Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மீண்டும் சொல்கிறேன்... அது ஈழத்தமிழர் கலாசார வழக்கம்.

அதுக்கும் சாதியத்துக்கும் தொடர்பே இல்லை. இன்றும் கூட, நல்லூர் கோவிலினுள் செல்லும் அனைவருமே மேலாடை அணிவதில்லை. யாருமே கோருவதில்லை.

இந்த ஈழத்தமிழர் கலாச்சாரத்தின் வேர்கள் என்னவென்றுதான் ராகவனின் ஆய்வு சொல்லுகின்றது. அதைப் படிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நல்லூரில் மேலாடை அணிய யாருமே கோருவதில்லை என்று ஒரு பச்சைப்பொய்யை கூசாமல் சொல்லமுடிகின்றது உங்களால். நல்லூர் கோவிலுக்கு எப்படியான “கலாச்சார உடை” அணியவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தெரியாதவராக இருந்தால் கடந்த சில வருடங்களில் நல்லூர் உற்சவ காலங்களில் செய்திகள் படிக்காதவராக இருந்திருக்கவேண்டும். பெண்கள் ஜீன்ஸ் அணியாமல் பாவடை, சட்டை, சேலை அணியவேண்டும் என்ற செய்திகள் கூடவா கண்ணில் படவில்லை?

அங்கு நாட்டாமைகள் கோவில் நிர்வாகத்தின் உத்தரவு என்று சேர்ட்டைக் கழட்டப்பண்ணிய பதிவு கீழே இருக்கு.

http://www.errimalai.com/?p=14483

ஒரு சிறு பகுதி..

 இன்று மாலை நான் கோவிலில் சுவாமி வெளிவீதி வந்து கொண்டிருப்பதை எனது கமராவில் பதிவு செய்து கொண்டிருந்த போது ‘சேட்டைக் கழற்று‘ என்று இன்னொரு நாட்டாமை எனக்கு அருகில் வந்து நின்றது. ‘சேட்டு ஏன் கழற்ற வேண்டும்? இதுக்கு ஒரு சரியான பதிலைச் சொன்னால் நான் கழற்றுகின்றேன்?‘ என நான் கூறிய போது ‘ அது நிர்வாகத்திட ஓடர், சேட்டு இல்லாமல்தான் கமராவை வைத்திருக்க வேணும். இல்லாட்டி கமராவை கோவில் கவுண்டரில் தான் போய் எடுக்க வேணும் என்று எனது கமராவை அந்த நாட்டாமை பறிக்க முயன்றது. பக்கத்தில் சீருடையுடன் நின்ற ஒரு பொலிசுக்காரனிடம் ‘இவன் சேட்டைக் கழற்றச் சொல்லுகின்றான். ஏன் கழற்ற வேண்டும். நீங்களே போட்டிருக்கிறீங்கள்,‘ நான் ஏன் போடக்கூடாது? என முறையிட்ட போது பொலிஸ்காரனுக்கு முன்னும் கமராவை அந்த நாட்டாமை பறிக்க முற்பட்டது. உடனடியாக பொலிஸ்காரன் அவனை அந்த இடத்தில் இருந்து அகற்றிய பின்னர் நான் தொடர்ந்து கமராவில் பதிவு செய்தேன்…”

1 hour ago, Nathamuni said:

கேரள அச்சன்மார் (அண்ணர்மார்).... 

கேரளத்தில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி பகுதியில் சாதீய ஒடுக்குமுறை மன்னர் காலத்தில் மிக மோசமாக இருந்தது. பின்னர் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்தது. ஆண்கள், பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணிய மேல்சாதி ஆட்கள் தடைவிதித்திருந்தார்கள். இத்தகைய கொடுமைகளின் எச்சங்கள்தான் இப்போதும் மரபு என்ற பெயரில் இருக்கின்றது. கடுமையான போராட்டங்கள் நடந்துதான் பல உரிமைகள் அவர்களுக்கும் கிடைத்தன.

தோள் சீலைப் போராட்டம் என்று தேடினால் சிலது புரியும்.

Link to comment
Share on other sites

 • Replies 110
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

நல்லூரைப் பற்றிய முன்னைய உரையாடல்😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

On 23/7/2021 at 13:44, நிழலி said:

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத தீண்டத்தகாதவர்களையும் பிரித்தறிய செய்யும் முறை இது. 

நாம் சாதி ரீதியிலான, பிற்போக்குத்தனமான விடயங்களை மரபு என்று இன்னும் தூக்கித் திரியும் போது, அந்த இடைவெளிகளில் எதிரிகள் புகுந்து கொள்கின்றனர்.

ஏன் நிழலி.. இதற்கு இப்படியும் விளக்கம் கொடுக்கலாமே.. ஏழ்மையும் வறுமையும் வெறுமையும் பெருமையும் கடவுளுக்கு முன் தேவை இல்லை என்று காட்டவும்.. இயன்றளவு.. ஆடை குறைப்பு செய்யப்பட்டிருக்கலாம். 

மேலும்.. வெற்றுடல் என்றால் கூட்டம் அதிகம் கூடுமிடத்தில்.. உடல் வெப்பம் அதிகமாவதால்.. வியர்வை பெருகி அது உடனே ஆவியாகிடும்... இதனால்.. உடல் தன்னை சீரமைச்சு கொள்ள வசதி அதிகம் இருக்கும். homeostasis..  உடல் நலனுக்கு அது நல்லது.. 

இவ்வாறு பல வகையில் இதை சிந்திக்கலாமே.. எப்பவும்.. சாதி என்ற சகதிக்குள் தான் சிந்தனை ஓடுமா என்ன..?????! சாதியால் சமூகம் கட்டுண்டு கிடக்கோ இல்லையோ.. சில ஆக்கள் தம்மை கட்டிவைச்சிருக்கிறார் அதற்குள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இவர்கள் தான் சாதிய இருப்புக்கான நிலத்தடி அரும்புகளாவர். 

==========

மேலும்.. சாதாரண சிங்களவர்கள்.. புத்தகோவில்களில் எல்லாம் சைவக் கடவுளையும் வைத்தே வணங்குகின்றனர். பிரபல்ய புத்தவிகாரைகளில் கூட. ஆனால்.. அதென்னவோ.. வடக்குக் கிழக்கில் மட்டும் சைவக் கோயிலை கண்டால் இடிக்கின்றனர்.. உடைக்கின்றனர். இதில் இருக்கும் எண்ணம்.. இன அழிப்பும் ஆக்கிரமிப்பும் தான். வேறில்லை. 

Edited by nedukkalapoovan
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

ஒரு காலத்தில் (50 - 100 வருடங்களுக்கு உட்பட்ட காலம்தான்) ஆண்கள் வேட்டி, சால்வை, சேர்ட் அணியவும், பெண்கள் ரவிக்கை அணியவும் தடை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், அவற்றைப் போராடித்தான் பெற்றார்கள். இவற்றை சிவா சின்னப்பொடியின் புத்தகத்தை (அதன் பகுதிகள் யாழில் இருக்கின்றன என நினைக்கின்றேன்) அல்லது மேலே இணைத்த ராகவனின் ஆய்வைப் படித்தால் புரியும்.

உயர் சாதியினரே ரவிக்கை போடாமல் தான் இருந்தனர் .....சந்தையில் ரவிக்கை போடாமல் வியாபாரம் நடக்கின்றது என அறிந்த /பார்த்த ஏகாதிபத்தியவாதிகள் ரவிக்கையை அறிமுகபடுத்தினர் ....முக்கியமா மானிப்பாயில் தான்  ரவைக்கை அறிமுகமானது ,,,,மானிப்பாய் ரவிக்கை சந்தை இன்று ஒர் சான்று...
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nedukkalapoovan said:

ஏன் நிழலி.. இதற்கு இப்படியும் விளக்கம் கொடுக்கலாமே.. ஏழ்மையும் வறுமையும் வெறுமையும் பெருமையும் கடவுளுக்கு முன் தேவை இல்லை என்று காட்டவும்.. இயன்றளவு.. ஆடை குறைப்பு செய்யப்பட்டிருக்கலாம். 

மேலும்.. வெற்றுடல் என்றால் கூட்டம் அதிகம் கூடுமிடத்தில்.. உடல் வெப்பம் அதிகமாவதால்.. வியர்வை பெருகி அது உடனே ஆவியாகிடும்... இதனால்.. உடல் தன்னை சீரமைச்சு கொள்ள வசதி அதிகம் இருக்கும். homeostasis..  உடல் நலனுக்கு அது நல்லது.. 

இவ்வாறு பல வகையில் இதை சிந்திக்கலாமே.. எப்பவும்.. சாதி என்ற சகதிக்குள் தான் சிந்தனை ஓடுமா என்ன..?????! சாதியால் சமூகம் கட்டுண்டு கிடக்கோ இல்லையோ.. சில ஆக்கள் தம்மை கட்டிவைச்சிருக்கிறார் அதற்குள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இவர்கள் தான் சாதிய இருப்புக்கான நிலத்தடி அரும்புகளாவர். 

==========

மேலும்.. சாதாரண சிங்களவர்கள்.. புத்தகோவில்களில் எல்லாம் சைவக் கடவுளையும் வைத்தே வணங்குகின்றனர். பிரபல்ய புத்தவிகாரைகளில் கூட. ஆனால்.. அதென்னவோ.. வடக்குக் கிழக்கில் மட்டும் சைவக் கோயிலை கண்டால் இடிக்கின்றனர்.. உடைக்கின்றனர். இதில் இருக்கும் எண்ணம்.. இன அழிப்பும் ஆக்கிரமிப்பும் தான். வேறில்லை. 

சாதியம் போய் தலித் என்ற சொல்லாடலை அறிமுக படுத்தியதில் இந்த புரட்சிகர சிந்தனையாளர்களுக்கு /புரட்சிகர கட்டுரையாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு ...
ஐயர் ....என கோவில் பூசகர்களை அழைத்த சொல்லாடல் போய் பிராமணர்கள் என இந்திய மரபில் கொண்டு வந்து அவர்கள் தாயகத்தில் உயர் சாதிகள் என அடையாளப்படுத்த முயற்சி நடி பெறுவது போன்று ...

சாதியத்தை தலித் என்ற சொல்லாடலை அறிமுகப்படுத்தி தமிழ்நாட்டு அரசியல் செய்ய முயற்சி செய்கின்றனர்....

சாதியத்தை ஒரு இரவில் அழிக்க முடியாது.....பொருளாதாரமும் கல்வியும் வளர்ச்சியடைய சாதிய திமிர் பிடிச்சவர்கள் புலம்பெயர மாற்றங்கள் நடை பெறும்....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இந்த ஈழத்தமிழர் கலாச்சாரத்தின் வேர்கள் என்னவென்றுதான் ராகவனின் ஆய்வு சொல்லுகின்றது. அதைப் படிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நல்லூரில் மேலாடை அணிய யாருமே கோருவதில்லை என்று ஒரு பச்சைப்பொய்யை கூசாமல் சொல்லமுடிகின்றது உங்களால். நல்லூர் கோவிலுக்கு எப்படியான “கலாச்சார உடை” அணியவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தெரியாதவராக இருந்தால் கடந்த சில வருடங்களில் நல்லூர் உற்சவ காலங்களில் செய்திகள் படிக்காதவராக இருந்திருக்கவேண்டும். பெண்கள் ஜீன்ஸ் அணியாமல் பாவடை, சட்டை, சேலை அணியவேண்டும் என்ற செய்திகள் கூடவா கண்ணில் படவில்லை?

அங்கு நாட்டாமைகள் கோவில் நிர்வாகத்தின் உத்தரவு என்று சேர்ட்டைக் கழட்டப்பண்ணிய பதிவு கீழே இருக்கு.

http://www.errimalai.com/?p=14483

ஒரு சிறு பகுதி..

 இன்று மாலை நான் கோவிலில் சுவாமி வெளிவீதி வந்து கொண்டிருப்பதை எனது கமராவில் பதிவு செய்து கொண்டிருந்த போது ‘சேட்டைக் கழற்று‘ என்று இன்னொரு நாட்டாமை எனக்கு அருகில் வந்து நின்றது. ‘சேட்டு ஏன் கழற்ற வேண்டும்? இதுக்கு ஒரு சரியான பதிலைச் சொன்னால் நான் கழற்றுகின்றேன்?‘ என நான் கூறிய போது ‘ அது நிர்வாகத்திட ஓடர், சேட்டு இல்லாமல்தான் கமராவை வைத்திருக்க வேணும். இல்லாட்டி கமராவை கோவில் கவுண்டரில் தான் போய் எடுக்க வேணும் என்று எனது கமராவை அந்த நாட்டாமை பறிக்க முயன்றது. பக்கத்தில் சீருடையுடன் நின்ற ஒரு பொலிசுக்காரனிடம் ‘இவன் சேட்டைக் கழற்றச் சொல்லுகின்றான். ஏன் கழற்ற வேண்டும். நீங்களே போட்டிருக்கிறீங்கள்,‘ நான் ஏன் போடக்கூடாது? என முறையிட்ட போது பொலிஸ்காரனுக்கு முன்னும் கமராவை அந்த நாட்டாமை பறிக்க முற்பட்டது. உடனடியாக பொலிஸ்காரன் அவனை அந்த இடத்தில் இருந்து அகற்றிய பின்னர் நான் தொடர்ந்து கமராவில் பதிவு செய்தேன்…”

அதாவது அச்சுவேலியில் இராணுவத்தினர் சேர்ட்டுடன் சாமி தூக்கியமைக்கு காரணம் .....கோவில் நாட்டாமைமாருக்கு பாடம் புகட்ட இந்த எரிமலை போன்ற கட்டுரையாளர்களின்  செயல் என்று எடுத்து கொள்ளலாமா?

எது எப்படியோ கோத்தாபாயா 18 வயதுக்கு மேற்பட்ட  இளைஞர் யுவதிகளுக்கு இராணுவ பயிற்சி வழங்க போகின்றார் அதன் பின்பு ஒரு பிரச்சனையும் இருக்காது ....
இது கோத்தாவின் வெள்ளோட்டமாக இருக்கும்....சாமி காவும் பொழுது  முன்னுக்கு நின்று காவுவதற்கு  அடிபடாமல்  டிசன்டா காவ பழக வேண்டும் என யாழ் இளைஞர்களுக்கு பாடம் எடுக்கின்றார் போல 😅

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

@கிருபன் வல்லிபுரகோவிலில் பெண்களையும் சிறுவர்களையும் எவ்வாறு சாதிய அடிப்படையில் அடையாளம் காணுவார்கள்??

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஆகவே மேலாடை இல்லாமல் உள்ளே வரக்கூடாது என்பது தொன்று தொட்டு வரும் மரபு.

ஆனால் இந்த மரபு ஏன் வந்தது ? இங்கேதான் சாதியம் காரணமாக இருக்கலாம் என்கிறார் கிருபன்.

மேலாடை நீக்கத்திற்கு சாதியம் தான் காரணம் என்றால்.....
கோவில்களில் சாதி காரணமாக ஒரு எல்லைக்கு வெளியில் நிறுத்தப்படும் ஆண்களும் மேலாடை இன்றித்தான் நிற்கின்றார்கள்.

அது மட்டுமல்லாமல் கீழ்சாதியினர் என குறுப்பிடப்படுபவர்களும் தங்கள் உரித்துடைய கோவில்களில் மேலாடை இன்றியே வழிபடுகின்றார்கள்.இங்கே எப்படி சாதி வேற்றுமை பார்க்க முடிகின்றது?
 
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் போல பெண்களும் மேலாடை இன்றி வரவேண்டும் என்பதே கோவில் நிர்வாகத்திடம் எனது தாழ்மையான வேண்டுகோல்.. 🙏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

மேலாடை நீக்கத்திற்கு சாதியம் தான் காரணம் என்றால்.....
கோவில்களில் சாதி காரணமாக ஒரு எல்லைக்கு வெளியில் நிறுத்தப்படும் ஆண்களும் மேலாடை இன்றித்தான் நிற்கின்றார்கள்.

நீங்கள் சொல்வதில் நிறைய தர்க நியாயங்கள் உள்ளன. 

உண்மையில் முன்பு எமது கோவில்களில் யார் உள்ளே வரக்கூடாது என்பதை விட யார் மட்டும் வரலாம் என்றே இருந்தது. வேற்று மாவட்ட உயர்த்தபட்ட சாதிக்கார் என்றாலும் இன்னொரு உள்ளூர்காரர் சொல்லாதவரை உள்ளே விடுவதில்லை. 

ஆகவே மேலாடையை நீக்கி, உடம்பில் உள்ள தழும்புகளை வைத்து சாதியை, உள்நுழையும் வலுவை தீர்மானித்தாரகள் என்பது கேள்விக்குள்ளாக வேண்டியதே.

அதுவும் எல்லாரும் ஒரே போல உடல் வருத்தி தொழில் செய்யாத போது இதை  கண்டுபிடிப்பதும் கடினம். உள்ளூரில் மேலாடை இருந்தாலும், இல்லாவிட்டாலும் யார், யாரென்பது தெரியும்.

நான் இதை இப்படி பார்கிரேன் அண்ணை. 

சாதியை விடுவம்.

சாதி இல்லை என்றால் வேறு என்ன காரணத்துக்காக மேலாடையை நீக்குகிறோம்? 

இதற்கு ஒரு பதில்தான். கடவுளின் மீதான பயபக்தியை பறைசாற்ற.

சரி அப்போ உயர்த்தப்பட்டவர் வரும் போது ஏன் துண்டை தலையில் இருந்து/தோளில் இருந்து இறக்க வேண்டும்? அவர்கள் மீதானா பயபக்தியை பறைசாற்ற.

அதானல் சாமிக்கு முன்பும், சாதிக்கு முன்பும் அவர்கள் சேட்டை கழற்றி பழகிவிட்டார்கள். 

இப்போ சாதிக்கு முன் சேட்டை கழற்றுவதில்லை.

ஆனால் இந்த மரபை,

நான் உயர்சாதிக்காரண்டா, உனக்கு நானும் கடவுள் ஒன்றுதான்

என்ற முந்தைய அடக்குமுறையின் எச்சமாக பார்க்ககூடும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

சாதி இல்லை என்றால் வேறு என்ன காரணத்துக்காக மேலாடையை நீக்குகிறோம்? 

 சாதி கோட்பாடுகளுக்குள் வராமல் இந்த மேலாடை நீக்கம் பற்றி கொஞ்சம் கதைக்கலாம். இதற்கும் கொஞ்சம் புரிந்துணர்வு வேண்டும்.

அன்றைய காலங்களில் கிராமத்தில் வாழும் அனைத்து ஆண்களும் மேலாடை இன்றியே தமது கிராமங்களுக்குள் உலாவினர். நான் உட்பட.... இங்கு சாதீயம் உணரப்படவில்லை.திணிக்கப்படவில்லை.

இன்று நாகரீகத்தால் எமது ஊர்களில் ரவுசர் போடுகின்றார்கள். சாரம் கட்டுவது மலையேறிக்கொண்டு போகின்றது. இதற்கும் கரணவாய் கண்ணன் கருத்து வைத்திருப்பாரா?🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

@கிருபன் வல்லிபுரகோவிலில் பெண்களையும் சிறுவர்களையும் எவ்வாறு சாதிய அடிப்படையில் அடையாளம் காணுவார்கள்??

அவர்களை கோவிலுக்கு கூட்டி வந்த ஆண்களை உடலை வைத்துதான்😉

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

அவர்களை கோவிலுக்கு கூட்டி வந்த ஆண்களை உடலை வைத்துதான்😉

ஜீ மாட்டினாரு இதுக்கு என்ன பதில் சொல்ல போறாப்ல எண்டு யோசிச்சுட்டு இருந்தன்.. ஜீ நீங்க வேற லெவல் ஜீ.. பிரக்குராசியா வரவேண்டிய ஆள்.. 👍👊

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, goshan_che said:

சாதி இல்லை என்றால் வேறு என்ன காரணத்துக்காக மேலாடையை நீக்குகிறோம்? 

எல்லாம் ஆறுமுகநாவலர் சொன்னபடிதான். ஏன் ஆறுமுகநாவலர் பெண்களின் உடைகள் பற்றி சொல்லவில்லை? சிலவேளை பொதுவாக எழுதியிருப்பாரா?😀

👇🏾 இந்தத்திரியில் நாதமும் எழுதியிருக்கின்றார்..

24. திருக்கோயிலிலே செய்யத் தகாத குற்றங்கள் யாவை?

ஆசாரம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், சயனித்தல், காலை நீட்டிக் கொண்டு இருத்தல், மயிர் கோதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை உண்டல், சிரசிலே வஸ்திரந் தரித்துக்கொள்ளுதல், தோளிலே உத்திரீயம் இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், (அழுத்தம்: கிருபன்) விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் (பூசித்துக் கழித்த பொருள்) கடத்தல், நிருமாலியத்தை மிதித்தல், தூபி துசத்தம்பம் பலிபீடம் விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண் வார்த்தை பேசல், சிரித்தல், சண்டை இடுதல் விளையாடுதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்குங் குறுக்கே போதல் முதலியவைகளாம்.

3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஜீ மாட்டினாரு இதுக்கு என்ன பதில் சொல்ல போறாப்ல எண்டு யோசிச்சுட்டு இருந்தன்.. ஜீ நீங்க வேற லெவல் ஜீ.. பிரக்குராசியா வரவேண்டிய ஆள்.. 👍👊

இப்படியான கேள்வி வருமென்று மீரா கேட்க முதலே அதையும் எழுத நினைத்திருந்தேன். எதற்கும் கேள்வி வருமட்டும் காத்திருப்போம் என்று விட்டுவிட்டேன்😂

Edited by கிருபன்
 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் கோயில் அடியார்கள், மற்றும் யாழ் கருத்துக்கள சமூக ஆர்வலர்கள், அன்பர்களின் அபிப்பிராயங்கள் நீங்கலாக, தன்னை கோயில் உற்சவத்தில்  இலங்கை இராணுவத்தினர் தூக்கி சென்றது பற்றி எங்கள் சுவாமி சித்திவிநாயகர் என்ன கூறுகின்றார்? சுவாமி சொல்வதை முதலில் நாங்கள் எல்லோரும் காது கொடுத்து கேட்டுவிட்டு மிகுதி என்ன செய்யலாம் என்று யோசிப்போம். 🙏🙏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

உயர் சாதியினரே ரவிக்கை போடாமல் தான் இருந்தனர் .....சந்தையில் ரவிக்கை போடாமல் வியாபாரம் நடக்கின்றது என அறிந்த /பார்த்த ஏகாதிபத்தியவாதிகள் ரவிக்கையை அறிமுகபடுத்தினர் ....முக்கியமா மானிப்பாயில் தான்  ரவைக்கை அறிமுகமானது ,,,,மானிப்பாய் ரவிக்கை சந்தை இன்று ஒர் சான்று...
 
அப்படியானால் ஆண்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் இப்போது? பெண்களும் ரவிக்கை போடாமல் கோவிலுக்கு வரவேண்டியதுதானே!

ஆறுமுகநாவலரின் சைவ வினா விடை மனுதர்மத்தின் யாழ்ப்பாண வடிவமே. அதைத்தான் கோவில் நாட்டாமைகள் விடாது பின்பற்றுகின்றார்கள். 

53 minutes ago, குமாரசாமி said:

அன்றைய காலங்களில் கிராமத்தில் வாழும் அனைத்து ஆண்களும் மேலாடை இன்றியே தமது கிராமங்களுக்குள் உலாவினர். நான் உட்பட.... இங்கு சாதீயம் உணரப்படவில்லை.திணிக்கப்படவில்லை.

அவரவர் தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்ததால் உணரப்படாமல் இருந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, குமாரசாமி said:

இன்று நாகரீகத்தால் எமது ஊர்களில் ரவுசர் போடுகின்றார்கள். சாரம் கட்டுவது மலையேறிக்கொண்டு போகின்றது. இதற்கும் கரணவாய் கண்ணன் கருத்து வைத்திருப்பாரா?

இவை எல்லாம் நல்ல முன்னேற்றங்களே. நானே சாரத்தைக் கட்டிக் கனகாலம்.! 
முன்னேற வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் உள்ளது போன்று வேட்டி, சட்டை, சேலை, ரவிக்கை, பாவாடை, தாவணி என்று “கலாச்சாரமாக” உடுத்தச் சொல்லலாம். ஆண்களை மேலாடை அணியக்கூடாது என்று நாவலர் வைத்த சட்டத்தை கடாசிவிட்டால் ஆண்களின் தொங்குதசைகளைப் பார்த்து பெண்கள் முகம் சுளிக்கவேண்டியதில்லை. எங்களைப் போன்றவர்களின் “கட்ஸான” உடலைப் பார்த்து மேகலை “கலீர்” என்ற சத்தத்துடன் அறுந்துவிழவேண்டியதுமில்லை🤪

13 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

தன்னை கோயில் உற்சவத்தில்  இலங்கை இராணுவத்தினர் தூக்கி சென்றது பற்றி எங்கள் சுவாமி சித்திவிநாயகர் என்ன கூறுகின்றார்?

நானும் தேருக்கு மறுபடியும் இராணுவத்தினர் வடம் பிடிப்பார்களா இல்லையா என்று அறிய வெயிட்டிங்!

Edited by கிருபன்
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

எங்களைப் போன்றவர்களின் “கட்ஸான” உடலைப் பார்த்து மேகலை “கலீர்” என்ற சத்தத்துடன் அறுந்துவிழவேண்டியதுமில்லை

ஏதே….

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

அவர்களை கோவிலுக்கு கூட்டி வந்த ஆண்களை உடலை வைத்துதான்😉

அப்போ எல்லா பெண்களும் சிறுவர்களும் ஆண்களுடன் தான் கோவிலுக்கு செல்கிறார்களா?

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

Quote

அது மட்டுமல்லாமல் கீழ்சாதியினர் என குறுப்பிடப்படுபவர்களும் தங்கள் உரித்துடைய கோவில்களில் மேலாடை இன்றியே வழிபடுகின்றார்கள்.இங்கே எப்படி சாதி வேற்றுமை பார்க்க முடிகின்றது?

மறவன்புலவில் உள்ள அண்ணமார் கோவிலில் மடை ,திருவிழா என அமோகமாக நடைபெறும் திருவிழாக்களில் கோவிலுக்குள் மேலாடை இல்லாமல் தான் ஆண்கள் இருப்பார்கள். 

Link to comment
Share on other sites

9 hours ago, MEERA said:

அப்போ எல்லா பெண்களும் சிறுவர்களும் ஆண்களுடன் தான் கோவிலுக்கு செல்கிறார்களா?

அவர் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லி நிறுவ முனைகிறார். அதற்கு சிவா சின்னப்பொடியர் எழுதியதை ஆதாரமாக கொண்டு வருகிறார்.

சிவா சின்னப்பொடியரின் போராட்டம் சம்பந்தமான பல எழுத்துக்களை நான் இங்கே இணைத்துள்ளேன்  ஆனால் சிவா சின்னப்பொடியரின் சாதி சம்பந்தமான எழுத்துக்களில் தான் கண்டதையும் தனக்கு இழைக்கப்பட்டவற்றையுமே எழுதி வருகிறார். அவை ஒரு வித பழிவாங்குதல் போன்றே இருக்கும். (என்னை பொறுத்தவரை)

மாறாக நான் கண்டதையும் என் தலைமுறை செய்த மாற்றங்களையும் நான் எழுதினால் அது வேறுவிதமாக இங்கே  பார்க்கப்படும்??

Edited by விசுகு
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சாதி ஒழிய வேண்டும் என நினைப்பவர்கள் இருக்கும் வரை சாதி ஒழிவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றது.
ஆனால் சாதியை ஒழித்து விட்டோம் என்று கூறுபவர்கள் இருக்கும் வரை சாதி முறை அவர்களாலேயே வளர்க்கப்பட்டு வரும்.

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

இவை எல்லாம் நல்ல முன்னேற்றங்களே. நானே சாரத்தைக் கட்டிக் கனகாலம்.! 
முன்னேற வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் உள்ளது போன்று வேட்டி, சட்டை, சேலை, ரவிக்கை, பாவாடை, தாவணி என்று “கலாச்சாரமாக” உடுத்தச் சொல்லலாம். ஆண்களை மேலாடை அணியக்கூடாது என்று நாவலர் வைத்த சட்டத்தை கடாசிவிட்டால் ஆண்களின் தொங்குதசைகளைப் பார்த்து பெண்கள் முகம் சுளிக்கவேண்டியதில்லை. எங்களைப் போன்றவர்களின் “கட்ஸான” உடலைப் பார்த்து மேகலை “கலீர்” என்ற சத்தத்துடன் அறுந்துவிழவேண்டியதுமில்லை🤪

முற்றிலும் தவறான கருத்து.
மீள் பரிசோதனை செய்யவும் 😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

சிவா சின்னப்பொடியரின் போராட்டம் சம்பந்தமான பல எழுத்துக்களை நான் இங்கே இணைத்துள்ளேன்  ஆனால் சிவா சின்னப்பொடியரின் சாதி சம்பந்தமான எழுத்துக்களில் தான் கண்டதையும் தனக்கு இழைக்கப்பட்டவற்றையுமே எழுதி வருகிறார். அவை ஒரு வித பழிவாங்குதல் போன்றே இருக்கும். (என்னை பொறுத்தவரை)

சிவா சின்னப்பொடி அவர்களின் எழுத்துக்கள் பழிவாங்கல் என்பது உங்கள் கருத்து
எனது பார்வையில் அவரது எழுத்துக்கள்
மனிதத்திற்கான போராட்டத்தை அனுபவ மூலமாக வெளிக்கொண்டு வருகின்றார்
அவ்வாறு இன்னும் தனது அனுபவங்களை   எழுதும் பொது நாங்கள் முகம் சுழிக்காமல் வரவேற்க வேண்டும்
என்பது எனது தாழ்மையான கருத்து 

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

சாதி ஒழிய வேண்டும் என நினைப்பவர்கள் இருக்கும் வரை சாதி ஒழிவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றது.
ஆனால் சாதியை ஒழித்து விட்டோம் என்று கூறுபவர்கள் இருக்கும் வரை சாதி முறை அவர்களாலேயே வளர்க்கப்பட்டு வரும்.

சாதி ஒழிந்து விட்டது அல்லது சாதிய ஒழிப்பை பற்றி பேச வேண்டியதேவை இப்போ இல்லை என்று சொன்ன தாழ்ந்த பட்ட சமூகத்தை சார்ந்த ஒருவரையும் நான் இன்னமும் சந்திக்கவில்லை.

இது இலங்கையில் இனப்பிரச்சனை இல்லை என சிங்களவர்கள் சொல்வதை போல. 

எப்போ தமிழனும் முஸ்லீமும் இனப்பிரச்சனை இல்லை என்று உணர்கிறானோ அப்போதுதான் இனப்பிரச்ச்னை தீர்ந்தாக அர்த்தம்.

எப்போது தாழ்த்தபட்ட மக்கள் சாதி ஒழிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறார்களோ அப்போதுதான் சாதி ஒழிந்ததாக அர்த்தம்.

நிச்சயமாக 2009 க்கு பின் ஊரில் நிலமை பின்னோக்கியே போயுள்ளது. 

 • Like 4
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.