Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இரண்டு சம்பவங்கள்


Recommended Posts

இரண்டு சம்பவங்கள்

சம்பவம் ஒன்று---இன விரோதம்

மே மாதம் 1983.

பொறியியல் பீடத்துக்குத் தெரிவாகி பேராதனைப் பல்கலைக்கழகம் போயிருந்தோம். ஜேம்ஸ் பீரிஸ்---ஜே.பி., கில்டா ஒபேயசேகரா விடுதிகள் எங்களுக்கு---முதல் வருட ஆண்களுக்குத் தரப்பட்டிருந்தது. பெண்கள் சங்கமித்த, இராமநாதன் விடுதிகளில் இருந்தார்கள். எங்கள் படிப்பு மகிழ்ச்சியும் ஆரவாரமுமாக ஆரம்பித்தது. ஒவ்வொரு விடுதிக்கும் ஒரு கன்ரீன் இருக்கும். அங்கு நாங்கள் செய்யும் சேஷ்டைகள் கணக்கிலடங்காதவை. எங்கள் ஆட்டம் பாட்டத்துக்கு ஆப்பு வைத்தார்கள். ஆப்பு வைத்தவனே ஆபத்பாந்தவன் ஆவதையும் தரிசித்தோம்.

மலையின் உச்சியில் இருக்கும் 'ஜே.பி' விடுதி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். நாங்கள் அதில் ஏறி இறங்குவதற்கு இரண்டே இரண்டு பாதைகள் மாத்திரம்தான் இருந்தன. அதற்கும் மேலே மார்க்கஸ் பெர்ணாண்டோ விடுதி. அங்கே அரிசியும் பருப்பும் அரிதட்டில் இட்டுக் கிழையும் மன்னர்கள் இருந்தார்கள். அனேகமாக சமைத்துக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும் அவர்கள் கலைப்பீடத்தைச் சேர்ந்தவர்கள்.

என்னுடன் விஜயானந்தனும்---விஷயம் மாமா, ஸ்பென்ஷரும் இருந்தார்கள். ஸ்பென்ஷரை றாக்கிங் செய்யும் போது நாலைந்து பேரை கையும் மெய்யுமாகப் பிடித்துவிட்டார் பேராசிரியர் சிவசேகரம். அவர்களைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒருவருடத்திற்கு இடை நிறுத்தம் செய்திருந்தார்கள். இதனால் ஆத்திரமுற்ற சிலர் அடிக்கடி எமது றூமிற்கு வந்து ஸ்பென்ஷருக்குத் தொல்லை கொடுத்தார்கள்.

"வாடா மச்சான் போண்டா, சூசியம் சாப்பிடுவம்" சொல்லிக் கொண்டே றஜீவன் வருவான். சாரத்தை சண்டிக்கட்டாகக் கட்டிக் கொண்டு நானும் றஜீவனும் கன்ரீனுக்குப் போவோம். உடலைச் சிலிர்த்தபடி கன்ரீனுக்கு முன்னால் நிற்பான் றஜீவன். பயந்தாங்கொள்ளி நான் அவனை மருவியபடி சுவரோரமாக ஒளிந்து கொள்வேன். உள்ளிருந்து பார்ப்பவர்களுக்கு றஜீவன் மாத்திரம்தான் தெரிவான். என்னைக் கண்டு கொள்ள முடியாது. இருப்பில் இல்லாத பொருட்களாகக் கேட்டு அவர்களை ஏமாற்றியபடி சூசியத்தை எடுத்து என்னிடம் நீட்டுவான். ஆட்டுக்குடல் கறி, வெற்றிலை பாக்குக்கூடக் கேட்பான். சரத்தைக் கட்டிய பின் விசிறி போலத் தொங்குமே ஒரு நுனி, அதற்குள் அவன் எடுத்துத் தந்தவற்றையெல்லாம் போட்டு மூடுவேன். பீடா வெத்திலைகூட வந்தது. பிறகென்ன? பாட்டுப் பாடியபடி றூமிற்கு வந்து சேருவோம். அங்கே எமக்காக ஒரு கூட்டம் காத்திருக்கும்.

'ஜே.பி' விடுதி முன்பொருதடவை பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. பகிடி வதை தாளாமல் 13 ஆம் நம்பர் அறையிலிருந்த மாணவி ஒருத்தி தன்னைத்தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கின்றாள். அந்த அறை இப்போது '13ஆ' எனப் பெயரிடப்பட்டு, உடைந்த மரத்தளபாடங்களால் நிரப்பப்பட்டு ஸ்ரோர் றூமாக்கப்பட்டுள்ளது. இரவில் அங்கே அந்தப் பெண்ணின் அழும் குரல் கேட்பதாக இப்பவும் சொல்கின்றார்கள்.

உண்மையைச் சொல்லி ஜெயிலுக்குப் போன ஊடகவியலாளர் திசநாயகம், அப்போது சீனியர் மாணவராக ஜே.பி ஹோலில் தங்கியிருந்து படித்து வந்தார்.

பொறியியல்பீடத்திற்கு இங்கிருந்து போவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். இயற்கையை ரசித்தபடி கலஹா வீதியில் நடந்து செனற் பில்டிங் தாண்டி, மகாவலிகங்கையை ஊடறுத்துச் செல்லும் அக்பர் பாலத்தின் மீது நடந்து செல்வது மிகவும் பிடித்தமானது. ஆற்றின் ஒருபக்கம் இருக்கும் பொறியியல் பீடத்தையும், மறுபக்கம் உள்ள ஏனைய பீடங்களையும் இணைக்கும் நோக்கில் ஒற்றைத்தூணின் உதவியுடன் பேராசிரியர் துரைராஜாவினால் இந்தப் பாலம் நிர்மாணிக்கபட்டது. செனற்றைக் கடக்கும் தோறும் கண்கள் 'லவ்வேர்ஸ் லேனை' நோக்கி தானாக விரியும். ஒருவர்மீது ஒருவர் சாய்ந்து, உரசிக்கொண்டு 'லவ்வேர்ஸ் பார்க்'கிற்கு தள்ளிச் செல்பவர்களைப் பார்ப்பதில் ஒரு கிறக்கம்.

பொறியியல் பீடத்திற்கு அருகாமையில் - ஆண்கள் இருக்கும் அக்பர் விடுதி. வகுப்பு நடைபெறும் நாட்களில் அங்குதான் மதியம் சாப்பாடு. 'அடு' எடுத்துச் சாப்பிடவும் ஆட்டுக்குடல் சாப்பிடவும் அங்குதான் பழகினோம். முதல்வருட படிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர், 'ஆங்கில வகுப்பு' என்று அறுத்தெடுத்த காலங்களில் அக்பர் ஹோலில்தான் தங்கியிருந்தோம். அக்பர் விடுதிவாசிகளுக்கு பெண்பிரசைகளைக் காணுவதென்பது முயற்கொம்பு. பொறியியல்பீடம்கூட ஒரு வரண்ட பிரதேசம். பல்கலைக்கழகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் அறைகளுக்கு எதிரான அறைகளில் இருப்பவர்கள் முற்பிறப்பில் புண்ணியம் செய்தவர்கள். மாலை வகுப்புகள் முடிந்து றூமிற்குத் திரும்பிய பின்னர் கண்ணாடி ஜன்னலைப் பார்த்தபடி ஏங்கியிருப்பார்கள். ஏதாவது அசுமாத்தம் தென்படாதா? தூரத்தே புல்லுக்கட்டுகளைச் சுமந்தபடி கனவுக்கன்னிகள் அசைந்து செல்வார்கள். முதல் விசிலடி ஆரம்பிப்பது யார் என்பதில் எங்களுக்குள் ஒரு போட்டியே நிகழும்.

பொறியியல் பீட கலையரங்கம் ஏ.ஓ.ஏ Pஎரெஇர Tஹெஅட்ரெ இல்தான் அனேகமான தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள் நடைபெறும். நாங்கள் இருந்த காலத்தில் 'நிழலில்லா மனிதர்கள்' நாடகம், மாவை நித்தியின் 'திருவிழா' , 'ஓ கல்கத்தா' என்ற இரண்டு நாடகங்கள் நடந்தன. நிகழ்ச்சி முடிவதற்கு முன்பாக சொல்லி வைத்தபடி, 'ஜே.பி' விடுதி வந்து விட்டோம். எண்பதிற்கும் மேற்பட்ட படிக்கட்டுகளையும் ஒரே தாவலில் ஏறி முடித்தோம். வழமையாக இடையில் இரண்டொரு தடவைகள் இளைப்பாறுவதுண்டு. அன்று அது இல்லை. எங்கள் விடுதிகளைக் கடந்து 'சங்கமித்தா', 'இராமநாதன்' விடுதிகளுக்குப் போகும் பெண்களுக்கு அன்று சங்காபிஷேகம்.

மலசலகூடம் சென்று 'ஷொப்பிங் பேக்கிற்குள் வாசனைத் தீர்த்தம் நிரப்பினோம். வாங்கு ஒன்றிலிருந்த தவராஜா தூரத்தே கலஹா வீதியை நோட்டம் விடுகின்றான்.
"வாறாளவை... வாறாளவை..."

அவர்கள் தூரத்தில் வரும் போதே, ஆட்கள் மேலே நிற்பதைக் கண்டு கொண்டார்கள். நாங்கள் சாரத்தை வாகாகத் தூக்கி முகத்தை மூடிக்கொண்டு ஆடத் தொடங்கினோம். 'தொங்கு மணிகள்' சுயாதீனமாக ஆடத் தொடங்கின.

"எறியடா... எறியடா...  பாத்து அடியடா... " கூக்குரல்கள் கிழம்பின.

"எடியேய்..." வசீ தனது அர்ச்சனையைத் தொடங்கினான். 'கிஸ்ஸிங் பென்ட்'டை நோக்கி சரமாரியான மூத்திர அடி. சிறுநீர் வாடை காற்றில் கலந்தது. அவர்கள் மழையில் குளித்தபடி 'கிஸ்ஸிங் பென்ட்'டை விட்டு விலகி, 'சரத்சந்திர களரி'யை நோக்கி ஓடத் தொடங்கினார்கள். பார்க்க வேடிக்கையாக இருந்த அந்த தரிசனத்தை அவர்களும் நாங்களும் வாழ்க்கையில் மறக்க முடியாது.

வடக்குக் கிழக்கில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் இங்கும் முறுகல்நிலை தோன்றி விடும்.

மே 11 இரவு - கில்டா, மார்ஸ், ஜே.பி விடுதிகளில் ஏககாலத்தில் சலசலப்புத் தொடங்கியது. கில்டா ஒபேசேகரா ஹோலில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு எங்களுக்கு வந்தது. அங்கே சில காடையர்கள் புகுந்து தமிழ் மாணவர்களை அடிக்கத் தொடங்கி இருப்பதாகவும், எல்லாரையும் கவனமாக இருக்கும்படியும் சொன்னார்கள்.

காடையர்கள் யார் என்பது பின்னர் தெளிவானது. எங்கள் ஹோலில் இருந்தவர்கள் எங்களை அடிக்கவில்லை. அவர்கள் வேறு ஹோலில் உள்ளவர்களைப் போய் அடித்தார்கள். அங்குள்ளவர்கள் இங்கு வந்து அடித்தார்கள். தமிழர்களை அடையாளம் காட்டுவதற்காக மட்டும் ஒருசிலர் நின்றார்கள்.

சுசந்த தென்னக்கோன் - அவன்தான் எங்களது ஹோலில் இருந்த தமிழர்களை அடையாளம் காட்டிய வீரன். முகம் முழுக்க திட்டுக்களைக் கொண்ட அவன், இழுத்து இழுத்து ஆங்கிலம் கதைப்பான். ஒவ்வொரு இழுவைக்குள்ளும் அடுத்து என்ன கதைப்பது என்பதைத் தீர்மானித்து விடுவான். அடிக்கடி மூக்கை இழுப்பான். அந்த நுகர்ச்சியில் ஏற்கனவே தமிழர்களின் அறைகளை அடையாளம் கண்டிருந்தான்.

எங்களில் பல பேருக்கு அடி. ஹந்தான, உடபெராதனிய, றஜவத்த போன்ற இடங்களிலிருந்து சில காடையர்கள் வந்திருக்க வேண்டும். மாணவர்கள் அல்லாத தோற்றம் கொண்ட பலர், பொல்லுகளுடன் கத்திக் கொண்டு வெறிபிடித்தவர்கள் போல ஓடித்திரிந்தார்கள். எங்களில் சிலர் மலையிலிருந்து விழுந்து - உருண்டு புரண்டு  கண்டிக்கும் கொழும்புக்கும் தமது உறவினர்களிடமும் நண்பர்களிடமும் போய்ச் சேர்ந்தார்கள். உடுத்திருந்த சாரத்துடன் ஓடிப் போனவர்களும் உண்டு. எங்கள் றூமில் நான் , தவராஜா, சிறீ, விஷயம் மாமா இருந்தோம். ஒருவர் ஜன்னலிற்குள்ளால் நோட்டம் விட, மிகுதி மூன்று பேரும் கதவை இறுகப் பிடித்திருந்தோம். தூரத்தே அறைகளிற்குள் முட்டி மோதி எதிரொலிக்கும் கூக்குரல்கள் கேட்கின்றன.

சுசந்தாவின் குரல் வெளியே கேட்கிறது. கதவை உதைய அது உள்ளே வருவதும், பின்னர் நாங்கள் தள்ள வெளியே போவதுமாக இருந்தது. எங்களுக்கு அந்த இக்கட்டான நேரத்திலும் சிரிப்பு வந்தது. கொஞ்ச நேரம் நடந்த இந்தத் திகில் விளையாட்டு முடிவுக்கு வந்தது. திறப்புப்போடும் துவாரத்தினூடாக வெளியே பார்த்தபோது - தடித்த, முதலைத்தோல் போல பொருபொருத்த கையொன்று தெரிந்தது. நிட்சயமாக அது வெளியிலிருந்து வந்த ஒருவரின் கையாகத்தான் இருக்க வேண்டும். 'பலமான கதவு' என்று சொல்லிக் கொண்டு அடுத்த அறைக்குப் போனார்கள். சிறிது நேரம் சுவரின்மீதிருந்த துவாரத்தினூடாக வெளியே நடப்பதை நோட்டமிட்டேன். சாரம் அணிந்த ஒரு குள்ள மனிதன் தனது கால்களை அகட்டி வைத்து நடந்து போய்க் கொண்டிருந்தான். சிங்கம் ஒன்று வேட்டை முடித்துத் திரும்பும் கர்வம் அவனது நடையில். அவனின் பின்னால் ஏதோ இரைந்து சத்தமிட்டபடி மூன்று மனிதர்கள் விரைந்து கொண்டிருந்தார்கள். குள்ளமனிதனின் முதலைத்தோல் கைகளில் மண்வெட்டிப்பிடியும், புல்லு வெட்டும் நீண்ட வளைந்த கத்தியும் தொங்கிக் கொண்டிருந்தன.

இரண்டு மணித்தியாலங்களில் நிலமை சீராகியது. வெளியே போய் மற்றைய விடுதிகளில் உள்ளவர்களுக்கு உதை போட்டுவிட்டு வந்தவர்கள், எங்களுக்குக் கவலை தெரிவித்து ஒத்தடம் போட முனைந்தார்கள். எங்களுடன் கூட இருந்த விக்கியைக் காணவில்லை. இரவு முழுவதும் பதட்டத்துடன் குறிஞ்சிக்குமரனைக் கும்பிட்டபடி இருந்தோம்.

கில்டா ஹோலில் இருந்தவர்களை சுவரோடு சாத்தி வைத்து அடித்தார்கள்.
"நாடகம் நடத்துவியளோ? புத்தகம் வெளியிடுவியளோ?" என்று கேட்டுக் கேட்டுத் தாக்கினார்கள். அவர்களின் "நோ... நோ...." என்ற கூக்குரல் ஹந்தான மலைச்சாரல் எங்கும் எதிரொலித்தது. சிங்களம் அப்ப டிக்க டிக்கப் பழகவில்லை. எக்காயும் தெக்காயும் எக்கித் தெக்கிச் சொன்ன நேரம். அங்கு வந்தவர்களின் முக்கிய இலக்கு - 'பாலசூரியன்'. முதலாம் வருட பொறியில்பீட மாணவன், எமது சக நண்பன். அன்று காலை 'புதுசு' என்ற சஞ்சிகையின் நான்கு இதழ்கள், வடக்கிலிருந்து அவனுக்குத் தபாலில் வந்திருந்தன. பாலசூரியன் அதன் ஆசிரியர் குழுவில் ஒருவன். அதன் முகப்பு அட்டையில் - கூட்டுக்குள் ஒரு புறா, அதனுடன் இரும்புக்குண்டு சங்கிலியிடப்பட்டிருந்தது. அது ஒன்றே அவனை 'புலி' என்று சந்தேகிக்கப் போதுமானதாக இருந்தது. ஆனால் அந்த இதழ் புலிகளையும் அதன் செயற்பாடுகளையும் விமர்சித்திருந்தது என்பது வேறு விடயம்.

கில்டா ஹோலில் பாலசூரியனைக் கலைத்துப் பிடித்துக் கொண்டார்கள். சக சிங்கள மாணவன் பண்டார அவனை அடையாளம் காட்டினான். உடைந்த கதிரைகளின் கால்களினால் அவனைத் தாக்கினார்கள். எங்களுடன் சேர்ந்து படித்த பெர்னாண்டோதான் அவனை அதிகம் தாக்கினான். நள்ளிரவு தாண்டிய நிலையில் கில்டா ஹோலின் வார்டன் - முனைவர் தர்மதாச பாலசூரியனைப் பொறுப்பெடுத்தார்.

பாலசூரியன் பேராசிரியர் சிவசேகரத்தை நன்கு தெரியும் என்று சொல்லியிருந்ததால், அவனை அங்கு கூட்டிச் சென்றார் தர்மதாச. அங்கே பேராசிரியர் தில்லைநாதனும் கலாநிதி காசிநாதரும் இருந்தார்கள். இவர்கள் மூவரும் உபவேந்தர், பேராசிரியர் பண்டிதரத்னவுடன் கதைத்தார்கள். ஆனால் பண்டிதரத்தின, பாலசூரியனைப் பொலிசிடம் ஒப்படைக்கப் போவதாகக் கூறினார். அன்றிரவு பல்கலைக்கழக Mஅர்ஷல்'ச் ஒffஇcஎ இல் வைத்திருந்தார்கள். பாலசூரியனின் பாதுகாப்புக் கருதி பேராசிரியர் சிவசேகரமும் அங்கேயே தங்கியிருந்தார். அதன் பிறகு கண்டி பொலிஸ் ஸ்ரேஷன், கொழும்பு கொட்டஹேன பொலிஸ் ஸ்ரேசன் என்று தொடர்ந்து, மர்மம் பயங்கரம் நிறைந்த கொழும்பு புலனாய்வுத்துறையின் 4 ஆவது மாடியில் முடிவடைந்தது.

அடுத்தநாள் பல்கலைக்கழகம் கால வரையறையற்று மூடப்பட்டது. காலை விக்கியின் தொலைபேசி அழைப்பு கொழும்பிலிருந்து வந்தது. உடுத்த சாரத்துடன் தெருவெல்லாம் ஓடி கண்டிக்குச் சென்று, அங்கிருந்து ரயில் ஏறி கொழும்பிற்கு தனது மாமா இருக்குமிடத்திற்குப் போயிருந்தான் அவன்.  எல்லாவற்றையும் மூட்டை கட்டி ஸ்ரோர் றூமிற்குள் வைத்து விட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் ஒரு சிறிய பாக்கையும் தூக்கிக் கொண்டு கண்டிக்குப் போனோம். அங்கிருந்து வடக்கு, கிழக்கிற்கு பயணமானோம்.
நான்கு நாட்கள் தீவிர விசாரணையின் பின்னர் கொழும்பில் விடுவிக்கப்பட்டான் பாலசூரியன்.

இந்தச் சச்சரவு திடீரென்று நடக்கவில்லை. நன்கு திட்டமிடப்பட்டே நடந்தது. அரசியல்வாதிகள் தமது சுயநலனுக்காக மக்களையும் மாணவர்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றார்கள். அவர்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. உணர்வுகள் தூண்டப்பட்டு ஆவேசத்துடன் வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னே ஒன்றுமே செய்யமுடியாமல் கையாலாகாத்தனமாக இருந்தோம். இது நடந்திருக்காவிடில் எண்பத்திமூன்று ஜூலைக் கலவரத்தில் நாங்கள் எல்லாரும் அகப்பட்டிருப்போம்.

மீண்டும் பல்கலைக்கழகம் திரும்பியபோது பாலசூரியன், ஸ்பென்ஷர் உட்பட வேறு சில மாணவர்கள் படிப்பதற்கு வரவில்லை. சில விரிவுரையாளர்களும் வரவில்லை.

சம்பவம் இரண்டு---மனிதாபிமானம்

மகாவலிகங்கைக் கரையோரமாக பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான, 'ஏ', 'பி', 'சி' எனப் பெயரிடப்பட்ட சில தொடர்மாடிகள் இருந்தன.  பொறியியல் வளாகத்திற்கு அருகாமையில் செல்லும் மேல் கம்பொல றோட் வழியே குருந்துவத்த என்ற இடம் நோக்கிச் செல்லும்போது குடியிருப்பு 'ஈ' வரும். மூன்று மூன்று வீடுகள் கொண்ட தொடர்மாடிகள் அவை. அப்படிப்பட்ட குடிமனை ஒன்றின் முதலாவது வீட்டில் பியசேன இருந்தார். அவர் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை செய்கின்றார். அவரும் மனைவி பிள்ளைகளும் வீட்டின் கீழே இருந்துகொண்டு மேற்பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார்கள்.

பல்கலைக்கழக சட்டதிட்டங்களின் பிரகாரம், இரண்டாம் ஆண்டுப் படிப்பின் வேளை எல்லா பொறியியல்பீட மாணவர்களும் விடுதியில் தங்க முடியாது. பியசேனவின் வீட்டின் மேற்பகுதியில் அமைந்திருந்த இரண்டு அறைகளில், இவ்விரண்டு பேராக மொத்தம் நான்குபேர் அங்கு குடியிருந்தோம். அதற்கடுத்திருந்த வீடுகள் இரண்டும் வாடகைக்கு கொடுக்கப்பட்டிருக்கவில்லை. பியசேனவிற்கு இரண்டு பெண்பிள்ளைகள், ஒரு மகன். அந்த வீட்டின் குசினி இரவு வேளைகளில் பியசேனவிற்கும் அவரது மனைவிக்கும் படுக்கை அறையாக மாறிவிடும். பெண்பிள்ளைகள் இருவரும் கீழே இருந்த ஒரு அறையைப் பாவிப்பார்கள். பையன் ஹோலிற்குள் இருந்த 'சிங்கிள் பெட்'டில் உறங்கிக் கொள்வான். மூத்த பெண் அம்மாவிற்கு ஒத்தாசையாக இருக்க, மற்றப்பெண்ணும் பையனும் பள்ளி போய் வந்தார்கள். வீட்டிற்கு ஒரே ஒரு வாசல்தான். அந்த வாசலினூடு உட்சென்று, மகன் உறங்கிக் கொள்ளும் படுக்கையின் முன்னால் உள்ள, குத்தெண்டு எழுந்து செல்லும் படிகளின்மீது மேல் ஏறினால் எங்கள் அறைகள் வந்துவிடும்.

குடியிருக்கப்போன மறுநாள் அதிகாலை யாரோ முற்றத்தைப் பெருக்கும் சத்தம் கேட்டது. கண்ணாடி ஜன்னலை நீக்கி வெளியே பார்த்தேன். பக்கத்து வீட்டு முற்றத்தை ஒரு சிறுபெண் - பதினைந்து வயதிருக்கலாம் - பெருக்கிக் கொண்டிருந்தாள். அவள் கூட்டித் துப்பரவு செய்த திசை நோக்கிக் கடதாசி ஒன்றைச் சுருட்டி எறிந்தேன்.

"என்னடா விளக்கெண்ணய் குடிச்சமாதிரி இருக்கிறாய்?" படுக்கையில் இருந்தபடியே நண்பன் மோகன் கேட்டான். அவனுடன் கதை கொடுத்தால் அந்தப்பெண்ணிற்கும் எனக்குமிடையேயான ஊடல் குழம்பிவிடலாம் என நினைத்து மெளனம் சாதித்தேன். அவனோ மெதுவாக என்னை நோக்கி எழுந்து வந்தான். தானும் தன்பங்குக்கு பேப்பரைச் சுருட்டி எறிந்தான். இரண்டு பேருக்குமிடையே நடந்த பேப்பர் சுருட்டி எறியும் போட்டியில் முற்றம் நிறைந்தது. முற்றத்தைப் பெருக்கி முடித்துவிட்டேன் என்ற தோரனையில், இடுப்பிற்குக் கையூன்றி திரும்பிப் பார்த்தாள் அந்தப் பெண். நாங்கள் மெதுவாகத் தலையைத் தாழ்த்திக் கொண்டோம். அவள் மருண்டு அங்கும் இங்கும் பார்த்தாள்.  'அம்மே' என்றபடியே வீட்டிற்குள் ஓடினாள். நாங்கள் காலைக்கடனை முடிப்பதற்காக கீழே இறங்கினோம். வீட்டின் பின்புறம் ரொயிலற்றும் பாத்றூமும் ஒன்றாக இருந்தது எங்களுக்கு அருவருப்பைத் தந்தது. குளித்து முடித்து வந்ததும் பியசேனவின் மூத்தபெண் ரீ போட்டு மேலே எடுத்து வந்தாள். நாங்கள் பல்கலைக்கழகம் புறப்பட்டபோது கடைக்கண்ணால் பக்கத்து வீட்டைப் பார்த்தோம். முற்றம் சுத்தமாக பளிச்சென்று இருந்தது.

மாலை பியசேனவின் மகன் பள்ளியிலிருந்து வந்ததும், அந்தப்பெண்ணின் பெயர் 'கங்கா' என்று தெரிந்து கொண்டோம். வீட்டில் இருப்பவர்களின் பெயர்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல், பக்கத்து வீட்டுப் பெண்ணின் பெயரை மாத்திரம் அறிந்து கொண்டதிலிருந்து கங்காவின் அழகை நீங்கள் எடை போட்டுக் கொள்ளலாம். அவனும் கங்காவும் ஒரே பாடசாலையில் பத்தாம் வகுப்பில் படிக்கின்றார்கள் என்ற மகிழ்வூட்டும் செய்தியையும் மல்லி---தம்பி சொன்னான்.

மல்லி எங்களுடன் ஒட்டத் தொடங்கினான். அதிக நேரம் எங்கள் அறையிலே மினைக்கெட்டான். நாங்கள் அங்கு வருவதற்கு முன்னர் தான் அந்த அறையில் இருந்ததாகச் சொன்னான். ஒருநாள் இரவு தூரத்தே தெரிந்த விளக்குகளின் வெளிச்சத்தைக் காட்டி அது 'ராமநாதன் ஹோல்' என்று சொல்லிவிட்டுச் சிரித்தான். அங்கேயுள்ள பெண்களில் எங்களுக்கு யாராவது நண்பிகள் இருக்கின்றார்களா என்று கேட்டுக் கொண்டே ஜன்னலின் சட்டங்களைக் கழற்றினான். அவனது வீடு, அவனது ஜன்னல் கழட்டுகின்றான் என நினைக்கையில், அவன் ஜன்னலினூடாக கூரைக்குத் தாவி அடுத்த வீட்டு மேல்மாடி ஜன்னலைத் தட்டினான். அதுவும் திறந்து கொள்ள, அந்த ஜன்னலினூடே உள் புகுந்தான். அந்த 'நாடகம்' பல நாட்களாக நடந்திருக்க வேண்டும். அத்துடன் கங்கா பற்றிய எமது கனவுகள் கலைந்தன. சிறிது நேரத்தில் மீண்டு வந்து, ஜன்னலைப் பொருத்திவிட்டு ஏதோ சாதனை செய்துவிட்டவன் போல கீழிறங்கிப் போனான்.அப்பாவிடம் சொல்லுவோம் என்று மல்லியை வெருட்டிய போதும், மாதம் ஒன்றிரண்டு தடவைகள் அது நடக்கத்தான் செய்தது. 

ஒருமுறை நாங்கள் 'துசித்த' திஜேட்டரில் 'லேடி சற்றலி லவ்வர்' பார்த்துவிட்டு குருந்துவத்த பஸ் ஸ்ராண்டில் வந்து இறங்கி வீட்டிற்குப் போகும்போது எங்கள் முன்னாலே கங்கா சென்று கொண்டிருந்தாள். 'கங்காட்ட நாண்டோண' என்று சொல்ல அவள் தன் செருப்புகள் இரண்டையும் காலில் இருந்து கழற்றினாள். நாங்கள் அப்படியே பின் தங்கினோம். நல்லவேளை செருப்புகள் இரண்டையும் கையில் தூக்கவில்லை. என்ன நினைத்தாளோ செருப்புகள் இரண்டையும் கொழுவிக்கொண்டு தனக்குள் ஏதோ புறுபுறுத்தபடி சென்றுவிட்டாள்.

அந்த மகாவலிக்கரையோரமாக இப்போது சிலநாட்களாக நாங்கள் நீராடத் தொடங்கியிருந்தோம். எங்களில் ஒருவருக்கும் நீச்சல் தெரியாது. 'காக்காய்க் குளிப்பு' என ஆரம்பித்து இப்போ முன்னேறிக் கொண்டு செல்கிறது.

மல்லி அதிகாலையில் எழுந்து பள்ளி செல்வதற்கு முன், உடற்பயிற்சி செய்வதாகச் சொல்லிக்கொண்டு எங்கோ போய் வருவான். தற்காப்புப் பயிற்சி பெறுவதாகவும், இன்னும் சிலமாதங்களில் ஆயுதப்பயிற்சி பெறப்போவதாகவும் இரகசியமாகச் சொன்னான். சிலவேளைகளில் பள்ளிக்குச் செல்லாமல் அலைந்து திரிவான்.

ஒரு சனிக்கிழமை...

ஆற்றின் நடுவே இருந்த பாறையொன்றின் மீது ஏறி நின்று தொபுக்குத் தொபுக்கென்று நீருக்குள் குதித்து விளையாடினோம். குதித்து தவளைபாய்ச்சல் பாய்ந்து, சற்று நேரம் நீரிற்குள் விளையாடிவிட்டு மீண்டும் அந்தப் பாறையைக் கட்டிப் பிடிப்போம்.
தூரத்தில் குறுக்குக்கட்டுகளுடன் சில சிங்களப்பெண்களும் இரண்டு ஆண்களும் குளித்துக்கொண்டு நின்றார்கள். அவர்கள் எங்களையே நெடுநேரம் பார்த்துக்கொண்டு நின்றார்கள். பின்னர் அவர்களில் ஒருவன் தண்ணீருக்குள் விசுக்கு விசுக்கென்று நீச்சலடித்து, எங்களை நோக்கி வந்தான்.

"நீங்கள் தமிழா?"

"ஆம்...."

அவன் தனது கையை கரை நோக்கிக் காட்டி, "அதற்குக் கிட்டப் போகாதீர்கள். ச்பில்ல்நய் இருக்கின்றது" என்றான். நாங்கள் அவனது தகவலுக்கு நன்றி சொல்லிவிட்டு மீண்டும் குதித்து விளையாடினோம்.

மகாவலியின் நீர்மட்டம் அடிக்கடி மாறும் தன்மை கொண்டது. மடை திறந்து விடும்போதும், எங்காவது மழை பெய்யும்போதும் இது நடைபெறும். கங்கையிலே மிதந்து வரும் குப்பை கூழங்களைக் கொண்டு இதனை அடையாளம் கண்டு கொள்ளலாம். உடனே அவ்விடத்தைவிட்டு அகலாவிடில் ஆபத்து காத்து நிற்கும். ஆற்றுடன் அள்ளுப்பட்டுப் போக வேண்டியதுதான்.

அந்த மனிதன் காட்டிய திசையில் ஆற்றின் கரையோரமாக சீமெந்தினாலான கட்டுத் தெரிந்தது. அதைப் பார்த்தபடி நீரிற்குள் குதித்தேன்.  திடீரென்றுதான் அது நிகழ்ந்தது. நீரிற்குள் குதித்த என்னால் மீண்டும் எழும்ப முடியவில்லை. நீச்சல் தெரியாததால் 'ஐயோ... ' என்று கூக்குரலிட்டபடி தத்தளிக்கின்றேன். என்னால் ஒருவரையுமே காணமுடியாதபடி நீரிற்குள் மூழ்கிவிட்டேன். நான் போடும் கூக்குரல் எனக்கே கேட்கவில்லை. என்னுடன் நீச்சலடித்த சகநண்பர்கள் என்னைக் காணவில்லையா? என்னுடன் நின்ற அத்தனை நண்பர்களும் எங்கே போனார்கள்?

தொண்டைக்குழிக்குள் நீர் உள்ளே போகத் தொடங்குகின்றது. நான் நீரின் அடிக்குப் போகின்றேன். என்னால் மரணம் என்ற ஒன்றைத்தவிர வேறொன்றையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. பலம் கொண்டவரை நீரைக் கால்களால் மிதித்து எம்புகின்றேன். கைகளை மேலே உயர்த்துகின்றேன். மீண்டும் கூக்குரல் இடுகின்றேன். இரண்டாவது தடவை... மூன்றாவது தடவை.... உடல் நீரின் ஆழம் பார்த்து மேல் எழும்புகின்றது. இரும்பைப் போன்று இறுகி, பின்னர் பஞ்சு போல வெறுமையாகிறது. எனக்கு ஏதோ நடக்கப் போகின்றது. என் உடலளவு உயிர் நிழல்போல வேறாகப் பிரிகின்றது. முடிவு நெருங்கி விட்டது.

இப்பொழுது நினைத்துப் பார்த்தால்கூட ஆச்சரியமாக இருக்கின்றது. திடீரென ஒரு முரட்டு உருவம் என்னை இறுகப்பற்றி நீரின் மேலே தூக்குகின்றது. நான் அவனைப் பார்க்கின்றேன். சிங்களத்தில் ஏதோ சொல்லியபடி மகாவலிக்கரையை நோக்கி நடக்கின்றான் அவன். தூரத்தில் அசையாத படிமங்கள் போல நின்ற என் நண்பர்கள், அவனின் பின்னாலே வருகின்றார்கள். கண்கள் சோர்ந்து உடல் தளர்ந்த நிலையில் நான் ஒரு குழந்தையாக அவனது கைகளில். கால்களை அகலப்பாங்கில் மிகவும் கஷ்டப்பட்டு நீரிற்குள் உதைத்து கரையை நோக்கி நடக்கும் அந்தக்குள்ள மனிதன் மாமேரு மலையை ஒத்தவனாகின்றான். கரையில் என்னை இறக்கிவிடும்போது அவனது கைகளைக் கவனித்தேன். அன்றொருநாள் திறப்புத்துவாரத்தினூடாகத் தெரிந்த அதே முதலைத்தோல் போர்த்த முரட்டுக் கரங்கள் அவை.


‘செம்பியன் செல்வன்’ ஆ.இராஜகோபால் ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி (2013), ஞானம் சஞ்சிகை, இலங்கை (தளம்.ஞானம்.இலங்கை)

https://shuruthy.blogspot.com/2014/04/1983_6929.html?fbclid=IwAR02d-4sIddkytAldh0M6IJvv2rZ_eoKf9sA2cDrnS4kaH2ZvplDBvZk6CY

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சம்பவங்களும் படிக்க படிக்க கிளுகிளுப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.....அட இப்படி என்றால் நானும் குதிரை ஓடியாவது பல்கலைக்கழகத்துக்கு போயிருப்பேன்.....ம்....யாருக்குத் தெரியும் அங்கு படிப்பைத் தவிர இதெல்லாம் இருக்கும் என்று......!   😂

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நாளை  செவ்வாய் (19 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 5)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்     SCO  vs   PNG   எல்லோருமே  ஸ்கொட்லாந்து வெல்வதாகக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா  அல்லது முட்டையா  என்று பொறுத்திருந்து பார்ப்போம்      6)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட்      OMA  vs  BAN   எல்லோருமே பங்களாதேஷ் வெல்வதாகக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா   அல்லது முட்டையா  என்று பொறுத்திருந்து பார்ப்போம் 
  • கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை  நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது என முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.     திங்கட்கிழமை ( 18 ) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  எங்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் குரல் கொடுப்பேன். வடக்கு மீனவர்கள் பிரச்சனை என்பது பெரும் பிரச்சனை அவர்கள் ஏற்கனவே துன்பத்தை சந்தித்தவர்கள் யுத்தத்தை நாம் விரும்பவில்லை யுத்தத்தை செய்தவர்களிடம் தர்க்க ரீதியிலான கருத்து இருந்தது. வடக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு  உள்ள தடையை அகற்ற வேண்டும். இந்திய மீனவர்கள் 30 வருடகாலமாக இலங்கை கடல்வளத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவில் தற்போது இலங்கை வளத்தை பயன்படுத்திய  ஓர் தலைமுறையே உருவாகி விட்டது. இந்தியாவில்கூட  மாநிலம் மாறி வேறு மாநிலத்தில் மீன்பிடிக்க முடியாத நிலையில் இலங்கை எல்லைக்குள் வருவதும்  பிரச்சினைக்குரிய விடயம். இதற்கு இலங்கை மீனவர்களிற்கு பாரிய கப்பல்களை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். கடற்றொழில் அமைச்சராக டக்ளசை நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது. இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ டக்ளஸிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது. இதனை வெறும் மீனவர்கள் பிரச்சனையாக மட்டும் அல்ல தமிழர்களின் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என அரசியல் தலைவர்களை கோர விரும்புகிறேன் என்றார். கடற்றொழில் அமைச்சராக டக்ளஸை நியமித்ததில் சதி உள்ளது - மனோ கணேசன்  | Virakesari.lk
  • “ போதி மரம்”  காலமை எழும்பி கடனை முடிக்க கிணத்தடிக்குப் போனா ,அடுப்புச் சாம்பலையும் கரியையும் கலந்து தும்பால இயத்துக்களை மினுக்கின படி “ கொஞ்சம் தண்ணி அள்ளித்தாவான்” எண்டு அம்மம்மா கேட்டா . மனிசிக்கு விடியல் கிணத்தடீல தான். அள்ளிக்குடுத்திட்டு் நானும் ,கடனை வைக்காமல் முடிக்க வேண்டும் இல்லாட்டி துன்பம் தான் எண்ட படியாத்தான் காலைக கடன் எண்டு சொல்லிறவங்களோ ? எண்டு யோச்சபடி வாளியோட நடந்தன் ,கடனை அடைக்க. ஒவ்வொருத்தனுக்கும் கிணத்தடியும் கக்கூசும் கூட போதி மரங்கள் தான் ஏனெண்டால் இங்க தான் கன பேருக்கு தத்துவம் பிறக்கிறது. ஓட்டைக்கிணத்து வாளீல தண்ணி அள்ளி ஒழுகிற கக்கூஸ் வாளீக்குள்ள விட்டிட்டு போய் குந்தி இருந்து போட்டு ,எட்டிப்பாக்க தண்ணி இல்லை எண்டேக்க தான் எனக்கு விளங்கிச்சு காதறுந்த ஊசியும் ஓட்டை கக்கூஸ் வாளியும் கடைசிவரை உதவாது எண்டு. வாளீன்டை ஓட்டையை அடைக்க பிலாக்காய்பால்ல இருந்து தார் வரை try பண்ணி கடைசீல புது வாளி வாங்கிக் கொண்டு வர கக்குசுக்கா? எண்ட கேள்வி வந்திச்சுது. ஓட்டைக் கிணத்து வாளி இடம் மாறி கழுவிறதுக்குப் போக புதிசு கப்பீல தொங்கிச்சுது. இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே எண்ட கிணத்தடி ஞானம் அப்ப பிறந்திச்சு. “என்ன கிணத்துக்கட்டில பிள்ளைய வளத்தின மாதிரி பறக்கிறாய் “ எண்டு அம்மா நான் அந்தரப்பட்டா பேசவா . அப்ப ஒருக்கா படுத்தால் என்ன எண்டு யோசிச்சன். படுத்தும் பாத்தன் ஆனாலும் பயமாய் இருந்திச்சு. பரிணாம வளர்ச்சியில் கிணறும் விடுபடேல்லை . வட்டக்கிணறு அதன் விட்டத்தில இருவது வீதம் இழந்து முக்கால் வட்டம் ஆனது. கல்லு மட்டும் அடுக்கின கிணத்துச்சுவர் , சீமெந்து பூசிக்கல்லு வைச்சு ஒரடி அகலமான கிணத்துக்கட்டானது அதோட நிலமட்டத்திலிருந்து உயரவும் தொடங்கியது . கைவாளி மறைஞ்சு துலா, கப்பி ஆனது. சீவின பூவரசந்தடீல கட்டின வாளி கையை நோகப்பண்ண கயிறு, chain எண்டு வந்தது.  கிணத்தடி எண்டது வெறும் தண்ணி இருக்கிற இடம் மட்டுமில்லை அதையும் தாண்டி விசேசமானது . தண்ணி இருக்கிற கிணத்துக்கு, தண்ணி அள்ள கப்பி இல்லாட்டி துலா கட்டி, கைப்பற்றப்பட்ட இருவது வீதத்தில அள்ளிற பக்கம் குளிக்கிறதுக்கு தோய்க்கிறதுக்கு சீமெந்து நிலம் வைச்சு, மழைகாலம் நிலம் வழுக்காம இருக்க சிப்பியை கவிட்டு ஒட்டி வைச்சு, அதோட சேந்த உடுப்புத்தோய்க்கிற கல்லும் பக்கத்தில ஒரு தொட்டியும் கட்டி, குளிக்கிற தண்ணி ஒடிற வாய்க்காலோட வாழை வைச்சு, கிணத்துக்கு கிட்ட ஒரு இளநி மரம் நட்டு , கிணத்துக்க இலையக்கொட்டிறத்துக்கு வேலியோட ஒரு வாதநாராயணி இல்லாட்டி பூவரசு இருக்க, அதில உடுப்பு போடுற கொடி கட்டி, இருந்தாத் தான் கிணத்தடி இல்லாட்டி அது வெறும் கிணறு.  தேவைக்கு வாழையிலை வெட்டப் போறதும் கிணத்தடி தான். இருட்டுப் பயத்தில மூத்தா போறதும் கிணத்தடி தான் . வீட்டை சண்டை பிடிச்சிட்டு அம்மாவை வெருட்ட இயக்கத்துக்குப் போயிடுவன் எண்டு சொல்லிற காலத்திக்கு முதல் கிணத்தடீல போய் தான் இருக்கிறது. கிணத்தடி பூதத்தை நம்பி இடம் பெயர்வுகளில பயத்தில நகை தாலி புதைச்சு வைச்சதும் கிணத்தடி தான்.  ஒவ்வொரு ஒழுங்கையிலும் எந்தக் கோடைக்கும் வத்தாத ஒரு வீட்டுக் கிணறு இருக்கும் .அதே போல் நல்ல தண்ணிக் கிணறும் ஒண்டும் இருக்கும். இந்தக்கிணறுகளும் ஒரு பொதுச் சொத்துதான் . பலர் குடிக்கவும் சிலர் குளிக்கவும் போறவை . இப்பிடி தண்ணி அள்ள ஆற்றேம் வீட்டை போகேக்க கிணத்தடீல சண்டையிருக்காது ஆனால் அரட்டை அரங்கம் இருக்கும் .  வேலைக்குப் போட்டு வந்த அப்பாட்டை இல்லாட்டி செத்த வீட்டுக்கு போய் வந்த அம்மாட்டை கிணத்தடீல இருந்து அவை தோஞ்சு கொண்டிருக்கேக்க விடுப்புக் கேக்கிறதும் நடக்கிறது . கிணத்தையும் ஒரு சாமி அறை மாதிரித்தான் சுத்தம் பத்தமா பாவிக்கிறது. செத்தவீட்டுக்கு போய் வந்தா , தலைமயிர் வெட்டீட்டு வந்தா இல்லாட்டி பொம்பிளைகளை அந்த மூண்டு நாளும் அள்ள விட மாட்டினம். விளக்கீட்டில ஒரு பந்தம் வைக்கிறதில இருந்து ஐயர் தாற தீத்தம் கொண்டே ஊத்திற வரை அதுக்கு ஒரு மரியாதை இருந்தது.  தண்ணி அள்ள கிராமப் பக்கம் தான் கைப்பட்டை இல்லாட்டி துலா இருந்தது . நாலு மரம் நட்டு குறுக்கு மரம் போட்டு சரி பண்ணி துலா கட்டிறது . நட்ட பூவரசங்குத்தி முளைச்சு சிலவேளை மரமாயும் வளந்திடும். வைரமான பனை மரத்தை சீவி ரெண்டாப்பிளந்து நடுவில இருக்கிற சோத்தியை கோதி எடுத்து , ரெண்டையும் சேத்து கட்டை இறுக்கி ,அடிபருத்தும் நுனி சிறுத்தும் இருக்க செய்யிற துலாவில சரியான இடம் பாத்து , வீட்டில வைக்கிற ஓட்டைக்கல்லு மாதிரி செவ்வக ஓட்டை வைச்சு குறுக்கு மரம் போட்டு துலாவை ஏத்தி விட அது காலத்துக்கும் இருக்கும். தென்னை எண்டால் அப்பிடியே சீவி வைக்ககலாம் , பத்து வருசத்திக்கு அசையாம இருக்கும். துலாவின்டை அடியில கட்டிற கல்லு டங்கு டங்கு எண்ட அடிக்க சத்தம் வரும் எண்டதால ரயரையும் சேத்துக்கட்டிறதும் வழக்கம் .  ஆனால் town பக்கம் கப்பி தான் கூட. கப்பிக்கு electricity board ல ஆரும் தெரிஞ்சவை இருந்தா high voltage வயர் இழுக்கிற மாபிள் கப்பி கள்ளமா எடுத்துப் பூட்டிறது இல்லாட்டி இரும்புக் கப்பிதான். கப்பிக்கயித்துக்கு மொத்தமான இளைக்கயிறு தான் நல்லம். நைலோன் கட்டினால் வாளி முடிச்சு நிக்காது அடிக்கடி வாளி கழண்டு கிணத்துக்க விழுந்திடும் ,ஆனாலும் அள்ளேக்க வாளிய உள்ள விட ஈசியா வழுக்கிக்ககொண்டு போகும் . தண்ணி அள்ளிறதுக்கு வாளியை தூக்கி கிணத்துக்க போடேக்க கப்பியின்டை தவாளிப்பிக்கால சிலவேளை கயிறு வெளீல பாஞ்சிடும் . கயித்தை எத்தி எத்தி அதை திருப்பி உள்ள போடுறதுகஸ்டம் . அதுகும் அள்ளிற சுகத்துக்கு முடிச்சுப் போட்ட நைலோன் கயிறெண்டால் சரி அவ்வளவு தான் . உயரம் காணாத வயசில அதை திருப்பிப்போட கிணத்துக் கட்டில ஏறித் துள்ள அப்பிடியே கயித்தோட கிணத்துக்க விழுந்து அம்மாவுக்கு தெரியாம ஏறி வந்ததும் நடந்தது.  பள்ளிக்குடத்தில வயல் கிணதுக்க குதிச்சு தான் நீந்தப் பழகினது எண்டு ஆரும் சொன்னதை கேட்டு உசுப்பாகி நானும் நீந்தப் போறன் எண்டு நல்லவேளை ஒரு நாளும் குதிக்கேல்லை. ஆனாலும் கள்ளமா கிணத்துக்க இறங்கினது நடந்தது. மழை காலத்தில நிரம்பிறதை எட்டிப் பாக்கிறது சந்தோசம் , தண்ணியும் நிறம் மாறி மஞ்சள் நிறமாக இருக்கும். கையால அள்ளிக் குளிக்கலாம் எண்டு பாத்துக்கொண்டிருக்க தண்ணி வத்தத்தொடங்கீடும்.  வீட்டுக்ககிணறு தான் இப்பிடி இறைக்கிறது ஆனால் தோட்டத்திக்கு் தண்ணி ஊர்வழிய சூத்திரத்தில மாடுகள் கட்டி , பட்டையில தான் இறைக்கிறது. வைரமாளிகை நாகலிங்கம் போடிற பனைமட்டை தொப்பியக் கவிட்டு விட்ட மாதிரித்தான் பட்டை இருக்கும். பனையோலையில கட்டிற பட்டை ஒழுகாம காலத்துக்கும் இருக்கும். பட்டையின்டை மூலைக்கு சாக்கு இல்லாட்டி பழைய ரயர் கட்டினால் அடி பட்டாலும் பிய்யாது. தோட்டத்திக்கு தண்ணி இறைக்க துலா மிதிக்கிறதும் இருந்தது , என்ன ரெண்டு பேர் தேவை . ஆனால் சூத்திர மாடு பழக்கி விட்டா ஆள் இல்லாமலே சுத்தும் தண்ணியும் இறைபடும் . தகரம் வைச்சு செய்யிற இரும்புப்பட்டையும் இருந்தது. அடீல ரெண்டு தட்டு வாளி போய் மடார் எண்டு தண்ணீல முட்ட திறக்கும். உள்ள தண்ணீர் நிரம்பினாப்பிறகு மேல வர தண்ணிப்பாரத்திக்கு தட்டு மூடும். சரியா ஒண்டு தண்ணியை கவிட்டுக் கொட்ட மற்றது கோலும். ஏன் இதுக்கு சூத்திரம் எண்டு பேர் வந்தது எண்டு அறிய வெளிக்கிட்டு; மாட்டை கட்டிற கயித்தின்டைநீளம் , அது சுத்திற வட்டத்தின்டை ஆரை , மாடு சுத்திற speed துலாவின்டை நீளம் , அதில் தொங்கிற கயித்திண்டை நீளம் , பட்டையின்டை அகலம் , தட்டின்டை ஓட்டை அளவு மாட்டு வாலின்டை நீளம், எண்டு எல்லா Data வும் computer ல feed பண்ண அது Google application form ஒண்டைத்தருது NASA க்கு வரச்சொல்லி அந்த சூத்திரம் (equation )என்ன எண்டு என்னைக்கேட்டு 🤔.  இறைக்க இறைக்க வத்தாத அறிவு மாதிரி NASA காரனுக்கே விளங்காத அறிவைத் தந்த அந்த கிணத்தடி போதிமரம் இப்ப புத்தர் எல்லாம் Bathroom வழிய குளிக்கிற படியால் வெறுமையானது . ஆனாலும் அழிந்த அந்த அவதாரம் மீண்டும் திருப்பி வரும் எண்ட நம்பிக்கையில் காத்திருக்கத் தொடங்கியது .   Dr.T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
  • இன்றைய இரண்டாவது போட்டியில் நமீபியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களை எடுத்தது.  பதிலுக்கு துடுப்பாடிய சிறிலங்கா அணி 3 விக்கெட் இழப்புடன்  100 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 மறுத்தான் 8 2 நந்தன் 8 3 முதல்வன் 6 4 சுவி 6 5 வாத்தியார் 6 6 ஏராளன் 6 7 ஈழப்பிரியன் 6 8 கோஷான் சே 6 9 வாதவூரான் 6 10 சுவைப்பிரியன் 6 11 எப்போதும் தமிழன் 6 12 கறுப்பி 6 13 ரதி 6 14 அஹஸ்தியன் 6 15 பிரபா சிதம்பரநாதன் 6 16 பையன்26 4 17 கிருபன் 4 18 நுணாவிலான் 4 19 நீர்வேலியான் 4 20 குமாரசாமி 4 21 தமிழ் சிறி 4 22 கல்யாணி 4   எல்லோரும் சிறிலங்கா வெல்லும் எனக் கணித்ததால் நிலைகளில் மாற்றம் இல்லை.
  • சாவகசேரியில் ஊத்துன  கழிவோயிலை  மாறி பார்த்துவிட்டான்கள்  போல் உள்ளது .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.