Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சோறு எதிர் (vs) சாதம்: ஏன் தமிழ்நாட்டில் சோறு என்று சொல்வதில்லை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அலெக்சாண்டர் கொண்டுவந்தால் என்ன அலாவுதீன் கில்ஜி கொண்டுவந்தால் என்ன இப்ப எங்கட ஊரில் கிடைக்கும் அரிக்கன் அரிசியோ புழுங்கல் அரிசியோ சோறு சோறுதான்......!   👍

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒர் நாள் சோறு சாப்பிடவிட்டால் வாயேல்லாம் வரண்டு போய்வும்.சம்பா அரிசிதான் எனது பேவரிட்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

அலெக்சாண்டர் கொண்டுவந்தால் என்ன அலாவுதீன் கில்ஜி கொண்டுவந்தால் என்ன இப்ப எங்கட ஊரில் கிடைக்கும் அரிக்கன் அரிசியோ புழுங்கல் அரிசியோ சோறு சோறுதான்......!   👍

எடுத்ததிற்கெல்லாம் நதிமூலம் ரிஷிமூலம் தேட வெளிக்கிட்டால் நாம் சுவாசிக்கும் காற்றைக்கூட சுவாசிக்க முடியாது :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 23/7/2021 at 16:51, goshan_che said:

பார்க்க நல்ல ருசியா இருக்கும் போல இருக்கு. இதன் பெயர் என்ன?

இதை இஞ்சை மில்ச் றைஸ் எண்டு சொல்லிவினம். கூடுதலாய் வயோதிபர்கள்/சின்னாக்கள் விரும்பி சாப்பிடுவினம். விதம் விதமான முறையிலை செய்து சாப்பிடுவினம். கிட்டத்தட்ட எங்கடை ஊர் புக்கை/பொங்கல் எண்டு சொல்லுங்கோவன்.ஜேர்மன்காரரை மாதிரி சீனி கனக்க போடாமல் சமைச்சால் நல்லாய் இருக்கும். நேரமும் கனக்க தேவையில்லை. :)

 

 

Schnell und einfach: Milchreis Klassik | Uncle Ben's

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

இதை இஞ்சை மில்ச் றைஸ் எண்டு சொல்லிவினம். கூடுதலாய் வயோதிபர்கள்/சின்னாக்கள் விரும்பி சாப்பிடுவினம். விதம் விதமான முறையிலை செய்து சாப்பிடுவினம். கிட்டத்தட்ட எங்கடை ஊர் புக்கை/பொங்கல் எண்டு சொல்லுங்கோவன்.ஜேர்மன்காரரை மாதிரி சீனி கனக்க போடாமல் சமைச்சால் நல்லாய் இருக்கும். நேரமும் கனக்க தேவையில்லை. :)

 

 

Schnell und einfach: Milchreis Klassik | Uncle Ben's

நன்றி அண்ணை இங்கயும் அங்கிள் பென்ஸ் இருக்கு ஆனால் உதை காண்டதில்ல. தேடிப்பாப்பம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

OIP.1xoP_asVYDZpEJzsUpFkMgHaHa?w=209&h=2OIP.0I8NdqQqkIogj10QvqC-FQHaE4?w=232&h=1Mueller-Milchreis_komplett-800x599.jpg


இவையேர்மனியில் கிடைக்கிறது. நான் கடந்த இருபது ஆண்டுகளுக்கு  முன் தனியே இருந்தபோது காலை உணவாக உண்டுள்ளேன். 

தாயகத்திலே சோறு என்றே அழைப்பது வழமை. சோறை இழிசொல்லாக மாற்றுவதில் சமஸ்கிருதத்தைத் தினிக்க முனைவோருக்கு மட்டுமல்ல, அதனைப் பழித்தரைக்கப் பயன்படுத்துவோருக்கும் பங்குண்டு. என்னுடனோ அல்லது எனக்குக் கேட்கும் வகையிலோ  'சோற்றை' ச் சுட்டி இகழ்மொழி பேசுவோரை நான் திருப்பிக் கேட்டபதுண்டு.  

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 23/7/2021 at 17:00, suvy said:

அலெக்சாண்டர் கொண்டுவந்தால் என்ன அலாவுதீன் கில்ஜி கொண்டுவந்தால் என்ன இப்ப எங்கட ஊரில் கிடைக்கும் அரிக்கன் அரிசியோ புழுங்கல் அரிசியோ சோறு சோறுதான்......!   👍

 

On 23/7/2021 at 23:57, குமாரசாமி said:

எடுத்ததிற்கெல்லாம் நதிமூலம் ரிஷிமூலம் தேட வெளிக்கிட்டால் நாம் சுவாசிக்கும் காற்றைக்கூட சுவாசிக்க முடியாது :)

ஐயோ அண்ணைமார் நான் அதை சொன்னது ஒரு வரலாற்று துணுக்காக. மற்றும்படி எனக்கு சோறு கண்ட இடம்தான் சொர்க்கம்.

இப்பதான் சறத்தை கொஞ்சம் தளர்வா கட்டிப்போட்டு, ஆட்டுகறியும் புழுங்கல் அரிசி சோறும் இரெண்டரை பிளேட்ட இடம் தெரியாமல் சிதைச்சு போட்டு வாறன்🤣

13 minutes ago, nochchi said:

OIP.1xoP_asVYDZpEJzsUpFkMgHaHa?w=209&h=2OIP.0I8NdqQqkIogj10QvqC-FQHaE4?w=232&h=1Mueller-Milchreis_komplett-800x599.jpg


இவையேர்மனியில் கிடைக்கிறது. நான் கடந்த இருபது ஆண்டுகளுக்கு  முன் தனியே இருந்தபோது காலை உணவாக உண்டுள்ளேன். 

 

இவை இங்கேயும் கிடைகிறது. நான் உணவின் பின் இனிப்பாக சாப்பிடுவதுண்டு.

இதே போல் கொஞ்சம் வெள்ளை சோறு, ஊர் தயிர் போல் இருக்கும்  greek style yoghurt, இவற்றுடன் கடையில் வாங்கிய ஒரு பூந்தி லட்டை உழுத்தி போட்டு குழைத்தால் - அந்த மாரி இருக்கும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, goshan_che said:

ஐயோ அண்ணைமார் நான் அதை சொன்னது ஒரு வரலாற்று துணுக்காக. மற்றும்படி எனக்கு சோறு கண்ட இடம்தான் சொர்க்கம்.

இப்பதான் சறத்தை கொஞ்சம் தளர்வா கட்டிப்போட்டு, ஆட்டுகறியும் புழுங்கல் அரிசி சோறும் இரெண்டரை பிளேட்ட இடம் தெரியாமல் சிதைச்சு போட்டு வாறன்🤣

என்ன மிசினப்பா? இரண்டரை கோப்பையை  சத்தமில்லாமல் சிதறடிச்சுப்போட்டு வந்து நிக்குது!😁
எதுக்கும் கண்ணூறு பாத்துவிடுவம்..🤣

குங்குலியம், கற்பூரம் எரித்தல்

விக்கினங்கள் தீர்க்கும் விநாயகனே முன் நடவாய்...
கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே முன் நடவாய்...
மெல்ல நட மெல்ல நட...
இரண்டரை கோப்பை அமுக்கியவனே...
மெல்லநட மெல்லநட...
பையநட பையநட வயிறு குலுங்காமல் பாத்து  பையநட...😁

Edited by குமாரசாமி
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

என்ன மிசினப்பா? இரண்டரை கோப்பையை  சத்தமில்லாமல் சிதறடிச்சுப்போட்டு வந்து நிக்குது!😁
எதுக்கும் கண்ணூறு பாத்துவிடுவம்..🤣

http://www.pariharam.info/wp-content/uploads/2018/12/aaraaththi.jpg

விக்கினங்கள் தீர்க்கும் விநாயகனே முன் நடவாய்...
கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே முன் நடவாய்...
மெல்ல நட மெல்ல நட...
இரண்டரை கோப்பை அமுக்கியவனே...
மெல்லநட மெல்லநட...
பையநட பையநட வயிறு குலுங்காமல் பாத்து  பையநட...😁

வழமையா மூண்டு பிளேட்🤣. இண்டைக்கு டயட்டிங் என்பதால் மிச்சத்துக்கு தண்ணிய குடிச்சனான்🤣.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • முதல் வீடியோவிலும் பார்க்க இரண்டாவது வீடியோ நல்லா இருக்கு but First video: 814 views Oct 17, 2021 Vs. Second video: 268 views May 2, 2021   Please watch from 5:05 mins   சிவரதன் voice > நான்தான் இஞ்ச குடியிருக்கிறனில்ல ...            
  • பசில் மகே கித்தே.......என சில்வாவின் மகள் பாடுவார்
  • ஒரு கலகக்காரனின் கதை – ஜே. ஜே. சில குறிப்புகள் நாவல் – இராயகிரி சங்கர் October 16, 2021 1981ல் எழுதப்பட்ட நாவல் ஜே.ஜே.சில குறிப்புகள். எழுத்தாளன் மீது பெரும் பித்துக்கொண்ட வாசகன் ஒருவனின் பார்வையில் சொல்லப்படும் புனைவு. ஜோசஃப் ஜேம்ஸ் என்கிற மலையாள எழுத்தாளனை வாசிக்க நேர்ந்து அவனிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்ளத்துடிக்கும் பாலு என்கிற இளைஞனின் பரவசத்துடன் நாவல் ஆரம்பம் ஆகிறது. பாலுவின் பார்வையின் ஊடாக .ஜே.ஜே. வின் மொத்த வாழ்க்கையும் நாவலில் குறிப்புகளாக, நினைவோடை உத்தியில் பிறரின் சொற்களாக, ஜே.ஜே.வே எழுதிய நாட்குறிப்புகளாக விரிகிறது. வெளியாகி கிட்டத்தட்ட முப்பந்தைந்து ஆண்டுகளாகிவிட்ட நிலையில்  இந்நாவலின் முக்கியத்துவம் என்ன? அதற்குமுன் இந்த நாவலின் பேசுபொருள் என்ன என்பதும், அறிமுக வாசகர்கள் எதிர்கொள்ள  இருக்கும் தடைகள் எவை என்பதையும் கொஞ்சம் சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். இந்நாவல் நடக்கும் காலம் சுதந்திரப் போராட்டம் நடந்து முடிந்து பொன்னுலகம் வாய்க்கும் என்று நம்பி ஏமாந்து,  மனித மனத்தின் பேராசைகளால் தியாகங்கள், லட்சியவாதங்கள் துார்ந்து போயிருந்த காலம். பொதுவுடைமைச் சித்தாந்தம் அவ்வெற்றிடத்தை நிரப்பும் என்று ஏகமனதாக அறிவுஜீவிகள் நம்பி, பெரும் ஊக்கத்தோடு அவர்களை இயங்கச்செய்திருந்த காலமும்கூட. இலக்கியத்தில் கலை கலைக்காக என்றும், கலை மக்களுக்காக என்றும் தனித்தனி அலைகள் குமுறிக்கொண்டிருந்த காலம். முன் மாதிரிகள் ஏதும் இந்நாவலின் வடிவத்திற்கு தமிழில் இல்லை. கலைஞனின் தேடலில் விழைந்த வடிவம். கூறுமுறையும் முன்னர் அனுபவப்படாதது. இதுவே ஆரம்ப வாசகர்களிடம் இந்நாவல் ஒருவித அந்நியத்தன்மை கொள்ள காரணமாக அமைகிறது. ஜே.ஜே. இடதுசாரி சிந்தனைகளின் மீது ஈர்ப்புக்கொண்டவன். நாளடைவில் தோழர்களிடம் தத்துவம்  அவர்களின் சுயநலத்தை நிறைவேற்றிக்கொள்ள வாய்த்த ஒரு உபாயமாக மாறிப்போனதைக்கண்டு கலங்கி, அவற்றில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டவன். இது அப்போதைய காலகட்டத்தில் பரவலாக நிழந்த உண்மை. சுந்தர ராமசாமியே ஆரம்பத்தில் முற்போக்குக் கதைகள் எழுதியவர்தான். தண்ணீர், கோவில்காளையும் உழவுமாடும் போன்ற கதைகள் அக்காலத்தியவை. அதன்பின் ஸ்டாலினிய நிர்வாகத்தினால் மனம்நொந்து அக்கிருந்து வெளியேறுகிறார்.  ஏழைப்பங்காளிகளின் உலகத்தை சமத்காரமாக ரத்தமும் சதையுமாக எழுதிப் பேரும் புகழும் பெற்றுவரும் முல்லைக்கல் மாதவன் நாயர் மீது ஜே. ஜே. வைக்கும் விமர்சனங்கள் இன்றைக்கும் முக்கியமானவை. முல்லைக்கல் நாயர் ஒரு போலி என்ற ஜே.ஜேயின் அவதானிப்பு கடும் விமர்சனமாக உருவெடுக்கிறது. எழுதுவதும் வாழ்வதும் வெவ்வேறாக இருக்கும்போது புரட்சியாளன் பிம்பத்தை முல்லைக்கல்லுக்கு அளிக்க ஜே.ஜே. ஒப்புக்கொள்ளவில்லை.  உண்மையைக் காணும் வேட்கை, அதை எழுத்தில் பதிவுசெய்யத்துடித்த வேகம் என்று தன் செயல்களால் தொடர்ந்து எதிரிகளைச் சம்பாதித்துக்கொள்கிறான் ஜே.ஜே. தன்னுடைய மொழியான மலையாள இலக்கிய உலகத்தின் மீது அவன் காட்டும் சமரசமற்ற கறாரான விமர்சனம் அவனுக்கு அளிப்பது புறக்கணிப்பையும் பரம்பரையாகத் தொடர வாய்ப்புள்ள பகைகளையும். பாலு ஜே.ஜேயை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நுால்தான் இந்நாவல். தொடர்கதைகளும் நெடுங்கதைகளும் பரவலாக எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இந்நாவலின் வடிவம் அளித்த அந்நியத்தன்மை இன்றும் வாசகர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. இதில் வாசக ஊகங்களுக்கான இடைவெளி ஏராளம். காலம் முன்பின்னாக ஊஞ்சலாடி குதிக்கிறது.  ஜே.ஜே. என்கிற எழுத்தாளன் தமிழில் உள்ளவன் என்றும் ஒரு கற்பனைக்காக புதுமைப்பித்தன் என்றும் கொண்டு மலையாள இலக்கிய உலகத்தின் மீது ஜே.ஜே.கொட்டும் விமர்சனங்கள் தமிழ் இலக்கிய உலகம் சார்ந்தவை என்றும் கற்பனை செய்துகொண்டால் இந்நாவலின் முக்கியமான பரிமாணம் பிடிபடும். மொத்த நாவலும் சிந்திக்கும் மனிதர்களின் மீது தயவுதாட்சண்யமின்றி கடுமையான விமர்சனங்களை முன்னிறுத்துகிறது. போலிகளைக்கண்டு கொந்தளிக்கிறது. துவேசம்கொள்கிறது. ஏளனம்செய்து சபையில் இருந்து விரட்டி அடிக்கிறது. சிந்தனை என்ற பெயரில் நடக்கும் மொண்ணைத்தனங்களை செவிட்டில் அறைந்து அது சிந்தனை அல்ல சிந்தனைப் போலி என்று உரக்கச் சொல்கிறது. மேலும்  பொதுவுடைமை தத்துவத்தை பாவித்தவர்கள்  குறித்த துல்லியமான விமர்சனம் நாவலில் பெரும்பாலான இடங்களில் வருகிறது. எண்பதுகளில் நாம் எப்படி இருந்தோம் என்பதையும், நம் அறிவுலகக் சீரழிவுகள் எவை என்பதையும்  விமர்சனப்பூர்வமாக பதிவுசெய்துள்ளது என்பதே இந்நாவலின் முக்கியத்துவம். இரண்டாவதாக தமிழ்ச்சமூகத்தின் மீது சுந்தர ராமசாமிக்கு இருந்த விமர்சனங்கள். அவை இன்றும் மாறாமல் தொடரந்து கொண்டிருக்கின்றன. வணிக எழுத்தின் மீது சு.ரா.விற்கு  இருந்த எண்ணம் இந்நாவலில் ஓரிடத்தில் பதிவாகியுள்ளது.  ”மாயக் காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு அவ்வுறுப்புக்களை ஓயாமல் நம்மேல் உரசிக்கொண்டிருக்கும் அற்பங்கள்” என்று அது வெளிப்படுகிறது. அக்கவலை “சீதபேதியில் தமிழ் சீதபேதி என்றும், வேசைத்தனத்தில் தமிழ்வேசைத்தனம் என்றும் உண்டா? என்று சினங்கொள்கிறது. சு.ரா.வின் பாலயத்தில் இலக்கிய உலகம் எப்படி இருந்தது என்பதை ”நான் பள்ளி இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தபோது என் மனத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியவன் ஜே.ஜே. தமிழ் நாவல்களில் அதாவது தமிழ்க் காதல் கதைகளில் அல்லது தமிழ்த் தொடர்கதைகளில் என் மனத்தைப் பறிகொடுத்திருந்த காலம். அன்று வானவிற்கள் ஆகாயத்தை மறைத்திருக்க, தடாகங்கள் செந்தாமரைகளால் நிரம்பியிருந்தன. உலகத்துப் புழுதியை மறைத்துக்கொண்டிருந்தார்கள் பெண்கள். ஆஹா தொடர்கதைகள் ஒரு குட்டியை ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டன்கள் காதலிக்கிறார்கள். பரிசுச் சீட்டு யாருக்கு விழும், கண்டுபிடிக்க முடிந்ததில்லை என்னால்.”  என்று வர்ணிக்கிறார். ஆன்மீக வாதிகளிடம் அவருக்கு ஏற்படும் அவநம்பிக்கை துரதிருஷ்டவசமானது. நாராயணகுருவின் சீடர் என்று தன்னைச் சொல்லிக்கொண்ட ஒருவரை சந்தித்து கொஞ்ச நாட்கள் அவரோடு தங்க நேரிடுகிறது பாலுவுக்கு. விரைவிலேயே அவரின் நம்பிக்கைகளால் ஒன்றும் இம்மண்ணில் விளையப்போவதில்லை என்று சோர்வுற்று விலகிச்செல்கிறார். ஆயினும் அவரைப்போன்ற லட்சியவாதிகளின், சந்நியாசிகளின் அத்தனை உழைப்பும் ஏன் வீணாகிப்போகிறது என்ற துக்கம் அவரை வாட்டுகிறது. பாலு ஜே.ஜே.யைச் சந்திக்க எழுத்தாளர் மாநாட்டுக்குச் செல்கிறான். அங்கு அவனுக்கு சரித்திர நாவலாசிரியர் திருச்சூர் கோபாலன் நாயரைச் சந்திக்க நேரிடுகிறது. அப்போது அவரின் நாவல்கள் குறித்து ஜே.ஜே. சொல்லும் வரிகள் அங்கதம் நிரம்பியவை. ”கொல்லங்கோட்டு இளவரசி உம்மிணிக்குடடியை அவளைத்துரத்திய அரசர்களிடமிருந்தும். முடிவில் அவளைக் காப்பாற்றிய இளவரசனிடமிருந்தும் விடுவித்து, திருச்சூர் கோபாலன் நாயருக்கே மணம் முடித்து வைக்க என்னால் முடியுமென்றால் , சரித்திர நாவல் எழுதும் அவஸ்தையில் இருந்து அவருக்கு நிரந்தர விமோசனம் கிடைக்கும்”, “பாவம் திருச்சூர், கற்பனைக் குதிரைகள் மண்டிக் கிடக்கும் லாயம் அவருடையது. ஏதோ சிலவற்றை அவிழ்த்துவிடுகிறார். அவை விண்ணென்று மேலே போய் மேகக் கூட்டங்களிடையே புரண்டு உடல் வலியைப் போக்கிக்கொண்டு சூரியனைப் பின்னங்காலால் உதைத்துதள்ளி, கிரகங்களை முட்டிக்குப்புறச் சாய்த்து சில நட்சத்திரங்களையும் விழுங்கிவிட்டு சந்திரனின் ஒரு துண்டை வாயில் கவ்விக்கொண்டு திரும்பி வந்து சேருகின்றன.” என்கிறான். அதைவிட உச்சபட்ச அங்கதம். ஜே.ஜே.பாலுவைச் சந்தித்த உடன் கேட்கும் கேள்வி.  ”சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?”. இந்நாவலின் சில தருணங்களை ஜெயமோகன் கைப்பற்றி பின்தொடரும் நிழலின் குரல் என்ற பெரிய நாவலாக எழுதியிருக்கிறார். முல்லைக்கல் மாதவன் நாயரிடம் ஜே.ஜே.யைப்பற்றி விவரிக்கும் அரவிந்தாட்ச மேனன்  ஆல்பெர்ட் என்கிற இடதுசாரி தொழிற்சங்க வாதி ஒருவரைப்பற்றி சொல்கிறார். தனியாளாக மலைக்காட்டில் சங்கங்களை ஏற்படுத்தியவன் என்றும் பின்னாளில் கார் பங்களா நிலம் என்று ஒரு குட்டி முதலாளியாக தன்னை நிறுவிக்கொண்டவன் என்றும் வருகிறது. ஜே.ஜே.யின் நாட்குறிப்பு பகுதியில் ஒரு வரியில் ட்ராட்ஸ்கி ட்ராட்ஸ்கி என்று மாணவர்கள் புலம்பிக்கொண்டார்கள் என்று எழுதியிருக்கிறார். பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் கதைக்களத்தை ஜெயமோகன் இந்நாவலின் வரிகளில் இருந்தும் அதன்பின் அவருக்கு ஏற்பட்ட தொழிற்சங்க அனுபவங்களில் இருந்தும் எழுதியிருக்கலாம். அந்நாவலும் இந்நாவலைப்போன்ற வடிவ ஒற்றுமை கொண்டுள்ளது என்பது இந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது. உண்மையான கலைவெளிப்பாட்டின் இயல்பு என்ன என்பதற்கு நாவலில் வரும் ஒரு காட்சிச்சித்தரிப்பு உதாரணமாக அமைகிறது. அது ஜே.ஜே. டயரிக்குறிப்பாக வருகிறது.  “முல்லைக்கல் உன் எழுத்தை நான் மனத்தால் வெறுக்கிறேன். மாட்டுக்குச்சொறிந்து கொடு அது நல்ல காரியம். ஆனால் மனிதனுக்கு ஒருபோதும் சொறிந்துகொடுக்காதே…லுாக்கோசின் மகள் ஏலியம்மாவின் வீணை வாசிப்பை நான் கேட்கச் சென்றிருந்தபோது அவளுடைய தனி அறையில் வீணையின் கம்பிகள் அதிர்ந்தன. ஏலிக்குட்டியோ எங்களுடன் இருந்தாள். நாங்கள் வேகமாக ஓடிக் கதவைத்திறந்து பார்த்தபோது கம்பிகள் தானாக அதிர்ந்துகொண்டிருந்தன. மேல்மாடி உத்தரத்தில் ஒரு தச்சன் ஒரு ஆப்பை மரச்சுத்தியலால் அறைந்துகொண்டிருந்தான். இதுதான் மனிதாபிமானம்.” நாவலில் அநேகம் இடங்கள் கவிதைவரிகளாக கவித்துவம் கொண்டிருக்கின்றன. சம்பத் காணும் கனவு அதன் வரலாற்றுப்பின்புலம், கரும்புள்ளிகளாத்தெரிந்து யானை உருப்பெற்று மீண்டும் கரும்புள்ளிகளாக யானை மறையும் மாயத்தோற்றம். சம்பத் காணும் பரவசமான சூரிய உதயம் என்று நாவல் முழுதும் சிந்தனையின் பாய்ச்சலையும் கலைவெளிப்பாட்டையும் காணலாம். படைப்பு மொழியோ சன்னதம் வந்து வேட்டைக்கு ஏகும் சாமியாடியுடையது. மந்திரங்கள் போன்று இந்நாவல் வெளிவந்த காலங்களில் சிலவரிகள் இலக்கிய வாசகர்களால் ஓதப்பட்டு வந்தன. அவற்றில் சில ”எனது குடி தற்காலிகத் தற்கொலை – நான் உயிர்வாழ அவ்வப்போது தற்கொலைகள் அவசியமாகின்றன”” ”மூலதனம் இல்லாமல் முதலாளி ஆக இன்று இரண்டு முக்கியமான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தொழிற்சங்கம் , மற்றொன்று பாஷை. பாஷை என்பது மொழி மூலம் மக்களின் உணர்ச்சியை, முக்கியமாக மேடைகளில் துாண்டுவதற்கான ஆற்றல். மக்களின் மனத்தேவைகளைப் பெரும் மாளிகைகளாக எழுப்பி அவர்கள் முன் காட்டும் காரியம்.” ”சஞ்சலமின்றி முடிவெடுப்பது. சரியோ தவறோ அதன்பின் அதில் ஆழ்ந்து விடுவது. அதன்பின் எதிர்நிலைகளைப் பற்றி உணர்வில்லாமல்  இருப்பது. உயர்வோ தாழ்வோ இவை நிம்மதியானவை. மனநிம்மதி எப்போதும் மந்தத்தைப் பார்த்துக் கண்சிமிட்டுகிறது போலிருக்கிறது” ”பாஷை என்பது வேட்டை நாயின் கால்தடம். கால்தடத்தை நாம் உற்றுப்பார்க்கும்போது வேட்டைநாய் வெகுதுாரம் போயிருக்கும்.” ”ஆத்மாவை ஜேப்படிக்க ஒரு உடலுக்குள்தான் எத்தனை கைகள்” தமிழ்ச் சமூகத்தின் போலித்தனத்தின் மேல், சிந்தனைச்சோம்பல் மேல்  சுந்தர ராமசாமிக்கு இருந்த எண்ணங்கள்தான் இந்நாவலாக உருப்பெற்றுள்ளது. தமிழில் இதுபோன்று தன் உடல்முழுக்க சிந்தனையின் முத்திரைகள் கொண்ட வேறொரு நாவல் இல்லை. அது ஒன்றே இந்நாவலின் பேரழகு.     https://mayir.in/essays/rayakirisankar/1788/
  • அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு அதை செய்யாதீர்கள் என்று தமிழக மீனவரிடம் வேண்டுகோள் விட கண்டிக்க முடியாத ஒரு கவிஞர் 🤦‍♂️
  • யாழ்ப்பாணத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பல் சிக்கியது – நகைக் கடை உரிமையாளரும் கைது யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றவர்களின் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற நால்வர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, அச்சுவேலி, சுன்னாகம் உள்பட 5 இடங்களில் வீதியில் பயணித்தவர்களிடம் தங்க நகைகளை அறுத்து அபகரித்துச் சென்ற தெல்லிப்பழை மற்றும் ஏழாலையைச் சேர்ந்த 20 - 25 வயதுடைய நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து நகைகளைக் கொள்வனவு செய்த சுன்னாகத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் 6 தங்கப் பவுண் எடையுடைய 5 சங்கிலிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வழிப்பறிக்குப் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறினர். அச்சுவேலி பொலிஸ் பிரிவில் கடந்த 16ஆம் திகதி வீதியில் சென்ற பெண் ஒருவரிடம் தங்கச் சங்கிலி அறுத்து அபகரிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த வழிப்பறியில் ஈடுபட்டிருந்தனர். அன்றைய தினம் இளவாலை மற்றும் சுன்னாகம் பகுதிகளிலும் வீதியில் சென்ற இருவேறு நபர்களிடம் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டன. சம்பவங்கள் தொடர்பில் அச்சுவேலி, சுன்னாகம் மற்றும் இளவாலை பொலிஸ் நிலையங்களில் வழங்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மூன்று வழிப்பறிச் சம்பவங்களுடன் வட்டுக்கோட்டையில் ஒருவரிடமும் மருதனார்மடத்தில் வியாபாரி ஒருவரிடமும் தங்க நகைகள் அபகரித்தமையை சந்தேக நபர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். வழிப்பறியில் கொள்ளையிட்ட நகைகளை சுன்னாகத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் சந்தேக நபர்கள் விற்பனை செய்திருந்தனர். அதனால் நகைக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேக நபர்கள் வழங்கிய 5 சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.     https://www.virakesari.lk/article/115718
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.