Jump to content

தேனாக இனித்திடும் இனிய தமிழே!


Recommended Posts

*தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு காரணம் ஏன் தெரியுமா?*..

தேன் கொண்டு வந்தவனை பார்த்து, நேற்று ஏன் தேன்

கொண்டு வரவில்லை? என்று ஒருவர் கேட்கிறார்.

அதற்கு அவன் கூறிய இனிமை பொருந்திய பதில்....

ஐயா நீங்கள் கூறியதை நினைத் தேன் !

கொல்லிமலைக்கு  நடந் தேன்!
பல இடங்களில் அலைந் தேன்!   
ஓரிடத்தில் பார்த்தேன் !
உயரத்தில் பாறைத் தேன்!
எப்படி எடுப்பதென்று மலைத் தேன்!
கொம்பொன்று ஒடித் தேன்!
ஒருகொடியை பிடித் தேன் !
ஏறிச்சென்று கலைத் தேன்! 
பாத்திரத்தில் பிழிந் தேன்!
வீட்டுக்கு வந் தேன்!
கொண்டு வந்ததை வடித் தேன்!
கண்டுநான் மகிழ்ந் தேன்!
ஆசையால் சிறிது குடித் தேன் !
மீண்டும் சுவைத் தேன் !
உள்ளம் களித் தேன்!
உடல் களைத் தேன் !
உடனே படுத் தேன்!
கண் அயர்ந் தேன்!
காலையில் கண்விழித் தேன்!

அப்படியே எழுந் தேன் !
உங்களை நினைத் தேன்!

தேனை எடுத்தேன்!
அங்கிருந்து விரைந் தேன் !

வேகமாக நடந் தேன்!

இவ்விடம் சேர்ந் தேன் !

தங்கள் வீட்டை அடைந் தேன் !

உங்களிடம் கொடுத் தேன் !

என் பணியை முடித் தேன்.!!

அதற்குத் தேன்  பெற்றவர், தேனினும் இனிமையாக உள்ளது உமது பதில்  இதனால் தான் நம் முன்னோர்கள் *தமிழை*
*தமிழ்த்தேன்*
என்று உரைத்தனரோ என கூறி... நான் மிகவும் மகிழ்ந் தேன்

என்றார்.

மிக சிறப்பு...
*தமிழ்த்தேன்*
*தமிழை நேசிப்போம்...*
*உயிர் முச்சாக சுவாசிப்போம்...*

வாட்சப் மூலம் நான் சுவைத்த தேனை, உறவுகளும் சுவைக்கப் பதிந்தேன்.😋

Link to comment
Share on other sites

  • Paanch changed the title to தேனாக இனித்திடும் இனிய தமிழே!
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வை படித்தேன் நானும் சுவைத்தேன்  இவவளவு பெருமையா? என மலைத்தேன். தங்களுக்கு என் நன்றியை பகிர்ந்தேன் ...👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவை ரசித்தேன்.....பாஞ்சை நினைத்தேன்.....உளம் மகிழ்ந்தேன்......!  👌

Link to comment
Share on other sites

அன்புத் தம்பியை அணைத்தேன், தமிழ்சிறியை நினைத்தேன், நிலாமதியின் பகிர்வை ரசித்தேன், சுவியின் சுவையை வாசித்தேன். என் நன்றியையும் தேன் சொட்டத் தெரிவித்தேன். 😋

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.