Jump to content

முல்லைத்தீவில் கட்டுக்கடங்காத தென்பகுதி மீன்பிடியாளர்களால் கொரோனா ஆபத்து!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் கட்டுக்கடங்காத தென்பகுதி மீன்பிடியாளர்களால் கொரோனா ஆபத்து!

கே .குமணன் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த அனுமதியும் இன்றி தெற்கின் புத்தளம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் அத்துமீறி குடியமர்ந்து கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீன்பிடி தொழிலாளர்களால் வடக்கில் பாரிய ஆபத்தினை தோற்றிவிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

IMG_3687__1_.jpg

ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தளத்தினை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் வாடி அமைத்து குறுகிய நிலப்பரப்பில் தொழில்செய்து வருகின்றார்கள்.

ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து  இதுரை அப்பகுதியில்  53 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முடக்கப்பட்டுள்ள தங்கள் பிரதேசத்தை விடுவிக்க கோரி இன்று  (24.07.2021) போராட்டத்தில் குதித்துள்ள மக்களால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அச்சுறுத்தலாக காணப்படும் நாயாற்று மீனவ குடும்பங்களினால் சுகாதார பிரிவினருக்கு சிரமங்களுக்கு முகம் கொடுத்து பணிசெய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த பதிவும் இல்லாத மக்களால் சுகாதார பிரிவினருக்கு பணிசெய்வதில் பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பிலான கண்காணிப்போ அல்லது பதிவு நடவடிக்கையோ எவரிடமும் இல்லை. 

இந்நிலையில் தான் (22.07.21)அன்று இந்த பகுதியில் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் இரண்டு மாகாணங்களை கடந்து புத்தளத்திற்கு சென்றிருந்தமை இந்த மக்களின் அசண்டையீனத்தினை எடுத்துக்காட்டுகின்றது.

பொறுப்பற்ற மக்களாக பாமர மக்களாக எந்த அரச இயந்திரங்களுக்கும் கட்டுப்பாடாத மக்களாக இவர்கள் காணப்படுவதால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அல்லது இந்த நாட்டிற்கே ஒரு அச்சுறுத்தல் சமூகமாக மாறியுள்ளார்கள்.

ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்து வரும் இந்த கரையோர மக்கள் ஒரு கொரோனா கொத்தணியினை தோற்றிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் பொலிசாரோ, ஊடகத்தினரோ, அசர நிர்வாகத்தினரோ,அக்கறை இல்லாத நிலையில் உள்ளனர். சுகாதார துறையினர் முழுமையான பங்களிப்புடன் அர்பணிப்புடனும் செயற்பட்டு வரும் வேளையில் புத்தளம் மக்கள் ஒத்துழைப்பில்லாத நிலையில் அவர்கள் சுகாதர பிரிவினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பினையே வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

IMG_3691__1_.jpg

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி முடக்கப்பட்ட வேளை ஒரு  சிவில் சமூகமாக காணப்பட்ட பகுதி அரச கட்டுப்பாட்டினை சட்டத்தினை நடைமுறைப்படுத்த அதனை ஏற்ற மக்களாக காணப்பட்டார்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள் அதிகாரிகள் ஏன் முல்லைத்தீவில் 53 தொற்றாளர்களை கொண்ட முடக்கப்பட்ட கரையோர பகுதி தொடர்பில் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்துவதிலும் அரச இயந்திரங்களுக்கு அழுத்தம் கொடுப்பதிலும் பின்நிக்கின்றன என்ற கேள்வி முல்லைத்தீவு மாவட்ட சமூக அக்கறையாளர்களிடம் எழுந்துள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் காவலரண் அமைத்து வீதிசோதனை செய்து மக்களை விடாப்பிடியாக கட்டுபபடுத்திய பாதுகாப்பு தரப்பினர் புத்தளத்தினை சேர்ந்தவர்கள் வசிக்கும் நாயாற்று பகுதிதொடர்பில் அக்கறை காட்டவில்லை என்பது மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி அவ்வாறு அக்கறை காட்டியிருந்தால் எவ்வாறு ஒரு கொரோனா தொற்றாளர் மாவட்டம் விட்டு மாகாணம்விட்டு புத்தளத்திற்கு செல்லமுடியும்?

இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏன் பாகுபாடு?

புத்தளத்தில் இருந்து பருவகால மீன்பிடிக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்று பகுதிக்கு அனுமதி கொடுத்தது யார்? இந்த ஆண்டு எவருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை என கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆயிரம் வரையானவர்கள் சுமார் மூன்றூறு  படகுகளுடன் இங்கு வந்து தொழில் செய்வதற்கு யார்? அனுமதித்தார்கள் அவர்கள் தொடர்பிலான பதிவுகள் யாரிடம் உள்ளது?

இங்கு வாழ்கின்ற மக்கள் தொடர்பில் எந்த அரச அதிகாரிகளிடமும் பதிவு இல்லாத நிலையில் இவர்கள் செய்யும் தொழில்தான் என்ன கடற்தொழில் என்ற போர்வையில் இவர்கள் முல்லைத்தீவிற்கு வருவதன் நோக்கம் என்ன சட்டவிரோத தொழிலில் ஈடுபடவா (முல்லைத்தீவில் இருந்து இந்தியாவிற்கும் சர்வதேச கடல் எல்லையும் அருகில் இருப்பதன் காரணமா? என்ற கேள்விகள் முல்லைத்தீவு மாவட்ட மக்களிடத்தில் எழுகின்றது.

IMG_3667.jpg

இவ்வாறான தொழில் புரிபவர்களை கண்டுகொள்ளாத கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் ஏன் கொரோனா காலகட்டத்தில் இவர்களை இங்கு தொழில்செய்ய அனுமதித்தது.

நாயாற்று பகுதியில் புத்தளத்தினை சேர்ந்தவர்கள் வாழும் பகுதிக்கு அருகில்தான் நாயாறு கடற்படை தளம் அமைந்துள்ளது அண்மைய பகுதியில் இராணுவ முகாமகள் காணப்பட்டாலும் அந்த மக்கள் சிங்கள மொழியினை சரளமாக பேசக்கூடியவர்கள் என்பதன் காரணத்தினால் பாதுகாப்பு தரப்பினருடன் பேசியே தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். அவர்களும் இசைவாகவே செயற்பட்டு வருவதனை இங்கு தமிழ்மக்கள் மத்தியில் அவர்கள் நடந்துகொள்ளும் செயற்பாட்டினை வைத்து காணக்கூடியதாக இருக்கின்றது.

இது ஒரு கொரோனா வலயத்தினை தொற்றிவிக்கும் செயற்பாடாகவே புத்தளம் மக்களின் நடவடிக்கை அமைந்துள்ளது.

எத்தனை பேர்இவ்வாறு இங்கு வாழ்கின்றார்கள் என்று யாரிடமும் தெரியாத நிலை அரசாங்கத்தின பண உதவியினை பெற்றுக்கொள்வதற்காக 198 பேர் பதிவு செய்துள்ளார்கள்.

நிவாரணம் கொடுக்கவுள்ளதாக பிரதேச செயலகத்தினால் பதிவினை முன்னெடுத்தபோது 845 போர் பதிவினைமேற்கொண்டுள்ளார்கள்.

அவ்வாறு பதிவினை மேற்கொண்டவர்கள் அனைவருக்கும் அன்டிஜன்,பி.சி.ஆர் பிரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்று சுகாதாரபிரிவினர் பரிந்துரை செய்த போது இல்லை 400 பேர் வரையில்தான் என்று புத்தளம் மீனவர்கள் சொல்கின்றார்கள்.

இவ்வாறு எந்த கணக்கும் பதிவும் அற்ற நிலையில் வாழ்ந்துவரும் புத்தள மீன்பிடியாளர்களால் அரச சுகாதார உத்தியோகத்தர்கள் தங்கள் கடமையினை முழுமையாக செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

IMG_3673.jpg

முடக்கப்பட்ட பகுதியான இந்த பகுதியில் இருந்து 379 பேர்வரைக்கும் பி.சி.ஆர் செய்யப்பட்டதில் இன்று வரை 53 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் முடக்கப்பட்ட ஒரு பகுதியில் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர் செய்வதற்காக இன்று சுகாதார பிரிவினர் சென்றபோது முடக்கப்பட்ட பகுதியில் இருந்த புத்தளவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

நாட்டில் எத்தனையோ மக்கள் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டும் என வேண்டி நிக்கும் இந்த வேளையில் இந்த மக்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காமையானது கவலையளிக்கின்றது.

கடற்தொழில் அமைச்சு,நீரியல்வளத்திணைக்களத்தின் எந்த அனுமதியும் இல்லாத நிலையில் இவா்களின் கடற்தொழில் நடவடிக்கையினையும் இவர்களின் தொழில் நடவடிக்கையினையும் யார் கண்காணிப்பார்கள் இவ்வாறானவர்களின் செயற்பாட்டினால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாரிய ஆபத்து எதிர்காலத்தில் உள்ளது.  அரச பாதுகாப்பு இயந்திரங்கள் இதனை கருத்தில்கொண்டு சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை இங்கும் நிறைவேற்ற வேண்டும் என்பது முல்லைத்தீவு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

 

https://www.virakesari.lk/article/109997

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.