Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நாட்டை, விற்பதற்கோ... அல்லது இந்தியாவிற்கு, பாதிப்பு ஏற்படும் வகையிலோ... செயற்பட மாட்டேன் – டக்ளஸ்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நாட்டை, விற்பதற்கோ... அல்லது இந்தியாவிற்கு, பாதிப்பு ஏற்படும் வகையிலோ... செயற்பட மாட்டேன் – டக்ளஸ்

நாட்டை விற்பதற்கோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் தான் ஒருபோதும் செயற்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, சீன நிறுவனத்திற்கு பூனகரி கெளதாரி முனையில் அட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “சீன நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்று எமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

சீனாவின் தொழில்நுட்ப அறிவையும் பெற்று போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1230038

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஏலவே நாட்டை வித்தாச்சப்பு. நரைத்த தாடிக்கார குத்தியர் இன்னும் கோமாவில இருந்து முழுசா எழும்பவில்லை போலும். வாங்கின அடி அப்படி. 

இவர் அளவுக்கு அதிகமா உதார் விட ஆரம்பிச்சு.. விமல் வீரவன்ச ரேஞ்சில இருக்கப் போறார். காலம் சரியில்லைப் போல. 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

வேலையற்றிருக்கும் இளைஞர்களின் குடும்ப வாக்குகள் அனைத்தும் டக்ளசு ஐயாவுக்குப் போய், அவர் அடுத்த சனாதிபதியாக வந்துவிடுவாரோ என்று மகிந்த குடும்பமே கலங்கிப்போய் இருக்கிறதாம். என்று நான் பகிடியாகத்தான் எழுதினேன், அந்தாள் அதனை உண்மை என்று நம்பி இப்பவே சனாதிபதி றேஞ்சுக்கு கதைவிடுது. 😲

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அவரது நெடுநாள் கனவாயிருக்குமோ? இவரைக்கேட்டு இவரது ஒப்புதலோடுதானாம் நாட்டை விக்கிறதெண்டால் விப்பினமாம். இவர்தான் நாட்டை காட்டிக்கொடுப்பதில்லை, விற்பதில்லை என்று சூளுறைத்துவிட்டாரே. இனியும் இந்தியாவிற்கு கவலையெதற்கு? அமைதியாய் படுத்து தூங்கலாம். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

இனியும் இந்தியாவிற்கு கவலையெதற்கு? அமைதியாய் படுத்து தூங்கலாம். 

நீங்க வேற, இந்தியா தனது இந்திய மண்ணிலேயே நிம்மதியாகத் தூங்கமுடியாமல் சந்திர மண்டலத்துக்குப் போகுது.. செய்தி படிக்கவில்லையா.?? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

நீங்க வேற, இந்தியா தனது இந்திய மண்ணிலேயே நிம்மதியாகத் தூங்கமுடியாமல் சந்திர மண்டலத்துக்குப் போகுது.. செய்தி படிக்கவில்லையா.?? 

மாட்டு வண்டியிலயா? போயினம்

 • Like 1
Link to comment
Share on other sites

12 hours ago, nedukkalapoovan said:

ஏலவே நாட்டை வித்தாச்சப்பு. நரைத்த தாடிக்கார குத்தியர் இன்னும் கோமாவில இருந்து முழுசா எழும்பவில்லை போலும். வாங்கின அடி அப்படி. 

இவர் அளவுக்கு அதிகமா உதார் விட ஆரம்பிச்சு.. விமல் வீரவன்ச ரேஞ்சில இருக்கப் போறார். காலம் சரியில்லைப் போல. 

இப்படி சொல்லி சொல்லி நீங்க உருட்ட வேண்டியதுதான் அந்தாள்  அமைச்சர் ஆகிறார், எம்பி ஆகிறார்  காலம் காலமாக  அப்ப இவருக்கு ஓட்டு போடும் மக்கள் கோமாவிலா இருக்கிறாங்கள் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படி சொல்லி சொல்லி நீங்க உருட்ட வேண்டியதுதான் அந்தாள்  அமைச்சர் ஆகிறார், எம்பி ஆகிறார்  காலம் காலமாக  அப்ப இவருக்கு ஓட்டு போடும் மக்கள் கோமாவிலா இருக்கிறாங்கள் 

அந்த மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள். இவர் எங்கேயோ போயிட்டார். கனடா.. அமெரிக்கா.. பிரிட்டன்.. என்று உலகம் பூராவும் முதலீடுகளோடு. போதாததுக்கு சகோதரனும்.

இனத்துரோகிகளுக்கு...காட்டிக்கொடுப்பவர்களுக்கு எப்பவுமே எலும்புத் துண்டுகள் கிடைக்கும். ஒரு கட்டத்தில்.. அதை எஜமானன் நிறுத்தும் போதுதான் நிலைமை புரியும்.

கருணா.. இலங்கையின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவர். அவரால்.. அவரில் ஊரில் இருக்கும் மக்களின் ஏழ்மையை போக்க முடிந்ததா..????!

அவர் அங்கு கிழக்கின் விடியல் என்று காட்டிக்கொடுத்தார். இவர் இங்கு வடக்கின் வசந்தம் என்று காட்டிக்கொடுத்தார்கள்.

இவர்களுக்கு வாக்குப் போடும் மக்கள் கூட்டம்.. இப்பவும் அப்பவும் அதே ஏழ்மையில் தான். வெறும் சிறு சலுகைகளே அவர்களின் முன் பெரிதாகக் காட்டப்பட்டு வாக்குப் பறிக்கப்படுகிறது. அவ்வளவே.

இதை எல்லாம் நீங்கள் இவர்களின் மீதான மக்களின் காதல்.. ஆதரவு என்று காட்ட விரும்பினால் காட்டிக்கொள்ளுங்கள்.. இவரால்.. படுகொலை செய்யப்பட்ட.. துன்பப்பட்ட மக்கள்.. இவரை மன்னிக்க மாட்டார்கள். அதே தான் கருணா.. பிள்ளையான்.. சித்தார்த்தனுக்கும்.

சொறீலங்காவில் இருப்பது சனநாயகம் என்று நம்பும் அளவுக்கு நாங்கள் இல்லை. நீங்கள் இருக்கலாம்.. ஏனெனில்.. நீங்கள் அதற்கு சொல்லிக் கொள்வது.. நாங்கள் ஊரில் இருக்கிறம். நாங்கள் ஊரில் இருந்த போதும்.. இந்தக் கொலை கொள்ளையர்களுக்கு வாக்குப் போடுவது பற்றி சிந்தித்ததே இல்லை. இதற்கு மேல்.. உங்களுக்கு சொல்லி என்ன பயன்.. ! காலம் உங்களின் முன் துரோகிகளையும் தியாகி ஆக்கி மண்டியிட வைத்திருக்கிறது என்று நொந்து கொள்வதை விட வேறு எதுவும் இல்லை. மீண்டும் மீண்டும் இவர்களை நம்பி ஏமாறுவதை தவிர இவர்களுக்கு வாக்குப்போடும் மக்களுக்கும் வேறு பயனில்லை. 

Edited by nedukkalapoovan
 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படி சொல்லி சொல்லி நீங்க உருட்ட வேண்டியதுதான் அந்தாள்  அமைச்சர் ஆகிறார், எம்பி ஆகிறார்  காலம் காலமாக  அப்ப இவருக்கு ஓட்டு போடும் மக்கள் கோமாவிலா இருக்கிறாங்கள் 

கூட்டமைப்பினர் கூத்தாடிகளாக இருக்கும் வரையில் தோழர் டக்ளஸ் அவர்களின் காட்டில் மழை தான்.
மக்கள் உரிமைக்கு முன்னர் இப்போது  அபிவிருத்தியைத்தான் எதிர்பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாத்தியார் said:

மக்கள் உரிமைக்கு முன்னர் இப்போது  அபிவிருத்தியைத்தான் எதிர்பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன். 

அபிவிருத்தியாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்களே தவிர உரிமையை நிராகரிக்கவில்லை. மக்கள் உரிமைக்குரலை முன்கொண்டு செல்லத்தக்க தலைமையின்மையால்.. மக்கள் அந்தக் குரலை ஆக்கிரமிப்பு சூழலுக்குள் அடக்கி வாசிக்கிறார்களே தவிர..  அங்கு.. அபிவிருத்தியை நோக்கி உரிமையை கைவிட்டதாக அர்த்தப்பட வாய்ப்பில்லை.  பெரும்பான்மையான தமிழ் மக்கள் மனதில் உரிமை தொடர்பில்.. மண் தொடர்பில்.. ஒரு ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

அந்த மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள். இவர் எங்கேயோ போயிட்டார். கனடா.. அமெரிக்கா.. பிரிட்டன்.. என்று உலகம் பூராவும் முதலீடுகளோடு. போதாததுக்கு சகோதரனும்.

இனத்துரோகிகளுக்கு...காட்டிக்கொடுப்பவர்களுக்கு எப்பவுமே எலும்புத் துண்டுகள் கிடைக்கும். ஒரு கட்டத்தில்.. அதை எஜமானன் நிறுத்தும் போதுதான் நிலைமை புரியும்.

கருணா.. இலங்கையின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவர். அவரால்.. அவரில் ஊரில் இருக்கும் மக்களின் ஏழ்மையை போக்க முடிந்ததா..????!

அவர் அங்கு கிழக்கின் விடியல் என்று காட்டிக்கொடுத்தார். இவர் இங்கு வடக்கின் வசந்தம் என்று காட்டிக்கொடுத்தார்கள்.

இவர்களுக்கு வாக்குப் போடும் மக்கள் கூட்டம்.. இப்பவும் அப்பவும் அதே ஏழ்மையில் தான். வெறும் சிறு சலுகைகளே அவர்களின் முன் பெரிதாகக் காட்டப்பட்டு வாக்குப் பறிக்கப்படுகிறது. அவ்வளவே.

இதை எல்லாம் நீங்கள் இவர்களின் மீதான மக்களின் காதல்.. ஆதரவு என்று காட்ட விரும்பினால் காட்டிக்கொள்ளுங்கள்.. இவரால்.. படுகொலை செய்யப்பட்ட.. துன்பப்பட்ட மக்கள்.. இவரை மன்னிக்க மாட்டார்கள். அதே தான் கருணா.. பிள்ளையான்.. சித்தார்த்தனுக்கும்.

சொறீலங்காவில் இருப்பது சனநாயகம் என்று நம்பும் அளவுக்கு நாங்கள் இல்லை. நீங்கள் இருக்கலாம்.. ஏனெனில்.. நீங்கள் அதற்கு சொல்லிக் கொள்வது.. நாங்கள் ஊரில் இருக்கிறம். நாங்கள் ஊரில் இருந்த போதும்.. இந்தக் கொலை கொள்ளையர்களுக்கு வாக்குப் போடுவது பற்றி சிந்தித்ததே இல்லை. இதற்கு மேல்.. உங்களுக்கு சொல்லி என்ன பயன்.. ! காலம் உங்களின் முன் துரோகிகளையும் தியாகி ஆக்கி மண்டியிட வைத்திருக்கிறது என்று நொந்து கொள்வதை விட வேறு எதுவும் இல்லை. மீண்டும் மீண்டும் இவர்களை நம்பி ஏமாறுவதை தவிர இவர்களுக்கு வாக்குப்போடும் மக்களுக்கும் வேறு பயனில்லை. 

நெடுக்ஸ்... மிக அருமையான கருத்தை, 
ஆணித்தரமாக.... பதிந்து உள்ளமைக்கு நன்றி. 👏 :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கடற்கொந்தளிப்போடு சூறாவளியும் சேர்ந்து கையில் இருந்ததையெல்லாம் பிடுங்கிக்கொண்டு போக நடுக்கடலில்  நிர்க்கதியான ஒருவர் ஒரு துரும்பாவது கிடைக்காதா பற்றிக்கொண்டு கரையேறி விடலாம் என்று ஏங்கும் நிலையிலேயே மக்கள் இப்போதுள்ளனர். அநேரத்தில் பொய்யான வாக்குறுதிகளையும், நம்பிக்கைகளையும் கொடுத்து வாக்கை கொள்ளையடிக்கின்றனர். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லாதவர்கள் வேறு என்னதான் செய்யமுடியும்? எல்லா குள்ள நரிகளிடமும் ஏமாறுவதைவிட வேறு தெரிவு இல்லை. மக்களின் வாக்கை கொள்ளையடித்து கதிரை ஏறுபவர்கள் எல்லாம் யோக்கியர்கள் கிடையாது. வாக்கு போட்டவர் எல்லாம் நன்மை பெற்றவரும் கிடையாது. அவர்கள் குறைகளில் இவர்கள் இலாபம் அடைகின்றனர் அவ்வளவே.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பிபின் ராவத்தும் அவருடைய மனைவியும் போய் சேர்ந்துவிட்டதாக பிந்திக்கிடைத்த தகவலொன்று தெரிவிக்கிறது. இதை வாசிக்கும் போது IPKF நினைவுக்கு வந்து போகிறது, கொஞ்சநாளாகவே கர்மாவின் ஆட்டம் தாங்க முடியவில்லை  
  • இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் விபத்து : 7 பேர் உயிரிழப்பு ? இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. குறித்த விபத்து இந்தியாவின் தமிழ்நாடு குன்னூர் நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தி இராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான கெலிக்கொப்டரே இவ்வாறு இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த கெலிகொப்டரில் ஒன்று குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்றதாகக் கூறப்படுகிறது. அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. உடனடியாக உயிரிழப்புகள் பற்றி எதுவும் உறுதிசெய்யப்படாத போதிலும் 5 பேர் உயிரிழந்திருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கெலிகொப்டர் விழுந்த இடத்தில் மீட்பு பணியில் இந்திய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரியில் நிகழ்ந்த இராணுவ கெலிக்கொப்டர் விபத்தில் 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.  விபத்தில் சிக்கிய இராணுவ கெலிக்கொப்டரில் 14 பேர் வரை பயணம் செய்ததாகவும், அதில் பயணம் செய்த 4 இராணுவ உயரதிகாரிகளின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. இறுதி நிலைவரப்படி, முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவருடன் இராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பயணித்த எம் ஐ-வகை இராணுவ கெலிக்கொப்டர் தமிழகத்தில் கோவை அருகே விபத்துக்குள்ளானதாகவும், விபத்து நடந்த இடத்தில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.   https://www.virakesari.lk/article/118650
  • புதுடில்லி பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார் என தெரியாது; கைவிரிக்கிறார் மாவை சேனாதிராசா புதுடில்லி பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார் என்பது தெரியாது என்பதுடன் அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- December 8, 2021   “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணத்தை பிற்போடுமாறு தலைவர் இரா.சம்பந்தனே நேரடியாக இந்தியத் தூதரகத்திடம் கோரியுள்ளார். அவர் ஏன் அவ்வாறு கோரினார் என்பது எனக்கு தெரியாது. எனது மகனின் திருமணத்தை முன்னிட்டு கூட்டமைப்பின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை. நான் பங்கேற்காவிட்டாலும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் நானே கோரியிருந்தேன்.” இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. கூட்டமைப்பின் இந்தியப் பயணம் பிற்போடப்பட்டமைக்கு மாவை சேனாதிராசாவின் மகனது திருமணம்தான் காரணம் எனவும், மாவை சேனாதிராசாவே இந்தப் பயணத்தை பிற்போடுமாறு சம்பந்தனிடம் கூறினார் என்று வெளியாகிய செய்திகள் குறித்து விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலக்கு மின்னிதழ் 159 டிசம்பர் 05, 2021 | Weekly Epaper கூட்டமைப்பின் இந்தியப் பயணம் முன்னரே திட்டமிட்ட ஒன்று. எனது மகனின் திருமணமும் முன்னரே திட்டமிடப்பட்டது. எனது மகனின் திருமணத்துக்காக இந்தியப் பயணத்தை ஒத்திப்போடுமாறு கோர நான் விரும்பியிருந்தால் அதனை தலைவர் சம்பந்தனிடம் முன்னரே கூறியிருப்பேன். கடைசி நேரத்தில் அதனை ஒத்திப்போடுமாறு கோரும் தேவை எனக்கு இல்லை. எனது மகனின் திருமணத்துக்காக தமிழர் நலன் சார்ந்த விடயத்தை தள்ளிப்போடுமாறு கோரும் அளவுக்கு நான் சுயநலன் கொண்டவன் அல்லன். இந்தியப் பயணம் அறிவிக்கப்பட்டவுடன் அதில் என்னால் பங்கேற்கமுடியாது என்பதால் அங்கு நடக்கும் சந்திப்புக்களில் என்னென்ன விடயங்களை எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் நான் பேசுவதற்கும் ஆயத்தம் செய்திருந்தேன். எனது மகனின் திருமணம் என்ற ஒன்றுக்காக தமிழ் மக்களின் நலன் சார்ந்த இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்றும் நான் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு கூறியிருந்தேன். இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பு 7ஆம், 8ஆம் திகதிகளில்தான் நடைபெறவிருந்தது. எனது மகனின் திருமணம் 9ஆம் திகதியே நடைபெறுகின்றது. இந்த சந்திப்பில் நான் கட்டாயம் பங்கேற்கவேண்டும் என்று நினைத்திருந்தால் 7ஆம், 8ஆம் திகதிகளில் சந்திப்புகளில் பங்கேற்றுவிட்டு கூப்பிடு தூரத்தில் உள்ள இந்தியாவில் இருந்து உடனடியாக நாடு திரும்பி மகனின் திருமணத்திலும் பங்கேற்றிருப்பேன். ஆயினும் இந்த சந்திப்பில் நான் கட்டாயமாக பங்கேற்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அதனால்தான் அவர்களை சந்திப்பில் பங்கேற்கச் செல்லுமாறு கூறியிருந்தேன். இந்தியப் பயணத்தை ஒத்திப்போடுமாறு இரா. சம்பந்தனே இந்தியத் தூதரகத்துடன் தொடர்புகொண்டு கோரினார். அவர் ஏன் அப்படி கோரினார் என்பது எனக்கு தெரியாது. நான் தான் இந்தப் பயணத்தை பிற்போடுமாறு கோரினேன் என வெளியாகும் தகவல்கள் பொய்யானவை” என்றார்.   https://www.ilakku.org/not-known-why-sampanthan-postponed-trip-new-delhi/
  • எதிர்க்கட்சி பிரதான விவாதத்தை கூட்டமைப்புக்கு தாருங்கள் - தமிழ் தேசிய கூட்டமைப்பு (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது அமைச்சுகளுக்காக நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஆகியோர் சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அதேபோல்  வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுவதற்கு தமக்கு வாய்ப்பளிக்குமாறு கோரி ஆளும் கட்சியின் எம்.பிக்கள் 33 பேரும் சபாநாயகரிடம் கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளனர். வரவு செலவு திட்ட விவாதத்தை நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சி இணக்கம் தெரிவிக்காது சபை அமர்வுகளை புறக்கணித்து வருகின்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை கண்டித்துள்ளது.  தமக்கு சபையில் உரையாற்றவும் மக்களின் பிரச்சினைகளை முன்வைக்கவும் முடியாதுள்ளள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.  இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து அவர்கள் தமது கையெழுத்துடன் கூடிய கடிததங்களை கையளித்துள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சம்பிரதாய பூர்வமாக வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாத்தின் போது தொகைக் குறைப்பை செய்து விவாதத்தை ஆரம்பித்து வைப்பது வழமையாகும்.  ஆனால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து வருகின்ற  காரணமாக அந்த விவாதம் நடத்தப்படாது இருப்பதாகவும் இதனால் தொகைக் குறைப்பை செய்து விவாதத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பை தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும், மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான டயனா கமகேவும் சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதேவேளை வரவு செலவுத் திட்டம் மீதான எதிர்வரும் விவாதங்களில் ஆளும் கட்சிக்கான நேரத்தில் தமக்கும் நேரத்தை ஒதுக்கி அதில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்குமாறு ஆளும் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் 33 பேர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.    https://www.virakesari.lk/article/118651  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.