Jump to content

அமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அமேஸன் டெலிவெரியில் வந்தது..🏃🏿‍♀️  இனி   மழை, பனி என்று பார்க்காமல் நடக்கலாம்!

spacer.png

Link to comment
Share on other sites

  • Replies 149
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

இன்று அமேஸன் டெலிவெரியில் வந்தது..🏃🏿‍♀️  இனி   மழை, பனி என்று பார்க்காமல் நடக்கலாம்!

spacer.png

Mr. Bean அளவு கூட செய்யும் உடற்பயிற்சியை (பல் துலக்குதல், அதற்கு பற்பசை எடுப்பதற்கு மூடியை திறத்தல்,  மூடுதல், பற்பசை இருக்கும் குழாயை நசித்தல்,  வாய் அலசல், கொப்பளிப்பற்கு குனிதல் போன்றவை), தமது வியாபாரத்திற்கு தடுக்கிறார்கள்.

இவற்றை பார்த்தல், என்னக்கு அப்படித்தான் தெரிகிறது.

இவற்றை பார்த்தல், என்னக்கு அப்படித்தான் தெரிகிறது.

குடை பிடிப்பது, அதுவும் கனமழையில், கடும் காற்றில்,  (genetic memory இல் உள்ள ஓர் ) உடற்பயிற்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kadancha said:

குடை பிடிப்பது, அதுவும் கனமழையில், கடும் காற்றில்,  (genetic memory இல் உள்ள ஓர் ) உடற்பயிற்சி.

குடையைப் பிடிக்காவிட்டால் கையை விசுக்கி விசுக்கி வேகமாக நடக்கலாம்😁 

நான் மெனக்கெட்டு தேடி வாங்கினது. அமேஸன் இல்லாவிட்டால் இப்படி ஒன்று 3 -4 பவுண்ட்ஸுக்கு வாங்குவதே சிரமம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2021 at 21:27, goshan_che said:

இந்த திரியில் எழுப்பபட்ட இன்னொரு விடயம் பிரித்தானிய பல்கலைகழகங்கள் தனியார் நிறுவனங்களே - என்பது.

பக்கிங்ஹாம், ரீஜெண்ட், யூனிவர்சிட்டி ஒப் லோ, இன்னும் ஐந்து ஆறு யூனிகள்தான் முழுக்க முழுக்க தனியார் யூனிகள் (இவற்றில் மருத்துவம் கற்பிப்பதில்லை என உறுதியாக நம்புகிறேன் - ஆராயவில்லை). 

https://www.bbc.co.uk/news/education-30711724

On 31/7/2021 at 08:26, கிருபன் said:

இன்று அமேஸன் டெலிவெரியில் வந்தது..🏃🏿‍♀️  இனி   மழை, பனி என்று பார்க்காமல் நடக்கலாம்!

spacer.png

காத்தடித்தால், சாதாரண குடை என்றால் கையைவிட்டு விட்டு,நனைந்து கொண்டு போய் சேரலாம்.

இது தலையோடை இழுத்து, கழுத்தை சுளுக்கி.... வேறு பிரச்சனையை தரும் போல உள்ளதே. 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2021 at 15:45, Kadancha said:

நான் சொல்லியதில் "எனது" கோபத்தை யாராவது உணர்கிறீர்களா?  

அப்படி இருந்தால், நாதமுனியும் "எனது" கோபம் என்று புரிவதில் நியாயம் இருக்கிறது. 

நாதமுனியை தவிர்த்து இன்னொருவர் பதில் அளித்தாலே, இத பற்றி என்னால் தொடர முடியும்.

உங்கள் வழக்கமான பதிவுகளில் நீங்கள் எடுக்கும் சிரத்தை குறித்து வியந்திருக்கிறேன்.

இந்த திரியில், அதிகாலை நான்கு மணிக்கு வந்து அதிவேகமாக பதிந்த போதே, உங்கள் கோபம் தெரிந்தது. 

இதே போல் ஒரு கோபம், இலங்கை பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வெட்டு புள்ளியில், ஒரு புள்ளி குறைவாக எடுத்து, இடம் கிடைக்காமல் போன எனது உறவினர், அவரது குடும்பம் கொண்டிருந்ததை பார்த்திருக்கிறேன்.

இந்த திரியை மேலும் இழுக்க விரும்பவில்லை. ஒரு உதாரணம் மட்டுமே சொல்லி, உங்கள் கருத்து கேட்டு நகர விரும்புகிறேன். (அனேகமாக இன்னும் சில வாரங்களுக்கு, இணையத்துக்கு வர முடியாமல் போகலாம், எனினும் உங்கள் பதிலை பார்ப்பேன்)

பிரிட்டனின் மிகப்பெரிய ஒரு பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன். உலகின் 10 புகழ் மிக்க பிராண்டுகளில் ஒன்றான வர்ஜின் பிராண்ட் சொந்தக்காரர். அதனை வாடைக்கு கொடுத்தே காசு பார்க்கிறார். அவர் நினைத்தால், ஒன்றல்ல, பல மருத்துவ கல்லூரிகளை அமைத்து, நாட்டுக்கு இலவசமாகவே கொடுக்க முடியும்.

சரி விசயத்துக்கு வருவோம். அவரது மகள், புகழ் மிக்க University College of London (UCL) பல்கலைக்கழகத்தில் மருத்துவம் முடித்து, மருத்துவராக வெளியேறி, வேலை செய்து, இரண்டே வருடங்களில் விலகி, தந்தையின் நிறுவனத்தின் முக்கிய நிருவாக பொறுப்பில் சேர்ந்துள்ளார்.

ஒரு மிகச் சிறந்த கல்வியாளர் குடும்பத்தில் பிறந்து, கல்வி பெறாமல், வியாபாரம் புகுந்து வென்று, தனது பிள்ளைகள் தன்னை போல இருக்கக்கூடாது என்று கவனமெடுத்து படிப்பித்த எனக்குத் தெரிந்த ஒரே பணக்காரர்.

தந்தையின் நிறுவனம், அவருக்கே 100% சொந்தமானது. ஆகவே அவரது சொத்துக்கள், அவரது ஒரே மகளுக்கும், ஒரே மகனுக்கும் மட்டுமே போகப்போகின்றது. ஆகவே, தெரிந்தும் ஏன், மருத்துவம் படித்து வேறு ஒரு மாணவர் கனவை கலைத்தார் அல்லது வரியாளர் பணத்தினை விரயம் செய்தார்?

மான்செஸ்டர் மருத்துவர் 5 வருடத்தில் வெளியேறியது தவறு என்றால், இதுவும் தவறு தானே.

ஆனாலும் எல்லோரும் அறிந்த மிகப் பெரிய பணக்காரரின் மகள் குறித்து, எந்த பிரித்தானிய மீடியாக்களும், எந்த ஒரு தனி மனிதரும் தவறு என்று சொல்லவில்லையே ஏன் என்று விளக்கம் தருவீர்களா?

மருத்துவம் குறித்த எமது பார்வை சிறிது உணர்வு பூர்வமானதா?  அப்படியானால், அது தேவையானது தானா?

இப்போது பாருங்கள், இங்கே வாழும், எம்மவர்களை, இந்த உணர்வு காரணமாக, கிழக்கு ஐரோப்பிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுப்ப, பெரிய வியாபாரமே நடக்கிறது. வெள்ளைகள், இது குறித்து அலட்டி கொள்வதில்லையே ஏன்? 

  • முன்னர் ஒரு திரியில் தமிழ் சிறியருக்கும் எனக்கும் தெரிந்த, யாழ் கந்தர்மடம் ரவிராஜ் என்பவர் குறித்து இருவரும் பேசி இருந்தோம். அவர் குறைந்தது 5 வருடம், பேராதனையில் கடைசி வருடம் இருந்தார். பேராசிரியர் உடன் தண்ணியை போட்டு கொழுவியதால், நான் இங்கு இருக்கும் வரை, நீ வெளியே போக முடியாது என்று சொல்லி விட்டார் பேராசிரியர்.
    முடிக்காமலே வெளியே வந்து, ஒரு சாதாரண வேலை செய்து, மூன்று வருடங்களுக்கு முன், அதே தண்ணி பழக்கத்தால் இறந்து போனார்.
    ஆகவே, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. இதனை எம்மவர்கள் தலைவிதி என்றும் சொல்வார்கள்.
  • கவ்வி என்பது ஒவ்வொரு மாணவனதும் அடிப்படை உரிமை. அதே மாணவன், வளர்ந்து, வேலை செய்து, செலுத்தும் வரியில் அடுத்து வரும் சந்ததியும், அதே உரிமையை கொண்டிருக்கும்.
  • அந்த உரிமையினை சரியாக பயன்படுத்தி வெற்றி அடைந்தாலும், அதனையே கட்டிப்பிடித்துக் கொண்டு, வாழ்க்கை முழுவதும் ஓட்ட வேண்டும் என்று, பிரித்தானியர்கள் யாரும் எதிர்பார்ப்பதும் இல்லை. அலட்டிக் கொள்வதும் இல்லை என்பதே எனது பார்வை.
  • இதே கோணத்தில் தான் அவர்களது மண வாழ்வு பார்வையும். சரிவராவிடில், கழட்டி விட்டு அடுத்ததை தேடி போய் கொண்டே இருப்பார்கள்.
  • உதாரணம் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன். இரண்டாவது பிள்ளைக்கு தகப்பன் ஆகப்போகிறார்.... இவரது மூன்றாவது மனைவிக்கு.....

உங்கள் அபிப்பிராயம் மட்டுமே கேட்கிறேன். கோபமில்லாமல் பதில் தாருங்கள். நன்றி.

என்னைப் பொறுத்தவரை, தல சொன்னது போல, மிகவும் சீரியஸ் ஆக எடுத்து விட்டீர்கள் என்று தோன்றுகிறது.

take it easy!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இது தலையோடை இழுத்து, கழுத்தை சுளுக்கி.... வேறு பிரச்சனையை தரும் போல உள்ளதே. 🤗

அப்படியெண்டாலும் பரவாயில்லை மேலே தூக்கிக்கொண்டு பறந்தால்  என்னவாகிறது நம்ம நிலை ஒரு சில மட்டு  நிம்மதி பெருமூச்சு விடுங்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

உங்கள் வழக்கமான பதிவுகளில் நீங்கள் எடுக்கும் சிரத்தை குறித்து வியந்திருக்கிறேன்.

இந்த திரியில், அதிகாலை நான்கு மணிக்கு வந்து அதிவேகமாக பதிந்த போதே, உங்கள் கோபம் தெரிந்தது. 

இதே போல் ஒரு கோபம், இலங்கை பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வெட்டு புள்ளியில், ஒரு புள்ளி குறைவாக எடுத்து, இடம் கிடைக்காமல் போன எனது உறவினர், அவரது குடும்பம் கொண்டிருந்ததை பார்த்திருக்கிறேன்.

இந்த திரியை மேலும் இழுக்க விரும்பவில்லை.

பதியும் நேரம், எனது  உணர்ச்சியை, அக்கறை பிரதிபலிக்கிறது என்பது, உங்களின் முடிவு.  

என்னிடம் உள்ள நேரம், எனது schedule ஐ கொண்டு நான் பதிவது. இப்பொது 6:45, கோபமா, அக்கறையா? 

மற்றது, எனது துறை மருத்துவமோ அதனுடன் சம்பந்த பட்டதாகவோ இது வரையில் இல்லை. 

ஏனெனில், உங்கள் உதாரணத்தால்    மருத்துவம் அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட துறைகளில் வேண்டாத  பாதிப்பால் என்னிடம்  கோபம் இருக்கிறது என்பது ஒரு விதத்தில் தொக்கு நிற்கலாம், அப்படி, ஒரு நிலையம் என்னிடம் இல்லை.   

richard branson க்கு இந்த பிரச்சனையில் விதி விலக்கு  இருக்கலாம், ஏனெனில், அவர் கட்டும் வரி அரச  செலவை விட அதிகமானது. ஆனால், medical training funding system என்று வரும்போது, விதி விலக்கு எவருக்கும் இல்லை.   

richard branson மகள், நான் அறிந்த வரையில், richard branson இன்  தனியார்  மருத்துவ அமைப்புக்கு நிர்வாகம் மற்றும் பொறுப்பில் இருப்பதாக. அது இன்னும் அப்படித் தான் என்றால், அவர் மருத்துவ துறையை விட்டு நீங்கவில்லை.  நீங்கினால், அது தவறு.

பத்திரிகைகள், இந்த பிரச்னையை பற்றி எப்போதாவது கதைத்தா? 

உண்மையில், இதை ஒருவாறு நோகாமல் (between lines) எதிர்த்து (நான் முன்பு இணைத்த) independent  சொல்லி இருந்தது.

Free choices ஐயும்,  அந்த ஒவ்வொரு தெரிவையும் அடைவாதற்கான funding ஐயும், ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாததை, ஏன் குழப்ப வேண்டும்? 

பிரித்தானியர், மணவாழ்க்கையை கூட  முறிக்கும் போது, funds-attrition, tax, cost, future-beneficiary efficient ஆக முறிப்பது உங்களுக்கு தெரியவில்லை  போலும்.   

அது போலத்தான், மருத்துவ துறையில்  , எல்லோரினதும்  நலனை சமப்படுத்தி, அரசு 4 வருட  Return of Service ஐ கேட்கிறது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

funds-attrition என்பது assets-attrition ஆக பதியப்பட்டு இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

காத்தடித்தால், சாதாரண குடை என்றால் கையைவிட்டு விட்டு,நனைந்து கொண்டு போய் சேரலாம்.

இது தலையோடை இழுத்து, கழுத்தை சுளுக்கி.... வேறு பிரச்சனையை தரும் போல உள்ளதே

தூறல் மழை, பனிக்குள் நடந்து தொடர்ந்தும் 18 வயது fitness ஐ தக்கவைக்க தொப்பிக்குடை போட்டுக்கொண்டு வெள்ளோட்டம் போனேன்😉. கார்களில் போனவர்கள் சிலர் ஸ்லோ பண்ணி பார்த்தது போலிருந்தது. இரண்டு van ட்ரைவர்ஸ் ஹோர்ன் அடித்து கையால் 👍🏾 sign உம் தந்தார்கள்.😍
ஒருத்தி பின்னால் ஓடி வந்து எங்கே வாங்கினாய் என்று வேறு கேட்டாள்!😻

சோவெனப் பெய்யும் மழை பிரித்தானியாவில் அடிக்கடி வாறதில்லை. வெறும் சிணுங்கல் மழைதானே வாறது. அதுக்கு வெளியில் போக தொப்பிக்குடை கச்சிதமாக இருக்கு!

large.A7ADEB6B-B0CB-4E00-8F19-C3912EB98747.jpeg.2bb8c318e2470cb65033f89694cdcb36.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

richard branson மகள், நான் அறிந்த வரையில், richard branson இன்  தனியார்  மருத்துவ அமைப்புக்கு நிர்வாகம் மற்றும் பொறுப்பில் இருப்பதாக. அது இன்னும் அப்படித் தான் என்றால், அவர் மருத்துவ துறையை விட்டு நீங்கவில்லை.  நீங்கினால், அது தவறு.

https://www.virgin.com/branson-family/holly-branson

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

தூறல் மழை, பனிக்குள் நடந்து தொடர்ந்தும் 18 வயது fitness ஐ தக்கவைக்க தொப்பிக்குடை போட்டுக்கொண்டு வெள்ளோட்டம் போனேன்😉. கார்களில் போனவர்கள் சிலர் ஸ்லோ பண்ணி பார்த்தது போலிருந்தது. இரண்டு van ட்ரைவர்ஸ் ஹோர்ன் அடித்து கையால் 👍🏾 sign உம் தந்தார்கள்.😍
ஒருத்தி பின்னால் ஓடி வந்து எங்கே வாங்கினாய் என்று வேறு கேட்டாள்!😻

சோவெனப் பெய்யும் மழை பிரித்தானியாவில் அடிக்கடி வாறதில்லை. வெறும் சிணுங்கல் மழைதானே வாறது. அதுக்கு வெளியில் போக தொப்பிக்குடை கச்சிதமாக இருக்கு!

large.A7ADEB6B-B0CB-4E00-8F19-C3912EB98747.jpeg.2bb8c318e2470cb65033f89694cdcb36.jpeg

நான் நினைக்கிறேன் இது 1976-1982 ல் ஒருமுறை வந்திருக்க வேண்டும். கொழும்பில் ஒரு சிறுவன் அணிந்திருந்ததை பார்த்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

தூறல் மழை, பனிக்குள் நடந்து தொடர்ந்தும் 18 வயது fitness ஐ தக்கவைக்க தொப்பிக்குடை போட்டுக்கொண்டு வெள்ளோட்டம் போனேன்😉. கார்களில் போனவர்கள் சிலர் ஸ்லோ பண்ணி பார்த்தது போலிருந்தது. இரண்டு van ட்ரைவர்ஸ் ஹோர்ன் அடித்து கையால் 👍🏾 sign உம் தந்தார்கள்.😍
ஒருத்தி பின்னால் ஓடி வந்து எங்கே வாங்கினாய் என்று வேறு கேட்டாள்!😻

சோவெனப் பெய்யும் மழை பிரித்தானியாவில் அடிக்கடி வாறதில்லை. வெறும் சிணுங்கல் மழைதானே வாறது. அதுக்கு வெளியில் போக தொப்பிக்குடை கச்சிதமாக இருக்கு!

அப்படியே மாஸ்க் ஐயும் போட்டால் தெரிந்தவர்களுக்குக்கூட  தெரியாமல் போய் விடுவம் 

கொரனோ புண்ணியத்தில் கடை தெருவில் தேவையற்ற அறுவை கூட்டம்களில் இருந்து தப்புவது இலகுவாக உள்ளது அதிலும் சிலருக்கு பக்கத்தில் துணிந்து போகலாம் அடையாளம் பிடிக்க முடியாமல் குழம்பும் நேரத்துக்குள் எஸ்கேஎப் ஆகலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பெருமாள் சொன்ன மஸ்க் திட்டம் மிகவும் பயனுள்ளது.
தம்பி என்று அழைத்து 🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

தூறல் மழை, பனிக்குள் நடந்து தொடர்ந்தும் 18 வயது fitness ஐ தக்கவைக்க தொப்பிக்குடை போட்டுக்கொண்டு வெள்ளோட்டம் போனேன்😉. கார்களில் போனவர்கள் சிலர் ஸ்லோ பண்ணி பார்த்தது போலிருந்தது. இரண்டு van ட்ரைவர்ஸ் ஹோர்ன் அடித்து கையால் 👍🏾 sign உம் தந்தார்கள்.😍
ஒருத்தி பின்னால் ஓடி வந்து எங்கே வாங்கினாய் என்று வேறு கேட்டாள்!😻

சோவெனப் பெய்யும் மழை பிரித்தானியாவில் அடிக்கடி வாறதில்லை. வெறும் சிணுங்கல் மழைதானே வாறது. அதுக்கு வெளியில் போக தொப்பிக்குடை கச்சிதமாக இருக்கு!

large.A7ADEB6B-B0CB-4E00-8F19-C3912EB98747.jpeg.2bb8c318e2470cb65033f89694cdcb36.jpeg

உதாரிது, மோனே.... அப்படியே தேப்பன் மாதிரி இருக்கிறார்.... 😁:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

உதாரிது, மோனே.... அப்படியே தேப்பன் மாதிரி இருக்கிறார்.... 😁:grin:

எங்கட ஜி தான். Faceapp ல வயச கரைக்கிறார்🤣

8 hours ago, கிருபன் said:

தூறல் மழை, பனிக்குள் நடந்து தொடர்ந்தும் 18 வயது fitness ஐ தக்கவைக்க தொப்பிக்குடை போட்டுக்கொண்டு வெள்ளோட்டம் போனேன்😉. கார்களில் போனவர்கள் சிலர் ஸ்லோ பண்ணி பார்த்தது போலிருந்தது. இரண்டு van ட்ரைவர்ஸ் ஹோர்ன் அடித்து கையால் 👍🏾 sign உம் தந்தார்கள்.😍
ஒருத்தி பின்னால் ஓடி வந்து எங்கே வாங்கினாய் என்று வேறு கேட்டாள்!😻

சோவெனப் பெய்யும் மழை பிரித்தானியாவில் அடிக்கடி வாறதில்லை. வெறும் சிணுங்கல் மழைதானே வாறது. அதுக்கு வெளியில் போக தொப்பிக்குடை கச்சிதமாக இருக்கு!

large.A7ADEB6B-B0CB-4E00-8F19-C3912EB98747.jpeg.2bb8c318e2470cb65033f89694cdcb36.jpeg

கையால காட்டினது 👍🏿 சைகைதான் என்று sure ஆ தெரியுமோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எங்கட ஜி தான். Faceapp ல வயச கரைக்கிறார்🤣

வல்லிபுரக்கோயில் கடல் தீர்த்த திருவிழாவிலை காணாமல் போனவர் மாதிரி இருக்கிறார்... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

வல்லிபுரக்கோயில் கடல் தீர்த்த திருவிழாவிலை காணாமல் போனவர் மாதிரி இருக்கிறார்... 🤣

பேர்த்தே பிசில இருக்கிறார், வந்து இதுக்கு பதில் தருவார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பேர்த்தே பிசில இருக்கிறார், வந்து இதுக்கு பதில் தருவார்🤣

இதென்ன பணச்சடங்கு மாதிரி மூன்று நாள் கொண்டாட்டமா நடக்குது? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

கையால காட்டினது 👍🏿 சைகைதான் என்று sure ஆ தெரியுமோ🤣

எனக்கு எந்த விரல் எண்டு சந்தேகம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

ஏன் இந்த குறித்த நபர் பற்றிய  இணைப்பை தந்தீர்கள் என்று தெரியவில்லை, அந்த நபர் மருத்துவ சேவையில் இருந்து விலத்தி இருக்கும் சாத்தியக்கூறுகள் பற்றி நான் சொல்லியும்.

குறித்த நபர் சிறிது காலம் மருத்துவ துறையில் வேலை செய்தே விலத்தினார் என்பதும் தெரியும்.

 குறித்த நபர் என்று இந்த பிரச்னையை பார்க்கிறீர்கள்?, மேலே உள்ள குறித்த நபர் ஓர் தனிப்பட்ட உதாரணம். உங்கள் கேள்வி, குறித்த நபரின் பிரச்சனையை ஏன் பத்திரிகைகள் விடயமாக எடுக்கவில்லை.  குறித்த நபரும் பிரச்சனைக்குள் அடங்குகின்றாரே  தவிர, அவர் இருப்பதால் அல்லது இல்லாததால் மட்டும் தான் பிரச்னை இருக்கிறது அல்லது இல்லாதது என்று  ஆகி விடாது.

medical training funding என்பது ஓர் (இதுவரையில்) அரசின் ஓர் System.

யாரின் வாரிசாகவும் இருக்கட்டும். 

மறு  வளமாக, குறித்த நபர் என்பதன்  காரணமாக மருத்துவ இடமோ அல்லது அரசு அவரின் மருத்துவ  பயிற்சி  செலவு பொறுப்பெடுத்ததை தவிர்க்கவில்லை. 

( குறிப்பு: பிரதமரின் வாரிசே  1ம் உலக  யுத்தத்தில் இராணுவ சேவையில் இழந்த நாடு, அதை தூக்கி பிடிக்காத  நாடு இது. )

---------------------------------------------------------------------------------------------------------------------------

On 2/8/2021 at 22:27, Nathamuni said:

கோபமில்லாமல் பதில் தாருங்கள். நன்றி.

என்னைப் பொறுத்தவரை, தல சொன்னது போல, மிகவும் சீரியஸ் ஆக எடுத்து விட்டீர்கள் என்று தோன்றுகிறது.

take it easy!!

உங்களுக்கு, எல்லாமே தனிப்பட்ட அல்லது கோப கோணத்தில் தான் தெரிகிறது போலும்?

இங்கு கதைப்பது, ஓர் பொதுவான பிரச்சனையை பற்றி, தனி நபரை பற்றி அல்ல 

நான் பதியும் நேரம்; அதை வைத்து என்னக்கு தனிப்பட்ட முறையில் கோபம், அக்கறை என்பதை நீங்களே தீர்மானித்தீர்கள்.

எனது உறவினரின் செயற்றப்பாட்டை கொண்டு, பொதுவான மனித எண்ணப்படும், செயற்றப்படும் எப்படி இருக்கும் என்பதை காட்டி,  அதே உரிமைஅரசுக்கும் உள்ளது என்றால், அதை எனது  கோபம் என்கிறீர்கள். நான் சொல்ல (பொது)  கருத்தை வந்த  விளக்கினால், புரியவில்லை என்கிறீர்கள்.  

உங்கள் நண்பர் செய்ததை சொன்னதில் இருந்து தொடங்கி, Branson இன் மகள் வழி வந்து, பிரித்தானிய பிரதமரின் குடும்ப வாழ்க்கையை கொண்டும் உதாரணம் கட்ட விளைந்ததை, எப்படி எடுப்பது? 

உங்கள் வழியே வந்தால், அதை உங்கள்  கோபமாக எடுத்திருந்தது, நான்  பதில் அளித்து இருக்க வேண்டும்.  

நீங்கள் என் மீது குறையாக  கூறிய,  Tony Blair அரசாங்கதின் "பின்னர்" என்பதை நான் தவிர்த்து, "முற்றாக" என்பதை நான் சேர்த்து பதிந்ததாக, உங்கள் வார்த்தைகளில் நீங்கள் சொல்லாததை   சொன்னதாக நான் பதிந்துளேன். நீங்கள்  சொன்ன விளக்கத்தினால், நீங்கள் பதிந்ததாக எண்ணிய கருத்து வலுவடைந்து என்பதற்கு என்னுடைய விளக்கமும் (எவ்வளவுக்கு எவ்வளவு Tony Blair க்கு பின் வருகிறீர்களோ, அவ்வளவுக்கு  நீங்கள் பதிந்தது  வலுப் பெறும்) எந்த வித உணர்ச்சியும் இன்றி clinical ஆகத்தான் பதில் தரப்பட்டது.     

ஒன்றையும் உணர்ச்சி கலக்காது,  எல்லாம் clinical ஆக, எந்தவித உணர்ச்சியும் இன்றி பதில் அளிக்கப்பட்டது.

அளிக்கப்பட்ட பதில்களை, கோபம்  (அல்லது அதீத அக்கறை)  என்று நீங்கள் கற்பனை செய்து விட்டு, அதை என்னிடம் திணிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இதென்ன பணச்சடங்கு மாதிரி மூன்று நாள் கொண்டாட்டமா நடக்குது? 😁

அதுக்குள்ள ஒருத்தி, பின்னால ஓடியாந்து, எங்க வாங்கினது எண்டு கேட்டதால வந்த அதிர்ச்சீல இருந்து மீளாததால, இன்னும் இங்கை வரேல்ல.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2021 at 17:03, goshan_che said:

கையால காட்டினது 👍🏿 சைகைதான் என்று sure ஆ தெரியுமோ🤣

லோங்  வீலர் வான்களில் போகும்போது வீதியில் நடக்கும் அத்தனை புதினம்களும் பிராக்கு பார்க்கலாம் பதிவான கார்களில் நடக்கும் குத்துப்பாடுகளும் முதலில் தெரிவது அவர்களுக்குத்தான் லாண்ட் ரோவர் ultimate luxury SUV கூட தோத்து  போகுமண்னே உயரம் கூட சதாரண MWB வீலர் வான்கள் கூட உயரம்தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, பெருமாள் said:

லோங்  வீலர் வான்களில் போகும்போது வீதியில் நடக்கும் அத்தனை புதினம்களும் பிராக்கு பார்க்கலாம் பதிவான கார்களில் நடக்கும் குத்துப்பாடுகளும் முதலில் தெரிவது அவர்களுக்குத்தான் லாண்ட் ரோவர் ultimate luxury SUV கூட தோத்து  போகுமண்னே உயரம் கூட சதாரண MWB வீலர் வான்கள் கூட உயரம்தான் .

ஓம் நானும் முந்தி படிக்கிற காலத்தில ஒரு VW  LT type 2 வில நாடு முழுக்க ஓடி திரிஞ்சனான். அதில் இருந்து பார்ப்பது ஒரு தனி உலகம்தான். காருக்குள் நடப்பது மட்டும் அல்ல, வேலிகளுக்கு மேலால் பல அமைப்புசார் இடங்களையும் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2021 at 11:32, பெருமாள் said:

அப்படியே மாஸ்க் ஐயும் போட்டால் தெரிந்தவர்களுக்குக்கூட  தெரியாமல் போய் விடுவம் 

கொரனோ புண்ணியத்தில் கடை தெருவில் தேவையற்ற அறுவை கூட்டம்களில் இருந்து தப்புவது இலகுவாக உள்ளது அதிலும் சிலருக்கு பக்கத்தில் துணிந்து போகலாம் அடையாளம் பிடிக்க முடியாமல் குழம்பும் நேரத்துக்குள் எஸ்கேஎப் ஆகலாம் .

இப்போது மாஸ்க் போடுபவதை விட்டுவிட்டேன். மற்றவர்கள் போடாமல் இருக்கும்போது நாம் மட்டும் போட்டு  பிரயோசனம் இல்லை. மாஸ்க் போடுவது எமது கிருமிகள் மற்றவர்களுக்கு போகாமல் தடுக்கவே.

On 3/8/2021 at 17:03, goshan_che said:

கையால காட்டினது 👍🏿 சைகைதான் என்று sure ஆ தெரியுமோ🤣

இன்னும் x-ray கண்பார்வை இருக்கு😁. கிட்டடியில்தான் கண்ணாடியும் மாற்றினேன். 😎

15 hours ago, நந்தன் said:

எனக்கு எந்த விரல் எண்டு சந்தேகம் 😁

நடுவிரல் இல்லை😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2021 at 18:58, குமாரசாமி said:

வல்லிபுரக்கோயில் கடல் தீர்த்த திருவிழாவிலை காணாமல் போனவர் மாதிரி இருக்கிறார்... 🤣

அழல் வெம்மை இவ்வளவு தூரம் அடிக்குது!😂 தீர்த்தக்கரையில துலையிறவை சின்னக் கோயில்களில் சுத்திப்போட்டுவரும் வேற்றிடத்தார்தான். நாம துலைஞ்சதா சரித்திரம் இல்லை! 

19 hours ago, குமாரசாமி said:

இதென்ன பணச்சடங்கு மாதிரி மூன்று நாள் கொண்டாட்டமா நடக்குது? 😁

நோமலா ஒன்றிரண்டு கிழமை😄 எப்பவும் ஹொலிடே எடுப்பதுண்டு. இப்பவும்தான்😀

12 hours ago, Nathamuni said:

அதுக்குள்ள ஒருத்தி, பின்னால ஓடியாந்து, எங்க வாங்கினது எண்டு கேட்டதால வந்த அதிர்ச்சீல இருந்து மீளாததால, இன்னும் இங்கை வரேல்ல.... 😁

எரிச்சல் அப்படியே தெரியுது😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.