Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

"மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்" இந்த இளம் பெண்ணுக்கு உதவுங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.இறந்த குழந்தையின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இம்ம

Link to comment
Share on other sites

 • Replies 278
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

WORLD: An appeal to Muslim scholars throughout the world

FOR IMMEDIATE RELEASE

AS-155-2007

July 6, 2007

A Statement by the Asian Human Rights Commission

WORLD: An appeal to Muslim scholars throughout the world

(The case of a teenage girl facing the death sentence in Saudi Arabia as the result of a tragedy being misunderstood as a crime)

The Asian Human Rights Commission is writing this appeal to all the Muslim scholars in the world regarding the case that the AHRC believes deserves of all Muslim scholars.

This is a case where a teenage girl, who was in charge of bottle feeding a four-month old child, which due to her inexperience resulted in an accident of the child choking and while she was desperately trying to help by way of soothing and stroking the chest, face and neck of the baby a tragic death took place. These circumstances are explained below. However, due to misunderstandings this case was presented as the murder of a baby by strangulation and the teenager was sentenced to death by a court in Saudi Arabia on June, 16.

After careful consideration of all facts we are of the view that what has happened is an enormous tragedy but it can lead to, if not prevented soon, a further tragedy of an innocent inexperienced teenager being executed.

We believe that this is a case in which scholarly considerations can help to make the necessary reflections distinguishing a tragedy from a crime and from such reflections interventions can be made to prevent a further tragedy taking place. We believe that the Muslim scholars, if they think it appropriate can communicate with this unfortunate family, faced with this situation to provide them with wise advise to help them deal with this issue.

Details of the relevant incidents:

This case concerns Naffeek Rizana who is facing the death sentence in Saudi Arabia, allegedly for the strangulation of a four month old baby. Through close study of the case the Asian Human Rights Commission is satisfied that, in fact, what has taken place was the tragic death of a baby in the process of being fed by an inexperienced teenager.

Naffeek Rizana was born on February 4, 1988 and comes from a war-torn, impoverished village. Here, many families, including those of the Muslim community try to send their under aged children for employment outside the country, as their breadwinners. Some employment agencies exploit the situation of the impoverished families to recruit under aged girls for employment. For that purpose they engage in obtaining passports by altering the dates of birth of these children to make it appear that they are older than they really are. In the case of Naffeek Rizana, the altered date, which is to be found in her passport now, is February 2, 1982. It was on the basis of this altered date that the employment agency fixed her employment in Saudi Arabia and she went there in May, 2005.

Later in 2007 she went to work at the house of Mr. Naif Jiziyan Khklafal Otaibi whose wife had a new-born baby boy. A short time after she started working for this family she was assigned to bottle feed the infant who was by then four months old. Naffeek Rizana had no experience of any sort in caring for such a young infant. She was left alone when bottle feeding the child. While she was feeding the child the boy started choking, as so often happens to babies and Naffeek Rizana panicked and while shouting for help tried to sooth the child by feeling the chest, neck and face, doing whatever she could to help him. At her shouting the mother arrived but by that time the baby was either unconscious or dead. Unfortunately, misunderstanding the situation the family members treated the teenager very harshly and handed her over to the police, accusing her of strangling the baby. At the police station also, she was very harshly handled and did not have the help of a translator or anyone else to whom she could explain what had happened. She was made to sign a confession and later charges were filed in court of murder by strangulation.

On her first appearance in court she was sternly warned by the police to repeat her confession, which she did. However, later she was able to talk to an interpreter who was sent by the Sri Lankan embassy and she explained in her own language the circumstances of what had happened as stated above. This version was also stated in court thereafter.

According to reports, the judges who heard the case requested the father of the child to use his prerogative to pardon the young girl. However, the father refused to grant such pardon. On that basis the court sentenced her to death by beheading. This sentence was made on June 16, 2007.

There is a period of one month for the lodging of an appeal. However, an appeal has not yet been lodged. The initiative for lodging the appeal is with the Sri Lankan government. The AHRC also understands that the Sri Lankan authorities have sought the help of a legal firm which had initially demanded the equivalent of US$ 160,000. In the initially reports in the media there were different figures quoted. However, this matter has now been clarified. The Foreign Ministry in Colombo, Sri Lanka has not authorised such money and the family of Naffeek Rizana is of course unable to raise any funds for her appeal. This matter of legal assistance is being pursued with the government at the moment.

However, under Saudi Arabian law it is the prerogative of the family of the victim, in this case the parents of the baby that has the right to pardon the teenaged, Naffeek Rizana. Such pardon will be valid in law under the Saudi Arabian legal system.

The Asian Human Rights Commission is of the view that was has happened is a tragedy and not a crime. At no stage was any allegation made of any animosity between the teenaged helper and the family. If such animosity existed it is very unlikely that a four month old infant would have been handed over to her care. The inexperience of the helper, as well as the difficulties of communication due to the language problems have ended up in an extremely unfortunate situation being misunderstood as a crime. If the nature of this tragedy is not dealt with within a matter of days from now there will be a further tragedy of a teenaged, inexperienced helper being given capital punishment for a crime she did not commit or intend to commit.

Contact details of the family:

Those scholars who wish to offer their advice to the family may do so through the following address c/o the Sri Lankan Embassy in Riyadh, Saudi Arabia.

Mr. Naif Jiziyan Khklafal Otaibi

Ministry of Finance, Riyadh

C/O Sri Lankan Embassy

P.O. Box 94360

Riyadh 19693

Saudi Arabia

lankaemb@shabakah.net.sa, amjsadiqu@hotmail.com

For a sample letter written by the Asian Human Rights Commission to the family please see below:

Dear Mr. Otaibi,

May the peace of God be upon you during this time of grief in your family. I wish to express my heartfelt condolences to you and your wife over the loss of your child.

The loss of any life is a tragedy, and it is in this spirit that I share with you my concerns for the life of the teenage girl Naffeek Rizana.

Naffeek Rizana comes from an extremely poor family in the war-torn eastern part of Sri Lanka where many people, including the Muslim community, are facing grave economic and other daily hardships. Due to this, many underage young people are sent to other countries for employment in order to feed their impoverished families.

Naffeek Rizana was born on February 4, 1988. The individuals who recruited her for employment in your country altered her date of birth to February 2, 1982, and obtained a passport for her to travel to Saudi Arabia. At the time of her employment in your household, she was therefore still a teenager without any experience of looking after a baby. My understanding is that her inexperience resulted in the accidental death of your child and that this was not an intentional act to harm your family.

I am therefore writing this letter to appeal to your compassion to pardon and forgive the teenage girl Naffeek Rizana who is now facing a death sentence. It is to your compassion and understanding that I appeal in the hope that you will find it in your heart to forgive this unfortunate girl.

Yours sincerely,

# # #

About AHRC: The Asian Human Rights Commission is a regional non-governmental organisation monitoring and lobbying human rights issues in Asia. The Hong Kong-based group was founded in 1984.

http://www.ahrchk.net/index.php

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

19 வயதான றிஷானாவைக் காப்பாற்ற உதவுங்கள்

AmnestyInt_logo_000.gif

உங்கள் மடல்களை தயவு செய்து கீழ் வரும் பகுதிக்கு அனுப்புங்கள்.

Urgent Appeals Programme

Asian Human Rights Commission

இதோ விபர சுட்டி:

http://www.ahrchk.net/ua/mainfile.php/2007/2463/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முதற்கண் இதில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் மற்றும் இரக்கமுள்ள நெஞ்சங்கள் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சங்கர்லால், அ.ஜீவன் ஆகியோர் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு இதில் எனக்கு பங்குகொள்ள முடியாமைக்கும் அதற்கான காரணத்தையும் முன்வைக்க விரும்புகிறேன்.

இத்தலைப்பு இதுவரை சுமார் 300 தடவைகள் பார்வையிடப்பட்ட போதும் இருவரைத் தவிர எவரும் கருத்துக்கள் எதுவும் முன்வைக்கவில்லை. அதற்கு காரணம் இல்லாமலில்லை!

1) இதுவரையில் நானறிய இதே மூதூர் பகுதியை சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கடந்த ஒரு வருடத்தினுள் கொல்லப்பட்டுள்ளனர். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? எனக்குக்கூட அப்படித்தான் இருந்தது. தோராயமாக இதை நான் கூறினாலும் உண்மையான தொகை இதைவிட அதிகமாகவே இருக்கும்.

இது ஏன் உங்கள் எவரினதும் கவனத்தை ஈர்க்கவில்லை என்றால், அனைவரும் ஒரே நாளில் கொல்லப்படாமையும், மேலும் இனந்தெரியாதவர்களால் ஆனால் தெரிந்த நோக்கத்துடன் தேதி குறிப்பிடப்படாமல் கொல்லப்பட்டமையும் ஆகும். கொல்லப்பட்டவர்கள் மட்டுமின்றி இன்னமும் எஞ்சியிருக்கும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் என எந்தபேதமும் இன்றி தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக நிறுவன மயப்படுத்தப்பட்ட வழிகளில் நாளாந்தம் பல துன்பறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த பெரும்பாலான மக்கள் தங்கள் பாரம்பரிய வாழ்விடங்களை விட்டு திட்டமிட்ட முறையில் வெளியேற்றப்பட்டு முகாம்களினுள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்விடங்களும் செய்து வந்த தொழில்களும் மற்றைய சமுகங்களால் ஈவிரக்கமின்றி ஆக்கிரமிக்கப்படுகின்றது. ஜீவனோபாயமாக தொழில் செய்ய முயற்சிப்பபர்களும் தங்கள் இச்சைகளுக்கு இசையாதவர்களும் தொடர்ந்தும் கொல்லப்படுகின்றனர், கைதுசெய்யப்படுகின்றனர், பலாத்கார படுத்தப்படுகின்றனர் அல்லது காணமல் போகின்றனர்.

மேலும் இந்தக் கொடுமைகள் இந்தப் பெண்ணுக்கு இழைக்கப்படுவது போல் வேறுநாட்டவர்களால் இழைக்கப்படவில்லை! சொந்த நாட்டிலேயே சகோதர(என்ற கூறப்படுகின்ற) சமுகத்தினரால் இழைக்கப்படுகின்றது.

2) இந்த செய்திகள் வெளியில் வராமைக்கு பல சக்திகள் தங்களால் முடிந்ததை செய்து வருகின்றன. அவற்றில் ஒன்று இந்தப் பெண்ணின் சமுகம். இப்பகுதில் பெரும்பான்மையாகவும் தற்போதய அரசியலில் அதிகாரமுள்ள ஒரு தரப்பாகவும் இவர்கள் உள்ளபோதும் தமது சமுகத்திற்கன்றி ஏனையவர்களுக்கு எந்தத் துன்பம் ஏற்படும் போதும் இவர்கள் அதனை கண்டிக்கவோ அல்லது அதற்கெதிரான ஆக்கபூர்வமான அழுத்தங்களை பிரயோகிக்கவோ முன்வருவதில்லை. மாறாக பலமுள்ள சக்தியுடன் சேர்ந்து நின்று கொண்டு பாதிக்கப்படுபர்களை தங்களின் கைகளில் கறைபடியாமல் மறைமுகமாக தாக்குபவார்களாகவே உள்ளனர். உதாரணமாக அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களில் போது இந்த இனத்தை சேர்ந்த நிவாரண அமைச்சர் அனைத்து இனங்களுக்கும் பொறுப்பு மிக்க பதவியில் இருந்து கொண்டு தன் இனத்தை சேர்ந்தவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கையில் இனப்பிரச்சனை கொழுந்து விட்டு எரியும் போதெல்லாம் அமைதியாக இருந்து ஒரு இனத்தின் அழிவை வேடிக்கை பார்க்கும் இவ்வினத்தவர்கள் சமாதானம் கனியும் போது மட்டும் தங்கள் பங்குகள் பற்றி முழுமூச்சுடன் செயற்பட்டு சில சமயம் அந்த சமாதான முயற்சிகள் முறிந்து போவதற்கும் காரணமாக இருக்கின்றனர்.

இவ்வாறு அதிகாரத்தின் பக்கத்துணையுள்ள இவ்வினத்தவர்கள், தொழில் வாய்ப்புத் தேடுவதிலும் அதிகரித்த வாய்ப்புக் கொண்டவர்கள். அனேக இலங்கையர் தொழில் நாடிச் செல்லும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த இனத்தவருக்கே முன்னுரிமை மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன.

இந்த வகையில் மனித உரிமைகளும், ஜீவனாம்ச வாய்ப்புகளும் மறுக்கப்படும் ஒரு முழுச் சமுகத்தின் முன்னாள் இந்த பெண்ணின் சம்பவம் என்னைப் பொறுத்தவகையில் குறைந்த முக்கியத்துவத்தையே பெறுகின்றது. என்னால் ஏதாவது செய்ய முடியுமாக இருந்தால் அதனை அல்லது அந்த நேரத்தை மேற்குறித்த பாதிக்கப்படும் சமுகத்தினருக்கு செலவு செய்யவே நான் விரும்புகிறேன்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் யார் என எனக்கு தெரியாத போதும், அவரும் இந்த மக்களுக்காக ஏதாவது செய்யக் கூடியவராக இருந்தால் அது தொடர்பில் இயலுமானதை காலந்தாழ்த்தாது செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

அன்புடன்,

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியன் உங்களின் வேண்டுகோள் நியாயமானது.

தினமும் எங்கட மக்கள் சாவிலும், மரணபீதிலும் வாழும்போது, ஏதோ ஒரு வகையில் எம் போராட்டத்i வைச்சு அனுகூலம் அனுபவிக்கின்ற எச்சமுதாயத்துக்கும் உதவுகின்ற எண்ணம் எனக்குமில்லை. இதை வெளியால் சொன்னால் என்னை ஈவிரக்கம் அற்றவன் என்று யாரும் சொல்லுவியள். அதைப் பற்றிக் கவலையில்லை.

எங்கட சனம் சாகக்க எத்தனை பேர் ஈவிரக்கம் காட்டினவை என்று என்னைத் திட்டுகின்றவர்கள் யோசிக்கட்டும்.

Link to comment
Share on other sites

சாணக்கியனும் மதனராசாவும் சிந்திப்பது போன்று பெரும்பான்மை தமிழர்கள் சிந்திப்பார்களாக இருந்தால், நான் இஸ்லாமியத் தமிழர்கள் தன்னாட்சி பெறுவதை ஆதரிப்பேன்.

இவ்வாறான சிந்தனை உள்ள தமிழர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க அவர்களுக்கு அது ஒன்றுதான் வழியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உலகில் எங்குதான் போர் - பட்டினிச் சாவு - இராணுவ மற்றும் பயங்கரவாத அழிப்பினால் மக்கள் இறக்கவில்லை.

இலங்கையும் அது மாதிரிதானே என உலகம் எம் மக்களை பார்ப்பது சரி என்பது போன்ற

சிலரது கருத்துகளால்

மனதை தேற்றிக் கொள்ள முடிகிறது.

ஒரு குழந்தையின் சாவு சரி எனும் உங்கள் மனித நேயம் கண்டு வியக்கிறேன்.

பாராட்டுகள்!

குடும்பத்தோடு நல்லாயிருங்க.

Link to comment
Share on other sites

சாணக்கியனும் மதனராசாவும் சிந்திப்பது போன்று பெரும்பான்மை தமிழர்கள் சிந்திப்பார்களாக இருந்தால், நான் இஸ்லாமியத் தமிழர்கள் தன்னாட்சி பெறுவதை ஆதரிப்பேன்.

இவ்வாறான சிந்தனை உள்ள தமிழர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க அவர்களுக்கு அது ஒன்றுதான் வழியாக இருக்கும்.

அவர்கள் தாங்கள் தமிழரும் இல்லை,சிங்களவரும் இல்லை என்றால் நீங்கள் சொல்வது போல் தனி சுயாட்சி கேட்கலாம்.

நீங்கள் சொல்வதை பார்த்தால் மன்னார், குருநகர் எல்லாம் தனி சுயாட்சி கேட்கலாம். ஏனென்றால் அங்கே கிறிஸ்தவமதம் தான் பெரும்பான்மை.

உங்களது கருத்து தமிழ் என்ற தேசம் வரக்கூடாது என்று கூக்குரலிடும் இனவாதிகளின் கருத்தை ஒத்தது

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறதா ஒரு அவலக் குரல்?

kollwitz_child.jpg

"குடும்பத்தின் ஏழ்மையால்

படிக்க வேண்டிய பராயத்தில்

என் குடும்பத்தை வாழ வைக்க 16 வயதில் என்னை அனுப்பினார்கள்.

அதிகாலை முதல் நடு சாமம் வரை அடி உதைகளுக்கு மத்தியில்

விழித்திருந்து அடிமையாக வேலை செய்தேன்.

10 குழந்தைகளை பராமரரிக்க வேண்டியிருந்தது.

பால் கொடுக்கும் போது ஒரு குழந்தை மூசச்சு திணறிய போது

வீரிட்டுக் கத்தினேன்.

ஓடி வந்தவர்கள் குழந்தையை பார்க்காமல்

நான் கொலை செய்ய முயன்றதாக என்னைத் தாக்கினார்கள்.

அது அந்த குழந்தை இறக்கக் காரணமாகியும் இருக்கலாம்.

எனக்குத் தெரியாத மொழியில் ஏதோ எழுதி கையெழுத்து வாங்கினார்கள்.

இப்போதுதான் எனக்குத் தெரியும்

அந்தக் குழந்தையை நான் கொன்றதாக கையெழுத்து போட்டதாக............

நான் செய்யாத குற்றத்துக்காக என்னைக் கொல்்லப் போகிறார்கள்.

இறைவா..................முடிந்தால் என்னைக் காப்பாற்று.

உனக்கு மட்டுமே தெரியும் நான் யாரென்று............................."

-றிஷானா

யாருக்காவது இந்த அலறல் கேட்டால் மட்டும்..............

முடிந்தவர்கள் மட்டும் ஒரு மின் அஞ்சல் அனுப்புங்கள்.

http://www.ahrchk.net/ua/mainfile.php/2007/2463/

Link to comment
Share on other sites

அவர்கள் தங்களை தமிழர்களாகப் பார்ப்பதற்கு முதல், நீங்கள் அவர்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

அவர்கள் தனித்துவமான பண்பாட்டை கொண்டுள்ள ஒரு சமூகம் என்பதை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

அவ்வாறான ஒரு சமூகம், அச் சமூகத்தை சேராத பெரும்பான்மையினரால் வெறுக்கப்படுமாயின், அவர்கள் தமது பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்கு உரித்துடையவர்கள். அது தன்னாட்சியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இங்கே யார் மீது தவறு என்பது பிரச்சனை அல்ல.

யதார்த்தம் நிலை இப்படித்தான் இருக்கிறது.

இஸ்லாமிய சமூகம் தமிழர்களை அச்சத்தோடு பார்க்கின்றார்கள்.

இந்த நிலையை மாற்றுவதற்கு பெரும்பான்மைத் தமிழ் சமூகம் போதுமானதை செய்யவில்லை.

இப் பிரச்சனையில் சம்பந்தப்படாத தமிழைப் பேசுகின்ற ஒரு சிறுமி மரணத்தை ஏதிர்நோக்கி உள்ள போது, அவள் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவள் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு, அவளுக்கு ஆதரவாக ஒரு கையெழுத்தைக் கூட போட மறுக்கின்ற சமூகமாக எங்கள் சமூகம் இருக்கின்றது.

இந்தச் சமூகத்தோடு எதற்கு அவர்கள் சேர்ந்து வாழ வேண்டும்?

மாற்றத்தை முதலில் உங்களுக்குள் தேடுங்கள். அவர்களாக வந்து இணைவார்கள்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மற்றும் இஸ்லாமியத்தமிழர் பிரச்சனை உணர்வு பூர்வமானது என்றே நினைக்கிறேன் ..... இதில் விவாதம் தடம் புரண்டு கசப்பான அனுபவங்கள் கிளறப்படுவதால் யாருக்கும் நன்மை இல்லை.....

நமக்கு உடன்பாடில்லாத கருத்துக்கள் உணர்வுகளை தூண்டுவதாகவோ .. அல்லது புண்படுத்துவதாகவோ இருக்குமாயின் அவற்றை தவிர்ப்பதே நல்லது சகோதரர்களே

Link to comment
Share on other sites

சபேசன்

உங்களின் கருத்து என்பது மனிதநேயத்தின் அடிப்படைச் சிந்தனையால் ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் சாணக்கியன், மதனராசா, நேசனின் சிந்தனைகளும் சரியானதாகவே இருக்கின்றது.

தமிழர் பல ஆண்டுகளாகப் போர் புரிகின்றார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லீம்கள் இணைந்திருந்ததாகச் சொல்லப்பட்டபோதும், பின்னர் அஸ்ரப் கூட நின்று, தமிழர் படுகொலைகளைச் செய்வதற்குத் துணை நின்றார்கள்.

இன்றைக்குப் பாலஸ்தீனத்திலோ, அல்லது ஏதும் அரபு நாடுகளிலோ முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டால் கொழும்பில் ஆர்ப்பாட்டமும், கண்டணமும் செய்கின்ற முஸ்லீம் அரசியல் சார்ந்த, சாராத அமைப்புக்கள் தமிழ்மக்களின் படுகொலையைக் கண்டு எவ்விதம் கொதித்து எழுந்தார்கள்?

தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருந்தபோது, முஸ்லீம்களும் போராட்டத்தில் இணைய விடாமல் தடுக்கச் சலுகைகள் செய்யச் சொல்லி அரசினை வேண்டி நிறைய அனுகூலங்களை அஸ்ரப் பெற்றுக் கொண்டார். இன்றைக்கு கிழக்கில் பார்த்தாலே தெரியும், அஸ்ரப் வைத்திசாலை தொடக்கம், துறைமுகம், வேலைவாய்ப்புக்கள், காணிகள் என்று பல பயன்களைத் தமிழரின் போராட்டத்தை வைத்து பெற்றுக் கொண்டனர். இவர்கள் பெற்ற ஒவ்வொரு பயன்களிலும் தமிழனின் குருதிகள் தெறிக்கவிடப்பட்டுள்ளன. ( முஸ்லீம்கள் கிழக்கில் எப்படித் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர் என்று பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகவியளாளருமான திரு ஜெயானந்தமூர்த்தி வீரகேசரியில் எழுதிய தொடரைப் படிக்க)

இன்றைக்குத் தமிழர் போராட்டத்துக்கு ஏன் ஆதரவு தரவில்லை என்பதற்கு அவர்கள் காரணம் சொல்லலாம். ஆனால் சாகின்ற அப்பாவி மக்களுக்குமா அவர்களால் குரல் கொடுக்க முடியாமல் போய்விட்டது? அவர்கள் இனத்துவத்தோடு பார்க்கின்ற விதம் சரி என்றால் மேற்குறித்த களவுறவுகளும் இனஅடிப்படையில் நோக்குவதைத் தப்பு என்று சொல்லிட முடியாது.

அவர்களுக்கு எப்படித் தமிழர்கள் மீது மனக்கோபம் உள்ளதோ, அது போன்றே நம்மவர்களுக்கும் இருக்கலாம். ஏனென்றால் நம்மவர்களும் மனிதர்கள். இருக்கின்ற வலிகளைத் தொலைத்துவிட்டு நட்புப் பாராட்டும் அளவிற்கு தியாகிகள் அல்ல.

Link to comment
Share on other sites

ஒரு முஸ்லீம் நாட்டில ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு சரியத் சட்டதிட்ங்களுக்குக் கீழ நீதி கிடையாமற்போனதையெண்ணி ஒடுக்கப்பட்டு இனக்கொலைக்கு உட்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிற ஈழத்தமிழினத்திலிருந்து அதுவும் தமிழ் ஆண் வர்க்கத்துக்கு அடிமைப்பட்டுத் துடிக்கிற பெண் இனத்தில இருந்து ஒரு வேதனைக்குரல் ஒலிக்கிறதப் பார்க்கிற நேரம் நெஞ்செல்லாம் புல்லரிக்குது. இது இப்பிடியே கொண்டினியூ பண்ணச்சுதெண்டா பெரிய பெரிய விசாலமனம் படைத்த தியாகிகளெல்லாம் நம்மட இனத்தில உருவாக நல்ல ஒரு சான்ஸாக அமையும். ஆனபடியா எல்லாரும் சேர்ந்து இப்பிடிப்பட்ட மனப்பான்மையுள்ள ஆக்கள எங்கட சமூகத்துக்குத் தலைமைதாங்கச் சொல்லி நாம முன்தள்ளவேணும்.

Link to comment
Share on other sites

இஸ்லாமியர்களைக் கேட்டால் அவர்களும் இது போன்று கதை கதையாகச் சொல்கிறார்கள்.

இஸ்லாமியத் தமிழர்கள் மத்தியில் தாம் ஒரு தனி இனம் என்ற சிந்தனையை வளர்த்ததில் எமது அன்றைய தலைமைக்கும் பெரும் பங்கு உண்டு.

சிங்களவர்கள் செய்த பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நாம் பலியாகி விட்டோம். அதிலிருந்து இன்றுவரை மீள முடியவில்லை.

நாம் வெறுப்புக்களை வளர்த்துக்கொண்டுதான் போகின்றோம்.

முஸ்லீம்கள் பற்றிய வெறுப்பையும், சந்தேகத்தையும் விட்டு விட்டு தமிழ் சமூகம் தன்னுடைய தவறுகளை தேட வேண்டும்.

அதே போன்று முஸ்லீம்களும் செய்ய வேண்டும்.

கட்டாயப்படுத்தி ஒரு சமூகத்தை எங்களுடன் நீண்ட காலத்திற்கு இணைந்து வாழச் செய்ய முடியாது. தமிழீழத்தில் ஒரு பாகிஸ்தான் வேண்டாம்.

ஆனால் எம்மவர்களின் சிந்தனைகளைப் பார்க்கின்ற போதும் பெரும் அச்சம் வந்து சூழ்கின்றது.

Link to comment
Share on other sites

இஸ்லாமியத் தமிழர்கள் மத்தியில் தாம் ஒரு தனி இனம் என்ற சிந்தனையை வளர்த்ததில் எமது அன்றைய தலைமைக்கும் பெரும் பங்கு உண்டு.

இதை விளக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த தகவலினை இங்கு இணைத்து அதன் மூலமாக உலகத்தமிழினத்தின் மனட்சாட்சிக்கு முன் இந்த கொடுமையை நிறுத்தி அனைவரினதும் உதவிகளை எதிர்பார்க்கும் அந்த தமிழ்ப் பெண்ணுக்கு உதவ முன்வந்த சங்கர்லால், திருமதி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் திரு அஜீவன் அண்ணா அவர்களுக்கும் அந்த பெண்ணின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் நேற்றயதினம் இந்த செய்தியினை பார்வையிட்ட போதும் இதற்கு கருத்தெழுத முடியாது வேலைப்பழுவாக இருந்தது. இருப்பினும் வாசித்த நேரம் முதல் மனதில் கனத்த பாரம். எப்படியாவது உதவி செய்யவேண்டும் என ஆதங்கம். இது போலவே எத்தைனையோ பேர் பாவையிட்டுவிட்டு கருத்து எழுத நேரமில்லாது விட்டுருக்கலாம். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று மெதுவாக தங்கள் எதிர்ப்பினை மின்னஞ்சல் மூலமாக உரியவர்களுக்கு அனுப்பி இருக்கலாம். இவ்விடத்தில் எமது கருத்துக்களை பதிவது முக்கியமற்றது. உரிய இடத்துக்கு உரிய நேரத்தில் அழுத்தங்களை பிரையோகிப்பதே சாலச்சிறந்தது.

தமிழர்களாகிய நாம் சகோதர பற்று கொண்டவர்கள். அந்த சகோதரி மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் தமிழே. மதம் வேறு விடயம் அது அவர் அவர் நம்பிக்கை இருப்பினும் நம்போன்ற அந்த ஏழைச் சகோதரி சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை தூக்கி இன்று தம் வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார். தமீழையே தாய்மொழியாக பேசிக்கொண்டு ஒரு மதத்தால் அந்த மதமூலம் வந்த கலாசாத்தால் தாம் ஓர் தனி இனம் என கூறிக்கொள்ளும் முஸ்லிம் சமுதாயமே இன்று கையை விரிக்கும் நிலையில் இருக்கும் போது தமிழர்களாகிய நாம் உதவ துடிப்பது அந்த வேற்றுமை பாராட்டும் மதமே வெட்கித்தலைகுனியும் என்பதில் ஐயமில்லை.

சில தமிழ் சகோதரர்கள் இப்படி உதவி செய்வதை கருத்தளவில் எதிர்க்கிறார்கள் என்றால் அது அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் மேல் கொண்ட அக்கறையே. இருப்பினும் நாம் எமக்கே உரிய பண்போடு நிச்சயம் அவருக்கு உதவி செய்யவேண்டும்.

எம்போன்ற ஒரு பெண் நன்றாய் வாழ வேண்டும் என கனவுகள் பல கண்டவள். இன்று வாழ்வு பறிக்கப்படும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறாள். சகோதரர்கள் உதவுவார்கள் என்ற தென்போடு தன் நாட்களை கழிக்கிறாள். இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் ?? ஒரு 60,000 ஆயிரம் ரூபாய்கள் இருந்தால் அவளின் விதியை சிலவேளை மாற்றலாம்.

யாழ் இணைய நண்பர்கள் / வாசகர்கள் ஒவ்வொரும் தங்கள் நாட்டுப்பனம் 2 காசுகளை தானமாக செலுத்தினால் நிச்சயமாக அந்த பெண்ணுக்கு ஏதும் புதிய வழி பிறக்கும். தர்மம் நிச்சயம் ஒருநாள் உங்கள் தலையையும் காக்கும். ஒரு ஊடகத்துறையினன் எனும் முறையில் திரு அஜீவன் அண்ணாவை இதற்கு தலைமை தாங்கி அனைவரிடமும் இருந்து முடிந்தளவு நிதியினை திரட்டி அந்த பெண்ணின் வழக்கறிஞருக்கு செலுத்தி உடன் ஆவன செய்யுமாறு மிகுந்த பாரத்தோடு கேட்கிறேன்.

10 டொலர் / யூரோ விற்கு பெறுமதியான பணத்தினை கொடுக்க நான் விரும்புகிறேன். இதனை யாரிடம் எப்படி கொடுப்பது? அஜீவன் அண்னா / சங்கர்லால் உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இங்கே இதை தயவு செய்து அரசியலாக்காதீர்கள் என்பதே என் பணிவான வேண்டுகோள்.

அதை வேறு ஒரு இடத்தில் வாதாடுங்கள்.

உதவி கரத்தோடு இணைந்து மனதாலாவது

ஒரு துளி ஈரத்துடன் கருத்து பகிர்ந்தவர்களுக்கு நன்றி!

வக்கீலுக்கான பணமல்ல இப்போது முக்கியம்.

பலரது எதிர்ப்புக் குரலுடன் கூடிய கருணையான பார்வைக்கான மின்அஞ்சல்கள்.

அதை உடன் செய்யுங்கள்.

இலங்கை மனித உரிமை அமைப்புகள் அரசினூடாக அதை செய்ய முயன்றிருக்கின்றன.

பணம் கொடுப்பது குறித்து பின்னர் பார்க்கலாம்.

நன்றி!

கேட்கிறதா என் அவலக் குரல்?

kollwitz_child.jpg

"குடும்பத்தின் ஏழ்மையால்படிக்க வேண்டிய பராயத்தில்

என் குடும்பத்தை வாழ வைக்க 16 வயதில் என்னை அனுப்பினார்கள்.

அதிகாலை முதல் நடு சாமம் வரை அடி உதைகளுக்கு மத்தியில்

விழித்திருந்து அடிமையாக வேலை செய்தேன்.

10 குழந்தைகளை பராமரரிக்க வேண்டியிருந்தது.

பால் கொடுக்கும் போது ஒரு குழந்தை மூசச்சு திணறிய போதுவீரிட்டுக் கத்தினேன்.

ஓடி வந்தவர்கள் குழந்தையை பார்க்காமல் நான் கொலை செய்ய முயன்றதாக என்னைத் தாக்கினார்கள்.

அது அந்த குழந்தை இறக்கக் காரணமாகியும் இருக்கலாம்.

எனக்குத் தெரியாத மொழியில் ஏதோ எழுதி கையெழுத்து வாங்கினார்கள்.

இப்போதுதான் எனக்குத் தெரியும்

அந்தக் குழந்தையை நான் கொன்றதாக கையெழுத்து போட்டிருப்தாக............

நான் செய்யாத குற்றத்துக்காக என்னைக் கொல்்லப் போகிறார்கள்.

இறைவா..................

முடிந்தால் என்னைக் காப்பாற்று.உனக்கு மட்டுமே தெரியும் நான் யாரென்று............................."

-றிஷானா

யாருக்காவது இந்த அலறல் கேட்டால் மட்டும்..............

முடிந்தவர்கள் மட்டும் ஒரு மின் அஞ்சல் அனுப்புங்கள்.

http://www.ahrchk.net/ua/mainfile.php/2007/2463/

நேற்று இரவு றிஷானா குறித்த பல தகவல்கள் கிடைத்த போது அதிர்ச்சியாக இருந்தது.

அவருக்கு 16 வயது நிரம்ப முன்னமே

18 வயது என பொய்யான தகவல்களுடன் கடவுச்சீட்டு பெற்று

ஒரு ஏஜன்சி அவரை அனுப்பியிருக்கிறது.

றிஷானா படும் வேதனைகளை அவரது அம்மாவுக்கு கடித மூலம் முன்னர் பல முறை எழுதியிருக்கிறார்.

இவற்றை மனிதநேய அமைப்புகள் அவரது தாயிடமிருந்து பெற்றிருக்கிறார்கள்.

அவர் மொழி புரியாமல் கையெழுத்து வைத்து

நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் மூலமே அவரது பிரச்சனையை சொல்லி இருக்கிறார்.

அவர் குற்றவாளியான போது அவருக்கு வயது 16.

பல காலம் சிறையில் இருந்திருக்கிறார்.

இப்போது 19.

இது கடவுச் சீட்டில் உள்ள வயதா?

உண்மையான வயதா என்பதுதெரியவில்லை?

இது சற்று பிரச்சனை................

போலி கடவுச் சீட்டு தயாரித்தவர்களை தேட வேண்டும்?

மனித உரிமை அமைப்புகள் வாதாடுகின்றன.

எமது பங்களிப்பான அஞ்சல்

மற்றும்

உங்கள் பிராத்தனைகள்

குழந்தை றிஷானாவுக்கு விடுதலை வாங்கித் தரும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மத்தியகிழக்கில் பணி புரிந்தவன் என்ற ரீதியில் இதை கூறுகிறேன் முக்கியமாக சவுதி அரெபியாவில் இப்படியான நடவடிக்கைகளுக்கு விவாதித்து பயனில்லை என்பது எனது கருத்து.சவுதி விமானநிலையத்தில் இறங்கியவுடன் முதல் கேட்கும் கேள்வி முஸ்லீமா இல்லையா என்பது தான்,இதற்கு பின்பும் அங்கே நடைபெறும் மனித உரிமைகளை பற்றி கூற வேண்டியதில்லை.

B)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தை சரியாக புரிந்து கொண்டவர்களுக்கும், புரியமுடியாதவர்களுக்கும் மற்றும் கருத்தேதும் எழுதாத பார்வையாளர்களுக்கும் வணக்கம்!

இந்த பெண்ணின் சம்பவம் என்னைப் பொறுத்தவகையில் குறைந்த முக்கியத்துவத்தையே பெறுகின்றது. என்னால் ஏதாவது செய்ய முடியுமாக இருந்தால் அதனை அல்லது அந்த நேரத்தை மேற்குறித்த பாதிக்கப்படும் சமுகத்தினருக்கு செலவு செய்யவே நான் விரும்புகிறேன்.

என நான் கூறியதுவே எனது கருத்தாக தொடர்ந்தும் இருக்கிறது. அதை நான் என்னால் முடிந்தவரை விளக்கிக் கூறியுள்ளேன். மேற்கொண்டு தலைப்பிற்கு சம்பந்தமில்லாத வகையில் விவாதம் திசை திரும்புவதை நான் விரும்பாத போதும் சில கருத்துக்களுக்கான பதில்களை இங்கு கூறி எனது கருத்தை இத்தலைப்பில் இத்துடன் நிறைவு செய்கிறேன்.

வாழ்வில் பல இடங்களில் கட்டாயமாக நடிக்கவேண்டிய நிலையில் நான் உள்ள போதும் இங்கேயாவது அப்படி இருக்க நான் விரும்பவில்லை. அதனால்தான் மெளனமாகவோ அல்லது போலியாகவோ கருத்தெழுதாமல் என் மனத்திலிருந்ததை அப்படியே எழுதியுள்ளேன். அதில் உள்ள சாதக பாதக தன்மைகள் குறித்து ஏதுவும் ஆராயாது என் மனக்குறையை வெளிப்படுத்தினேன்.

நான் மீண்டும் சிந்தித்துப் பார்க்கிறேன். வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் ரிஷானா அவர்களுக்காக சக மனிதன் என்ற வகையில் நான் அனுதாபப்படுகின்றேன். அவர் நிலைகண்டு இரங்குகின்றேன். மேற்படி அவலநிலையிலிருந்து அவர் மீண்டு நலம்பெற விரும்புகின்றேன். ஆனால் இவர் சார்ந்த சமுகம் இந்த என் உணர்வை பாரிய அளவில் பாதிக்கின்றது.

என்னுள் எழுந்த கேள்விகளாவன,

இதை விட பல மடங்கு துன்பத்தை எனது சமுகத்தை சேர்ந்தவர்கள் ஏதோ பிறவிக் கடனாக, பிரசித்தம் எதுவுமின்றி அனுபவித்துக் கொண்டிருக்கையில் நான் எப்படி அதனை புறக்கணித்து இவருக்காக சிந்திக்க முடியும்? அவர்களின் சோகத்தை எப்படி வெளிக் கொண்டு வருவது? மற்றவருக்கு எப்படி தெரிய வைப்பது? துன்பங்களில் இருந்து அவர்களை மீட்க எப்படி உதவுவது? போன்றவையேயாகும்.

அவர்களுடன் ஒப்பிடும் போது ரிஸ்னா அதிர்ஸ்டம் செய்தவர். ஏனெனில் இவருக்கு தனது நிலையை வெளிப்படுத்த முடிந்துள்ளது. ஆனால் அவர்கள் அப்படியல்ல அங்கே பல சகோதரிகள், சகோதரர்கள் தங்கள் குரல்களை வெளிப்படுத்த முடியாமல், உங்கள் கவனங்களை கவராமல் உயிரிழந்து கொண்டுள்ளனர். அதனை நீங்கள் மறுக்கின்றீர்களா? இல்லையே அப்படியானால் ஏன் இந்த பாராமுகம்? இவர் போல நீண்ட தொடராக விபரங்கள் இல்லாமை காரணமா? ஆம் எனில் அதற்கு என்ன காரணம்? தகவல்கள் வெளிவருவதற்கு கூட தடை மற்றும் ஏழ்மை படிப்பறிவின்மை வெளியுலகத் தொடர்பின்மை என பல காரணங்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம். கிரிசாந்தி குமாரசாமியின் சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கும் அது பிரபலமானதற்காக காரணங்கள் பல. அதில் எதுவும் அற்ற நிலையில் இந்த மக்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நான் இன்னொருவருக்கு உதவ நினைப்பதென்பது எத்துணை சாத்தியமானது?

மேலும் முஸ்லீகள் உணர்வுகளை பாதிக்க வேண்டாம் என்றும், அவர்களுடன் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்றும் அரசியல் நலன் சார்ந்து அறிவுரை கூறுபவர்கள், அதை ஏன் தமிழர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்பதையும், அவ்வாறாக முஸ்லீம்கள் ஏதாவது செய்தார்களா என்பதையும் வேறொரு தலைப்பில் விளக்கும் வண்ணம் வேண்டிக் கொண்டு விடைபெறுகிறேன், நன்றி.

அன்புடன்,

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஏன் எல்லோரும் இப்படி விவாதிக்கிறிங்கள், வறுமையில் வாடும் ஒரு பெண் உயிருக்காக போராடுது அவருக்காக ஏதாவது உதவி செய்ய முடியும் என்றால் செய்யுங்கள் அதை விடுத்து வேறு காரணங்களை காட்டி ஏன் விவாதிக்கிறீர்கள் :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு உயிர் அங்கே ஊசலாடிக்கொண்டிருக்கும் போது, அதை அரசியலாக்கிப் பார்ப்பது வேதனையளிக்கின்றது. இவ்விடயத்தை இங்கே இணைத்த சாணக்கியன் பின் மறுதலித்து எழுதியிருப்பதைவிட இதை இணைக்காமலேயே இருந்திருக்கலாம். அடுத்தவர்களை கேள்வி கேட்கும் சாணக்கியன் ஏன் தனக்குடன்பாடில்லா விடயத்தை இங்கு கொண்டு வந்து இணைத்தார்?? அன்னை சோனியாவும் உப்படி நினைத்திருந்தால் இன்று நாம் நளினியை உயிரோடு பார்த்திருப்போமா?? இங்கே சரி பிழை என்று பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்களை நியாயப்படுத்தவே முயல்கின்றார்களேயொழிய மற்றவர் பக்கத்து நியாயங்களை சிறிதளவேனும் சிந்திக்க முயலவில்லை. எனவே இந்தப் பக்கத்தையும் அரசியலாக்கி ஆதாயம் தேடுவதை விடுத்து விரும்பினால் உங்கள் மடல்களையும் அனுப்புங்கள் அல்லது ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிடுங்கள். உண்மையில் முஸ்லீம் மக்கள் தவறிழைத்திருந்தால் எமது நியாயமான செயற்பாடுகள் மூலம் அவர்களுக்கு அதை உணர்த்துவோம். இல்லையேல் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு??

Link to comment
Share on other sites

இந்தப் பிரச்சனையை அரசியல் ஆக்க வேண்டாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழர் - இஸ்லாமியத் தமிழர் பிரச்சனை பற்றி தனியாக கட்டுரையாக எழுதுகின்றேன். அதற்கு மூன்று நான்கு நாட்கள் தேவை. பின்பு அதை தனியாக தலைப்பிட்டு விவாதிப்போம்.

இப்பொழுது சிறுமி விடயத்திற்கு வருவோம்.

அந்தச் சிறுமி தன்னை வேற்றினமாகக் கருதினாலும், நாம் அந்த சிறுமி ஒரு தமிழ் சிறுமி என்ற வகையில் எங்களால் ஆனதைச் செய்வோம்.

இது என்னுடைய அன்பான வேண்டுகோள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித நேயத்துக்காக குரல் கொடுக்கும் போது குறிப்பிட்ட சம்பவம், நபர், சூழல் என்பவைகளை தவிர வெளியில் போய் விவாதிப்பது மனித நேயம் என்பதை கொச்சைப்படுத்திவிடும். நாம் மனித நேய அடிப்படையில் அவரது வழக்கு தீர்ப்புக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு சிறிமி றிஷானா முழுமையான தகுதி உடையவர் என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே அந்த இசுலாமிய பெண்ணுக்கு இசுலாமிய சட்டத்திலிருந்து நீதி கிடைக்கவேண்டும் என்பதில் யாருக்காவது இரண்டாவது கருத்து இருக்கும் என நான் நம்பவில்லை. ஆனால் இந்த விடயத்தை வைத்து இராஜேஸ்வரி சுயலாபம் சம்பாதிக்க முனைவதை அனுமதிக்க முடியாது. ராஜேஸ்வரி எல்லா பெண்கள் வி்டயத்திலும் இப்படி நடப்பதில்லை. எங்கே தனக்கு விளம்பரமும் தன்னை சாதி-மத பேதத்திற்கும் அப்பாற்பட்டவர் எனக்காட்டவும் சந்தர்பம் கிடைக்குமோ அப்போதெல்லாம் இப்படியான அறிக்கைகளை அவ விடுகிறா என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். ஆனையிறவு படைத்தளத்தை தாக்கி கைப்பற்றியபோது அங்கிருந்்த சிங்கள பெண் சிப்பாய்களை விடுதலைப்புலிகள் பாலியல் வன்புணர்வு கொண்டதாக ஓப்பாரிவைத்தவர்தான் இந்த இராஜேஸ்வரி. ஆகவே இராஜேஸ்வரியின் அறிக்கை உள்நோக்கம் கொண்டது.

முகமது நபி அவர்களே 9 வயது பெண்ணை மணந்ததாகப் படித்திருக்கிறேன். இசுலாமிய சட்டத்தில் விவாகத்திற்கும் பாலியல் உறவு வைக்கவும் வயதுக் கட்டுப்பாடு உள்ளதா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசுலாமியரின் புண்ணிய பூமி எனக்கருதப்படும் சவுதி அரேபியாவில் இது போன்ற ஆயிரக்கணக்கான மனிதவுரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. இவற்றுக்கெதிராக இராஜேஸ்வரி பொதுவில் ஒரு அறிக்கையையும் வெளியிடுவார் எனின் அவரது முயற்சியை வரவேற்பேன்.

இது அவருடன் கூட்டுச்சேர்ந்து விடுதலைப்புலிகளை திட்டித்தீர்கிற பைசர், சுல்பிகா போன்றோரை திருப்திப்படுத்த விடுகின்ற அறிக்கை. புங்குடு தீவில் தர்சனி என்ற பெண் கடற்படையால் கொல்லப்ட்டு கல்லுக்கடடி கிணற்றில் வீசப்பட்ட சம்பத்தில்.. தர்சனி யை விலைமாது எனக் குற்றஞ்சாட்டிய கூட்டம்தான் இது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • எங்கட ஜி தான். Faceapp ல வயச கரைக்கிறார்🤣 கையால காட்டினது 👍🏿 சைகைதான் என்று sure ஆ தெரியுமோ🤣
  • அவரின்  பாடசாலை எழுத்துக்கள்  தற்போதைய சுவர் எழுத்துக்களுடன் ஒப்பிடப்படுகிறதாம்.
  • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ கிருபன். நோய் நொடி இன்றி நூறாண்டுகள் மேல் வாழ்க.
  • https://aaivuu.wordpress.com/2010/11/13/விடுதலைப்-புலிகளிடம்-இரு/ ---------------------   விடுதலைப் புலிகளிடம் இருந்து இதுவரையில் 21 நீண்டதூர வீச்சுக் கொண்ட தெறோச்சிகளும்(Howitzer), சுமார் 800 பல்வேறு வகையான கணையெக்கிகளும்(Mortar) கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக படை வட்டாரங்களில் இருந்து பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ‘ஐலன்ட்‘ நாளிதழ் தகவல் வெளியிடுகையில், புலிகளிடம் கைப்பற்றப்பட்ட தெறோச்சிகளில்(Howitzer) ஆறு 152 மி.மீ வகையைச் சேர்ந்தவையாகும். ஒன்பது 130 மீ.மீ தெறோச்சிகளும், ஆறு 122 மி.மீ தெறோச்சிகளும், இரண்டு 85மி.மீ தெறோச்சிகளும் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இவையனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கணையெக்கிகளில்(Mortar) 120 மி.மீ கணையெக்கிகள் – 57, 82 மி.மீ கணையெக்கிகள் – 38, 81மி.மீ கணையெக்கிகள் – 147, 60மி.மீ கணையெக்கிகள் – 487, கொமாண்டோ கணையெக்கிகள் – 65 ஆகியனவும் அடங்கியுள்ளன. அத்துடன், ஆறு குழல்களைக் கொண்ட பல்குழல் உந்துகணை செலுத்திகள் மூன்றும், 14 பின்னுதைப்பற்ற சுடுகலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குப் பின்னர் பெருந்தொகையான ஆயுதங்களைப் புலிகள் பல்வேறு இடங்களில் இருந்து கடத்தி வந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை சீனத் தயாரிப்பான தெறோச்சிகளும் கணையெக்கிகளும் என்று புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போர் முடிவுக்கு வந்து 16 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் சிறியளவிலான ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்பட்டு வருகின்றன. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெரும்பாலான கனவகை ஆயுதங்கள் போரின் இறுதி ஐந்து மாதங்களில் ஏ9 வீதிக்கு கிழக்குப் பக்கத்திலேயே மீட்கப்பட்டன. படையத் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மீட்கப்பட்ட ஆயுதங்களில்; வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் - 21, எரியமுக்க(Thermobaric) ஆயுதங்கள் – 55, 40 மி.மீ கைக்குண்டு செலுத்திகள் – 253, ஏவுகணை செலுத்திகள் - 14, 23மி.மீ தெறுவேயங்கள்(Cannon) – 07, 12.7மி.மீ கனவகை சுடுகலன்கள் - 96, பன்நோக்கு இயந்திரச் சுடுகலன்கள் – 273, வகை- 56 துமுக்கிகள்(Rifles) - 14,232, ஏ.கே.47 துமுக்கிகள் – 103, எம்16 துமுக்கிகள் – 63, குறிசூட்டுத் துமுக்கிகள் – 34, 9மி.மீ கைச்சுடுகலன்கள் – 441, மைக்ரோ கைச்சுடுகலன்கள் – 167, 14.5மி.மீ மூட்டப்பட்ட வானூர்தி எதிர்ப்பு சுடுகலன்கள்(Mounted AAA) – 25, வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் – 08, வகை-56 முதன்மை சமர் தகரிகள் – 02, 152மி.மீ, 130மி.மீ, 122மி.மீ, 120 மி.மீ தெறோச்சி குண்டுகள் – 3964, வானூர்திகுண்டுகள் – 1143, அமுக்கவெடிகள்(Claymore) - 7069, கைக்குண்டுகள் – 35,315, வெடிக்கவைக்கும் கருவிகள் – 61,788, புலிகள தயாரிப்பு வெடிபொருட்கள் – 4517 ஆகியனவும் அடங்கியுள்ளன.  இதைவிட புலிகளின் இரகசிய மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் நடவடிக்கைகளுக்கான மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 167 மைக்ரோ கைச்சுடுலன்களுடன் கூடிய 377 வெடியுடைகள், 6265 கிலோ எடையுள்ள சி – 4 வெடிமருந்து, 42,188 கிலோ எடையுள்ள ரி.என்.ரி வெடி மருந்து, 3186 கிலோ ஜெலிக்நைற் , 40 தற்கொலை இடுப்புப் பட்டிகள் உள்ளிட்ட பல பொருட்களும் அடங்கியுள்ளன. இவை படைத்துறை, பொருளாதார, அரசியல் இலக்குகள் மீதான தாக்குதல்களை நடத்தும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன . இவற்றில் 1368 கிலோ ரி.என்.ரி வெடி மருந்து சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டது. இரண்டு கைச்சுடுகலன்கள் உள்ளிட்ட 21 சுடுகலன்களில் ஒலியடக்கி பொருத்தப்பட்டிருந்தன. 20 கரும்புலிப் படகுகள், 13 சேதமடைந்த கடற்புலிகளின் படகுகள், 228 வெளியிணைப்பு இயந்திரங்கள், 11 இஸ்ரேலிய மினியுசி சுடுகலன்கள் உள்ளிட்ட 279 வகையான பொருட்களை படைத்துறை கைப்பற்றியுள்ளனர். அதேவேளை, புலிகள் பல்வேறு இந்திய வழங்குனர்கள் ஊடாகவே வெடிபொருட்களை வாங்கியுள்ளதாகவும் படைத்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.