Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மியூனிக் ஒலிம்பிக் படுகொலை: பாலத்தீன இயக்கத்தைப் பழிவாங்கிய இஸ்ரேல் - விளையாட்டு வரலாறு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மியூனிக் ஒலிம்பிக் படுகொலை: பாலத்தீன இயக்கத்தைப் பழிவாங்கிய இஸ்ரேல் - விளையாட்டு வரலாறு

19 ஜூலை 2021
மியூனிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

1972இல் பாலத்தீன ஆயுதப்போராளிகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களுக்காக நியூயார்க்கில் 2012இல் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வைப் பார்வையிடும், அந்த படுகொலை சம்பவத்தில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேலிய ஒலிம்பிக் முன்னாள் வீரர் அவி மெலமெட்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெருமைக்குரியது. உலக ஒருங்கிணைப்பின் அடையாளம் அது. பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது. அரசியல் ஆதாயம் தேடுவதற்கும் பயன்பட்டிருக்கிறது. பகையையும், வெறுப்பையும் மறந்து ஒரே களத்துக்குள் நாடுகளை இழுத்து வந்திருக்கிறது. அப்படிப்பட்ட விளையாட்டுக்களம் போர்க்களமான ஆண்டு 1972.

1972 -ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியானது 1936-க்குப் பிறகு மேற்கு ஜெர்மனி நடத்திய மாபெரும் விளையாட்டுத் திருவிழா. தம்மை அரசியல் ரீதியாகக் கட்டமைத்துக் கொள்வதற்காக ஒலிம்பிக் போட்டிகளை ஹிட்லர் பயன்படுத்திக் கொண்டார் என்ற கறை அந்த நாட்டின் மீது இருந்தது. இந்தக் கறையைப் போக்கி நாட்டின் மரியாதையை மீண்டும் கட்டமைப்பதற்காக மியூனிக் நகரில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ராணுவக் கட்டுப்பாடுகள் கொண்ட நாடு என்ற பெயரை மாற்ற வேண்டும். இனப் பாகுபாடுகள் இல்லாத தேசமாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும், யூதர்களின் எதிரி என்ற பொதுக்கருத்தை உடைக்க வேண்டும் என்பன போன்ற குறிக்கோள்கள் மேற்கு ஜெர்மனிக்கு இருந்தன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மேற்கு ஜெர்மனியின் ராணுவ பலமும் ஆயுத பலமும் பெருமளவு குறைக்கப்பட்டிருந்தன. காவல்துறையினருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் கூடப் பழையவை. ஜெர்மானிய ஆயுதப் படையினருக்கு நவீன காலப் பயிற்சிகள் எதுவும் கிடையாது. சிறப்புப்படையில் இருந்த பலருக்கு புதியவகை ஆயுதங்களைப் பயன்படுத்தவே தெரியாது.

 

இவ்வளவு குறைபாடுகளைக் கொண்டிருந்த மேற்கு ஜெர்மனி, தங்களால் முடிந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. எந்தெந்த வழிகளில் எல்லாம் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று ஊகிக்கப்பட்டு, அதை எப்படி முறியடிக்கலாம் என்பதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. மேற்கு ஜெர்மனியின் குற்றவியில் நிபுணர் ஜார்ச் சீபர் 26 வழிகளில் பயங்கரவாதச் சதிச் செயல் அரங்கேற்றப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகச் சொன்னார். அவற்றைத் தடுப்பதற்கான பாதுகாப்பு யோசனைகளையும் வழங்கியிருந்தார்.

மியூனிக் ஒலிம்பிக் பெருமைக்குரியதாக இருந்தது ஏன்?

மியூனிக் படுகொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மியூனிக் படுகொலை சம்பவத்தில் உயிர் இழந்த 11 இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளரின் நினைவுப்படங்கள்

அது 1972 ஆகஸ்ட் மாதம் கடைசி வாரம். 122 நாடுகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள் என மியூனிக் நகரம் திருவிழாவுக்கத் தயாராக இருந்தது. சுற்றுலாத் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. உலகில் தங்களது பெருமையைப் பறைசாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பாக மேற்கு ஜெர்மனி மக்கள் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்தார்கள்.

ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி பிரும்மாண்டமான வகையில் போட்டிகள் தொடங்கின. நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளுக்கான பதக்கப் போட்டிகள் இரண்டாம் நாளிலேயே நடந்தன. அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர், Mark Spitz ஏழு தங்கப் பதக்கங்களை வென்று உலக சாதனை படைத்தார். அவர் ஒரு யூதர். இதை இங்கு குறிப்பிடுவதற்கும் காரணம் உண்டு.

மியூனிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மியூனிக் ஒலிம்பிக் கிராமம்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, எந்த மண்ணில் யூதர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்களோ, அதே நாட்டில் யூதர் ஒருவர் தங்கப் பதக்கங்களைக் குவித்தார். மேற்கு ஜெர்மனி மீதான கறை துடைக்கப்பட்டதாகவே கருதப்பட்டது. ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் ஒல்கா கோர்புட் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். இவர் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்.

எந்த நாட்டுடன் மேற்கு ஜெர்மனி கடும்பகை கொண்டிருந்ததோ அந்த நாட்டு வீராங்கனை ஜெர்மானிய மண்ணில் கவுரவிக்கப்பட்டார். ஹிட்லரின் நாடு என்ற பெயர் மறக்கப்படும் என்று மக்கள் எண்ணியிருந்தார்கள். அவர்களது எண்ணத்தைப் போலவே முதல் வாரம் முழுவதும் போட்டிகள் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்தன.

அதிகாலைப் பயங்கரம்

ஒலிம்பிக் கிராமத்தில் பல நாட்டு வீரர்களும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து. இஸ்ரேலிய வீர்ர்களும் அவர்களில் அடங்குவார்கள். போட்டிகள் தொடங்கி ஒருவாரம் முடிந்து போயிருந்த நேரம். முந்தைய நாள் ஆட்டங்களுக்குப் பிறகு இஸ்ரேலிய வீர்ர்கள் தங்களது விடுதியில் களைப்பாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். இஸ்ரேலிய நடிகருடன் சேர்ந்து இரவு விருந்தை உண்ட மகிழ்ச்சி அவர்களுக்குள் இருந்தது.

மூனிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்த ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஒருவர் சுற்றி என்ன நடக்கிறது எனப் பார்க்கிறார்

இந்தச் சம்பவங்களும், தொடர்ந்து வரும் நிகழ்வுகளும் பல்வேறு ஆவணப் படங்களிலும் விசாரணை அறிக்கைகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

அது செப்டம்பர் 5-ம் தேதி. காலை 4.30 மணி. ஒலிம்பிக் கிராமத்தில் இருந்த இஸ்ரேலிய வீரர்கள் இருந்த விடுதிக்குள் விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகளை அணிந்த 8 பேர் நுழைந்தனர். விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு செல்லும் கைப் பைகள் அவர்களிடம் இருந்தன. தாமதமாக வந்த விளையாட்டு வீரர்களாக இருக்கலாம் என்று மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் பயங்கரமான திட்டத்தோடு வந்திருந்தார்கள். அவர்களது கைகளில் இருந்தவை விளையாட்டு உபகரணங்கள் அல்ல. இயந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிபொருள்கள் போன்றவை. அவற்றைக் கொண்டு மிகப்பெரிய தாக்குதலுக்குத் தயாரானார்கள்.

மூனிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

யூசுப் கட்ஃப்ரென்ட்

அந்த நேரத்தில் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, இஸ்ரேலியக் குழுவில் இருந்த மல்யுத்தப் போட்டிகளுக்கான நடுவர் யூசுப் கட்ஃப்ரென்ட் விழித்துக் கொண்டார். கதவுக்குப் பின்னால் துப்பாக்கி ஏந்திய ஆள்கள் இருப்பதைப் பார்த்த அவர், தனது 135 எடை கொண்ட உடலால் கதவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, மற்றவர்களை எழுப்பும் வகையில் உரக்கக் குரல் எழுப்பினார்.

குரல் கேட்டு அந்த அறையிலும் அருகிலிருந்த அறைகளிலும் இருந்த பலர் விழித்துக் கொண்டார்கள். சிலர் நிலைமையைப் புரிந்து கொண்டு ஜன்னலை உடைத்துத் தப்பித்தார்கள். ஆனால் பயங்கரத்தை தடுக்க முடியவில்லை. அறைக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த ஆயுதமேந்திய நபர்களை மல்யுத்தப் பயிற்சியாளர் வெய்ன்பர்க் கடுமையாகத் தாக்கினார். சில நிமிடங்களில் அவரைத் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. மற்றொரு பளு தூக்கும் வீரரையும் ஆயுதமேந்திய நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

இவர்களைத் தவிர மொத்தம் 9 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டனர். உடல் அளவில் மிகப் பெரியவரான யூசுப் கட்ஃப்ரென்ட் ஒரு நாற்காலியிலும் மற்றவர்கள் படுக்கைகளிலும் கட்டிப்போடப்பட்டனர். பயங்கரச் சத்தத்தால் விடுதியில் இருந்த ஹாங்காங், உருகுவே போன்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பால்கனியில் இருந்து குதித்துத் தப்பித்தார்கள். தாக்குதல் செய்தி உலகமெங்கும் பரவியது. இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் பரபரப்பானார்.

மூனிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இஸ்ரேலிய மல்யுத்தப் பயிற்சியாளர் மோஷே வெய்ன்பெர்க்

அதிகாரிகளும் பாதுகாப்புப் படையினரும் இஸ்ரேலிய வீர்ர்கள் தங்கியிருந்த விடுதியைச் சுற்றிக் குவிந்தனர். பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆயுதமேந்தி வந்தவர்கள், கறுப்பு செப்டம்பர் என்று அழைக்கப்படும் பாலத்தீன விடுதலை இயக்கத்தின் ஒரு பிரிவினர் என்பது தெரியவந்தது.

9 இஸ்ரேலிய வீர்ர்களைப் பிடித்து வைத்திருந்த பிளாக் செப்டம்பர் இயக்கத்தினர் இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் 234 பாலத்தீனர்களையும் மேற்கு ஜெர்மனி வசமிருக்கும் ஜெர்மானியச் செம்படையைச் சேர்ந்த இருவரையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. "பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தற்கொலைக்கு ஒப்பானது" என்று கூறினார். இஸ்ரேலியச் சிறப்புப் படையினரைக் கொண்டு சில மணி நேரங்களில் பிணைக் கைதிகளை மீட்க முடியும் என்று இஸ்ரேல் நம்பியது. ஆனால் ஜெர்மனி இதை ஏற்கவில்லை.

மியூனிக் நகருக்கு அருகேதான் Dachu என்ற வதை முகாம் இருந்தது. ஜெர்மனியில் ஹிட்லர் உருவாக்கிய யூத வதை முகாம்களில் இது முதன்மையானது. சுமார் இரண்டு லட்சம் பேரை அடைத்து வைத்திருந்த இடம் இது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் இங்கு சுமார் 32 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.

மூனிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஒருவர்

1972-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இந்தப் பழங்கதையை நினைவுபடுத்தின. ஏனெனில், பிளாக் செம்டம்பர் இயக்கத்தினர் பிடித்து வைத்திருந்த பிணைக் கைதிகள் அனைவரும் யூதர்கள். ஜெர்மனியில், அதுவும் யூத வதை முகாம் அமைந்திருந்த பகுதிக்கு அருகிலேயே மீண்டும் ஒரு முறை யூத ரத்தம் படிந்தது. 11 பேரில் இரண்டு பேரை பிளாக் செம்டம்பர் இயக்கத்தினர் ஏற்கெனவே கொன்றுவிட்டார்கள். மீதம் இருப்பவர்களைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற நெருக்கடி மேற்கு ஜெர்மனிக்கு ஏற்பட்டிருந்தது.

பிணைக் கைதிகளை விடுவிக்கப் பேச்சுவார்த்தை

ஆயுதமேந்திய குழுவினரை வழிநடத்தி வந்தவராகக் கருதப்படும் ஈஸாவுடன் காவல்துறையினர் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் எந்தவிதமான முடிவையும் எட்டமுடியவில்லை. கடத்தல்காரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்பது ஜெர்மனிக்குப் புரிந்தது.

தேவைப்பட்டால் எத்தனை கோடி பணம் வேண்டுமானாலும் தரத் தயாராக இருப்பதாக ஆயுதக் குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது. அது முடியாவிட்டால், ஜெர்மானிய உயர் அதிகாரிகளைப் பிணைக் கைதிகளாகத் தருவதாகவும் கூறப்பட்டது. எப்படியாவது யூத விளையாட்டு வீரர்களை மீட்டு இஸ்ரேலிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற முயற்சியில் மேற்கு ஜெர்மனி அரசு செயல்பட்டது. ஆனால் ஆயுதக் குழுவினர் எதற்கும் இசையவில்லை.

தாக்குதல் நடத்தி, பிணைக் கைதிகளை மீட்கும் அளவுக்கு மேற்கு ஜெர்மனியிடம் வசதியில்லை. தாக்குதல் நடந்த இடத்தில் குவிக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் சாதாரண காவல்துறையினர். தீவிரவாதிகளிடம் சண்டையிட்ட அனுபவமே இல்லாதவர்கள். துல்லியமாகச் சுட்டுப் பழக்கம் இல்லாதவர்கள். அவர்களிடம் மிகச் சாதாரணமான துப்பாக்கிகளே இருந்தன. இருப்பினும், தாக்குதல் நடத்துவது என ஜெர்மனி முடிவுக்கு வந்தது.

மூனிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஒலிம்பிக் கிராமத்தைச் சுற்றிக் குழுமியிருந்த ஊடகத்தினர்

இந்தக் காட்சிகள் அனைத்தையும் தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. அதனால் காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்களது திட்டம் என்ன என்பதை ஆயுதக் குழுவினர் உடனுக்குடன் அறிந்து கொண்டிருந்தார்கள்.

காவல்துறையின் தாக்குதல் திட்டம் தெரிந்த ஆயுதக் குழுவினர், எச்சரிக்கும் விதமாக இரு பிணைக் கைதிகளைக் கொன்றுவீசப் போவதாக அறிவித்தார்கள். காவல்துறையினர் உடனடியாகப் பின் வாங்கினர்.

சோகத்தில் முடிந்த மீட்பு முயற்சி

மியூனிக் படுகொலை

பட மூலாதாரம்,DAVID RUBINGER

 
படக்குறிப்பு,

1972 ஒலிம்பிக் போட்டியில் பலியான மகனின் இறுதி நிகழ்வில் பங்கேற்ற வீரர் ஒருவரின் தாய்.

மாலை 6 மணி. இஸ்ரேலிய வீரர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு 13 மணி நேரம் ஆகியிருந்தது. ஆயுதக் குழுவினரிடம் இருந்து இன்னொரு கோரிக்கை வந்தது. தங்களையும் பிணைக் கைதிகளையும் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அனுப்பி வைக்கும்படி ஜெர்மானிய அதிகாரிகளுக்கு அவர்கள் கெடு விதித்தார்கள். உடனடியாக ஜெர்மனி, எகிப்துடன் பேசிப் பார்த்தது. எந்தப் பலனும் இல்லை. இருப்பினும் எகிப்து ஒப்புக் கொண்டுவிட்டதாக ஆயுதக் குழுவினரிடம் காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்

ஹெலிகாப்டர் மூலம் அருகில் உள்ள Fürstenfeldbruck விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்த கெய்ரோவுக்குச் செல்வது என ஆயுதக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்காக ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. ஹெலிகாப்டருக்கு நடந்து செல்லும் வழியில் கடத்தல்காரர்களைச் சுற்றி வளைத்துக் கொன்றுவிட்டு, பிணைக் கைதிகளை மீட்கலாம் என ஜெர்மானிய அதிகாரிகள் திட்டமிட்டார்கள்.

இதைப் புரிந்து கொண்ட ஆயுதக் குழுவினர், உடனடியாக தங்களது திட்டத்தை மாற்றினார்கள். நடந்து செல்வதற்குப் பதிலாக பேருந்தில் செல்லப் போவதாகக் கூறினார்கள். பேருந்தும் வரவழைக்கப்பட்டது. பேருந்து மூலம் ஹெலிகாப்டருக்குச் சென்ற ஆயுதக் குழுவினர். அங்கிருந்து விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். ஜெர்மானிய அதிகாரிகளின் தாக்குதல் திட்டம் விமான நிலையத்தில் அரங்கேற்றப்பட இருந்தது.

ஆனால் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், தாக்குதல் திட்டம் பெருந் தோல்வியில் முடிந்தது. பயங்கரவாதிகளைக் கொல்வதற்கான வாய்ப்புகள் இருந்தும், போதிய திறன் இல்லாததால், ஜெர்மானிய வீரர்கள் அனைத்தையும் தவறவிட்டனர். துப்பாக்கிச் சண்டை தொடங்கியதுமே, பிணைக் கைதிகள் அனைவரையும் கொன்றுவிட ஆயுதக் குழுவினர் தீர்மானித்தார்கள். இயந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டும், ஹெலிகாப்டரில் வெடிகுண்டுகளை வீசியும் பிணைக் கைதிகளைக் கொன்றனர். காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஆயுதக் குழுவின் 5 பேர் கொல்லப்பட்டனர். மூன்று பேர் உயிருடன் பிடிபட்டார்கள்.

சுமார் 21 மணி நேரம் நடந்த இந்தப் பயங்கர நிகழ்வால் நவீன ஒலிம்பிக் யுகத்தில் முதன் முறையாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. செப்டம்பர் ஆறாம் தேதி நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் சுமார் 80 ஆயிரம் பேர் பங்கேற்றார்கள். அதிலும் ஒர சோகம். இஸ்ரேலிய வீரர் வெய்ன்பெர்க்கின் உறவினரான கார்மல் எலியாஷ் நினைவஞ்சலி நிகழ்ச்சியின்போது மயங்கி விழுந்து இறந்துபோனார். பெரும்பாலான நாடுகளின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருக்க. அரபு நாடுகள் மட்டும் தங்களுடைய கொடிகளை இறக்குவதற்கு அனுமதிக்கவில்லை.

போட்டிகள் தொடர்ந்தன. பெரும்பாலான யூத வீரர்கள் போட்டியின் பாதியிலேயே வெளியேறியிருந்தார்கள். பல வீரர்கள் போட்டியில் பங்கேற்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்தை உணர்ந்திருந்தார்கள். போட்டிகளின் முடிவில் சோவியத் ஒன்றியம் 50 தங்கப் பதக்கங்களும், அமெரிக்கா 33 தங்கப் பதக்கங்களும், கிழக்கு ஜெர்மனி 20 தங்கப் பதக்கங்களும் பெற்றன. போட்டியை நடத்திய மேற்கு ஜெர்மனி 13 தங்கப் பதக்கங்களையும் வென்றது.

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கின்றன.

பட மூலாதாரம்,PHILIP FONG VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கின்றன.

மியூனிக்கில் கைது பிடிபட்ட ஆயுதக் குழுவைச் சேர்ந்த 3 பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். விசாரணையும் தொடங்கியது. ஆனால் இஸ்ரேல் நினைத்தது எதுவும் நடக்கவில்லை

மியூனிக் சம்பவம் நடந்த ஒரே மாதத்தில், சிரியாவில் இருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட் நகர் நோக்கிச் சென்ற விமானத்தை பிளாக் செம்டம்பர் இயக்கத்தினர் கடத்தினார்கள். மியூனிக்கில் பிடிபட்ட 3 பேரையும் விடுவிக்குமாறு மிரட்டினார்கள். வேறு வழியின்றி மியூனிக் ஒலிம்பிக் போட்டிகளின்போது, இஸ்ரேலிய வீரர்களைக் கொன்ற மூவரையும் ஜெர்மனி அரசு எந்த நிபந்தனையும் இன்றி விடுவித்தது.

"கடவுளின் கடுஞ்சினம்"

இந்த இழப்புகளுக்கு இஸ்ரேல் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தது. அதற்காக இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பு நடத்திய ரகசிய நடவடிக்கைதான் OPERATION WRATH OF GOD. இதற்கு கடவுளின் கடுஞ்சினம் என்று பொருள். பெயருக்கு ஏற்றபடியே மொசாத்தின் இந்தப் பதிலடியும் அமைந்தது. இஸ்ரேலின் பிரதமர் கோல்டா மேயரின் உத்தரவுப்படி தாக்குதலுடன் தொடர்புடைய பாலத்தீன விடுதலை இயக்கத்தின் கறுப்பு செப்டம்பர் பிரிவைச் சேர்ந்தவர்களும். ஜெர்மானியர்களும் ஒவ்வொருவராகக் குறிவைத்து அழிக்கப்பட்டனர்.

1972-ஆம் ஆண்டு தொடங்கி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடவடிக்கையை மொசாத் நடத்தி வந்தது. மொசாத்தின் இந்த இந்த நடவடிக்கைக்கு முதலில் இரையானவர் WAEL ZWAITER என்ற பாலத்தீனர். ரோம் நகரில் பதுங்கியிருந்தபோது இவரைத் தேடிப்பிடித்து மொசாத் உளவாளிகள் கொன்றனர். இதேபோல் பிரான்ஸ், சைப்ரஸ், சிரியா, லெபனான், நார்வே என பல நாடுகளிலும் இந்த நடவடிக்கை பரந்து விரிந்திருந்தது. தொலைபேசி, படுக்கை, கார் என்ற எதிர்பாராத இடங்களில் எல்லாம் குண்டுகள் வைக்கப்பட்டு தொடர்புடையவர்கள் கொல்லப்பட்டனர். சிலர் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர்.

மியூனிக்கில் யூத வீரர்கள் அரை நூற்றாண்டு ஆகிறது. படுகொலைகளுக்காக இஸ்ரேல் முழுமையாகப் பழிதீர்த்து முடித்துவிட்டது. ஆயினும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு என்றால், மியூனிக் நகரின் மோசமான சம்பவங்களையே இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

https://www.bbc.com/tamil/global-57885445

போற போக்கை பாத்தா அவங்களுக்கு எதிரா சிந்திக்க வெளிக்கிட்டாலே ஆப்பு வைப்பாங்கள் போல!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2021 at 02:30, ஏராளன் said:

போற போக்கை பாத்தா அவங்களுக்கு எதிரா சிந்திக்க வெளிக்கிட்டாலே ஆப்பு வைப்பாங்கள் போல!


இப்பொழுது அப்படி சிந்திக்கமாட்டார்கள் என நம்புவோமாக.. ஆனால் இம்முறையும் ஒலிம்பிக்கில் அல்ஜீரியா(Fethi Nourine ) மற்றும் சூடானை(  Mohamed Abdalrasool ) சேர்ந்த இரு Judo வீரர்கள், இஸ்ரேலிய Judo வீரரை எதிர்த்து போட்டியிட மறுத்து வெளியேறியதாக செய்தி உள்ளது.. 

 

https://www.google.com.au/amp/s/amp.theguardian.com/sport/2021/jul/24/algerian-judoka-sent-home-from-olympics-after-refusing-to-compete-against-israeli

 

https://www.google.com.au/amp/s/amp.theguardian.com/sport/2021/jul/26/judo-athlete-sudan-withdraws-before-israel

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2021 at 12:30, ஏராளன் said:

1972இல் பாலத்தீன ஆயுதப்போராளிகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களுக்காக நியூயார்க்கில் 2012இல் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வைப் பார்வையிடும், அந்த படுகொலை சம்பவத்தில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேலிய ஒலிம்பிக் முன்னாள் வீரர் அவி மெலமெட்.

பாலஸ்தீன ஆயுதப்போராளிகள் அல்ல பாலஸ்தீன பயங்கரவாதிகள். விளையாட்டு வீரர்கள் மீது கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல் இது!

 • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இலங்கையிலும் தாதியர் பற்றாக்குறை இருக்கே!
  • மூலம்: https://www.pathivu.com/2018/04/blog-post_298.html   பயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை வளர்ச்சியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம் பெற்றது.   தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மரபுவழிப் படையணியாக கட்டமைக்கப்பட்ட இப் படையணிக்கு, இயக்கத்தின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலன் அவர்களின் இயற்பெயரை தலைவர் சூட்டினார். சீலனின் துணிவு, பற்றுறுதி ,அறிவுக்கூர்மை, செயல்வேகம் ,ஈகம் ஆகிய அனைத்தையும் முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என்ற உயரிய நோக்கு தலைவரால் போராளிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. சமர்க்கள நாயகன் பால்ராஜ் அவர்களை சிறப்புத் தளபதியாக நியமித்த தலைவர், புகழ்பூத்த தளபதிகள் ராஜன் ( றோமியோ - நவம்பர் ) அவர்களை தளபதியாகவும் ஜஸ்டின் அவர்களை துணைத் தளபதியாகவும் நியமித்து வழிநடத்தினார்.   மிக உயர்ந்த உளவுரண் , தெளிவான திட்டமிடுதல், விரைவான நகர்வு திறன், களச் சூழலுக்கேற்ப சிறப்பு பயிற்சிகள் ,திறமான தகவல் தொடர்பு ,துல்லியமான வேவு , தேர்ந்த கள நிர்வாகம் ,அணித் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் முதலான அனைத்தையும் உள்ளடக்கிய சிறப்புப் பயிற்சிகளில் படையணியை ஈடுபடுத்திய பால்ராஜ், களத்தின் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளும் திறனுடன் படையணியை வளர்த்தார். வவுனியா பெரும் காடுகளூடாக வன்னிப் பெரு நிலத்தை முழுமையாக ஆக்கிரமிக்க சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட வன்னி விக்கிரம -2 நடவடிக்கையை முறியடிக்கும் பாரிய தாக்குதலில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தனது முதல் தாக்குதலை தொடுத்தது . மிகவும் தீவிரமாக களமாடிய படையணியில் சிறப்பாக செயற்பட்ட போராளி கஜன் முதலாவதாக வீரச்சாவைத் தழுவி படையணியின் பாய்ச்சலுக்கு உத்வேகமூட்டினார். இச் சமரில் படையணியின் கனரக அணி உலங்கு வானூர்தியைச் சுட்டு வீழ்த்தி எதிரியின் படை நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இவ் வெற்றிச் சமரில் எதிரியிடமிருந்து ஏராளமான ஆயுதங்களை போராளிகள் கைப்பற்றினர்.   1992 ம் ஆண்டு படையணியின் சிறப்புத் தளபதியாக கிண்ணி அவர்கள் பொறுப்பேற்று வவுனியா, நெடுங்கேணி பகுதிகளில் பல சமர்களில் படையணியை வழிநடத்தினார். இதன் பின்னர் வன்னியிலும் யாழ் குடா நாட்டிலும் பல்வேறு வலிந்த தாக்குதல்களை படையணிநடத்தி தாயகத்தின் கணிசமான பகுதிகளை எதிரியிடமிருந்து மீட்டது. 1994 ம் ஆண்டில் இளம் தளபதி கில்மன் அவர்கள் படையணியின் சிறப்புத் தளபதியாக தலைவரால் நியமிக்கப்பட்டு திருக்கோணமலை மாவட்டத்தில் படையணியை நடத்தினார். அங்கே பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திய கில்மன் ,அங்கு வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டதைத் தொடர்ந்து படையணி மீண்டும் வன்னிக்கு வந்தது. 1995 ம் ஆண்டு மீண்டும் படையணியின் சிறப்பு தளபதியாக பால்ராஜ் பொறுப்பெடுத்து சூரியக்கதிர் , சத்ஜெய முதலான முறியடிப்புச் சமர்களில் படையணியை வழிநடத்தினார். தொடர்ச்சியாக களமாடிய படையணியில் பெருமளவிலான போராளிகள் வீரச்சாவடைந்தும் விழுப்புண்ணடைந்தும் இருந்த நிலையில், தலைவர் வன்னி மாவட்ட படையணியை சாள்ஸ் அன்ரனியுடன் இணைத்து படையணிக்கு புத்துயிரூட்டினார். 1996 ல் ஓயாத அலைகள் - 1 சமரில் எதிரியிடமிருந்து ஆட்டிலறி பீரங்கிகளை கைப்பற்றும் முக்கிய கடமையை தலைவர் படையணியிடம் வழங்கினார். இளம் தளபதி ராகவனின் தலைமையில் களமிறங்கிய அணி மிக விரைவாக செயற்பட்டு எதிரியிடமிருந்து இரண்டு ஆட்டிலறி பீரங்கிகளை கைப்பற்றி, கிட்டு பீரங்கி படையணி உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.   1997 ம் ஆண்டு பால்ராஜின் பாசறைத் தோழனும் சமர்க்கள நாயகனுமான தீபன் அவர்கள் படையணியின் சிறப்பு தளபதியாக பொறுப்பேற்றார். இளம் தளபதிகள் முகுந்தன் என்று சேகர், ராகவன் முதலானோரைக் கொண்டு ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில் தீபன் படையணியை திறமுடன் வழிநடத்தினார். இச் சமரில் எதிரியின் ஒரு டாங்கி உட்பட பல கவச வாகனங்களை அழித்த படையணி கனரக ஆயுதங்களை கைப்பற்றியது. 1998 ல் சேகர் அவர்கள் படையணியின் சிறப்புத் தளபதியாகவும் ராகவனும் முகுந்தனும் தளபதிகளாக நியமிக்கப்பட்டு , உருத்திரபுரம் ,மாங்குளம், பனங்காமம் பகுதிகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டது. 2 ம் மாதம் உருத்திரபுரம் சண்டையில் திறனுடன் களமாடிய படையணி எதிரியின் டாங்கியையும் பல கவச வாகனங்களையும் அழித்து பெரும் வெற்றியை ஈட்டியது. இதன் பின்னர் தளபதியாக விமலன் அவர்களும் துணைத் தளபதியாக இராஜசிங்கம் அவர்களும் நியமிக்கப்பட்டனர் ஓயாத அலைகள்-2 சமரில் படையணியை சேகர் திறமுடன் வழிநடத்தினார். இச் சமரில் படையணியின் மூத்த அணித் தலைவர்கள் இராசநாயகம் , தமிழ்ச்செல்வன் , முதலானோரின் கனரக அணி காத்திரமான தாக்குதல்களை நடத்தி கிளிநொச்சியின் பெரும் பகுதிகளை மீட்டது. டிப்போ சந்தி களத்தில் தீவிரமாக எதிர்த்து நின்ற எதிரியை ராகவன் தலைமையில் இறங்கிய அணி மூர்க்கமான தாக்குதல் நடத்தி முறியடித்து களிநொச்சி நகரை முழுமையாக மீட்டது.   1999 ல் ராகவன் படையணியின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்று ஆனையிறவு பரந்தன் சுட்டதீவு களமுனையில் பாதுகாப்பு கடமைகளிலும் சிறப்புப் பயிற்சிகளிலும் படையணியை நடத்தினார். படையணியின் கனரக ஆயுதங்களை திறனுடன் பயன்படுத்தும் வகையில் இளம் தளபதி மதன் அவர்களின் பொறுப்பில் கனரக அணிகளை தனியாக ஒருங்கிணைத்து சிறப்பு பயிற்சிகளில் ஈடுபடுத்தினார். சுட்டதீவில் எதிரியின் பாரிய நடவடிக்கையை முறியடித்த படையணி ,அடுத்து பரந்தன் ஊரியான் பகுதிகளில் எதிரி மேற்கொண்ட பாரிய நடவடிக்கைகளையும் முறியடித்து வெற்றி வாகை சூடியது. இச் சமர்களில் தளபதிகள் விமலன், மயன், நேசன் ஆகியோர் சிறப்புடன் செயற்பட்டு வெற்றிக்கு வித்திட்டனர். ஓயாத அலைகள்-3 சமரில் ஒட்டுசுட்டானில் ராகவன் வீரச்சாவைத் தழுவிக் கொள்ள ,துணைத் தளபதி இராசசிங்கம் ஓமந்தை வரையிலான சமர்களில் படையணியை தொடர்ந்து வழிநடத்தினார். 1999 இறுதியில் படையணியின் சிறப்புத் தளபதியாக இராசசிங்கம் அவர்களும் தளபதியாக விமலன் அவர்களும் துணைத் தளபதியாக நேசன் அவர்களும் பொறுப்பேற்று பரந்தன் மீட்புச் சமரில் படையணியை வழிநடத்தினர் .   2000 ம் ஆண்டில் சில மாதங்கள் முகாவில் பகுதியில் கடமையில் நின்ற படையணி, பின்னர் குடாரப்பு ,இத்தாவில் தரையிறக்க சமர்களில் களமிறங்கியது . ஆனையிறவு வெற்றிக்கு பின், தொடர்ந்து தனங்கிளப்பு கிழக்கு அரியாலையில் களமிறங்கிய படையணி வெற்றிகரமாக யாழ்ப்பாணம் வரை சென்று பெரும் பகுதிகளை மீட்டது. 2000 ம் ஆண்டு ஆறாம் மாதம் இராசசிங்கம் இரணைமடு குளத்தில் ஏற்பட்ட விபத்தில் சாவடைந்ததைத் தொடர்ந்து, சிறப்புத் தளபதியாக சேகர் அவர்கள் மீண்டும் பொறுப்பேற்றார். இதே நாளில் யாழ் கனகம்புளியடி களத்தில் எதிரி மேற்கொண்ட பாரிய தாக்குதலை படையணியின் துணைத் தளபதி வீரமணி அதிரடித் தாக்குதல்களால் முறியடித்து பெரும் வாகை சூடினார். 2000 ம் ஆண்டு 9 ம் மாதம் நாகர்கோவில் மீதான வலிந்த தாக்குதலில் சேகர் படையணியை வழிநடத்தினார். தொடர்ந்த இச் சமரில் எதிரியின் பதுங்கித் தாக்குதலில் படுகாயமடைந்து, யாழ்வேள் மருத்துவமனையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.   ஒரு வருட இடைவெளியில் மூன்று சிறப்புத் தளபதிகளை படையணி இழந்து துயரத்தில் மூழ்கியிருந்தாலும் இம் மாவீரர்களுடைய சீரிய வழிநடத்தலில் வளர்ந்த படையணி சளைக்காமல் தனது பயணத்தை தொடர்ந்தது .சிறப்புத் தளபதியாக வீரமணி அவர்களும் தளபதியாக நகுலன் அவர்களும் துணைத் தளபதியாக கோபித் அவர்களும் படையணியைப் பொறுப்பேற்று திறமுடன் நடத்தினர். 2001 ம் ஆண்டு முதலாம் மாதம் இயக்கம் போர்நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் எழுதுமட்டுவாள் ,நாகர்கோவில் பகுதிகளில் பெருமளவு துருப்புகளுடன் முன்னேறிய எதிரி வீரமணி உள்ளிட்ட எமது அணிகளை சுற்றிவளைத்த , பல முனைகளில் முறியடிப்புத் தாக்குதலை நடத்தி முற்றுகையை உடைத்து வெளியேறியது. தொடர்ந்து 4 ம் மாதம் முகமாலையில் பல்லாயிரக்கணக்கான துருப்பினருடன் எதிரி மேற்கொண்ட தீச்சுவாலை நடவடிக்கையை படையணி தீரத்துடன் போராடி முறியடித்தது. இச் சமரில் எதிரியிடமிருந்து ஏராளமான ஆயுதங்களை படையணி கைப்பற்றியது. இவ் வெற்றிச் சமரின் புகழுடன் படையணி தனது பத்தாம் ஆண்டு விழாவை தேசியத் தலைவர் மற்றும் தளபதிகளின் பங்கேற்புடன் சிறப்பாக கொண்டாடியது. 2002 ம் ஆண்டு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, படையணியின் அணித் தலைவன் அமுதாப் தலைமையில் சிறப்பு பரப்புரையில் இறங்கிய படையணி போராளிகள் மக்களிடையே பெரும் எழுச்சியை உருவாக்கி ஏராளமான புதிய போராளிகளை இயக்கத்தில் இணைந்தனர். தொடர்ந்து யாழ் குடா நாடு, மன்னார், வவுனியா, திருக்கோணமலை , மட்டக்களப்பு முதலான அனைத்து பகுதிகளிலும் சிறப்பு அரசியல் வேலைத் திட்டங்களில் படையணி ஈடுபட்டது. 2002 ம் ஆண்டின் இறுதியில் சிறப்புத் தளபதியாக நகுலன் அவர்களும் தளபதியாக கோபித் அவர்களும் துணைத் தளபதியாக பல்லவன் அவர்களும் பொறுப்பேற்று படையணியை பயிற்சிகளிலும் பல்வேறு வேலைத் திட்டங்களிலும் தொடர்ந்து நடத்தினர்.   படையணியின் நிர்வாக திறன்களை மேம்படுத்தும் விதத்தில பல புதிய உட்கட்டமைப்புகளை கோபித்தும் நகுலனும் உருவாக்கி வளர்த்தனர். தலைவரின் ஆலோசனையின்படி படையணிக்கு கொடியும் சின்னமும் உருவாக்கப்பட்டன . கோபித் உருவாக்கிய "இயலாத ஒன்று இருக்காது எமக்கு " என்ற வாசகம் படையணியின் முழக்கமாக்கப்பட்டது. 2004 ம் ஆண்டில் துரோகி கருணாவுக்கு எதிரான நடவடிக்கையில் படையணி கோபித்தின் தலைமையில் இறங்கி தீரத்துடன் போராடி கருணாவை வெளியேற்றியது. தொடர்ந்து பல்லவன் தலைமையில் தாக்குதல் தளபதி செங்கோலனின் விசேட அணி. மட்டு அம்பாறை காடுகளிலும் தொப்பிகல காட்டிலும் துரோகக் குழுக்களுக்கு எதிராக பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியது. 2004 ம் ஆண்டு இறுதியில் சுனாமிப் பேரலைகளால் எமது தேசம் தாக்கப்பட்ட போது உடனடி மீட்புப் பணிகளில் இறங்கிய படையணி தாக்குதல் தளபதி தென்னரசன் தலைமையில் புனரமைப்பு பணிகளில் முழுவீச்சுடன் செயற்பட்டது. படையணியின் தளபதி லெப்.கேணல் ராஜன் (ரோமியோ நவம்பர்) துரோகக் குழுக்களின் ஆதரவுடன் எதிரியின் ஆழ ஊடுருவும் அணியினர் தமிழீழத்தில் கிளைமோர் தாக்குதல்களை நடத்தி மக்களுக்கும் இயக்கத்திற்கும் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்த போது , அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் படையணி களமிறக்கப் பட்டது. வவுனியா நெடுங்கேணி காடுகளில் தீவிரமான தேடுதலிலும் கண்காணிப்பிலும் ஈடுபட்ட படையணி நெடுங்கேணி காட்டில் எதிரியின் ஆழ ஊடுருவும் அணியைச் சுற்றி வளைத்து தாக்கி ஆயுதங்களை கைப்பற்றியதோடு இரு இராணுவத்தினரின் உடல்களை கைப்பற்றியது. 2005 ம் ஆண்டில் எமது மூத்த தளபதியும் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளருமான பொட்டு அம்மான் அவர்கள் தென்தமிழீழத்திற்கு பயணம் மேற்கொண்ட போது படையணியில் கோபித் தலைமையில் விசேட அணி அம்மானுடன் சென்று அங்கு பல்வேறு நடவடிக்கைகளில் சிறப்புடன் செயலாற்றியது . 2006 ம் ஆண்டு ஏழாம் மாதம் படையணியின் சிறப்புத் தளபதியாக கோபித் அவர்களும் தளபதியாக பல்லவன் அவர்களும் துணைத் தளபதியாக பிரதாபன் அவர்களும் பொறுப்பேற்றூ நடத்தினர். 8 ம் மாதம் முகமாலைச் சண்டையில் கோபித் படையணியை வழிநடத்தினார். பின்னர் 9 ம் மாதம் நடந்த சமரில் தாக்குதல் தளபதி குட்டி விழுப்புண்ணடைந்த நிலையிலும் வீரத்துடன் போராடி எதிரியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தினார். அடுத்து 10 ம் மாதம் பல்லாயிரம் துருப்பினர் மற்றும் டாங்கி கவச வாகனங்களுடன் முன்னேறிய எதிரியை படையணி திறமுடன் எதிர்த்து முறியடித்தது. இவ் வெற்றிச் சமரை கோபித் திறமுடன் வழிநடத்தினார். இச் சமரில் எதிரியின் டாங்கியும் கவச வாகனங்களும் அழிக்கப்பட்டதோடு எதிரியின் 80 க்கு மேற்பட்ட உடல்களும் பெருமளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. 2007 ம் ஆண்டில் பனங்காமம் , மன்னார் களமுனைகளில் எதிரியின் முன்னேற்றங்களை தடுத்து தீவிரமான தாக்குதல்களை நடத்தியது. இக் காலத்தில் படையணிக்கு வந்த ஏராளமான புதிய போராளிகளுக்கு பாவலன் தலைமையிலான போர்ப்பயிற்சி ஆசிரியர் குழு சிறப்பு பயிற்சிகளை வழங்கி படையணியின் போரிடும் ஆற்றலை வளர்த்தெடுத்தது. நெருக்கடியான களச்சூழலில் பெரிய தம்பனை , இரணைஇலுப்பைக்குளம், பனங்காமம் , பறையனாலங்குளம் முதலான பகுதிகளில் எதிரியின் பெருமளவிலான முன்னேற்றங்களை தடுத்து நிறுத்தியது.   சாள்ஸ் அண்டனி சிறப்பு தளபதி வீரமணி 2008 ம் ஆண்டு மத்தியில் படையணியின் சிறப்புத் தளபதியாக விமலன் அவர்களும் தளபதியாக குமணன் அவர்களும் துணைத் தளபதியாக அமுதாப் அவர்களும் பொறுப்பேற்று தொடர் சண்டைகளில் படையணியை நடத்தினர். முழங்காவில், வன்னேரிக்குளம் ,அக்கராயன்குளம் பகுதிகளில் பல்லாயிரம் எதிரித் துருப்பினரை உறுதியுடன் எதிர்த்து களமாடிய படையணி சில மாதங்களுக்கு எதிரியிடமிருந்து முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியது. கிளிநொச்சியை பாதுகாத்த பெருஞ்சமரில் விமலன் படையணியை திறமுடன் வழிநடத்தினார்.   2009 ம் ஆண்டு கிளிநொச்சியிலிருந்து இயக்கம் பின்வாங்கிய பிறகு, பிரமந்தனாறு , வள்ளிபுனம் களங்களில் தீவிரமாக களமாடிய படையணி பல்லாயிரக்கணக்கான துருப்பினரைக் கொன்று குவித்து பெருமளவிலான ஆயுதங்களை அழித்தது. 3 ம் மாத இறுதியில் கட்டளைத் தளபதி கோபித்தும் துணைத் தளபதி அமுதாப்பும் உறுதியுடனும் போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தொடர்ந்து சிறப்புத் தளபதி விமலனும் தளபதி தமிழரசனும் படையணியை கேப்பாபிலவு , புதுக்குடியிருப்பு , மாத்தளன் சமர்களில் வழிநடத்தினர் . இச் சமர்களில் எதிரிக்கு பேரழிவை ஏற்படுத்திய படையணி முள்ளிவாய்க்கால் சமரில் பல்வேறு முனைகளில் கடுமையாக போராடியது . பதினெட்டு ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட சமர்களில் தொடர்ச்சியாக களமாடிய படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தமிழீழ வரலாற்றில் தடம் பதித்து நிற்கின்றது. படையணியின் தந்தை எனப் போற்றப்படும் மூத்த தளபதி பால்ராஜ் அவர்களும் தமிழீழத்தின் ஈடிணையற்ற மூத்த தளபதி தீபன் அவர்களும் படையணியின் இரு கண்களாகவும் இரு கரங்களாகவும் இருந்து படையணியை வழிநடத்தி வளர்த்தனர். தமிழீழத்தின் மூத்த தளபதிகள் அனைவரின் கட்டளைகளிலும் தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் களமாடிய படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி திகழ்கின்றது. நேரடிச் சமர்கள் மட்டுமின்றி புகழ்பெற்ற வேவு நடவடிக்கைகளிலும் படையணி சிறப்புடன் செயற்பட்டது. படையணியின் புகழ்பூத்த வேவு அணி லீடர்களான மதன் , வீரமணி, கோபித் , குட்டி, இலக்கியன் , தமிழ்ச்செல்வன், பிரதாபன் , மதுரன் , தென்னரசன் ,மோகன் , வான்மீகி ,சிவபாலன், பிரபு, கண்ணன் ,தமிழ்நாடன் ,இளஞ்சுடர் , மாதவன் முதலான துடிப்புமிக்க வேவுப்புலிகள் பல்வேறு வேவு நடவடிக்கைகளில் திறமுடன் செயற்பட்டு பல சமர்களின் வெற்றிக்கு வழிகோலினர் . இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் பல உள் நடவடிக்கைகளிலும் படையணி சிறப்புடன் செயலாற்றியது . 1995 ம் ஆண்டு இயக்கம் யாழ் குடா நாட்டிலிருந்து பின்வாங்கிய பிறகு, படையணியின் சிவாஜி மாஸ்டர் தலைமையில் ஒரு அணி இராணுவத்தின் பகுதிக்குள் இருந்து பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியது. இராசநாயகத்தின் தலைமையில் இன்னொரு விசேட அணி யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதிகளில் எதிரி மீது பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி விட்டு, வன்னிக்கு திரும்பியது. வவுனியா மணலாறு மாவட்டங்களில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் படையணி போராளிகள் பல தாக்குதல்களை நடத்தநடத்தினர் .2001 ம் ஆண்டு இறுதியில் யாழ் பருத்தித்துறையில் படையணியின் அணித் தலைவர்கள் மதுரனும் மோகனும் சிறிலங்கா இராணுவத் தளபதி மீது கிளைமோர்த் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினர். 2006 ம் ஆண்டு இளம் அணித் தலைவன் படையரசன் தலைமையில் ஒரு அணி பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டது. மன்னாரில் படையணியின் தாக்குதல் தளபதி றமணன் புலனாய்வுத் துறை போராளிகளுடன் இணைந்து பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தினார். படையணியிலிருந்து முப்பதிற்கும் மேற்பட்ட கரும்புலிகள் உருவாகி பெரும் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி போராட்டத்திற்கு வெற்றி தேடித் தந்தனர். மேஜர் தனுசன் முதலான தரைக் கரும்புலிகளும் மேஜர் தீக்கதிர், மேஜர் தமிழ்த்தென்றல் முதலான கடற் கரும்புலிகளும் கண்ணன் முதலான மறைமுகக் கரும்புலிகளும் வெற்றிகரமாக செயற்பட்டு படையணிக்கு பெருமை சேர்த்தனர். சண்டைகள் மட்டுமின்றி நிர்வாகம், அரசியல், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு ஆகிய அனைத்து துறைகளிலும் படையணி சிறப்பாக செயல்பட்டது. படையணியின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக சிவாஜி , மதன், தில்லை குட்டி, முத்தழகு , தமிழரசன் , தேவன் முதலானோர் சிறப்புடன் கடமையாற்றி படையணியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். கிளிநொச்சி கோவிந்தன்கடை சந்தியில் படையணிக்காக மாவீரர் நினைவாலயம் எழுப்பி படையணியின் அனைத்து மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. 2200 க்கும் மேற்பட்ட படையணி மாவீரர்கள் தாயகத்தின் விடுதலைக்காக களமாடி தமது இன்னுயிர்களை ஈந்து படையணியின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் அரும் பங்காற்றினர். 50 க்கும் மேற்பட்ட லெப். கேணல் தர தளபதிகள் படையணியின் வெற்றிக்காக பெரும் பங்களிப்பைச் செய்தனர். படையணி தமக்கென அரசியல் பொறுப்பாளரையும் மக்கள் தொடர்பாளரையும் கொண்டிருந்து மக்கள் மத்தியில் தனித்துவமான ஆதரவாளர்களை கொண்ட படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி விளங்கியது. படையணியின் பல ஆதரவாளர்கள் களமுனைகளில் ஆபத்தான சூழ்நிலைகளில் போராளிகளுடன் இணைந்து செயல்பட்டு போராட்டத்தின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பு செய்தனர். படையணியின் அணிகள் களத்தில் ஒன்றுகூடும் போது , படையணியின் மருத்துவ பொறுப்பாளனும் இசைக் கலைஞனுமாகிய மேஜர் பிரியக்கோன் பெயரில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ந்திருப்பர். இந் நிகழ்ச்சிகளில் எமது படையணியின் போராளிக் கலைஞர்கள் எழுச்சிப் பாடல்களை பாடியும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தியும் அனைவரையும் மகிழ்விப்பர். இதன் தொடர்ச்சியாக போர்நிறுத்த காலத்தில், நாடு கடந்த தமிழ் உறவுகளின் பேருதவியால் படையணியில் இராகசீலம் இசைக்குழு உருவாக்கம் பெற்றது. இளம் அணித் தலைவர்கள் சிலம்பரசன் , கலைச்செல்வன் தலைமையில் நவீன இசைக் கருவிகளில் பயிற்சி பெற்ற போராளிகள் மக்களிடையேயும் போராளிகளிடையேயும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி பெரும் எழுச்சியூட்டினர் . விளையாட்டுத் துறையிலும் படையணி போராளிகள் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு தேசியத் தலைவரிடமும் மூத்த தளபதிகளிடமும் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்று படையணிக்கு பெருமை சேர்த்தனர் . லெப். சீலன் நினைவுக் கோப்பை கால்பந்து போட்டிகள் , லெப். கேணல். ராகவன் நினைவு வலைபந்து ( voly ball ) போட்டிகள் முதலான பல விளையாட்டு போட்டிகளை போராளிகளிடையேயும் மக்களிடையேயும் படையணி நடத்தியது. கவியரங்கம் , பட்டிமன்றம், சிறு நாடகங்கள் ஆகியவற்றிலும் படையணி போராளிகள் பங்குபற்றி பாராட்டுக்களை பெற்று படையணிக்கு பெருமை சேர்த்தனர். ப டையணியின் தாக்குதல் தளபதி வரதன் தலைமையில் செயற்பட்ட கல்விக் குழு போராளிகளுக்கு அடிப்படை ஆங்கிலம், கணிதம், பொது அறிவு, அரசியல் முதலான பல விடயங்களில் போராளிகளுக்கு கற்பித்தது . மூத்த தளபதி தீபன் அவர்களின் வழிகாட்டுதலில் " மேஜர் றோய் அதிகாரிகள் பயிற்சி கல்லூரி " யை துவங்கி போராளிகளுக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்கியது. மேலும் " அக்கினி வீச்சு " என்ற கையெழுத்து இதழை நடத்தி போராளிகளின் கவிதைகள் ஓவியங்கள் , மாவீரர் நினைவுகள் , கட்டுரைகள் ,பொதுஅறிவுத் தகவல்கள் முதலான ஆக்கங்களை வெளியிட்டு அவர்களின் படைப்பாற்றலை வளர்த்தது. படையணியின் பத்தாண்டு கால போர் வரலாற்றை தொகுத்து " நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் " என்ற நூலை படையணி வெளியிட்டது . மேலும் படையணியின் முன்னோடி லெப். சீலன் அவர்களின் போராப்ட வாழ்வைச் சித்தரிக்கும் வகையில் " களம் கலங்கும் காலக்கருவி " என்ற நூலும் படையணியால் வெளியிடப்பட்டது. சீலன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் படையணியின் வீரச் செயற்பாடுகளை போற்றும் வகையிலும் புதுவை இரத்தினதுரை அவர்களால் எழுச்சிப் பாடல்கள் எழுதப்பட்டு தமிழீழ இசைக் குழுவை இசையமைத்து சாந்தன் முதலான தமிழீழத்தின் புகழ்பெற்ற பாடகர்களால் பாடப்பெற்று படையணியால் வெளியிடப்பட்டது. 2007 ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி விவரணப்படம் படம் ஒன்றை வெளியிட்டு படையணிக்கு பெருமை சேர்த்தது. தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சீரிய வழிகாட்டுதலோடும் தலைவரின் தனிப்பட்ட ஆலோசனைகள் அறிவுறுத்தல்களோடும் தொடர்ந்து பயணித்த படையணி , தலைவரின் சீரிய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து தொடர்ந்து போராடியது. மிகவும் சவாலான களங்களில் தலைவரால் நம்பிக்கையுடன் களமிறக்கக்கூடிய படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி விளங்கியது. பல தருணங்களில் படையணி சில பத்துகள் எண்ணிக்கையான போராளிகளைக் கொண்ட சிறு அணியாக மாறிய போது தலைவர் உடனடியாக கவனமெடுத்து இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து போராளிகளை சாள்ஸ் அன்ரனியில் இணைத்து மீண்டும் மீண்டும் புத்துயிரூட்டி வளர்த்த படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி திகழ்கின்றது. மிகுந்த உளவுரணுடன் தலைவராலும் தளபதிகளாலும் வளர்த்தெடுக்கப்பட்ட இப் படையணி போராட்ட காலத்தில் தனது பங்கை காத்திரமாக ஈழ மண்ணுக்கு வழங்கியது என்றால் அது மிகையாகாது!    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.