Jump to content

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

நல்லது, இன்னுமோர் மீட்டிங். நேர்முகம் தான்...பார்ப்போம். வருகிறேன்.

4 hours ago, goshan_che said:

எனக்கு வேலை எதுவும் இல்லை. டே அண்ட் நைட். வாங்கோ பேசுவம்.

இண்டைக்கு இரவு இருட்டடிக்கு இடமிருக்கு எண்டு கனவு கண்டன். இஞ்சை வாற ஆக்கள் டோர்ச் லைட் கைகாவலாய் கொண்டு வாறது நல்லம். 🤣

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இண்டைக்கு இரவு இருட்டடிக்கு இடமிருக்கு எண்டு கனவு கண்டன். இஞ்சை வாற ஆக்கள் டோர்ச் லைட் கைகாவலாய் கொண்டு வாறது நல்லம். 🤣

டோர்ச் லைட்டுக்கு பற்றி சார்ச் கூடுதலாக இருக்கட்டும். எல்லா திரியிலும் இருட்டடிக்கு இடமிருக்கு.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னா நம்பமாட்டியள் - இப்பதான் இந்த வீக் எண்ட் கடும் மழை பொழிவால் கரண்ட் தடைபடலாம் டோர்ச்சை எடுத்து டெஸ்ட் பண்ணுங்கோ எண்டு எலெக்டிரிக் கொம்பனி டெக்ஸ்ட் போட்ட மெசேஜ வாசிச்சிட்டு வாறன். நீங்கள் இருவரும் இப்படி எழுதிறியள் 🤣.

#வாய் சொல்லு சூனியம்

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

இல்லை, நிழலி....

ஆறுமுக நாவலர் காலத்தில் இருந்தே, ஆண்கள் மேலாடை அணியக்கூடாது என்று வழக்கம் வந்து விட்டது.

மேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோவில் உள்ளே அனுமதி இல்லை. பிறகு என்ன, மேலாடை பிரச்சனையாக இருந்திருக்க முடியும்?

ஆறுமுக நாவலரின் காலம் தான் சாதீயம் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் உச்சம் பெற்ற காலம்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோவில் அனுமதி இல்லை. அதற்கு சற்று மேல்பட்ட சாதிகளுக்கு மூலஸ்தானத்திற்கு அனுமதி இல்லை.

பூணூல் அணியாதவர்களுக்கு கோவிலில் கருவறைக்கு வெளியே மட்டுமே அனுமதி, பூணூல் அணிந்தவர்களுக்கே கருவறைக்குள் அனுமதி.

2 hours ago, goshan_che said:

இதை பற்றி சரியாக தெரியவில்லை. ஆனால் சேர்ட் போடும் பழக்கம் ஐரோப்பிய செருகல்தானே? அதுக்கு முதல் வேட்டி, சால்வை?

ஆகவே இது ஒரு பழமை பேணும் முனைப்பாகவும் இருக்கலாம்.

சேர்ட்டிற்கு முன் சால்வை இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். ஐரோப்பியர் வரும் முன் என்ன ஆடைகளை திருமணம் போன்ற சடங்குகளில் அணிந்து இருப்பர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஆறுமுக நாவலரின் காலம் தான் சாதீயம் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் உச்சம் பெற்ற காலம்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோவில் அனுமதி இல்லை. அதற்கு சற்று மேல்பட்ட சாதிகளுக்கு மூலஸ்தானத்திற்கு அனுமதி இல்லை.

பூணூல் அணியாதவர்களுக்கு கோவிலில் கருவறைக்கு வெளியே மட்டுமே அனுமதி, பூணூல் அணிந்தவர்களுக்கே கருவறைக்குள் அனுமதி.

சேர்ட்டிற்கு முன் சால்வை இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். ஐரோப்பியர் வரும் முன் என்ன ஆடைகளை திருமணம் போன்ற சடங்குகளில் அணிந்து இருப்பர்?

வேட்டி சால்வை - உயர்த்தபட்டவர்.

தனியே வேட்டி தாழ்த்தபட்டவர்?

இப்போதும் சேட் போடாமல் சால்வையை விரித்து போர்த்தும் வழக்கம் உண்டு. 

ஊகம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

ஆறுமுக நாவலரின் காலம் தான் சாதீயம் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் உச்சம் பெற்ற காலம்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோவில் அனுமதி இல்லை. அதற்கு சற்று மேல்பட்ட சாதிகளுக்கு மூலஸ்தானத்திற்கு அனுமதி இல்லை.

பூணூல் அணியாதவர்களுக்கு கோவிலில் கருவறைக்கு வெளியே மட்டுமே அனுமதி, பூணூல் அணிந்தவர்களுக்கே கருவறைக்குள் அனுமதி.

இதிலே கண விடயங்கள் உண்டு நிழலி. வெறுமனே ஆறுமுக நாவலரை குறை சொல்ல முடியாது. நாம் அந்த காலத்தின் பின்புலத்தினை பார்க்கவேண்டும்.

இந்த சாதிய பிரச்சனை ஆயிரம் ஆண்டுகளாக இருந்திருக்கிறது.

போர்த்துக்கேயர் காலத்தில் மத சுதந்திரம் அறவே இல்லை. தாழ்த்தப்பட்டவர்கள் பலர் மதம் மாறினார்கள் அல்லது, சலுகைகள், பயமுறுத்துதல் காரணமாக மதம் மாத்தப்பட்டார்கள். ஒல்லாந்தர் காலத்தில், புராடெஸ்ட்தாந்து மதத்தினை பரப்ப, முன்னர் ரோமன் கத்தோலிக்கத்தினை தழுவியவர்களை குழம்பினர். இவர்கள் காலத்தில், ஓரளவுக்கும், பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் முழுவதுமாக மத சுதந்திரம் கிடைத்தது.

இந்த காலப்பகுதியில், பைபிளை தமிழில் மொழிபெயர்த்த நாவலர், சைவத்துக்கு தொண்டாற்ற கிளம்பினார். செட்டிமார் போன்ற பல தனவந்தர்களின் உதவிகளுடன், அழிக்கப்பட்ட கோவில்களை புனரமைத்து, சிதம்பரத்திலும், யாழ்ப்பாணத்திலும், மடாலயங்களை நிறுவி, சைவப்பிரகாச பாடசலைகளை அமைத்து தொண்டு செய்தார்.

அவர், சாதியத்துக்கு சார்பானவர் என்று சொல்லப்படுவது உண்மைதான் எனினும், அவர், சைவத்தினை விட்டு, வேறு மதத்தினை தழுவியவர்கள், (குறிப்பாக தாழ்த்தப்ட்டவர்கள்), மீண்டும் சைவத்துக்கு வருவது குறித்து கடும் நிலைப்பாடு எடுத்தார் என்று சொல்வோரும் உண்டு. அந்த நிலைப்பாடு சாதிய நிலையில் பார்க்கப்பட்டதாகவும் சொல்வார்கள்.

இது எனது கருத்து அல்ல. எனக்கு, சொல்லப்பட்ட ஒரு கருத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

வேட்டி சால்வை - உயர்த்தபட்டவர்.

தனியே வேட்டி தாழ்த்தபட்டவர்?

இப்போதும் சேட் போடாமல் சால்வையை விரித்து போர்த்தும் வழக்கம் உண்டு. 

ஊகம்தான்.

எல்லாம் காலநிலை குடுத்த செல்லம்/செல்வம். :cool:

கனடா ஐரோப்பா மாதிரி மைனஸ் வெதர் அங்கையுமெண்டால் தனி வேட்டி,வேட்டிசால்வை, கோவணம் எண்டு எல்லாத்தையும் வைச்சு நாமள் வீரம் பேச முடியுமா? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமி அச்சுவேலியிலைதான தேர் இழுத்தவன் எதுக்கு நாதமும் கோசானும் ஆவரங்காலுக்க நிண்டு சண்டை புடிக்கிரானுவ..?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் காலநிலை குடுத்த செல்லம்/செல்வம். :cool:

கனடா ஐரோப்பா மாதிரி மைனஸ் வெதர் அங்கையுமெண்டால் தனி வேட்டி,வேட்டிசால்வை, கோவணம் எண்டு எல்லாத்தையும் வைச்சு நாமள் வீரம் பேச முடியுமா? 😂

🤣 விண்டர் நாட்களில் ஒரு 30 நிமிசம் வெளியால நடக்காமல் ஒரே இடத்தில நிண்டா மூக்கு விறைச்சு, இருக்கோ எண்டு தொட்டு செக்பண்ணுற நிலை.  அப்ப வேட்டி கட்டினால்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இதிலே கண விடயங்கள் உண்டு நிழலி. வெறுமனே ஆறுமுக நாவலரை குறை சொல்ல முடியாது. நாம் அந்த காலத்தின் பின்புலத்தினை பார்க்கவேண்டும்.

நீங்கள் படிக்க விரும்பாத ஆய்வு.. “ஆய்ந்தவர்” தலைவர் பிரபாகரனுடன் ஆரம்பத்தில் இயக்கத்தை கட்டிய இராகவன் (பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டில் தலைவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்).

நாவலர் எவ்வாறு யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்கத்தின் தூணாக இருக்கின்றார் என்பதை ஆய்வைப் படித்தால் புரிந்துகொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

நீங்கள் படிக்க விரும்பாத ஆய்வு.. “ஆய்ந்தவர்” தலைவர் பிரபாகரனுடன் ஆரம்பத்தில் இயக்கத்தை கட்டிய இராகவன் (பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டில் தலைவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்).

நாவலர் எவ்வாறு யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்கத்தின் தூணாக இருக்கின்றார் என்பதை ஆய்வைப் படித்தால் புரிந்துகொள்ளலாம்.

இதை வாசிக்கிறதுக்கு, லொள்ளு சபா பார்க்கலாம்...🙏

என்ன விடயம் என்றால், வரலாறு என்பது, நாலு, ஐந்து தொடர்பில்லாத புள்ளிகளை, இணைப்பது.... 

இணைப்பதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்தை காட்டுவார்கள்.

100% உண்மை இராது என்று தெரிந்து கொண்டே உள்ளே வாசிக்க தொடங்குவோம். கதை சொல்பவரின் திறமை எம்மை அப்படியே நம்ப, அல்லது நம்ப மறுக்க வைக்கும்.

உதாரணம் பொன்னியின் செல்வன். 

மேலும், ராஜ ராஜ சோழன் தமிழகத்தில் சாதி ரீதியான ஒடுக்குதலை செய்தான் என்று ஒரு சாராரும், அதுக்கு ஆதாரம் இல்லையே என்று வேறு சாராரும் சொல்கிறார்கள்.

யாரும் சமகாலத்தில் பார்த்து, எழுதவில்லை, அவரவர்கள் எதை வைத்து சொல்கிறார்கள் என்று பார்த்தால், தலையால் போகும்....

நான் நாவலர், அவ்வாறு செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், நான் இன்னும் நம்பிக்கையான ஆவணம் எதுவும் வாசிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை  ஒவ்வொரு உயிரினங்களும்   அவரவர் வாழும் இடங்களுக்கேற்ப வசதிகளை செய்து கொடுத்துள்ளது. மாறாக இல்லாத ஒன்றுக்கு மீறி ஆசைப்படும் போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

100% உண்மை இராது என்று தெரிந்து கொண்டே உள்ளே வாசிக்க தொடங்குவோம். கதை சொல்பவரின் திறமை எம்மை அப்படியே நம்ப, அல்லது நம்ப மறுக்க வைக்கும்.

உதாரணம் பொன்னியின் செல்வன். 

அங்கைதான் நிற்கின்றார் நாதம்ஸ்😂

ராகவன் எழுதினது ஆய்வு. கல்கி எழுதியது புனைவு. இதுக்கு மேல நான் சொல்ல ஒன்றுமில்லை😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதிக சீதனம் காதல்  காரணாமாகவும் சிங்கள இளைஞர்களை தமிழ் பிள்ளைகள் திருமணம் செய்கிறார்கள் என்று செய்தியும் அடிபடுது புத்தான்  அண்ண யாழ்ப்பாணம் மாறுகிறதா என விவாகப்பதிவாளர் வினா தொடுத்துள்ளார் என செய்தியும் வரும் .

ஆனால் நம்ம கல்யாணம் கட்டி பெட்டயை வெளிநாடு எடுப்போம் . 

எங்க போனாலும் இந்த சாதி கோதாரி பெரிய பிரச்சினை

யாழ்ப்பாணத்தவர்கள் சிங்களவர்களை திருமணம் செய்வதற்கு  வேறு சில காரணங்களும் உண்டு....யாழ்ப்பாணத்தில் பல கலாச்சார மாற்றங்கள் நடந்துள்ளது...

எனது பாடசாலை காலத்தில் சக மாணவியுடன் நான்  பேசவே இல்லை...இன்று அந்த சூழ்நிலை இல்லை (வரவேற்க்ப்பட வேண்டிய ஒன்று)பெண்கள்/ஆண்கள் பழகும் வாய்ப்புக்கள் அதிகம் .இதை தட்டி கேட்கும் நிலையில் இன்றைய இளைஞர்களும் இல்லை ...அன்று அண்ணன் ,மாமான் எல்லாம் பெண்களின் மெய் பாதுகாவலர்கள் ....இன்று அண்ணன் வெளிநாடு மாமா வெளிநாடு ஊரில் உள்ளவர்களும் அடுத்தவன் பிரச்சனைக்குள் தலையிடுவதை குறைத்து விட்டார்கள் வெளிநாட்டு தமிழர்களை போல்... 
இராணுவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றால் சமுகத்தில் உள்ளவர்கள் துணிந்து செல்லமாட்டார்கள் ....
புலம்பெயர்ந்தநாடுகளில் 10 திருமண‌த்தில்  5 பேர் தான் தமிழ் தம்பதிகளாக இருப்பார்கள்.மிகுதி ஐந்தும் கலப்பு(வெள்ளை,ஆபிரிக்கா,சீனா) திருமணமாக இருக்கும்.அந்த ஐந்திலும் ஒன்று இரண்டு சிங்கள கலப்பு.
இங்கு யாழ்ப்பாணததவருக்கு  சீதனம் ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை . இருந்தும் சிங்கள இனத்தில் திருமணம் முடிக்கின்றனர்.
கலாச்சார மாற்றம் முக்கிய பங்கு வகிக்கின்றது சீதனத்தை விட....

இராணுவம் சேர்ட்டுடன் கோவிலுக்குள் செல்வதையோ,சாமி காவுவதையோ தட்டி கேட்க முடியாத நிலையில் உள்ள யாழ்ப்பாணத்து மக்கள், சிங்கள இராணுவம் தமிழ் பெண்ணை காத‌லிச்சா தட்டி கேட்கும் துணிவு வருமா?

தீவிர தமிழ் தேசிய ஆதரவாளரின் மகன்  .....சிங்கள இராணுவத்தின் பிரிகேடியரின் மகளை திருமணம் செய்துள்ளார் ....இது தப்பு என்று சொல்ல வில்லை ....நடைமுறை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத தீண்டத்தகாதவர்களையும் பிரித்தறிய செய்யும் முறை இது. 

நாம் சாதி ரீதியிலான, பிற்போக்குத்தனமான விடயங்களை மரபு என்று இன்னும் தூக்கித் திரியும் போது, அந்த இடைவெளிகளில் எதிரிகள் புகுந்து கொள்கின்றனர்.

இந்தியாவில் நீங்கள் கூறுவது சரியாக இருக்கும் ஆனால் இலங்கையை பொறுத்தவரை அது காரணமாக இ ருக்க வாய்பில்லை...பிராமணர்களின் எண்ணிக்கை இலங்கையில் குறைவு அத்துடன் ....கோவிலுக்கு அருகில் பிராமணர் குடும்பம் இருக்கும்,அந்த ஊர்மக்கள் அனைவருக்கும் தெரியும் இவர்தான் ஐயர் பரம்பரை என்று...

சேர்ட் அணிந்து செல்வதால் ஒரு தீங்கும் நடக்காது என ஊர்மக்களுக்கு பாடம் சொல்லிகொடுப்பதற்கு கோவில் தர்மகத்தாக்கள்  இப்படி புரட்சிகர நடவடிக்கை எடுத்திருக்கலாம்...

நல்லூர் கோவிலை இடித்து  .....கட்டுவேன் என சொல்லும் புரட்சி சிந்தனையாளர்கள் உள்ள இடமாக மாறிவருகிறது ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

அங்கைதான் நிற்கின்றார் நாதம்ஸ்😂

ராகவன் எழுதினது ஆய்வு. கல்கி எழுதியது புனைவு. இதுக்கு மேல நான் சொல்ல ஒன்றுமில்லை😃

நான், உங்களவுக்கு இந்த விடயங்களை வாசிப்பதில்லை ஆகையால், எனது கருத்துக்கள் அல்ல, எனக்கு சொல்லப்பட்ட கருத்துக்கள் என்று சொன்னேன்.

நீங்கள் இதனை விளக்கினால், வேறு யாருக்கும் சொல்லும் போதும், கிருபன் என்று ஒரு அன்பர் சொன்னார் என்றே சொல்வேன்.

ஆகவே, இதில் என்ன கருத்து சொல்வது என்று தெரியாது, கிருபன் அய்யா. 🙏

தெரியாத விடயங்களில். அடித்து விட்டு, நின்று ஆடும் வேலையும் தெரியாது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இந்தியாவில் நீங்கள் கூறுவது சரியாக இருக்கும் ஆனால் இலங்கையை பொறுத்தவரை அது காரணமாக இ ருக்க வாய்பில்லை...பிராமணர்களின் எண்ணிக்கை இலங்கையில் குறைவு அத்துடன் ....கோவிலுக்கு அருகில் பிராமணர் குடும்பம் இருக்கும்,அந்த ஊர்மக்கள் அனைவருக்கும் தெரியும் இவர்தான் ஐயர் பரம்பரை என்று...

சேர்ட் அணிந்து செல்வதால் ஒரு தீங்கும் நடக்காது என ஊர்மக்களுக்கு பாடம் சொல்லிகொடுப்பதற்கு கோவில் தர்மகத்தாக்கள்  இப்படி புரட்சிகர நடவடிக்கை எடுத்திருக்கலாம்...

நல்லூர் கோவிலை இடித்து  .....கட்டுவேன் என சொல்லும் புரட்சி சிந்தனையாளர்கள் உள்ள இடமாக மாறிவருகிறது ....

நிழலிக்கு நான் சொன்ன கருத்தினை அவர், கவனிக்க வில்லை என்றே நினைத்தேன்.

தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே போக முடியாத நிலையில், மேலாடை தான் பிரச்சனை என்று சொல்ல முடியாதே என்றேன். மாறி சொல்வதானால், மேலாடை அணிந்து இருந்தால், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே போகலாம் என்று இருக்கவில்லையே.

ஆகவே இது சாதி அடிப்படையிலானது என்ற நிழலியின் கருத்துக்கு வலு இல்லை.

இன்று தாழ்த்தப்பட்டவர் என்று வாசலில் பார்த்து யாருமே தடுப்பதில்லையே.

விடயம் அதுவல்ல. நல்லூர் போன்ற கோவில் உள்ளே இன்றும் கூட போகும் அனைவருமே, சிங்களவராக இருந்தாலும், மேலாடை இல்லாமே போக வேண்டும். மகிந்தா, பசில், சரத் பொன்னர் அனைவருமே அப்படி தான் உள்ளே போனார்கள்.

திருக்கேஸ்தீஸ்வரம் கோவிலில், தகப்பனுக்கு திதி கொடுக்க போயிருந்தார், இந்திய தூதர். அவர் கூட, உள்ளே போகும்போது, மேலாடை இல்லாமல் தான் போனார். 

இங்கே சாதியம் இல்லை. ஒரு ஈழத்துக்குரிய கலாசாரம்.

****

புலால் உண்பவர்கள், வெளியே நில்லுங்கள் என்று ஆரம்பித்து, சாதியமாக முடிந்திருக்கும் என்பதே எனது அபிப்பிராயம்.

இன்னமும் சொல்வதானால், (இதுவும் தமிழகத்தில், ஒருவர் கூறிய கருத்து, எனது அல்ல) ஊர் பண்ணையார்கள் வீடுகளில் இறந்து போகும் கால்நடைகளை புதைக்க வேலையாட்களுக்கு சொன்னால், அதனை கொண்டு போய், பசிக்கொடுமையால், சுட்டு, தமது வீடுகளின் முன்னர் தொங்க விட்டு, சில நாட்களுக்கு அதனை சாப்பிட்டு கொண்டிருப்பார்களாம்.

அந்த பக்கமாக வரும் பண்ணையாரின் ஆட்கள், ஈ, மொய்த்து கொண்டிருக்கும்  (சில நாட்களின் பின்னர் சிறு புழுக்கள்) அந்த மாமிசத்தினை கண்டு, நோய் தொற்று உண்டாகலாம் என்று, அவர்கள் வேலைக்கு வரும் போது, அங்கேயே தூரத்தில் நில் என்று சொல்லி, அதன் மூலம் வந்ததே தீண்டாமையும், சாதியமும் என்கிறார்.

எது சரி என்று தெரியாது.

***

ஆனால் சாதியம் என்னும் வகுப்புவாதம் இங்கே பிரித்தானியாவில் இருந்துள்ளது. இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் சமூக பாதுகாப்பு (social security )மாறுதல்கள் நடந்த பின்னர் சமநிலை உண்டாகி உள்ளது. அடிப்படை காரணம் பொருளாதாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆமி அச்சுவேலியிலைதான தேர் இழுத்தவன் எதுக்கு நாதமும் கோசானும் ஆவரங்காலுக்க நிண்டு சண்டை புடிக்கிரானுவ..?🤔

அவை இரண்டு பேரையும் முதலில் தங்களுக்க  சுட்டு  காயங்காட்ட சொல்லியிருக்காம்😜

அதுக்கு பிறகு  தான்  களம்  அதாவது அச்சுவேலி???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அவை இரண்டு பேரையும் முதலில் தங்களுக்க  சுட்டு  காயங்காட்ட சொல்லியிருக்காம்😜

அதுக்கு பிறகு  தான்  களம்  அதாவது அச்சுவேலி???🤣

அவர்கள் இருவரும் கத்தரிக்கோல் போல வெட்டுற மாதிரித்தான் வேகமாய் வருவினம் ஆனால் குறுக்க இருக்கிறவைதான் கவனமாய் இருக்க வேணும்..... களம் சோர்வின்றி செல்வதற்கும் அவர்களின் பங்களிப்புதான் காரணம்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

அவர்கள் இருவரும் கத்தரிக்கோல் போல வெட்டுற மாதிரித்தான் வேகமாய் வருவினம் ஆனால் குறுக்க இருக்கிறவைதான் கவனமாய் இருக்க வேணும்..... களம் சோர்வின்றி செல்வதற்கும் அவர்களின் பங்களிப்புதான் காரணம்.....!   😁

நாம அப்பவே  உசார்  அண்ணா

குகதாசனா  கொக்கா???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

நாம அப்பவே  உசார்  அண்ணா

குகதாசனா  கொக்கா???🤣

உங்கள 5லாம்பு சந்தியில பங்கர் வெட்ட வரட்டாம் அண்ணை🤣

Link to comment
Share on other sites

46 minutes ago, Nathamuni said:

நிழலிக்கு நான் சொன்ன கருத்தினை அவர், கவனிக்க வில்லை என்றே நினைத்தேன்.

கவனித்தனான், ஆனால் அது பதில் சொல்வதற்கு ஏற்றதாக தோன்றவும் இல்லை இல்லை, அதை நான் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. நுனிப்புல் மேய்கின்றவர்களின் கருத்தாக தோன்றியது எனக்கு

51 minutes ago, Nathamuni said:

இன்னமும் சொல்வதானால், (இதுவும் தமிழகத்தில், ஒருவர் கூறிய கருத்து, எனது அல்ல) ஊர் பண்ணையார்கள் வீடுகளில் இறந்து போகும் கால்நடைகளை புதைக்க வேலையாட்களுக்கு சொன்னால், அதனை கொண்டு போய், பசிக்கொடுமையால், சுட்டு, தமது வீடுகளின் முன்னர் தொங்க விட்டு, சில நாட்களுக்கு அதனை சாப்பிட்டு கொண்டிருப்பார்களாம்.

அந்த பக்கமாக வரும் பண்ணையாரின் ஆட்கள், ஈ, மொய்த்து கொண்டிருக்கும்  (சில நாட்களின் பின்னர் சிறு புழுக்கள்) அந்த மாமிசத்தினை கண்டு, நோய் தொற்று உண்டாகலாம் என்று, அவர்கள் வேலைக்கு வரும் போது, அங்கேயே தூரத்தில் நில் என்று சொல்லி, அதன் மூலம் வந்ததே தீண்டாமையும், சாதியமும் என்கிறார்.

எது சரி என்று தெரியாது.

உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள், தீண்டாமைக்கு இந்தளவுக்கு முண்டு கொடுக்க வேண்டாம் என்று. வர்ணம், வர்ணாசிரமம் போன்றவற்றை அறிந்த பல ஆயிரம் பேர் உள்ளனர் என்றும் கூறி வையுங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே போக முடியாத நிலையில், மேலாடை தான் பிரச்சனை என்று சொல்ல முடியாதே என்றேன். மாறி சொல்வதானால், மேலாடை அணிந்து இருந்தால், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே போகலாம் என்று இருக்கவில்லையே.

ஆகவே இது சாதி அடிப்படையிலானது என்ற நிழலியின் கருத்துக்கு வலு இல்லை.

யாழ் களத்தில் உறுப்பினராக இருந்த சிவா சின்னபொடி “நினைவழியா வடுக்கள்” என்ற நூல் எழுதியிருந்தார். அதில் தெளிவாக மேலாடை போடாமல் கோயிலுக்கு உள்ளே போவதற்கான காரணம் சொல்லப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் கடினமாக வேலை செய்யபவர்கள். ஏறுபட்டி,  இயனக்கூடு, தளைநார் கட்டி மரம் ஏறுபவர்கள் உடலில் சிராய்ப்புக்கள் எப்பவும் இருக்கும். யாரென்று விசாரிக்காமல் மேலுடம்பைப் பார்த்தே தாழ்த்தப்பட்டவர்களை அடையாளம் காணவே மேலாடை அணிவது யாழில் உள்ள கோவில்களில் தடுக்கப்பட்டது. அதை மரபு என்று இன்றும் தொடர்கின்றார்கள்.

ஒரு காலத்தில் (50 - 100 வருடங்களுக்கு உட்பட்ட காலம்தான்) ஆண்கள் வேட்டி, சால்வை, சேர்ட் அணியவும், பெண்கள் ரவிக்கை அணியவும் தடை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், அவற்றைப் போராடித்தான் பெற்றார்கள். இவற்றை சிவா சின்னப்பொடியின் புத்தகத்தை (அதன் பகுதிகள் யாழில் இருக்கின்றன என நினைக்கின்றேன்) அல்லது மேலே இணைத்த ராகவனின் ஆய்வைப் படித்தால் புரியும்.

ஆய்வில் இருந்து ஒரு மேற்கோள்.

தலித் மக்களின் உரிமை சம்பந்தமான குரல் எழும் போது தற்போது சாதி இல்லை என்ற மறைப்பு அரசியல். ஒருவகையில் சாதியம் இல்லை என்பதன் பின்னால் உள்ள ஆதிக்க அரசியல் மிகவும் நுணுக்கமானது. தலித் மக்கள் தாங்கள் சாதிய ரீதியாக புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எதிர்ப்பு குரலை செயலிழக்கச் செய்யும் சாதுர்யமான ஆதிக்க சாதி அரசியல் இது. இந்த கருத்தியல் பின்புலத்தில் தான் சாதியம் தனது ஆதிக்கத்தை தற்சமயம் நிலை நாட்டுகிறது. ஆதிக்க சாதியின் நவீன நாவலர்கள் சாதிய ஆதிக்கத்தை பாதுகாப்பதில் கவனமாக இருந்து வருகிறார்கள். சாதி ஒழிந்து விட்டதென்று கூறிக்கொண்டு சாதியை பாதுகாக்கும் அனைத்து நடைமுறைகளையும் அவர்கள் மேற்கொள்கிறார்கள்”

1 hour ago, Nathamuni said:

இன்று தாழ்த்தப்பட்டவர் என்று வாசலில் பார்த்து யாருமே தடுப்பதில்லையே.

இன்றைக்கும், அதாவது இன்று, இந்தக் கொரோனா கெடுபிடிக்குள்ளும் திருவிழா நடக்கும் ஊர்க்கோவிலுக்குள் உள்ளே போகமுடியாது. புலிகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலத்தில், ஐயர்மாரைத் தவிர ஒருவரும் உள்ளே போகமுடியாது என்று புனிதத்தை பேணினார்கள். புலிகள் 1995/96 இல் யாழைக் கைவிட்ட பின்னர் பழைய நடைமுறை வந்து, அப்படியே தொடர்கின்றது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிழலி said:

கவனித்தனான், ஆனால் அது பதில் சொல்வதற்கு ஏற்றதாக தோன்றவும் இல்லை இல்லை, அதை நான் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. நுனிப்புல் மேய்கின்றவர்களின் கருத்தாக தோன்றியது எனக்கு

உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள், தீண்டாமைக்கு இந்தளவுக்கு முண்டு கொடுக்க வேண்டாம் என்று. வர்ணம், வர்ணாசிரமம் போன்றவற்றை அறிந்த பல ஆயிரம் பேர் உள்ளனர் என்றும் கூறி வையுங்கள்.

நன்றி

1.  நுனிப்புல் மேய்கின்றவர்களின் கருத்தாக தோன்றியது எனக்கு: உங்கள் கருத்தும் அப்படியே தான் தெரிகிறது, நிழலியர். இன்றும் கூட யாருமே மேல் ஆடை போட்டு உள்ளே போக முடியாது என்று இருக்கும் போது, சாதியம் அங்கே எவ்வாறு வந்திருக்க முடியும் என்று நீங்கள் விளக்கவில்லையே.

2. முண்டு அல்ல, கருத்து..... நான் கேட்டதை பகிர்ந்தேன் அன்றி, சமுக வெளியில் பரவலாக உள்ள கருத்து அல்ல. 

11 minutes ago, கிருபன் said:

யாழ் களத்தில் உறுப்பினராக இருந்த சிவா சின்னபொடி “நினைவழியா வடுக்கள்” என்ற நூல் எழுதியிருந்தார். அதில் தெளிவாக மேலாடை போடாமல் கோயிலுக்கு உள்ளே போவதற்கான காரணம் சொல்லப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் கடினமாக வேலை செய்யபவர்கள். ஏறுபட்டி,  இயனக்கூடு, தளைநார் கட்டி மரம் ஏறுபவர்கள் உடலில் சிராய்ப்புக்கள் எப்பவும் இருக்கும். யாரென்று விசாரிக்காமல் மேலுடம்பைப் பார்த்தே தாழ்த்தப்பட்டவர்களை அடையாளம் காணவே மேலாடை அணிவது யாழில் உள்ள கோவில்களில் தடுக்கப்பட்டது. அதை மரபு என்று இன்றும் தொடர்கின்றார்கள்.

ஒரு காலத்தில் (50 - 100 வருடங்களுக்கு உட்பட்ட காலம்தான்) ஆண்கள் வேட்டி, சால்வை, சேர்ட் அணியவும், பெண்கள் ரவிக்கை அணியவும் தடை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், அவற்றைப் போராடித்தான் பெற்றார்கள். இவற்றை சிவா சின்னப்பொடியின் புத்தகத்தை (அதன் பகுதிகள் யாழில் இருக்கின்றன என நினைக்கின்றேன்) அல்லது மேலே இணைத்த ராகவனின் ஆய்வைப் படித்தால் புரியும்.

இங்கே நான் விளக்கம் பெறவே கேள்விகளை கேட்க்கிறேன். நன்றி.

ஒரு விளக்கம் தாருங்கள். இன்றும் கூட மேலாடை அணிந்து உள்ளே யாருமே போக முடியாது என்ற நிலையில், நீங்கள் சொன்ன சிவா சின்னப்பொடியரின் விளக்கம் சரியானதா?

**

இருவருக்கும், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இது மிகவும் சென்சிட்டிவ் என்று புரியும்.

எனது புரிதலுக்காக மட்டுமே கேட்கிறேன். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ஒரு விளக்கம் தாருங்கள். இன்றும் கூட மேலாடை அணிந்து உள்ளே யாருமே போக முடியாது என்ற நிலையில், நீங்கள் சொன்ன சிவா சின்னப்பொடியரின் விளக்கம் சரியானதா?

ஆம். ஒருவரும் மேலாடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு சாதியத்தை இறுக்கமாகக் கடைபிடிக்கும் மரபில் இருந்து வந்ததுதான்.

நீங்கள் யாழ் நகரப் பகுதியில் வசித்திருந்தால் தெரிந்திருக்காது. ஆனால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள பல கோயில்களுக்கு சின்ன வயதில் போன அனுபவம் (அப்பா ஒரு சைவபக்தர்), குறிப்பாக சிவா சின்னப்பொடி குறிப்பிட்ட வல்லிபுரக்கோவிலில் எப்படி “பார்த்து” உள்ளே விடுவார்கள் என்பதை நேரடியாகவே கண்டிருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.