Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

திருகோணமலையை மையமாக வைத்துச் சுழலும் உலக அரசியல்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையை மையமாக வைத்துச் சுழலும் உலக அரசியல்
 
கோவிட் 19இற்குப் பின்னரான உலக அரசியல் என்பது, பொருளாதார உடன் படிக்கைகளின் வழியான அரசியல் கட்டங்களை உருவாக்குதல் வழி நகரத் தொடங்கியுள்ளது. சீனாவின் முன்னைய பட்டுப்பாதைக் கடல் வழித் துறைமுக இணைப்பு வழி உலகைத் தனது மனித வளத்துடனும், இயற்கை வளத்துடனும் இணைத்து எழுதல் என்ற அற்புதமான திட்டத்தை இன்று கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய வடிவில் வெற்றிகரமாக முன்னெடுத்து, உலக நாடுகள் பலவற்றிலும் சீனா முதலீட்டு நாடாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த முதலீட்டு வழி அரசியல் இணைப்பு பெறும் அரசியல் தந்திரோபாயத்தை அமெரிக்கா தனது முதலீட்டாளர்கள் மூலம் செய்வித்துத் தான் சீனாவுக்குச் சமானமான வெற்றி யினைப் பெறுவதற்கான பயணத்தை கோவிட் 19 இன் பின்னர் ஆரம்பித்துள்ளது. உலக வல்லாண்மை நிலையில் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அமெரிக்காவுக்கு இது தவிர்க்கப்பட முடியாத கால தேவையாகவும் உள்ளது.

இந்த ‘முதலீட்டால் வையத்தில் முந்தியிருத்தல்’ என்னும் புதிய அரசியல் வியூகத்தின் தொடக்க முயற்சிகளில் ஒன்றாகத் திருகோணமலையை மையமாக வைத்து உலக அரசியலைத் தன்பக்கம் சுழற்றுவதற்கான ஒரு முயற்சியிலும் அமெரிக்கா இறங்கி யுள்ளது எனத் தெரிய வருகிறது. அமெரிக்க நிறுவனம் ஒன்றின் மூலமாக ‘மூவாயிரம் மில்லியன் டொலர்களுக்குத் திருகோணமலைத் துறைமுகத்தை ஐந்து ஆண்டு களுக்குக் குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளுதல்’ என்பதற்கான பேரம் பேசுதல்கள், கோவிட் 19இற்குப் பின்னரான புதிய அரசியல் ஒழுங்குமுறையைத் தோற்றுவிக்கும் செயற்பாட்டின் மௌன நாடகமாக பசில் ராசபக்ச என்ற சிறீலங்காத் தரப்புக் கதாநாயகனின் வழி இயக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இன்று அந்தக் கதாநாயகனான தனது தம்பி பசில் ராசபக்சவையே சிறீலங்காவின் நிதியமைச்சராக அண்ணன் சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாயா  ராசபக்ச அமர்த்தி, “ஒரு புறம் சீனா மறுபுறம் அமெரிக்கா இரண்டுக்கும் நடுவே நான் இருக்கிறேன்” என்று சிவத்திற்கும் சக்திக்கும் நடுவில் தான் இருப்பதாகப் பாண்டிய அமைச்சர் மாணிக்கவாசகர் பாடியது போல, புதிய பக்திப் பண்ணிசைத்து மகிழ்கின்றார். அண்ணன் காட்டிய வழியம்மா என “என் கடன் பணி செய்து கிடப்பதே” என பசில் ராசபக்ச இராமனுக்குப் பரதனாக, அண்ணா இரண்டாவது ஜனாதிபதிப் பதவிக் காலத்திலும் வெற்றி பெற்று முடிசூடத் தன் குடும்பப் பணியினை அண்ணனின் கால் அணியைப் பரதனைப் போல் கண்ணில் ஒற்றித் தலையில் சுமக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த வெற்றிக் களிப்பில் “தம்பியுடையான் படைக்கஞ்சான்” என்ற வீரத்துடன் அண்ணன் சிறீலங்கா அரச அதிபர்  கோத்தபாயா  ராசபக்ச இப்போது மூன்று ஆண்டு திட்டங்களாக உள்ள தனது அரச அதிபர் அலுவலகச் செயற்திட்டங்களின், மேற்கால எல்லை எட்டு வருடம் எனத், தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையிலேயே ஊடகங்களுக்கு முன்மொழியத் தொடங்கி விட்டார். இது குடும்ப ஆட்சி நீடிப்பு மகிழ்ச்சி அறிவிப்பாக மட்டும் அமையாது தனது அரசாங்கம் உறுதியான அரசாங்கமென உலக முதலீட்டாளர்களுக்கு உறுதிப்படுத்தி சிறீலங்காவுக்கான அனைத்துலக முதலீட்டைப் பெருக்கும் அரசியல் தந்திரேபாயமாகவும் அமைகிறது.

சீனாவிடம் இருந்து சீனப் பணமாகிய யுவானில் பெற்ற பெருங்கடன் தொகையை அமெரிக்க டொலர்களாக மாற்றி, உலகச் சந்தையில் திரவ நிலைக்குக் கொண்டு வந்து, நாளாந்த சந்தைக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய இயலாது ‘வங்குரோத்து’ அரசாகத் தன்னை அறிவிக்கும் அபாய நிலைக்குச் சென்று கொண்டிருந்த சிறீலங்காவுக்கு, 60 ஆயிரம் கோடி இலங்கை ரூபாவுக்குச் சமானமான மூவாயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை நாணய மாற்றம் செய்யக் கிடைக்கும் சந்தர்ப்பத்தைச் சிறீலங்கா தவறவிடாது, தக்க வைத்துக் கொள்ள தன்னாலான முயற்சிகளை எல்லாம் செய்யும் என்பது அனைவராலும் எதிர் பார்க்கப்படக் கூடிய ஒன்றாகவே உள்ளது.

அதே வேளை அமெரிக்க சார்பான பொருளாதார முதலீட்டுப் பெருக்கம் என்பது உலக வங்கி, நாணயமாற்று வங்கி போன்றவற்றின் கடனுதவிகளையும், முதலீட்டு உதவிகளையும் மீளவும் பெறும் வழியாகவும், ஐரோப்பிய ஒன்றியப் பாராளு மன்றத்தின் வரிச் சலுகைக்கான முன் நிபந்தனையாக வைக்கப் பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம் என்பதைச் செய்யாமலே தனக்கான நிதி வளத்தை சிறீலங்கா நிலை நிறுத்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம்,  சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாயா ராசபக்சவும் அவரது ஆணையில் செயற்பட்ட படையினரும் இழைத்த அனைத்துலகக் குற்றச் செயல்களுக்கான  அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்ள எடுக்கும் முயற்சிகளில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கான உத்தியாகவும் அமைகிறது.

ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்துப் பழகிய ராசபக்ச குடும்பத்தினர் இப்போது ஒரு கல்லில் நான்கு மாங்காய்களை வீழ்த்தும் அற்புத விற்பன்னர்களாகப் பரிணமித்து  ள்ளனர். முதல் மாங்காய், அமெரிக்க டொலர் பற்றாக் குறையையும் பஞ்சாகப் பறந்து போகச் செய்து ‘வங்குரோத்து’ நிலையிலிருந்து தப்பித்தல். இரண்டாவது மாங்காய், சிறீலங்காவில் சீனாவின் மேலாதிக்கம் நடை முறை வாழ்வாகிறது. தங்களின் பௌத்த சிங்கள மகாவம்ச சிந்தனைகள் தளர்கின்றன எனத் தவித்த பௌத்த பிக்குகளுக்கு, இனி சீனா மட்டுமல்ல அமெரிக்காவும் புத்தசாசனத்தின் பாதுகாப் பாளர்கள் என உறுதிப்படுத்தி, சிங்கள மக்களின் எதிர்ப்புக்குத் தப்புதல்.   மூன்றாவது மாங்காய், திருகோணமலையில் உள்ள இந்தியாவின் எண்ணெய்த் தாங்கி முதலீடுகளின் வருமானங்களைப் பலவீனப் படுத்தி, அங்கிருந்து தானாகவே ஒட வைப்பதன் மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2015ஆம் ஆண்டின் இலங்கை வருகையின் போது திருகோண மலையை தெற்காசிய எண்ணெய்க் கேந்திர நிலையமாக்குவோம் என உலகுக்கு உரைத்த சூளுரையை கனவாக்கி, இந்தியாவின் பிராந்திய வல்லாண்மையை இழக்க வைத்தல் என்னும் கனவை நனவாக்குதல். நான்காவது மாங்காய் ராசபக்ச குடும்பத்தினரதும் அவர்களது ஆணையில் செயற்பட்ட படையினரதும் அனைத்துலகக் குற்றச் செயல் விசாரணை களுக்குத் தப்பிப் பிழைப்பது என்பதாகிறது.

இந்த மகிந்த ராசபக்ச குடும்ப ஆட்சி மையத்தின் மிக உயர் இராஜதந்திர வலைப்பின்னல் என்பது சுருக்கமாகச் சொன்னால், ஈழத் தமிழின அழிப்புக்களை நியாயப்படுத்தி ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்கிற சிங்கள பௌத்த சர்வாதிகார நாடாக இலங்கைத் தீவை மாற்றுவது என்பது எல்லா வகையிலும் தெளிவாகிறது. இதற்கு இந்தியாவும், ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும், புலம்பதிந்து வாழும் ஈழத் தமிழர்களும் என்னும் நான்கு பங்காளர்களும் ஒருமித்து எடுக்கக் கூடிய பதில் நடவடிக்கையே, ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளைத் தக்க வைக்கக் கூடிய ஒரே ஆற்றலாக அமையும் என்பதே இலக்கின் கருத்து.

https://www.ilakku.org/world-politics-revolving-around-trincomalee/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

இதற்கு இந்தியாவும், ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும், புலம்பதிந்து வாழும் ஈழத் தமிழர்களும் என்னும் நான்கு பங்காளர்களும் ஒருமித்து எடுக்கக் கூடிய பதில் நடவடிக்கையே, ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளைத் தக்க வைக்கக் கூடிய ஒரே ஆற்றலாக அமையும் என்பதே இலக்கின் கருத்து.

எம்மை இந்த அவலத்திற்குள் இழுத்துவந்து வீழ்த்தியதே இந்தியாதான் என்கிறபோது, இந்தியா எவ்வாறு எமது வாழ்வினை மீட்டுத்தரும் என்று  இலக்கு நினைக்கிறது? 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

எம்மை இந்த அவலத்திற்குள் இழுத்துவந்து வீழ்த்தியதே இந்தியாதான் என்கிறபோது, இந்தியா எவ்வாறு எமது வாழ்வினை மீட்டுத்தரும் என்று  இலக்கு நினைக்கிறது? 

உண்மை. நானுமிந்தக் கட்டுரையை வாசித்துக்கொண்டு வரும்போது யோசித்த கருத்தைப் பதிவுசெய்துள்ளீர்கள். 

நன்றி. 

இன்றைய பல ஊடகங்கள் ஏதோ கிந்தியா தமிழருக்காக எதையோ செய்யவந்ததுபோன்ற தொனியிலே எழுதி வருகின்றன. உண்மையிலே இவை சுயநினைவுடன்தான் எழுதுகின்றனவா? என்ற ஐயமே எழுகின்றது. தமிழரது இன்றைய துயரநிலைக்கு முதற்கரணியமே கிந்தியாதான் என்பதை உலகே அறியும். அறிந்தும் அறியாததுபோல் எழுதும் ஊடகங்களும், கட்டுரையாசிரியர்களும் சிந்திப்பார்களா?

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்திய உளவுத்துறை பல்வேறு மட்டத்துக்குள்ளும் ஊடுருவி தனக்கான தளத்தை உருவாக்க பாடுபடுகிறது.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, உடையார் said:

திருகோணமலையை மையமாக வைத்துச் சுழலும் உலக அரசியல்
 
கோவிட் 19இற்குப் பின்னரான உலக அரசியல் என்பது, பொருளாதார உடன் படிக்கைகளின் வழியான அரசியல் கட்டங்களை உருவாக்குதல் வழி நகரத் தொடங்கியுள்ளது. சீனாவின் முன்னைய பட்டுப்பாதைக் கடல் வழித் துறைமுக இணைப்பு வழி உலகைத் தனது மனித வளத்துடனும், இயற்கை வளத்துடனும் இணைத்து எழுதல் என்ற அற்புதமான திட்டத்தை இன்று கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய வடிவில் வெற்றிகரமாக முன்னெடுத்து, உலக நாடுகள் பலவற்றிலும் சீனா முதலீட்டு நாடாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த முதலீட்டு வழி அரசியல் இணைப்பு பெறும் அரசியல் தந்திரோபாயத்தை அமெரிக்கா தனது முதலீட்டாளர்கள் மூலம் செய்வித்துத் தான் சீனாவுக்குச் சமானமான வெற்றி யினைப் பெறுவதற்கான பயணத்தை கோவிட் 19 இன் பின்னர் ஆரம்பித்துள்ளது. உலக வல்லாண்மை நிலையில் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அமெரிக்காவுக்கு இது தவிர்க்கப்பட முடியாத கால தேவையாகவும் உள்ளது.

இந்த ‘முதலீட்டால் வையத்தில் முந்தியிருத்தல்’ என்னும் புதிய அரசியல் வியூகத்தின் தொடக்க முயற்சிகளில் ஒன்றாகத் திருகோணமலையை மையமாக வைத்து உலக அரசியலைத் தன்பக்கம் சுழற்றுவதற்கான ஒரு முயற்சியிலும் அமெரிக்கா இறங்கி யுள்ளது எனத் தெரிய வருகிறது. அமெரிக்க நிறுவனம் ஒன்றின் மூலமாக ‘மூவாயிரம் மில்லியன் டொலர்களுக்குத் திருகோணமலைத் துறைமுகத்தை ஐந்து ஆண்டு களுக்குக் குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளுதல்’ என்பதற்கான பேரம் பேசுதல்கள், கோவிட் 19இற்குப் பின்னரான புதிய அரசியல் ஒழுங்குமுறையைத் தோற்றுவிக்கும் செயற்பாட்டின் மௌன நாடகமாக பசில் ராசபக்ச என்ற சிறீலங்காத் தரப்புக் கதாநாயகனின் வழி இயக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இன்று அந்தக் கதாநாயகனான தனது தம்பி பசில் ராசபக்சவையே சிறீலங்காவின் நிதியமைச்சராக அண்ணன் சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாயா  ராசபக்ச அமர்த்தி, “ஒரு புறம் சீனா மறுபுறம் அமெரிக்கா இரண்டுக்கும் நடுவே நான் இருக்கிறேன்” என்று சிவத்திற்கும் சக்திக்கும் நடுவில் தான் இருப்பதாகப் பாண்டிய அமைச்சர் மாணிக்கவாசகர் பாடியது போல, புதிய பக்திப் பண்ணிசைத்து மகிழ்கின்றார். அண்ணன் காட்டிய வழியம்மா என “என் கடன் பணி செய்து கிடப்பதே” என பசில் ராசபக்ச இராமனுக்குப் பரதனாக, அண்ணா இரண்டாவது ஜனாதிபதிப் பதவிக் காலத்திலும் வெற்றி பெற்று முடிசூடத் தன் குடும்பப் பணியினை அண்ணனின் கால் அணியைப் பரதனைப் போல் கண்ணில் ஒற்றித் தலையில் சுமக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த வெற்றிக் களிப்பில் “தம்பியுடையான் படைக்கஞ்சான்” என்ற வீரத்துடன் அண்ணன் சிறீலங்கா அரச அதிபர்  கோத்தபாயா  ராசபக்ச இப்போது மூன்று ஆண்டு திட்டங்களாக உள்ள தனது அரச அதிபர் அலுவலகச் செயற்திட்டங்களின், மேற்கால எல்லை எட்டு வருடம் எனத், தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையிலேயே ஊடகங்களுக்கு முன்மொழியத் தொடங்கி விட்டார். இது குடும்ப ஆட்சி நீடிப்பு மகிழ்ச்சி அறிவிப்பாக மட்டும் அமையாது தனது அரசாங்கம் உறுதியான அரசாங்கமென உலக முதலீட்டாளர்களுக்கு உறுதிப்படுத்தி சிறீலங்காவுக்கான அனைத்துலக முதலீட்டைப் பெருக்கும் அரசியல் தந்திரேபாயமாகவும் அமைகிறது.

சீனாவிடம் இருந்து சீனப் பணமாகிய யுவானில் பெற்ற பெருங்கடன் தொகையை அமெரிக்க டொலர்களாக மாற்றி, உலகச் சந்தையில் திரவ நிலைக்குக் கொண்டு வந்து, நாளாந்த சந்தைக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய இயலாது ‘வங்குரோத்து’ அரசாகத் தன்னை அறிவிக்கும் அபாய நிலைக்குச் சென்று கொண்டிருந்த சிறீலங்காவுக்கு, 60 ஆயிரம் கோடி இலங்கை ரூபாவுக்குச் சமானமான மூவாயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை நாணய மாற்றம் செய்யக் கிடைக்கும் சந்தர்ப்பத்தைச் சிறீலங்கா தவறவிடாது, தக்க வைத்துக் கொள்ள தன்னாலான முயற்சிகளை எல்லாம் செய்யும் என்பது அனைவராலும் எதிர் பார்க்கப்படக் கூடிய ஒன்றாகவே உள்ளது.

அதே வேளை அமெரிக்க சார்பான பொருளாதார முதலீட்டுப் பெருக்கம் என்பது உலக வங்கி, நாணயமாற்று வங்கி போன்றவற்றின் கடனுதவிகளையும், முதலீட்டு உதவிகளையும் மீளவும் பெறும் வழியாகவும், ஐரோப்பிய ஒன்றியப் பாராளு மன்றத்தின் வரிச் சலுகைக்கான முன் நிபந்தனையாக வைக்கப் பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம் என்பதைச் செய்யாமலே தனக்கான நிதி வளத்தை சிறீலங்கா நிலை நிறுத்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம்,  சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாயா ராசபக்சவும் அவரது ஆணையில் செயற்பட்ட படையினரும் இழைத்த அனைத்துலகக் குற்றச் செயல்களுக்கான  அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்ள எடுக்கும் முயற்சிகளில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கான உத்தியாகவும் அமைகிறது.

ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்துப் பழகிய ராசபக்ச குடும்பத்தினர் இப்போது ஒரு கல்லில் நான்கு மாங்காய்களை வீழ்த்தும் அற்புத விற்பன்னர்களாகப் பரிணமித்து  ள்ளனர். முதல் மாங்காய், அமெரிக்க டொலர் பற்றாக் குறையையும் பஞ்சாகப் பறந்து போகச் செய்து ‘வங்குரோத்து’ நிலையிலிருந்து தப்பித்தல். இரண்டாவது மாங்காய், சிறீலங்காவில் சீனாவின் மேலாதிக்கம் நடை முறை வாழ்வாகிறது. தங்களின் பௌத்த சிங்கள மகாவம்ச சிந்தனைகள் தளர்கின்றன எனத் தவித்த பௌத்த பிக்குகளுக்கு, இனி சீனா மட்டுமல்ல அமெரிக்காவும் புத்தசாசனத்தின் பாதுகாப் பாளர்கள் என உறுதிப்படுத்தி, சிங்கள மக்களின் எதிர்ப்புக்குத் தப்புதல்.   மூன்றாவது மாங்காய், திருகோணமலையில் உள்ள இந்தியாவின் எண்ணெய்த் தாங்கி முதலீடுகளின் வருமானங்களைப் பலவீனப் படுத்தி, அங்கிருந்து தானாகவே ஒட வைப்பதன் மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2015ஆம் ஆண்டின் இலங்கை வருகையின் போது திருகோண மலையை தெற்காசிய எண்ணெய்க் கேந்திர நிலையமாக்குவோம் என உலகுக்கு உரைத்த சூளுரையை கனவாக்கி, இந்தியாவின் பிராந்திய வல்லாண்மையை இழக்க வைத்தல் என்னும் கனவை நனவாக்குதல். நான்காவது மாங்காய் ராசபக்ச குடும்பத்தினரதும் அவர்களது ஆணையில் செயற்பட்ட படையினரதும் அனைத்துலகக் குற்றச் செயல் விசாரணை களுக்குத் தப்பிப் பிழைப்பது என்பதாகிறது.

இந்த மகிந்த ராசபக்ச குடும்ப ஆட்சி மையத்தின் மிக உயர் இராஜதந்திர வலைப்பின்னல் என்பது சுருக்கமாகச் சொன்னால், ஈழத் தமிழின அழிப்புக்களை நியாயப்படுத்தி ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்கிற சிங்கள பௌத்த சர்வாதிகார நாடாக இலங்கைத் தீவை மாற்றுவது என்பது எல்லா வகையிலும் தெளிவாகிறது. இதற்கு இந்தியாவும், ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும், புலம்பதிந்து வாழும் ஈழத் தமிழர்களும் என்னும் நான்கு பங்காளர்களும் ஒருமித்து எடுக்கக் கூடிய பதில் நடவடிக்கையே, ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளைத் தக்க வைக்கக் கூடிய ஒரே ஆற்றலாக அமையும் என்பதே இலக்கின் கருத்து.

https://www.ilakku.org/world-politics-revolving-around-trincomalee/

என்னது இந்த இந்தியாக்காரனோட சேர்ந்து போக வேணுமோ... இதற்குப் பகரமா சிங்களவனோடே ஒத்துப்போகலாம்...

எந்தக் காலத்திலையும் எங்கட இனத்தினர அழிவுக்குக் காரணமான இந்தியனோட சேர்ந்து போகக் கூடாது.

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

@ரஞ்சித் @நன்னிச் சோழன் @nochchi 

இந்திய எதிர்ப்பில் உங்கள் நிலைதான் என் நிலையும். இதையே @Kapithan. உம் எழுதுவார்.

ஆனால் அமெரிக்கா + இந்தியா கூட்டாக வரும் என்றால் இந்த கூட்டை நாம் புறம் தள்ளுவது சரிதானா?

அப்படியாயின் இலங்கை அரசுடன் நேரடியாகவோ அல்லது சீனா மூலமோ பேசி எமக்கு ஒரு கெளரவமான தீர்வு வரும் என நம்புகிறீகளா?

இந்தியா தனியே, அமெரிக்கா தனியே என்று வந்தால் அமெரிக்கா பக்கம் சாயலாமா?

1. தனியே அமெரிக்கா பக்கம் சாய்தல்

2. தனியே இந்தியா பக்கம் சாய்தல்

3. அமெரிக்க + இந்தியா பக்கம் சாய்தல்

4. இலங்கையோடு நேரடியாக பேசல்

5. சீனா மூலம் இலங்கையையை அணுகல்.

இவற்றை விடவும் வேறு தெரிவுகள் உண்டா?

அல்லது இவற்றில் எது உள்ளதில் நல்லது?

@Kadanchaவும் இது பற்றி அதிகம் எழுதுபவர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

இந்தியா தவிர்ந்த வேறு எந்தத் தெரிவையும் பரிட்சித்துப்பார்ப்பதில் தவிறில்லை. இந்தியாலை நம்பி ஏமாந்தது போதும்.(தமிழ்நாடு வேறு இந்தியா வேறு)

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

1. தனியே அமெரிக்கா பக்கம் சாய்தல்

2. தனியே இந்தியா பக்கம் சாய்தல்

3. அமெரிக்க + இந்தியா பக்கம் சாய்தல்

4. இலங்கையோடு நேரடியாக பேசல்

5. சீனா மூலம் இலங்கையையை அணுகல்.

இவற்றை விடவும் வேறு தெரிவுகள் உண்டா?

அல்லது இவற்றில் எது உள்ளதில் நல்லது?

ஒரு காலத்தில் இலங்கை என்ற நாடு அங்கு வாழ்ந்த தமிழர்களின் கல்வி அறிவினால் உலகத்தின் பார்வையை ஈர்த்தது
அதே போல சில காலங்களின் பின்னர்
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் பொருளாதாரம் சிங்கள மக்களின் கண்களைத் திறக்கும்.. அப்போது எல்லாமே மாறும் ஒரு நிலை வரச் சாத்தியங்கள் உள்ளன

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புலவர் said:

இந்தியா தவிர்ந்த வேறு எந்தத் தெரிவையும் பரிட்சித்துப்பார்ப்பதில் தவிறில்லை. இந்தியாலை நம்பி ஏமாந்தது போதும்.(தமிழ்நாடு வேறு இந்தியா வேறு)

நீங்கள் சொல்வதில் ஒரு தர்க்க நியாயம் உள்ளது. இந்தியாவை நம்ப முடியாது, கூடாது என்று தெரிந்த பின் ஏனையோரை பரீட்சித்து பார்ப்பதுதான் முறை.

ஆனால் இலங்கை, சீனாவும் எம்மை ஏமாற்றும் (இலங்கை ஏலவே பலதடவை செய்ததுதான்) என்றே தோன்றுகிறது.

11 minutes ago, வாத்தியார் said:

ஒரு காலத்தில் இலங்கை என்ற நாடு அங்கு வாழ்ந்த தமிழர்களின் கல்வி அறிவினால் உலகத்தின் பார்வையை ஈர்த்தது
அதே போல சில காலங்களின் பின்னர்
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் பொருளாதாரம் சிங்கள மக்களின் கண்களைத் திறக்கும்.. அப்போது எல்லாமே மாறும் ஒரு நிலை வரச் சாத்தியங்கள் உள்ளன

இது ஒரு நம்பிக்கையான பார்வைதான் அண்ணா. மருதரும் அடிக்கடி சொல்லுவார். புலம் பெயர் சமூகம் அந்த நிலைக்கு வருவற்குள் ஊரில் முடிந்தளவு அடையாள அழிப்பை செய்துவிடுவார்கள் என்ற பயமும் உண்டு.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சீனாவுடன் அதன் நலன் சார்ந்த (திருகோணமலை துறைமுகம்) குத்தகை திட்டத்துடன்  மறைமுக பேச்சுவார்த்தை நடாத்திப்பார்க்கலாம்.

எமக்கும் இந்தியாவுக்குமான பகையை நிச்சயமாக சீனா அறிந்திருக்கும், ஆனால் எங்களின் பிரதிநிதியாக யாருடன் பேசுவது, நான் மேற்சொன்ன திட்டத்திற்கோ அல்லது வேறு திட்டதிற்கோ உறுதியளிக்கும் பிரதிநிதிகள் யார் என்பது தான் தற்போதைய கேள்வி. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலங்களின் தொழில் நுட்ப அபிவிருத்தியினால் திருகோணமலை மையமும் முக்கியமில்லாமல் போகலாம். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

@goshan_che

கோசான் அண்ணை, நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான என்னுடைய கண்ணோட்டத்திலான மறுமொழிகள்:-

ஆனால் அமெரிக்கா + இந்தியா கூட்டாக வரும் என்றால் இந்த கூட்டை நாம் புறம் தள்ளுவது சரிதானா?

புறம்தள்ளுவது கூடாது என்பது என் கருத்து. நாம் அவனிடம் "எம்மை ஒரு இனமாக, பேந்து தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பா மோனே" என்று துவங்க வேண்டும். (தேசிய இனமெண்டால் தானே மிச்சத்தைக் கதைக்கலாம். எம்மை ஒரு இனமாகவே 2009 இற்குப் பின் மதிக்காத மேற்குலகில் எடுத்தவுடனே வேண்டியதைக் கேட்டால் 5 ஏக்கர் காணிகூட தர மாட்டான், அரசிற்கு) பேந்து மிச்சத்தை கதைக்கலாம்.

இந்தக் கூட்டில் நாம் அமெரிக்காக்காரனோடு எமது நிகராளிகளைக்(பிரதிநிதி) கொண்டு கதைக்கலாம், அப்போது அவனோடு வரும் இந்த இந்திய நரிக்கூட்டத்தை முடிந்தளவு விலத்தி தனியே அமெரிக்காக்காரனோடு கதைக்க வேண்டும்; அதுவே நல்லம். அப்போது அவன் இந்தியனோடு ஏதேனும் ஒப்பந்தம் போடச் சொன்னால் முடிந்தளவு வெட்டி ஆடப் பார்க்க வேண்டும்... இந்தியனை நம்பி கதைக்கப்போனால் எம்மினத்தை எங்கேனும் புதைகுழிக்குள் தள்ளி மூடிவிட்டுப் போய்விடுவான். எல்லாம் முடிந்த பிறகு வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போன்று திரும்ப சிங்களவனோடு ஒட்டிக் கொள்வான்.

(இந்தியாக்காரனை செத்து ஆவியானாலும் நம்பக்கூடாது. முந்தைய காலங்களின் இவனுடைய படிப்பினைகள் எமக்கு எப்போதும் ஞாபகத்தில் இருக்க வேண்டும். மேற்கண்ட கட்டுரையே கண்முன் சாட்சி. எங்களுக்கு இவ்வளவு பேரழிவுகளையும் ஏற்படுத்திவிட்டு, இப்ப எப்படி அமுசடிக்கிப் பூனை மாதிரி வாரான் எண்டு. கழிசடை நரி அவன்! )

அப்படியாயின் இலங்கை அரசுடன் நேரடியாகவோ

சிங்களவன் நேரடியாக எமக்கு தீர்வு தருவான் என்பது இலகு காத்த கிளிக்குச் சமனானது. ஜெனீவா ஒப்பந்தம் ஞாபகம் இருக்குத்தானே... 

அல்லது சீனா மூலமோ பேசி எமக்கு ஒரு கெளரவமான தீர்வு வரும் என நம்புகிறீகளா?

ம்ம்ம்ம்... சீனாக்காரன் இதுவரையிலும் உலகில் எங்கேனும் சமாதான உடன்படிக்கைக்கு யாருக்கேனும் நடுநிலை வகித்திருக்கானா? நானறிந்த வரை இல்லை. எனவே இக்கேள்விக்கு அவன் எப்படி செயல்படுவான் என்று தெரியாது.
 
ஊகத்தில்:
இதுகால் வரை சிங்களவனோடுதான் கொடுக்கல்வாங்கல் வைத்திருந்தவன். முந்தி இயக்கத்திட்ட கொடுக்கல்வாங்கலிற்கு கேட்ட போது, இயக்கம்,  திருகோணமலையில் அவனுடைய ஆய்வுக் கப்பலை(?) மூழ்கடித்து துரத்தியடித்தது. இப்போது அவன் வடக்கு தெற்கு மேற்கு என்டு மூண்டு திசையிலையும் ஒற்றை அரசாங்கத்தின் கீழ் நிறைய அனுபவிக்கிறான். இந்த நேரத்தில் எமக்கு ஏதேனும் வேணும் எண்டு கேட்கப்போனால் அவன் கண்டிப்பா வரமாட்டான். ஏனெனில் அவனுக்கு வேண்டியதில் 85 வீதம் கிடைத்தாயிற்று, ஒற்றைக்குக்கீழ். அப்ப பிரிச்சு அனுபவிக்கிறதை விட ஒறையாயே அனுபவிப்பதையே எல்லா நாடும் விரும்பும். அப்படிப் பார்க்கும்போது எமக்கு ஏதும் கிடைக்காது என்பது என்ர கருத்து.

இந்தியா தனியே, அமெரிக்கா தனியே என்று வந்தால் அமெரிக்கா பக்கம் சாயலாமா?

ஆ.. ஓமோம். சாயலாம்.

ஏன்னென்டால், அவனுக்கு பிடிக்காதவன் நல்லா காலூண்டிட்டான், அவனுக்கு வேண்டிய இடத்தில். அப்ப அவனுக்கு வேண்டியதை கொடுத்து எமக்கு வேண்டியதை நாம் பெற்றுக்கொள்வோம். தனிய நிண்டு எடுக்க முடியாமல் போயிட்டது. அப்ப இனி கூட்டணி போட்டு முயற்சி செய்வம். அதான் இனி வழி.

ஆனால் அதற்கு கதைக்கப்போக, இப்போது ஊரில் இருக்கின்ற சக்கட்டை அரசியல்வாதிகள் இல்லாமல், பாலா மாமா மாதிரியான நல்ல ஞானிகள் போய்க் கதைத்தால் ஏதேனும் இல்லை முழுப் பலாப்பழமும் கிடைக்க வாய்ப்புண்டு.  இவங்களை விட்டால் ஒற்றையாட்சிக்குள் கூட ஒன்டையும் வாங்கிக்கொண்டு வரமாட்டாங்கள்.

1. தனியே அமெரிக்கா பக்கம் சாய்தல்

போலாம்

2. தனியே இந்தியா பக்கம் சாய்தல்

🤬

3. அமெரிக்க + இந்தியா பக்கம் சாய்தல்

மேலே சொல்லிப்போட்டன்

4. இலங்கையோடு நேரடியாக பேசல்

இலவு காத்த கிளியாக விருப்பமில்லை!

5. சீனா மூலம் இலங்கையையை அணுகல்.

மேலே சொல்லிப்போட்டன்

இவற்றை விடவும் வேறு தெரிவுகள் உண்டா?

அமெரிக்காவோட கதைத்து, எம்மை ஒரு தேசிய இனமாக உலகப்பரப்பில் அறிவித்து, (சம நேரத்தில்) அவனும் ஏதேனும் கேட்டான் எண்டால் அவனையும் கொஞ்சம் கவனித்து(இனி அப்படித்தான் செய்ய வேணும்), அப்படியே ஐநாவோடையும் கதைத்து, வாக்கெடுப்பு நடத்தி, அரிவு வெட்டுவதுதான் என்ட திட்டம்.

அல்லது இவற்றில் உள்ளதில் எது நல்லது?

தெரிவு ஒன்று

Edited by நன்னிச் சோழன்
Italic
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நன்னிச் சோழன் said:

நீங்கள் சொல்வதுதான் எனக்கும் சரியாக படுகிறது. குறி அமெரிக்காவோடு டீல் பண்ணுவதாகதான் இருக்க வேண்டும். இடையில் அமெரிக்கா கோபப்படாமல் இந்தியாவை வெட்டி விடோணும்.

ஆனால் வெள்ளைத்துரைக்கு கங்காணி மாரி, இந்தியா அமெரிக்க வந்தாலும் ஏதோதாந்தான் கூட்டியந்தவர் எண்ட மாரி நடக்கவே முற்படும்.

மேலே நீங்களும் முதல்வனும் சொன்னது போல் இதில் யார் நம் நிகராளி ( அற்புதமான சொல்) என்பது விடை தெரியா கேள்வி. 

1 hour ago, முதல்வன் said:

சீனாவுடன் அதன் நலன் சார்ந்த (திருகோணமலை துறைமுகம்) குத்தகை திட்டத்துடன்  மறைமுக பேச்சுவார்த்தை நடாத்திப்பார்க்கலாம்.

எமக்கும் இந்தியாவுக்குமான பகையை நிச்சயமாக சீனா அறிந்திருக்கும், ஆனால் எங்களின் பிரதிநிதியாக யாருடன் பேசுவது, நான் மேற்சொன்ன திட்டத்திற்கோ அல்லது வேறு திட்டதிற்கோ உறுதியளிக்கும் பிரதிநிதிகள் யார் என்பது தான் தற்போதைய கேள்வி. 

நன்னி சொல்வது போல் - இப்போதே புல் மீல்ஸ் கிடைக்கும் போது சீனா நம்மை சீண்டுமா? அப்படி எம்மோடு பேசினாலும், இந்தியாவை போல் எப்போதும் இலங்கைதான் அவர்களின் முதல் தெரிவாக இருக்காதா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
4 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்வதுதான் எனக்கும் சரியாக படுகிறது. குறி அமெரிக்காவோடு டீல் பண்ணுவதாகதான் இருக்க வேண்டும். இடையில் அமெரிக்கா கோபப்படாமல் இந்தியாவை வெட்டி விடோணும்.

ஆனால் வெள்ளைத்துரைக்கு கங்காணி மாரி, இந்தியா அமெரிக்க வந்தாலும் ஏதோதாந்தான் கூட்டியந்தவர் எண்ட மாரி நடக்கவே முற்படும்.

மேலே நீங்களும் முதல்வனும் சொன்னது போல் இதில் யார் நம் நிகராளி ( அற்புதமான சொல்) என்பது விடை தெரியா கேள்வி. 

பத்தி ஒன்றிற்கு:
நான் என்ன நினைக்கிறன் எண்டால், அமெரிக்கன் ஒருநாளும் இந்தியனை முன்னுக்கு நிப்பாட்டி தான் பின்னுக்கு வரமாட்டான், எங்கட சிக்கலில். ஏனென்டால் இப்போதைய உலகப்போட்டி அவனுக்கும் சீனாக்காரனுக்கும். தன்ர பகையோட ஆயுதமல்லாத மோதலில் தானே முன்னுக்கு நிண்டு மோதவில்லையெண்டால், மற்ற நாடுகள் அவனை உலக சட்டாம்பிள்ளையாக மதிக்காது. இந்தியாவிற்குப் பின்னால் வந்தால் இந்தியனுக்கும் கொஞ்சம் துளிர் விட்டுவிடும் (இந்தியரை வெள்ளையள் மதிக்கமாட்டினம் என்பது நினைவிருக்கட்டும்.)

மேலும், இந்திய நரியள் இந்த மாதிரி எங்களோட படம் காட்டுவதும், இந்த ஒப்பந்தத்தை பாதிக்கும் என்பதால் (உலக கமுக்கங்களை அறிந்தவன், எங்களுக்கும் நரியளுக்குமான பல்லாண்டு பகையினை அறியானா என்ன?) உந்த நரியை இந்த மாதிரி படம் காட்டி குழப்ப விடமாட்டர், அமெரிக்காக்காரர். 

ஆனால் இந்திய துணைக்கண்டம் மற்றும் சூழலில்(தென்கிழக்காசியாவின் இந்திய பெருங்கடலோடு ஒட்டியுள்ள நாடுகளோடு ஒப்பிடுகையில்) ஆயுத அடிப்படையில் பலம் பொருந்தியவன் என்ற வகையில் சில பாத்திரங்கள் வழங்கப்படக்கூடும். அதை வைத்து நீங்கள் சொன்னதுபோன்று கண்டிப்பாக எமக்கும் கிடைப்பவற்றை குறைக்க எத்தனிப்பான்(ரஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்ததத்தின் அடிப்படையில் இந்தியா சிங்கள தேசத்தின் காவலனாக நிற்கும் என்பது உடன்படிக்கை. எனவே அதை நிறைவேற்றுவான் இந்தியன்) அது தடுக்க ஏலாதது. 

பத்தி இரண்டிற்கு:
ஓமண்ணை,  இப்போதைய சூழ்நிலையில் பரவலாக அறியப்பட்ட ஞானி அளவிலான நிகராளிகள் ஆருமில்லை. அடுத்த சில ஆண்டுகளில் ஆரேனும் முளைக்கக்கூடும் என்பது என் கணிப்பு. 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நன்னி சொல்வது போல் - இப்போதே புல் மீல்ஸ் கிடைக்கும் போது சீனா நம்மை சீண்டுமா? அப்படி எம்மோடு பேசினாலும், இந்தியாவை போல் எப்போதும் இலங்கைதான் அவர்களின் முதல் தெரிவாக இருக்காதா?

நாங்கள் இரண்டு பிரிவாக இயங்கவேண்டும். ஒரு பிரிவு இந்திய அமெரிக்க சார்பு நிலையும் மற்றைய பிரிவு சீன சார்பு நிலையும் எடுக்க வேண்டும்.  ஒரு சமநிலை சார்பு பேச்சுவார்த்தைகளும் தூண்டல்களும் இடம்பெறவேண்டும்.

அதற்கு முதலில் சீனாவில் ஒரு தமிழ் சங்கமோ, அமைப்போ, வானோலியோ ஆரம்பித்து சீனாவின் ஆளும் கட்சியுடன் தொடர்புகளை பேணவேண்டும். 

அதைக்கொண்டு மேற்குடன் பேச வேண்டும். எங்களின் சகல அறிவும் ஒற்றைப்போக்கும், தான் பெருசு என்று காட்டுவதில் தான் அழிகிறது.

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.