Jump to content

வடக்கின் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை பேரினவாத ஒடுக்குமுறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை பேரினவாத ஒடுக்குமுறை

July 22, 2021

வடக்கின் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை பேரினவாத ஒடுக்குமுறை; ஐங்கரநேசன்
 

தமிழ் மாகாணமான வடக்கில் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தின் பேரினவாத ஒடுக்கு முறையின் இன்னுமொரு வடிவமாகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கின் பிரதம செயலாளராக வவுனியா மாவட்டச் செயலர் எஸ்.எம். சமன் பந்துலசேனவுக்கு ஜனாதிபதியால் நியமனக் கடிதம் வழங்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “இலங்கை ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் சிங்களப் பேரினவாதத்தால் தமிழ் மக்கள் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தொடர் ஒடுக்கு முறைகளுக்கு ஆளாக்கப் பட்டதன் காரணமாகவே தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தத் தலைப்பட்டனர்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் வலுப் பெற்றதன் விளைவாகவே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாண சபை முறைமை தோற்றம் பெற்றது. தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வாக முன் வைக்கப்பட்ட மாகாண சபைக்குப் பிரதம செயலாளராகச் சிங்கள இனத்தவர் ஒருவரை நியமித்திருப்பது மாகாணசபை முறைமை உருவாக்கப் பட்டதற்கான அடிப்படைக் காரணங்களையே நிராகரிக்கும் ஓர் இனவாதச் செயற்பாடாகும்.

மாகாண சபைகளுக்கான 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பிரதம செயலாளரை நியமிப்பது ஜனாதிபதிதான் எனினும் அந்நியமனம் மாகாண முதல்வரின் உடன் பாட்டுடனேயே செய்யப்படல் வேண்டும்.

வடக்கு மாகாண சபையின் ஆயுட் காலம் 2018ஆம் ஆண்டு முடிவடைந்த உடனேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்தியிருக்க வேண்டிய அரசாங்கம் பல்வேறு காரணங்களைக் காட்டிக் கபட நோக்கங்களுடன் தேர்தலைப் பிற்போட்டு வருகின்றது. தேர்தலுக்கு முன்பாக மாகாணசபைக்கு ஊடாக தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய மிகக் குறைந்த பட்ச அதிகாரங்களையும் பிடுங்கிவிட வேண்டும் என்பதில் குறியாகச் செயற்பட்டு வருகின்றது.

இலங்கைத் தீவில் தனித்துவமான மொழி, பண்பாடு, பாரம்பரிய வாழிடம், ஆள்புலம் என்பனவற்றைக் கொண்டதன் அடிப்படையில் தமிழ் மக்கள் தனியானதொரு தேசம் ஆகும். ஆனால், இதனை நிராகரித்து ‘ஒரே நாடு ஒரே தேசம்’ என்று முழக்கமிட்டு வரும் பேரினவாதம் தற்போது ‘ஒரே நாடு ஒரே நிர்வாகம்’ என்று ஒடுக்கு முறையின் அடுத்த கட்டத்துக்குள் பிரவேசித்திருக்கின்றது.

இலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சிகரமான இத்தகைய திட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கான சரியான எதிர் வினைகளை ஆற்றுவதற்குக் கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.


https://www.ilakku.org/the-appointment-sinhalese-chief-secretary-north-chauvinist-oppression/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி அரசாங்கம் சிங்களவர்களை வட பகுதியில் கொண்டு நியமனம் செய்யுமளவிற்கு முன்னேறியிருக்கின்றது – எஸ்.சிறிதரன்

தமிழ் மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி, தமிழர் பகுதிகளில் பெரும்பான்மையினருக்கு உயர் நியமனங்களை அரசாங்கம் வழங்குகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாகவுள்ள நிலையை பயன்படுத்தி, அரசாங்கம் தமிழர்களை துண்டாக்கிவிட்டு. சிங்களவர்களை வடக்கு பகுதியிலும் கொண்டுவந்து நியமனம் செய்யுமளவிற்கு முன்னேறியிருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஒரு மாகாணத்தில் எந்த மொழி முதன்மை செலுத்துகின்றதோ அந்த மொழியின் அடிப்படையில்தான் நியமனங்கள் இருக்கவேண்டுமென சட்ட ஏற்பாடுகள் இருக்கின்ற நிலையில் அரசாங்கம் புதிய செயலாளரை மிகவும் வேகமாக நியமித்துள்ளதாக எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வடக்கு பொதுச் செயலாளராக 12க்கும் மேற்பட்டவர்கள் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். ஆனாலும் தகுதி குறைந்த ஒருவரை அரசாங்கம் நியமனம் செய்துள்ளமையை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார். வடக்கு மாகாண சபைக்கான பொதுச் செயலாளராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த சிங்கள மொழி பேசும் ஒருவரை இந்த அரசாங்கம் நியமித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.(15)

 

 

http://www.samakalam.com/தமிழ்-மக்களின்-ஒற்றுமையி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் புதிய பிரதம செயலரை மாற்றுங்கள்; மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள்

July 24, 2021

NPC வடக்கின் புதிய பிரதம செயலரை மாற்றுங்கள்; மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள்

வடக்கு மாகாண பிரதம செயலாளர் நியமனத்தில் உடனடியாக மாற்றம் செய்யுமாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பத் தீர்மானித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்துக்குப் புதிய பிரமத செயலாளராக சமன் பந்துலசேன ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி கலந்துரையாடி யிருந்தனர்.

இதன் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில் 13 பேர் நேரில் சமூகமளித்து ஜனாதிபதிக்கு அனுப்பும் கடிதத்தில் ஒப்பமிட்டனர். 14 பேர் தொலைபேசி மூலமாக இந்தக் கடிதத்துக்கு ஆதரவைத் தெரிவித்தனர்.

நிர்வாக மொழியான தமிழ் மொழியைக் கொண்ட வடக்கு மாகாண சபையில் மக்களினதும் அதிகாரிகளினதும் தொடர்பாடல் கருதி இப் பதவிக்குப் பொருத்தமான தமிழ் அதிகாரிகளில் ஒருவரை நியமித்து உதவுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்று கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

https://www.ilakku.org/replace-new-prime-minister-north-former-members-provincialcouncil/

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன இன்று பதவியேற்றார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன காலை 11:45 மணி சுபநேரத்தில் கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

 

saman.JPG

 

வடமாகாண பிரதம செயலாளராக கடமையாற்றிய பத்திநாதன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சமன் பந்துலசேன கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜனாதிபதியினால் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

 

01__2_.jpg

 

 வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் அதிகம் வசித்து வரும் நிலையில் தமிழ் பேசும் ஒருவர் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்படாது சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் வடக்கு மாகாணத்திற்கு பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமைக்கு அரசியல் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நிலையில் தனது கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.

 

01__3_.jpg

வடக்கு மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன இன்று பதவியேற்றார் | Virakesari.lk

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.