Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, MEERA said:

அப்போ எல்லா பெண்களும் சிறுவர்களும் ஆண்களுடன் தான் கோவிலுக்கு செல்கிறார்களா?

மீரா, இது சும்மா கேட்கவேண்டும் என்று கேட்டகேள்வி. காலங்களை குழப்பாமல் யோசித்திருந்தால் இந்தக்கேள்வியே வந்திருக்காது. ஆசாரவாதியும், அதிவிவேகியும் பச்சை குத்தவேண்டியும் வந்திருக்காது😂

ஆலயப் பிரவேசப் போராட்டம் நடந்து வல்லிபுரம் போன்ற பெரிய கோவில்களில் இப்போது எவரும் போகலாம் என்ற நிலைமை வந்துவிட்டது (ஆனால், கிராமங்களிலும் குறிச்சிகளிலும் உள்ள சில/பல கோவில்களுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் இப்போதும் போகமுடியாது). எனவே, போக்குவரத்து வசதிகள் குறைந்து தட்டிவானிலும், மாட்டுவண்டிகளிலும், சைக்கிள்களிலும் பயணம் செய்த அந்தக் காலத்தில், அயலட்டையில் வசிக்கும் சிலரைத் தவிர, மற்றையோர் எல்லாம் குடும்பமாகத்தான் கோவில்களுக்கு போவார்கள். தனியே பெண்களும், சிறுவர்களும் போகும் நிலை அந்தக் காலத்தில் இருந்திருக்க வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. அப்படி ஆண்களில்லாத குடும்பம் என்றால் உறவினர்களுடன் சேர்ந்த்துதான் போயிருப்பார்கள். 

நாங்கள் எல்லாம் சிறுவயதில், பதின்ம வயதின் ஆரம்பங்களில் பெற்றோருடன்தான் கோவில்களுக்குப் போய் வந்தோம். தனியே போவதென்றால் திருவிழாக் காலங்களில் சாமிகும்பிடப் போகாமல், கோவில் வீதிகளில் அல்லது தேர்முட்டியில் பொழுதுபோக்கப் போயிருந்தோம்.

Link to comment
Share on other sites

 • Replies 110
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, goshan_che said:

சாதி ஒழிந்து விட்டது அல்லது சாதிய ஒழிப்பை பற்றி பேச வேண்டியதேவை இப்போ இல்லை என்று சொன்ன தாழ்ந்த பட்ட சமூகத்தை சார்ந்த ஒருவரையும் நான் இன்னமும் சந்திக்கவில்லை.

இது இலங்கையில் இனப்பிரச்சனை இல்லை என சிங்களவர்கள் சொல்வதை போல. 

எப்போ தமிழனும் முஸ்லீமும் இனப்பிரச்சனை இல்லை என்று உணர்கிறானோ அப்போதுதான் இனப்பிரச்ச்னை தீர்ந்தாக அர்த்தம்.

எப்போது தாழ்த்தபட்ட மக்கள் சாதி ஒழிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறார்களோ அப்போதுதான் சாதி ஒழிந்ததாக அர்த்தம்.

நிச்சயமாக 2009 க்கு பின் ஊரில் நிலமை பின்னோக்கியே போயுள்ளது. 

இனப்பிரச்சினையை ஒப்பீடாக நீங்கள் எடுத்ததால் அதே ஒப்பீட்டில் பதில் சொன்னால்?

சாதி சார்ந்த பிரச்சனை வேறு விதமாக நகர்கிறது.

அதாவது தமிழர் பகுதிகளில் உள்ள அனைவரும் சிங்கள பகுதியில் குடியேறிவிட்டால் அதாவது தம்மை சிங்களவராக மாற்றிக்கொண்டால் சரி செய்யப்பட்டு விட்டது என்று பார்க்க படுகிறது.

ஆனால் சாதி அழியாமல் மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. காரணம் சிங்கள பகுதியில் குடியேறி சிங்களவர்களாக மாறியவர்கள் தான்.  இதில் இன்னொரு நடைமுறை என்னவென்றால் இவர்கள் தமிழ்ப் பகுதிகளை முற்று முழுதாக புறக்கணித்து விடுவார்கள்.

பிரெஞ்சு தேசத்தில் சொல்வார்கள். பிரெஞ்சுகாரர்கள் இனத்துவேசம் இல்லாதவர்கள் அவர்களை மணம் முடித்த அல்லது பிரெஞ்சுக்காரர்களாக மாறிய வெளிநாட்டவர்கள் தான் அதி துவேசிகள் என்று. 

இவை இரண்டையுமே நான் கண்டிருக்கிறேன்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விசுகு said:

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால் இதன் காரணம் என்ன?

சிங்களவர்கள் விவேகமாக உள்வாங்கும் உத்தியை கடை பிடிக்கிறார்கள். நீங்கள் கண்டியா, காலியா, முன்பு அரைத்தமிழனா, முழுத்தமிழனா - நீங்கள் உங்களை சிங்களவனாக உணர்ந்து அந்த இனத்தின் வழக்கப்படி வாழ்ந்தால் நீங்களும் சிங்களம்தான். ஏதோ ஒரு தூரத்து சிங்கள மூதாதையின் பெயரை, சாதியை உங்களுக்கும் தந்து ஏற்றுகொள்வார்கள்.

நான் இன்னொரு திரியில் சொன்ன, கலப்பின குடும்பங்கள் ஒரு தலைமுறைக்குள் சிங்களமாகவே மாறிவிடும் built-in பொறிமுறையின் ஓரங்கம் இது.

👆🏼இதுதான் இனவாதம்.

சாதிவாதம்? வலிந்து வெளிதள்ளும். “ஆக்கள் ஓகேதான், ஆனால் பிள்ளையிண்ட்ட அம்மான்ற, சித்தி கலியாணம் கட்டின இடம் சரியில்லையாம்” இப்படி தள்ளி போன கலியாணங்கள் எத்தனை?

சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகள் எத்தனை பேரை அதே ஊரில் நிம்மதியாக இருக்க விடுவார்கள்? ஏன் கொழும்பிலோ, மட்டகளப்பிலோ, போய் வாழ்வதை அவர்கள் தேரும் படி ஆகிறது?

இதுதான் வித்தியாசம், சிங்கள இனவாதம் வட்டத்தை பெருப்பித்து கொண்டே, வட்டத்துள் வராதவரை தாக்கும்.

சாதியவாதம் வட்டத்தை குறுக்கி கொண்டே வட்டத்துள் வராதவரை தாக்கும்.

இனவாதத்தால் வட்டத்துக்கு வெளியில் உள்ளவருக்குத்தான் ஆபத்து.

குறுக்கும் சாதியவாதம் உள்ளே, வெளியே இருக்கும் இருவருக்கும் ஆபத்து.

Edited by goshan_che
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் சொல்ல வந்தது வேறு. ஆனால் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.

அதனால் தான் அதை கிளறக்கூடாது என்கிறேன்.

எனது 3 பரம்பரைக்கு முன் நடந்ததை இருந்ததை எனது பிள்ளைகளுக்கு விதைக்க நான் விரும்பவில்லை. ஏனெனில் அது இப்பொழுது இல்லை இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது. ஆனால் சிலர் விதைக்கிறார்கள்.   விதைக்கும் போது 100 இல் 10 பேருக்கு தலைக்குள் இது ஏறிவிட்டால்?? 

எனவே இன்றைய நிலையில் இருந்து இன்னும் நாம் புதிய மாற்றங்களை உள் வாங்கணும் ஏற்படுத்தணுமே தவிர 1000 அல்லது100 ஆண்டுகளுக்கு பின் சென்று???

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

நானும் இதை இப்படித்தான் முன்பு யோசித்தேன். 83-2009 வரையான பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள் இவை வழக்கொழிந்து போகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தின. இதை இப்படியே விட்டால், காலமும் அவர்களுமாக சேர்ந்து இதை தட்டி நிமித்தி விடுவார்கள் என்றுதான் அன்று தோன்றியது. அந்த நிலை தொடர்ந்தால் அப்படி நடந்திருக்க கூடும்.

ஆனால் 2009 க்கு பின்னான நிலை மீண்டும் 83க்கு போகிறது.

இதை “கிளறாமல்” விட்டால் இது மேலும் மேலும் பின்னோக்கித்தான் போகும்.

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனது ஒன்றுவிட்ட தங்கை 'தாழ்த்தப்பட்டதாக' எமது சமூகத்தில் கருதப்படும் இன்னொரு சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்தார். இப்போது அவர்கள் பிரித்தானியாவில் இருக்கின்றனர். அவர்கள் எமது குடும்ப நிகழ்வுகளுக்கு வர விரும்புவதில்லை அத்துடன் எமது ஊருக்கும் குடும்பமாக போவதில்லை.

காரணம்.....................?

யாழ்ப்பாணத்தில் சாதியம் இல்லை என்று சொல்பவர்கள் பெரும்பாலானோர் யாழில் ஆதிக்க நிலையில் உள்ள சாதியைச் சேர்ந்தவர்களே.

அவர்கள்வெளிநாடுகளில் இருக்கும் இனவாதம் தொடர்பாக பெரியளவில் முழங்குவார்கள். ஆனால் தங்கள் மனங்களில் தங்களிடையே ஆழ வேரூன்றி இருக்கும் சாதியத்தின்கொடுமைகளை ஏற்க மறுப்பர். 

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, manimaran said:

சமூகத்தின், ஒவ்வொரு மட்டத்திலும் புரை ஓடிப்போயுள்ள, சாதியம் குறித்து அப்படியே வெறுமனே சொல்ல முடியாது.

ஒரு உதாரணம் சொல்வதானால், ஜெர்மனிக்கு ஒரு நண்பர் போயிருந்தார்.

அங்கே அவர் தன்னுடன் முன்னர் படித்த ஒருவரை சந்தித்தார். அவரிடம் தம்முடன் சேர்ந்து படித்த இனொருவர் குறித்து கேட்டபோது, 'அவனோ... கிட்டதிலே வந்தவன், நான் தான் எண்ட ரெஸ்டூரண்ட்ல சேர்த்து விட்டேன்'....

அவன் பீங்கான், நான் சாலட் என்றாராம். அர்த்தம், அவனிலும் பார்க்க, நான் உயர்வான வேலை என்று சொல்கிறாராம். இருவரது வேலையுமே உயர்வானது அல்லவாயினும், அதனுள்ளே ஒரு உயர்வு, தாழ்வு பார்க்கும் மனப்பாங்கு. 

இதனை அப்படியே, சாதியம் உடன் தொடர்பு படுத்தினால், ஒருவர், இன்னும் ஒருவரை தம்மை விட தாழ்ந்தவர் என்று நினைத்தால், அந்த நபரும், இனொருவரை தன்னை விட தாழ்ந்த நிலையில் உள்ளார் என்று பார்ப்பது.

இதுவேதான் நீக்கப்பட முடியாமல் இருக்கும், சாதியத்தின், சமூகத்தின், ஒவ்வொரு மட்டத்திலும் புரை ஓடிப்போயுள்ள, மிக மோசமான பிரச்னை. இது குறித்து பேசாமல், வெறுமனே சாதியம் என்று சொல்வதால் பிரயோசனம் இல்லை.

மேலும், யாழ்ப்பாணத்தில், நீங்கள் சொல்லும் ஆதிக்க சாதிகள், முன்னர் அய்யர்மார்கள் போலவே, இன்று குறைவாக உள்ளனர், குடிபெயர்வின் காரணமாக என்றும் சொல்கிறார்கள். ஆகவே, புதிய ஆதிக்க சாதியினர் உருவாகின்றனர்.

முன்பு, ஆதிக்க சமுகத்துக்கு, தமது மேலாதிக்கத்தினை காண்பிக்க, சில சமூகத்தின், ஒரு சிலர், தம்மை வன்முறையார்களாக காட்டிக்கொண்டு இருந்தார்கள். போராட்ட இயங்கங்கள் வந்த பின்னர், இவர்களில் பலர் எச்சரிக்கப்பட்டனர், மீறியோர் சுடப்பட்டனர். 

அவ்வகையில் வந்த சமத்துவம், இன்று மறுபடி, வாள்வெட்டு கோஸ்டிகள் என்ற பெயரில் இல்லாமல் போகிறது.

அதே வேளை, சிலப்பகுதிகளில், ஈபிடிபி உறுப்பினர்கள், சில ஆதிக்க சாதிகளை என்று கருதப்பட்ட, தம்மை முன்பு தாழ்த்தப்பட்டவர்கள் என்று அவமதித்த சிலர், சித்திரவதை செய்து கொலை செய்த நிகழ்வும் நடந்தது.

ஒரு மேல் சாதி, வலது குறைந்த பெண்ணை, காதலித்து, வீட்டில் இருந்து கிளப்பி, திருமணம் செய்து, அதனை போஸ்டர் அடித்து பெருமையாக ஒட்டிய விடயமும் நடந்த நிலையில், (பின்னர் அந்த பெண்ணை கைவிட்டது வேறு விடயம்) இதனை எப்படி பார்ப்பது என்ற கேள்வி எழுகிறது.

போதுமான கல்வியறிவும், வேலை வாய்ப்பும், பொருளாதார அபிவிருத்தியும் தான் இந்த சாதிய பிரச்சனையை இல்லாமல் செய்யும்.

****

கனடாவில் ஒரு விளம்பரம். வரன் (பொதுப்பெயர், மாப்பிள்ளை, பொம்பிளைக்கு) வேண்டும் என்று. ஒரு நண்பர் விசாரிக்க எடுத்திருக்கிறார்.

போன் எடுத்த நபர், வரனின் தந்தையார், உடனடியாகவே, நாம் யாழ்ப்பாணத்தில், இவ்விடம், இன்ன சாதி என்று இவர் விசாரிக்க முதலே தகவல் சொல்லி இருக்கிறார். 

நான், கேட்கவில்லையே, ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்ட போது, உங்கள் நேரத்தினை சேமிக்கிறேன் தம்பி. எப்படியும் விசாரித்த பின்னர், குறிப்பு எல்லாம் பார்த்து செலவழித்து போட்டோம்.... முதலே சொல்லி இருந்திருக்கலாமே என்று கத்துவீர்கள் என்றாராம். 

அவர் யாழ்ப்பாணத்தில் ஒரு கோவில் அய்யர்.

கடல்கடந்தும், இதுதான் நிலைமை.

****

தென்பகுதியில், கடந்த தேர்தலில் சஜித், கோத்தாவுக்கு எதிராக களமிறங்கினார். தென் பகுதியில் அவரது சாதிய நிலை குறித்து தமிழர்கள் கவலைப்படவில்லை, வாக்களித்தார்கள். ஆனால் சிங்களவர்களுக்கு அது ஒரு பொருட்டாக இருந்ததால், கோத்தா, சிங்கள மக்கள் பெருமளவிலான வாக்களிப்புடன் வென்றார். (அதுவும் ஒரு காரணம்).

இந்த காரணமாகவே, தேர்தலின் பின்னர், அவரது அரசியலில் தொய்வும், ரணில் மீள்வருகையும் காரணம் என்று தமிழ் மிரர் எழுதுகிறது. 

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாறில், சிங்கள மக்கள் வாக்குகளில் மட்டுமே வென்ற ஒருவராக, கோத்தா உள்ளார்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Nathamuni said:

அவன் பீங்கான், நான் சாலட் என்றாராம். அர்த்தம், அவனிலும் பார்க்க, நான் உயர்வான வேலை என்று சொல்கிறாராம். இருவரது வேலையுமே உயர்வானது அல்லவாயினும், அதனுள்ளே ஒரு உயர்வு, தாழ்வு பார்க்கும் மனப்பாங்கு. 

இந்த செய்யும் வேலையை வைத்து ஏற்ற தாழ்வு பார்க்கும் மனநிலை உலகெங்கும் உள்ளதுதான். ஒண்டா வேலை செய்துவிட்டு பதவி உயர்வு கிடைத்ததும் சீன் போடுபவர்கள் எல்லா நாடுகளிலும், இனங்களிலும்  உள்ளார்கள். 

இதுவல்ல சாதியம்.

சாதியம் பிறப்பால் வருவது. மேலாளர் என்றாலும் தாழ்தபட்டவர் என்பதால் அவரை கீழாக/பிரித்து நடத்துவதே சாதியம். 

தவிர “நான் அவனை விட பெரிய வேலை” என்ற சின்னத்தனம் சாதியம் அல்ல.

38 minutes ago, Nathamuni said:

மேலும், யாழ்ப்பாணத்தில், நீங்கள் சொல்லும் ஆதிக்க சாதிகள், முன்னர் அய்யர்மார்கள் போலவே, இன்று குறைவாக உள்ளனர், குடிபெயர்வின் காரணமாக என்றும் சொல்கிறார்கள். ஆகவே, புதிய ஆதிக்க சாதியினர் உருவாகின்றனர்.

ஐயர்கள் ஒரு போதும் யாழில் ஆதிக்க சாதிகளாக இருக்கவில்லை. கோவில் பூசை செய்பவர்கள், வெள்ளாள சாதி பெரியவர்களின் கருவிகளாக இருந்தார்கள்.  

தவிர பூக்கட்டுதல், உணவு சமைத்தல், கிரியை செய்பவர்கள் எந்த அதிகாரமும் அற்றே இருந்தார்கள். 

மிக சொற்ப அளவில் (ஒரு ஊரில் 10 குடும்பம் மிக அதிகம்) இருந்த ஐயர்கள் போல் இப்போ வெள்ளார்கள் எண்ணிகையில் குறைந்து விட்டார்கள் என்பது, யாழ்பாணத்தை பற்றி அறவே தெரியாதவர்கள் கூற்றாகவே இருக்க முடியும்.

யுத்தம் எல்லா சாதியினரையும் ஓரளவு சமமாகவே இடம் பெயர வைத்தது. யாழில் எல்லா சாதியினர்கும் பண பலம் இருந்தது ஆகவே எல்லாரும் ஓரளவு சமமாகவே வெளிநாடு வந்தார்கள்.

46 minutes ago, Nathamuni said:

புதிய ஆதிக்க சாதியினர் உருவாகின்றனர்.

இந்த புதிய ஆதிக்க சாதி எது?

அப்படி ஒன்றும் உருவாகவில்லை.

யாழ்பாணத்தில் எப்போதும் பெரும் பகுதிகளில் வெள்ளாள சாதி ஆதிக்கம்தான் இருந்தது.

முன்பும் வெள்ளாளர்கள் எண்ணிக்கையில் சொற்பமாக அல்லது அறவே இல்லாத சில குறிப்பிட்ட பகுதிகளில் கரையார் சாதியினர் முதன்மை சாதியாக இருந்தனர். ஆனால் இதை ஆதிக்கம் என சொல்லமுடியாது. இந்த நிலை இன்னும் அப்படியே உள்ளது.

52 minutes ago, Nathamuni said:

இவர்களில் பலர் எச்சரிக்கப்பட்டனர், மீறியோர் சுடப்பட்டனர். 

இயக்கங்கள் சாதிமான்களை, சாதி பார்கிறார்கள் என்பதற்காக சுட்டதாக நான் அறியேன் (ஊசி?). ஆதாரம் இருந்தால் காட்டவும். திருத்தி கொள்ளலாம்.

54 minutes ago, Nathamuni said:

அவ்வகையில் வந்த சமத்துவம், இன்று மறுபடி, வாள்வெட்டு கோஸ்டிகள் என்ற பெயரில் இல்லாமல் போகிறது.

வாள் கோஸ்டியள் சாதிய சமத்துவத்துக்கு குந்தகம் செய்வதாக சொல்ல என்ன ஆதாரம்?

இந்த கோஸ்டிகள், நட்பு, குறித்த இடத்தில் வாழ்வோர் என்ற அடிப்படையில் எழுவதாகதான் நான் அறிந்தேன்.

மீண்டும் இவை சாதிய அடிபடையிலானாவை என்றால் ஆதாரம் காட்டலாம்.

58 minutes ago, Nathamuni said:

போதுமான கல்வியறிவும், வேலை வாய்ப்பும், பொருளாதார அபிவிருத்தியும் தான் இந்த சாதிய பிரச்சனையை இல்லாமல் செய்யும்.

இலங்கையிலேயே கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் யாழ்பாணம் 1ம் இடத்தில் இருந்த போதுதான் சாதியம் மிக வலுவாக இருந்தது.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இங்கை பார்க்கவில்லையா.... ஒருத்தர்... தன்னிலும் பார்க்க அடுத்தவர் தாழ்ந்தவராம் என்று காட்டிட.... அடுத்தவர் மார்க்கம் குறித்து தனது மனதில் வருவதை எல்லாம் அடித்து விட்டுக்கொண்டு இருக்கிறார்...

இதுதான் வெளிநாடுகள் வந்தாலும் கூட மனநிலை.... 🤗

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

இங்கை பார்க்கவில்லையா.... ஒருத்தர்... தன்னிலும் பார்க்க அடுத்தவர் தாழ்ந்தவராம் என்று காட்டிட.... அடுத்தவர் மார்க்கம் குறித்து தனது மனதில் வருவதை எல்லாம் அடித்து விட்டுக்கொண்டு இருக்கிறார்...

இதுதான் வெளிநாடுகள் வந்தாலும் கூட மனநிலை.... 🤗

இங்கே தாழ்ந்தவன் பெரியவன் பிரச்சனை ஏதும் இல்லை.

இதே யாழில் எனக்கு தெரியாத பல விடயங்களை விளங்கப்படுத்துமாறு ஏனைய விசயம் தெரிந்த உறவுகளிடம் நிதமும் கற்று கொண்டுதான் இருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை வைத்து மிக தெளிவாக நீங்கள் 2009 க்கு பின் யாழ்பாணத்தை பார்த்தவர் என்பதும் தெற்கில் வாழ்ந்தவர் என்பதையும் யாழ்பாணத்தை சேர்ந்த எவராலும் மிக இலகுவாக கூறமுடியும். 

ஆகவே சில விடயங்களை சும்மா, ஐயர் சொன்னவர், ஜேர்மனி, கனடா எண்டு அடிச்சு விட்டால் - பதில் எழுதிதான் ஆகவேண்டும். 

உங்கள் அமேசன் பற்றிய கட்டுரையில் பல அடித்து விடுதல்கள், தரவு பிழைகள் இருந்த போதும் அதை “கொடுமையே” என கடந்துதான் போனேன்.

ஆனால் சாதியம் போன்ற ஆழமான திரிகளில் அடிச்சு விட்டால் கேள்வி கேட்கத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அருமையான விளக்கம் கோசான்..🤝 நன்றி என் சார்பில் பேசுவதற்கு... நானும் சாதி எழுத வெளிக்கிட்டால் நிறைய எழுத வேண்டி வரும்.. வேண்டாம்..

 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.