Jump to content

ஜனநாயகப் போராளிகள் மற்றும் சுமந்திரன் M.P மட்டக்களப்பில் சந்திப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகப் போராளிகள் மற்றும் சுமந்திரன் M.P மட்டக்களப்பில் சந்திப்பு

SayanolipavanJuly 24, 2021
 

battinews0001.jpg
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், கட்சியின் மட்டு அம்பாறை ஊடகப் பேச்சாளர் சாந்தன் உட்பட கட்சியின் மட்டக்களப்பு நிருவாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், முன்னாள் போராளிகள் தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்தும், அண்மையில் சமூகவலைதள பதிவு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்பிலுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகப் பொறுப்பாளர் நாகராசா பிரதீபராசா அவர்களின் வழக்கு விடயங்கள் தொடர்பிலும் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுதல், முன்னாள் போராளிகளின் அரசியற் செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.battinews.com/2021/07/blog-post_613.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் எம் பி. இதில் கலந்து கொள்ளவில்லையா? அவரது ஊரில்தானே சந்திப்பு நிழ்ந்தது.

 

Link to comment
Share on other sites

 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் அரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களை நானும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அவர்களும் நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடி இருந்தோம். இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

215901755_4791105754239683_4559424559633

221941092_4791105747573017_3386734513824

218653717_4791105740906351_3518513350360

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தலைமைக்கான போட்டியில் சுமந்திரன் ஆள் பிடிக்க வெளிக்கிட்டார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு தாடியர் ஒரு அறிக்கையோடு வருவார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.