Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்

July 22, 2021

spacer.png

அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர்.  மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை குறித்து  சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர அலங்கார உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது. 

கொரோனா அச்சம் காரணமாக சிறிய தேரில் பஞ்சமுக பிள்ளையார் எழுந்தருளி உள்வீதி உலா வந்தார். அதன் போது எழுந்தருளி பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர்.

கொரோனா அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் ஆலயத்தினுள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் பல இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன்  சுவாமி காவியும் உள்ளனர்.

ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் பலரும் ஆலயத்தின் வெளியே நிற்க இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு சுவாமி காவிமை , குறித்த ஆலயத்தில் பல ஆண்டுகாலமாக வழிபாடு செய்து வரும் அடியவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. 

அவர்கள் தமது இயலாமையை பிள்ளையாரிடம் கூறி ஆலயத்தின் வெளியே நின்று பஞ்சமுக பிள்ளையார் , எழுந்தருளி பிள்ளையாரின் தரிசனத்தை கண்டு வீடு திரும்பினர் என இயலாமையுடன் ஆலயத்தின் அருகே வசிக்கும் அடியவர் ஒருவர் கூறினார்.

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

https://globaltamilnews.net/2021/163735

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.... சாமி குத்தமாகப்போகுது! சுத்த பத்தமில்லாமல் சாமியைத்தூக்கி, இருக்கிறதை விட இன்னும் கொட்டுன்னப்போகுது.

1 hour ago, கிருபன் said:

கொரோனா அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் ஆலயத்தினுள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் பல இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன்  சுவாமி காவியும் உள்ளனர்.

அவர்களுக்கும் அந்தப்பயம் தான். மக்களை திருப்பியாச்சு, இப்போ சுவாமியை தூக்கி சமரசம் செய்யினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2017ல் அய்யர் சொன்னார். வெளியாலை இருந்து காசு வருகுது, கோயில்கள் பெரிசாகுது. ஆனால் கோவில் மணி அடிக்க, சுத்தம் செய்ய ஆள் இல்லை. பெடியள் பிஸி.... அவையள் உந்த வேலைக்கே வரபோகினம்.

கடைசீல தென்பகுதியில் இருந்து தான் சமபளத்துக்கு ஆள் எடுக்கவேணும் போல எண்டு.

மூதூரில், ஒரு இஸ்லாமிய இளைஞர், இந்து கோவிலில் பணி செய்தார். அவர் வேலை முடிந்து செல்லும் போது, போலீசார், அவரது அடையாள அட்டையினை வாங்கி, பார்த்து, என்ன வேலை செய்கிறாய் என்று கேட்க, பிள்ளையார் கோவிலில் என்று சொல்ல, அங்கே போன் போட்டு உண்மைதானோ என்று விசாரிக்க, அவரது பெயர் ஒரு இந்து பெயராக சொல்லப்பட்டு இருப்பதனை அறிந்தனர்.

கோவில் வேலையில் இருந்து நீக்கினாலும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில், அவர் தவறு ஒன்று இழைக்கவில்லை.

இதுதான் நிலை. சாமி தூக்கவும் சிங்கள இளைஞர் தேவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையய்யா! தூக்க வந்தவர்களை வெளியில விட்டிட்டல்லே தூக்கியிருக்கினம். ஏதோ உள்ளுக்கை நடந்திருக்குது. என்ன சொல்லி சாமியை  டீல் சமாதானப்படுத்தியிருப்பினம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

இல்லையய்யா! தூக்க வந்தவர்களை வெளியில விட்டிட்டல்லே தூக்கியிருக்கினம். ஏதோ உள்ளுக்கை நடந்திருக்குது. என்ன சொல்லி சாமியை  டீல் சமாதானப்படுத்தியிருப்பினம்?

இனி ஒரு முன்னாள் புரட்சிவாதி கற்பனையில் ....அச்சுவேலியில் சாதிப்பிரச்சனை காரணமாக சிங்கள இராணுவம் சாமி தூக்க வேண்டி வந்திட்டுது ..

கட்டுரையின் தலையங்கம் ...
சாதிபிரச்சனை யாழ்நகரில் இராணுவம் சாமி காவினார்கள்:

கட்டுரை எழுதியவர் ....தலித் ராஜா....

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

இனி ஒரு முன்னாள் புரட்சிவாதி கற்பனையில் ....அச்சுவேலியில் சாதிப்பிரச்சனை காரணமாக சிங்கள இராணுவம் சாமி தூக்க வேண்டி வந்திட்டுது ..

கட்டுரையின் தலையங்கம் ...
சாதிபிரச்சனை யாழ்நகரில் இராணுவம் சாமி காவினார்கள்:

கட்டுரை எழுதியவர் ....தலித் ராஜா....

அதிக சீதனம் காதல்  காரணாமாகவும் சிங்கள இளைஞர்களை தமிழ் பிள்ளைகள் திருமணம் செய்கிறார்கள் என்று செய்தியும் அடிபடுது புத்தான்  அண்ண யாழ்ப்பாணம் மாறுகிறதா என விவாகப்பதிவாளர் வினா தொடுத்துள்ளார் என செய்தியும் வரும் .

ஆனால் நம்ம கல்யாணம் கட்டி பெட்டயை வெளிநாடு எடுப்போம் . 

எங்க போனாலும் இந்த சாதி கோதாரி பெரிய பிரச்சினை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

மூதூரில், ஒரு இஸ்லாமிய இளைஞர், இந்து கோவிலில் பணி செய்தார். அவர் வேலை முடிந்து செல்லும் போது, போலீசார், அவரது அடையாள அட்டையினை வாங்கி, பார்த்து, என்ன வேலை செய்கிறாய் என்று கேட்க, பிள்ளையார் கோவிலில் என்று சொல்ல, அங்கே போன் போட்டு உண்மைதானோ என்று விசாரிக்க, அவரது பெயர் ஒரு இந்து பெயராக சொல்லப்பட்டு இருப்பதனை அறிந்தனர்.

👆🏼இது ஆள்மாறாட்டம். பெரிய கிரிமினல் கேசெல்லோ?

நீங்கள் இப்படி சொல்லுறியள்?👇

9 hours ago, Nathamuni said:

ஏனெனில், அவர் தவறு ஒன்று இழைக்கவில்லை.

ஓ…தவறு செய்தர் இஸ்லாமிய இளைஞர் எல்லோ….அனுதாபம்கள்.

9 hours ago, Nathamuni said:

சாமி தூக்கவும் சிங்கள இளைஞர் தேவை. 

வாழை பழத்தில் ஊசி.

இங்கே சாதி பிரச்சனையாலோ, சாமி தூக்க இந்துக்கள் இல்லை என்பதாலோ ஆமி சாமி தூக்கவில்லை.

கொரோனாவை காரணம் காட்டி தூக்க வேண்டிய மக்களை வெளியே விட்டு தாங்கள் தூக்கி உள்ளார்கள்.

ஏன் ஆமிக்கி கொரோனா தொத்தாதா?

பிள்ளை தண்டில் உள்வலம் வருவதெண்டால் - ஒரு சில உள்ளூர் இளஞர்களை தேர்ந்து இதை செய்ய விட்டிருக்கலாம். பின்னர் அவர்களை தனிமை படுத்தி இருக்கலாம்.

இப்படி முஸ்லீமோ, தமிழனோ போய் தலதா மாளிகை விடயத்தில் கை வைக்க முடியுமா?

இது நிச்சயமாக கலாச்சார அழிப்பின் ஒரு பங்குதான்.

நீங்கள் தூக்கிறெண்டா… தூக்கவே வேணாம் என்று கோயில் நிர்வாகம் முடிவெடுத்திருக்க வேண்டும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, goshan_che said:

👆🏼இது ஆள்மாறாட்டம். பெரிய கிரிமினல் கேசெல்லோ?

நீங்கள் இப்படி சொல்லுறியள்?👇

ஓ…தவறு செய்தர் இஸ்லாமிய இளைஞர் எல்லோ….அனுதாபம்கள்.

வாழை பழத்தில் ஊசி.

தல, என்ன காத்தால.... வேறு ஒண்டும் சிக்கலையோ...

ஆள் மாறாட்டம், அடையாள அட்டையில் செய்யவில்லை. அதிகாரிகளுக்கும் பொய் சொல்லவில்லை.

வேலை இடத்தில், வேலைக்காக பெயரை மாத்தி சொல்வது தவறு இல்லை என்று எந்த 'ப்ராக்ட்சிங்' பிரகிரசியரையும் கேட்டால் சொல்வார்கள்... அதனை முறையாக செக் பண்ணாமல் விட்டது, கோவில்காரர் பிழை. அடையாள அட்டை கேட்டு இருக்க வேண்டும்.

அதுவே காரணமாக சொல்லி, கேஸை முடித்தார்கள் என்று இங்கே ஒரு திரியில் விலாவரியாக விவாதித்து இருக்கிறோம்.

ஓர் இருவர் செயலுக்காக, உங்களுக்கு, இஸ்லாம் மீதும், இஸ்லாமிய சமூகம் மீதும் அந்தளவு வன்மம் தேவை இல்லை. 😰

தவறாக ஒன்றை சொல்லி விட்டு, அதனை வேடிக்கையாக தான் சொன்னேன் என்று நிறுவ முயல்றீர்கள், மீண்டும், மீண்டும் தலையால் கிடங்கு கிண்ட முயல்கிறீர்கள், என்று தெரிகிறதே. 

Good luck!!

***

எனக்கு, முக்கியமான மீட்டிங் இருக்கு, உங்களுக்கு தர நேரம் இல்லை. இரவு சந்திப்போம்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

அதன் போது எழுந்தருளி பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர்.

எனக்கென்னவோ இது, பக்தரை உள்நுழைய விடாமல் தடுத்து,  பிள்ளையாரை தாங்கள் காவிக்கொண்டு புத்தரை மூலஸ்தானத்தில் வைத்தார்களோ என்று சந்தேகமாய் கிடக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

வேலைக்காக பெயரை மாத்தி சொல்வது தவறு இல்லை என்று எந்த 'ப்ராக்ட்சிங்' பிரகிரசியரையும் கேட்டால் சொல்வார்கள்... 

இஸ் இட்🤣.

கள்ள பெயரை வேலையிடத்தில் கொடுப்பது தவறில்லை என்று பிரக்கிராசி சொல்றார் எண்டா அவர் கள்ள பிரக்கிராசியாத்தான் இருக்கும்🤣.

12 minutes ago, Nathamuni said:

ஓர் இருவர் செயலுக்காக, உங்களுக்கு, இஸ்லாம் மீதும், இஸ்லாமிய சமூகம் மீதும் அந்தளவு வன்மம் தேவை இல்லை. 😰

அவர்கள் மீது ஒரு வன்மமும் இல்லை. ஓரிருவர் புலம் பெயர் தமிழ் அரசியலை குழப்பி அடிக்கும் கைங்காரியத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மேல்தான் ஒரு இது. 

14 minutes ago, Nathamuni said:

தவறாக ஒன்றை சொல்லி விட்டு, அதனை வேடிக்கையாக தான் சொன்னேன் என்று நிறுவ முயல்றீர்கள், மீண்டும், மீண்டும் தலையால் கிடங்கு கிண்ட முயல்கிறீர்கள், என்று தெரிகிறதே

எதையும் வேடிக்கையாக சொல்லவே இல்லை. சொல்வதெல்லாம் உண்மை.

15 minutes ago, Nathamuni said:

எனக்கு, முக்கியமான மீட்டிங் இருக்கு, உங்களுக்கு தர நேரம் இல்லை. இரவு சந்திப்போம்.

எனக்கு வேலை எதுவும் இல்லை. டே அண்ட் நைட். வாங்கோ பேசுவம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இனி ஒரு முன்னாள் புரட்சிவாதி கற்பனையில் ....அச்சுவேலியில் சாதிப்பிரச்சனை காரணமாக சிங்கள இராணுவம் சாமி தூக்க வேண்டி வந்திட்டுது ..

கட்டுரையின் தலையங்கம் ...
சாதிபிரச்சனை யாழ்நகரில் இராணுவம் சாமி காவினார்கள்:

கட்டுரை எழுதியவர் ....தலித் ராஜா....

சிங்கள இராணுவத்திற்கு அச்சுவேலி சித்திவிநாயர் மேலே ஒரு ஈர்ப்பு இருக்கு. 😘

இது மூன்று  வருடங்களுக்கு முன்னர்👇🏾

 

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

முறையாக செக் பண்ணாமல் விட்டது, கோவில்காரர் பிழை. அடையாள அட்டை கேட்டு இருக்க வேண்டும்.

இந்த கருத்துடன் உடன்படுகிறேன்.. பொதுவாக வேலைக்கு ஊழியர்களை அமர்த்தும்பொழுது அவர்களைப்பற்றி ஆராய்ந்து வேலைக்கு எடுப்பார்கள். இங்கே கோயில் நிர்வாகம் அதை சரிவர செய்யவில்லை. 

 

2 hours ago, Nathamuni said:

வேலை இடத்தில், வேலைக்காக பெயரை மாத்தி சொல்வது தவறு இல்லை என்று எந்த 'ப்ராக்ட்சிங்' பிரகிரசியரையும் கேட்டால் சொல்வார்கள்... 

அதேபோல ஒருவர் வேலைக்காக பெயர் மாற்றும் பொழுது பெயர் மாற்றிய ஆவணம் தொடங்கி அடையாள அட்டை வரை மாற்றப்பட்டிருக்கும்.. இது பொதுவான ஒன்று.. 

ஆனால் வேலைக்காக பெயர் மாற்றுவதை ஒரு பிரகிரசியர் தவறில்லை என கூறுவார் என்பது மீண்டும் ஒரு தவறான விளக்கம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இஸ் இட்🤣.

கள்ள பெயரை வேலையிடத்தில் கொடுப்பது தவறில்லை என்று பிரக்கிராசி சொல்றார் எண்டா அவர் கள்ள பிரக்கிராசியாத்தான் இருக்கும்🤣.

அவர்கள் மீது ஒரு வன்மமும் இல்லை. ஓரிருவர் புலம் பெயர் தமிழ் அரசியலை குழப்பி அடிக்கும் கைங்காரியத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மேல்தான் ஒரு இது. 

எதையும் வேடிக்கையாக சொல்லவே இல்லை. சொல்வதெல்லாம் உண்மை.

எனக்கு வேலை எதுவும் இல்லை. டே அண்ட் நைட். வாங்கோ பேசுவம்.

 

கோசன் சா என்ற பெயரில், யாழில் முழு நேரமாக வேலை செய்ய, பிராக்கிரசியரின் ஆலோசனை கேட்டனியலோ?

மூதூர் பிள்ளையார் கோவிலில், கோயில் மணி அடிக்க, புக்கை கிண்ட, வாற ஆளுக்கு பிரகிராசி ஆலோசனை.... தேவைதான்...

உங்களுக்கு வேலை இல்லை.... தெரியும்... உங்கள் தமிழுணர்வு குறித்து இந்த தளம் அறியும்.

ஆகவே... நிதானமாக பேசினால் அன்றி, பதிலும் இல்லை. 

நன்றி.

12 minutes ago, கிருபன் said:

சிங்கள இராணுவத்திற்கு அச்சுவேலி சித்திவிநாயர் மேலே ஒரு ஈர்ப்பு இருக்கு. 😘

இது மூன்று  வருடங்களுக்கு முன்னர்👇🏾

 

spacer.png

உந்த பொட்டையள், உந்த மாதிரி, இளிச்சுக்கொண்டு நிண்டால், சுழட்டமால், வேற என்ன தான் செய்வார்கள்?  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
31 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த கருத்துடன் உடன்படுகிறேன்.. பொதுவாக வேலைக்கு ஊழியர்களை அமர்த்தும்பொழுது அவர்களைப்பற்றி ஆராய்ந்து வேலைக்கு எடுப்பார்கள். இங்கே கோயில் நிர்வாகம் அதை சரிவர செய்யவில்லை. 

 

அதேபோல ஒருவர் வேலைக்காக பெயர் மாற்றும் பொழுது பெயர் மாற்றிய ஆவணம் தொடங்கி அடையாள அட்டை வரை மாற்றப்பட்டிருக்கும்.. இது பொதுவான ஒன்று.. 

ஆனால் வேலைக்காக பெயர் மாற்றுவதை ஒரு பிரகிரசியர் தவறில்லை என கூறுவார் என்பது மீண்டும் ஒரு தவறான விளக்கம்..

இது தொடர்பில் இங்கே திரியே ஓடியது.

நீங்கள் உங்கள் கருத்துக்களை பொத்தாம், பொதுவாக இடுகிறீர்கள், விடயத்தினை விளங்காமல் என்று நினைக்கிறேன்.

எனது கருத்து, இந்த கோவில் வழக்கு சம்பந்தமானது மட்டுமே. அதனை. என்னை முட்டாள் ஆக்க ஒருவர், பொதுக்கருத்தாக சொன்னதாக காட்டி விட முனைகிறார்.

எனக்கு பசி, பயங்கர பசி, திருட விரும்பவில்லை. கோவிலுக்கு போகிறேன், ஏதாவது பொங்கல், வடை கிடைக்கும் என்று. அய்யா எல்லாம் முடிந்து விட்டதே என்கிறார்.

இங்க வாப்பா, இந்தா இரண்டு ரூபா... அந்த கடையில ஒரு பணிஸ் வாங்கி சாப்பிட்டு, வந்து இந்த பாத்திரத்தை கழுவு, கோயிலை கூட்டு, சாப்பாடுக்கு காசு தருகிறேன் என்கிறார்.

ஓமோம் என்கிறேன்... கூடவே என்ன பெயர் தம்பி என்கிறார். விவேகத்துடன் ஒரு பெயரை சொல்கிறேன்.

வேலை கிடைக்கிறது, வயிறும் நிரம்புகிறது.

போலீசார் இடையே மறித்து, விசாரிக்க வேலை போகிறது.... பசியால் வேலைக்காக, அவர் சொன்ன பெயரில் தவறில்லை என்று முடிவாகிறது.

இதில் என்ன தவறு என்கிறீர்கள்?

சிலர், விதாண்டவத்துக்கு, அலம்பறை செய்ய விரும்பினால், இலங்கை போய் அந்த வழக்கினை எடுத்து, நியாயம் பிளக்கட்டும்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

15 hours ago, கிருபன் said:

 

அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர்.  மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை குறித்து  சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

 

3 hours ago, putthan said:

இனி ஒரு முன்னாள் புரட்சிவாதி கற்பனையில் ....அச்சுவேலியில் சாதிப்பிரச்சனை காரணமாக சிங்கள இராணுவம் சாமி தூக்க வேண்டி வந்திட்டுது ..

 

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத தீண்டத்தகாதவர்களையும் பிரித்தறிய செய்யும் முறை இது. 

நாம் சாதி ரீதியிலான, பிற்போக்குத்தனமான விடயங்களை மரபு என்று இன்னும் தூக்கித் திரியும் போது, அந்த இடைவெளிகளில் எதிரிகள் புகுந்து கொள்கின்றனர்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

எனக்கு பசி, பயங்கர பசி, திருட விரும்பவில்லை. கோவிலுக்கு போகிறேன், ஏதாவது பொங்கல், வடை கிடைக்கும் என்று. அய்யா எல்லாம் முடிந்து விட்டதே என்கிறார்.

இங்க வாப்பா, இந்தா இரண்டு ரூபா... அந்த கடையில ஒரு பணிஸ் வாங்கி சாப்பிட்டு, வந்து இந்த பாத்திரத்தை கழுவு, கோயிலை கூட்டு, சாப்பாடுக்கு காசு தருகிறேன் என்கிறார்.

ஓமோம் என்கிறேன்... கூடவே என்ன பெயர் தம்பி என்கிறார். விவேகத்துடன் ஒரு பெயரை சொல்கிறேன்.

வேலை கிடைக்கிறது, வயிறும் நிரம்புகிறது.

போலீசார் இடையே மறித்து, விசாரிக்க வேலை போகிறது.... பசியால் வேலைக்காக, அவர் சொன்ன பெயரில் தவறில்லை என்று முடிவாகிறது.

இதில் என்ன தவறு என்கிறீர்கள்?

சிலர், விதாண்டவத்துக்கு, அலம்பறை செய்ய விரும்பினால், இலங்கை போய் அந்த வழக்கினை எடுத்து, நியாயம் பிளக்கட்டும்.

இனப்பாசம் மேலிட்டதாலோ என்னமோ - தமிழ் சினிமா ரேஞ்சுக்கு ஏழ்மை, பசி என திரைகதை எழுதி ஆள்மாறட்டம் செய்த நபருக்கு வக்காலத்து வாங்கிறீர்கள்.

ஏதோ ஒரு ஊரில் இருந்து பஸ் காசு கொடுத்து, பஸ் பிடித்து மூதூர் வருவதை விட்டு விட்டு, அந்த காசில் பணிஸ் வாங்கி சாப்பிடலாமே?

பள்ளிவாசலில் இல்லாத உதவியா? நான் ஒரு முஸ்லீம், பண கஸ்டத்தால் கோவிலில் வேலை செய்ய உத்தேசிக்கிறேன் என சொன்னாலே ஓடி வந்து உதவி செய்வார்கள்.

இலங்கையில் வேற வேலையே இல்லையா? கோவில் ஊழியத்தை தவிர?

அவரவருக்கு அவர் மத நம்பிக்கை புனிதமானது. தமது கோவில், பள்ளிவாசல் விடயங்களை தம் மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களே செய்ய வேண்டும் என விரும்புவது ஓர் அடிப்படை உரிமை.

நீங்கள் முன்பு ஒரு திரியில் CV யில் பொய் சொல்லுங்கள் என்று அட்வைஸ் கொடுத்த ஆள்.

அதே திரியில், நம்பி வேலை தந்த முன்னாள் முதலாளி வேலையை விட்டு நீக்கும் போது அவர் சிஸ்ட்ச்த்தில் சில “கண்ணி வெடிகளை” வைத்து விட்டு வருவதாகவும் சொன்னீர்கள். 

ஆகவே இந்த நபர் செய்தது உங்களுக்கு பெரிதாக தெரியாது - ஆனால் நிச்சயம் இது நம்பி கோவிலுக்கு போகும் மக்களின் மனதை புண்படுத்தவே செய்யும்.

42 minutes ago, Nathamuni said:

ஆகவே... நிதானமாக பேசினால் அன்றி, பதிலும் இல்லை

மன்னிக்கவும் நான் யாரின் பதிலை எதிர்பார்த்தும் எழுதுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

 

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத தீண்டத்தகாதவர்களையும் பிரித்தறிய செய்யும் முறை இது. 

நாம் சாதி ரீதியிலான, பிற்போக்குத்தனமான விடயங்களை மரபு என்று இன்னும் தூக்கித் திரியும் போது, அந்த இடைவெளிகளில் எதிரிகள் புகுந்து கொள்கின்றனர்.

இல்லை, நிழலி....

ஆறுமுக நாவலர் காலத்தில் இருந்தே, ஆண்கள் மேலாடை அணியக்கூடாது என்று வழக்கம் வந்து விட்டது.

மேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோவில் உள்ளே அனுமதி இல்லை. பிறகு என்ன, மேலாடை பிரச்சனையாக இருந்திருக்க முடியும்?

இன்னும் ஆழ்ந்து பார்த்தால், இந்த மேலாடை இலலாமல் கோவிலில் வணங்கும் வழக்கம், கேரளத்தில் உள்ளது. தமிழகத்தில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத

இதை பற்றி சரியாக தெரியவில்லை. ஆனால் சேர்ட் போடும் பழக்கம் ஐரோப்பிய செருகல்தானே? அதுக்கு முதல் வேட்டி, சால்வை?

ஆகவே இது ஒரு பழமை பேணும் முனைப்பாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
43 minutes ago, Nathamuni said:

இது தொடர்பில் இங்கே திரியே ஓடியது.

நீங்கள் உங்கள் கருத்துக்களை பொத்தாம், பொதுவாக இடுகிறீர்கள், விடயத்தினை விளங்காமல் என்று நினைக்கிறேன்.

எனது கருத்து, இந்த கோவில் வழக்கு சம்பந்தமானது மட்டுமே

👇🏼நீங்கள் கூட இங்கே “ வேலையிடத்தில் , வேலைக்காக” என பொதுவாகத்தானே எழுதினீர்கள்? அதற்குத்தான் என் பதில் கருத்து.. 

“இந்த கோயில் வழக்கில், இந்த வேலைக்காக” என்று கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கலாம்.. 

3 hours ago, Nathamuni said:

வேலை இடத்தில், வேலைக்காக பெயரை மாத்தி சொல்வது தவறு இல்லை என்று எந்த 'ப்ராக்ட்சிங்' பிரகிரசியரையும் கேட்டால் சொல்வார்கள்...

மேலும் உங்களுடைய உதாரணத்தில் வருபவர் விவேகமானவராக இருந்திருந்தாலும் அந்த விவேகம் அவருக்கு நீண்ட நாட்களுக்கு உதவவில்லை.. அவ்வளவுதான்

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வேலை இல்லாதவர்களுக்கு, CV யில் என்ன சொல்வது என்று என்னத்தை புரியும்.

நான் மாதம் குறைந்தது மூன்று பேருக்கு, வேலைக்கு, CV தயாரிப்புக்கு உதவுகிறேன். வேலையும் எடுக்கிறார்கள். இப்போது தான் ஒரு நேர்முக தேர்வு செய்து, ஒருவர் குறித்த எனது அபிப்பிராயம் சொல்லி வந்தேன்.

நிறுவனங்களில், CV குறித்தும் அதிலுள்ள உண்மைத்தன்மை குறித்து சொல்லி, எப்படி சரியானவர்களை அதனூடு தெரிவு செய்வது என்று டிரைனிங் கொடுக்கிறார்கள். எனக்கும் அந்த ட்ரெயினிங் தரப்பட்டுள்ளது.

முதலில் cv யில் எத்தனை பேர் உண்மை சொல்கிறார்கள் என்று பிரித்தானியாவில் சொல்லப்படும் சர்வே பார்க்கட்டும்.

வீட்டில் குந்தி இருந்து கொண்டு நியாயம் மட்டுமே பிளக்கலாம். யாழில் முழங்காலம். பிரயோசனம் இல்லை.

எனக்கு வேலை இல்லை என்று சொல்லிக்கொண்டே, cv குறித்து அலம்பறை பண்ணுவது வெறும் வெத்து வேட்டுதான்.

இதோ, கொரோனோ லொக்கடவுன் முடிந்து விட்டது. வரப்போகின்றனர் இந்தியர்கள். பட்டேலும், ரிஷியும் (மாமாவின் நிறுவனம் இன்போர்சிஸ்) போரிஸ்க்கு மண்டை கழுவி கதவு திறந்து விட்டாச்சு.

நாம cv ல அதை பண்ணாத, பிடுங்காத எண்டு பிளந்து கட்டுவம் எல்லோ. moral வகுப்பு எடுக்கினம், வேலை என்றால் என்ன என்று தெரியாதவயல்.

அக்கௌன்டன்ட் மார் தமது வேலைகளை IT கொண்டு போகுது என்று உணர்வு இல்லாமல் உள்ளனர்.  அந்த IT யுடன் வரப்போகின்றனர் வெளிநாடுகளில் இருந்து. என்னால் முடிந்த அளவுக்கு உதவுகிறேன்.

இருவர் இப்போது உதவி பெறுகின்றனர். ஒருவர் history டிகிரி. அடுத்தவர் accounting & finance: லண்டன் UCL படிப்பு, அனால் 2-2 வில் பாஸ். பிரயோசனம் இல்லை. ஆனால் IT யில் வேலை எடுக்க முடியும் என்று அவர்களை ஆர்வத்துடன் முயலவைக்கிறேன்.

இருவரும் இங்கே பிறந்தவர்கள், ஒருவர் காபி ஊத்துகிறார், இன்னோருவர் பெற்றிங்  கடையில் வேலை.... இதனை cv யில் சொன்னால் வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள். அல்லது, உங்கள் உதவி தேவை இல்லை, அவர்கள் அப்படியே வேலை செய்யட்டும் என்றாவது சொலுங்கள்.

ஆகவே வேலை இருப்பவர்களும், வேலை இல்லாதவர்களும், தயவுடன் உங்கள் கருத்துக்களை ஒரு ஓரமாக வைக்கவும்.

*

cv யில் பொய் சொல்வது என்பதை இங்கே பலர், அப்படியே எடுத்துக்கொள்கிறார்கள் போலுள்ளது. பொய் என்பது, இல்லாத கல்வித்தகுதியை இருப்பதாக சொல்வதல்ல. அது எனது professional ethics கும் இல்லை.

உதாரணமாக, நான் ஒரு சாப்ட்வேர் பயிட்சி கொடுத்தால், அவர் அதில் தேர்ச்சி அடைந்த பின்னர், ஒரு நண்பரின் நிறுவனத்துக்கு அனுப்புவது, அந்த நிறுவனம் இந்தியவாவிலோம இங்கிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ இருப்பார். அவரது அலுவலகத்தில் ஒரு மாதம் வேலை செய்தால் cv யில் 6 மாதம் என்று போடுவார். அந்த 6 மாதத்துக்கான கடும் முயல்வினை அந்த ஒரு மாதத்தில் எடுப்பார்.

இப்போது, வேலை ஓன்லைனினில் நடக்கிறது.

ஆகவே, கூடுதலாக யோசித்து, அறம் போதிக்க வேண்டாமே.

43 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

மேலும் உங்களுடைய உதாரணத்தில் வருபவர் விவேகமானவராக இருந்திருந்தாலும் அந்த விவேகம் அவருக்கு நீண்ட நாட்களுக்கு உதவவில்லை.. அவ்வளவுதான்

துரதிஷ்ட்டம், வேலையை நன்றாக செய்தார். மேலும் அதிகாரிகளுக்கு பொய் சொல்லவில்லை.

இது நடந்த வழக்கு, பத்திரிகையில் வந்தது, இங்கேயும் விவாதித்து இருக்கிறோம்.

ஆனால், ஏதோ கதை போல, அப்படி இருக்காதோ, இப்படி இருக்காதோ என்று ஒருத்தர், கதை விட்டு, குழப்புகிறாரே...

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

ஆகவே வேலை இருப்பவர்களும், வேலை இல்லாதவர்களும், தயவுடன் உங்கள் கருத்துக்களை ஒரு ஓரமாக வைக்கவும்.

என்னை பிரகராசி என்றீர்கள். இன்னொரு திரியில் ஒன்லைனில் எதோ செய்கிறேன் என்றீர்கள். பின்னர் யாரோ எனக்கு ஊதியம் தந்து யாழில் எழுகிறேன். இடையில் டியூசன் டீச்சர். இப்போ வேலையில்லாதவன்.

ஓவரா சுத்தவிட்டாச்சு போல 🤣.

ஆனால் CVயில் பொய் சொல்ல கற்றுகொடுக்கும் உங்களுக்கு இதில் உள்ள   Ethics, moral பிரச்ச்னைகள் ஒரு பொருட்டல்ல என்பது தெரிந்ததுதான்.

நம்பி வேலை கொடுத்தவனுக்கு சிஸ்டத்யில் “கண்ணி வெடி சொருகிவிட்டேன்” என மார்தட்டி சொல்லும் நபர்களுக்கு moral compass பழுது என்பது தெரிந்ததுதான்.

இல்லாவிடில் மகள் வயதை ஒத்த ஐயரின் பள்ளி சிறுமி மகளுக்கு ஒரு லைன் போடாமல் விட்டு விட்டோமே என்று எழுத கை வந்திருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, goshan_che said:

இல்லாவிடில் மகள் வயதை ஒத்த ஐயரின் பள்ளி சிறுமி மகளுக்கு ஒரு லைன் போடாமல் விட்டு விட்டோமே என்று எழுத கை வந்திருக்காது.

நீங்கள் நிதானத்தில் இல்லை. அய்யர் அம்மா கதை மிக, மிக பழையது.

மகளோ? 🥴 ஏன் உங்கள் சிந்தனை இப்படி தறி கெட்டு ஓடுகிறது?

இன்று மோத வேண்டும் என்று வேலை மினக்கெட்டு வந்து, ஏதோ மனதில் வருவதை எல்லாம் அலம்புகிறீர்கள்...

நல்லது, இன்னுமோர் மீட்டிங். நேர்முகம் தான்...பார்ப்போம். வருகிறேன்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

நீங்கள் நிதானத்தில் இல்லை. அய்யர் அம்மா கதை மிக, மிக பழையது. மகளோ? 🥴

சரி உங்கள் வயது ஒத்தபள்ளி சிறுமியா?

அப்போ தனது மகள் விபரத்தை- ஐயர் இன்னொரு பள்ளி சிறுவனிடமா விபரித்தார்? இல்லைத்தானே?

ஒரு மனிதன் தனது மகள் கற்பமாவது என்றால் என்னவென்றே தெரியாத ஒரு அப்பாவி எனும் (உங்களை விட வயது குறைந்த பெண்) விபரத்தை உங்களிடம் நம்பி பகிர்கிறார்.

சாதாரணமாக moral compass வேலை செய்பவத்களுக்கு ஐயோ பாவமே என்று தோன்றும். 

சே, சான்சை தவறவிட்டோமோ? என்று எண்ணி அதை ஒரு இணையதளத்திலும் எழுதுபவர்?

நீங்கள் நிதானாம் பற்றி எழுதலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
55 minutes ago, Nathamuni said:

ஆகவே, கூடுதலாக யோசித்து, அறம் போதிக்க வேண்டாமே.

அறம் என்பதை போதிக்க எனக்கு முதிர்ச்சி இல்லை ஆனால் morale பிழை என என் கண்ணில் படுவதை பற்றி எழுதுகிறேன் .. அவ்வளவுதான்.. 

நன்றி..

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, goshan_che said:

சரி உங்கள் வயது ஒத்தபள்ளி சிறுமியா?

அப்போ தனது மகள் விபரத்தை- ஐயர் இன்னொரு பள்ளி சிறுவனிடமா விபரித்தார்? இல்லைத்தானே?

ஒரு மனிதன் தனது மகள் கற்பமாவது என்றால் என்னவென்றே தெரியாத ஒரு அப்பாவி எனும் (உங்களை விட வயது குறைந்த பெண்) விபரத்தை உங்களிடம் நம்பி பகிர்கிறார்.

சாதாரணமாக moral compass வேலை செய்பவத்களுக்கு ஐயோ பாவமே என்று தோன்றும். 

சே, சான்சை தவறவிட்டோமோ? என்று எண்ணி அதை ஒரு இணையதளத்திலும் எழுதுபவர்?

நீங்கள் நிதானாம் பற்றி எழுதலாமா?

கடுப்பேறவில்லை, மை லோட்..

உங்களுக்குத்தான் நேரம் இருக்குதே.... ஏதையாவது போட்டு உருட்டி விளாட வேண்டும் எண்டு நான் அப்பப்ப உருட்டி விடுற தேங்காய், உதவுறது மகிழ்ச்சி.

டொட்டடோய்ங்.... தல, லீவைப் போட்டுட்டு கிளம்பப்போறார்.

அதுதான் என்னோட விளாடுடார்.....

நம்மள விட்டுட்டு போகாதீங்கப்பு.... அப்புறம்.... கூல்டவுண் ஆக எங்கை போறதாம். 😂

11 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அறம் என்பதை போதிக்க எனக்கு முதிர்ச்சி இல்லை ஆனால் morale பிழை என என் கண்ணில் படுவதை பற்றி எழுதுகிறேன் .. அவ்வளவுதான்.. 

நன்றி..

நீங்கள், வேற... இதுக்குள நிண்டு..... புரியாமல் ஏதோ சொல்லிக் கொண்டு......

நன்றி.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையினை, ஜனாதிபதி நீக்க வேண்டும்- துரைரெட்ணம் கோரிக்கை புலம்பெயர் அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் அவர்கள் மீதான தடையினை முதலில் ஜனாதிபதி நீக்கவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.துரைரெட்ணம் மேலும் கூறியுள்ளதாவது, “இனவாதங்கள் பேசி தாங்கள் நினைத்ததை செய்துவிடலாம் என்ற இறுமாப்போடு இருந்த நிலையில், ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்றமை பெரிய விடயமாகும். இராஜதந்திர ரீதியாக உள்வாங்கப்பட்டு உள்நுழைவதென்பது பல விடயங்களை சாதகமாக கொண்டுவருவதற்கான சந்தர்ப்பங்களாகும். இதேவேளை புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழர் விவகாரம் தொடர்பாக அழைப்பு விடுத்தது, இலங்கையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக அதனை உள்விவகாரம் என்று சொல்வது எந்தளவிற்கு சரியானது என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது. யுத்தத்தில் தமிழர்களால் இனப்படுகொலை நடந்திருக்கின்றது என்று கூறுகின்ற நிலைமையில் இறந்தவர்களுக்கு மரணப் பத்திரம் வழங்க முடியும் என்று ஜனாதிபதி கூறிய விடயங்கள் தமிழ் மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஆனால் பிரச்சினையை தீர்க்கக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பிற்குள் போனதென்ற விடயத்தில் சில சாதகமான விடயங்கள் இருக்கின்றன. ஆனாலும் அதில் ஆபத்தான விடயங்களும் உள்ளன.ஜனாதிபதி புலம்பெயர் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்ததற்கு அப்பால் ஜனாதிபதி இலங்கை அரசாங்கம் ஊடாக பல நாடுகளில் செயற்பட்டுவந்த சில அமைப்புகளுக்கு தடைவித்திக்கப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்த சில அமைப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த விவகாரம் எந்தளவுக்கு நியாயமானது. அந்த புலம்பெயர் அமைப்புகளை தமிழர் விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு அழைப்பு விடுவது என்பது ஒன்றுக்கொன்று முரண்பட்ட விடயமாகவுள்ளது. ஆகவே, ஜனாதிபதி முதலில் புலம்பெயர்ந்த அமைப்புகள் மீது விதித்துள்ள தடைகளை நீக்குவதன் ஊடாக அந்த அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளன. மேலும், விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு செயல்வடிங்களை அரசாங்கம் கொடுக்கவேண்டும். இதேவேளை உள்ளகப்பொறிமுறையென்று கூறும் விடயங்களில் தமிழர்களுக்கு பல கேள்விகள் உள்ளது. தமிழர்களைப் பொறுத்தரையில் இறுதி இனப்படுகொலை நடைபெற்ற காலப்பகுதியில் இன்றுள்ள ஜனாதிபதியே பல அதிகாரங்களை கொண்டிருந்தார். இவ்வாறான ஒருவர், தொடர்ச்சியாக உள்ளகப்பொறிமுறைதான் அமுலுக்கு வரவேண்டும் என்று சொல்வதை தமிழ் மக்கள் நிராகரிக்கின்றார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1241213
    • PBKS vs SRH: பஞ்சாபை இரக்கமின்றி பந்தாடிய ஜேசன் ஹோல்டர் - இருப்பினும் தோல்வி கண்ட ஹைதராபாத் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BCCI/IPL   படக்குறிப்பு, பஞ்சாப் ஓப்பனர்கள் ஐபிஎல் 2021 சீசனுக்கான 37ஆவது போட்டி நேற்று (செப் 25, சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டி சான்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டி என்பதை விட ஜேசன் ஹோல்டர் மற்றும் பஞ்சாபுக்கு எதிரான போட்டி எனலாம். அந்த அளவுக்கு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பிரமாதப்படுத்தினார் ஹோல்டர். இருப்பினும் ஹைதராபாத் அணியால் போட்டியை வெல்ல முடியவில்லை என்பது தான் வருத்தமான செய்தி. பஞ்சாப் பேட்டிங் - சரிந்த விக்கெட்டுகள் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் என இரு முக்கிய பேட்ஸ்மென்களையும் தன் 4ஆவது ஓவரில் வீழித்தி பெவிலியன் அனுப்பினார் ஜேசன் ஹோல்டர். அடுத்து வந்த க்ரிஸ் கெயிலை ரஷீத் கானும், கொஞ்சம் பஞ்சாப் அணியின் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்துக் கொண்டிருந்த ஏய்டன் மக்ரமை அப்துல் சமத்தும் வீழ்த்தினர். RCB vs CSK: ப்ராவோ உடைத்த பெங்களூரு அரண், அனாயாசமாக பெங்களூரை பந்தாடிய சென்னை MI Vs KKR: ரஜினி 'பக்தரின்' அதிரடி; ரோஹித் படைத்த வரலாறு பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களான நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா ஆகியோரையும் ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் நிலை பெறவிடாமல் வீழ்த்தினர். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை மட்டுமே குவித்திருந்தது பஞ்சாப். ஹைதராபாத்தின் பந்துவீச்சாளர்களில் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களுக்கு 19 ரன்களை மட்டும் கொடுத்து கே எல் ராகுல், மயங்க் அகர்வால், தீபக் ஹூடா என 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். சந்தீப் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், அப்துல் சமத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். சொதப்பிய பேட்ஸ்மென்கள் - சிக்ஸர் மழை பொழிந்த ஜேசன் பட மூலாதாரம்,BCCI/IPL   படக்குறிப்பு, கேன் வில்லியம்சன் 126 ரன்களைக் குவித்தால் வெற்றி என்கிற எளிய இலக்கோடு களமிறங்கிய ஹைதராபாத்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களான டேவிட் வார்னர் (2 ரன்கள்), கேன் வில்லியம்சன் (1 ரன்), ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். கடந்த முறை டெல்லிக்கு எதிரான போட்டியிலும் டேவிட் வார்னர் வெகு சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. விரித்திமான் சாஹா மட்டுமே 37 பந்துக்கு 31 ரன்களை அடித்து ஹைதராபாத் அணியை நிலை பெறச் செய்தார். மணீஷ் பாண்டே (13 ரன்கள்) , கேதர் ஜாதவ் (12 ரன்கள்), அப்துல் சமத் (1 ரன்) ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களும் நிலைபெற்று ரன் குவிப்பில் இறங்கவில்லை. பட மூலாதாரம்,BCCI/IPL   படக்குறிப்பு, ஜேசன் ஹோல்டர் 14ஆவது ஓவரில் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் தான் ஹைதராபாத்தின் ரன் ரேட்டை அதிகரிக்கத் தொடங்கினார். 29 பந்துகளில் 47 ரன்களைக் குவித்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடக்கம். கடைசி வரை தன் விக்கெட்டையும் பறிகொடுக்காமல் விளையாடி ஹைதராபாத்தை ஒரு கெளரவமான ஸ்கோருக்கு நகர்த்தினார் ஜேசன் ஹோல்டர். ஹைதராபாத்தின் பேட்ஸ்மென்கள் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல் நிறைய பந்துகளையும் வீணடித்தனர். இந்த போட்டியில் ஜேசன் ஹோல்டர், கேதர் ஜாதவ் தவிர ஹைதராபாத் அணியில் யாருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் 85 சதவீதத்துக்கு மேல் இல்லை. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத்தால் 120 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. பட மூலாதாரம்,BCCI/IPL   படக்குறிப்பு, மொஹம்மத் ஷமி பஞ்சாபின் அனுபவமிக்க பந்துவீச்சாளரான மொஹம்மத் ஷமி, டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சனின் விக்கெட்டுகளை வீழ்த்தி டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களை பெவிலியன் அனுப்பினார். மணீஷ் பாண்டே, கேதர் ஜதவ், அப்துல் சமத் என ஹைதராபாத்தின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களை பிட்சிலிருந்து வெளியேற்றினார் ரவி பிஷ்னோய். ராஜஸ்தான் உடனான போட்டியில் 5 விக்கேடுகளை வீழ்த்திய அர்ஷ்தீப், இப்போட்டியில் விரித்திமான் சாஹாவின் விக்கெட்டை வீழ்த்தி பஞ்சாபின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தார். 125 என்கிற குறைந்த ஸ்கோரை மட்டுமே அடித்திருந்தாலும், அதை திறம்பட டிஃபெண்ட் செய்ததில் பஞ்சாபின் இந்த மூன்று பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 5ஆவது இடத்தை பிடித்திருக்கிறது. ஹைதராபாத் அணி கடைசி இடத்திலேயே தொடர்கிறது. https://www.bbc.com/tamil/sport-58695821
    • மன்னாரில்... பங்குதந்தைக்கும், விவசாயிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம்! மன்னார்-மடு, பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் விவசாயிகளுக்கும் பெரிய பண்டிவிரிச்சான் பங்கு தந்தைக்கும் இடையில், வயல் காணியில் வைத்து நேற்று (சனிக்கிழமை) வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த விவசாயிகள் 40 வருடங்களுக்கு மேலாக குறித்த வயல் காணியில் விவசாயம் செய்து வருகின்றபோதும் அந்த பணியை தமக்கு வழங்குமாறு மடு ஆலய நிர்வாகம், விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. இதன் விளைவாக தொடர்ச்சியாக விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த விடயத்துக்காக போராடி வருகின்றனர். மேலும், மாகாண காணி ஆணையாளர் மற்றும் வட மாகாண ஆளுநர் அவருடைய அனுமதியின் பெயரில் விவசாயிகள் குறித்த வயல் காணியை உழவு செய்து பயிர் செய்ய தயாராகி வருகின்ற நிலையில், அத்துமீறி பிரவேசித்த பங்குத்தந்தை, மடு தேவாலயத்தில் வேலை செய்கின்ற சிலரும் இரண்டு உழவு இயந்திரங்களில் வருகைதந்து அத்துமீறி விவசாய காணிகளை உழவு செய்ய முற்பட்டனர் . இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பங்கு தந்தைக்கும் விவசாயிகளுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதன்தொடர்ச்சியாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பங்கு தந்தை  குறித்த வயல் காணியை விட்டு வெளியேறி சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2021/1241229
    • பெண்ணின் இதயத்தில் தோட்டா: ஆறு மாதங்களுக்குப் பிறகு மீட்ட மருத்துவரின் அசராத முயற்சி மொஹம்மத் ஜுபைர் கான் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/PTIOFFICIAL   படக்குறிப்பு, மருத்துவமனை ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையை இணைக்கும் மாகாணமான கைபர் பக்தூங்க்வாவில் பெண்ணின் இதயப்பகுதியில் துளைத்த தோட்டாவை பல மாத முயற்சிக்குப் பிறகு மீட்டுள்ளார் அங்குள்ள மருத்துவர் ஒருவர். மிகவும் நுட்பமான அந்த அறுவை சிகிச்சை அனுபவத்தை பிபிசியிடம் விளக்கினார் அம்மருத்துவர். "ஒரு பெண் நோயாளியின் திறந்த நெஞ்சுப்பகுதியில் குண்டு இருக்கும் இடத்தை நாங்கள் தேடினோம். ஆனால் தோட்டாவின் தடயமே இல்லை. நோயாளியைப் பற்றி எனக்கு அதிக கவலை ஏற்பட்டது. காரணம் ஆறு மாதமாக அவர் நெஞ்சில் குண்டைத் தாங்கியுள்ளார்." கைபர் பக்ததூங்க்வாவின் அபோட்டாபாத் நகரில் அமைந்துள்ள அய்யூப் பயிற்சி மருத்துவமனையின் மருத்துவர் ஜாஹித் அலி ஷாவுக்கு இது ஆச்சரியமாக இல்லை. தொராசிக் அறுவை சிகிச்சை துறையின் தலைவராக, அவர் இதுபோன்ற பல கடினமான அறுவை சிகிச்சைகளை கடந்த காலங்களில் செய்துள்ளார். ஆனால் அன்று அவர் முன் இருந்த கேள்வி, "தோட்டா எங்கே போனது?" நாஸியா நதீம் பெஷாவர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது கணவர் நதீம் கான் அஃப்ரிடி கராச்சியில் வேலை செய்கிறார். நாஸியா, மாமியார், மாமனார், மைத்துனர் மற்றும் அவரது மனைவி ஆகியோருடன் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். "அது பிப்ரவரி மாதத்தின் இறுதி. நாங்கள் அனைவரும் மாலையில் எங்கள் முற்றத்தில் அமர்ந்திருந்தோம். திடீரென்று என் நெஞ்சில் ஏதோ துளைத்தது என் உடலுக்குள் நுழைந்தது போல் உணர்ந்தேன், நான் தரையில் விழுந்தேன்." என்று அந்தச் சம்பவத்தை அவர் நினைவுகூர்கிறார். மாமியார் குடும்பத்தினர் தன்னை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் நாஸியா கூறுகிறார். பட மூலாதாரம்,AYUB TEACHING HOSPITAL   படக்குறிப்பு, வெளியே எடுக்கப்பட்ட தோட்டா "அறுவை சிகிச்சைக்குப் பிறகு, என் உடலில் ஒரு தோட்டா பாய்ந்திருப்பதாகவும் ஆனால், அதை அகற்ற முடியவில்லை என்றும் கூறப்பட்டது. ரத்தப்போக்கை நிறுத்தி மார்பை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது." நாஸியா உடலில் குண்டு பாய்ந்த அந்த நேரத்தில் அவரது கிராமத்தில் மூன்று நான்கு திருமண விழாக்கள் நடைபெற்றுவந்தன. அனைத்துத் திருமணங்களிலும் கொண்டாட்டத்திற்காகத் துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருந்தது, எனவே தோட்டா எங்கிருந்து வந்தது என்று ஊகிக்க கூட முடியவில்லை. நாஸியா நதீமின் கணவர் நதீம் கான் அஃப்ரிடி, தங்கள் பகுதியில் திருமணங்களில் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடப்பது வழக்கம் என்றும் இப்படிப்பட்ட தோட்டாக்கள் பலரின் உயிரைக் குடித்துள்ளன என்றும் கூறுகிறார். "என் மனைவியும் இதேபோன்ற தோட்டாவுக்கு இலக்காகியிருக்கிறார். ஆறு மாதங்களாக அவர் அனுபவிக்கும் வலியால் எங்கள் வாழ்வே துன்பமாகியுள்ளது" பெஷாவரில் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மார்பு மற்றும் கல்லீரலில் தொடர்ந்து வலி இருந்தது, அதனால் எழுந்திருக்க கூட முடியவில்லை என நாஸியா நதீம் கூறுகிறார். பட மூலாதாரம்,AYUB TEACHING HOSPITAL   படக்குறிப்பு, எக்ஸ் ரேவில் தெரியும் துப்பாக்கி தோட்டா "எனக்கு மூன்று குழந்தைகள், இளைய மகனுக்கு ஒன்றரை வயது. என் குழந்தைகளுக்கான எந்த வேலையையும் கூட செய்ய எனக்கு உடலில் வலுவில்லை. சிறிய எடையைக் கூட தூக்க முடியவில்லை" மூன்று இளம் குழந்தைகளின் தாயின் வாழ்க்கை பொதுவாக மிகவும் பரபரப்பானதாக இருக்கும். அவர்கள் பின்னால் ஓடவே ஒரு தாய்க்கு நேரம் சரியாக இருக்கும். ஆனால் நாஸியா வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால், பெரும்பாலான நாட்களில் மயக்கத்தில் இருந்தார். வீட்டில் ஒரு கூட்டுக் குடும்பமாக இருந்ததால், அவரது மாமியார், மாமனார், மைத்துனர் ஆகியோர் அவருடைய பணிகளைப் பகிர்ந்து கொண்டனர். "அந்த வலி என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. என் குழந்தையை என் கைகளில் தூக்கக் கூட முடியவில்லை. அவர்கள் தான் என் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டார்கள்." ஆப்கானிஸ்தானில் தாலிபன் தண்டனை- நான்கு பேரை கொன்று உடல்களை சாலை சந்திப்பில் தொங்கவிட்டனர் தாலிபன் ஆளுகையில் கர்ப்பிணி காவலர் சுட்டுக் கொலை - என்ன நடந்தது? மருத்துவச் செலவு செய்தும் சிகிச்சை இல்லை நதீம் அஃப்ரிடி தனது மனைவிக்கு ஏற்பட்ட விபத்து பற்றிய செய்தி கிடைத்தவுடன், கராச்சியில் இருந்து சில நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு பெஷாவர் வந்ததாகக் கூறுகிறார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்த பிறகும், எப்போதும் மார்பு மற்றும் கல்லீரலில் வலி இருந்ததாகக் கூறுகிறார். தனது மனைவிக்கு வலி காரணமாக மயக்கம் ஏற்பட்டதாகவும் இன்னும் சில நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு, பெஷாவரில் உள்ள அனைத்து மருத்துவர்களிடமும் அழைத்துச் சென்றதாகவும் கூறுகிறார் அஃப்ரிடி. பட மூலாதாரம்,AYUB TEACHING HOSPITAL   படக்குறிப்பு, மருத்துவர் ஜாஹித் அலி ஷா இந்த ஆறு மாத காலத்தில் ஒவ்வொரு வாரமும் தன் மனைவியை மருத்துவரிடம் அழைததுச் சென்றதாகவும், பல மருத்துவர்களும் தோட்டா வெளியே எடுக்க முடியாத படி சிக்கியிருப்பதாகக் கூறியதாகவும் தெரிவிக்கிறார். இப்படிச் சிக்குவது அசாதாரணமானதல்ல என்று அவர்கள் கூறினாலும், வலியை மட்டும் போக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவிக்கிறார் நதீம். ஒவ்வொரு மருத்துவரும் இன்னொரு மருத்துவரைக் கை காட்டி விட்டதில், ஒவ்வொரு முறையும் எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் போன்ற சோதனைகளுக்கு மட்டுமே ஐந்து முதல் ஆறு லட்சம் வரை செலவாகியுள்ளதாகக் கூறுகிறார். மற்ற செலவுகள் இதில் அடங்காது என்றும் கூறுகிறார். "என்ன செய்வது என்று புரியாமல் தவித்த போது அபோட்டாபாத்தில் இது போன்ற சிக்கலான விஷயங்களில் அனுபவம் வாய்ந்த ஜாஹித் அலி ஷா என்ற மருத்துவரிடம் செல்லுமாறு சிலர் அறிவுரை கூற, அவர், பரிசோதித்துவிட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் ஆனால் அதில் ஆபத்து இருப்பதாகவும் கூறினார்." என்கிறார் நதீம் அந்தப் பெண்ணின் பரிசோதனை மற்றும் ஆரம்ப அறிக்கைகளில் இருந்து, அந்த தோட்டா இதயத்தின் அருகில் எங்கோ இருப்பதாவும் கடினமான அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற முடியும் என்றும் மருத்துவர் ஜாஹித் அலி ஷா கூறினார். அவர் இதற்கு முன்பு இதுபோன்ற கடினமான அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளதால், அவர் நம்பிக்கையுடன் இருந்தார். அவர் மேலும் கூறுகையில், "நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற அறுவை சிகிச்சை செய்தேன், ஒன்பது வயது குழந்தையின் உடலில் குண்டு பாய்ந்திருந்தது. தோட்டா அவரது மார்பில் பட்டது என்றும் கூறப்பட்டது, ஆனால் உண்மையில் தோட்டா அந்தக் குழந்தையின் இதயத்தில் இருந்தது" என்றார். மருத்துவர் ஜாஹித் அலி ஷா, "அறுவை சிகிச்சை தொடங்கியபோது, இந்த அறுவை சிகிச்சை ஐந்து மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. நாங்கள் அவருடைய மார்பைத் திறந்தபோது, தோட்டா சிக்கிக் கொண்டிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து அறுவை சிகிச்சையைத் தொடங்கினோம். அந்தப் பெண்ணின் இதயத்தைக் கையால் தொட்டபோது, அந்த தோட்டா இதயத்தில் நுழைந்தது என்பதை புரிந்துகொண்டேன்," என்கிறார். "எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்ததில், இதயத் துடிப்போடு தோட்டாவும் மேலேயும் கீழேயும் நகர்ந்தது தெரிந்தது. ஆறு மாதமாக இவர் இதை அனுபவித்து வந்ததால் எனக்கு அந்தப் பெண் குறித்து அதிக கவலை ஏற்பட்டது." "அவர் அன்று உயிருடன் இருந்தார். ஆனால், மரணத்துக்கு மிக அருகில் இருந்தார் அவர். மரணவாயிலில் இருந்து மீண்டார் அவர்". மூன்றாவது முயற்சியில் கிடைத்த வெற்றி இந்த அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் ரஹ்மத்தின் உதவி பெறப்பட்டதாக மருத்துவர் ஜாஹித் அலி ஷா கூறுகிறார். "நான் அல்லாஹ்வின் பெயரைக் கூறி, இதயத்தின் வலது வென்ட்ரிக்கிளில் ஒரு வழி உருவாக்க ஆரம்பித்தேன், அங்கு தான் புல்லட் சிக்கியிருந்தது. இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் தங்கள் செயல்பாடுகளில் இதயத்தைக் கட்டுப்படுத்த இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் என்னிடம் அது போன்ற வசதி இல்லை." "அந்தப் பெண்ணின் இதயம் துடித்துக்கொண்டிருக்கும் போது தான் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. மிகவும் மென்மையான நரம்புகளைக் கையாளும் சமயம், இதயம் துடிக்கும் போது, ஒரு சிறிய தவறு கூட மிகவும் ஆபத்தானது." என்றார் மருத்துவர். "இரண்டு முறை முயற்சித்தேன் ஆனால் தோட்டா இருக்கும் இடத்தை அடைய முடியவில்லை. மூன்றாவது முறை நான் வெற்றி பெற்றேன்." என்கிறார் அவர். பட மூலாதாரம்,AYUB TEACHING HOSPITAL   படக்குறிப்பு, எக்ஸ் ரேவில் தெரியும் துப்பாக்கி தோட்டா தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் இதய அறுவை சிகிச்சையை எப்படிச் செய்தார்? "நாடு முழுவதும் தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கை 80 அல்லது 90 தான். கைபர் பக்தூங்க்வாவில் இந்த எண்ணிக்கை ஒன்பது அல்லது பத்து தான்," என்கிறார் மருத்துவர் ஜாஹித் அலி ஷா. தொராசிக் அறுவை சிகிச்சையில், மார்புக்குள் உள்ள அனைத்து உறுப்புகளும் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகின்றன. மருத்துவர் ஜாஹித் அலி ஷா "நான் முன்பு எலும்பியல் அறுவை சிகிச்சையில் தான் பயிற்சி பெற்று வந்தேன். ஆனால் தொராசிக் அறுவை சிகிச்சை தான் அதிகம் தேவையாக இருப்பதை உணர்ந்து, நான் இந்த துறைக்கு வந்தேன்." என்கிறார். தவறாக முடி வெட்டியதால், தொழில் இழப்பு, மன உளைச்சல்: சலூனுக்கு ரூ.2 கோடி அபராதம் ஊரில் ஒரே ஒரு பட்டியலின பெண்: இட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்துக்கு மனு போட்டதால் பரபரப்பு மருத்துவர் ஜாஹித் அலி ஷா, தங்களிடம் போதுமான மருத்துவர்களோ வசதிகளோ இல்லை என்று கூறுகிறார். ஒரு அறுவை சிகிச்சைக்கு அந்தத் துறையில் உள்ள நிபுணர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்களிடம் நேரம் இருப்பதில்லை. "அவர் போன வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது." என்கிறார். 15- 20 விநாடிகளில் நற்செய்தி பட மூலாதாரம்,AYUB TEACHING HOSPITAL   படக்குறிப்பு, வெளியே எடுக்கப்பட்ட துப்பாக்கி தோட்டா மருத்துவர் ஜாஹித் அலி ஷா, "ஐந்து மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையை நான் தனியாகச் செய்தேன். அந்த நேரத்தில் எனக்கு சோர்வு ஏற்படவில்லை. ஆனால் நான் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்காகச் சிறிது நேரம் ஓய்வெடுத்தேன்." என்கிறார். "நோயாளியைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணம் தான் இருந்தது. அதற்காக உயிரைக் கொடுத்து உழைத்தேன்." என்கிறார் அம்மருத்துவர். அவர் தோட்டா இருக்கும் இடத்தை அடைந்து அதை வெளியே எடுத்தபோது, நோயாளியின் இரத்த அழுத்தம் பதினைந்து வினாடிகளுக்குக் குறைந்து விட்டது என்று கூறினார். அப்போது, அவரது இதயப் பைகளில் ஒன்றில் அதிக ரத்த இழப்பு ஏற்பட்டதாகவும் அந்த பதினைந்து வினாடிகள் மிகவும் ஆபத்தானவை என்றும் அவர் கூறினார். "உடனடியாக அவருக்கு இரத்தம் கொடுத்து, அவரது இதயத் துடிப்பைத் தொடர வைக்க ஆவன செய்தேன். அடுத்த இருபது வினாடிகளில் நோயாளியின் நிலை சீரானது. ஆறு மாதங்கள் இதயத்தில் தோட்டாவை வைத்திருந்த நோயாளியின் நிலை இப்போது சீராக உள்ளது என்பதை நான் புரிந்துகொண்டேன்," என்று கூறுகிறார் அந்த வெற்றி நாயகன். https://www.bbc.com/tamil/global-58691426
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.