மறக்காமல் சோறு எனக் குறிப்பிடப்படுகிறது. "சோத்துக்கு வழியில்லாத நாயி" என்று திரைப்படங்களில் பேசப்படுவதை பார்க்கிறோம். "சாதத்துக்கு வழியில்லாத நாயி" என்று எழுதப்படுகிறதா? காரணம்?

அதன் பின்னால் உள்ள அரசியல்.

"கல்யாண சமையல் சாதம்" என்று புகழ்ந்து பாடல் வரும்.

"எச்ச சோறு" என்று இகழ்ந்து வசனம் வரும். இதில் இருந்தே இதன் பின்னுள்ள அரசியலை புரிந்து கொள்ளலாம். 

உச்சக்கட்டமாக வீடுகளில் பிள்ளைகளை திட்ட "தண்டச் சோறு" என்ற இடம் வரை வந்து நிற்கிறது. எங்காவது " தண்ட சாதம்" என்று சொல்வதுண்டா? 

சாதம் என்ற சொல், பிரசாதம் என்ற சொல்லின் விகுதி. பிரசாதம் என்பது உயர்வான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கோயில்களில் பூசனைகளுக்குப் பிறகு வழங்கப்படும் தேங்காய் - பழம் போன்றவற்றுக்கு பிரசாதம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய ஒன்றாக பொது இடங்களில் பிரசாதம் பயன்படுத்தப்படுகிறது. அந்த சொல்லின் சரிபாதி சாதம் என்பது ஏதோ ஒரு நன்னாளில் பெயர்சூட்டுவிழா கண்டுள்ளது. 

உணவு விடுதிகளில் புளியஞ்சோறு, எலுமிச்சைச் சோறு, தக்காளிச் சோறு என்பது இடமாறி, புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என்று பட்டியல் நீள்கிறது. குழந்தைகளுக்கு பருப்புச் சோறு ஊட்டப்பட்டது போய் பருப்பு சாதம் கொடுப்பது உயர்வாக மாறி நிற்கிறது. 

இதுவெறும் வடமொழிச் சொல் - தமிழ்ச் சொல் வேறுபாட்டை அறிவதற்கான பதிவல்ல. தமிழ்ச் சொற்கள் தாழ்வான ஒன்றாக நம் மனத்திலே பதிய வைத்து நம்மையே அச்சொல்லை சொல்ல முடியாமல் போகும் அளவுக்கு மாற்றுவதற்கு பின்னுள்ள அரசியலை விவரிக்கும் பதிவே. 

தாய்மொழியில் பேசவும் முடியாத ஒருவன், எப்படி தாய்மொழிக்காக சிந்திக்க செய்வான்? 

சாதம் என்பதற்கு பதிலாக சோறு என்பதையே பயன்படுத்துவோம்.

நன்றி: கி.முல்லைவேந்தன் எம்.ஏ

சமூக ஆர்வலர். 

--- Thanappan Kathir அவர்களின் பதிவிலிருந்து. 

நன்றி, தோழர்!

https://m.facebook.com/story.php?story_fbid=10220084529371115&id=1461224523

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் சாதம் என்று சொல்வதில்லை.

பெருமாள் முருகன் எழுதிய கெட்ட வார்த்தை பேசுவோம்  என்ற புத்தகத்தில், ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்த சோறு இப்போது நாகரீகமற்ற வார்த்தையாக கருதபட்டு குறைவாகவே உபயோகப்படுத்தபடுகிறது என்று சொல்லியுள்ளார். இது ஆச்சரியமாக இருந்தது.
புலம்பெயர் இளைய தலைமுறையினர் நாகரீகமில்ல்லாத சக தமிழர்களை Sorru என்று திட்டுவதையும் பார்த்திருக்கின்றேன்.

ஆனால் நமக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில்... ஈழத்துக்காக போராட வெளிக்கிட்ட  இயக்கம் ஒன்றையும்,   
மக்கள்  "சோத்துப் பார்சல் இயக்கம்" என்று அழைத்ததை  கேள்விப் பட்டுள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோறு என்று தானே தமிழ் நாட்டில் சொல்கிறார்கள்.

சோத்துக்கு என்னப்பா பண்ணுவாய், சோத்துக்கு, சிங்கி அடிக்க போறயா?, சோறு துன்னயா, சோறு போடு ஆத்தா எல்லாமே தினசரி பேசுவது தானே. சோழ நாடு சோறுடைத்து என்ற சோழர் காலத்து சொல்வடையே உண்டு.

பிரியாணிக்கு முன்னோடியான ஊன் சோறு, பெரும் சோறு குறித்து பண்டைத்தமிழ் இலக்கியங்களில் உள்ளன.

மேலும், கத்தாழை நடுவில் உள்ள களி போன்ற பதார்த்தமும், நுங்கின் நடுவில் 3 கண்களினும் உள்ளதுமே சோறு என்றே அழைக்கப்படுகின்றன.

பனங்கொடையின் நடுவில் உள்ளது, தகன் சோறு.

அதுமட்டும்மல்ல, திணை சோறு, சோளம் சோறு, சாமை சோறு என்றும் உள்ளதே.

ஆனாலும், 'கொஞ்ச ரைஸ் (rice) வையுங்க (வைப்பா) என்ற கோதாரியும் நிறைய உண்டு.

இதில வேடிக்கை, தமிழ் சொல், அரிசி, கிரீசுக்கு arisi ஆக போய், பிரெஞ்சு, ஆங்கிலத்தில் ரைஸ் (rice)ஆகி, தமிழகத்துக்கு மீண்டு வந்துள்ள கொடுமை.

ஆனாலும், பிராமணர்கள் வீடுகளில் சாதம் என்பார்கள். (தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம்). எல்லாம் அய்யர் வீட்டு சைவ சாப்பாடுகள்.

தமிழர்கள் கறி சோறு சாப்பிடுவார்கள். வடை, கறியுடன் விருந்து சோறு உண்பார்கள்... சாதம் அல்ல.

கட்டுரையாளர், போதிய ஆய்வு இன்றி சும்மா எழுதியுள்ளாரோ? 

Link to comment
Share on other sites

29 minutes ago, Nathamuni said:

சோறு என்று தானே தமிழ் நாட்டில் சொல்கிறார்கள்.

 

நாதம், தமிழ் நாட்டுக்கு எப்ப கடைசியாக போனீர்கள்? 

அங்கு 'சோறு' என்ற சொல் வழக்கத்தில் இருந்து ஒழிந்து கொண்டு வருகின்றது. சாப்பாட்டுக் கடையில் 'சோறு' என்று கேட்டால், ஒன்றில் அது என்னவென்று தெரியாமல் எங்களை கோபிப்பார்கள், அல்லது  "நீங்கள் சிலோன் தமிழா" என்று கேட்பார்கள்.

34 minutes ago, Nathamuni said:

 

அதுமட்டும்மல்ல, திணை சோறு, சோளம் சோறு, சாமை சோறு என்றும் உள்ளதே.

 

இவை எல்லாம் முன்னர் அழைக்கப்பட்ட, வழக்கத்தில் இருந்த சொற்கள். ஆனால் இவற்றை மரியாதைக் குறைவான சொற்களாக மாற்றிக் கொண்டு வருகின்றனர் என்பது தான் இக் கட்டுரையாளரின் ஆதங்கம். இக் கட்டுரையாளர் தமிழ் நாட்டிலேயே வாழும், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்கபூர்வமான விடயங்களை எழுதி வரும் ஒரு பதிவாளர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நாதம், தமிழ் நாட்டுக்கு எப்ப கடைசியாக போனீர்கள்? 

அங்கு 'சோறு' என்ற சொல் வழக்கத்தில் இருந்து ஒழிந்து கொண்டு வருகின்றது. சாப்பாட்டுக் கடையில் 'சோறு' என்று கேட்டால், ஒன்றில் அது என்னவென்று தெரியாமல் எங்களை கோபிப்பார்கள், அல்லது  "நீங்கள் சிலோன் தமிழா" என்று கேட்பார்கள்.

இல்லை, நிழலி... ஒருகாலத்தில் இருந்தது... இப்போது மாறி வருகிறது.

நேரம் என்ன என்ற போது, டைம் என்று தமிழில் கேளுப்பா என்று சொன்ன ஒரு காலமும் இருந்தது.

நீங்கள் ஏற்று கொள்ள மறுத்தாலும், நாம் தமிழர் வருகைக்கு பின்னர், தமிழ் உணர்வு அதிகரித்துள்ளது.

சோத்துக்கு என்னப்பா பண்ணுவாய், சோத்துக்கு, சிங்கி அடிக்க போறயா?, சோறு துன்னயா, சோறு போடு ஆத்தா எல்லாமே தமிழ் நாட்டில் தினசரி பேசுவது தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஆரம்பத்தில்... ஈழத்துக்காக போராட வெளிக்கிட்ட  இயக்கம் ஒன்றையும்,   
மக்கள்  "சோத்துப் பார்சல் இயக்கம்" என்று அழைத்ததை  கேள்விப் பட்டுள்ளேன். 

நீங்கள் மட்டுமா? ஒட்டுமொத்த வடக்கு கிழக்குமே கேள்வி பட்டிருக்கு சிறி😜 

 

15 hours ago, நிழலி said:

நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம்?

சாதம் என்ற சொல் பிராமணர்களிடம் இருந்து பரவியதாக இருக்கலாம், அவர்கள் அனைவருமே சோறை சாதம் என்றே அழைப்பார்கள் என்று நினைக்கிறேன்.

கெட்ட வார்த்தைகளுக்கு சாதம் என்று பாவிக்காத படியால் அது உயர்வான சொல்லாக போயிருக்கலாம்.

ஏனையவர்கள் பிறருடன் கோவம் வந்தால்..

சோறு திங்கிறியா இல்ல....

சோத்தாங்கை...அப்புறம் ‘மத்த கை’

சோத்துக்கும் மத்ததுக்கும் வித்தியாசம் தெரியாத...

சோறு கண்ட இடம் சொக்கமென்று கிடக்கும் மானங்கெட்ட பயல்

இப்படி அசிங்கமாக திட்டும்போது சோறு என்று பாவிப்பதால் சாதம் என்று இந்தியாவில் பொதுவெளியில் அழைப்பது நாகரிகமான சொல்லாக போயிருக்கலாம்.

எனக்கு நினைவுக்கு தெரிந்தவரை இலங்கையில் வாழ்ந்தபோது எவரும் சோறை சாதம் என்று அழைத்து கேள்வி பட்டதேயில்லை. ஒரு சில இடங்களில் புறநடைகள் இருந்திருக்கலாம்.

இந்தியாவில் சோறு என்றால் இலங்கை தமிழரா என்று ஒருமுறை உற்று நோக்குவதுபோல், வடகிழக்கில் சாதம் என்றால் இந்திய தமிழரா என்று உடனடியாக பார்ப்பார்கள்.

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு எப்பவும் சோறுதான் .......எனக்கு மிகப்பிடித்த உணவில் முதன்மையானது பழஞ்சோறுதான்.......!   👌 

Link to comment
Share on other sites

49 minutes ago, suvy said:

நமக்கு எப்பவும் சோறுதான் .......எனக்கு மிகப்பிடித்த உணவில் முதன்மையானது பழஞ்சோறுதான்.......!   👌 

அதன் சுவையை வெல்ல எந்த உணவாலும் முடியாது. காலையில் பழஞ்சோறு சாப்பிட்டால் அந்த நாளே நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

அதன் சுவையை வெல்ல எந்த உணவாலும் முடியாது. காலையில் பழஞ்சோறு சாப்பிட்டால் அந்த நாளே நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.

 

1 hour ago, suvy said:

நமக்கு எப்பவும் சோறுதான் .......எனக்கு மிகப்பிடித்த உணவில் முதன்மையானது பழஞ்சோறுதான்.......!   👌 

பழம் சோறு அரைத்து ஒரு குடி பானமாக போத்தலில் விக்கிறார்கள். மத்தியகிழக்கிலும், சிங்கப்பூரிலும்.

WOONGJIN Morning Rice Drink 500ml - H Mart

இது லண்டனில் விக்கும் கொரிய, பழைய கஞ்சி

https://hmart.co.uk/shop/en/fruit-juice-soda-tea-coffee/1670-woongjin-morning-rice-drink-500ml-8801382124528.html

அமெரிக்காவில் ஒரு பயோ - டெக் கம்பெனி 250ml ஐ $29.99 விக்கிறார்கள்.

தமிழகத்தில், மதுரையில் பழைய சோறு, பழைய கஞ்சி என்று காலை உணவினை சிறு பானையில் விக்கிறார்கள். அலைமோதுகிறது 

Pazhaya soru recipe for chicken

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

ஈழத்தமிழர்கள் சாதம் என்று சொல்வதில்லை.

பெருமாள் முருகன் எழுதிய கெட்ட வார்த்தை பேசுவோம்  என்ற புத்தகத்தில், ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்த சோறு இப்போது நாகரீகமற்ற வார்த்தையாக கருதபட்டு குறைவாகவே உபயோகப்படுத்தபடுகிறது என்று சொல்லியுள்ளார். இது ஆச்சரியமாக இருந்தது.
புலம்பெயர் இளைய தலைமுறையினர் நாகரீகமில்ல்லாத சக தமிழர்களை Sorru என்று திட்டுவதையும் பார்த்திருக்கின்றேன்.

ஆனால் நமக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம்😀

சோத்து மூட்டை, சோத்து மாடு என்று உடல் பருமன் வைத்து திட்டுவதால், அப்படி சோறு என்று சொல்வார்கள்.

பதிலுக்கு, பர்கர் என்று சொல்லி வையுங்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

சோத்து மூட்டை, சோத்து மாடு என்று உடல் பருமன் வைத்து திட்டுவதால், அப்படி சோறு என்று சொல்வார்கள்.

பதிலுக்கு, பர்கர் என்று சொல்லி வையுங்கள். 😁

நானே மேற்கு நாடுகளில் பல வருடங்கள் இருந்தும் காட்டான்கள் மாதிரிக் கதைப்பவர்களை “சரியான சோறு” என்று சொல்வதுண்டு😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிசியை சமைத்து அதனுடன் பலவகைக் கறியையும் தனித்தனியே சமைத்து உண்பது ஒருவகை. இங்கே சோறு முதன்மை.
அரிசியுடன் பல மரக்கறிகளையும் அல்லது மாமிசத்தையும் சேர்த்தே சமைத்து உண்பது இன்னொருவகை. இங்குதான் சாதம் என்று வருகின்றது.

இதை தனித்தனியாக சமைத்துப் பின்னர் எல்லாவற்றையும் குழையல் ஆக்கும் பண்பும் இருக்கின்றது.

சாதத்தில் எது அதிகமாக இருக்கின்றது என்பது முக்கியமல்ல சுவையே முக்கியம்.
ஆனால் இலங்கைத் தமிழர்கள் அதிகம் அரிசியை   தனியாகவே சமைப்பார்கள்.
அதிகமாக உண்பார்கள். 

இந்தியாவில் நேரப்பிரச்சனையால் எல்லாவற்றையும் சேர்த்தே இப்போது அதிகமாகி சமைக்கின்றனர்.
வியாபார நோக்கில் பலவகையான சுவையூட்டிகளுடன் சேர்வைகள் தயாராக இருக்கின்றன .
சாதம் என்ற பெயரில் நோய்களை விலை கொடுத்து வாங்குகின்றனர்
இலங்கையில் அப்படியில்லை
இருந்தாலும் எந்த அரிசி சமைக்கின்றார்கள் என்பது முக்கியம்.

சிவப்பு அரிசி பரவாயில்லை
பசுமதியை விட 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலை எங்கடை பொம்புளையளை சோறு எண்டு சொல்லி நக்கலடிக்கிறதாய் கேள்விப்பட்டனான்....😂

அங்கை ஊரிலை ஒருத்தரும் சாதம் எண்டு சொல்லுறேல்லை. இப்ப என்ன மாதிரியெண்டு தெரியேல்லை.
ஆனாலும் இப்ப றைஸ் எண்டு எங்கடை ஆக்கள் சொல்ல வெளிக்கிட்டினம்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் சோறு உண்ணாவிட்டால் எங்கள் மக்கள் எங்கிருந்தாலும் எப்படித் தவிப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தளவிற்கு சோறு என்பது எங்கள் வாழ்வில் அழிக்க முடியாத ஒரு உணவுப் பொருள்.
இங்கே யாராவது ஒரு மாதம் சோறு உண்ணாமல் இருக்கின்ரீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை சாதமென்று பாவித்தில்லை, ஜயர்வாலுகள்தான் இப்படி பாவிப்பது

சோறு ஒருதரம் சாப்பிடாவிட்டால் அன்று நித்திரைவராது🥲.

எங்களைவிட சிங்களவர்கள் சோற்றுக்கு அடிமை, பல்கலையில் அவர்களுடன் சுற்றுலா போனல் மூன்று நேரமும் சோறுதான்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நானே மேற்கு நாடுகளில் பல வருடங்கள் இருந்தும் காட்டான்கள் மாதிரிக் கதைப்பவர்களை “சரியான சோறு” என்று சொல்வதுண்டு😂

கிருபன் காட்டான்கள் எப்படி கதைப்பார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழ நாடு என்ற பெயரே நெல்வளம் மிக்க நாடு என்ற அர்த்ததிலேயே வந்ததாயும். இது முன்னம் சோர நாடு என்றே வழங்கியதாயும் சொல்லப்படுகிறது.

சோறுக்கு ஒரு போதைதன்மை இருப்பது போல் எனக்கு படுகிறது. வேறு எந்த உணவுக்கும் இல்லாத காந்தல் சோறுக்கு ஏற்படுவதை உணர்ந்துள்ளேன். 

இப்படி எம்முடன் பலகாலம் கூட வந்தாலும் சோறும் பிட்டும், வெளிநாடுகளில் எங்கள் மக்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு செலுத்தும் உணவுகள் என்பதும் மறுப்பதற்கில்லை.

லண்டன் சோறுஸ்

இங்கே சோறு என்பது இரு அர்த்ததில் பயன்படுகிறது.

1. ஊரில் இருந்த அதே பத்தாம்பசலிதனத்தோடு வாழ்பவர். ஜியின் வார்த்தையில் காட்டான்🤣.

எ.கா: அந்த மனுசன் ஒரு சரியான சோறு

2. இலங்கை தமிழர் என்பதை குறிக்க.

எ.கா: இந்த பிபிசி ல நியூஸ் வாசிக்கிற மனுசன் ஒரு சோறாம், தெரியுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோறு மணக்கும் சோ நாடா
சோழி மணக்க புகழ் மணக்கப்
பொன்னியனும்
ஆறு மணக்கும் புனல் நாடா…… 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

சோறு மணக்கும் சோ நாடா
சோழி மணக்க புகழ் மணக்கப்
பொன்னியனும்
ஆறு மணக்கும் புனல் நாடா…… 

சோழ பல நாடு சோறுடைத்து…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

கிருபன் காட்டான்கள் எப்படி கதைப்பார்கள்?

👇🏾👇🏾👇🏾

 

7 hours ago, goshan_che said:

லண்டன் சோறுஸ்

இங்கே சோறு என்பது இரு அர்த்ததில் பயன்படுகிறது.

1. ஊரில் இருந்த அதே பத்தாம்பசலிதனத்தோடு வாழ்பவர். ஜியின் வார்த்தையில் காட்டான்🤣.

எ.கா: அந்த மனுசன் ஒரு சரியான சோறு

2. இலங்கை தமிழர் என்பதை குறிக்க.

எ.கா: இந்த பிபிசி ல நியூஸ் வாசிக்கிற மனுசன் ஒரு சோறாம், தெரியுமே?

சபை நாகரீகம் தெரியாமல் எதற்கும் உரக்கச் சத்தம்போட்டு சண்டைபிடிப்பவர்களும் “சரியான சோறு”தான்😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

👇🏾👇🏾👇🏾

 

சபை நாகரீகம் தெரியாமல் எதற்கும் உரக்கச் சத்தம்போட்டு சண்டைபிடிப்பவர்களும் “சரியான சோறு”தான்😉

 

அப்பிடியெண்டால் ஆபிரிக்கநாட்டவர்கள் பெரும்பாலும் சோறு தான். அதைவிட தொலைபேசியில் தன்னுடைய ஆண்நண்பருடனோ/பெண்நண்பருடனோ சண்டைபிடிக்கும் வெள்ளை இனத்தவரும் சோறு தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோறு கறி 😋 இல்லாவிட்டால் ரைஸ் அன்ட் கறி. சாதம் வேண்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

👇🏾👇🏾👇🏾

 

சபை நாகரீகம் தெரியாமல் எதற்கும் உரக்கச் சத்தம்போட்டு சண்டைபிடிப்பவர்களும் “சரியான சோறு”தான்😉

 

ஐரோப்பாவில் பல நாடுகளில் 70% சோறு பிரதான உணவு. முன்னர்  சோறு சாப்பிடாத ஜேர்மனியரும் இப்போது சோற்றை விரும்பு உண்ணுகின்றனர். அதை விட காலாகாலமாக பால்சோறு இவர்களின் விருப்ப சாப்பாடு.
கறுவாத்தூளும் சீனியும் கலந்து சாப்பிடுவார்கள்.

Der beste Milchreis der Welt - schnell & einfach selber machen!


எங்கடையளுக்குத்தான் சோறு எண்டால் இளக்காரம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பாவில் பல நாடுகளில் 70% சோறு பிரதான உணவு. முன்னர்  சோறு சாப்பிடாத ஜேர்மனியரும் இப்போது சோற்றை விரும்பு உண்ணுகின்றனர். அதை விட காலாகாலமாக பால்சோறு இவர்களின் விருப்ப சாப்பாடு.
கறுவாத்தூளும் சீனியும் கலந்து சாப்பிடுவார்கள்.

Der beste Milchreis der Welt - schnell & einfach selber machen!


எங்கடையளுக்குத்தான் சோறு எண்டால் இளக்காரம்.:cool:

பார்க்க நல்ல ருசியா இருக்கும் போல இருக்கு. இதன் பெயர் என்ன?

சோற்றை ஐரோப்பா கொண்டுவந்தது இந்தியாவில் இருந்து வந்த அலக்சாண்டரின் படை என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.