Jump to content

சீன நாட்டு பிரஜை ஒருவரும், கோட்டாபய முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று இன்றுக்காலை முதல் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.

இந்நிலையில், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது,

  
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு தொடர்பில் கடற்படை, காணிகளுக்கு உரியவர்கள், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டசெயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெறும். அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையிலேயே நில அளவீடு தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.    அதுவரை நில அளவைச் செயறபாடுகள் இடம்பெறாது என்ற இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டது. இதனையடுத்தே, ஆர்ப்பாட்டம் சற்றுமுன்னர்  கைவிடப்பட்டது.

 தென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோட்டாப கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த சீன நாட்டைச்சேர்ந்தவர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்து தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும், இதுவரைகாலம் அங்கு கடற்படை இருந்து தனது காணியைப் பயன்படுத்தியமைக்கான நட்ட ஈட்டைப் பெறுவதற்கும் கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தினார்.

குறித்த நபரின் இத்தகைய கருத்திற்கு அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், சீனச்சிங்களவர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கோசம் எழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் குறித்த நபர் அங்கிருந்து வெ ளியேறவேண்டுமெனக் கோசம் எழுப்பியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து அந்நபர் வெளியேறியிருந்தார்.

Tamilmirror Online || சீன நாட்டு பிரஜை ஒருவரும், கோட்டாபய முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சுமந்திரன் அவர்கள் யாழில் வேலைசெய்த கிழக்கு பகுதி இஸ்லாமியர் ஒருவரை சீனர் என நினைத்து சமூகவலை பரப்பில் அவசரப்பட்டு வார்த்தைகளை உதிர்ந்தார். இவரையும் ஒருக்கால் வடிவாய் விசாரியிங்கோ அய்சி எல்லாம் பார்த்து அண்ணை உண்மையில் சீனரோ என்று. கடைசியில் நாமளும் அவசரப்பட்டு வார்த்தைகளை  கொட்டிவிட்டு தலையை சொறியகூடாது பாருங்கோ. 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

July 30, 2021July 30, 20210998

WhatsApp-Image-2021-07-29-at-22.50.26.jp

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீட்டு முயற்சி இன்று நடைபெற்ற போது, பொதுமக்களின் எதிர்ப்பினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அளவீட்டு பணிக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, அங்கு சீன வம்சாவளி சேர்ந்த பிரஜையின் குடும்பமும் பிரசன்னமாகியிருந்தது.

நீர்கொழும்பில்  வசித்துவருகின்ற அவருக்கு கோட்டாப கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர் காணியிருப்பதாக கூறுகிறார்.

அந்த சீன நாட்டைச்சேர்ந்தவர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வந்து தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும், இதுவரைகாலம் அங்கு கடற்படை இருந்து தனது காணியைப் பயன்படுத்தியமைக்கான நட்ட ஈட்டைப் பெறுவதற்கும் கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தினார்.

குறித்த நபரின் இத்தகைய கருத்திற்கு அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், சீனச்சிங்களவர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கோசம் எழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் குறித்த நபர் அங்கிருந்து வெ ளியேறவேண்டுமெனக் கோசம் எழுப்பியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து அந்நபர் வெளியேறியிருந்தார்.

சீன தந்தையொருவருக்கும் சிங்கள தாய்க்கும் பிறந்த தான், தற்போது சிங்கள பெண்ணை திருமணம் முடித்திருப்பதாக கூறினார்.

https://pagetamil.com/2021/07/30/முல்லைத்தீவு-கடற்படை-முக/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல காணிகள் ராஜபக்சா பெயரில் வடக்கு கிழக்கில் உண்டு ....அதை இப்பொழுது இப்படியானவர்களுக்கு (சீனர்களுக்கு) கொடுத்துள்ளனர் போலும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

சீன தந்தையொருவருக்கும் சிங்கள தாய்க்கும் பிறந்த தான், தற்போது சிங்கள பெண்ணை திருமணம் முடித்திருப்பதாக கூறினார்.

218065239_1242067996234924_5371590756159

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இவ Shiranthi Rajapaksa பார்க்கும்  போது சைனீஸ் முகம் போல் தோற்ற பிழை ஏற்படுது எனக்கு மட்டும்தான் இந்த குழப்பமோ ?

சும்மா பொழுது போகாமல் தெலுங்கர்களுக்கும் யாழ்ப்பாண தமிழர்களுக்கும் +மலையாளிகளுக்கும் யாழ்பாணத்தவருக்கும் முடிச்சு போட்டு மகிழும் அன்பர்கள்  இந்த இவாவின்  முகஜாடை பற்றி துப்பறிந்து சொல்லலாம் 🤣

 

Her Excellency Ms Shiranthi Wickremesinghe Rajapaksa - First Lady, Sri  Lanka - Speaker, IWC 2014 - YouTube

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலஅளவை இடம்பெற வேண்டும் – சீன நாட்டவரால் வட்டுவாகலில் குழப்பம்

IMG 0042 resized 2 300x200 1 நிலஅளவை இடம்பெற வேண்டும் - சீன நாட்டவரால் வட்டுவாகலில் குழப்பம்

தென்னிலங்கையில் வசித்து வருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு முல்லைத்தீவில் அமைந்துள்ள கோட்டாபய  கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.


 

 
இந் நிலையில் குறித்த சீன நாட்டைச் சேர்ந்தவர், நில அளவைக்கு திராக இன்று வட்டுவாகலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்து தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும், இதுவரை காலம் அங்கு கடற்படை இருந்து தனது காணியைப் பயன்படுத்தியமைக்கான நட்டயீட்டைப் பெறுவதற்கும் கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

குறித்த நபரின் இத்தகைய கருத்திற்கு அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சீனச் சிங்களவர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என கோசம் எழுப்பியிருந்தார்.


 
இதனைத் தொடர்ந்து ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் குறித்த நபர் அங்கிருந்து ளெியேற வேண்டுமெனக் கோசம் எழுப்பியதைத் தொடர்ந்து ஆர்பாட்ட இடத்திலிருந்து குறித்த நபர் வெளியேறியிருந்தார்.

நன்றி – தினக்குரல்

 

 

https://www.ilakku.org/landscaping-should-take-place-confusion-in-vatuvakal-by-chinese/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

எனக்கு இவ Shiranthi Rajapaksa பார்க்கும்  போது சைனீஸ் முகம் போல் தோற்ற பிழை ஏற்படுது எனக்கு மட்டும்தான் இந்த குழப்பமோ ?

சும்மா பொழுது போகாமல் தெலுங்கர்களுக்கும் யாழ்ப்பாண தமிழர்களுக்கும் +மலையாளிகளுக்கும் யாழ்பாணத்தவருக்கும் முடிச்சு போட்டு மகிழும் அன்பர்கள்  இந்த இவாவின்  முகஜாடை பற்றி துப்பறிந்து சொல்லலாம் 🤣

 

Her Excellency Ms Shiranthi Wickremesinghe Rajapaksa - First Lady, Sri  Lanka - Speaker, IWC 2014 - YouTube

 

இவரின்... நதி மூலம், பறங்கி  இனத்தவர் என்று....
நாதமுனியர்... வேறு ஒரு திரியில்  சொன்ன மாதிரி, ஒரு நினைவு  இருக்கு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

எனக்கு இவ Shiranthi Rajapaksa பார்க்கும்  போது சைனீஸ் முகம் போல் தோற்ற பிழை ஏற்படுது எனக்கு மட்டும்தான் இந்த குழப்பமோ ?

உந்த டவுட் எனக்கும் கன காலமாய் இருக்கு......
பெருமாள் சேம் டவுட் உங்களுக்கும்......ஆகையால் நான் தனிமையிலை இல்லை.... என்னைப்போல் ஒருவன் இல்லை ......பலர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷிராணியார்  பறங்கியர் வழித்தோன்றல் என்றுதான் நானும் அறிந்தேன் இதற்குள் இனத்துவேஷம் வேறு.

24 minutes ago, குமாரசாமி said:

நான் தனிமையிலை இல்லை.... என்னைப்போல் ஒருவன் இல்லை ......பலர்

கவலைப்படாதீங்கோ சாமியார்! நீங்கள் ஒன்றும் தனிமையில் இல்லை நாங்களெல்லாம் இல்லை உங்களோட?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

ஷிராணியார்  பறங்கியர் வழித்தோன்றல் என்றுதான் நானும் அறிந்தேன் இதற்குள் இனத்துவேஷம் வேறு.

 இனத்துவேஷம் எப்பவும் அரை குறையளுக்குத்தான் இருக்குமாம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன பிரஜைக்கு இவ்வளவு ஏக்கர் நிலத்தை முல்லையில் விற்றது யார்..??! மைத்திரியா.. ரணிலா.. மகிந்தவா.. கோத்தாவா.. இல்ல டக்கிளஸா..??! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

சீன பிரஜைக்கு இவ்வளவு ஏக்கர் நிலத்தை முல்லையில் விற்றது யார்..??! மைத்திரியா.. ரணிலா.. மகிந்தவா.. கோத்தாவா.. இல்ல டக்கிளஸா..??! 

உங்கட தமிழ் சகோதரர்கள் தான் ...வெளி நாட்டில் இருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.