Jump to content

கோவிட் தடுப்பு மருந்தை எதிர்காலத்தில் மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்ள முடியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட் தடுப்பு மருந்தை எதிர்காலத்தில் மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்ள முடியுமா?

45 நிமிடங்களுக்கு முன்னர்
மாத்திரை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோவிட்-19க்கு எதிரான பாதுகாப்பு இப்போது ஒரு தடுப்பூசி வடிவில் கிடைக்கிறது. ஆனால், அந்தத் தடுப்பு மருந்து எதிர்காலத்தில் இன்ஹேலர்களாகவோ மாத்திரைகளாகவோ கிடைக்கலாம்.

தெற்கு ஸ்வீடனின் மிகப்பெரிய அறிவியல் பூங்காக்களில் ஒன்றான மெடிக்கான் வில்லேஜில் ஒரு இன்ஹேலரை எடுத்துக் காட்டுகிறார் மருந்தாளுநர் இங்கேமோ ஆண்டர்சன். அது ஒரு தீப்பெட்டி அளவில் பாதிதான் இருக்கிறது. எதிர்காலத்தில் தடுப்பு மருந்துகளை தூள் வடிவில் எடுத்துக்கொள்ள முடியும் என்று அவரது குழு நம்புகிறது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கான இன்ஹேலர்களைத் தயாரிக்கும் இகோனோவோ நிறுவனத்தின் அதிபரான ஜோஹான் வாபோர்க் பேசும்போது, "இவை தயாரிக்க எளிமையானவை, செலவும் குறைவு. ஒரு சிறிய ப்ளாஸ்டிக் உறையை நீக்கிவிட்டால் இன்ஹேலர் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும். அதை வாயில் வைத்து ஆழமாக இழுக்கவேண்டியதுதான்" என்கிறார்.

கொரோனா வைரசுக்கு எதிராக தூள் வடிவில் தடுப்பு மருந்து ஒன்றை ஐ.எஸ்.ஆர் என்ற சிறு ஆய்வு நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஸ்டாக்ஹோமை சேர்ந்த இந்த ஆய்வு நிறுவனத்தோடு இகனோவோ நிறுவனம் இணைந்து பணியாற்றிவருகிறது.

 

ஃபைசர், மார்டனா, ஆஸ்ட்ராஜெனீகா உள்ளிட்ட நிறுவனங்கள் கொரோனாவைரசின் மரபணுக்களை வைத்து தடுப்பூசிகளைத் தயாரித்திருக்கின்றன. இந்த தூள் வடிவ மருந்து, வைரசின் புரதங்களை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

தடுப்பு மருந்து இன்ஹேலர்
 
படக்குறிப்பு,

தடுப்பு மருந்து இன்ஹேலர்

40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை இது தாங்கும். மாடர்னா, ஃபைசர் போன்ற சில தடுப்பூசிகள் மைனஸ் எழுபது டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் குளிர்ப் பதனப் பெட்டிகளில் வைத்தால் மட்டுமே செயலழிக்காமல் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

"அதனோடு ஒப்பிடும்போது இந்த தூள் மருந்தை விநியோகிப்பதும் சேமித்து வைப்பதும் மிகவும் எளிது. இந்த மருந்தை எடுத்துக் கொள்வதற்கு மருத்துவப் பணியாளர்களின் உதவியும் தேவையில்லை" என்கிறார் ஐ.எஸ்.ஆர் நிறுவனத்தின் நிறுவனரும் ஸ்வீடனின் கரோலின்ஸ்கா பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் பேராசிரியருமான ஓலா வின்க்விஸ்ட்.

காயவைக்கப்பட்ட உணவுகள்

இப்போதைக்கு இந்த தடுப்பு மருந்து கோவிட்-19 வைரசின் பீட்டா (தென்னாப்பிரிக்கா) மற்றும் ஆல்ஃபா (பிரிட்டன்) வகைகளுக்கு எதிராகப் பரிசோதனையில் உள்ளது. ஆப்பிரிக்காவிற்கு சொந்தமான தடுப்பு மருந்து நிறுவனங்கள் எதுவும் இல்லை. அதுதவிர அங்கு நிலவும் வெப்பமும், குறைந்த மின்சார பரவலும் தடுப்பூசி செலுத்துவதில் தடையாக உள்ளன. ஆகவே இந்த முயற்சி வெற்றி பெற்றால் ஆப்பிரிக்க மக்களிடம் வேகமாகத் தடுப்பு மருந்துகளைக் கொண்டுபோய் சேர்க்க முடியும் என்று இந்த நிறுவனம் நம்புகிறது.

ஆனால் இப்போது இருக்கும் தடுப்பூசிகளுக்கு நிகராக இதற்கும் செயல்திறன் கிடைக்குமா என்பதை பரிசோதனைகளுக்குப் பிறகேசொல்ல முடியும். இப்போதைக்கு இந்த மருந்து எலிகளின்மீது பரிசோதிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இது மனிதர்களுக்கு தந்து பரிசோதிக்கப்படும்.

இதுபோன்ற தூள் வடிவ மருந்துகள் வெற்றிபெற்றுவிட்டால் உலகளாவிய கொரோனா கொள்ளை நோய்க்கு எதிரான போரில் அது ஒரு பெரிய ஆயுதமாக இருக்கும் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். மற்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை சேமிப்பதிலும் விநியோகிப்பதிலும் இந்த ஆய்வு உதவும்.

யூனிசெஃப் தலைவர் ஸ்டெஃபான் ஸ்வார்ட்லிங் பீட்டர்சன்
 
படக்குறிப்பு,

யுனிசெஃப் தலைவர் ஸ்டெஃபான் ஸ்வார்ட்லிங் பீட்டர்சன்

இப்போது கரோலின்ஸ்காவில் உலகளாவிய சுகாதார மாற்றத்துக்கான பேராசிரியராகப் பணிபுரிந்துவரும் முன்னாள் யூனிசெஃப் தலைவர் ஸ்டெஃபான் ஸ்வார்ட்லிங் பீட்டர்சன், "குளிர் பெட்டிகளை மிதிவண்டியிலும் ஒட்டகங்களிலும் வைத்துக் கொண்டு போய் குக்கிராமங்களுக்குத் தர வேண்டியிருந்தது. இது அந்த நிலையை மாற்றும். மின் விநியோகம் இல்லாத இடங்களிலும் பயன்படுத்தக்கூடிய உறையவைத்த உணவுகளோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்" என்கிறார்.

ஐகோனோவாவுக்கு அருகிலேயே சிக்கம் என்ற நிறுவனத்தில் வேறு ஒரு தொழில்நுட்பப் புரட்சி நடந்துகொண்டிருப்பதையும் அவர் தெரிவிக்கிறார். திரவ வடிவ தடுப்பு மருந்துகளைக் காயவைக்கும் முயற்சியில் சிக்கம் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இப்படிக் காயவைக்கும்போது அவற்றின் செயல்திறன் குறையாமல் இருக்கவும் ஆய்வுகள் நடக்கின்றன. இது வெற்றிபெற்றால், தடுப்பூசிகளின் கச்சாப் பொருட்களை வளரும் நாடுகளுக்கு அனுப்பி, இறுதிகட்ட உற்பத்தியை மட்டும் அங்கு முடித்துக்கொள்ளலாம். தடுப்பூசியைப் போடுவதற்கு சில நொடிகளுக்கு முன்பாக அந்தத் தூளை சுத்தமான நீரில் கரைத்தால் போதுமானது.

"இதையே அடிப்படையாக வைத்து மூக்கில் தூவும் ஸ்ப்ரே மருந்துகள், மாத்திரைகளையும் உருவாக்க முடியும். அதற்கு பல ஆராய்ச்சிகள் தேவைப்படும்" என்கிறார் சிக்கம் அதிபர் கோரன் கோன்ராட்ஸன்.

சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு குறைவு

சென்ற மாதம் ஒரு தவணைத் தடுப்பூசிக்கு சான்று பெற்று யூ.கேவில் தடுப்பூசிகளைத் தயாரித்து விநியோகித்துவரும் ஜான்ஸன் நிறுவனம், சிக்கம் நிறுவனத்தின் இந்தத் தொழில்நுட்பத்தை ஆராய்ந்துவருகிறது. இது கொரோனா வைரஸுக்குத் தொடர்பான ஆராய்ச்சியா இல்லையா என்று நிறுவனம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை, ஆனால் தடுப்பூசியின் விநியோகத்தையும் பயன்பாட்டையும் எளிமைப்படுத்துவதற்கான முயற்சி இது என்று மட்டும் சொல்லப்படுகிறது.

கோரன் கோன்ராட்ஸன்
 
படக்குறிப்பு,

கோரன் கோன்ராட்ஸன்

ஊசி போட்டுக்கொள்ள பயப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல மாற்று. குளிர் பெட்டிகளுக்கான மின்சாரம் தவிர்க்கப்படுகிறது என்பதால் இது சுற்றுச்சூழலுக்கும் இணக்கமான மாற்றாக இருக்கிறது. உலக அளவில் எல்லாருக்கும் தடுப்பூசிகளைக் கொண்டு சேர்க்க முடியும்.

கொள்ளைநோய்களுக்கான தயார்நிலையை உறுதிசெய்யும் செபி கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் இன்க்ரிட் க்ரோமன், "இதனால் எல்லா இடங்களுக்கும் தடுப்பூசியைக் கொண்டு போக முடியும். இது இப்போது ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது. இன்னும் பல ஆய்வுகள் தேவைப்படும். ஆனால் இந்த முயற்சி வெற்றிபெற்றால் தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கும், வீணாவது குறையும், செலவு குறையும்" என்கிறார்.

https://www.bbc.com/tamil/global-57976998

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை என்றே நினைக்கிறேன். 

வைரஸ் உருமாறிக்கொண்டே இருப்பதால், மருந்துகள் கண்டுபிடிப்பு வெற்றி பெறுவதில்லை.

இம்முறை, உலகளாவிய தேவை, மக்கள் பீதி காரணமாக உடனடியாக செய்து, காசு பார்த்து விட்டார்கள்.

அதுக்குள், புதுப்புது உருமாறல்கள் வந்து விட்டன. மக்கள் பீதி இருக்கும் வரை தான் இவர்கள் மினக்கெடுவார்கள்.

அதன் பிறகு வேறு மருந்து செய்ய போய் விடுவார்கள்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.